ஞாயிறு, 4 அக்டோபர், 2015

ஞாயிறு 326 அன்புள்ள ஆறு .... வித்தியாசங்கள்!

           
       
    

ஆறு: "அப்போ இந்தப் படத்தை நீ ஏற்கெனவே பார்க்கவில்லையா? பார்க்காமல் எப்படி நீ ஆறு வித்தியாசங்களையும் புட்டுப்புட்டு வைத்தாய்?"

அஞ்சு : "ஆறு வித்தியாசங்களா! அடப்பாவி மனுஷா! அப்போ நீங்க  எனக்கு ஒன்றும் வாங்கித்தரப் போவதில்லையா??"

ஆறு : "பணம் எவன்கிட்டே இருக்கு?"

அஞ்சு : "தீபாவளி போனஸ் வந்திடுச்சுன்னு சொன்னீங்களே!"

ஆறுமுகம்: "பணக்கவர் வாங்கிகிட்டு, ஃபாக்டரி கேட்டிலிருந்து பத்து ஸ்டெப் நடந்து வருவதற்குள், கடன் கொடுத்தவர்கள் எல்லோரும் பணத்தை லபக்கிகிட்டுப் போயிட்டாங்க. எனக்கு ஒரு காவி வேட்டி எடுத்துக்கிற அளவுக்குதான் பணம் மீதி இருக்கு பர்சுல! "  

(முற்றும்)
   
ஆறுமுகம் கண்டுபிடித்த ஆறு வித்தியாசங்கள் போக இன்னும் இரண்டு வித்தியாசங்கள் இருக்கின்றன. அவை எவை? கண்டுபிடியுங்க.
       
படம்: ஸ்மிதா மாதவ்.
நன்றி : இணையம்.
வித்தியாசங்கள் : பதிவாசிரியரின் கைவண்ணம்.
       
                   

13 கருத்துகள்:

  1. காலம்பரவே படிச்சுட்டுப் போயிட்டேன். யாரானும் கருத்துச் சொல்லி இருப்பாங்களோனு இப்போ வந்து பார்த்தா ஒருத்தருமே வரலை! ம்ம்ம்ம்ம்? எல்லோருமே வலைப்பதிவர் சந்திப்புக்குத் தயாராவதிலே மும்முரம் போல! :)

    பதிலளிநீக்கு
  2. கதை இப்படித் தான் சொப் னு முடியும்னு எதிர்பார்த்தேன். :)

    பதிலளிநீக்கு
  3. மத்த ரெண்டு வித்தியாசத்திலே ஒண்ணு பாவாடை/புடைவையின் உடலில் வந்திருக்கும் டிசைனில் மாறுபாடு; இன்னொண்ணு ஒரு படத்தில் காதில் ஜிமிக்கி லேசாத் தெரியுது, இன்னொண்ணில் தெரியலை.

    பதிலளிநீக்கு
  4. அய்யோடா,,,,
    நல்ல வித்தியாசம்,,,,
    அருமை, தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  5. நான் கதையை தொடர்ந்து படிக்கவில்லை! என் கண்ணில் பட்ட வித்தியாசங்கள்! வளையல், வாட்ச், ஜிமிக்கி, பாவாடை சரிகை, மோதிரம், செயின்

    பதிலளிநீக்கு
  6. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே.

    கதையின் திருப்பம் கடைசியில் அஞ்சு ஏமாறுவாள் என்று நினைத்தேன்.பாவம், நினைத்த மாதிரியே ஆறுமுகமும் ஏமாற்றி விட்டார்.

    ஆறுமுகம் காணாத வித்தியாசங்கள் பாவாடை சரிகையில் மாற்றம், தாவணியின் தோள்பட்டை ஓரமுனை மடங்கி இருப்பது, தம்புராவில் ஓரிடத்தில் சற்று வெளிச்சம் பட்ட இடம் மங்கியுள்ளது. என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சரியா ? ஆனால் நீங்கள்கேட்ட இரண்டுடன் நான் சொன்னது ஒத்துவருகிறதா ? அந்த காலத்தில் ஆறு வித்தியாசங்கள் பார்த்து பார்த்து எத்தனை நாள் கண்கள் பூத்திருக்கின்றன.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. ஹஹஹஹ் செம பல்பு! அஞ்சுவுக்கு மட்டுமில்ல...எங்களுக்கும்தான்...

    பாவாடையில் உள்ள டிசைன், ம்ம்ம் இன்னொன்று தெரியல....ஏன்னா அஞ்சு சொல்லிட்டாளே...

    பதிலளிநீக்கு
  9. ஶ்ரீராம், இதுக்கு வந்து முதல்லே நான் தான் பதில் சொல்லி இருக்கேன்! பார்க்கலை? :))))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!