புதன், 17 ஏப்ரல், 2019

190417 புதன் :: உங்க டீ, காபியில உப்பு இருக்கா?


ஏஞ்சல் :

1, ஆரோக்கியமான சமூகம் என்றால் என்ன ? 


குழந்தைகள் பெண்கள் முதியவர்களின் பாதுகாப்பு பற்றி ஒரு பயமும் இல்லாத சமூகம்.
உதவாவிட்டாலும் பொய் சொல்லி திசை திருப்பாதவர் இல்லா சமூகம்.
உழைப்பையும் திறமையை யம் கொண்டாடும் சமூகம்.
இன்னும்...பக்கம் வளர்ந்துவிடும்.

நல்ல புரிதலும் ஒருங்கிணைப்பும் சேர்ந்த நாணயமான சமூகம்.

& Life Buoy சோப் உபயோகிக்கும் சமூகமாக இருக்குமோ? லைப் பாய் எவ்விடமோ, ஆரோக்கியம் அவ்விடமே! 

2,மழை அழகா ? இல்லை மூடுபனி அழகா ? முக்கியமாக கவனத்தில் கொள்ளவும் இதற்கு அடாடா மழைடா பாட்டு படத்தை இணைக்க தடா :))))))))))))))))))) 

மழை.

 மூடுபனி அழகு. மழை திருப்தி.

& நான் மழை படம் பார்க்கவில்லை. மூடுபனி படம் பார்த்திருக்கிறேன். ஆஃல்பிரட் ஹிட்ச்காக்கின் Psycho படத்தின் காப்பி.

 'அடாடா மழைடா' அப்படி என்று ஒரு பாடலா! சுத்த மரியாதைக் குறைவான வார்த்தைகள் கொண்ட பாடலாக இருக்கே! ஆனாலும், நெல்லைத்தமிழன் மனசு வருத்தப்படக்கூடாது என்பதற்காக ..... 


 


3, எங்கள் நண்பர் ஒருவர் தனது மறைவுக்கு பின் இப்படித்தான் தனக்கு லாஸ்ட் rituals செய்யணும்னு எழுதி வச்சிட்டன் என்று சொல்றார் .எப்படி இது சிலரால் மட்டும் முடிகிறது ? இதற்கு மனமுதிர்ச்சி காரணமா ? அல்லது வயது காரணமா ?

எல்லோராலும் முடியும். எழுதியதை இன்னொருவருக்கு தெரிவிப்பதில்தான் சங்கடம்.

இது துணிவல்ல அச்சம். மாற்றிச் செய்து விடுவார்களோ அல்லது செய்யாமலே விட்டு விடுவார்களோ இல்லை பணத்தை வாரி இறைப்பார்களோ எனும் அச்சம்.

& பைத்தியங்கள் பலவிதம்; அதில் இவர் ஒரு விதம் போலிருக்கு. 
லாஸ்ட் ரிச்சுவல் பற்றி ஒரு ஜோக் சொல்கிறேன். ஒருவருக்கு வந்த தந்தி: " உங்கள் மாமியார் இறந்துவிட்டார். உடலை எரிப்பதா அல்லது புதைப்பதா?" 
இவரின் பதில் தந்தி: "Take no chances. Do both."

4, சமீப கால திரைப்படங்களில் கோபப்படும் ஹீரோ ,பாட்டிலை உடைக்கும் ஹீரோ தம்மடிக்கும் ஹீரோயின்ஸ் கெட்ட வார்த்தைகள் obscene expression இப்படிலாம் வருதே இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ?( ஒண்ணுமில்ல கபீர்சிங் ,அர்ஜூன்ரெட்டி இன்னும் சில படங்களின் ட்ரெய்லர் பார்த்தேன் அதான் கேட்டேன் )

ரவுடிகள் வாலறுந்த நரி கதையாக தங்களை உயர்த்திக்கொள்ள ஹீரோக்களை இப்படி எல்லாம் காட்டுகிறார்களோ?

நெகடிவ் ஹீரோக்கள் வரவு ஒரு துரதிர்ஷ்டம். அத்தகைய படங்கள் வெற்றி பெற்றது அடுத்த துரதிஷ்டம்.

& உத்தம வில்லன்களுக்கு நல்ல ஜோடியான அதம ஹீரோக்கள் போலிருக்கு! 

5,ஒருவரை நல்ல நண்பராக உரு ஆக்குவது எது ? (இவர் நல்லவர் நல்ல நட்பு ) என்று நம்மை நினைக்கவைப்பது எது ?

அவர் தரும் ஆலோசனைகள்; அவர் செய்யும் உதவிகள்.

 சுயநலமில்லாத அன்பு மட்டுமே.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
இடுக்கண் களைவதாம் நட்பு.


6,தன் பசி ,வலி மன வேதனை இவற்றை உணரும் மனிதன் பிறரை திட்டும்போது தூற்றும்போது மற்றவர்களுக்கும் அது வலிக்கும்னு உணராதது ஏன் ?

கோபம் கண்ணை மறைப்பதுடன் மதியையும் மழுங்கச்செய்யும்.

அடுத்தவரை நோகடிக்க வேண்டும் என்பதுதான் சினத்தின் இலக்கு. அது மற்றவரைப் புண்படுத்தும் என்று அறிந்தேதான் கோபப்படுகிறோம்.

7,கொட்டும் மழையில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதும் கொதிக்கும் வெயிலில் சூடா சாயா குடிப்பதும் பற்றி உங்கள் கருத்து ?

சீதோஷ்ண நிலைக்கேற்ப நம் உடலை தயார் நிலையில் வைத்திருக்க ரஷ்யர்கள் இவ்வழியைப் பின்பற்றுவர்.

எண்சாண் உடம்புக்கு நாவே பிரதானம் என்பதுதான்.

& முழங்காலில் கிழிந்துபோன ஜீன்ஸ் பாண்ட் ஃபாஷன் ஆன சமூகத்தில் இதெல்லாம் சகஜம்தானோ என்னவோ! 😊

8, நிஜ வாழ்வில் இல்லாத டூயட்டை இந்திய சினிமா காதல்களில் முதலில் புகுத்திய அந்த மாமனிதர் யார் ? 

யாரோ அறியேன் (எல்லாரும்தான்). நிஜ வாழ்வில் வெளிப்படையாக்கக் கடினமான காதலை திரையில் எளிதாக உணர்த்த இசைதான் சிறந்த சாதனம் என்பது புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு.

9, தொலைபேசியில் யார் கிட்டயாவது பேசுமுன்னர் என்ன பேசுவதுன்னு மனசுக்குள்ள ஒத்திகை பார்ப்பதுண்டா ?

உண்டு அறிமுகம் இல்லாதவருடன் புதிதாய் தொடர்பு கொள்ளும் போது.

 முக்கியமான விஷயம் என்றால் மனதுக்குள் ஒத்திகை பார்ப்பதுண்டு.

10, சிறப்பு ,மகிழ்ச்சி போன்ற அழகு தமிழ் சொற்களை பிரபலப்படுத்த சினி பிரபலங்கள் தேவைப்படுகிறார்களே என்று வேதனை பட்டதுண்டா ?

அப்படிப்பாடம் சொல்லிக்கொடுக்கும் நாயகர்கள் இருந்தால் வரவேற்கிறேன்.

நன்றாக அறியப் பட்டிருக்கும் சொற்களைப் பயன் படுத்துகிறார்கள் - பிரபலப் படுத்தவில்லை.

வாட்ஸ் அப் கேள்விகள் : 

பானுமதி வெங்கடேஸ்வரன் :

 அப்துல் ஜஃபார், கூத்தபிரான் இவர்களின் கிரிக்கெட் மாட்சுக்கான தமிழ் வர்ணனையை ரசித்திருக்கீர்களா?

Oh! மேலும் ராமமூர்த்தி வர்ணனையும். 

கேட்டிருக்கிறேன் ரசிக்கவில்லை.

& கிரிக்கட் தமிழ் வர்ணனைகளின் ரசிகன் நான். டி வி யில் மாட்ச் பார்த்தால் கூட, டி வி வால்யூமை மியூட் செய்துவிட்டு, ரேடியோ தமிழ் வர்ணனை கேட்டவாறு மாட்ச் பார்த்ததுண்டு. 
மேலும் ஒரு தகவல் :-
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில், இராணுவ வண்டி ஸ்பெசிபிகேஷன் எழுதும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. மார்கெடிங் பிரிவிலிருந்து ஒரு போன் கால். 
" Gouthaman - are you writing the specification for the current army order?"
" Yes, sir. "
" For this order of vehicles, indigenous type of rear tow hook are to be fitted."
" Indigenous type?"
" Gouthaman - do you know Tamil"
" Yes sir, தெரியும் "
" நான் சொல்லும் டோ ஹூக் தமிழ் எழுத்து 'ப' வடிவில் இருக்கும். அதனுடைய ஸ்பெசிபிகேஷன் என்னவோ அதைக் கொடுக்கவேண்டும் "
" சரி சார்!" என்று சொல்லி ஃபோனை வைத்தேன். இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கிறேனே?.... ஆங் ஞாபகம் வந்துவிட்டது. அப்துல் ஜப்பார், ராமமூர்த்தி ஆகியோரின் வர்ணனையுடன்  சேர்த்து எக்ஸ்பெர்ட் கமெண்ட் வழங்கும் வல்லுநர் கே எஸ் எஸ் மணி அல்லவா! ஆம். அவரேதான். அப்பொழுது அவர் அசோக் லேலண்டு மார்கெடிங் பிரிவில் ராணுவ வண்டி ஆர்டர்கள் ஒருங்கிணைப்பாளர்! 

கிருஷ்ண பட்ச த்ரயோதசி நான்காம் ஜாமத்து சந்திரனை தரிசித்திருக்கிறீர்களா?

 # அதே சந்திரனை வேறு பல நாட்களில் தரிசித்திருக்கிறேன்.

அத்தனை சமர்த்தில்லாத கணவனை அடைந்த மனைவி அல்லது மனைவியை அடைந்த கணவன் இருவரில் யாருக்கு பாதிப்பு அதிகம்?
     


# கருத்து சொல்பவர் ஆணா பெண்ணா என்பதை ப் பொறுத்து பதில் வேறுபடும். எனினும் .. அசட்டுக் கணவன் பிரச்சினையை மனைவி கஷ்டப்பட்டு சமாளித்து விடுவாள்.  மனைவி சாமர்த்தியக் குறைவு என்றால் கணவன்  "இட்டு ரொப்புவது"  கடினம்.

டீ, காபி இவற்றில் ஒரு கல் உப்பு போட்டு குடிப்பார்களாமே...? உங்களுக்கு அனுபவம் உண்டா?
       
 # இல்லை.

 $ நம் வீட்டுக்கிணற்றுத் தண்ணீரில் filter செய்த பின்னும் கரைந்த உப்பு 140 ppm என்பதால் உப்பு சேர்க்காமல் ருசிக்கும்.

& சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு என் தொண்ணூறு வயது அம்மாவைப் பார்க்க அண்ணனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அம்மா காபி போட்டுக் கொடுத்தார்கள். நான் எப்பவுமே சின்ன டம்ப்ளரில் அரை அளவு காபிதான் குடிப்பேன். அம்மா கொடுத்த காபியை வாங்கிக் குடித்துக்கொண்டு இருந்தேன். சட்டென்று ஏதோ சந்தேகம் வந்த அம்மா, சமையலறைக்குள் சென்று பார்த்துவிட்டு வந்து, "இங்கே கொடு அந்தக் காபியை" என்றார்கள். நான் அதற்குள் அதைக் குடித்து முடித்துவிட்டேன். " ஏன்டா - சர்க்கரை பாட்டிலும் பொடி உப்பு பாட்டிலும் ஒரே மாதிரி இருந்ததால், சர்க்கரைக்கு பதிலாக உப்பைப் போட்டுவிட்டேன், நீ ஒன்றுமே சொல்லாமல் அதைக் குடித்துவிட்டாயே! உனக்கு தேவையா இந்த தண்டனை?" என்று கேட்டார்கள்! அம்மாவின் அளவற்ற அன்பு என்னும் சர்க்கரைக்கு முன் அரை ஸ்பூன் உப்பு எம்மாத்திரம்! 
                     

 ===========

இந்த வாரமும் நாங்க கேள்வி எதுவும் கேட்டு உங்களைக் குழப்பவில்லை. அரசியல்வாதிகள் உங்களை ஏற்கெனவே ஒரு மாத காலம் குழப்பிட்டாங்க. 😁எல்லோரும் குழப்பம் எதுவும் இல்லாமல் நாளை (18-04-19) போய் ஓட்டுப் போட்டுவிட்டு வாங்க. 

===========
நன்றி, மீண்டும் சந்திப்போம்! 🙏🙏🙏


79 கருத்துகள்:

  1. அன்பின் KGG ,ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் வந்திருப்பவர்களுக்கும் வணக்கம், வாழ்த்துகள்.

      நீக்கு
    3. என்ன ஆச்சரியம்! கீ சா மேடம்! இன்னிக்கு மழைதான்! வான் மழையா அல்லது பண மழையா என்று பார்க்கவேண்டும்! வணக்கம்!

      நீக்கு
    4. கௌதமன் சார், வான் மழை, பண மழை இரண்டுமே பொழியட்டும் இந்தப் புத்தாண்டில்! போட்டி இருந்தப்போ சுறுசுறுப்பா எழுந்து கொண்டிருந்தேன். இப்போ அதிரடி, ஏஞ்சல், தி/கீதா, துரை எல்லோரும் முடிஞ்சப்போ வராங்க! ஆகவே போட்டி இல்லாததாலும் மனதில் ஒரு வேகம் வரதில்லை. அதோடு நாலரைக்கே எழுந்தால் குழந்தைகள் கோவிச்சுக்கறாங்க! மெதுவா எழுந்து வேலைகளைப் பாருங்க என்று சொல்கிறார்கள்.

      நீக்கு
  2. மகிழ்வான காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், துரை அண்ணா எல்லோருக்கும்.

    இந்த வாரமும் கேள்வி இல்லை தப்பிச்சோம். ஆமாம் ரொம்பவே குழம்பித்தான் இருக்கோம் அடிக்கும் வெயிலில்...ஹா ஹா ஹாஹ் ஆ

    முதல் கேள்வியே சூப்பர் ஏஞ்சல்...

    பதில்களும் அருமை. லைஃப் பாய் சிரிக்க வைத்துவிட்டார்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்வான காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் அனைவருக்கும். கீதா சாம்பசிவம் காணலியே.
      கேள்விகளும் பதில்களும் வெகு சுவாரஸ்யம்.

      சிறப்பு என்கிற வார்த்தையை பிரபலப் படுத்துபவர் விஜய சேதுபதி.
      நன்றாக இருக்கிறது.
      கௌதமன் தாயார் 90 வயதில் காப்பி போட்டுக் கொடுத்ததே சிறப்பு.
      அம்மா கை அதிர்ஷ்டம் எல்லாமே நலன் தான்.

      நீக்கு
    3. வந்துட்டேன் ரேவதி. வெயிலின் தாக்கம். காலை சீக்கிரம் விழிப்பு வந்தாலும் எழுந்திருக்க முடிவதில்லை. படுத்திருக்கவே தோன்றுகிறது. :(

      நீக்கு
    4. காலைல என் கமென்ட் சுத்தி சுத்தி உள்ள போறதுக்குள்ள பொறுமை அது விழுந்துச்சானு பார்க்காம தில்லிக்கு ஓடினேன். அதுக்குள்ள துரை அண்ணா வந்துவிட்டார் போல!! ஹா ஹா ஹா

      எல்லோருக்குமே நெட் படுத்துதா இல்லை எனக்கு மட்டுமா இங்கு நெட் படுத்தல்

      கீதா

      நீக்கு
  3. ஆமாம், 90 வயதில் காஃபி போடுவதெனில்! ஆனால் என் மாமியாரும் 90 வயதில் வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் காஃபி போட்டுச் சமையலுக்கு உதவினு எல்லாமும் செய்தார். கொழுக்கட்டைக்குச் சொப்புக் கூடப் பண்ணிக் கொடுத்திருக்கார். மனோபலம் தான் காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அந்தக் காலத்து ஆட்களின் மனோபலம், தேகபலம் வியக்கவைக்கிறது.

      நீக்கு
  4. கௌதமன் பதில்கள் வழக்கம்போல் கலகல! இந்த வாரம் $ காரரும் வந்துட்டாரே! சுற்றுப் பயணம் முடிஞ்சுடுத்தோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. அப்பப்போ வருவார் $ தங்கமயமான பதில்கள் கூறுவார்!

      நீக்கு
  5. //கிருஷ்ண பட்ச த்ரயோதசி நான்காம் ஜாமத்து சந்திரனை தரிசித்திருக்கிறீர்களா?// அமாவாசைக்கு முன்னால் என்பதால் அதிகாலையில் எழுந்திருக்கும் சமயங்களில் கிழக்கே மெல்லிய கீற்றாகக் காண முடியும். நான் பல சமயங்களில் மொட்டை மாடியில் இங்கே ஸ்ரீரங்கத்தில் பார்த்திருக்கேன். அம்பத்தூரில் வீடுகள் மறைக்கும். ஆனால் அதே அம்பேரிக்காவில் பையர் வீட்டில் பார்க்கலாம். கிழக்கே பார்த்த வீடு என்பதால் காலையில் எழுந்து வந்து வாசல்புறத்து ஹால் ஜன்னல் வழியே வெளியே பார்த்தால் கிழக்கே மெல்லிய கீற்றாக ஆனால் கொஞ்சம் தலைகீழாகத் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைகீழாக! ஆஹா தலை சுத்துதே!

      நீக்கு
    2. ஹாஹாஹா, கௌதமன் சார்! அந்தப் பிறை மட்டும் தலைகீழாகவே தெரியும் எப்போதும்! இனி வானத்தைப் பாருங்க, புரியும். அதிலும் பௌர்ணமியன்றிலிருந்து தொடர்ந்து பார்த்து வாருங்கள். விடிகாலை தெரிவது வெள்ளி(சுக்கிரன்) எனப் பலரும் நினைக்கிறார்கள்.ஆனால் அது எந்த கிரஹம் என்பதை இந்து ஆங்கில நாளிதழில் முன்னெல்லாம் வியாழன்று வந்து கொண்டிருந்தது. இப்போத் தெரியலை. அதிலே பார்த்தால் கிரஹ நிலைமை நன்கு தெரியும். தினமணியில் கூட வந்து கொண்டிருந்தது என நினைக்கிறேன்.

      நீக்கு
    3. இங்கிருப்பது அங்கில்லை. அங்கிருப்பது இங்கில்லை.
      மாவாசைக்கு முதல் நாள் கூடத் தெரியும் அந்தக் கீற்று. என்னை யாரும் பார்க்கவில்லையான்னு
      கேட்கும் கீதா.

      நீக்கு
  6. முதலாவது பதில்களே சிரிப்பு...
    ஐந்தாவது கேள்விகளே சிறப்பு...

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம்.
    //பொய் சொல்லி திசை திருப்பாதவர் இல்லா சமூகம்.// இதில் ஒரு சிறு இலக்கண பிழை. இரண்டு நெகடிவ்கள் ஒரு பாசிடிவ் ஆகி விடுகிறதே. பொய் சொல்லி திசை திருப்பாதவர் இருக்கும் சமூகம் என்றிருக்க வேண்டும். அல்லது பொய் சொல்லி திசை திருப்புகிறவர் இல்லாத சமூகம் எனறிருக்க வேண்டும். நானும் தமிழில் டி ஆக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்பந்தப்பட்ட ஆசிரியர் கவனத்தில் கொள்வாராக!

      நீக்கு
    2. @பா.வெ. மேடம்... இந்த 'டி' நம்ம ஊர் 'டி' போல இருக்கு. வாக்கியத்தில் இலக்கணம் பிழை நஹி. 'இல்லா' என்பது 'இல்லாத' என்றே கொள்வர். 'மரணமில்லாப் பெருவாழ்வு'-மரணம் இல்லாத பெருவாழ்வு.

      சிவ புராணத்தில், "பொல்லா வினையேன்! நின் பெருஞ் சீர் புகழுமாறு ஒன்றறியேன்!" - இங்கும் "பொல்லாத" என்ற அர்த்தத்தில் வரும்.

      நாம் நம்ம ஊர் "A+" ஆக்கும்..க்கும்...

      நீக்கு
    3. நம்ம ஊர்ல டி நா கீழ் க்ரேட்...

      நெல்லை நீங்க சொல்லறது சரிதான் ஆனால் இந்த வாக்கியத்தில் திருப்பாதவர் அப்படினு வந்திருக்கு பாருங்க...அப்ப எப்படி இல்லா பொருந்தும்?

      நானும் தமிழ்ல தேம்ஸ்காரங்க படி டி.....நம்ம ஊர்ப்படி ஏ+ ஆக்கும்!!! ஹா ஹா ஹா ஹா (புலமை இல்லாட்டாலும் இப்படி சைக்கிள் கேப்ல சொல்லிக்க வேண்டியதுதேன்!!!!!ஹிஹிஹி)

      ஹையோ அதுக்காக இந்த தமனாக்கா ஃபோட்டோவுக்கு சங்கப்பாடல் ஸ்டைல்ல கம்பபாரதி ஸ்டைல்ல கவி எழுதனூம்னு என் தமிழ்ப் புலமையை டெஸ்ட் எல்லாம் பண்ணிடாதீங்க நெல்லை...நான் ரொம்ப அவை அடக்கமாக்கும்!! ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
  8. தமிழில் டிதான, இந்த செல்ஃபோன் ஆட்டோ ஸ்பெல் செக்கிற்கு தெரியாதே..ஹிஹி

    பதிலளிநீக்கு
  9. //அதே சந்திரனை வேறு பல நாட்களில் தரிசித்திருக்கிறேன்.//
    அதே சந்திரனை எப்படி வேறு நாட்களில் பார்க்க முடியும்? அந்த சந்திரன் கீதா அக்கா வர்ணித்திருப்பது போல இருக்கும். தப்பு தவளை தஞ்சாவூர் மாப்பிள்ளை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'வானிலே ஒரே ஒரு சந்திரன்; அதுபோல, மண்ணிலே ஒரே ஒரு சந்திரன் எம் ஜி ராமச்சந்திரன்' என்று சொன்னவர் வாரியார். (எம்ஜியாருக்கு, 'பொன்மனச்செம்மல்' பட்டம் கொடுத்த விழாவில் ) எங்கள் ஆசிரியர் கூறியது வானிலே உள்ள அந்த ஒரே சந்திரனைதான்!

      நீக்கு
  10. டிசம்பர் 20 வரை இரவு நேர வானத்தைக் கவனித்துக் கொண்டிருப்பது வழக்கம்... ஏனெனில் அப்போது Night shift...

    மேகங்கற்ற அரபு வானில் தேய்பிறை நிலா துல்லியமாகத் தெரியும்...

    கார்த்திகையின் மத்தியில் வளர்பிறைச் சந்திரனுக்கு அருகில் பிரகாசமான இரு நட்சத்திரங்கள்... மூன்றும் ஒரே நேர்கோட்டில்.....

    அவ்வப்போது ஒளி மயமாக செவ்வாய்....

    சூரிய உதயத்துக்கு முன் முளைக்கும் விடிவெள்ளி...

    மார்கழியில் - கோதையாள் சொன்னாளே
    வியாழம் உறங்கிட எழுந்த வெள்ளி...
    அவற்றையும் தேடுவேன்....

    அதெல்லாம் இனி இயலாது...

    காரணம் கோடை தொடங்கி விட்டது..
    3:50 அளவில் கிழக்கு வெளுத்து விடும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ ! மாலை மயங்கும் நேரம் அங்கே என்னவோ?

      நீக்கு
    2. மாலை மயங்கினாலும் உடனே நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.... 10/11 மணிக்கு மேல் தான் வானம் தெளிவாகி எல்லாம் புலப்படும்.....

      நீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மழைக்கான பதில்கள் அருமை

      & பதில் ஹா ஹா ஹா ஹா அது சரி ஏஞ்சல் தடை போட்டது தெரியலையோ?!!! இப்ப அடுத்து அ மழைப்பாடல் ஒன்னு போட வேண்டி அரம ஆர்பாட்டம்...ஹிஹிஹிஹி

      ஏஞ்சல் சூப்பர் அழகா பாட்டு சீன் எல்லாம் சொல்றீங்களே!!!

      கீதா

      நீக்கு
    2. எனக்கும் இதுநாள் வரை அடடா மழைடா என்று ஒரு பாட்டும், அது தமன்னா நடித்த பாடல் என்பதும் தெரியாது. ஏஞ்சலுக்கு நன்றி.

      நீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 3 வது கேள்விக்கான பதில்கள் அருமை.

      நான் & கட்சி. மூன்றாவது பதில்...

      போனப்புறம் என்ன நடக்கப் போகுதுனு தெரியாதப்ப இப்படியானவை எல்லாம் அபத்தம் என்றே தோன்றுகிறது. இருக்கறப்ப லைஃபை எஞ்சாய் செய்வதை விட்டு...ஹூம்.

      கீதா

      பதிலளிநீக்கு

      நீக்கு
    2. நன்றி.
      பதிலளி ச்சுட்டேன், நீக்கமாட்டேன்!

      நீக்கு
    3. கௌ அண்ணா ஹா ஹா ஹா ஹா அது வேற ஒண்ணுமில்லை & துக்குப் பதிலா $ இது போட்டுவிட்டேன் இரு கருத்துகளிலும். அதான் நீக்கும்படியா ஆயிடுச்சு. ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    4. ஆமாம் கீதா ரங்கன்... போனப்பறம் என்ன நடக்கப்போகுதுன்னு யாருக்குத் தெரியும்?

      சுஜாதா ஒரு சமயம் எழுதியிருந்தார். தூக்குத் தண்டனை கைதியை தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்போது வழியில் குறுக்கே தண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. அதில் தன் கால் படாமல் (பட்டால் நொச நொச என ஆகும் என்று) தள்ளி காலைவைத்து அந்தக் கைதி நடந்துசென்றானாம் தூக்குமேடைக்கு...

      நீக்கு
  13. நட்புக்கான பதில்கள் சூப்பர்.!

    கிரிக்கெட் வர்ணனைக்கான பதில்களில் கௌ அண்ணா ஸ்வாரஸ்யமான தகவலைக் கொடுத்திருக்கீங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. காபிக்கான கௌ அண்ணாவின் பதில் மனதை நெகிழச் செய்துவிட்டது.

    90 வயதில் காப்பி போட்ட அம்மா அதுவும் அத்தனை அன்புடன்!! அவர் கேட்ட அந்த வார்த்தைகள்... மெய் சிலிர்க்கிறது....இன்றைய கேள்வி பதில்களில் இந்த நிகழ்வையே நான் டாப் ஆகக் கருதுகிறேன்.!...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அதுதான் தோன்றியது. அதிலும் கடைசிப் பையன் என்பதாலான்னு தெரியலை.......

      இதில் இன்னொரு சம்பவமும் ஞாபகத்துக்கு வருது. என் உறவினர் அமெரிக்காவில் 10 வருடங்கள் இருந்துவிட்டு இந்தியா திரும்புகிறார். அவர் அம்மா, அவருக்கு பாயசம் எடுத்துக்கொண்டுவந்தார்... குழந்தைக்குச் சுட்டுவிடப் போகிறதே என்று விரலால் அதனைக் கிளறிப் பார்த்தார். அவர் பையனோ, அம்மா கையால் கிளறுவதைப் பார்த்து அசூயைப் பட்டு தன் மனைவியிடம் அதனை கமெண்ட் செய்தார்... வாழ்க்கைதான் எத்தனை விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறது.....

      நீக்கு
    2. நன்றி, நன்றி. யாருங்க கடைசிப் பையன் ? குழப்புறீங்களே!

      நீக்கு
    3. //நன்றி, நன்றி. யாருங்க கடைசிப் பையன் ? குழப்புறீங்களே!// ஹாஹாஹா, அதானே! யாரு கடைசிப் பையர்? இதைக் கடைசிப் பையர் படிச்சால் என்ன நினைச்சுப்பார்?

      கௌதமன் சார், அடுத்த புதனுக்கான கேள்வியா இதை வைச்சுக்கலாமா? :)))))

      நீக்கு
    4. ஹா ஹா ஹா அதே அதே யாருங்க கடைசிப் பையர்!! நெல்லைக்குத் தெரியாதாக்கும்!! ஹெ ஹெ ஹெ!!

      நானும் நிறையப் பேரை பார்க்கிறேன் ஏதோ கொஞ்ச நாள் அம்பேரிக்கா போய்ட்டாங்களாம் உடனே இங்க வந்து ஓவரா அலட்டுவாங்க

      சரி அசூயை என்றால் பொறாமைனு அர்த்தம் இல்லையா? இங்கு அருவருப்புனு அர்த்தமோ?!! நான் அப்படித்தான் எடுத்துக் கொண்டேன்..

      கீதா

      நீக்கு
    5. அசூயை
      acūyai * n. asūyā. Envy, intolerance, jealousy; பொறாமை இங்கே இன்டாலரன்ஸ் சரியா வரும்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    6. கீசா மேடம்.... தமிழ் பரீட்சை முயற்சிக்கு நன்றி... இந்தத் தடவை உங்களுக்கு 'டி' கிடையாது. அடுத்த முறை பார்க்கலாம். இப்படிக்கு புலவர் நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    7. கீதா அக்கா மிக்க நன்றி அர்த்தம் சொன்னதற்கு./

      நெல்லை இது என்ன புது அவதாரம் எங்கட தமிழ்ல டி வாங்கின புலமை பெற்ற புலவர், புலியூர் பூஸானந்தா, பாடகி,செஃப், காசி ட்ரிப் ஆர்கனைஸர் அதிராவுக்குப் போட்டியாக!! பூஸாந்தா செம நித்திரை தியானத்துல இருக்கார் போல!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    8. கௌ அண்ணா உங்க அம்மா 100 + வயதைத் தொட்டவர் இல்லையா? எனக்கு அப்படித்தான் நினைவு.

      கீதா

      நீக்கு
    9. ஆமாம். நூற்று மூன்று வருடங்கள் + இருபது நாட்கள் வாழ்ந்தார்.

      நீக்கு
  15. //அரசியல்வாதிகள் உங்களை ஏற்கெனவே ஒரு மாத காலம் குழப்பிட்டாங்க//

    ஹா.. ஹா.. நான் குசம்பவில்லை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பத்தான் தெளிவா இருக்கீங்க போலிருக்கு! அதிசயம்தான்!

      நீக்கு
  16. பதில்களை ரசித்தேன்..... என்னைப் பழிவாங்கும் விதமாக, தெளிவில்லாத 'த' புகைப்படங்கள் போட்டுள்ளதையும் குறித்துக்கொண்டேன்...ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய சைஸ்ல போட்டிருந்தா என்னுடைய சக ஆசிரியர்களே என்னைக் குட்டுவதற்குத் தயார் ஆகியிருப்பார்கள். (பெரிய சைஸ் படங்களை நான் மட்டும் பார்த்து ரசித்தேன். அனுஷ்கா ரசிகர் கூட பார்த்திருக்கமாட்டார். ரகசியம். அவர் கண்களில் இந்த பதில் படக்கூடாது!)

      நீக்கு
    2. கேஜிஜி சார்.... ஆசிரியர் குழுவிலேயே நீங்கதான் செல்ஃப்லெஸ் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள் (யார் யார்னு கேட்கக்கூடாது). நீங்கள் இப்படி எனக்குச் செய்வீர்கள் என்று நினைக்கலையே... தெளிவில்லாத படங்களைப் போடலாமா? பாவனாவில் காட்டும் அக்கறையை 'த'விற்கும் காட்டவேண்டாமா? ஹிஹி

      நீக்கு
    3. ஹையோ நெல்லை இன்று என்னாச்சு தமனாக்கா படத்துக்கு கமென்டே போடலையேனு சொல்ல வந்தப்ப கரன்ட் கட்டாகிப் போச்சு...எல்லாம் நெல்லையாலதான்...

      கௌ அண்ணா அனுஷ் ரசிகர் டே நாளையாக்கும்!! எனவே நாளை அரம எதிர்பார்த்து காத்திருக்குமாக்கும்!! அது அவருக்கும் தெரியும்....விட்டுருவாரா என்ன!! பாருங்க.....அவர் அமைதி காப்பதன் ரகசியமும் அதான்!!! ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    4. // கேஜிஜி சார்.... ஆசிரியர் குழுவிலேயே நீங்கதான் செல்ஃப்லெஸ் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள்// ஆஹா ஐஸா ! நடக்கட்டும், நடக்கட்டும்! ஹக்சூ ..... !

      நீக்கு
    5. கௌ அண்ணா நெல்லையின் ஐஸ் உங்களுக்கு எதுக்குனு புரிஞ்சுச்சுதானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அடுத்த புதனுக்கு இப்பவே ரிஸர்வேஷன்!! ஹா ஹா ஹா (இந்த ஐஸ் பங்களூர் வெயிலுக்கு இல்லையாக்கும் நோ ஹச்சூ!!!!! )

      கீதா

      நீக்கு
  17. ஆரோக்கியமான சமூகம் என்றால் என்ன ?


    $ குழந்தைகள் பெண்கள் முதியவர்களின் பாதுகாப்பு பற்றி ஒரு பயமும் இல்லாத சமூகம்.
    உதவாவிட்டாலும் பொய் சொல்லி திசை திருப்பாதவர் இல்லா சமூகம்.
    உழைப்பையும் திறமையை யம் கொண்டாடும் சமூகம்.

    கேள்வியும், பதிலும் அருமை.

    // "இங்கே கொடு அந்தக் காபியை" என்றார்கள். நான் அதற்குள் அதைக் குடித்து முடித்துவிட்டேன். " ஏன்டா - சர்க்கரை பாட்டிலும் பொடி உப்பு பாட்டிலும் ஒரே மாதிரி இருந்ததால், சர்க்கரைக்கு பதிலாக உப்பைப் போட்டுவிட்டேன், நீ ஒன்றுமே சொல்லாமல் அதைக் குடித்துவிட்டாயே! உனக்கு தேவையா இந்த தண்டனை?" என்று கேட்டார்கள்! அம்மாவின் அளவற்ற அன்பு என்னும் சர்க்கரைக்கு முன் அரை ஸ்பூன் உப்பு எம்மாத்திரம்! //

    அம்மாவின் பாசமும், உங்களின் பாசமும் நெகிழ வைத்தது. உங்கள் அம்மா
    இத்தனை வயதில் மகனுக்கு காபி போட்டு கொடுப்பது போல் என் மாமியாரும் விடுமுறைக்கு ஊருக்கு போனால் அவர்கள் கையால் மகனுக்கு ஏதாவது செய்து கொடுக்க விரும்புவார்கள், செய்வார்கள். மகனுக்கு மட்டும் இல்லை, மருமகள், பேரன் பேத்திகள் எல்லோருக்கும் செய்ய விரும்புவார்கள்.

    அந்தக்கால மனிதர்களுக்கு பாசமும், அன்புதான் பலம், அது தான் அவர்களை இயங்க வைத்தது .
    நேசிக்கவும் ஆள் இருந்தது போஷிக்கவும் ஆள் இருந்தது.


    பதிலளிநீக்கு
  18. வணக்கம்.

    சுவையான பதில்கள்.

    தமிழில் கிரிக்கெட் கமெண்ட்ரி - எங்கள் வீட்டு ரேடியோவில் கேட்டதுண்டு. ரசித்திருக்கிறேன் - அப்போது அது மட்டுமே என்பதால்!

    பதிலளிநீக்கு
  19. அசூயை என்றால் மலையாளத்தில் பொறமை என்று அர்த்தம்

    பதிலளிநீக்கு
  20. கேள்வி பதில்கள் அனைத்தும் அருமை. சில சிரிப்பை வரவழைத்தது.

    அம்மாவைப் பற்றிச் சொல்லியிருக்கும் நிகழ்வு மனதைத் தொட்டது. அம்மாவைப் பற்றிச் சொல்லிய //அம்மாவின் அளவற்ற அன்பு என்னும் சர்க்கரைக்கு முன் அரை ஸ்பூன் உப்பு எம்மாத்திரம்! //இந்த வரிகள் மிக மிகச் சரியே. மிகவும் பிடித்தது.

    அனைத்தும் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. அனைத்தும் அருமையான பதில்கள்...
    இரண்டாவது கேள்வியே தப்பு.
    மழை அழகா, இல்லை தமன்னா அழகான்னு .........கேட்டிருந்தால் அழகா இருந்திருக்கும்..........

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!