சனி, 20 ஏப்ரல், 2019

400 கி.மீ.


1)  பிறந்து, 15 நாட்களே ஆன குழந்தையின் உயிரை காப்பாற்ற, கர்நாடகாவின் மங்களூரிலிருந்து, கேரளாவின் கொச்சி வரையிலான, 400 கி.மீ., துாரத்தை, தடையின்றி, ஐந்தரை மணி நேரத்தில் கடக்க உதவிய, அரசு மற்றும் போலீசாரின் உதவியை, கேரள மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.




2)  விளையும் பயிர்....   

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஜோதிகா மற்றும் சதீஷ்என்ற மாணவர்கள்  கீழே கிடந்த 1 பவுண் தங்க நகையை தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர்.  (நன்றி "காணாமல் போன கனவுகள்" ராஜி)




=================================================================================================



"நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே...." 
 பானு -கீதா 

 




கருத்துகளுக்கான பதில்கள்...

முதல்ல தொடர்ந்து படித்து கருத்துகள் சொன்ன எல்லாருக்கும் மிக்க நன்றி.

கரந்தை ஜெயகுமார் சகோ, துரை செல்வராஜு சகோ, கில்லர்ஜி, வெங்கட்ஜி, கேஜிஜி, ரிஷபன் ஸார், ஜி எம்பி சார், ராமலஷ்மி, சொக்கன் சுப்பிரமணியன் சகோ, அனுபிரேம், ஏகாந்தன் சகோ, யாழ்பாவாணன், கோமதி அரசு, நெல்லை, கீதாக்கா, கமலா ஹரிஹரன், வல்லிம்மா, காமாட்சி அம்மா, ஏஞ்சல், அதிரா, டிடி, ஜீவி சார்.

பா.வெ: கோமதி….. அவர்கள் சேர்ந்து பயணிக்கவும் விலகி ஒரே தடத்தில் பயணிக்கவும் சாத்தியம் உள்ளது.  என்று கோமதி அரசு கருத்து கூறியிருந்தார். நாம் அப்படி சிந்திக்கவே இல்லை இல்லையா? 

கீ.ர.: ஆமாம். கோமதி அக்கா ஆரம்பத்திலிருந்தே நிறைய நல்ல கமெண்ட்ஸ் கொடுத்தாங்க. வித்தியாசமான கோணத்திலும் இருந்தது. 

பா.வெ.: ஆரம்பத்திலிருந்தே நிறைய பேர்கள் நல்ல கமெண்ட்ஸ் கொடுத்து நம்மை சப்போர்ட் பண்ணினாங்க. அதில் ரொம்ப சிரிக்க வைத்த கமெண்ட் நெல்லை தமிழனோது. 

கீ.ர.: ஹையோ நெல்லையோகற்பனைக் குதிரையை நினைச்சு சிரித்து……நெல்லை ரொம்பவே அதுவும் ஷ்ரவண் தாடி வளர்த்து, தண்ணித் தொட்டி தேடிப் போயினு, ஹா ஹா ஹா. ஆனா நாம் அப்படி எல்லாம் கதைல யோசிக்கவே இல்லையே இல்லையாக்கா?

அவரும், இந்த மாதிரி பெண் ப்ரொஃபஷனலா இருக்கற வீட்டுல சரியான புரிதல் இல்லைனா கஷ்டம்னு சொல்லிருந்தார். அது உண்மைதான் இல்லையா. யதார்த்தத்துலயும் பார்க்கிறோமே..

பா.வெ: ப்ரெக்னன்டா இருக்கறவள வயித்துல உதைச்சுனு அப்படி எல்லாம் இப்பவும் நடக்கறதா என்ன? அதுவும் இந்த மாதிரியான குடும்பங்கள்ல!!

நெல்லையும், கோமதி அவர்களும் பெண் பாடகிகள் வீட்டுல முடக்கப் படுவது பத்தியும் சொல்லிருந்தாங்க. உதாரணங்கள் சொல்லி. இப்ப அது குறைஞ்சுருக்குனு தான் தோணுது. கடைசில இவர்கள் இரண்டு பேரும் தொடருமானும், இந்தக் கதை தொடரவும் செய்யலாம்னும் சொல்லிருந்தாங்க. நோ சான்ஸ். துளசி சொல்லிருந்தா மாதிரி, இப்ப குழந்தை பிறந்து புரிதலோடு இருப்பதாக முடிஞ்சுருக்கு. அவ்வளவுதான்னு சொல்லிக்கறோம்

பா.வெ.: ஏஞ்சல் கூட முதல் பார்ட் ஸ்ரவண் வந்ததும் அதுல வர ஒரு இங்கிலிஷ் டயலாக் கோட் பண்ணி இது ஷீ என்று குறிப்பிட்டிருந்தாங்க உங்களைச் சொல்லி அடுத்து அதிராவும் ராகம் வரதுனால யெஸ்னு ஆனால் அவங்க நானும் எழுதியிருக்கிறேன்னு கெஸ் பண்ணினாலும், நான் எழுதிய பகுதிகளை, நீங்கள் எழுதியது, ஸ்ரீராம் எழுதியது, கௌதமன் எழுதியது உங்க பார்ட்டை நெல்லையேதான்னு அடிச்சு சொன்னது எல்லாம் மறக்க முடியாது.  ஏஞ்சலும் கூட கடைசில கொஞ்சம் குழம்பிட்டாங்க….யாருன்னு தெரியலையேனு…..

கீ.ர: கமலா அக்கா வும் கதை ஒவ்வொரு பார்ட்லயும் இப்படி தொடருமோ அப்படித் தொடருமோனு கெஸ் பண்ணி அழகா கற்பனையோடு சொல்லிருந்தாங்க கருத்து.

வல்லிம்மாவும் தே போல அழகா சொல்லிருந்தாங்க. ரசிச்சு கமென்ட்ஸ் போட்டிருந்தாங்க. அதிரா கூடக் கேட்டிருந்தாங்க இது என்ன கதை ஒரே இடத்துல சுத்தி சுத்தி வராப்ல இருக்குதேனு. அதுக்கு வல்லிமா அழகா சொல்லிருந்தாங்க. இல்லை கதை நல்லாவே நகர்ந்து போறதுனு.

பா. வெ: அதிராவுக்கு ஏன் அப்படித் தோன்றியிருக்குன்னா நாம ஒரே ப்ராப்ளத்தை ஷ்ரவன் பார்வையில், ஷ்ருதி பார்வையிலனு எழுதினதுனால அப்படித் தோன்றியிருக்கலாம். ஷ்ரவண் பிரச்சனையை சொல்கிறான். ஷ்ருதி அதை ஜஸ்ட் நினைச்சு வருத்தப்பட்டு அதை எப்படித் தீர்க்கலாம்னு யோசிக்கறா. அதை முழுவதுமாக நினைச்சுப் பார்க்கலை. அதனால அப்படித் தோன்றியிருக்கலாம்.

காமாட்சி அம்மா வந்து வாசித்து கதைல அந்த ரெண்டு பேரும் ஃபேஸ் பண்ணும் யதார்த்த கஷ்டங்களைச் சொல்லி சுபமாவே முடியட்டும்னும் சொல்லிருந்தார்.

கீ.ர: டிடி நல்ல பொருத்தமான அழகான பாடல்கள் சொல்லியது ரசிக்கும்படியா இருந்த்துஇறுதில ஜெமினி மாதிரினு சொன்னது புரியலைக்கா எனக்கு

பா.வெ: காதல் கதைன்றதுனால ஒரு வேளை காதல் மன்னன் அப்படின்ற அர்த்தமா இல்லை ஜெமினின்னா சாம்பார் அப்படின்ற அர்த்தமும் உண்டே ஸோ அந்த அர்த்தமா? அதை டிடி தான் விளக்கணும் ஹா ஹா ஹா.

ஜீவி ஸார் கூட சொல்லிருந்தார் யாருன்னு தெரியாமலேயே கதையைப் பாராட்டறது கூட மகிழ்ச்சியா இருக்குனு நமக்கும் அப்படியேதான் நாம யாருனு சொல்லாம கிடைச்ச கமென்ட்ஸ் எல்லாமே ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தது இல்லையா. ரிஷபன் சாரும் ஆரம்பமே விறு விறுப்பா போகுதுனு சொல்லியிருந்தார். ரிஷபன் ஸாரும், ஜீவி ஸாரும் பெரிய அனுபவ எழுத்தாளர்கள். அவங்க வந்து கருத்து சொன்னது ரொம்ப சந்தோஷமாக இருந்த்து.

அதிரா கடைசில ஸ்ரீராமுக்குப் பிடித்த ட்விஸ்ட் இல்லைனு சொல்லிருந்தாங்க……. இந்தக் கதை நாம அப்படி யோசிக்கலையே. ஜஸ்ட் புதுசா கல்யாணம் ஆகிறவங்க அதுவும் ஒருவர் செலிப்ரிட்டி. தெரிந்தும் கல்யாணம் செய்யும் போது யதார்த்த்த்துல அவங்க நடுவுல வர சில ஏற்ற இறக்கங்கள் அதை எப்படி எடுத்துக் கொண்டு  புரிதலில் வராங்க அவ்வளவுதான். ஸ்ரீராம் சொன்னது போல இது நாவலுக்கானது நாம சொல்லிருக்கறது ஜஸ்ட் கொஞ்சம் தான் அதுவும் ஆரம்பக்காலக்கட்ட வாழ்க்கை. ட்விஸ்ட் நா கதை வேற மாதிரி போயிருக்கும்

கீ.ர.: எப்படி இதை ரிஸீவ் பண்ணுவார்கள் என்று கொஞ்சம் தயக்கம், பயம், எதிர்பார்ப்பு எல்லாமே இருந்தது. நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே ஆதரவு அளித்து விட்டார்கள்.  பாருங்க பானுக்கா நாமளும் கூடவே கருத்தும் போட்டோம்எதிர்க்கருத்தும் கூட நம்ம எழுதின பார்ட்டுக்கே கூட போட்டோம்...யாருன்னு சொல்லாம இப்படிக் கமென்ட்ஸ் பார்க்கும் போது….ரொம்ப ரசனையா இருந்தது.

ஸ்ருதி பார்ட்ல சுதா ஆண்டி, நித்யா அக்கானு நான் எழுதியனதைப் பார்த்து கீதாக்கா, எழுதியவர் சிறியவரா இருப்பாங்கன்னு சொல்லிருந்தாங்க..….ஹா ஹா ….யெஸ் யெஸ் மீ ஸ்வீட் 16…குழந்தை!!!! ஹா ஹா. ஜோக்ஸ் அபார்ட், அது கதைல வர ஸ்ருதி பேசுவது போல இல்லையா அப்ப அது அப்படித்தானே வரும்….

பானுக்கா: எல்லா ஜிக்களும்!!! (கில்லர்ஜி, வெங்கட்ஜி, கேஜிஜி) சொக்கன் சுப்ரமணியம் அவர்களும் கதை நன்றாக இருக்கிறதாகச் சொல்லி வந்தார்கள்.

சரி, கீதா, வோட் ஆஃப் தாங்க்ஸ் சொல்லிடுவோம்.. நம்மை உற்சாகப்படுத்திய எல்லோருக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றி. லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட், நம்முடைய புது முயற்சியை ஆதரித்த எங்கள் ப்ளாகிற்கும், நம்மைப் பலவிதங்களில் உற்சாகப்படுத்திய ஸ்ரீராமிற்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.

யாருடைய பெயராவது சொல்லப்படாமல் விடுபட்டிருந்தால் தயவாய் மன்னிக்கவும்!

என்னோட ஒத்துழைத்த உங்களுக்கு நான் நன்றி சொல்லாவிட்டால் ரொம்ப தப்பு. என்னுடைய ஆலோசனைகளை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு, நான் டைப் பண்ணி அனுப்பியவற்றை சீரமைத்து, You have taken lot of pain. From the bottom of my heart I thank you for your wonderful co-operation. இட்ஸ் அன் எக்ஸலண்ட் எக்ஸ்பீரியன்ஸ்.

கீ ர: யெஸ் அக்கா. ரொம்பவே எக்ஸலன்ட் எக்ஸ்பீரியன்ஸ். அக்கா, உங்க கூட எழுதினதுல நான் நிறைய கத்துக்கிட்டேன்நீங்க வொரேஷியஸ் ரீடர். உங்க ஸ்டைல் விறு விறு. யதார்த்தம் எல்லாமே கத்துக்கிட்டேன்பார்க்கப் போனா இந்தக் கதைல நீங்க ஷ்ரவண் பேசறத எழுத எழுத அதை பேஸ் பண்ணி என் வழியா ஸ்ருதி பேசினாநீங்க இடைல அழகா கைட் பண்ணினீங்க. மாத்த வேண்டியத எல்லாம்…..….ஸோ நீங்க மெயின் பாடகி! நான் ஸ்ருதி மட்டும்தான் போட்டேன்!!.. உங்களுக்கு நான் பெரிய தாங்க்ஸ் சொல்லணும். அக்கா. நோ வேர்ட்ஸ்!

இந்தப் பகுதிகள் எல்லாமே வீடியோவாக எடுத்துப் போட்டால் என்ன என்று நம்ம ஸ்ரீராம் ஐடியா கொடுக்கவும், நல்ல ஐடியாவாக இருக்கே என்று நாங்கள் களம் இறங்கினோம். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, பொறுமையாக, தன் உடல் வலியும் பொருட்படுத்தாமல் இரு நாட்கள் பல முறை வீடியோ எடுத்துக் கொடுத்து நமக்கு உதவியா சப்போர்ட்டிவா இருந்த வெங்கடேஸ்வரன் மாமாவுக்கும் (பானுமதி அவர்களின் கணவர்) எபி சார்பிலும், நம் சார்பிலும் நன்றி சொல்லிக் கொள்கிறோம். மிக்க நன்றி மாமா!

ஆனால், வீடியோக்களை ஒரு சில டெக்னிக்கல் பிரச்சனைகளின் காரணங்களால் வெளியிட முடியாமல் ஆகிவிட்டது. மிகவும் வருந்துகிறோம். எனவே பதிவாகவே வெளியிடும்படி ஆனது. சாரி ஸ்ரீராம் மற்றும் நட்புகள்.

எல்லோருக்கும் மீண்டும் எங்கள் மனமார்ந்த நன்றி. வணக்கம்.


பானுமதி வெங்கடேஸ்வரன், கீதா 

66 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.

    செய்திகள் பார்த்துவிட்டு வருகிறேன் ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. முதல் செய்தி ஒரு படத்தை நினைவு படுத்தியது. இப்படியான ஒன்று ரிஸ்க்தான் என்றாலும் குழந்தை க்கு மருத்துவம் கிடைத்தது மகிழ்ச்சி!

    ஜோதிகா மற்றும் சதீஷ் இருவரின் நேர்மையையும் அக்குடும்பத்தின் நேர்மையையும் பாராட்டுவோம். அவர்களின் செயலைப் பாராட்டி இப்படி வரும் போது பல குழந்தைகளுக்கும் இது முன்னோடியாக இருக்கும். நேர்மையாக இருப்பதற்கு

    இரு செய்திகளுமே அருமை. வாழ்த்துகள். பாராட்டுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீராம் பதிவிற்கு மிக்க நன்றி. உங்கள் மற்றும் எபி ஆசிரியர்கள் அனைவரின் சப்போர்ட்டிற்கும் ஆதரவிற்கும் எங்களின் நன்றிகள் பல. நீங்களும் எங்களுடன் சேர்ந்து விளையாடியதுதான்!! சூப்பர்!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஒரு பெரிய இமாலயச் சாதனைச் செய்து முடித்த இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். இருவருக்கும் கற்பனை வளம், சொல்லாட்சி, சிந்தனை போன்றவை ஒத்திருந்ததாலேயே இது சாத்தியம் எனச் சொல்லலாம். வீடியோ போட்டிருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். பரவாயில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா எங்கள் இருவரின் நன்றிகள்!!!

      //கற்பனை வளம், சொல்லாட்சி, சிந்தனை போன்றவை ஒத்திருந்ததாலேயே இது சாத்தியம் எனச் சொல்லலாம்.//

      கீதாக்கா, அப்ப கதைல கொஞ்சம் ஸ்ருதிபிசகி சரியானாலும், நான் அக்காவுக்கு ஒழுங்கா ஸ்ருதி பிசகாம ஸ்ருதி போட்டிருக்கேன்னு சொல்லுங்க!!! ஹா ஹா ஹா ஹா

      வீடியோ போட முடியாமல் போனது எங்களுக்கும் வருத்தம் தான் அக்கா.ஸ்ரீராம் பாவம் வித்தியாசமா போடலாம்னு ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்...புஸ் நு ஆகிப் போச்சு...

      மீண்டும் மிக்க நன்றி அக்கா

      கீதா

      நீக்கு
    2. இமாலய சாதனையெல்லாம் இல்லை. ஒரு புதிய முயற்சி, அவ்வளவுதான். எ.பி., ஶ்ரீராம், மற்றும் எ.பி.வாசகர்கள் கொடுத்த ஆதரவால் சாத்தியமானது.
      பாராட்டுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  5. முதல் செய்தி ஏற்கெனவே படித்த நினைவு. இரண்டாவது புதிது. பாராட்டுகள் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. இரு செய்திகளையும் முன்னரே படித்தேன். முதல் செய்தி அதிகம் நெகிழ வைத்தது. அப்பணியில் ஈடுபட்டோர் பாராட்டுக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  7. குழந்தைக்கு செய்யப்பட்ட அவசர உதவி பாராட்டத்தக்கது...

    பிறர் பொருளுக்கு ஆசைப்படாத குழந்தைகள்..

    விளையும் பயிர் முளையிலே தெரியும்....

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  8. க பி க அருமை....

    ஒருவருக்கு ஒருவர் அன்புடன் விவரித்த பாங்கு சிறப்பு...

    இந்த மாதிரி மீண்டும் ஒரு அருமையான
    சூழலில் கதை வெளியாக வேண்டும்....

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை அண்ணா

      இதற்கும் க்ரெடிட் பானுக்காவுக்குத்தான்!!

      எங்கள் நன்றிகள்.

      கீதா

      நீக்கு
  9. முதலில் சொன்னது எங்கே!?....

    மறந்தாயோ மனமே?..

    மறக்கவில்லை...
    அவசர ஆம்புலந்ஸ்ஸூக்கு வழிவிட்டாயிற்று...

    அனைவருக்கும் அன்பின் வணக்கம்....
    (அப்பா... மனசுக்கு நிம்மதி....)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இல்ல, நானும் சொல்லலை. அனைவருக்கும் நல்வரவும் வணக்கமும்.

      நீக்கு
  10. கேரளா மக்களுக்கு நன்றிகள்... பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  11. முதல் செய்தி நெகிழ்ச்சியாக இருந்தது.
    மனிதம் இன்னும் வாழத்தான் செய்கிறது.
    அரட்டையை ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. ஜோதிகா மற்றும் சதீஷ் செல்லங்களுக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  13. பா வெ, கீ ரெ, நன்றி, மீண்டும் தருக !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி எங்கள் இருவரிடமிருந்தும், கௌ அண்ணா!

      பார்ப்போம் இப்படியான முயற்கி இன்னும் வருமா என்று..

      கீதா

      நீக்கு
    2. நன்றி கே.ஜி.ஜி.சார். நாங்கள் மட்டுமல்ல மற்றவர்களும் முயற்சிக்கலாம் இல்லையா?

      நீக்கு
  14. // காதல் கதைன்றதுனால ஒரு வேளை காதல் மன்னன் அப்படின்ற அர்த்தமா // அப்படியும் நினைத்தேன்... ஆனால், கதை என்னமோ (எனக்கு...!) சாம்பார் மாதிரி இருந்தது...! ஜெமினி என்றாலும் ஒன்று தானே...!

    கதை அவ்வப்போதாவது "அரைத்து விட்ட சாம்பார்" போல சும்மா சுர்ரென்று இருக்க வேண்டாமோ...? ஹிஹி...

    ஒவ்வொரு நாளும் கதையை வாசிக்கும் போது, பல பாடல்கள் சிந்தனையில் ஓடும்... அதில் அதிகம் சாம்பாரின் பாடல்கள் தான்...

    அவற்றில் ஒன்று. :-

    ஷ்ருதி உட்கார்.. ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்...? உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு... ஓடோடி வந்த என்னை ஏமாத்தாதே ஷ்ருதி...

    என் இசை.. உங்கள் ஐபேடிற்கு முன்னால்...?

    தேனோடு கலந்த தெள்ளமுது... கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல்... இந்த மஞ்சரி கேல்கரின் ஜுகல்பந்தியிலே நமது சங்கீத அருவிகள் ஒன்று கலக்கட்டும்... பாடு… பாடு ஷ்ருதி பாடு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ டிடி, @ ஸ்ரீராம்: //..ஷ்ருதி உட்கார்.. ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்...? உன் இசை என்ற இன்ப வெள்ளத்திலே நீந்துவதற்கு... //

      அடடா! டிடி-யின் கற்பனையே கற்பனை. ஸ்ரீராம்! அடுத்தாற்போல் மூவர் கதை என்று ஒன்று ஆரம்பியுங்கள். பாட்டை, திரைப்பாட்டை மையமாகக் கொண்டு! டிடி-யை அதில் கோர்த்துவிடுங்கள்!

      நீக்கு
    2. டிடி அசத்தல் அசத்தல்!! செம கற்பனை!! சூப்பர் ரசித்தோம் ரொம்பவே !! மிக்க நன்றி டிடி

      ஓ அப்ப இன்னும் காரம் எதிர்பார்த்தீங்களா? ஹா ஹா ஹா ஹா

      நாங்க அப்படி ஒரு குடும்பச் சண்டை இல்லாத ஒரு கதைதான். யோசித்தது. கணவன் மனைவி என்றால் கருத்து வேறுபாடுகள் சகஜம் தானே. பானு அக்கா இதுக்கு இன்னும் அழகா பதில் சொல்லுவாங்க. வேறொரு முடிவும் இருந்தது. ...

      எங்கள் நன்றிகள் டிடி

      கீதா

      நீக்கு
    3. அட! ஏகாந்தன் அண்ணா நாங்க எழுதின கதைக்கு குமுதம் ஃபார்முலானு சொன்னது போல இப்ப இன்னொரு ஐடியாவும் கொடுத்திருக்கீங்க ஆஹா நல்லாத்தான் இருக்கு.

      யாரு ஸ்டார்ட் ம்யூசிக் சொல்லப் போறாங்களோ தெரியலை...ஹா ஹா

      நன்றி ஏகாந்தன் அண்ணா

      கீதா

      நீக்கு
    4. ஹாஹாஹா எங்கேயோ போய் விட்டீர்கள் டி.டி.
      முதல் முயற்சி என்பதால் கொஞ்சம் ஸ்மூத்தாகவே கதையை நகர்த்தலாம் என்று முடிவு செய்ததால் மசாலாக்கள் சேர்க்கவில்லை. முதல் முதலாக சமைக்க ஆரம்பிக்கும் பொழுது சிம்பிளாக ரவை உப்புமா, வற்றல் குழம்பு என்று செய்வார்கள். அரைத்து விட்ட சாம்பாரெல்லாம் அடுத்த கட்டம். கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. கேரள மக்களுக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  16. மலைப்பாங்கான 400கி.மீ. தூரத்தை நான்கு மணி நேரங்களில் கடக்க உதவிய அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறைக்கு பாராட்டுகள்.
    தனக்கு சொந்தமில்லாத பொருளை வைத்துக்கொள்ளாத ஜோதிகா,சதீஷ் என்னும் இரண்டு குழந்தைகளுக்கும் அவர்களை அப்படி வளர்ந்திருக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. // சில டெக்னிக்கல் பிரச்சனைகளின் காரணங்களால் வெளியிட முடியாமல் //

    1) (mb) அதிக அளவா...?
    2) (format) பிரச்சனையா...?

    பதிலளிநீக்கு
  18. ஏகாந்தன் ஐயாவிற்கு நன்றி... கதையின் முடிவில் மனதில் தோன்றிய பாட்டு அது...

    அதன் பின் செலிப்ரிட்டி ஸ்டேட்டஸுக்கு முன்னால், குழந்தைகளிடம் :-

    ஷ்ரவன் : காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா (2) கட்டியவள் மாறிவிட்டாள் ஏனடா கண்ணா...? (2)

    ஸ்ருதி : காதலிதான் மனைவிஎன்று கூறடா கண்ணா - அந்த காதலிதான் மனைவிஎன்று கூறடா கண்ணா... அன்று கண்ணை மூடிக்கொண்டிருந்தார் ஏனடா கண்ணா...? மனதில் அன்றே எழுதிவைத்தேன் தெரியுமா கண்ணா...? அதை மறுபடியும் எழுதச்சொன்னால் முடியுமா கண்ணா...?

    ஷ்ரவன் : தினம்தினம் ஏன் கோபம் கொண்டாள்...? கூறடா கண்ணா... அவள் தேவையென்ன...? ஆசையென்ன...? கேளடா கண்ணா...

    ஸ்ருதி : நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா...? அதை நீ பிறந்த பின்பு கூட இயலுமா கண்ணா...?

    ஷ்ரவன் : இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா (2) இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா (2)

    ஸ்ருதி : அவரில்லாமல் எனக்கு வேறு யாரடாகண்ணா (2) நான் அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா...

    காத்திருந்த கண்கள்

    பதிலளிநீக்கு
  19. ஷ்ரவன் மனதில் சின்னதொரு அகங்காரம் முளைத்த சமயத்தில், மனதில் தோன்றிய பாட்டு :-

    ஷ்ரவன் : அகம்பாவம் கொண்ட சதியால் - அறிவால் உயர்ந்திடும் பதி நான் (2) சதி பதி விரோதம் மிகவே - சிதைந்தது இதந்தரும் வாழ்வே...!

    ஸ்ருதி : வாக்குரிமை தந்த பதியால் - வாழ்ந்திடவே வந்த சதி நான் (2) நம்பிடச் செய்வார் நேசம் - நடிப்பதெல்லாம் வெளி வேசம்...!

    ஷ்ரவன் : தன் பிடிவாதம் விடாது - என் மனம் போல் நடக்காது (2) தமக்கென எதுவும் சொல்லாது - நம்மையும் பேச விடாது...!

    ஸ்ருதி : அனுதினம் செய்வார் மோடி - அகமகிழ்வார் போராடி (2) இல்லறம் இப்படி நடந்தால் - நல்லறமாமோ நிலவே...?

    ஐயோ... அய்யய்யோ... பாடல் முழுவதும் அரசியல் எல்லாம் இல்லேங்கோ... ஹா... ஹா... ஹா... ஹா...

    வாராயோ வெண்ணிலாவே - படம் : ஸ்ருதி(மிஸ்ஸி)யம்மா

    நேரம் கிடைத்தால் மீண்டும் வருகிறேன்... காணொளி இணைப்பும் கொடுத்துள்ளேன்... என்றும் ரசிக்கலாம்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ DD : நீங்கள் மேலே குறிப்பிட்ட அ) வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா (கண்ணதாசன்), ஆ) வாராயோ வெண்ணிலாவே ..கேளாயோ எங்கள் கதையை..(தஞ்சை ராமையா தாஸ்)
      -இரண்டும் காலத்தை வென்ற பாடல்கள். எழுத்து, இசையமைப்பு, குரல் என்றும் எல்லாம் ரம்யமாக சங்கமித்து ரசிகர்கள் மனதில் கோலோச்சிய பொற்காலம். நினைவுபடுத்தியதற்கு நன்றி.

      நீக்கு
    2. நன்றி ஏகாந்தன் ஐயா... "வாடிக்கை மறந்ததும் ஏனோ...?" இந்தப் பாடலும் ஞாபகம் வந்தது... அது எந்த இடத்துல வரும் என்பதை சொல்லுங்கள்...

      நீக்கு
    3. @ DD : //..வாடிக்கை மறந்ததும் ஏனோ?.... எந்த இடத்தில் வரும் என்பதை சொல்லுங்கள்..//

      எனை வாட்டிடும் கேள்விகள் ஏனோ !

      நீக்கு
  20. 15 நாட்களே ஆன குழந்தையை காப்பாற்றிய நைத்து நல் உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    ஜோதிகா மற்றும் சதீஷ் இருவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.
    சின்ன வயதில் இருக்கும் இந்த நல்ல குணம் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காப்பாற்றிய அனைத்து நல் உள்ளங்களுக்கு

      நீக்கு
    2. செய்திகளை முன்பாகவே படித்து விடுகிறேன். நல்ல செய்திகள். தொடர்கதை முதலில் கதையாக நினைத்தது, பின்னர் அவர்கள் நல்லபடி மனமொத்து வாழவேண்டுமே என்ற விசாரம் எனக்கு வந்துவிட்டது முதுமையின் கோளாறு. பாட்டு ,ராகம் என்று போனதால் கீதாரெங்கன் முதலிலேயே மனதில் வந்து விட்டார். ஸ்ரீராம்தான் ஆரம்பம் என்று நினைத்தேன். கௌதமன் அவர்களும் மனதில் வந்தார்கள். இன்னும் ஒருவர் கதை எழுதுபவரை பெண் எழுத்தாளர் என்று தீர்மானம் இருந்தது. என்னால் நீண்ட பின்னூட்டம் எழுத முடிவதில்லை. பானுமதி வெங்கடேசுவரன்,கீதாரெங்கன் இருவருக்கும் பாராட்டுகள். எங்கள் ப்ளாகிற்கும்தான். என்னைப் புரிந்துகொண்டு என்னையும் பின்னூட்டம் இட்டு ரஸித்தவர்கள் லிஸ்டில் சேர்த்ததற்கு மிகவும் நன்றி. அன்புடன்

      நீக்கு
    3. //என்னைப் புரிந்துகொண்டு என்னையும் பின்னூட்டம் இட்டு ரஸித்தவர்கள் லிஸ்டில் சேர்த்ததற்கு மிகவும் நன்றி.//
      இது எங்கள் பாக்கியம். மிக்க நன்றி!

      நீக்கு
  21. //“அம்மா! எங்க ஸ்கூலில் இன்னிக்கு பேரன்ட், டீச்சர் மீட்டிங்க் இருக்கு, நீ வருவதானே….?” என்றபடியே மகள் ஸ்ருதியின் காலைக் கட்டிக் கொள்ள, அவள் என்னைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

    “அம்மா இன்னிக்கு ஊருக்குப் போரேண்டா செல்லம். நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வரேன்.”

    “போம்மா, நீ லாஸ்ட் டைம் இப்படித்தான் சொன்ன, அதிதியோட அம்மால்லாம் எப்போதும் வரா, நீ தான் வர மாட்டேங்கற…..//

    இதனால் தான் சொன்னேன் குழந்தையின் மனநிலையை வைத்து கதை மீண்டும் தொடரலாம் என்று.

    தாய், தந்தை பிஸியாக இருந்தால் குழந்தைகளும் விட்டுக் கொடுத்து, புரிந்து கொள்ளும் இயல்பான மனநிலை வேண்டும் இல்லையென்றால் அதுவும் கஷ்டம்.

    பிரபலமானவர்கள் கொடுக்கும் விலை என்று கடைசியில் முடிந்து இருந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
  22. தனபாலன் பகிர்ந்த பாடலும் ஸ்ருதி, ஷ்ரவன் உரையாடலும் சூப்பர்.
    பாட்டுக்களால் கதை உரையாடலை தனபாலன் பார்த்துக் கொள்வார்.
    நீங்கள் இருவரும் கதையை ரெடி செய்யுங்கள்.
    உங்கள் மூவர் கூட்டணிக்கு வாழ்த்துக்கள்.
    பாட்டுக்கள் மிக பொருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டுக்கள் நிஜமாகவே பிரமாதம்! எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றி.

      நீக்கு
  23. இரண்டு செய்திகளும் சிறப்பான செய்திகள்.

    இரண்டு பேர் சேர்ந்து ஒரு கதையை எழுதுவது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். இருவரும் மிகச் சிறப்பாக கதையை நகர்த்தி இருந்தார்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும். இது போன்ற முயற்சிகள் இன்னும் தொடரட்டும்.

    வெளியிட்ட எங்கள் பிளாக் நண்பர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  24. அனைவருக்கும் வணக்கம்

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
    கேரள அரசும், காவல் துறையும் இணைந்து செய்த உதவி பாராட்டத்தக்கது. சிகிச்சை பெறும் குழந்தை நூறாண்டு வாழ பிரார்த்திப்போம்.

    பொறுப்பாக நேர்மையாக நடந்து கொண்ட இரு குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.

    இன்றைய தொ. கதை பிறந்து வளர்ந்த கதை உரையாடல் நன்றாக உள்ளது. கதைக்கு கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி சொன்ன அருமையான பாங்கிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். கதை போகும் பாதையை யோசித்த அனைவரும் தங்கள் மனதில் தோன்றிய கற்பனைக்கேற்றவாறு ஒவ்வொரு பகுதிக்கும் கருத்துரை எழுதியுள்ளோம். ஆனால் முடிவு எப்படியும் இருவரும் (ஷரவண், ஸ்ருதி) மனமொப்பி சேர்ந்து வாழ்வார்கள் என்ற கருத்தே அனைவரின் மனதிலும் தினமும் பிரதிபலித்தது. அதன்படி நல்லதொரு முடிவாக தந்து சுபமாக எழுதிய சகோதரிகள் இருவருக்கும் மீண்டும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    ஒரு வாரத்தில் மற்றைய எழுத்தாளர்களின் எழுத்துக்களை பாதிக்காத வகையில், பிற நாட்களாக பார்த்து கதையை வெளியிட்டு பெருமையுடன் வெற்றியடையச்செய்த எ.பி ஆசிரியர்களின் நேர்மைக்கும் பண்புக்கும் தலைசாய்த்த வணக்கங்களுடன் மனமார்ந்த பாராட்டுக்களும் தெரிவித்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. அனைவருக்கும் வணக்கம்.

    இந்த கருத்துரையை காலையிலிருந்து எழுதி அனுப்புவதற்குள் நெட் பிரச்சனை ஒரு வழியாக்கி விட்டது. (அதுவும் கைபேசியில், மூன்று முறை தடங்கல்) ஒருவழியாக அனுப்பி படித்துப் பார்க்கும் போது எனக்கும் முன்னால் நிறைய கருத்துரைகள்.

    சகோதரர் தனபாலன் அவர்கள் அத்தனை இனிமையான, பழைய மறக்க முடியாத பாட்டுக்களாலேயே புகழ் மாலைகளாக தொடுத்து கதைக்கும்,கதாபாத்திரங்களுக்கும் கதை எழுதியவர்களுக்கும்,சூட்டியிருக்கிறார்.
    அருமை. அவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  26. அனைவருக்கும் வணக்கம்.

    காலையிலிருந்து விடாமல் நெட் சோதித்ததில், நானும் விடாது அடுத்தடுத்து எழுதி "சோதிக்கிறேன்." (உங்களையல்ல..ஹா ஹா ஹா நெட்டை.)

    ஒன்று சொல்ல விட்டு விட்டது. கதைக்குப் பொருத்தமாக கதையின் தலைப்பும் நன்றாக உள்ளது. தலைப்பு இப்போதைக்கும் பொருத்தமாக,யாரென்று காண்பிக்காமல், புதிராக (சஸ்பென்ஸாக) கதை எழுதிய நீங்களும், எழுதியது யார்தானென்று புரியாமல் விமர்சித்த நாங்களும் இப்போது சேர்ந்து செல்லும் நேரங்களாக நகர்ந்து கொண்டுள்ளது. இப்படியே பரஸ்பரம் பேசிக் களிக்கத் தோன்றுகிறது.
    நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புதிராக (சஸ்பென்ஸாக) கதை எழுதிய நீங்களும், எழுதியது யார்தானென்று புரியாமல் விமர்சித்த நாங்களும் இப்போது சேர்ந்து செல்லும் நேரங்களாக நகர்ந்து கொண்டுள்ளது.//
      ஆஹா! இதுவும் நாங்கள் எதிர்பார்க்காத புதிய கோணம். நன்றி.

      நீக்கு
  27. க.பி.க.வில் நான் சொல்ல மறந்தது: மற்ற யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாததால் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாராளமாக பாராட்டிக் கொண்டோம். நான் எழுதி அனுப்பியதும் சூப்பர் அக்கா!! என்று கீதா பதில் அனுப்புவார். அவர் பகுதி வந்ததும் பிரமாதம் என்று நான் பாராட்டுவேன். எங்கேயாவது மாற்ற வேண்டும் என்று தோன்றினால் கீதா"அக்கா நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள், அதற்கு இப்படி கமெண்ட் வருமே, பரவாயில்லையா?,அல்லது அதை மாற்றுகிறீர்களா?" என்று பவ்யமாக கேட்பார். நானோ,"இந்த இடம் சரியில்லை கீதா, அதை இப்படி மாற்றி விடுங்கள்"என்று ஆணையிடுவேன். அவரும் உடனே மாற்றுவார். எப்படியோ இரண்டு பேரும் சேர்ந்து எழுதி விட்டோம்.
    கதை பிரசுரமாகப் போகிறது என்றதும் பரிட்சை ரிசல்டை எதிர்பார்ப்பது போல ஒரு பரபரப்பு. பரிட்சை ரிசல்டிற்கு இத்தனை பயந்ததில்லை.
    எல்லோரும் நன்றாக வரவேற்றதும் ஏற்பட்ட திருப்தி... ஆஹா! நன்றி நன்றி நன்றி😐🙏🙏🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்துரைக்கு ஒரு பாடல் சொல்லட்டுமா...?

      பா.வெ : பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை... என்னென்று நான் சொல்லலாகுமா...? கீ.ர. : என்னென்று நான் சொல்லவேண்டுமா...?

      கீ.ர. : பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை... பா.வெ : ஏன் என்று நான் சொல்லலாகுமா...? கீ.ர. : ஏன் என்று நான் சொல்லவேண்டுமா...?

      பா.வெ : நடமாடும் மேகம் நவநாகரீகம்... அலங்கார கின்னம் அலை போல மின்னும்... கீ.ர.: நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்... பழங்கால சின்னம் உயிராக மின்னும்... பா.வெ :துள்ளி வரும் வெள்ளி நிலா... துள்ளி வரும் வெள்ளி நிலா... கீ.ர. : துவண்டு விழும் கொடியிடையாள்... துவண்டு விழும் கொடியிடையாள்...

      பா.வெ : விண்ணோடு விளையாடும் - பெண் அந்த பெண்ணல்லவோ... சென்றேன் அங்கே... கண்டேன் இங்கே... வந்தேன்...

      பா.வெ : நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை... நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை (2)

      கீ.ர. : உன் பார்வை போலே என் பார்வை இல்லை... நான் கண்ட காட்சி நீ காணவில்லை ((2)

      பா.வெ : என் விழியில் நீ இருந்தாய் (2) கீ.ர. : உன் வடிவில் நான் இருந்தேன்...!

      பா.வெ : நீ இன்றி நானில்லை - நான் இன்றி நீயில்லையே... சென்றேன் ம்ஹிம் கண்டேன் ம்ஹிம் வந்தேன்...

      நீக்கு
    2. அடடா! எப்படி இப்படிப்பட்ட அருமையான பாடல்கள் உங்களுக்கு நினைவுக்கு வருகிறது?

      நீக்கு
  28. ரொம்ப நாளைக்கு முன்னாலேயே எ.பி.யில் நிறையப் பேர் கலந்துக்கற மாதிரி ஒரு தொடரை எழுத முயற்சிக்கலாமா என்று ஸ்ரீராமைக் கேட்ட நினைவு உண்டு.

    அது இரண்டு பேர்கள் எழுதிய தொடராக வெற்றிகரமாக நிஜத்தில் நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி மேலும் பல இதுமாதிரியான வெற்றிகளுக்கு அச்சாரமாக அமையட்டும். இரண்டு பேருமே நன்றாக அழகாக windup செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    திரு. வெங்கடேஸ்வரன் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அறிந்து சந்தோஷம். நன்றி, ஸார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி சார். என் கணவர் சார்பிலும் நன்றி.

      நீக்கு
  29. 2015 ஆம் ஆண்டிலே "திங்க"றகிழமைப் பதிவிலே "வெள்ளையப்பம்" வந்தன்னிக்கும் ஒரு சிறு தொடர்கதை ஆரம்பிச்சிருக்கீங்க. சஸ்பென்ஸ் கதை! தொடர்ந்து போய்ப் பார்க்க முடியலை! பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  30. அப்போது அதாவது 2015 இல் காலை ஆறு மணிக்குப் பதிவு வந்ததோ என்னமோ மூன்றாம் நாள் கதையில் மதியம் இரண்டு மணிக்கப்புறமாத் தான் முதல் கருத்தாக என்னுடைய கருத்து வந்திருக்கிறது. சின்னப் பத்தியாகத் தொடர்ந்து ஏழு நாட்கள் எழுதி இருக்கிறீர்கள். இப்போதுள்ளவர்களில் நெ.த. கோ.அ. தி.கீ, டிடி, நான்,இன்னும் கௌதமன் கூடக் கருத்திட்டிருக்கிறார். ஏஞ்சலின் கூட வந்திருக்கார். கமலாவும்!

    பதிலளிநீக்கு
  31. ஜிஎம்பி, வல்லி, ராமலக்ஷ்மி, கரந்தையார் ஆகியோர் இருக்கின்றனர். துரையைக் காணோம்! கடைசியிலே கதை ஜவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாக இழுத்துட்டு முடிச்சிருக்கீங்க, வெல்லச் சீடையைப் போட்டுட்டு! யாருக்கும் எந்த பதிலும் ஏழு நாட்களும் சொல்லவே இல்லை! ஏன்?ஏன்? ஏன்? எப்போலேருந்து பதில் சொல்ல ஆரம்பிச்சீங்க? அதையும் கண்டு பிடிக்கணும்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நீங்களும் கே. பி. எஸ் பாணியில் சந்தேகங்களை உதிர்த்திருக்கிறீர்கள்.. இந்த வினாவிற்கு நேற்றிலிருந்து நானும் பதில் எதிர்பார்க்கிறேன். ஹா ஹா ஹா ஹா. பதில்தான் எவரிடமிருந்தும் காணோம். வரும். ஆனா வராது போலிருக்கிறது...என் பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. புதுப் பதிவு வந்தாச்சு. அதுக்கு கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கையில் எப்போதோ 2015 ஆம் ஆண்டுப் பதிவை யார் நினைவு வைத்து பதில் கொடுப்பார்கள் கமலா? அதனால் என்ன, பரவாயில்லை. எனக்கு என்னமோ இதே போல் ஒரு தொடர் முன்னாடியும் வந்ததாய் நினைவு வரவே தேடிக் கண்டு பிடிச்சேன். அதுவும் வெள்ளையப்பத்தைத் தேடிப் போனப்போக் கண்ணில் பட்டது.

      நீக்கு
  32. வெங்கட், அமைதிச்சாரல்,கில்லர்ஜி,மிகிமா போன்றோர்களும் கருத்திட்டிருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  33. சரியான விடைக்கு மிகவும் நெருங்கி வந்தவர் ஏஞ்சல். என்ன தவறோ, அதற்கேற்றார் போல் கழித்துக் கொண்டு மிச்ச பொற் காசுகளை கொடுக்கலாம் என்று பார்த்தால், ஆளையே காணோமே? அவராவது சர்ச்சில் பிசி. அதிரா என்னவானார்? நிஜமாகவே காசிக்கு கிளம்பி விட்டாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் பதினைந்து நாட்கள் விடுமுறை போட்டிருந்தார். அநேகமாய் நாளை அல்லது மறுநாள் வரலாம் பானுமதி! அதிரடி தான் என்னனு புரியலை! :( காசிக்கே போயிட்டாரோ? இல்லைனா நிஜம்மாவே தேம்ஸிலே குதிச்சுட்டாரா?

      நீக்கு
  34. மனித நேயம் இன்னும் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு அந்த முதல் செய்தி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!