வெள்ளி, 5 ஏப்ரல், 2019

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே - 7 -அம்மா பேரைச் சொன்னால் போதும் ஊரே அஞ்சும் அப்போது


நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே 
- - - - - - - - - - - - - - 


ஷ்ரவண்  :

"ஷ்ரவண், சும்மா சொல்லக்கூடாது, ஸ்ருதியை பிரமாதமா ட்ரெயின் பண்ணிட்ட, இது வரைக்கும் அவ பாடின எல்லா கச்சேரியும் அமர்க்களம்." வாட்சாப் காலில் விக்கி ரெட்டை தம்ப்ஸ் அப் காண்பித்து வாழ்த்தினான்.  அதோடு நிறுத்திக் கொள்ளாமல், "ஐ ஃபீல் யூ ஆல்சோ ஷுட் ஹாவ் கம்" என்று முடித்தான்.

விக்கி என் பெரியப்பா மகன். நானும் அவனும் சின்ன வயதிலிருந்தே ரொம்ப தோஸ்த். படிப்பு, விளையாட்டு, விஷமம், இசை ஆர்வம் இப்படி எல்லாவற்றிலும் சமமாகப் பயணித்தோம். வீட்டுப் பெரியவர்கள், "உங்கள் இருவரையும் ரெட்டை மாட்டு வண்டியில் பூட்டி விடலாம் போலிருக்கிறதே" என்று கேலி செய்வார்கள்.

பி.டெக். முடித்து, எம்.எஸ். படிக்க அமெரிக்கா சென்று அங்கேயே செட்டில் ஆகி விட்டான்.  என் திருமணத்திற்கு வர முடியாததால், விடுமுறையில் இந்தியா வந்திருந்த பொழுது எங்களைப் பார்க்க வந்திருந்தான். 

வரும்பொழுதே வழக்கமான ஆரவாரமான பேச்சு. "என்ன பெரிய ஆளாயிட்ட? மன்னி தயவில் பத்திரிகைல எல்லாம் வரே? ம்ம்ம்!" என்று முதுகில் தட்டினான். எனக்குச் சுருக்கென்றது.

"ஃபோனில் பேசும் பொழுதெல்லாம் அப்பாவும், அம்மாவும், ஸ்ருதி புராணம்தான். அப்படிப் பாடறா, இப்படிப் பாடறானு ஒரே பெருமை. ஸோ, இன்னிக்கு நான் ஸ்ருதி பாடி கேட்காமல் போகப் போவதில்லை. பக்க வாத்யத்தோடு வந்து விட்டேன்." என்று பையிலிருந்து கஞ்சிராவை எடுத்தான். 

அதோடு நிற்காமல் "உன்னோட கீ போர்டை கொண்டு வா"  என்று எனக்கு வேறு ஆணை இட்டான்.



உள்ளே சென்ற நான், என்னுடைய ஐபேடை கொண்டு வந்ததும் எல்லோருக்கும் ஆச்சர்யம். ஸ்ருதியின் பாட்டிற்கு நான் அதில் வயலின் வாசிக்க, விக்கி கஞ்சிரா. இசைக் கலைஞர்களுக்கு மூட் செட் ஆகி விட்டால், மேலே மேலே உற்சாகமாகப் பாடிக்கொண்டே போவார்கள். எங்களுக்கு அன்று அப்படித்தான் ஆனது. ஒரு மினி சேம்பர் ம்யூசிக் போல் அமைந்து விட்டது.

அன்று இரவு எங்கள் அறைக்குள் வந்த ஸ்ருதி, தலைகாணியை என் மீது எறிந்தாள். எனக்கு ஐ பாடில் வயலின் வாசிக்க வரும் என்பதை அவளிடம் மறைத்து விட்டதில் கோபமாம்.

"உன்னை மாதிரி ஒரு விதூஷகி இருக்கும் வீட்டில், என்னைப் போல் ஒரு கத்துக்குட்டி எப்படி வாசிக்க முடியும்?"

"பேசாத.. உன் பேச்சு கா..!" என்று பத்து விரல்களாலும் காய் விட்டாள். (ரொம்பக் கோபமாம்) ஆனால் அந்தப் பொய்கோபக் காய் எனக்கு இனித்தது.

மறு நாள் என்னோடு தொலை பேசியில் பேசிய விக்கி, "மன்னி கிட்ட பாஸ்போர்ட் இருக்கா?" என்று கேட்டான்

இருந்தா..? நீ என்ன விசா கொடுக்கப் போறியா?"

"பின்ன? சும்மா கேக்கறேனா? நான் தமிழ் சங்கத்தில் கமிட்டி மெம்பர்.  நீயும் ரெடியா இரு. மன்னியோட தயவில் மேகசீன் அட்டையில் வந்த மாதிரி, மன்னியோட நீயும் அமெரிக்கா பார்த்துடலாம்." 

இந்த அவமானத்திற்குப் பிறகும் ஸ்ருதியோடு அமெரிக்கா செல்ல எனக்கு எப்படி மனசு ஒப்பும்? விக்கி பேச்சோடு நிற்காமல், சொன்னபடி ஸ்ருதியின் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்ய, மளமளவென்று அவளின் அமெரிக்கப் பயண ஏற்பாடுகள் நடந்தன.

"நீயும் என்னோடு வாயேன்" என்று ஸ்ருதி பலமுறை என்னைக் கூப்பிட்டாள். "நான் அங்கு போனால் திரும்பி வர ரெண்டு மாசம் ஆகும்."

"நாம்ப பிரிந்து இருப்பது ஒண்ணும் புதுசு கிடையாதே..?"

"ஒரு மாரல் சப்போர்டுக்கு வரக்கூடாதா?"

"ஏற்கனவே என்னைச் சுருதிப் பெட்டி என்று கேலி செய்கிறார்கள், உன்னோடு நான் யு.எஸ். வந்தால், அவ்வளவுதான்....."

"யார் அப்படிச் சொல்வது?”

"யார் சொல்லவில்லை? நீ என்னவோ கச்சேரி பண்ணுவதைக் குறைத்துக் கொண்டு, கிளாஸ் எடுக்க ஆரம்பிக்கப் போறேன்னு சொன்ன..?"

"இப்போ என்ன சொல்ற? நான் யு.எஸ். போக வேண்டாங்கறயா?"

"நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்ல, யு.எஸ். என்ன? ஒரு வேர்ல்டு டூரே அடிச்சுட்டு வா, நான் குறுக்க நிக்கல, இப்போ என்னை பேப்பர் படிக்க விடறயா? ப்ளீஸ்.."

முகம் சிறுத்துப் போன ஸ்ருதி நகர்ந்து போனாள். லேசாக கண்களில் நீர் கட்டியதோ? நான் ஏன் இப்படி இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறேன்?

அதன் பிறகு அவள் யு.எஸ். கச்சேரிகளுக்காக என்னிடம் ஆலோசனை கேட்ட பொழுதெல்லாம் நான் சரியாக பதில் சொல்லாததோடு, அவள் செய்யும் சின்ன சின்னத் தவறுகளைக் கூடப் பெரிதாக எடுத்துப்பேசினேன்.

"ரொம்ப க்ரிடிஸைஸ் பண்ணாதடா, அவ ஓவர் கான்ஷியஸ் ஆகி விடுகிறாள்." அம்மா ஸ்ருதிக்குக் கேட்காமல் அடிக்குரலில் கூறினாள்.

"நான் என்னமா க்ரிடிஸைஸ் பண்றேன்? கரெக்ட் பண்றது தப்பா? தொட்டாசுணுங்கியா இருந்தா எதுவும் கத்துக்க முடியாது."

"கத்துக் கொடுக்கறது வேற, நொச்சு நொச்சுனு சொல்றது வேற.."

"வாட்டிஸ் யுவர் ப்ராப்லம்? நீதான் இப்போ நொச்சு நொச்சுங்கற.."

"அவ கொஞ்சம் ப்ராக்டீஸ் பண்ணனும், அவாத்துக்கு வேணா ஒரு வாரம் போய்ட்டு வரட்டுமே.."

"யாருமா வேண்டாம்னு சொன்னா? நீ என்ன அவளுக்குத் தூதா?" என்று வாயால் சொன்னாலும், மனசுக்குள் ஸ்ருதி போக மாட்டாள் என்று நினைத்தேன்.

நான் மாலை வீடு திரும்பிய பொழுது, ஸ்ருதி வீட்டில் இல்லை. அவள் வீட்டிற்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு வந்த கோபத்தில் அவளுடைய செல்போன் அழைப்புகளை ஏற்கவில்லை.


-------மீட்டல் தொடரும்...


==========================================================================================================


1992 இல் வெளிவந்த திரைப்படம் மகுடம்.



இசை இளையராஜா. 




எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி குரலில் ஒரு தாலாட்டுப்பாடல்.





சின்னக்கண்ணா புன்னகை மன்னா 
அப்பன் பாட்டைக் கேளடா 
உன்னைப்போலே கள்ளமில்லாத 
உள்ளம் கொண்டேன் நானடா 
சித்திரப் பசும்பொன்னே 
புது செண்பகப் பூச்சரமே 
நாளை சிறு தூளி ஆடிட வா...


அம்மா பேரைச் சொன்னால் போதும் ஊரே அஞ்சும் அப்போது 
ஊரைப்போலே நானும் கூட ஊமைச்சாமி இப்போது 
மார்பில் ஊறும் பாலில் வீரம் சேர்ப்பாள் உந்தன் தாய்தானே 
பாலை உண்டு வீரம் கொண்டு பாயும் சிங்கம் நீதானே 
அப்பன் வீரம் எங்கே போச்சு காலம் சொல்லும் உன்னோடு 
ஆற்றில் ஓர் கால் சேற்றில் ஓர் கால் என்றே ஆச்சு என்பாடு 
வா ராஜா வாவா வாடாத பூவா 

அப்பா பாட்டைக்கேட்கும் கண்ணே அம்மா பாட்டைக் கேளாயோ 
அப்பா மீதா அம்மா மீதா தப்பே யார்மேல் கூறாயோ...
வேங்கை மீது வேடன் போட்ட அம்பை எல்லாம் நான்தானே 
வாங்கிக்கொண்டு தாங்கிக்கொண்டு காயம் கொண்ட மான்தானே 
காயம் கொண்ட நன்றிக்காக தாலிப்பிச்சை கேட்டேனே 
காலம் செய்த கோலம் என்று தந்தை அள்ளிப்போட்டாயே 
தாயாக நானே நாளாச்சு கண்ணே 

64 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்!

    ஸ்ரீராம் உங்க காசி பயணம் நல்ல படியாக இனிதாக மகிழ்வான பயணமாக அமைய வாழ்த்துகள் ! பிரார்த்தனைகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காசி ட்ரிப் ஆர்கனைசர் சொல்லறபடி ஒயிங்கா கேட்டுப் போகணுமாக்கும்!! ஓகேயா ஹா ஹா ஹாஹா..

      கீதா

      நீக்கு
    2. மகிழ்வான காலை வணக்கம் கீதா. ஆம், அடுத்த பத்து நாட்கள் என் தொல்லை இருக்காது! - பின்னூட்டத்தில்! வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    3. தொல்லையா?!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
      நோ நோ நெவர்!

      கீதா

      நீக்கு
  2. பாட்டு, கதை வாசிக்க அப்புறம் வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம். பின்னர் வருகிறேன். எங்கள் வீட்டில் இன்றுதான் அமாவாசை.

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம்... தொடர்கதை படித்தேன். பாடல் கேட்க பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  6. கதையில் வரும் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்.
    அருமையாக பாடுகிறார் ரஞ்ச்னி ஸ்ரீதர்.

    ஷ்ரவண் மனநிலைக்கு ஏற்ற பாட்டு. பாட்டு கச்சேரியை குறைத்துக் கொண்டு பாட்டு வகுப்பு எடுக்க சொல்வது !

    மூன்றாவது மனிதன் வேறு உறவு என்ற பேரில் உள்ளே வந்து விட்டார். நல்லதா, கெட்டதா? பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  7. சின்னக்கண்ணா புன்னகை மன்னா பாட்டு கேட்டது இல்லை.
    படமும் பார்க்கவில்லை.
    இனிமையாக இருக்கிறது கேட்க.

    பதிலளிநீக்கு
  8. //மன்னி தயவில் பத்திரிகைல எல்லாம் வரே ? ம்ம்ம்!" என்று முதுகில் தட்டினான்//

    எரிகிற நெருப்பில் ப்ரூடாயிலை ஊற்றுவது போன்ற வார்த்தை.

    பதிலளிநீக்கு
  9. கதை சிறிது வேகம் பிடிக்கிறது...

    நல்ல பாடல்...

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  11. அன்பின் ஸ்ரீராம்....
    ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருவருளால் அனைத்தும் நல்லபடியாக நிகழும்...

    விஸ்வநாதா சரணம்..
    விசாலாட்சி அம்பிகையே சரணம்...

    பதிலளிநீக்கு
  12. அந்த அந்த தினத்துக்கு உரிய பகுதிகள்தாம் முதல்ல வரணும். தொடர்கதை அதற்குக் கீழேதான் வரணும். இங்கு 'வெள்ளி' திரையிசைப் பாடல். இதை இனி வரும்பகுதிகளில் சரிபண்ணிடுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை ஹைஃபைவ்...இதை நானும் சொல்ல நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்க...ஸ்ரீராம் எனக்கும் இதே கருத்துதான்....

      கீதா

      நீக்கு
  13. ஒரு தொடர்கதைல வரும் நிகழ்ச்சிகள் 'இப்படி நடந்துதானிருக்கும்' என்று நம்பும்படி வரவேண்டும். அப்படியே நிகழ்ச்சிகள் இருப்பதால் கதையில் ஒன்ற முடிகிறது. (ஆனா, இந்தப் பாடகி வீட்டுல என்ன என்ன பிரச்சனை இருக்கோ, அந்தப் பாடகிக்கு அப்படி நடந்ததற்கு இதுதான் காரணமா என்ற அனுமானங்கள் வருவதைத் தவிர்க்கமுடியலை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால? என்ன சொல்ல வர்றீங்க நெல்லை?

      நீக்கு
    2. இந்தத் தொடர்கதை அப்படி இருப்பதால்தான் ரசிக்க முடிகிறது என்று சொல்லவர்றேன் ஸ்ரீராம்...

      நீக்கு
  14. எனக்கு மனதில், இந்தக் கதையை கேஜிஜி சார்தான் எழுதிருக்கணும்னு தோன்றுது. (குரோம்பேட்டை குறும்பன் அல்ல). நல்ல எழுத்துத் திறமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  15. //உன்னைப்போலே கள்ளமில்லாத ஸஃப், சுஜி, // - யார் யார் பாடல் வரிகளைப் படிக்கிறார்கள் என்பதற்கான டெஸ்டா? ஸஃப், சுஜி லாம் யாரு? பாட்டுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை பாவம் ஸ்ரீராம் அவசர அவசரமா டைப் பண்ணிருப்பார் அவர் ரொம்ப பிசி....அதான் இருக்கும்...

      கீதா

      நீக்கு
    2. நானே இப்போதான் பார்க்கிறேன். எப்படி வந்தது என்றே தெரியவில்லை! எடுத்து விட்டேன். நன்றி.

      நீக்கு
  16. சின்னக் கண்ணா அதிகம் கேட்ட நினைவில்லை ஸ்ரீராம். பாட்டு நல்லாருக்கு...ரொம்பவே அமைதியான மெலடி..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​அப்படியா? எனக்கு மிகவும் பிடித்த பாடல். என்ன ராகம் கீதா?

      நீக்கு
  17. பாடல் வரிகளில் தந்தை நீலக்கலர் அடிக்கப்பட்டிருக்கே ஸ்ரீராம்... அது போல அவசரத்துல டைப்போ போல...பரவால்ல ஸ்ரீராம்போனா போகுது. நீங்க ரொம்பவே பிசி...புரிந்து கொள்ள முடியும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கீதா... இரண்டு மூன்று முறை கேட்டும் அந்த வார்த்தை தெளிவாக இல்லாமல் அபுரி! எனவே காதில் விழுந்த வார்தையைப் போட்டு அடித்தும் விட்டேன்!

      நீக்கு
  18. இன்றைய பதிவில் வெளியாகியுள்ள
    பாடலைக் கேட்டதாக நினைவில் இல்லை...

    இருந்தாலும் நன்று...

    பதிலளிநீக்கு
  19. சிச்சுவேஷன் சாங் பிரமாதம்! யார் இந்த ரஞ்சனி ஸ்ரீதர்? முதல்முறையாக கேட்கிறேன். நன்றாக பாடுகிறார். உடன் வாசித்த இளைஞரும்தான். சூப்பர் குட்!

    பதிலளிநீக்கு
  20. கேள்விப்படாத படம்,மற்றும் பாடல். அழகான மெலடி. படத்தில் கௌதமி, பானுப்ரியா என்று இரண்டு கதாநாயகிகள் போல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பானுப்ரியா என்று இரண்டு கதாநாயகிகள் போல?//

      Yes.

      Thank you!

      நீக்கு
  21. ஆஆஆவ்வ்வ்வ் விக்கிதான் ஸ்வரனுக்கு இனி வில்லன்போலும்:)..
    இன்றைய எழுத்துநடை மிக அருமை.... நான் ஆர் பெயரும் சொல்ல மாட்டேன் ஜாமீ.... ஓடரே மறந்து போச்சூ:)... கர்ர்ர்ர்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் ஆர் பெயரும் சொல்ல மாட்டேன் ஜாமீ.... ஓடரே மறந்து போச்சூ:)... கர்ர்ர்ர்:)..//

      அந்த பயம் இருக்கணும் அதிரா... ஆர்கனைஸர் அருள் இல்லாமலேயே காசி கிளம்புகிறேன்!

      நீக்கு
  22. பாடல் கேட்டதாக தெரியல்லியே... பெரிதாக கவரவில்லை என்னை...

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளிப் பாட்டு இது வரை கேட்டதில்லை. இன்று கேட்டதில் மிகவும் நன்றாக உள்ளது.

    தொடர் நன்றாக செல்கிறது. நேற்றதையும் படித்ததில், சிறிது, மகிழ்ச்சி. சிறிது சலனமுமாக நகர்கிறது. சலனத்தில் மகிழ்வு மறைந்து போகிற மாதிரி இருந்தாலும், ஒரு இடைவெளியில் மகிழ்ச்சி எட்டிப்பார்த்து இருவரும் மனமொப்பி சேருவார்கள் என்ற நம்பிக்கையும் எழுகிறது. பிரபலமானவர்கள் இடையில் வரும் போது, அவர்களின் சம்மதத்துடன் அவர்களின், ஒன்றிலிருந்து பத்து வரை விட்ட உறவுகள் யாரேனும் கதைக்கு உரமாக இருந்து கரு எடுத்து தருகிறார்களோ என்ற எண்ணமும் வந்து போகிறது.ஹா ஹா. எண்ணம் தவறெனின் வருந்துகிறேன்.

    நேற்று என்னால் வலைப்பக்கம் வர இயலவில்லை எனினும் உமா மகேஸ்வரன் தரிசனம் பெற்று கதையையும் படித்து விட்டேன்.

    தங்களது காசிப்பயணம் சிறப்பாக அமைந்து அனைத்து நலன்களும் பெற இறைவனை மனமாற பிராத்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  24. @Sriram:தங்களுடைய காசி யாத்திரை, காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, கால பைரவர், டுண்டி கணபதி மற்றும் முன்னோர்கள் ஆசியோடு சிறப்பாக நடக்கட்டும். அது சரி, யுகாதியை ட்ரைனிலேயே கொண்டாட உத்தேசமா? உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  25. கீதா அக்காவை எங்கே காணோம்? மறுபடி ஏதாவது யாத்திரை கிளம்பி விட்டார்களா? அம்ப்ரிகா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சொல்லி இருந்தேனே, எங்கே, வந்தால் தானே தெரியும்! :)

      நீக்கு
  26. அனைவருக்கும் உகாதி தின வாழ்த்துகள்.

    பாடல் எப்பவோ கேட்ட நினைவு.
    நன்றாக இருக்கிறது.

    பதிவுக்குப் பதிவு கதை திரும்பிக் கொண்டே இருக்கிறதே.

    வாழ்த்துகள். ரசிக்கும் படியான எழுத்துகள்.

    அன்பு ஸ்ரீராம், நல்லபடியாக தெய்வ தரிசனங்கள் கிடைக்கட்டும். பெரியவர்களின் ஆசிகள்
    எப்பொழுதும் உண்டு.

    பதிலளிநீக்கு
  27. கதை - தொடர்ந்து கொண்டிருக்கிறேன்

    பல வருடங்களுக்கு முன்பு கேட்ட பாடல் .

    பதிலளிநீக்கு
  28. பாடலும் இந்தப் படம் பற்றியும் தெரியவில்லை. இப்போதுதான் பாடல் கேட்கிறேன் ஸ்ரீராம்ஜி.

    பாடல் நன்றாக இருக்கிறது.

    கதையைத் தொடர்கிறேன். நல்ல நடை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!