வசந்தத்தில் ஓர் நாள்...
என்ன அருமையான தலைப்பு இல்லை? ஹிந்தி 'மௌஸம்' படத்தின் தமிழ்த்தழுவல் இந்தப் படம்.
சிவாஜி கணேசன், ஸ்ரீப்ரியா நடித்த திரைப்படம். ஏ ஸி திருலோக்சந்தர் இயக்கத்தில்...
ஹிந்தி மௌஸம் படத்தில் இந்தப் பாடலுக்கான காட்சியும், பாடலும் எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த பாடல், காட்சி. 'தில் தூண்ட்தா ஹை' என்கிற அந்தப் பாடல் காட்சியின் அமைப்பில் சஞ்சீவ் குமார் தன் இளமைக்கால நினைவை கண்முன்னே காட்சியாகக் காணுவார். நம்மை என்னவோ பண்ணும் காட்சி அமைப்பு அது. பாடலும். இனிமையான அந்தப் பாடல் முடிந்ததும் தற்போதைய கிழ சஞ்சீவ் குமார் அதே பாடல் வரிகள் பின்னணியில் சோகமாக வேறொரு மெட்டில் வர நடந்து வருவார். ஹிந்தியில் இசை அமைத்தவர் மதன் மோகன். பாடலை எழுதியவர் குல்ஸார்.
1975 இல் ஹிந்தியில் வெளியான படத்தை 1982 இல் தமிழில் தழுவினார்கள். படம் வெற்றியா, தோல்வியா, தெரியாது. நான் திரைப்படத்தை ஹிந்தியிலும் பார்க்கவில்லை, தமிழிலும் பார்க்கவில்லை. வழக்கம்போல பாடலை மட்டுமே ரசிக்கிறேன்.
அந்தப் பாடலுக்கான தமிழ்ப்பாடல் இது. இந்தப் பாடலும் எஸ் பி பி - வாணி ஜெயராம் குரலில் எனக்குப் பிடித்த பாடல். தமிழில் காட்சி சுமாராகத்தான் இருக்கும். சிவாஜி (ஜிவாஜி!!) எதிர்ப்பாளர்கள் மன்னிக்கவும்!
வாலியின் வரிகளுக்கு எம் எஸ் வி இசை.
ஹிந்தியில் நான் கேட்ட/ பார்த்த பாடலின் Feel தமிழில் ஐம்பது சதவிகிதம் கூட இல்லை என்றாலும் இது ஒரு நல்ல பாடல்.
எஸ் பி பி பல்லவி பாடும்போது 'வேண்டும் வேண்டும் உந்தன் அழகு' என்று அந்த 'அழகு' என்கிற வார்த்தையில் 'பார், நான் அந்த இடத்தை மாற்றி பாடுகிறேன்'என்பதுபோல ஒரு அழுத்தம் கொடுத்துப் பாடுவார்.
வேண்டும் வேண்டும் உந்தன் உறவு
வெண்பனித் தென்றல் உள்ளவரையில்
தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திடவேண்டும்
நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
நாளை என்பதே மறந்திட வேண்டும்
நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெறவேண்டும்
கொஞ்சும் மொழிகள் நீ சொல்லவேண்டும்
கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
உலகம் என்னை புகழ்ந்திட வேண்டும்
உங்கள் காலடி தொடர்ந்திட வேண்டும்
உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திடவேண்டும்
======================================================================================================
நேற்றைய உரையாடலின் தொடர்ச்சி....
கீ.ர.: ரொம்ப சந்தோஷமா இருக்குல்லியா அக்கா? ஒரு பெரிய டாஸ்கை ஒழுங்கா முடிச்சுட்டோம்னு திருப்தி.
பா.வெ.: எனக்கும் அதேதான். ஏதோ விளையாட்டுத்தனமா ஆரம்பிசோம்.. நல்லபடியா முடிஞ்சது.
கீ.ர.: ரெண்டு பேர் சேர்ந்து ஒரு கதை எழுதலாமா? என்று முதலில் கேட்டது நீங்கதான். எப்படி இந்த ஐடியா தோணித்து?
பா.வெ.: ஏகாந்தன் சார் சொன்ன மாதிரி இது குமுதம் ஃபார்முலாதான். ரொம்ப வருடங்களுக்கு முன் குமுதத்தில் சிவசங்கரியும், இந்துமதியும் சேர்ந்து இரண்டு பேர் என்று ஒரு நாவல் எழுதினார்கள். அதைப் போல நாமும் முயற்சி செய்யலாமே என்று தோன்றியது. நம்மை ஆதரிக்கத்தான் எங்கள் பிளாக் இருக்கிறதே?
பா.வெ.: ஏகாந்தன் சார் சொன்ன மாதிரி இது குமுதம் ஃபார்முலாதான். ரொம்ப வருடங்களுக்கு முன் குமுதத்தில் சிவசங்கரியும், இந்துமதியும் சேர்ந்து இரண்டு பேர் என்று ஒரு நாவல் எழுதினார்கள். அதைப் போல நாமும் முயற்சி செய்யலாமே என்று தோன்றியது. நம்மை ஆதரிக்கத்தான் எங்கள் பிளாக் இருக்கிறதே?
கீ.ர.: கரெக்ட். ஸ்ரீராமிடம் இதை சொன்னபோது சந்தோஷமாக வரவேற்றார். ஆனால், நாம் கதைக்கருவை தீர்மானிக்க ரொம்ப நாள் ஆச்சு.
பா.வெ.: வெரி ட்ரு. ஸ்ரீராமிடம் ஒரு பிளாட் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, "நீங்கள் எழுதப்போகும் கதைக்கு நான் எப்படி பிளாட் சொல்ல முடியும்? நீங்களே யோசித்து டிசைட் பண்ணுங்கள் என்று சொல்லி விட்டார்.
கீ.ர.: நாம் கௌ அண்ணாவிடம் கேட்டிருக்க வேண்டும். ஹா ஹா! சூப்பரா ஒரு பிளாட் கொடுத்திருப்பார். எப்படியோ சங்கீத சீசன் சமயமாக இருந்ததாலோ என்னவோ, மியூசிக்கல் தீம் எடுத்துக் கொண்டோம்.
பா.வெ.: இரண்டு பேர்கள் எழுதும் கதை, இரண்டு பேர்களை பற்றியதாக இருக்கட்டும். அந்த இரண்டு பேரும். கணவன், மனைவி, ஒருத்தர் க்ரிட்டிக், ஒருத்தர் வளர்ந்து வரும் பாடகர். என்னும் பேஸ் லைனை முடிவு செய்யவே ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது.
கீ.ர.: இதற்கிடையில் உங்களுக்கு சில பயணங்கள், எனக்கு சில பயணங்கள் என்று இரண்டு பேருமே சொந்த வேலையில் கொஞ்சம் பிஸியாகி, அதனால் வேற இன்னும் கொஞ்சம் டிலே ஆனது.
பா.வெ.: கதைக்கு ஒரு முடிச்சு வேண்டுமே? அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, அவன் க்ரிடிக்காக இருப்பதால், அவனுடைய விமர்சனத்தால் அவளுடைய கச்சேரியின் தரம் குறைகிறது என்று கொண்டு போகலாமா என்று நான் சொல்ல, அதை விட அவள் கச்சேரிகளுக்காக அடிக்கடி வெளியூர் செல்வதால் அவன் அவளை மிஸ் பண்ணுகிறான் அதனால் வரும் பிரச்சனைகள் என்று கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினீர்கள். அதன் பிறகு எழுதுவது ஈசியாக இருந்தது.
கீ.ரா.: முதலில் இரண்டு பெரும் தனித்தனியாக கதையை எழுதி பின்னர் எடிட் செய்து கொள்ளலாம் என்று நினைத்தோம், பிறகு, அதை விட, ஹீரோவின் பகுதியை ஒருவரும், ஹீரோயின் பகுதியை ஒருவரும் எழுதுவது பெட்டர் என்று தோன்றியதால், ஹீரோவின் தொகுதியை சாரி பகுதியை நீங்களும், ஹீரோயின் பகுதியை நானும் எழுதலாம் என்று முடிவெடுத்தோம்.
பா.வெ.: ஹீரோயின் பகுதியை உங்களுக்கு கொடுத்ததற்கு முக்கிய காரணம், அவள் ஒரு கிளாசிகல் சிங்கர். உங்களுக்கு இசையில் நுணுக்கமான அறிவு உண்டு என்பதால் அதைப்பற்றி எழுதுவது சுலபமாக இருக்குமே என்று உங்களை அந்த பகுதியை எழுதச் சொன்னேன்.
கீ.ர.: ஹீரோ, ஹீரோயின்களுக்கு பெயர் மட்டுமல்ல கதைக்கும் பெயர் நீங்கள்தானே கொடுத்தீர்கள், அதை எப்படி செய்தீர்கள்?
பா.வெ.: இசை சம்பந்தப்பட்ட கதை என்பதால் கதாநாயகிக்கு ஸ்ருதி என்று பெயர் கொடுத்தேன். ஷ்ரவண் என்றால் கேட்பது என்று ஒரு பொருள் உண்டே? அதனால் அந்தப் பெயர். இதை வல்லி அக்கா சரியாக கணித்திருந்தார்கள்.
கீ.ர.: டைட்டில் முதலில் நீங்கள் 'இருவர்' என்று கொடுத்திருந்தீர்கள், நான் ராகம்,தானம், பல்லவி என்று கொடுத்திருந்திருந்தேன். அதன் பிறகு நீங்கள்தான் 'நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே' என்று மாற்றினீர்கள். அது ரொம்பவே பொருத்தமா இருந்தத. நம்ம வாசக நட்புகளும் எல்லாருமே தலைப்பை பாராட்டினாங்க. சூப்பர்! அக்கா!
பா.வெ.: நான் அப்போதே சொன்ன மாதிரி, இரண்டு பேர், இரண்டு பேரை பற்றி எழுதும் கதை என்பதால் இரண்டு பேர் என்று பெயர் கொடுத்தேன். ஆனால், ஸ்ரீராம்தான், "எழுதுபவர்கள் யார் என்பதை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் இரண்டு பேர் என்னும் டைட்டில் ரொம்ப ஆப்வியஸாக இருக்கு. ஈசியாக கண்டுபிடித்து விடுவார்கள்" என்றார். அதனால ஈர்க்கும்படியாக ஒரு தலைப்பு நன்றாக இருக்கும் என்று தோன்றியதால், நானும் ரௌடிதான் படத்தில் வரும் 'நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே..' பாடல் வரியைத் தேர்ந்தெடுத்தேன். அது உங்களுக்கும் பிடித்திருந்தது.
கதையைப் படித்த ஸ்ரீராம் அதகளம் என்று கமெண்ட் எழுதி அனுப்பியிருந்தார். அதோடு, ஒரு நாவலுக்கான சப்ஜெக்ட் இது. இன்னும் கூட எழுதலாம் என்று கூற, நாம் அதற்குப் பிறகு சேர்த்ததுதான் பகுதி 5உம், 6உம். அந்த ஈசிஆர் ரெசார்ட் போகும் பகுதி. பார்த்தீங்களா கீதாக்கா செம ஸ்மார்ட் அதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். க்ரேட் தான் இல்லையா!!!
கீ. ர: நமக்கே அந்த பார்ட் அவ்வளவு திருப்தி தரலைதானே அக்கா. எப்படியோ முடிச்சுட்டோம். அது இல்லாம இருந்துருந்தா இன்னும் கொஞ்சம் நல்லாருந்துருக்குமோனும் தோணித்து இல்லையா?
கீ. ர: நமக்கே அந்த பார்ட் அவ்வளவு திருப்தி தரலைதானே அக்கா. எப்படியோ முடிச்சுட்டோம். அது இல்லாம இருந்துருந்தா இன்னும் கொஞ்சம் நல்லாருந்துருக்குமோனும் தோணித்து இல்லையா?
பா.வெ: ஆமாம்……..சரி முதல்ல இதை க்ளாரிஃபை பண்ணிடுவோம். அதாவது கருத்துகளுக்கு ஏற்ப கதை மாறலை. நெல்லை முதல்ல கேட்டிருந்தார். அதிராவும் சொல்லிருந்தாங்க. அதுவும் சீரியல் போல அன்றன்றைக்கு கருத்துகளுக்கு ஏற்ப மாறுமோன்னு. எங்க பதில் இதுதான். முதல்லயே கதையை முடிச்சு ஸ்ரீராமுக்கு அனுப்பிட்டோம். ஒண்ணே ஒண்ணுதான் கருத்து பார்த்து சேர்த்தது. முதல்ல அனுப்பினதுல ஸ்ருதியோடத்தானே கதை முடிந்ததாக இருந்தது.
கோமதி அவங்க முதல் பகுதில போட்டிருந்த கமென்ட் பூமராங்க் பத்தி "அப்ப பூமராங்க போல கதை யார் தொடங்கினார்களோ அவங்களே முடிப்பாங்களோ"னு
அப்பத்தான் அட அப்படி இருந்தாலும் நல்லாருக்குமேனுதான் சில வருடங்களுக்குப் பிறகுனு ஷ்ரவண் பார்ட்டை நான் எழுதி அதை ஸ்ரீராமுக்கு அவர் பயணத்துல இருக்கறப்ப அனுப்பி அவர் அதை கேஜிஜிக்கு அனுப்பி சேர்க்கச் சொல்லி…….ஸ்ரீராம் அத்தனை பிஸியாக இருந்தாலும் கதையோடு சேர்க்கச் சொல்லி.....…நிறைய ஒத்துழைப்புனு சொல்லலாம் இல்லையா…அது தவிர மத்த்து எல்லாம் முதலிலேயே எழுதி முடிச்சு அனுப்பிவிட்டோம்.
அப்பத்தான் அட அப்படி இருந்தாலும் நல்லாருக்குமேனுதான் சில வருடங்களுக்குப் பிறகுனு ஷ்ரவண் பார்ட்டை நான் எழுதி அதை ஸ்ரீராமுக்கு அவர் பயணத்துல இருக்கறப்ப அனுப்பி அவர் அதை கேஜிஜிக்கு அனுப்பி சேர்க்கச் சொல்லி…….ஸ்ரீராம் அத்தனை பிஸியாக இருந்தாலும் கதையோடு சேர்க்கச் சொல்லி.....…நிறைய ஒத்துழைப்புனு சொல்லலாம் இல்லையா…அது தவிர மத்த்து எல்லாம் முதலிலேயே எழுதி முடிச்சு அனுப்பிவிட்டோம்.
கீ.ர: ஸ்ரீராம் ரொம்பவே நம்ம கூட சேர்ந்து செம சப்பொர்ட். அவரும் எல்லாரையும் குழப்பி, இவ்வளவுக்கும் அவர் ஒரு க்ளூ கொடுத்திருந்தார். அவங்க வைக்கிற கண்ணில சிக்கிடாதீங்கனு. அதை யாரும் கவனிச்சாங்களானு தெரியலை.
பா.வெ: பானுமதி, கீதாரங்கன், னு கரெக்ட்டா கோமதிக்கா, ஏஞ்சல், வல்லிமா அதிரா கண்டுபிடிச்சாலும் உறுதியா யாரும் முதல்ல சொல்லலை. நெல்லை, கீதாக்கா, ஜீவி, கேஜிஜி போன்றவங்க யூகிச்சுருந்திருக்காங்க ஆனா சொல்லலை. கூடவே ஸ்ரீராம், நெல்லை, கேஜிஜி, எபி ஆசிரியர்கள்னு எல்லாம் சேர்த்துக்கிட்டாங்க……ஸ்வாரஸியமா இருந்த்து இல்லையா…
பா.வெ: பானுமதி, கீதாரங்கன், னு கரெக்ட்டா கோமதிக்கா, ஏஞ்சல், வல்லிமா அதிரா கண்டுபிடிச்சாலும் உறுதியா யாரும் முதல்ல சொல்லலை. நெல்லை, கீதாக்கா, ஜீவி, கேஜிஜி போன்றவங்க யூகிச்சுருந்திருக்காங்க ஆனா சொல்லலை. கூடவே ஸ்ரீராம், நெல்லை, கேஜிஜி, எபி ஆசிரியர்கள்னு எல்லாம் சேர்த்துக்கிட்டாங்க……ஸ்வாரஸியமா இருந்த்து இல்லையா…
கீ.ர: ஆமாம்…பரவால்ல உறுதியா இல்லைனாலும் ஏஞ்சல் கடைசில ரெண்டு பேரையும் சொல்லி கூடவே நெல்லைய சேர்த்துக்கிட்டாலும் நிறைய பேர் ஒருவரை முதல்லருந்தே சொல்லிட்டுத்தான் இருந்தாங்க.
ஆனாலும் நாமளும் சேர்ந்து குழப்பினோம். ரொம்ப சந்தோஷமா இருந்தது இப்படி யாருன்னே தெரியாம கமென்ட்ஸ் பார்க்கவும்….நம்ம நட்புகள் சொல்றத நினைச்சு ரசித்து சிரிச்சது எல்லாமே…
பா.வெ: ஆமாம். அதை நாம அடுத்த பகுதில பார்ப்போம் அப்படியே கருத்துகளுக்குப் பதிலும் சொல்லிடலாம்…
தொடரும்......
இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்
பதிலளிநீக்குகீதாக்காவுக்குப் பிடித்த ஜிவாஜியா!! ஹா ஹா ஹா
கீதா
அட! இன்று வெள்ளி துரை அண்ணாவுக்கு விடுமுறைன்றதுனால காணலியா!!
நீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குஸ்ரீராம் சூப்பர்!! அந்தக் கமென்ட்களை எடுத்துப் போட்டதற்கு...கூடுதல் சிறப்பு..பதிவு வெளியிட்டதற்கும் இப்போதைய சப்போர்ட்டிற்கும்...எங்கள் இருவர் சார்பிலும்
நீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குவசந்தத்தில் ஒரு நாள்//
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம் நீங்க சொல்லிருப்பது போல அழகான தலைப்பு. இதுதான் படத்தின் பெயருமா? கேட்டதே இல்லையே..ஓ ஹிந்தி தழுவலுமா.
அப்போது நிறைய ஹிந்தி தழுவல்கள் இருந்ததோ?
கீதா
வசந்தத்தில் ஓர் நாள்! ஆமாம், நல்ல தலைப்புதான். ஹிந்தித் தலைப்புக்கும் கிட்டத்தட்ட அதே பொருள்தான்.
நீக்குபாடல் வரிகளைப் பார்த்தப்ப கேட்டது போல இருக்கு மெட்டும் நினைவுக்கு வருது. ஆனா பாட்டு கொஞ்சம் நேரம் கழித்துதான் மொபைலில் கேட்டுவிட்டு வருகிறேன். கம்ப்யூட்டரில் இணைக்கும் ஹெட் செட் இல்லை. கேட்டுவிட்டு வருகிறேன்.
பதிலளிநீக்குகாலைல கொஞ்சம் நெரமே வர முடியும். அப்புறம் மாலைதான் வர இயலும்..ஸோ அதுக்குள்ள பாட்டு கேட்டுவிட்டு வருகிறேன்.
படத் தகவல்கள் தெரிந்து கொண்டேன். ஹிந்தி சினிமா பற்றியும் அத்தனை தெரியாது.
கீதா
இன்னும் ராகம் சொல்லவில்லை நீங்க... ஹா... ஹா... ஹா...
நீக்குஇப்பத்தானே கேட்டேன் ஸ்ரீராம் ஹெட்செட் இல்லாம கேட்க முடியாதே ஹிஹிஹி....சொல்லிவிட்டேன் பாருங்க...கீழ
நீக்குகீதா
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகதை பிறந்த, வளர்ந்த கதை சுவாரசியம்
பாடல் அசுவாரசியம்
// பாடல் அசுவாரசியம் //
நீக்குஹா... ஹா... ஹா...
நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குநீங்க சீனோடு பார்த்தீங்களோ!!! ஹா ஹா ஹா ஹா ஹா....சீன் இல்லாம கேட்டுப் பாருங்க அப்படி மோசமான பாடல் இல்லை...ஆரம்பத்துல வர இசை வேறு ஒரு பாடல் நெல்லை. இந்தப் பாடல் அப்புறம் தான் தொடங்குது.
அஃப்கோர்ஸ் தொடக்கம் அத்தனை ஈர்ப்பு இல்லைதான்...ஆனால் அப்புறம் நல்லாத்தான் இருக்கு. ஹிந்தி வெர்ஷன் கேட்கலை கேட்டுவிட்டு வருகிறேன்...
கீதா
கதை பிறந்த, வளர்ந்த கதை சுவாரசியம்//
நீக்குஎங்கள் நன்றிகள், நெல்லை
கீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.
நீக்குஅனைவருக்கும் நல்வரவும் வணக்கமும்.ஸ்ரீராம் சொல்லி இருக்கும் மௌசம் படம் சஞ்சீவ் குமார், ஷர்மிலா டாகூர் நடிச்சது பார்த்திருக்கேன். எழுபதுகளில் வந்தது. ஓ, இங்கேயும் சொல்லி இருக்கீங்களா? தமிழிலே ஜிவாஜியா? சொதப்பல் தான் அப்போ! இஃகி, இஃகி! ஹிந்தி நடிகர்களில் சஞ்சீவ் குமார் பிடித்த நடிகர். பாவம், சோகமான வாழ்க்கை! :(
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... நான் ஹிந்தியிலும் படம் பார்க்கவில்லை, தமிழிலும் படம் பார்க்கவில்லை. ஆனால் இரண்டிலும் பாடல்களை ரசித்த்த்த்திருக்கிறேன்!
நீக்குஸ்ரீராம் இந்தப் பாட்டு நிறைய கேட்டிருக்கேன். நான் நினைத்த பாடலேதான்.
பதிலளிநீக்குசிவரஞ்சனி ராகத்தில் இப்படியும் மெட்டு போடலாம்னு அழகான பாடல். இந்த ராகமே ஒரு ஏக்கம், கொஞ்சம் சோகம் கலந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ராகம். இந்தப் பாடல் வரிகள் அதுக்கு ஏற்றார் போல.
எஸ்பிபி இந்தப் பாட்டுல முதலில் பல்லவி பாடும் போது "உறவு" ந்ற சொல்லை ஒரு நெளிவுடன் பாடுகிறார். அழகான ஒரு சின்ன அசைவு...சங்கதி.
ரெண்டாவது முறை கடைசில பாடும் போது அழுத்தம் கொஞ்சம் நெளிவு எதுவும் இல்லாமல். அது ஒரு சங்கதி !!!! அது போல ஆண் சரணத்தில் "கொஞ்சும் மொழிகள்.....மழை ந்ற இடம் கேட்டீங்களா ஸ்ரீராம்...அதுல எஸ்பிபி கொடுக்கும் சங்கதி செம...ஃபீல்..
ரசித்தேன் ஸ்ரீராம் பல வருஷங்களுக்குப் பிறகு.
கீதா
ஆஹா... ரசனை! இப்படி ரசித்தால் ஒரு சந்தோஷம்தான்! சிவரஞ்சனியா?
நீக்குஆமாம் சிவரஞ்சனி. ஸ்ரீராம் வெண்பனித் தென்றல் உள்ளவரையில்...நு முடிக்கும் இடம் காட்டிக் கொடுக்குது. அப்புறம் இன்டெர்லூட்...
நீக்குகீதா
ஸ்ரீராம் எஸ்பிபி அழகு நு சொல்ற இடம் தெரியாம உறவு நு எழுதிட்டேன்...
நீக்குகீதா
கீதா ரங்கன் - ஹம்சானந்தினியும் பைரவியும் இடையில் இழையோடுவதைக் கவனித்தீர்களா? (பின்ன... கீதா ரங்கன் சொல்ற ராகம் சரியான்னு சொல்றதுக்கே இங்க ஆளில்லை. இது மாதிரி எடுத்துவிட்டால்தானே... ஓஹோ இங்கயும் அந்தத் தொடர்கதையில் பங்குபெறும் திறமை உள்ள ஆள் இருக்குன்னு நம்புவாங்க... நாட்டு நிலைமை அப்படி இருக்கு)
நீக்குநெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரிச்சு முடிலப்பா...தாங்க்யு யு மேட் மை டே!!!
நீக்குஆமாம் நெல்லை இடையில் பைரவி ஹம்ஸானந்தி எல்லாமே தெரியுதேஏஏஏஏஏஏஏஏஏ!!!!! எப்படி கண்டுபிடிச்சீங்க!!
அதானே நான் சொல்றதுதான் இங்க!! ஹிஹிஹிஹி நானே சரியா சொல்லலைனாலும் யாரும் கேள்வி கூடக் கேட்க மாட்டேன்றாங்க!! இனி நெல்லை இருக்கார்னு மீக்கு ஒரே ஜந்தோஷம்!!! ரசித்தேன் நெல்லை உங்க கமென்டை
கீதா
இது மாதிரி எடுத்துவிட்டால்தானே... ஓஹோ இங்கயும் அந்தத் தொடர்கதையில் பங்குபெறும் திறமை உள்ள ஆள் இருக்குன்னு நம்புவாங்க... நாட்டு நிலைமை அப்படி இருக்கு)//
நீக்குஹா ஹா ஹா ஹா ஹா.....வாங்க நெல்லை எழுதுவோமா?!! கதைல செம சண்டை நடக்கட்டும்....ராகச் சண்டை, ஈகோ சண்டை ஹீரோ சொல்லணும் நீ பாடக் கூடாது. பாடினா காபி, நவ"ரசம்"மட்டுமே பாடி ஒழுங்கா எனக்கு திருனெல்வேலி அல்வா, மோர்க்குழம்பு எல்லாம் செஞ்சு போடனும்னு. வனஸ்பதி எதிலயும் எட்டி கூடப் பார்க்கக் கூடாது. எனக்குப் பிடிக்காது. என்று சொல்ல, உடனே ஹீரோயின் மோகனம் பாடறவளை மோர்க்குழ்மபு பண்ணச் சொல்லி வனஸ்பதி, இல்லாம அல்வா கொடுக்கச் சொல்றியா, நான் போறேன் எங்க வீட்டுக்குனு முகாரியை கரகரப்ரியாவாக்கி மூக்கைச் சிந்திக் கொண்டே போகிறாள்னு தொடங்கி......ஹிஹிஹி (நெல்லை செம காண்டுவாகி தலையைப் பிய்த்துக் கொள்கிறார் இப்படி ஒரு அசட்டுத்தனமான ஒரு கதையானு...ஹா ஹா ஹா மீ எஸ்கேப்!!)
கீதா
கதாசிரியர்களுக்கும் , ஸ்ரீராம், இன்னும் வரப்போகிறவர்களுக்கும்
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம்.
எனக்குப் பாடலைக் கேட்டதே இனிமை. பார்க்க வேண்டாம்.
வாணியின் குரல் அற்புதம். ஸ்ரீப்ரியாவுக்குப் பொருந்தும். மௌசம் பாடல் போட்டிருக்கலாமே மா.
சஞ்சீவ்குமார் உணர்ச்சிகளை அப்படியே கொடுத்து நடித்திருப்பார்.
ஜெண்டில்மேன்.
வாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம். மௌஸம் பாடல் அந்த வரிகளில் லிங்க் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்... விடுவேனா? பாடலைத்தான் ரசிக்கவேண்டும். காட்சி இரண்டாம் பட்சம் கூட இல்லை, மூன்றாம் பட்சம்!
நீக்கு2011 ஆம் ஆண்டிலும் ஒரு மௌசம் வந்திருக்கு ஷாஹித் கபூர் நடிச்சு! ஹீரோயின் யாருனு தெரியலை. இயக்குநர் பங்கஜ் கபூர்னு நினைவு. படம் பார்த்தாப்போல் இருக்கு. ஆனால் பார்த்தேனா இல்லையானு தெரியலை. அம்பேரிக்காவில் இருந்ததால் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கு!
பதிலளிநீக்குநான் இங்கே படமும், பாடல் வரிகளில் லிங்க்கும் கொடுத்திருக்கிறேன் பாருங்கள் கீதா அக்கா... அதைக் க்ளிக்கி அந்தப் பாடலையும் கேட்கலாம். பாடல் காட்சிகளில் நான் ரசிக்கும் ஒரு காட்சி அது.
நீக்குவசந்தத்தில் ஓர் நாள் இன்று. வைகை ஆற்றில் அழகர் பச்சை பட்டு அணிந்து இறங்கினார்.
பதிலளிநீக்குஇனி வசந்தம் தான். பசுமை செழிக்கும். விவசாயம் செழிக்கும்.
உங்கள் தளத்திலும் வசந்தத்தில் ஒர் நாள் தலைப்பு அருமை.
பாடல் இனிமை. பல தடவை கேட்டு இருக்கிறேன்.
இன்றும் கேட்டு ரசித்தேன்.
நன்றி கோமதி அக்கா. நாங்களும் தொலைக்காட்சியில் அழகர் ஆற்றில் இறங்கும் காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
நீக்குபாடல் - ஹிந்தி பாடலைக் கேட்டிருக்கும் எனக்கு தமிழில் அந்தப் பாடல் பிடிக்கவில்லை.
பதிலளிநீக்குமௌசம் - மோசம்! ஆங்கிலத்தில் Mausam என எழுதினாலும் சொல்வது என்னவோ மோசம் என்று தான்! மோசம் சுஹானா ஹே! ஹாஹா... இது தமிழ் மோசம் அல்ல!
நன்றி வெங்கட்.
நீக்கு//மோசம் சுஹானா ஹே! ஹாஹா... இது தமிழ் மோசம் அல்ல!//
ஹா... ஹா... ஹா....
அனைவருக்கும் காலை வணக்கம். எல்லோருக்கும் ஓட்டு போட்ட அசதியா? சபை இன்னும் களை கட்டவில்லையே?
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா. சபை கூடும் நேரம்... நான் இடைவெளி விடும் நேரம்!!!!
நீக்குபானுமாவும், கீதாரெங்கனும் அருமையாக உணர்ந்து எழுதி இருந்தார்கள்.
பதிலளிநீக்குஉங்கள் ஆசிரியர்களில் ஒருவர் பாடல் துறையில்
ஈடுபாடு காட்டுவார் என்று நினைவு. அவராக இருக்குமோ என்று சந்தேகம் இருந்தது.
கீதா ரங்கன், உணர்ச்சிகளை எழுத்தில் வடிப்பதில் வல்லவர்.
பானுமா இயல் வாழ்வை பிரதிபலிப்பார்.
இருவரும் இணைந்தது மிகப் பிரமாதம்.
அழகான கோவை நெடும் சாலைபோலக் கதை ஓடியது.
மனம் நிறை வாழ்த்துகள்.
நன்றி வல்லிக்கா.
நீக்குஎங்களின் நன்றிகள் வல்லிம்மா...உங்கள் வர்ணனை ஆஹா போட வைத்தது
நீக்குகீதா
கதாசிரியர்களின் உரையாடல் தொகுப்பு மிக அற்புதமாக வந்திருக்கு. இருவருக்கும் நல்லா ஒத்துப் போயிருக்கு. இல்லைனா கதை சொதப்பி இருந்திருக்கும். அடுத்து என்ன என்பதை ஒருவரை ஒருவர் கேட்டுப் புரிந்து கொண்டு எழுதி இருக்காங்க. எனக்கு ஒரு ஆச்சரியம் என்னன்னா இதுக்கெல்லாம் நேரம் எப்படிக் கிடைச்சது என்பது தான். முதலில் கதை பற்றிப் பேசிப் பின்னர் அத்தியாயம் அத்தியாயமா எழுதி, இன்னொருத்தருக்கு அனுப்பி அவர் அடுத்த பகுதியை எழுதி அதைப் பார்த்துப் பின்னர் தொடர்ந்துனு! நினைக்கவே பிரமிப்புத் தான்! இருவருக்கும் வாழ்த்துகள். இம்மாதிரிப் பல முயற்சிகளை எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குகதாசிரியர்களின் உரையாடல் தொகுப்பு மிக அற்புதமாக வந்திருக்கு.//
நீக்குஃபுல் க்ரெடிட்ஸ் டு பானுக்கா!! அவங்கதான் எழுதினது கீதாக்கா.
கீதாக்கா நேரம் தான் பிரச்சனையாக இருந்தது. இடையில் சில ப்ரேக்ஸ் வந்தது. அதுவும் பானுக்கா எழுதும் ஸ்பீடுக்கு என்னால் எழுத இயலவில்லை என்றே சொல்லுவேன். அவங்க ஷ்ரவண் பார்ட் எழுதி அனுப்பினதும் நான் அதை வாசித்து ஷ்ருதி பார்ட் எழுத யோசித்து...அக்காவிடம் ஒரு இரு நாள் மூன்று நாள் டைம் கேட்பேன். அப்போது எனக்கு வேறு பணிகள் வேறு இருந்தது. அதை முடித்துக் கொடுக்கும் கெடு என்று. அக்காவும் யு டேக் யுவர் ஓன் டைம் என்று சொல்லிடுவாங்க ஆனாலும் எனக்கு பொறுப்பு உண்டு தானே. அப்புறம் நான் எழுதி அனுப்பியதும் அக்கா அதை வாசித்து சரியா இருக்கா இல்லை மாற்றம் வேண்டுமானு சொல்லுவாங்க. நிறைய வழிகாட்டல்கள் அவங்களிடமிருந்து.
அப்படித்தான் எழுதினோம். ஸோ ஃபுல் க்ரெடிட்ஸ் டு அக்காதான்! ஆரம்பத்திலிருந்து முடிவு வரை.
எங்களின் நன்றிகள் கீதாக்கா
கீதா
//எனக்கு ஒரு ஆச்சரியம் என்னன்னா இதுக்கெல்லாம் நேரம் எப்படிக் கிடைச்சது என்பது தான்.//அதையேன் கேட்கிறீர்கள்? தினமும் டெலிஃபோனில் பேசுவோம். காலை ஒன்பதரை மணிக்கு செல்ஃபோன் அழைப்பு வந்தால் "தில்லையகத்து கீதா"என்பார் என் கணவர்.
நீக்குகீதா மிகவும் அடக்கமாக சொல்லியிருக்கிறார். அவரும் நிறைய ஒத்துழைத்தார். கதை முடிந்த பிறக, எல்லாவற்றையும் தொகுத்து, ஷ்ரவண், ஸ்ருதி பகுதிகளுக்கு வேறு வேறு நிறம் கொடுத்து, எல்லாவற்றையும் HTMLக்கு மாற்றி ஶ்ரீராமுக்கு அனுப்பியது போன்றவைகளை அவர்தான் செய்தார்.
நீக்குநான் கூறிய ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டார். அது பெரிய விஷயம்.
தினமும் டெலிஃபோனில் பேசுவோம். காலை ஒன்பதரை மணிக்கு செல்ஃபோன் அழைப்பு வந்தால் "தில்லையகத்து கீதா"என்பார் என் கணவர்.//
நீக்குஹா ஹா ஹா ஹா ஹா
ஹையோ பாவம் பானுக்கா அவங்களை தினமும் கூப்பிட்டுருவேன். அது வேற ஒன்னுமில்ல....அக்கா அனுப்பிருக்கற பார்ட்டுக்கு ஏத்தாப்ல ஷ்ருதி பேச வேண்டுமே. என்னால அதுக்கு இணையா எழுத முடியுமா என்று ரொம்பவே ஒரு பொறுப்புடன் ஆன பயம் இருந்தது. அதனால அக்கா கிட்ட கேட்டு, அவங்களுடைய அழகான எழுத்து பாதிக்கப்படக் கூடாதுன்ற ஒரு பொறுப்புல...ஹா ஹா ஹா ஹா...அக்கா தகவல் களஞ்சியம். ஸோ கதைக்கு சம்பந்தமான நிறைய தகவல்கள், பாடகர் பேட்டி என்று நிறைய சொல்லுவாங்க. அதுவும் பேஸ் இந்தக் கதைக்கு.
பாவம் அக்கா...அக்கா சுருக்கம்னா நா நிறைய பேசுவேன்!! ஹிஹிஹிஹி அக்கா பாவம்!! எப்படியோ பொறுத்துக் கொண்டாங்க!!
கீதா
கீதா நானும் உங்களை இரவு ஒன்பதரைக்கெல்லாம் அழைத்து தொந்தரவு செய்திருக்கிறேன். தவிர, இப்படி எழுதுங்கள், இந்த பாடலை குறிப்பிடுங்கள் என்றெல்லாம் வேறு உங்கள் கற்பனையில் குறிக்கிட்டேன். அதையெல்லாம் சகித்து கொண்டீர்களே.. எப்படி மறக்க மறுக்க முடியும்?
நீக்குபானுக்கா ஹா ஹா ஹா அது நான் கற்றுக் கொண்டேனே இல்லையா...நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இல்லையா அக்கா!!! நான் மிகவும் எஞ்சாய் செய்தேன்...என்ன ஒரே ஒரு படபடப்பு நான் ஒழுங்கா எழுதணுமேனு....ஹிஹிஹி...சரி சரி நான் உங்களைச் சொன்னா நீங்க என்னைச் சொல்லுவீங்க ஸோ
நீக்குமிக்க மிக்க நன்றி பானுக்கா
கீதா
வசந்தத்தில் ஒரு நாள் சுமாராகத்தான் ஓடியது. ஆனால் பாடல்கள் ரசிக்கும்படி இருந்தன. இந்திப்படம் நான் பார்க்கவில்லை.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.
நீக்குஉரையாடல் மிக அருமை.
பதிலளிநீக்குஉரையாடலில் என் கருத்தும் இடம்பெற்றது மகிழ்ச்சி.
பானு அவ்வளவாக பின்னூட்டம் போடவில்லை கதைக்கு.
கீதாரெங்கன் பின்னூட்டங்கள் போட்டு கொஞ்சம் குழப்பினார் அவர் எழுதவில்லை என்பது போல்,ஆனாலும் அவர் தான் என்று நிறைய இடங்களில் தெரிந்தது.
இருவரும் மீண்டும் கதை எழுதலாம். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
நன்றி. உங்கள் பின்னூட்டங்கள் எங்களை உற்சாகப்படுத்தியது.
நீக்குகோமதிக்கா எங்களின் நன்றிகள்!
நீக்குஉரையாடல் எல்லாம் பானுக்காதான்!!! ஸோ க்ரெடிட்ஸ் எல்லாம் அவங்களுக்கே!!!
//கீதாரெங்கன் பின்னூட்டங்கள் போட்டு கொஞ்சம் குழப்பினார் அவர் எழுதவில்லை என்பது போல்,ஆனாலும் அவர் தான் என்று நிறைய இடங்களில் தெரிந்தது.//
ஹா ஹா ஹா ஹா
கீதா
மன்னிக்கவும். செல்ஃபோனில் எல்லா பின்னூட்டங்களையும் திறந்தவுடனே பார்க்க முடியாததால் யாரும் வரவில்லை என்று நினைத்து விட்டேன்.
பதிலளிநீக்குசஞ்சீவ் குமார் உணர்வுகளை subtle ஆக வெளிப்படுத்துவார். சிவாஜியும் ஶ்ரீப்ரியாவும் ஜோடியாக நடித்த படம் எதுவுமே வெற்றி பெற்றதாக நினைவில்லை. பாடல் பெரிதாக கவரவில்லை.
பதிலளிநீக்குசிவரஞ்சனி கவரவில்லையா? ஆச்சர்யம்தான்!
நீக்குவசந்தத்தில் ஓர் நாள் 'ஏ' சான்றிதழ் பெற்ற படமா?
பதிலளிநீக்குகதை அமைப்புக்காக ஏ சர்டிபிகேட் பெற்றிருக்கக்கூடும்.
நீக்குஎனக்கு மிகவும் பிடித்தபாடல் இந்த நேரத்தில்தான் "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு" என்ற டப்பா படமும் வெளிவந்தது என்று நினைவு.
பதிலளிநீக்குவாங்க கில்லர்ஜி. உங்களுக்கும் பாடல் பிடிக்கும் என்பது மகிழ்ச்சி. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படத்தில் கூட ஒரு நல்ல பாடல் உண்டு. பகிர்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபாடல் முன்பெல்லாம் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.இந்தபபடம்தான் என்று கேள்விபட்டதில்லை. தகவல்களுக்கு நன்றி. இந்தப்படத்தின் பேரில் (வசந்தத்தின் ஓர்நாள்) வரும் பாடலும் எனக்கு மிகவும் பிடித்தமானது. பி. சுசீலா அவர்களின் இனிமையான குரலில் அதுவும் மிகவும் நன்றாக இருக்கும். (அந்த பாடல் இடம் பெற்ற படம் மூன்று தெய்வங்கள் என நினைக்கிறேன்.)
கதை பிறந்த கதையாக தொ. கதை உரையாடல் மிகவும் நன்றாக உள்ளது. இது ஒருவர் எழுதியதா? இல்லை இருவரின் கூட்டு முயற்சியா?
பொதுவாக ஒருகதை எழுதலாம் என்று நினைக்கும் போதே வேலைகளுக்கு நடுவில், யோசித்து அதை ஒரு "நல்ல" கதையாக (அது நல்லகதையா, அசட்டுக் கற்பனையா என்பது பின்பு படித்து கருத்திடும் வாசகர்களின் தலைவலி..அது வரை அந்த அந்த "நல்ல"என்கிற வார்த்தை நமக்கு திருப்தியை தரும்.ஹா ஹா ஹா. ) மிகவும் சிரமமாக உள்ளது. இதில் ஒரே கதையை அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும், இருவராக பேசி யோசித்து, திறம்பட மாற்றங்கள் செய்து, அதை ஸ்வாரஸ்யமாக கொண்டு சென்று, இறுதியில் சுபமாக முடித்து நினைத்துப் பார்க்கவே எவ்வளவு கஸ்டமாக இருந்திருக்கும் என மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. ஆனாலும் இதில் உற்சாகத்துடன் ஈடுபட்ட சகோதரிகளுக்கும், மிகவும் ஒத்துழைப்பு தந்து அந்த உற்சாகத்திற்கு உரமாக இருந்த சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கும் வாழ்த்துகளுடன் நன்றிகள்.
உண்மையிலேயே சகோதரிகள் இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களுடன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இவ்விதமே தொடரட்டும்... இவர்களின் கலைஞானம், இலக்கிய சேவைகள் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//இந்தப்படத்தின் பேரில் (வசந்தத்தின் ஓர்நாள்) வரும் பாடலும் எனக்கு மிகவும் பிடித்தமானது. பி. சுசீலா அவர்களின் இனிமையான குரலில் அதுவும் மிகவும் நன்றாக இருக்கும். //. எனக்கும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த பாடல் மிகவும் பிடிக்கும். நான் அதைத்தான் பஙகிர்ந்திருக்கிறார் என்று நினைத்தேன்.
நீக்குஉங்கள் பாராட்டிர்க்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி கமலா.
வசந்தத்தின் ஓர் நாள் // கமலா அக்கா ஆஹா அந்தப் பாட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நீங்கள் சொல்லித்தான் படத்தின் பெயர் தெரியும். தர்பாரி கானடா ராகத்தில் அந்தப் பாடல்...அருமையான பாடல்..
நீக்குகமலா அக்கா உரையாடல் ஃபுல் க்ரெடிட்ஸ் பானுக்காவுக்கே!!! உங்கள் மனம் நிறைந்த பாராட்டுகளுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றிகள் உங்களின் பிரார்த்தனைக்கும் சேர்த்து எங்களின் நன்றிகள்.
கீதா
வாங்க கமலா அக்கா. எனக்கும் அந்த மூன்று தெய்வங்கள் படப்பாடல் பிடிக்கும். ஓ... அது தர்பாரி கானடாவா? ஸூப்பர். அதே படத்தில் எஸ் பி பி சுசீலாம்மா குரலில் 'முள்ளில்லா ரோஜா' பாடலும் எனக்குப் பிடிக்கும்.
நீக்குகதை எழுதுவது பற்றிய உங்கள் விவரணம் ரசனை கமலா அக்கா.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்..
பதிலளிநீக்குஇன்று சித்ரா பௌர்ணமி....
எம்பெருமான் ஸ்ரீ ஹரிபரந்தாமன் கள்ளழகராக வைகையில் இறங்மும் திருநாள்....
அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் பால்சோறு பொங்கிட அன்பின் நல்வாழ்த்துகள்....
துரை செல்வராஜு சார்... எனக்கு மனதில் இது தோன்றவே இல்லை. இப்போதுதான் கடலைப்பருப்பு அரிசிப் பாயசம் பண்ணி கண்டருளப்பண்ணி வைத்திருக்கிறேன்...... தொடர்ந்து இறை நினைப்பு இருக்கணும்னா வெளிநாட்டுலதான் வாசம் செய்யணும் போலிருக்கு
நீக்குஊர்ல இருந்தாலும் இப்பிடித் தானுங்க சாமியோவ்!....
நீக்குதுரை அண்ணா இன்று என்ன ஸ்பெஷல் செஞ்சீங்க சித்ரா பௌர்ணமிக்கு/
நீக்குகீதா
வாங்க துரை செல்வராஜூ ஸார். ஆம், இன்று சித்ரா பௌர்ணமிதான். என் அப்பா மறைந்த நாள். அவர் நினைவில் நாள் முழுவதும்.
நீக்குபாடல்களின் தேடலில் போது, ரசித்த இனிமையான பாடல்...
பதிலளிநீக்குவாங்க டிடி... பாடலை நீங்களும் ரசித்தீர்கள் என்பதில் சந்தோஷம்.
நீக்குகதை பிறந்த கதை அருமையிலும் அருமை...
பதிலளிநீக்குகதை ஒன்றை வார்ப்பது என்பது சாதாரணமல்ல...
அதிலும் இப்படி வார்த்தெடுப்பது என்பது என்றால்!...
நெஞ்சார்ந்த பாராட்டுகளுடன்...
மிக்க நன்றி துரை சார்.
நீக்குபாடலை நானும் அடிக்கடி கேட்பது உண்டு. நீங்கள் எழுதியிருப்பது போல மனதை என்னவோ செய்கின்ற, அமானுஷ்யமான, உணர்வுப்பூர்வமான பாடல். உங்கள் பதிவைப்படித்த்தும் மறுபடியும் யு டியூப் சென்று பாடல் காட்சியைப் பார்த்து ரசித்து வந்தேன்.
பதிலளிநீக்குதமிழில் அப்போதெல்லாம் இது போன்ற நல்ல படங்களையெல்லாம் உடனுக்குடன் எடுத்து வெளிய்டுவார்கள். ஹிந்திப்படங்களின், பாடல்களின் தாக்கம் 25 சதவிகிதம் கூட அதில் இருக்காது. உதாரணம் ஆராதனா.
வாங்க மனோ சாமிநாதன் மேடம்.. இங்கேயே இரண்டு பாடல்களையும் ரசித்திருக்கலாமே... லிங்க் கொடுத்திருக்கிறேனே...
நீக்குவழக்கம்போல மூன்று மணிக்கே விழிப்பு வந்துவிட்டது...
பதிலளிநீக்குசரி.. ஒரு பத்து நிமிசம் .. என்று கண்ணயர்ந்தால் - விடிந்து விட்டது...
ஆகா.. திருவிழா போல கருத்துரைக் கூட்டம்...
லாரி டிரைவர் ஜால்ராக்கண்ணு கோஷ்டி என்றதும் புஸ் என்ற ஆகிவிட்டது...
கணினியை மூடி விட்டு உணவகத்துக்குப் போய் தோசை ( பிசுக்கங்காய் தோசை அல்ல) சாப்பிட்டு விட்டு இப்போது தான் வந்தேன்...
வசந்தத்தில் ஒரு நாள் - இந்தப் படம் மலேஷியாவில் படமாக்கப்பட்ட போது சிங்கப்பூரில் இருந்தேன்... தீவிர ரசிகக் குஞ்சுமணிகள் விடுமுறையில் மலேஷியாவுக்குச் சென்றார்கள்...
படம்!?...
ஆனாலும் இந்தப் பாடல் ஓரளவுக்குப் பிடிக்கும்...
இப்போது தட்டச்சு செய்யும் போது
மொகல் இ ஆஸம் படத்தின் - பியார் கியா தோ டர்ணா கியா... என்ற பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்...
(அது சரி.. இது எதுக்கு இப்போ வாத்யாரே!...
சும்மா போட்டு விடுவோமே!...)
லாரி டிரைவர் ஏன் இங்கு நினைவுக்கு வருகிறார் என்று தெரியவில்லை துரை செல்வராஜூ ஸார்!
நீக்குஅந்த ஹிந்திப் பாடலை நானா அவ்வளவாக ரசிப்பதில்லை!
ஜீவி
பதிலளிநீக்கு// எழுதினது யார் என்று எனக்கும் தெரிந்து விட்டது..
க்ளூ: அவர் பதிவர் அல்ல //
அந்த குறிப்பிட்ட பகுதிக்கு பின்னூட்டம் போடும் பொழுது அந்தப் பகுதி எழுத்து
ஸ்ரீராமின் தந்தை அமரர் பாலசுப்பிரமணியம் எழுதினது மாதிரித் தோன்றியதால் அப்படி பின்னூட்டம் போட்டேன்.
பதிவர் அல்ல என்ற கருத்திற்கு சப்போர்ட்டாக 'தாங்கள் எழுதிய கதைக்கு தாங்களே பின்னூட்டம் போடுவார்களா?' என்கிற அர்த்தத்தில் ஒரு பின்னூட்டமும் இட்டிருந்தேன்.
சகோதரி கீதா ரெங்கன் எழுதுகிற மாதிரி ஒரு உணர்வு இருந்ததை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பா.வெ-யைத் தான் கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த குறிப்பிட்ட பகுதிக்கு பின்னூட்டம் போடும் பொழுது அந்தப் பகுதி எழுத்து
நீக்குஸ்ரீராமின் தந்தை அமரர் பாலசுப்பிரமணியம் எழுதினது மாதிரித் தோன்றியதால் அப்படி பின்னூட்டம் போட்டேன்.//
அட! ஜீவி அண்ணா இதே போன்று கோமதிக்காவும் சொல்லிருந்தான. நீங்கள் சொல்லியிருக்கும் பகுதி பானுக்கா எழுதியது. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க இதைப் பார்த்தா.
//சகோதரி கீதா ரெங்கன் எழுதுகிற மாதிரி ஒரு உணர்வு இருந்ததை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். //
மிக்க நன்றி அண்ணா.
எங்கள் இருவரின் நன்றிகள், ஜீவி அண்ணா
கீதா
என் அப்பா நினைவுக்கு வந்தது ஒரு ஆச்சர்யம் என்றால், அது இன்றைய தினம் படிக்கக் கிடைப்பது இன்னும் ஆச்சர்யம். தேதிப்படி ஏப்ரல் 22 அவர் மறைந்த தினம். திதிப்படி இன்று - சித்ரா பௌர்ணமி.
நீக்குஅப்பாவின் நினைவு தினமா?
நீக்குஅப்பாவிற்கு வணக்கங்கள்.
இந்த coincide எனக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.
நீக்குஇந்த நேரத்தில் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.
நீங்கள் அவ்வப்போது அவரது எழுத்துக்களை 'எங்கள் பிளாக்'கில் எங்கள் ரசனைக்காக வெளியிட வேண்டும்.
வாலியைப் பற்றி ஏதாவது குறைபடச் சொன்னாலே சிலருக்கு கோபம் மட்டும் வருகிறது.
பதிலளிநீக்குவேண்டும் வேண்டும் உந்தன் உறவு
வெண்பனித் தென்றல் உள்ளவரையில் ....
-- இதெல்லாம் என்ன ஒரு பாடலா?
மெட்டுக்கு தகுந்த மாதிரி எழுதற பாட்டு தான். ஒப்புக் கொள்கிறேன்.
கண்ணதாசன் கூட மெட்டுக்குத் தகுந்த பாட்டு தான் எழுதினார். ஆனால் அவரது மட்டும் அவர் எழுதிய பாட்டுக்கு மெட்டு போட்ட மாதிரி இருக்கும்.
அதான் கண்ணதாசன்.
ஜீவீ சார்,அவர் உரை நடையிலிருந்தே கவிதைக்கு வந்ததாக
நீக்குஎன்றோ சொல்லி விட்டார்.
கண்ணதாசனிடமிருந்து வாலியின் வார்த்தைகளுக்கு மாறுவது கடினம்.
நீக்குபிறகு எல்லாமே பழகி விட்டது.
கோபம் ஏன் வரவேண்டும் ஜீவி ஸார்? வாலி பாடல்களில் முத்துகள் பல உண்டு. அவரவர் ரசனை அவரவர்களுக்கு. வாலியை ரசிப்பவர்கள் கண்ணதாசனை ரசிக்க மாட்டார்கள் என்றோ, கண்ணதாசனை ரசிப்பவர்கள் வாலியை ரசிக்க மாட்டார்கள் என்றோ அர்த்தமில்லையே!
நீக்குவாலியே கண்ணதாசனின் ரசிகர் தான். அது வேறு விஷயம்.
நீக்குநான் சொல்ல வந்தது வாலியையும் கண்ணதாசனையும் எதிர் எதிர் நிலைகளில் நிறுத்தி வித்தியாசம் காண்பது பற்றி.
வாலி நல்ல பல திரைக்கவிதைகளை எழுதியிருக்கிறார் தான். அதை மறுப்பதற்கில்லை.
ஆனால் அவர் போகிற போக்கில் எழுதியவைகள் சோற்றில் கல்லாய் உறுத்தும்.
கண்னதாசனின் சிறப்பு என்னவென்றால் இவர் அலட்சியமாக எழுதியவைகளில் கூட எடுத்துப் பாராட்டுகிற மாதிரி ஏதோ ஒரு நயம் பொதிந்திருக்கும்.
இருவருக்குமான இந்த வித்தியாசத்தை எடுத்துச் சொல்லத் தான் முயன்றிருக்கிறேன்.
எபி எழுத்தாளர்களின் ஜாய்ண்ட் வென்ச்சர் பற்றி வாசகர் கருத்துக்களும், எழுத்தாள இரட்டையர்களின் பதில்களும் ஒரு வாசிப்பனுபவம். எல்லாப் புகழும் ஸ்ரீராமனுக்கே என்று சொல்லிவிட்டுப் போய்விடலாமோ!
பதிலளிநீக்குஏகாந்தன் அண்ணா எல்லாப் புகழும், நன்றியும் ஸ்ரீராமனுக்கேதான்!!! ஹா ஹா ஹா....
நீக்குமிக்க நன்றி எழுதிய எங்கள் இருவரிடமிருந்தும்
கீதா
இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்ஜி. நல்ல பாடல். படம் பார்த்திருக்கேனா என்ற நினைவு வரவில்லை. 82 என்பதால் பார்த்திருப்பேன் அச்சமயம் தமிழ்நாட்டில் இருந்த சமயம் என்பதால்...
பதிலளிநீக்குகதை பிறந்த விதம் நேற்று பதிவிலிருந்தும், நேரடியாகவும் தெரிந்து கொண்டேன். வாழ்த்துகள்! பாராட்டுகள்! இருவருக்கும்
துளசிதரன்
மனைவி செலிப்ரடி என்பதால் கணவனுக்கு ஏற்படும் சிக்கல்களை இருவராலும் எழுதப்பட்ட இந்தக் கதை விவரித்துள்ளது. இந்தக் கதையில் ஒரு கட்டத்தில், வீட்டிலேயே பாட்டு சொல்லிக் கொடுக்கலாம் என்னும் யோசனையும் முன் வைக்கப்படுகிறது. அப்படி இருந்தவர் தான் அருணா சாயிராம். தன் இரண்டு மகள்களும் வளர்ந்து விபரம் தெரியும்வரை கச்சேரிகளை ஏற்காமலே இருந்தார். அதன் பின்னர் தான் வெளி உலகுக்கு வர ஆரம்பித்தார்.
பதிலளிநீக்குஅதே போல் என் சிநேகிதி நியூசிலாந்து க்ரைஸ்ட் சர்ச்சில் வசிக்கும் ஜெயஶ்ரீ நீலகண்ட் என்பவர். தனக்கு இரு மகன்கள் பிறந்ததுமே தன்னுடைய மருத்துவப் பணியை ஒத்திப் போட்டுவிட்டுத் தாற்காலிகமாக மருத்துவம் செய்வதை நிறுத்திவிட்டு இரண்டாவது மகனும் விபரம் தெரிந்து தன் வேலையைத் தானே செய்து கொள்வான் என்னும் நிலை வரும்வரை காத்திருந்து பின்னர் மறுபடி தன்னைப் புதுப்பித்துக்கொள்ள மருத்துவப் பரிக்ஷைகள் மீண்டும் எழுதித் தன்னைத் தற்கால மருத்துவ உலகுக்குத் தயார் செய்து கொண்டு பின்னர் மருத்துவப் பணிக்கு வந்தார். இவர் நம் வலைஉலகத்தில் "டீச்சர்" என அனைவராலும் அழைக்கப்படும் துளசி கோபாலுக்கும் தெரிந்தவர். இருவரும் ஒரே ஊர்வாசிகள் பல்லாண்டுகளாக.
சரியாக நடந்து கொள்வது கஷ்டம்! உண்மை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். என் இனிய நண்பரும் என்னால் தம்பி என அன்புடன் அழைக்கப்படுபவருமான திரு தி.வாசுதேவன், (தி.வா) ஒரு மருத்துவர் என்பதோடு அவர் மனைவியும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவர்.மாமியார், மாமனாரைத் தங்கள் வீட்டிலேயே வைத்துக் கொண்டு பார்த்துக் கொள்கின்றனர். என்ன தான் ஆள் போட்டாலும் மதிய நேரம் மாமனார், மாமியாருக்கென டிஃபன் தயாரிக்க வாசுதேவன் அவர்களின் மனைவி மருத்துவமனையிலிருந்து இரண்டு, இரண்டரைக்கு வந்து அவர்களைக் கவனிப்பார். சற்று நேரம் கூட உட்காராமல் வேலை செய்வார். எங்கள் கண்களால் பார்த்திருக்கோம்/ அதே போல் தி.வா தினசரி செய்யும் அக்னிஹோத்திரத்துக்கு அவர் வேண்டிய உதவிகள் செய்வார். தி.வா ஊரில் இல்லை எனில் அக்னி ஹோத்திரம் அவர் மனைவியின் பொறுப்பு!
பதிலளிநீக்குஎன் நாத்தனார் பெண்ணின் நாத்தனாரும் ஓர் மருத்துவர். வீட்டிலேயே நர்சிங் ஹோம் வைத்துக் கொண்டு அதையும், மாமனாரையும் பார்த்துக் கொண்டு, இரு குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டு வந்தார். அவர் கணவரும் மருத்துவர் தான் என்றாலும் வீட்டு நிர்வாகம் முழுவதும் இவரே செய்தார். இப்போது வயதாகிவிட்டதால் மருத்துவப் பணி செய்வதில்லை. என்றாலும் ஆலோசனைகள் கேட்டு வருபவர்களுக்கு இருவரும் ஆலோசனைகள் சொல்கின்றனர்.