சனி, 6 ஏப்ரல், 2019

மற்றவர்கள் மீது பழி போடுவதைவிட... - & தொடர்கதை - 8


1)  தண்ணீர் சிக்கனம் எந்த அளவு தேவை என்பதை மக்கள் - உலக மக்கள் - யாரும் இன்னும் சரியாய்ப் புரிந்து கொள்ளவில்லை என்பது உண்மை.  அந்தச் சிரமத்தை அனுபவிப்பவர்கள் தவிர வேறு யாரும் கவலைப்படுவதில்லை.  எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் என்ன வைத்துவிட்டுச் செல்லப் போகிறோம்?  பணம் சம்பாதிக்க வழி செய்தால் போதுமா?  வாழ பசுமையான பூமி வேண்டாமா?  

தண்ணீர் பிரச்னைக்கான காரணத்தை தேடி மற்றவர்கள் மீது பழி போடுவதைவிட அதற்காக நம்மால் என்ன தீர்வு காணமுடியும் என்பதற்கான தீர்வையும் பொறுப்பையும் சொல்வதுதான் ‛தியேட்டர்காரன்' குரூப் வழங்கும் தண்ணீர் பிரச்னையை விவரிக்கும் வீதி நாடகம்.






2)  வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சறுக்கி விழுந்தார் செளபர்ணிகா. சமூகம் அவரை ஏளனமாகப் பார்த்தது. ஆனால், விழுந்த ஒவ்வொரு அடியையும் தனக்கு சாதகமாக மாற்றும் மன உறுதியைப் பெற்றார். இப்போது, நவீன ஆடை வடிவமைப்பாளராக வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறார்.
அது எப்படி சாத்தியமானது? பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் செளபர்ணிகா.  (நன்றி கீதா அக்கா)

================================================================================================================


நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே 
- - - - - - - - - - - - - - - - - 


ஸ்ருதி :

பட்ட சிறுமை போதாதோ இனி உன்
பக்கத்தில் இருத்தல் ஆகாதோ
விட்டுப் பிரிந்த மனம் வாடாதோ……..
*******************************************
சொல்லித்தான் தெரியுமோ உனக்கு
சொன்னால் கருணை வருமோ என் மனதினை…. சொல்………


ச்சே! என்ன ஆச்சு எனக்கு? ஏன் இப்படி ஸ்ருதியும், தாளமும், லயமும் எங்கேயோ போகிறது. மனம் லயிக்காமல் சண்டித்தனம் செய்கிறது. எப்படி கோவிலில் கச்சேரி செய்ய முடியும்

சிறிய ஊர்க் கோயில்களில் தமிழ்க் கீர்த்தனைகள் பாடினால், அதுவும் அதிகம் ஸ்வரங்கள், இசை அறிவு என்று வெளிப்படுத்துவதை விட சாதாரண மக்களுக்கும் இசை சென்றடையும்படி பாடினால் நல்லது என்ற ஐடியா கூட ஷ்ரவண் தான் கொடுத்தான். தீம் அம்புஜம் கிருஷ்ணா பாடல்கள்.

ஏன் தடுமாற்றம்ஷ்ரவணுக்கும் எனக்கும் சமீபகாலமாக ஏற்பட்ட சின்ன சின்ன வாக்குவாதங்கள். அவன் வார்த்தைகள். ஆனால், ரெசார்ட் சென்றிருந்த போதும் அதன் பின்னும் நன்றாகத்தானே இருந்தான்! 

அவன் கசின் விக்கி வந்து போனதும், என் அமெரிக்கப் பயணம் பற்றிய நிஷ்டூரமான வார்த்தைகள் மீண்டும். மஞ்சரி கேல்கருடனான ஜூகல்பந்தி பற்றி வீட்டுக்கு வந்ததும் விகேயுடன் பேசியது அவனுக்குப் பிடிக்கவில்லையோ என்றும் தோன்றியது. எல்லாம் என் மனதில் எங்கோ ஒரு மிகச் சிறிய முள்ளாய்….. அம்மா அப்பாவைப் போய்ப் பார்த்துவிட்டு, அங்கு ப்ராக்டீஸ் செய்தால் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும் போல் தோன்றிய வேளையில் மாமியாரே என்னிடம்,

ஸ்ருதிமா நீ கச்சேரி பண்ணப் போற கோயில் உங்காத்துப் பக்கத்துலதானே.  நீயும் உங்கம்மா அப்பாவைப் பார்த்து நாளாச்சே. அங்க போய் ப்ராக்டீஸ் பண்ணினா அவாளைப் பார்த்தா மாதிரியும் ஆச்சே. நாங்க வரோம் அங்கஎன்று சொல்லி அனுப்பியதால் சென்றேன். ஆனால் ப்ராக்டீஸ் சொதப்பியது.

என்னம்மா, ஸ்ருதி! அமிர்தவர்ஷினி ஆலாபனைலருந்து நீதிபதி ராகம் தொட்டு டக்குனு சொல்லித்தான்னு ஹம்ஸானந்திக்குத் தாவி……என்னமா இது? க்ரஹ பேதமா என்ன? ஸ்ருதியும் கொஞ்சம் பிஸகி……” அப்பாவின் குரல்.

கொஞ்சம் ஒரு சோர்வு. அவ்வளவுதான்பா. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ப்ராக்டிஸ் செய்தா சரியாகிடும்.

வா. அம்மாவும் காத்திண்டுருக்கா. சாப்ட்டுட்டு அப்புறம் ப்ராக்டீஸ் பண்ணு

அம்மா மணக்க மணக்கச் சாப்பாடு செய்து எல்லாவற்றையும் டைனிங்க் டேபிளில் அடுக்கி வைத்திருந்தாள். எனக்குப் பிடித்த அப்பளக் குழம்பு, மாதுளை ரசம், சேனை வறுவல். ஷ்ரவணுக்கும் ரொம்பப் பிடித்த மெனு. ஷ்ரவண்தான் எப்போதும் நினைவுகளில்..…சிறிய பிரச்சனைதான். சரி செய்ய வேண்டும். அப்பாவின் குரல் கலைத்தது.

நீ ப்ராக்டீஸ்க்குனு வரலைனு தோன்றது. ஏதோ பிரச்சனையோனு? ஷ்ரவண் கிட்ட பேசினியா? ஷ்ரவண் கூப்பிட்டாரா? இது தொடர்ந்தா அப்புறம் சென்சேஷனல் நியூஸ்க்கு காத்திருக்கற பத்திரிகைக்காரங்க கன்னாபின்னானு இல்லாததை எல்லாம் எழுத ஆரம்பிச்சுருவாங்க. ஏற்கனவே உன் சமீபத்திய ஒரு கச்சேரி கொஞ்சம் சுரத்து கம்மியாயிருக்குன்னு விமர்சனம் வந்தாச்சு.

நீங்க சித்த சும்மாருக்கேளா? அந்தக் கச்சேரிக்கு அப்புறம் சேலத்துக் கச்சேரிக்கு நல்ல விமர்சனம் வந்தாச்சே! அவ சாப்பிடட்டும். அப்புறம் பேசலாமே.

வழக்கமாக எங்கள் வீட்டிலும் சரி ஷ்ரவண் வீட்டிலும் சரி டைனிங்க் டேபிள் பாட்டும் சிரிப்புமாக இருக்கும். சமீபகாலமாக என்னவோ ஓர் அமைதி.

நான் அப்பாவிடம் விகே பேசிய ஜூகல்பந்தி சான்ஸ் பற்றி சொன்னேன்.

எங்கிட்டயும் விகே பேசினார்மா. நல்ல சான்ஸ்தான். ஸ்ருதிம்மா, உனக்கும் ஷ்ரவணுக்கும் ஏதோ மனஸ்தாபம்னு தெரியறது. உன் மாமியார் மாமனார்கிட்ட ரெண்டு நாள் முன்னாடி பேசினப்ப கூட அவாளும் எதுவும் சொல்லல. அவாளுக்கும் உங்கிட்ட கேட்க தயக்கம் இருக்கலாம் இல்லியா?”

ஓ! அந்த விகே, அப்பாவிடம், ஷ்ரவண் அவரை வீட்டில் வந்து பேசச் சொன்னதை இப்படிச் சொல்லிவிட்டார் போல! எப்படியாவது இதைச் சமாளிக்க வேண்டுமே….

இவ ஒரு பக்கம் ஊருக்குப் போறா. மாப்பிள்ளை அவரோட வேலை விஷயமா ஊருக்குப் போறார். கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆயாச்சு…….இப்படி இருந்தா……..?”

ஓ! அம்மா நீயுமா?”

ஏன் அப்படி ஒரு கேள்வி?”

நான் மாமியார், நாத்தனார் சொன்னதைச் சொன்னேன்.

நாத்தனார் சொன்னதெல்லாம் ஏன் அப்படியான அர்த்தத்துல பார்க்கற? அவ சொல்ல நினைச்ச நல்லத சொல்லத் தெரியாம பேசியிருக்கா. அதுக்கெல்லாம் வருத்தப்படுவாளா? மாமியார் சொன்னதை யோசிச்சுப் பாரு. அவாளுக்கும் வயசாறது. எங்களுக்கும் வயசாறது. எங்களுக்கு சக்தி இருக்கும் போது அவாளும், நாங்களும் உனக்கு சப்போர்ட்டிவா இருக்க முடியும். நீ உன் கேரியற தக்க வைச்சுக்கோ அது முக்கியம் தான். ஆனா கூடிய சீக்கிரம் ஒரு குழந்தைனு வந்துருத்துனா வீட்டுல சந்தோஷம் வந்து எல்லாமே மாறிடும்….”

ஸ்ருதி யோசிச்சுப் பாரு. எங்க, எப்படித் தந்தி பிசகித்துன்னு. அது தெரிஞ்சுதுனா சரிபண்ணி மீட்டிடலாம். 

நீங்க ரெண்டுபேரும் நினைச்சுக் கவலைப்படறா மாதிரி ஒன்னும் பெரிசா எதுவும் இல்லைப்பாஜஸ்ட் எ சேஞ்ச் ஃபார் த ப்ராக்டீஸ் வந்தேன்பா. கோயிலும் இங்கருந்து கிட்டக்கதானேனு. மாமியார் மாமனாரும் வருவா. சரிப்பா இப்ப நான் கச்சேரிக்குத் தந்தியை மீட்டனும். அப்புறம் பேசலாம்பாஎன்று அம்மா அப்பாவிடம் அப்படிச் சொல்லிச் சமாளித்தாலும் என் மனசு கொஞ்சம் யோசனையாகத்தான் இருந்தது.

கோயில் கச்சேரி முடிந்து எல்லோரும் தீம் நன்றாக இருந்தது என்று சொன்னதை, ஷ்ரவணின் ஐடியா இல்லையா? ஷ்ரவணிடம் சொல்லக் கூப்பிட்டாலும் அவனிடமிருந்து பதில் இல்லை. வாட்சப்பில் மெஸேஜ் செய்தேன். அவன் பார்த்ததாக ப்ளூ டிக் வந்தது ஆனால் பதில் இல்லை.

ஸ்ருதியும் தாளமும், தானமும், தப்பியிருக்கிறது. பல்லவி வருமோ? வரும்! நம்பிக்கை இருக்கிறது.

விக்கி வந்திருந்த போது ஷ்ரவண் ஐபேடில் வயலின் வாசிக்கவும் எனக்கு ஆச்சரியம்? ஐபேட்ல கூட வாசிப்பானா! அதுவரை தெரியவே இல்லையே! அவன் திறமை என்னை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றது. அவனும் என்னுடன் கச்சேரி செய்யலாமே என்று சொல்ல நினைத்து என் ஆச்சரியத்தைத் தனிமையில் சொன்ன போது அவன் வார்த்தைகள் எப்படி வந்து விழுந்தன! நான் பாடகி என்று எங்குமே காட்டிக் கொண்டது கூட இல்லையே.

பெரும்பான்மையான ஆண்களுக்குத் தன் வைஃப் கொஞ்சம் ஃபேமஸ் ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஒருவித ஈகோவினால் ஒரு காம்ப்ளெக்ஸ வரும்தான் போலும். ஷ்ரவண் என்னதான் இந்தக் காலத்தவனாக இருந்தாலும் அவனுள் உறங்கிக் கிடந்த ஈகோவினால், தாழ்வுமனப்பான்மை வந்திருக்குமோ? ம்ம்ம்…. இதைக் கொஞ்சம் யோசித்துச் சரி செய்துவிட வேண்டும். செய்துவிடலாம். யோசிக்கத் தொடங்கினேன்.

ஸ்ருதிமா அம்மா சொன்னதையும் யோசிம்மா. ஷ்ரவணுக்கும் அது கொஞ்சம் மனசு கஷ்டமா இருக்கலாம் இல்லியா. ஸோ நீ கொஞ்சம் உன் வெளியூர்க் கச்சேரிகளைக் குறைச்சுண்டு, ஆத்துல க்ளாஸ் எடுக்கலாமே. யோசிச்சுப் பாரேன்மா.

ஆமாம்பா. நானும் யோசிச்சிண்டுருக்கேன்பா. நாங்களும் நீங்க பெரியவா சொல்றதப் பத்தி பேசிண்டாச்சுப்பா. எனக்கும் ஆசை எல்லாம் இருக்கு.என்று சொல்லிவிட்டு என் புகுந்த வீட்டிற்குச் சென்றேன். பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையுடன். அவனும் என்னோடு அமெரிக்கா வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!….வருவானா? என்ற எண்ணத்துடன் கூடவே மஞ்ஜரி கேல்கரும் புகுந்து பின்னஷ்ட்ஜ் ஹிந்துஸ்தானி ராகத்தை வானவில்லாய் தீட்டிக் கொண்டிருந்தார்! நடக்குமா?



--------மீட்டல் தொடரும்...

40 கருத்துகள்:

  1. தொடர்கதை - சிறப்பாக இருக்கிறது.

    இந்த வாரம் செய்திகள் குறைவோ?

    பதிலளிநீக்கு
  2. அலஹாபாத்-காசி-கயா பயணம் சிறக்க வாழ்த்துகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. நெல்லை ஹா ஹா ஹா காரை வணக்கம் !!!

      தமிழ்ல டி வந்தாங்கனா மாட்டிக்கிட்டீங்க!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. நன்றி

      காலை வணக்கம் நெல்லை.

      நீக்கு
    3. அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்!

      கீதா

      நீக்கு
    4. ஐபேட்ல தட்டச்சும்போதோ மோபைல்ல தட்டச்சும்போதோ தவறு வந்துவிடுகிறது... சாரி... நக்கீரி கீதா ரங்கன். உங்க பின்னூட்டத்துக்கு அப்புறம்தான் தவறைப் பார்த்தேன்.

      நீக்கு
    5. நெல்லை ஹா ஹா ஹா ஹா இப்படி எல்லாம் நக்கீரி நு என்னை சொல்லி காசி ட்ரிப் ஆர்கனைசரோட டமில்ல டி யை குறைக்கலாமோ!!! ஹா ஹா எனிவே இப்ப தேம்ஸ்ல இப்ப குதிக்க மாட்டாங்க சும்மா ஆர்பாட்டம் தான்!!

      நெல்லை சும்மா உங்களைக் கலாய்க்க சொன்னதுதான். அப்படிப் பார்த்தா என் கீ போர்ட் செம லூஸா இருக்கு...(லூஸு இந்த அர்த்தம் வேறயாக்கும்!!!) நிறைய தப்பு வருது தினமுமே. மொபைல்ல நான் அடிச்சா கேட்கவே வேண்டாம். நிறைய தப்பு வரத்தான் செய்யுது நெல்லை. தினமுமே என் கருத்துகளில் நிறைய தப்பு பார்க்கலாம். சில சமயம் அடிக்கும் போதே தெரிஞ்சுருச்சுனா திருத்திடுவேன். இல்லைனா அப்படியே போட்டுவிட்டுப் போறதுதான்...

      கீதா

      கீதா

      நீக்கு
    6. ஆஆஆ என்னாதூஊஊ நெல்லைத்தமிழன் புரொபிஸர் ஸ்பெல்லிங் மிசுரேக்காஆஆஆ:)...
      அதுசரி ஆருடைய காரை வணங்கிறாராம்? ஹா ஹா ஹா....

      நீக்கு
  4. ஆஅ இனிய காலை வணக்கம் ஸ்‌ரீராம்...அதற்குள் பதிவு வந்துவிட்டது! 6 மணி இங்கு என்று தில்லியில் இருந்தேன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கிட்டுவுடன் காபி குடித்து விட்டு வந்தே பதில் சொல்கிறேன்!

      நீக்கு
  5. அனைவருக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள். ஒரு காலத்தில் தமிழ் நாட்டிலும் யுகாதியைத்தான் புத்தாண்டாக கொண்டாடிக் கொண்டிருந்தோமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா...

      அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்.

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
    அனைவருக்கும் யுகாதி பண்டிகை நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ‛தியேட்டர்காரன்' குரூப் வழங்கும் தண்ணீர் பிரச்னையை விவரிக்கும் வீதி நாடகம். இந்த கால கட்டத்திற்கு மிகவும் அவசியமானது.
    அவர்கள் சொல்லும் அத்தனை குறிப்புகளும் கடைபிடித்தல் நல்லது.

    செளபர்ணிகாவிற்கு வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன். தன்னம்பிக்கை ,விடாமுயற்சி, மன உறுதி உள்ள பெண் வாழ்வில் முன்னேறி இன்னும் உயர்ந்த இடத்தை அடைய வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீராம் உங்கள் பயணம் மகிழ்வாக அமைந்திட வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. //பெரும்பான்மையான ஆண்களுக்குத் தன் வைஃப் கொஞ்சம் ஃபேமஸ் ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஒருவித ஈகோவினால் ஒரு காம்ப்ளெக்ஸ வரும்தான் போலும். ஷ்ரவண் என்னதான் இந்தக் காலத்தவனாக இருந்தாலும் அவனுள் உறங்கிக் கிடந்த ஈகோவினால், தாழ்வுமனப்பான்மை வந்திருக்குமோ? ம்ம்ம்…. இதைக் கொஞ்சம் யோசித்துச் சரி செய்துவிட வேண்டும். செய்துவிடலாம். யோசிக்கத் தொடங்கினேன்.//

    இருவரும் யோசிக்க தொடங்கினால் , மனம்விட்டு பேசினால் ஸ்ருதி பேதம் நீங்கும்.
    இன்று எழுதியவர் நம்புகிறார் நாமும் நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  10. இன்றைய செய்தியில் சௌபர்ணிக்கா வாவ்!! வாசிக்க வாசிக்க கண்ணில் நீர் அதே சமயம் அவரது தன்னம்பிக்கை வியக்க வைத்ததோடு ஒரு முன்னோடி பலருக்கும்...குறிப்பாக....இந்த வரிகள்..

    //மதம், தொழில் என எவையெல்லாம் காதலிக்கும்போது ஒரு பொருட்டாக தெரியாமல் இருந்ததோ, அதுவே திருமண உறவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. //

    வாழ்க்கை இதோடு முடிந்துவிடவில்லை....என்பதை இப்படி ஆகும் பெண்களுக்கான ஒரு உதாரணம்.

    சௌபர்ணிக்கா குடோஸ்! இன்னும் மேலும் வாழ்வில் நீங்களும் உங்கள் மகளும் உயர வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. தியேட்டர்காரன் க்ரூப் செய்வது அருமை. நல்ல விழிப்புணர்வு. பல நல்ல கருத்துகளைச் சொல்கிரார்கள். நாம் கடைபிடிக்க வேண்டும்..வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கீதாக்கா யுகாதில பிஸியோ?!!

    நானும் இன்று இரவு வரை பிஸி.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. எல் அண்ட் டி நிறுவனத்திற்கு நன்றிகள் பல...

    சேர்ந்து கச்சேரி நடந்தால் சுபம்...

    பதிலளிநீக்கு
  14. இருவரும் அம்பேரிக்கா சென்று வரட்டும்.

    பதிலளிநீக்கு
  15. தன் கதையைத் தானே படித்து பின்னூட்டமும் போட முடியுமா?.. அதான் யோசிக்க வேண்டியிருக்கு.. இல்லைன்னா, தொடரை எழுதுவது யார் என்று ஈஸியாச் சொல்லிடலாம்.. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவ் சார்... இது உங்க எழுத்து மாதிரித் தெரியலையே...

      நீக்கு
    2. அம்மா மணக்க மணக்கச் சாப்பாடு செய்து எல்லாவற்றையும் டைனிங்க் //டேபிளில் அடுக்கி வைத்திருந்தாள். எனக்குப் பிடித்த அப்பளக் குழம்பு, மாதுளை ரசம், சேனை வறுவல். ஷ்ரவணுக்கும் ரொம்பப் பிடித்த மெனு. //

      யுரேகா! அப்பாடி.. யார்ன்னு கண்டுபிடிச்சாச்சு!!

      நீக்கு
  16. தியேட்டர் காரன் குரூப் ச்யல்கள் பாராட்டபட வேண்டியவை சேமிக்கு தண்ணிர் அளவு இவ்வளவு என்று சொல்வதை விடசேமித்த் நீரின் அளவைக்காண்பித்தால் பலன் அதிகமாகலாம் சிலருக்குதொட்டது துலங்குகிறது சௌபர்ணிகா அந்தவகை என்று தோன்றுகிறது தொடர்கதையில் விறு விறுப்பு இல்லையே ஒரு வேளை சுருதிபேதமெ கதையாவதாலா

    பதிலளிநீக்கு
  17. "ஸ்ருதியும் தாளமும், தானமும், தப்பியிருக்கிறது. பல்லவி வருமோ? வரும்! நம்பிக்கை இருக்கிறது." என்ற வரிகள் மேலும் மேலும் வாசிக்க இழுக்கிறது.
    அருமை, எழுத்தாளரைப் பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  18. தொடர்கதை சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது

    பதிலளிநீக்கு
  19. ஆகா பாகம் எட்டு.... ஶ்ரீராம் நன்றாக எழுதியிருக்கிறார்ர்ர்:)..

    ஆவ்வ்வ் சிறு துளிதானே பெருவெள்ளம்... குட்டிப் பிரிவென நினைக்கினம் அது விஸ்வரூப ரேஞ்சுக்குப் போகப் போகுது:)...

    பதிலளிநீக்கு
  20. இரண்டு பாசிட்டிவ் செய்திகளும் அருமை. அதிலும் சௌபர்ணிகா நல்ல திடமான உறுதி கொண்ட மனது. வாழ்த்துகள்!

    கதையைத் தொடர்ந்து வருகிறேன். இன்றைய பகுதி சோகம் போல இருக்கிறதே. நல்ல முடிவாக இருக்குமோ அல்லது பிரிவா? தொடர்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  22. வீதி நாடகம், நல்ல முயற்சி. மன உறுதியுடன் செளபர்ணிகா அடைந்த உயரம் மற்றவருக்கு ஓர் உதாரணம்.
    --
    வெளியூர்க் கச்சேரிகளைக் குறைத்துக் கொண்டு.. க்ளாஸ் எடுப்பது..

    குடும்பமா தன் வளர்ச்சியா என்பதில் பெண்களே விட்டுக் கொடுக்க வேண்டுமென்பதுதான் சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தொடரவும்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!