அழுக மாங்கா பச்சடின்ற தலைப்பைப் பார்த்ததும் எல்லாரும் ஐயே என்று ஓடிப் போகாதீங்க. பேருதான் அழுக மாங்கா. ஆனால் இது மாவடுல செய்யற ஒரு சுவையான ரெசிப்பி. மாவடு ஊறப் போட்டு ஊறியதும் ஒரு சில மாவடு கொஞ்சம் ஒவரா ஊறி கிள்ளினாலே பிஞ்சு வரா மாதிரி இருக்கும். அப்படியான வடுக்களை எடுத்துச் செய்யறது.
ஆனா, நான் போடும் மாவடு பெரும்பாலும் நல்லா ஊறிருக்கும் ஆனா கடிச்சு சாப்பிடறா மாதிரி இருக்கும். கிள்ளினாலே பிஞ்சு வராப்ல ஊறியது அபூர்வம். ஒரு வருடம் ஆனா கூட அப்படி ஆனதில்லை. அதுலயும் செய்யலாம் என்றாலும் கையால அமுக்கினாலே பிஞ்சு வராப்ல மிகவும் மென்மையா ஊறியிருக்கற மாவடுல செய்யறது ரொம்ப நல்லாருக்கும்.
இதையே எங்க பிறந்த வீட்டுல ரெண்டு டைப்பா செய்வாங்க. ஒன்று பச்சடி போல மற்றொன்று குழம்பு போலச் செய்வாங்க. ரெண்டுமே சாதத்துல கலந்து சாப்பிடறா மாதிரிதான். பச்சடினா சைட் டிஷ்ஷாவும் சாப்பிடலாம்.
முதல்ல குழம்பு போலச் செய்யறத சொல்றேன்.
தேவையானவை
மாவடு – 4 (படத்தில் உள்ள சைஸ்ல)
உளுத்தம் பருப்பு – ½ டேபிள் ஸ்பூன் விளிம்பு உள்ளடக்கி எடுத்தா போதும்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4, 5 (வீட்டுக்கு வந்திருந்த விருந்தினருக்குக் கொஞ்சம் காரம் வேண்டும் என்பதால் 5 எடுத்துக் கொண்டேன். எனவே உங்கள் காரத்திற்கேற்ப பச்சை மிளகாய் எடுத்துக்கோங்க.
தேங்காய் – ½ கப் (படத்தில் காட்டியிருக்கும் அளவு கப். தேங்காயை ரொம்ப அடைத்து அளக்கல)
தாளிக்க – கடுகு, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய்
உப்பு – தேவையான அளவு. ஊறின மாவடுல உப்பு இருக்கும் எனவே அதுக்கு ஏற்றாற்போல போட்டுக்கோங்க.
முதல்ல அடுப்பை ஏற்றி, வாணலில தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு அதுல உளுத்தம் பருப்பை வறுத்துக்கோங்க. அப்புறம் வெந்தயத்தையும் கொஞ்சம் சிவக்க வறுத்துக்கோங்க. அடுப்பை ஆஃப் செஞ்சுட்டு அந்தச் சூட்டுல பச்சை மிளகாயையும் கொஞ்சம் வதக்கிக்கோங்க. (படம் எடுக்க விட்டுப் போச்சு)
மாவடுவைச் சின்ன சின்னதா கட் பண்ணிக்கோங்க. வறுத்தவை, வதக்கிய பச்சைமிளகாய், தேங்காய் எல்லாம் சேர்த்து கொஞ்சம் தண்ணி விட்டு நல்லா அரைச்சுக்கோங்க.
அரைச்சத ஒரு பாத்திரத்துல போட்டு மிக்சிய கொஞ்சமா தண்ணி விட்டுக் குலுக்கிட்டு அந்தத் தண்ணியும் சேர்த்துக்கோங்க. அரைச்சதுல கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டு அதுல கறிவேப்பிலையும் போட்டு தேவையான உப்பும் போட்டுட்டு (கவனம்: மாவடுல உப்பு இருக்கும்!), தயிரை நல்லா கடைந்து அதை குழம்புல சேர்த்துக்கோங்க. ரொம்பக் கெட்டியா இருந்தா கொஞ்சமா தண்ணி சேர்த்து மோர்க்குழம்பு பக்குவத்துல கலந்து வைச்சுக்கோங்க.
அடுப்பை ஏற்றி, குழம்பு எடுத்து வைச்ச பாத்திரத்தை அடுப்புல வைச்சு தீயை மிகக் குறைவாக வைச்சு லைட்டா சூடு செஞ்சு சைடுல சின்னதா பதைத்து வந்தா போதும். பாத்திரத்தை இறக்கி வைச்சுட்டு, அடுப்புல வாணலி வைத்து, தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, கொஞ்சம் வெந்தயம் தாளித்துச் சேர்த்துட்டா அழுகமாங்கா பச்சடி குழம்பு ரெடி! (கடைசி அந்த வெந்தயம் இருக்கும் படம் மட்டும் விருந்தினர் ஃபோட்டோ எடுக்கும் அவசரத்தில் வெந்தயம் சிவக்கும் முன்னரே கொஞ்சம் எடுத்துப் போட்டுவிட்டார்!!!!)
பச்சடி – வேரியேஷன்
அளவு எல்லாம் அதேதான். மாவடு, வறுத்த உளுத்தம் பருப்பு, தேங்காய் (அரைப்பதற்கு வெந்தயம் கிடையாது. தாளிக்க மட்டுமே) பச்சைமிளகாய் வதக்க வேண்டாம், அப்படியே அதையும் சேர்த்து அரைத்துவிட்டு, கெட்டித் தயிரில் கலந்துவிட்டு, தேவையான உப்பு கலந்து (மாவடுவில் உப்பு இருக்கும் எனவே கவனமாகச் சேர்க்கவும்), தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்துப் போட வேண்டும்.
அரைத்ததை சூடுபடுத்த வேண்டாம். தண்ணீர் ரொம்ப சேர்க்காம கெட்டிப் பச்சடியா இருக்கணும். சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். சைட் டிஷ்ஷாவும் சாப்பிடலாம். உங்களுக்கு எவ்வளவு பச்சடி தேவையோ அதற்கு ஏற்ப, பச்சடியின் அளவைப் பொருத்து மாவடு, தேங்காய், பச்சை மிளகாய், தயிர் எடுத்துக்கோங்க.
அரைத்ததை சூடுபடுத்த வேண்டாம். தண்ணீர் ரொம்ப சேர்க்காம கெட்டிப் பச்சடியா இருக்கணும். சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். சைட் டிஷ்ஷாவும் சாப்பிடலாம். உங்களுக்கு எவ்வளவு பச்சடி தேவையோ அதற்கு ஏற்ப, பச்சடியின் அளவைப் பொருத்து மாவடு, தேங்காய், பச்சை மிளகாய், தயிர் எடுத்துக்கோங்க.
இரண்டுமே சாதத்தில் கலந்து சாப்பிட என்றால் இந்த அளவு நல்லா சாப்பிடறவங்க 4 பேர் சாப்பிடலாம். முடிஞ்சா செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.
ஆ! பூஸார் மூஞ்சி ஏன் இப்படிப் போகுது நாம நல்லாத்தானே செஞ்சோம்..
இவிங்க எல்லாம் சாப்பிட்டு பாக்கறதுக்குள்ள நைஸா எஸ் ஆகிடுவோம்...
வாழ்க நலம்...
பதிலளிநீக்குவருக....
நீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குநன்றி. உங்களுக்கும் மற்றும் இனி வரப்போகும் நட்புகள் அனைவருக்கும் நல்வரவு.
நீக்குஇனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.
பதிலளிநீக்குஓ இன்று நம்ம ரெசிப்பியா...வரேன் அப்புறம் பதில் சொல்ல...
இதை அரைச்சுக் கலக்கி னும் சொல்லுவதுண்டு. அதை இங்கு பதிவுல சொல்ல விட்டுப் போச்சுனு நினைக்கிறேன்...
கீதா
இனிய காலை வணக்கம் கீதா... இப்போதுதான் இன்னும் உங்களைக் காணோமே, வெங்கட் பக்கத்தில் கூட காணோமே என்று நினைத்தேன்.
நீக்குஆமாம் ஸ்ரீராம் இன்று கொஞ்சம் லேட்டாகிப் போனது. எழுவதற்கு 5 மணிஆகிவிட்டது எனவே எல்லாமே தாமதம்.
நீக்குகீதா
ஆகா.... மாங்காய் பச்சடி...
பதிலளிநீக்குஇன்றைய நளபாக நாராயணி வாழ்க...
வாழ்க.... வாழ்க....
நீக்குதுரை செல்வராஜு சார்..நீங்களும் கன்ப்யூஸ் பண்ணிடாதீங்க.
நீக்குமாங்காய் பச்சடின்னா அது ஒன்றே ஒன்றுதான். வெல்லம் போட்டு சித்திரைத் திருநாள் அன்று செய்யும் இனிப்புப் பச்சடி.
'நளபாக நாராயணி' - இதை ஒத்துக்கொள்கிறேன்.
ஆகா...
நீக்குமாங்காய்ப் பச்சடி என்பது நீங்கள் சொல்வதே தான்...
மற்றபடி -
ஒட்டு மாங்காய் பிஞ்சு விதை பிடிச்சு காயாக ஆவதற்குள் - நாலு துண்டா நறுக்கி கொஞ்சமா உப்பு போட்டு குழைய வேக வெச்சி கொஞ்சம் போல புளியக் கரச்சி ஊத்தி கடுகு கறிவேப்பிலை, வற மிளகா கிள்ளிப்போட்டு தாளிச்சி எறக்குனா... அடடா!...
அதெப்படி வாத்யாரே.. பிஞ்சுக்கும் காய்க்கும் வித்தியாசம் தெரியும்!?..
அதெல்லாம் மாந்தோப்புக்குள்ள ஓடியாடி வளர்ந்தவங்களுக்குத் தெரியும்.. டவுணுக் காரங்களுக்குப் புரியாது..
துரை அண்ணா ஹா ஹா ஹா ஹா மீ நளபாக நாராயைணி எல்லாம் இல்லை. சும்மா யாரும் சாப்பிட்டுப் பார்க்காம அப்படி எல்லாம் சொல்லக் கூடாதாக்கும். நெல்லைக்கும் சேர்த்துதான் இது. ஹிஹிஹி
நீக்குதுரை அண்ணா பிஞ்சு மாங்கா புளிக் குழம்பு எங்க பிறந்த வீட்டுல மாமரம் இருந்ததுனால செய்வாங்க. நானும். அது போல மாங்கா பருப்புனு எங்க மாமியார் வீட்டுல செய்வாங்க அதையும் கற்றுக் கொண்டேன்.
ரொம்ப நல்லாருக்கும்.
மிக்க நன்றி துரை அண்ணா...
கீதா
படங்கள் பதிவை மிகவும் மெருகூட்டுகின்றன.....ரிசிப்பி இதுவரை கேள்விபடாத ரிசிப்பி
பதிலளிநீக்குமிக்க நன்றி மதுரை. செஞ்சு பார்க்க முடிஞ்சா செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க..
நீக்குகீதா
நீங்க மாவடு அனுப்பி வைத்தால் கண்டிப்பாக செஞ்ச்சு பார்த்து சொல்லுறேன்
நீக்குஆனுபிட்டா போச்சு! உங்க அட்ரெஸ் கொடுங்க மதுரை!!! அது லண்டன், தேம்ஸ் வழியாதான் வரும்!!! இப்பவே சொல்லிப்புட்டேன்!! வெறும் பாட்டில் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல ஹிஹிஹி
நீக்குகீதா
வரவேற்புச் சொன்ன துரைக்கும் மற்றும் அனைவருக்கும் வணக்கம். அம்மா அடிக்கடி பண்ணிச் சாப்பிடுவார், பச்சடியாக! நான் அதிகம் சாப்பிட்டதில்லை. ஆனால் செய்முறை ஓரளவுக்குத் தெரியும்.
பதிலளிநீக்குகீதாக்கா உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். எங்கள் பிறந்த வீட்டில் இது அடிக்கடி செய்வாங்க.
நீக்குமிக்க நன்றி கீதாக்கா.
கீதா
Good
பதிலளிநீக்குமிக்க நன்றி காமாட்சிமா
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஓ.கருத்து இப்படி அனுப்பணுமா அன்புடன்
பதிலளிநீக்குகாமாட்சிமா எப்படி வேண்டுமானாலும் கருத்து அனுப்பலாம் அம்மா...
நீக்குகீதா
ஸெல்லிலே அதிகம் பழக்கமில்லே. இன்னிக்கு மெள்ள ட்ரை செய்தேன். அதான் ட்ரயல் இப்படி அனுப்பணுமா என்று மனதில் தோன்றியதை எழுதிருக்கேன். மேலே கீழே வீடு. டைனிங்டேபிள்லே உட்கார்ந்து எழுதவும் நேரம் ஸரியாவரதில்லே. அன்புடன்
நீக்குஅருமையாக இருக்கிறது மாவடு பச்சடி.
பதிலளிநீக்குஇரண்டு முறையும் நன்றாக இருக்கிறது.
படங்களுடன் செய்முறை விளக்கம் அருமை.
அதிரா ருசித்து சாப்பிடுவது போல்தான் இருக்கிறது, நீங்கள் நல்லாத்தான் செய்து இருக்கிறீர்கள் கீதா.
மிக்க நன்றி கோமதிக்கா.
நீக்குஹா ஹா ஹா ஹா அதிரா ருசித்துத்தான் சாப்பிடுவார் ஆனால் காலாய்ப்பார் இல்லையா அதான் அவரையும் கலாய்த்திருக்கிறேன். இன்று ஒரு வேளை வரலாம்!!
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
ருசியான பச்சடி. இன்னிக்கு கீதாரெங்கன் குறிப்பு என்று. அன்புடன்
பதிலளிநீக்குகாமாட்சிம்மா மிக்க நன்றி. நீங்களும் செஞ்சுருப்பீங்க இது. நாங்கள் எல்லாம் உங்களைப் போன்றவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதுதானே அம்மாஅ.
நீக்குமிக்க நன்றிமா..உப்படி இருக்கீங்கமா. இப்படி வந்து கருத்து போடுவது சந்தோஷமாக இருந்தாலும் உங்கள் நலத்தைப் பார்த்துக்கோங்கம்மா
கீதா
இது செய்யும் வழக்கம் உண்டு. நிறைய சிலவாகும். எல்லோருக்கும் பிடிக்கும். அன்புடன்
நீக்குஇனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஅளிஞ்ச மாவடு என்று சொல்வோம். கீதா ரங்கனின் தயாரிப்பு நன்றாக இருக்கிறது.
நல்ல படங்கள். அப்படியே பாட்டி செய்வது போல்.
வாழ்த்துகள் கீதா.
அளிஞ்ச மாவடு..
நீக்குஇது சரி... அளிந்த என்றால் கனிந்த என்பது அர்த்தம்...
அளிய என்ற பதம் அபிராமி அந்தாதியில் பயின்று வரும்...
இந்த காலத்தில் தொ.கா தொகுப்பாளினிகள் வாயில் இது சரியாக வராது....
பழ்வேரு தறப்பட்ட மக்கல் - என்று தானே செல்கிறார்கள்...
வல்லிம்மா சூப்பர்....அளிஞ்ச எங்கள் வீட்டில் என் அப்பா வழி பாட்டி பயன்படுத்தும் சொல். எவ்வளவு நாளாயிற்று இதைக் கேட்டு. மிக்க நன்றிம்மா. பாருங்க இதை மறந்துவிட்டேன். அது போல அரைச்சுக் கலக்கினும் பாட்டி சொல்லுவாங்க அதையும் மறந்து போனேன் பாருங்க அப்புறம் கருத்தில்தான் சொல்லிருக்கிறேன்.
நீக்குசாதம் குழைவாக ஆனாலும் பாட்டி சாதம் அளிஞ்சு போச்சுனுதான் சொல்லுவார். குழைஞ்சு போச்சுனு சொல்லிக் கேட்டதில்லை.
மிக்க நன்றி வல்லிம்மா
கீதா
துரை அண்ணா விளக்கத்திற்கு மிக்க நன்றி புதியதாய் தெரிந்து கொண்டேன்
நீக்குகீதா
அனைவருக்கும் காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் பானுக்கா மெதுவா வாங்க....
நீக்குகீதா
//பூஸார் மூஞ்சி ஏன் இப்படிப் போகுது // - தலைப்பைப் பார்த்து அப்படி மூஞ்சி போயிருக்குமோ?
பதிலளிநீக்குthink of the devil! :P:P:P:P
நீக்குகண்ணனையே வாழ்நாள் முழுவதும் நினைத்த கம்சனைப்போல, நாராயணனையே எப்போதும் நினைத்த ஹிரண்யகசிபு போல.......................... வாழ்த்துக்கள்.
நீக்குgrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr vapas vangkikaren.
நீக்குதலைப்பைப் பார்த்து அப்படி மூஞ்சி போயிருக்குமோ?//
நீக்குநான் அந்த அர்த்தத்தில் தான் சொல்லியது! நெல்லை...
அதுக்கப்புறம் நீங்களும் கீதாக்காவும் பரிமாறிக் கொண்ட கருத்துகள் எனக்குப் புரியவே இல்லை...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹிஹிஹிஹி
கீதா
ஏதும் தவறாச் சொல்லிடலையே கீசா மேடம்? --/\--
நீக்குஹையோ நெல்லை நீங்களும் கீதாக்காவும் என்னவோ பேசிக்கறீங்க ஒன்னும் இந்த மண்டைக்கு ஏற மாட்டேங்குதுபா...ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
ஒண்ணும் பெரிய விஷயமில்லை. நெல்லைத் தமிழரைக் காணோமேனு நினைச்சப்போ அவர் கருத்து வெளிவர, நான் think of the devil என்றேன். அதுக்கு அவர் என்னைக் கம்சனாகவும், ஹிரண்யகசிபுவாகவும் சித்திரித்துள்ளார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதான் அவரைக் காணோமேனு நினைச்சதை வாபஸ் வாங்கிட்டேன். :)
நீக்குகீதாக்கா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா இதுதான் மேட்டரா! எல்லாம் இந்த் நெல்லை இங்கு பங்களூரில் இருப்பதால்....சென்னைக்கு அனுப்பலாம்னு பார்த்தா சென்னைக்குப் போனா இன்னும் கூடிடும்...ஹா ஹா ஹா
நீக்குகீதா
கீசா மேடம்... ரெண்டு நாளா கொஞ்சம் வேலை இருந்தது. அதனால்தான் எதையும் பார்க்கமுடியலை. வந்தவேலை கொஞ்சம் முடிந்து நாளை திரும்பவும் பாலைவனத்துக்கு (வேற எங்க... சென்னைதான்) புறப்படணும். நீங்கள் நினைத்ததற்கு நன்றி. விக்கிரமாதித்தன் சிம்மாசனத்துல உட்கார்ந்தா நீதி, நேர்மை, நியாய உணர்வு வருகிற மாதிரி சென்னையில் இருந்தால் வேற மாதிரியும் பெங்களூர் வந்துவிட்டால் வேற மாதிரியும் ஆகிவிடுகிறேனோ? ஹாஹா
நீக்குமாவடு பச்சடி நன்றாக வந்திருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தது (சிறு வயதில்) மாவடு மோர்க்குழம்பு. நல்ல ரெசிப்பி கீதா ரங்கன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நெல்லை எனக்கும் எங்கள் வீட்டிலும் சென்னைக்காரர்களுக்கு இது புதிது என்றாலும் அவர்களும் ரசித்துச் சாப்பிடுவார்கள்.
நீக்குகீதா
உப்பு அளவு மிக முக்கியமான ஒன்று. பெரிய மாவடுவாக இருந்தால் உள்ளிருக்கும் விதையை எடுத்தால், 'துவர்ப்பு' சுவை இருக்காது. ஆனால் அதுவும் உடலுக்கு நல்லதுதான்.
பதிலளிநீக்குஆமாம் நெல்லை இதில் உப்பு மிகவும் கவனமாகக் கையாளணும். நான் நம் வீட்டில் சாப்பிடுபவர்களைப் பொருத்து உள்ளிருக்கும் விதையை எடுப்பது வழக்கம். இதிலும் எடுத்துதான் செய்திருக்கிறேன் ஆனால் சொல்லாமல் விட்டிருக்கிறேன் பதிவில். இப்படித்தான் நெல்லை இப்போதெல்லாம் பதிவு எழுதுவதில் பலவற்றை மிஸ் செய்கிறேன். தவறும் நேர்கிறது...விளக்கமாக எழுதுவதில்லை என்று போகிறது. நேரமும் ரொம்ப எடுத்துக் கொள்கிறேன் பதிவு எழுதவே...ஹிஹிஹி
நீக்குகீதா
//இப்போதெல்லாம் பதிவு எழுதுவதில் பலவற்றை மிஸ் செய்கிறேன்.// - பின்ன... சுறுசுறுப்பா வைக்கும்படியா வெயிலோடு இருக்கும் சென்னையை விட்டுவிட்டு மசமசன்னு குளிராகவே இருக்கும் பெங்களூரில் செட்டிலானால் கொஞ்சம் சோம்பேறித்தனமாத்தான் இருக்கும் ஹாஹா.
நீக்குபுளிசேரி (மிளகாய்/தேங்காய் அரைத்து மோரில் கலக்கி பதைக்கவைப்பது)யில், மாவடு அரைத்தால் அதுவும் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.
ஹா ஹா ஹா ஹா நெல்லை சிரித்துவிட்டேன். நெல்லை என் மசமசப்பு சென்னையிலேயே தொடங்கிவிட்டது...இங்கு பிடித்திருக்கு நெல்லை. ஆனால் மைன்ட் தான் ஸ்லோவாக..
நீக்குகிட்டத்தட்ட புளிசேரி தானே நெல்லை இதுவும். அதில்தானே மாஅவடு அரைத்து என்று....அடுத்துக் கொடுத்திருக்கும் பச்சடி டைப் வெந்தயம் இல்லாமல், பதைக்க வைக்காமலும் பதைக்க வைத்தும் செய்யலாமே...எப்படிச் செய்தாலும் நல்லாருக்கும்தான் நெல்லை. அதுவும் மோர்க்குழம்பு, புளிசேரி பிடித்தவர்களுக்கு இதுவும் பிடிக்கலாம்...
கீதா
நிறம் கொஞ்சம் டார்க்கா இருக்கறமாதிரி இருக்கு. ஒருவேளை மஞ்சள் பொடி சேர்க்கணுமோ? குழம்பு கொஞ்சம் ஜலமால இருக்கணும்னு நினைக்கறேன்.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் இப்படி இந்தக் கலரில்தான் இருக்கும் நெல்லை. மஞ்சள் பொடி சேர்த்ததில்லை அம்மாவின் அம்மா.
நீக்குகுழம்பு முதல் படத்தில் தயிர்/மோர் சேர்க்காமல்...ரெண்டாவது படத்தில் பாருங்க நெகிழ்ந்துதான் இருக்கிறது. ரொம்ப நீர்க்க எங்கள் வீட்டில் செய்ததில்லை நெல்லை. மோர்க்குழம்பு போலத்தான் செய்வாங்க...
மிக்க நன்றி நெல்லை
கீதா
அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை சகோ கருத்திற்கு
நீக்குகீதா
மாவடு பச்சடி அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி கருத்திற்கு
நீக்குகீதா
செய்முறையும், படங்களும் அருமை. எங்கள் வீட்டில் அழுக மாங்காய் பச்சடி என்றால் ஏதோ கெட்டுப்போன வஸ்துவை சமைக்கிறோம் என்று நினைத்து சாப்பிட மாட்டார்கள். அரச்சு கலக்கி sounds better. Let me try, ஆனால் அதற்கு மாவடு வேண்டுமே...? இந்த வருடம் மாவடு போடவே இல்லை.
பதிலளிநீக்குமிக்க நன்றி பானுக்கா. ஆமாம் அழுக மாங்கா நா அப்படித்தான் தோன்றும். ஸோ நீங்க அளிஞ்ச மாவடு பச்சடினோ அல்லது அரைச்சுக் கலக்கினோ அல்லது மாவடு குழம்புனு கூடச் சொல்லிக்கலாம்.
நீக்குபை த வே நீங்கள் புதினா சாதத்தில் எலுமிச்சை பிழிந்து செய்தது வித்தியாசமாக இருந்ததை வீட்டிலும் செய்துவிட்டேன் பானுக்கா. சேலாகிடுச்சு. பொதுவா இங்கு எதுவானாலும் சேல் ஆகிடும். ரொம்ப பர்ட்டிக்குலர் கிடையாது யாருமே.
மாவடுதானே? டொட்டடைய்ங்க்!! அருளிவிட்டேன்!! கிடைக்கும் டோன்ட் வொர்ரி!!!! ஹா ஹா ஹா
கீதா
பாருங்க விட்டுவிட்டேன் சொல்ல. புதினா ரைஸ் வித் எலுமிச்சை ஜூஸ் நல்லாருந்தது பானுக்கா...
நீக்குகீதா
புதினா+கொ.ம.வி+சோம்பு+இஞ்சி சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொண்டுக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொண்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு எலுமிச்சை பிழிந்து நா.ச. அல்லது பனங்கல்கண்டு போட்டுச் சாப்பிட்டால் இந்த வெயிலுக்கு அமிர்தம். இரண்டும் இல்லைனா சர்க்கரையே போட்டுக்கலாம். ஒன்றிரண்டு சின்ன ஏலக்காயும் சேர்க்கலாம்.
நீக்குகீதாக்கா சூப்பர். நான் சோம்பு சேர்த்ததில்லை. மத்தது செய்துருக்கேன். அதையும் சேர்த்து செஞ்சுட்டா போச்சு!!
நீக்குபாருங்க நான் அடிச்ச கருத்துல ஒன்னு விட்டுப் போனதுல கீதாக்காவின் டிப்ஸ் கிடைச்சுருக்கு.....
நான் அங்கு அடிக்க வந்தது பானுக்கா புதினா சாதம் செய்திருந்தாங்க அதுல எலுமிச்சையும் பிழிஞ்சு செஞ்சுருந்தாங்க அது நல்லாருந்தது ஸோ நான் வீட்டில் அப்படிச் செய்து பார்த்ததைச் சொல்லும் போது அந்த ரைஸ் விட்டுப் போச்சு!! ஹிஹிஹிஹி...
விட்டுப் போனதில் உங்ககிட்டருந்து ஒரு புதிய டிப்ஸ்....சோம்பு சேர்த்து புதினா ஜூஸ்!!! செஞ்சுடுவோம்!!
மிக்க நன்றி கீதாக்கா
கீதா
அழுக மாங்கா...இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஐயா கருத்திற்கு
நீக்குஅழுக மாங்கா என்றால் இதில் அழுகியது அல்ல. ஓவராக ஊறிய மிகவும் சாஃப்டாக இருக்கும் மாவடு.
கீதா
வித்தியாசமான இரண்டு குறிப்புகளுக்கு நன்றி கீதா! செய்து பார்க்க வேண்டும்!
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோ அக்கா. செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க. நீங்கள் சமையல் கில்லாடி ஆயிற்றே. உங்கள் குறிப்புகளை 2008 லியே அறிவேனே மனோ அக்கா. அப்ப உங்களை உங்கள் ஐடி படம் ரோஜா ஜிஃப் மூலமே அறிவேன் இங்க வலைத்தளம் வந்த பிறகுதானே உங்கள் பெயர் பார்த்து அது நீங்க தானேனு கேட்டு அறிந்து அப்புறம் உங்க படமும் பார்த்து தெரிந்து கொண்டேன். செஞ்சு பார்த்துவிட்டு சொல்லுங்க மனோ அக்கா
நீக்குமிக்க நன்றி கருத்திற்கு
கீதா
நன்கு முற்றாத மாங்காயை பல்பல்லாக நறுக்கி எடுத்து சிறிது மிளகாய்ப்பொடி சேர்த்து நல்ல எண்ணையில் சிறிது பெருங்காயப்பொடி கலந்து தாளித்தால் உடன் ஊறுகாய் ரெடி கல் யாண மாங்காய் என்று கூறுவோம்
பதிலளிநீக்குஇது எங்கள் வீட்டில் கீத்து மாங்காய் என்று சிலரும் எண்ணெய் மாங்காய்னு சிலரும், இன்ஸ்டன்ட் மாங்காய் ஊறுகாய்னும் கல்யாண மாங்காய்னும் சொல்வதுண்டுதான்..
நீக்குமிக்க நன்றி ஜிஎம்பி சார்
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குநல்ல சுவையான ரெசிபி. நாங்களும் "அழுக மாங்கா பச்சடி" என்றுதான் சொல்வோம். மிகவும் அருமையான செய்முறைகளுடன் இரண்டு ரெசிபியும், நன்றாக உள்ளது. படங்களும் மிக அருமையாக உள்ளன.
பல பல வருடங்களுக்கு முன்பு அம்மா வீட்டில்,பாட்டியின் கைப்பக்குவத்தில் சாப்பிட்டது.. ஆனாலும் இன்னமும் சுவை நாவிலேயே உள்ளது. அப்போதெல்லாம், கத்திரிக்காய் துவையல், தேங்காய் துவையல் இதற்கு பொருத்தமான சைடிஸாக இதுதான்.. அன்று கூடவே சாதம் செலவாகும். மலரும் நினைவுகளை தூண்டிய தங்கள் செய்முறைகளுக்கு மிக்க நன்றி. அதன்பின் மாவடுக்கள் என்னவோ அவ்வளவாக சாப்பிட்டதில்லை.
ஆகா அருமை என பூசாரும் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுகிறாரே.! தங்கள் பக்குவம் அவருக்கும் பிடித்துப் போயிருக்கிறது.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா நீங்களும் தின்னவேலி யாச்சே ஸோ அழுகமாங்கா பச்சடினு நீங்களும் சொல்றீங்க..
நீக்குஆமாம் இது செய்யும் போது சாதம் கொஞ்சம் கூடுதலாகத்தான் செலவாகும்.
பூஸாரைக் காணலியே....அவர் விடுமுறையில் இருக்கிறார்.
மிக்க நன்றி கமலாக்கா.
கீதா
புதுவித பச்சடி
பதிலளிநீக்குராஜி மிக்க நன்றி.
நீக்குசெஞ்சு பாருங்க பிடிச்சுருக்கானும் சொல்லுங்க
கீதா
மாங்காய் பச்சடி எனக்கு பிடித்தமானது.
பதிலளிநீக்குஆஹா கில்லர்ஜி நீங்க எந்தப் பச்சடிய சொல்றீங்கனு தெரியலையே!!!!!
நீக்குஹா ஹா ஹா
இந்தப் பச்சடியா அல்லது வெல்லப்பச்சடியா!!
மிக்க நன்றி கில்லர்ஜி.
கீதா
வணக்கம். சுவையான குறிப்புகள். இங்கே மாவடு இல்லை. ஊருக்கு வந்தால் முயல வேண்டும்.
பதிலளிநீக்குஅருமை சமையல் குறிப்பு, சுவைத்தேன்.
பதிலளிநீக்கு