திங்கள், 29 ஏப்ரல், 2019

"திங்க"க்கிழமை : வாழைத்தண்டு இருபுளி கூட்டு - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி


வாழைத்தண்டு இருபுளி கூட்டு

தேவையான பொருள்கள்:



வாழைத்தண்டு (சுமார் ஒரு அடி நீளமுள்ளது) - 1
புளி    -  ஒரு எலுமிச்சம்பழம் அளவு

வறுத்து அரைக்க:




தேங்காய் துருவல் - நான்கு டேபிள் ஸ்பூன்  
சிவப்பு மிளகாய் வற்றல் - 4
தனியா(கொத்துமல்லி விரை) - 1/2 டேபிள் ஸ்பூன் 
வெந்தயம்   --1/4 டீ ஸ்பூன் 
புளித்த மோர்  -  1 கப் 
உப்பு   -  தேவையான அளவு 

தாளிக்க:

சமையல் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை.

செய்முறை:

முதலில் வாழைத்தண்டை மேல் பட்டையை நீக்கி விட்டு, நார் இல்லாமல் பொடியாக நறுக்கி மோர்  கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும். அப்போதுதான் கருக்காமல் இருக்கும். சமைக்கும் முன் மோர் தண்ணீரை கொட்டி விட்டு, நல்ல தண்ணீரில் ஒரு முறை கழுவி விட வேண்டும். 



ஊற வைத்திருக்கும் புளியை கரைத்து அந்த புளி ஜலத்தை வாழைத்தண்டோடு சேர்த்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 



ஒரு பக்கம் அது கொதித்துக் கொண்டிருக்கட்டும், இன்னொரு அடுப்பில் ஒரு சிறு வாணலியை வைத்து, கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வெந்தயம், கொத்தமல்லி விரை, மிளகாய் வற்றல்,  தேங்காய் துருவல் இவைகளை இதே வரிசையில் சேர்த்து வறுத்து, அரைத்துக் கொள்ளவும். 



கொதித்துக் கொண்டிருக்கும் வாழைத்தண்டு சேர்த்த புளி ஜலத்தில் புளி வாசனை போனவுடன், அரைத்த விழுதை சேர்த்து கலக்கி கொஞ்சம் கொதிக்க விட்டு, பின்னர் புளித்த மோர் சேர்த்து கலந்து அது ஓரத்தில் நுரைத்து வரும் பொழுது இறக்கி, கறிவேப்பிலை கிள்ளி போட்டு, கடுகு தாளித்தால் மிக மிக சுவையான வாழைத்தண்டு இருபுளி கூட்டு தயார்.






திருநெல்வேலி ஸ்பெஷலான இருவுளி குழம்பை சாதாரணமாக முருங்கைக்காயில்தான் செய்வார்கள். நான் வாழைத்தண்டு மோர்  கூட்டை  இருவுளி கூட்டாக செய்யலாமே என்று முயற்சித்தேன், எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

50 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார். உங்களுக்கும், மற்றும் இனி வரப்போகும் அனைத்து நட்புறவுகளுக்கும் எங்கள் நல்வரவும்...

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும், வந்திருக்கும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம். வாழ்த்துகள்.

      நீக்கு
  2. ஆகா...
    இன்றைய நளபாகம் - நலந்தரும் பாகமாக அருமை....

    வாழைத் தண்டு உடலுக்கு மிகுந்த நன்மைகளைத் தரக்கூடியது....

    வாழைத்தண்டின் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்க வல்லது..

    பாரம்பர்யத்தின் அடையாளம்...
    மங்கலச் சின்னங்களுள் ஒன்று...

    வாழ்க வாழை...

    பதிலளிநீக்கு
  3. இன்று நமது தளத்தில்
    ஸ்ரீ வாழை வனநாதன் தலை வாழை இலையில் தயிரன்னம் பாலிக்கின்றான் - தனது அடியவர் பசி தீர்க்கிறான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்று அருள்பெற்று வந்தேன்.

      நீக்கு
    2. நன்றி சார்!. முதலில் நீங்கள் வாழ்த்திய ராசி நல்ல ராசிதான். வாழைவனநாதர் திருச்சிக்கு அருகில் இருக்கும் திருப்பங்ஞிலிதானே?

      நீக்கு
    3. அதே.. அதே... சபாபதே...
      அந்தத் திருப்பைஞ்ஞீலி தான்..
      அங்கு வாழை தான் தல விருட்சம்..

      நீக்கு
  4. நமக்கெல்லாம் பிடித்தமானது
    பாசிப்பருப்பு + வாழைத்தண்டு கூட்டு...

    இந்த செய்முறை புதியது...
    ஊருக்குச் சென்ற பிறகு செய்து பார்க்கலாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நமக்கெல்லாம் பிடித்தமானது
      பாசிப்பருப்பு + வாழைத்தண்டு கூட்டு... //
      எனக்கும் அது மிகவும் பிடிக்கும். கூட்டாக பண்ணாமல் ட்ரை காரியாகவும் செய்வதுண்டு.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கம்.
    அட, இன்று என்னுடைய கை வண்ணமா? திருநெல்வேலி சீமை உணவு இது. நெல்லையைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கும் தளம் இது. அவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் பானு அக்கா.

      ஆம்,

      உங்கள் கைவண்ணமேதான்.

      நீக்கு
  6. மிக அழகாக வாழைத்தண்டை வரவேற்றிருக்கும் துரை சாருக்கு நன்றி. ரெசிப்பி பிடித்ததா?

    பதிலளிநீக்கு
  7. செய்முறை சுலபமாக தெரிகிறது நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கில்லர் ஜி...

      >>> செய்முறை சுலபமாக தெரிகிறது நன்றி...<<<

      செய்முறை மட்டுந்தான் தெரிகிறதா!...
      வாழைத் தண்டு இருபுளிக்குழம்பு தெரியலையா?...

      நீக்கு

  8. இன்னிக்கு பானுமதி அல்லது தி/கீதா என நினைச்சேன். நினைத்தேன் வந்தாய் நூறு வயது! இப்படி ஒரு செய்முறை வாழைத்தண்டு பிட்லை என்னும் பெயரில் காமாட்சி அம்மா பகிர்ந்திருந்தாங்க. ஆனால் மோரோ, தயிரோ சேர்த்ததாகச் சொல்லலைனு நினைக்கிறேன். நானும் அப்போலேருந்து இந்தக் கூட்டை ஒரு முறையாவது பண்ணிப் பரிக்ஷை செய்ய நினைவு. நம்ம வீட்டு சோதனை எலிக்கு பயம்! :))))) பார்ப்போம். இப்போக் கொஞ்ச நாட்களாக வாழைத்தண்டு வாங்கிட்டு வரக் காணோம். என்னனு தெரியலை.

    பதிலளிநீக்கு
  9. கூடவே
    வாழைத்தண்டு போல உடம்பு அலேக்!.. - என்ற பழைய பாடலும் நினைவுக்கு வருகிறது!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழை போல் உயரும் குறங்கு - இதனை ஞாபகப்படுத்திவிட்டீர்கள். எம்ஜியார் படப் பாடலொன்றும் நினைவுக்கு வந்தது.

      நீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    பானு மா இதை புளி மோர்க்கூட்டு என்று அம்மா செய்வார். மிக வாசனையாக சுசி ருசியாக இருக்கும். அழகாகச் செய்திருக்கிறீர்கள்.
    வண்ணமும் அழகு. நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா.

      நீக்கு
    2. நன்றி வல்லி அக்கா. //வண்ணமும் அழகு// அதற்கு காஷ்மீரி சில்லிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அதிகம் பிரைட்டாக இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றியது.

      நீக்கு
    3. நன்றி வல்லி அக்கா. //வண்ணமும் அழகு// அதற்கு காஷ்மீரி சில்லிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அதிகம் பிரைட்டாக இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றியது.
      என் பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி இதை செய்தது கிடையாது. முன்பெல்லாம் சன் டி.வி.யில் 'மங்கையர் சாய்ஸ்' என்று ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்புவார்கள் அதில் ரேவதி சங்கரன் செய்ததை பார்த்து கற்றுக் கொண்டேன்.

      நீக்கு
  11. ஓ.. இது திருநவேலி பக்குவம்!?..

    அப்புறம் கேக்க வேணுமா?!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருனெல்வேலியா கொக்கா. துரை மா, அளவோடு அருமையாகச் செய்ய எங்க ஊர்க்காரங்க தெரிஞ்சவங்க. கும்ப்கோணம் மாதிரி அள்ளி விட மாட்டார்கள்.ஹாஹா.

      நீக்கு
    2. வல்லி சிம்ஹன் அம்மா.... எங்க வீட்டுல பிரச்சனையை உண்டாக்கிட்டீங்களே... என் மனைவி கும்பகோணம். நான் திருநெவேலி.... உங்க கமெண்டை அவ படிக்காம இருக்கணும். ஏற்கனவே இந்த வாரத்தில் இந்தச் செய்முறையை பண்ணச் சொல்லியிருக்கேன்.....

      நீக்கு
    3. ஒரு விதத்தில் வல்லி சொல்லி இருப்பது உண்மை நெல்லைத் தமிழரே! நான் எங்க வீட்டிலேயே பார்த்திருக்கேன். என் மாமியாருக்கு, நாத்தனாருக்கெல்லாம் ஒரு தேங்காய் தேவைப்படும் இடத்தில் எனக்கு ஒரு மூடியே ஜாஸ்தியா இருக்கும். அவங்க அள்ளித் தான் விடுவாங்க!

      நீக்கு
  12. வாழைத்தண்டில் இருவுளி குழம்பு.... பார்க்க நன்றாக இருக்கிறது. சமயங்களில் இங்கே கிடைக்கும். வாங்கிச் செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். கொஞ்ச நாட்களாயிற்று உங்களைப் பார்த்து, நலம்தானே? செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய "திங்க"பதிவு சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் கைப் பக்குவமாக இருக்கும் என நினைத்து வந்து பார்க்கும் போது அது உண்மையாகி விட்டது. மிக்க மகிழ்ச்சி.

    சகோதரியின் செய்முறை படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது. வாழைத்தண்டு உடம்புக்கு அதுவும் ஆண்களுக்கு மிகவும் நல்லது. சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் கூறுவது போல் சிறுநீரகக்கல்லை கரைத்து விடும் தன்மை கொண்டது. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.

    வாழைத்தண்டில் கறி, கூட்டு,பருப்புஉசிலி, வெறும் மோர்குழம்பு, வடை, அடை எல்லாம் செய்யலாம். சகோதரி பானுமதி அவர்களின் செய்முறை மிகவும் நன்றாக உள்ளது. வெந்தயம் சேர்த்து வறுத்து அரைத்து (எரிவுள்ளி சாம்பார்) இது போலவும் செய்திருக்கிறேன். ஆனால் புளி சேர்த்ததில்லை. இனி செய்யும் போது இதை மாதிரி செய்து பார்க்கிறேன். சுவையும் நன்றாக இருக்குமென தோன்றுகிறது. தலைப்பும் (இருபுளி) நன்றாக உள்ளது. அழகாக இதை பகிர்ந்த பானுமதி வெங்கடேஷ்வரன் சகோதரிக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழைத்தண்டு அடிபாகம் சற்று அழுத்தமாக இருக்கும். அதில் பிட்லை ருசியான இருக்கும் மோர்க்கூட்டு ஒன்றும் நான் எழுதியதை ஞாபகம் வந்தது. இருபுளிக்கூட்டு இன்னொரு ஒட்டம். அழகாகவும் இருக்கு. கீதா நல்ல ஞாபக சக்தி உனக்கு. பானுமதி படம் பதம் சூப்பர். அன்புடன். ஐட்டம் ஓட்டமாக பதிவாகிவிட்டது

      நீக்கு
    2. //இன்றைய "திங்க"பதிவு சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் கைப் பக்குவமாக இருக்கும் என நினைத்து வந்து பார்க்கும் போது அது உண்மையாகி விட்டது. மிக்க மகிழ்ச்சி.//
      எனக்கும் மகிழ்ச்சி. நீங்கள் மட்டுமல்ல, கீதா அக்காவும் நினைத்திருக்கிறார். யாரோ நம்மை நினைத்துக் கொள்கிறார்கள் என்பது சந்தோஷமளிக்கும் விஷயம்தானே?
      உங்களுடைய விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.
      //தலைப்பும் (இருபுளி) நன்றாக உள்ளது.//.பேச்சு வழக்கில் இருவுளி குழம்பு என்றாலும், புலி, மோர் என்னும் இரண்டு புளிப்புகள் சேர்க்கப்படுவதால் இரு புளி குழம்பு. மிக்க நன்றி.

      நீக்கு
    3. வாங்க காமாட்சி அம்மா. கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  15. வாழைத்தண்டு இருபுளி கூட்டு நன்றாக இருக்கிறது.
    செய்முறை படங்களும், செய்முறை குறிப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
  16. வாழைத்தண்டு இருபுளிக் கூட்டு... புதிய செய்முறை. இதை சாப்பிட்ட ஞாபகம் இல்லை.

    வாழைத் தண்டில் நார் எடுப்பது எனக்கு சேலஞ்சிங் வேலை. விரைவில் செய்துபார்க்கத் தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புதிய செய்முறை. இதை சாப்பிட்ட ஞாபகம் இல்லை.//
      வாங்க குக்கீரரே! நீங்கள் இப்படி சொல்வது ஆச்சரியமளிக்கிறது. சீக்கிரமே இருபுளி கூட்டு ப்ராப்திரஸ்து!

      நீக்கு
  17. எல்லோருக்கும் காலை வணக்கம் லேட்டு! வேலைகள்.

    நம்ம ஏரியாவுல வேற போய்ப் பார்க்கணும்...தோழி எழுதின கதை அங்கு..https://engalcreations.blogspot.com/2019/04/blog-post_28.html#comment-form

    பானுக்கா இது எங்க வீட்டுல் மிகவும் பிடித்த குழம்பு. என் பாட்டி செய்வது நானும் செய்வேன்...ஆனால் கொத்தமல்லிவிரை சேர்க்க மாட்டார்கள்.

    அதைத்தான் எரிகொள்ளி (இருபுளிக்குழம்பு என்பார்கள்) என்பார்கள் வீட்டில். மற்றபடி இதேதான். அப்புறம் தேங்காய் எண்னெயில் தான்...

    சூப்பர் ரெசிப்பி. கொ வி போட்டுச் செய்து பார்க்கிறேன் பானுக்கா...சூப்பர் ரெசிப்பி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. நானும் இரு புளிக் குழம்பில் கொத்தமல்லி விதை போட்டு செய்தது இல்லை. வாழை தண்டிலும் செய்தது இல்லை! கத்தரிக்காய் அல்லது
    வாழைக்காய் அல்லது உருளைக்கிழங்கு போட்டு செய்வதுண்டு.... நீங்கள் சொன்ன முறையில் செய்து பார்க்கிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
  19. ஆஹா! இன்று நான் முழித்த முகம் நல்ல முகம் என்று நினைக்கிறேன். திருநெல்வேலிக்காரர்கள் எல்லோரிடமும் தப்பித்து விட்டேன்.(ஆ! டண்டணக்கா!).
    குறிப்பாக தி.கீதாவும், குக்கீரரான நெல்லை தமிழனும் என்ன சொல்வார்களோ என்று பயந்து கொண்டேதான் இருந்தேன். கீதா அக்கா கூட செய்ததில்லை என்று கூறி விட்டாரே???!!! என்ன நடக்கிறது இங்கே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குக்கீரரான நெல்லை தமிழனும் என்ன சொல்வார்களோ// - என்னைப்போல் அரைக் குடம் தளும்பத்தான் செய்யும். நீங்க, கீதாக்காரங்க (ரெண்டுபேர்), மற்ற சமையல் அனுபவஸ்திகள்லாம், நிறைகுடம் இல்லையா? வெகு விரைவில் மனைவியைச் செய்யச் சொல்லி படத்தை எபி வாட்சப்பில் பகிர்ந்துகொள்கிறேன்

      நீக்கு
    2. சமையலில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடும், ஆர்வத்தோடு பல சமையல் குறிப்புகளை பகிர்வதும், மற்றவர்களின் குறிப்புகளை விமர்சனம் செய்வதும் என்னை உங்களை குக்கீரர் என்று விளையாட்டாக அழைக்க வைத்தது. தவறாக நினைக்காதீர்கள்.

      நீக்கு
  20. நோய் தீர்க்கும் வாழைத் தண்டில் கறியா?
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!