வியாழன், 18 ஏப்ரல், 2019

ஜெயித்தவர்கள் நீங்கள் வாக்களித்தவர்களா?




எப்போதும் பொருந்தும் சென்னையின் நிலைமை!


பகல் வெயில் பற்றியெரிய,
இரவுகளிலோ 

மழையை மறைமுகமாக வரவேற்க 
நட்சத்திரங்கள் 
கேஷுவல் லீவு போட்டாலும், 
வெள்ளிநிலா 
வெளிப்படையாக எதிர்த்து நின்று 
கார்முகிலைக் 
கரைத்தொ  துக்கி
விண்பவனி வருகிறது...

சென்னை 
செய்த அ 
பாக்கியம்!


=======================================================================================================


மரத்தின் மரணமும் குருவியின் ஓலமும் 


இரைதேடித் திரும்பிய  
குருவி ஒன்று
தான்
நேற்றுக் குடியிருந்த
ஒற்றை மரத்தைத் தேடி
சுற்றி வருகிறது பரிதாபமாய்
அரசியல் காரணங்களுக்காக
வெட்டுப்பட்ட மரம்
வேரோடு வீழ்ந்து கிடக்கிறது மண்ணில்..
உற்றுக் கேட்டால்
கூடு நொறுங்கி
குஞ்சுகள் இழந்த
குருவியின் அழுகையோடு
மரத்தின் மரண வாக்கு மூலமும்
கேட்கலாம்..



============================================================================================================





எழுதியவர்கள் யார்? யார்? யார்? யார்? யார்?


ஹாய் எ.பி.ரீடர்ஸ்! எங்கள் ப்ளாகில் வெளியான தொடர்கதையான "நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே" முடிந்து விட்டது.

ஏகப்பட்ட ஊகங்களுடன் எல்லோரும் தொடர்ந்து படித்தோம்.. யார் அல்லது யார் யார் எழுதினார்கள் என்று ஏகப்பட்ட கெஸ். இதில் யூகிக்கப்பட்ட பெயர்கள்

ல்லியம்மா, துரை செல்வராஜ் சார், கௌதமன் சார், நெல்லை தமிழன், ஸ்ரீராம், பா.வெ.மேடம், கீ.ரா.மேடம்.

வல்லி அம்மாவும் துரை சாரும் முதலிலேயே மறுத்து விட்டார்கள். ஆனாலும் நம்பத்தயாரில்லை!


கௌதமன் சாரும் மறுத்தார். தவிர அவரை அதிகம் பேர்கள் சொல்லவில்லை. ஸோ, குறைந்த அளவு வாக்குகள் பெற்று பட்டியலில் இருந்து வெளியேறுகிறார்! 


இப்போது இருக்கும் நெல்லைத் தமிழன், ஶ்ரீராம், பானுமதி மேடம், கீதா ஆர். மேடம் இவர்களில் நெல்லைத் தமிழன் முதல் அத்தியாயத்திலிருந்தே கதையை மனம் விட்டு  பாராட்டிக் கொண்டே  வந்திருக்கிறார். 

என்னதான் நடிப்பு என்றாலும், வெளிப்படையாகத் தன்னைத்தானே தொடர்ந்து வியந்து கொள்வார்களா? எனவே அவரும் கிடையாது.


இப்போது மிஞ்சி இருப்பது ஶ்ரீராம், பானுமதி மேடம் மற்றும் கீதா ரங்கன் மட்டுமே.

இவங்க மூணு பேருமே கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்கள். பட்டும், படாமலும் மழுப்பலான கமெண்ட்ஸ்.

நிச்சயமாக கீதா ரங்கன் மேடம் எழுதியிருக்காங்கனு வெரி ஃப்ர்ஸ்ட் சாப்டரிலிருந்தே நிறைய பேர் சொல்லி விட்டார்கள். அதனால் அவங்க ஒரு டெஃபனெட் பார்ட்டிசிபெண்ட்.

ஶ்ரீராம் சார், பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம் இவங்க ரெண்டு பேரும் உண்டா? அல்லது ஒருத்தர்தானா?

பார்த்துடலாமா

ஸ்ரீராம் ரொம்பவே பேய்க்காட்டறார். நாங்கதான் கண்டுபிடிச்சு சொல்லியாச்சே! அப்புறம் எதுக்கு இப்பூடி?

இதுக்கு மேலயும் பொறுக்க முடியாது நான் தேம்ஸ்ல ஆர்ப்பாட்டம் செய்யப் போறேன், இல்ல நானும் காசிக்குப் போகப் போறேன் என்னை யாரும் தடுக்காதீங்கோயாருன்னு சொன்னாத்தான் நான் திரும்ப வருவேன்னுகாசி ட்ரிப் ஆர்கனைசர் அதிரா  அவங்க ஒரு ஆர்ப்பாட்டம் போட்டு காசிக்குக் கோச்சுட்டு கிளம்பறாங்க பாருங்க! குரல் கேட்குதுதானே உங்க எல்லாருக்கும்?

அப்ப நாம அவங்கள காசிக்குப் போகவிடாம தடுத்துவிடலாமா!!!!!

முதல் பார்ட்லயே ஏஞ்சல் அவங்க ஒரு ஆங்கில வரி கோட் பண்ணி இது “ஷி” அப்படினு சொல்லிருந்தார். அதிரா அவங்களும் ராகம் பேர் சொல்லி ஆமாம் “ஷி” யேதான்னு சொல்லிருந்தாங்க. ஆனா, ஏன் அவங்க அப்புறம் ஸ்ரீராமை உள்ள கொண்டு வந்தாங்கனு தெரியலை.

அந்த இரண்டாவது நபரும் ஷி தான். பெண்தான் ஏற்கனவே கீதா ரங்கன் டெஃபனிட் னு முடிவான பட்சத்தில் மற்றொருவரும் ஷி அப்படிங்கும் போது ஸ்ரீராம் இந்தப் பட்டியல்ல இல்லை.

கிட்டத்தட்ட ஏஞ்சல் அவங்க கண்டுபிடிச்சு கடைசில சொல்லிருந்தாங்க இல்லையா?!! (கூட நெல்லையையும் சேர்த்துக்கிட்டாங்க அவ்வளவுதான்!!) (காசி ட்ரிப் ஆர்கனைசர் நோ ஏனக்கு நீதி நியாயம் நேர்மை எருமை வேணும்னு சொல்லி பாய்ந்து வரப் போகிறார்!)

எஸ் அந்த இருவர் இவங்கதான். சிலர் சொல்லாவிட்டாலும் கெஸ் செய்திருப்பீங்கதான்.


பானுமதி வெங்கடேஸ்வரன், கீதா ரங்கன் தான்!!


கதை பிறந்த கதை, மற்றும் கமெண்ட்ஸ் பற்றிய விவரங்கள் நாளை தொடரலாம்.
===================================================================================================

129 கருத்துகள்:

  1. மகிழ்வான வணக்கம் எல்லாருக்கும்!

    நன்றி நன்றி மிக்க நன்றி ஸ்ரீராம்!!

    கவிதைகள் வாசிக்க வருகிறேன்...கடமைகளை முடித்துவிட்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்வான வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. நட்சத்திரங்கள்
      கேஷுவல் லீவு போட்டாலும், //

      ஹா ஹா ஹா ஹா மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம் இதை...

      சென்னையின் நிலை எப்போதுமே அப்படித்தான்.

      மேகமூட்டம் மழையைப் பொழியாமல்
      நம் உடல் வியர்வை மழை பொழியும்
      சென்னையின் வெப்பத்தின் புழுக்கம்.

      கீதா

      நீக்கு
    3. ஆமாம் கீதா... இப்போதும் புழுக்கத்திலேயே இருக்கிறேன். குளித்துவிட்டு ஜநாக செல்லவேண்டும்.

      நீக்கு
    4. கீதாக்கா உங்களுக்குமா குயப்பம்!! தமிழ்ல டி வாங்கினவங்களுக்குத்தான் குயப்பம் எல்லாம் வரும்

      ஜனநாயகக்கடமை!!!

      கீதா

      நீக்கு
    5. அடுத்தவர்களைக் குழப்பிய கீசா மேடத்தைக்்குழப்ப வச்சுட்டீங்களே. அவங்கதான் அவசி, துளசி என்று என்னைக் குழப்புவார்.

      ஜன நாயக கடமை

      நீக்கு
    6. அவசி ஓகே... அதென்ன துளசி?!!!

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், KGG, கீதாக்கா/ கீதா மற்றும்
    விடிவெள்ளிப் பூக்கள் அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இனிய நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. வரவேற்றிருக்கும் துரைக்கும், வந்திருக்கும் அனைவருக்கும் மற்றும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு, வணக்கம். அனைவரும் தேசக் கடமையை நல்லபடி ஆற்றி வரவும் வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

      நீக்கு
    3. வாங்க கீதா அக்கா... கடமையை முதலில் முடிக்க திட்டம்!

      நீக்கு
  3. ஆகா..
    எனக்குத் தெரியும்!..ஆனாலும்,
    ரகசியம் காக்க வேண்டுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம வட்டாரத்தில் -
      வாஸந்தி அவர்களைப் போல ஆங்கில உரையாடல்களுடன் கதையை நகர்த்துவதில் வல்லவர்
      ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள்...

      அத்துடன் - இசையை அலசி ஆராய்வதில் வல்லவர் ஸ்ரீமதி கீதா ரங்கன் அவர்கள்...

      பாடாய்ப்படுத்தும் இணையம் அவர்களுடையது...

      ஆனாலும் கதையின் சில இடங்கள் ஏன் இப்படி என்று தோன்றியது...

      எப்படியோ சுப மங்கலம்...

      நீக்கு
    2. துரை அண்ணா ஹை உங்களுக்குத் தெரிஞ்சுருச்சா...

      மிக்க நன்றி துரை அண்ணா கருத்திற்கு எங்கள் இருவர் சார்பிலும். அக்கா பின்னாடி வருவாங்க ஜநாக ஆற்றிவிட்டு பானுக்கா அவங்களை வாசந்தி போலனு சொன்னதுக்கு அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க. பானுக்கா வொரேஷியஸ் ரீடர். எனக்கு வாசிப்பு என்பது மிக மிக மிகக் குறைவு. (கதைல அவங்க தான் முன்னோடி!! முன்னாடி!!!! இங்க கருத்துல நான் முன்னாடி!!ஹிஹிஹி)

      கீதா

      நீக்கு
    3. ///ஆனாலும் கதையின் சில இடங்கள் ஏன் இப்படி என்று தோன்றியது...// ஆமாம்,சில இடங்கள் எனக்கும்!:))))

      நீக்கு
    4. //வாஸந்தி அவர்களைப் போல ஆங்கில உரையாடல்களுடன் கதையை நகர்த்துவதில் வல்லவர்
      ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள்...//
      ஆஹா! என்னவொரு கம்பேரிசன்! அவர் எங்கே? நான் எங்கே? சந்தோஷமான நன்றி.
      ஆங்கிலம் கலக்காமல் எழுத வேண்டும் என்று மிகவும் ஆசை, ஆனால் இயல்பாக இருக்காதது போல ஒரு நினைப்பு.

      நீக்கு
    5. ஒரு காலத்தில் நானும் ஆங்கிலக்கலப்போடு தான் எழுதி இருக்கேன். ஆரம்ப காலப் பதிவுகளைப் பாருங்கள். பின்னால் குறைத்துக் கொண்டு வந்தேன். இப்போவும் தேவைப்படும் இடங்களில் ஆங்கிலக்கலப்பு வரத்தான் செய்கிறது. ரொம்பத் தமிழ்ப் படுத்தினால் தமிழையே படுத்தினால் போல் ஆகிறது.

      நீக்கு
    6. //ஆனாலும் கதையின் சில இடங்கள் ஏன் இப்படி என்று தோன்றியது...//

      //ஆமாம்,சில இடங்கள் எனக்கும்!:))))//

      எந்த இடங்கள்? எந்த இடங்கள்?

      நீக்கு
    7. அது வேறு ஒன்றுமில்லை ஶ்ரீராம். கீதா அக்காவுக்கு வயதாகி விட்டது. அதுதான் ஹிஹி;))

      நீக்கு
    8. வ. குழந்தையை அப்படி எல்லாம் சொல்லக்கூடாது பானு அக்கா.

      நீக்கு
    9. அக்காஸ்! நானும் நிறையவே கலக்கறேன் தான். சில சமயம் அப்படியே பேசுவது போல் வந்துவிடுகிறது. நானும் எழுதிவிட்டு அப்புறம் தமிழில் மாற்றுகிறேன். ஆனால் அப்படி எழுதும் போது யதார்த்தம் இருப்பது போல தோன்றும்... அதாவது அந்தந்த இடங்கள் கேரக்டருக்கு ஏற்ப.

      கீதா

      நீக்கு
    10. ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கோபத்திலே "க்" ஐ முழுங்கிட்டேன்.

      நீக்கு
  4. இதற்குள் ஸ்ரீமதி பானுமதி வெங்கடேசன் அவர்கள் இருக்கின்றார்கள்... என்று மனக்குருவி சத்த்ம் போட்டுக் கொண்டே இருந்தது..

    ஸ்ரீமதி கீதா ரங்கன் அவர்களுக்கான பணிச்சுமையில் 60 % அவர்களை நான யூகப்படுத்திக் கொள்ளவில்லை...

    மனமார்ந்த பாராட்டுகளுடன்
    துரை செல்வராஜூ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனக்குருவி சொன்ன தகவல்தானா? ஓ...!

      நீக்கு
    2. துரை அண்ணா நாங்கள் இருவரும் சேர்ந்து எழுத ஆரம்பித்த கதை அடுத்த பகுதியில் வருவதால் இங்கு சொல்லவில்லை....

      கீதா

      நீக்கு
    3. இன்னொன்றும்வருகிறதா?அட!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா கீதாக்கா கதை அல்ல கதை பிறந்த கதை!!

      கீதா

      நீக்கு
  5. ஸ்ரீராம், கடைசி வரை சஸ்பென்ஸாகவே வைத்திருந்து தெரியாதது போல் காட்டிக் கொண்டு விட்டீர்கள். நானும் ஆரம்பம் முதலே தி/கீதா ஒரு எழுத்தாளர் என்பதை யூகித்தாலும் பானுமதியும் இதில் இருக்கிறார் என்பதைக் கடைசிப் பகுதியில் புரிந்து கொண்டேன். ஆனால் இருவர் மட்டும் தான் என்று நினைக்கவில்லை. மூன்றாவது நபர் ஸ்ரீராமாக இருக்கக் கூடும் என நினைத்திருந்தேன். இருவருக்கும் வாழ்த்துகள். இப்படி ஒரு எண்ணம் உதயம் ஆனதும் அதைச் செயல்படுத்தியதற்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா... நான் அப்படிதானே இருந்திருக்க முடியும்!!!

      நீக்கு
    2. கீதாக்கா மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
    3. கீதாக்கா மிக்க நன்றி எங்கள் இருவர் சார்பிலும். பானுக்கா வருவாங்க அப்புறம்

      நிஜமாகவே ஸ்ரீராம் எங்களுக்கு அத்தனை சப்போர்ட்டிவ்!!! எங்களுடனேயே அவரும் கருத்தில் விளையாடினார்! செம...அவருக்கு நாங்க நன்றி சொல்லணும் அதெல்லாம் அடுத்த பகுதியில் வருது எனவே இங்கு விவரிக்க வில்லை...

      கீதா

      நீக்கு
    4. நன்றி கீதா அக்கா. ஶ்ரீராம் நிறையவே ஒத்துழைத்தார்.

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை வணக்கம். ஜனநாயக கடமை ஆற்றிவிட்டு வருகிறேன். எல்லோரும் ஓட்டு போட்டு விட்டு வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பேச்சைக் கேட்டு வோட்டுப் போடப்போனா "ஒரு தடவைதான் போடமுடியும்"ங்கறாங்க!!

      நீக்கு
  7. தி/கீதா சுருக்கமாக எழுதப் பழகி விட்டார் போலும்! இனி இருவரும் சேர்ந்து இம்மாதிரி எழுதுவார்கள் என எதிர்பார்க்கலாமா?

    //நக்ஷத்திரங்கள் கேஷுவல் லீவு போட்டாலும், // என்னதான் பொருந்தி வந்தாலும் அந்த ஆங்கில வார்த்தைக்குப் பதிலாகத் தமிழில் போட்டிருக்கலாமோ? இரண்டாம் கவிதையில் குருவியின் ஓலம் நெஞ்சைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி/கீதா சுருக்கமாக எழுதப் பழகி விட்டார் போலும்! இனி இருவரும் சேர்ந்து இம்மாதிரி எழுதுவார்கள் என எதிர்பார்க்கலாமா? //

      ஹா ஹா ஹா ஹா ஹா கீதாக்கா சில கதைகள் சின்னதாவே எழுதியிருக்கேனே இதுக்கு முந்தியும்.... இருந்தாலும் பானுக்காவோடு சேர்ந்து எழுதறப்ப ரொம்பவே பயம் இருந்தது அவங்க டக் டக்குனு அழகா நறுக் நறுக்குனு விறு விறுப்பா சின்னதா அழகா சொல்லிடுவாங்க. நான் அதுக்கு ஏத்தாப்புல எழுதணுமேனு ரொம்ப ஒரு பயம், தயக்கம், பொறுப்பு எல்லாம் கலந்து கட்டி இருந்தது உண்மைதான்.

      அவங்ககிட்டக் கத்துக்கிட்டேன் நிறைய ஆனால் அதை செயல்படுத்துவதில் இருக்கே...ஹிஹிஹிஹி

      அதுவும் நான் கதை எழுதினால் அது ரொம்ப நாள் தூங்கும் அப்புறம் தான் தூசு தட்டி எடுத்து அப்போது தோன்றும் சிலவற்றை எழுதி கட் செய்து மீண்டும் அதை கொஞ்சம் மாற்றி என்று முடித்து வரவே நிறைய நாள் எடுக்கும் எனக்கு. அதனால அதுவும் அக்காவின் கதையை பாதித்துவிடுமோ என்ற ஒரு சின்ன பயம் இருந்தது.

      இன்னும் என் கதைகள் நிறைய இருக்கு பெரிதாக.....அதனாலேயே எபிக்கு அனுப்பாமல் தயக்கத்துடன் வைத்திருக்கிறேன்.

      ஏனென்றால் எல்லோருமே சிறிது சிறிதாக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். அதுவும் கதையில். எத்த்னை கட் செய்து திருத்தி அமைத்தாலும் எனக்கு அக்கலை வருவதில்லை. எனவே கூடியவரை கட் செய்து அப்படியும் பெரிதாக இருக்கிறது கதைகள்.

      தயக்கத்தில் பல உறங்கிக் கொண்டிருக்கின்றன ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    2. பார்க்கலாம். இது ஒரு பரிக்ஷார்த்த முயற்சி. அடிக்கடி பரிட்சை பண்ண முடியுமா?

      நீக்கு
    3. // //நக்ஷத்திரங்கள் கேஷுவல் லீவு போட்டாலும், // என்னதான் பொருந்தி வந்தாலும் அந்த ஆங்கில வார்த்தைக்குப் பதிலாகத் தமிழில் போட்டிருக்கலாமோ?//

      நட்சத்திரங்கள் தற்செயல் விடுப்பு எடுத்தாலும் என்று எழுதினால் சுவைக்கவில்லையே!!!!

      நீக்கு
    4. தற்செயல் விடுப்புனு எல்லாம் ஏன் எழுதணும்? நிலவோடு கோவித்துக்கொண்டு வர மறுத்த நக்ஷத்திரங்கள்/ அல்லது வெளியே தலைகாட்டாமல் ஒளிந்திருந்து எட்டி எட்டிப்பார்க்கும் நக்ஷத்திரங்கள்! என்று சொல்லி இருக்கலாமோ?

      நீக்கு
    5. வேறொன்று அப்படி எழுதி விடலாம்!

      முகிலில் முகம் மறைத்த
      நட்சத்திரங்கள்
      தைரியம்பெற்று
      வெளிவருகின்றன
      நிலவைக்கண்டதும்

      மருகிய முகில்கள்
      மழை தராமல்
      மாற்று திசையில்
      செல்கின்றன!

      நீக்கு
    6. ஆஹா, நீங்களெல்லாம் ஆசுகவி வகை! பொறாமையுடன்! எனக்கெல்லாம் தமிழே தடவல்! இதிலே கவிதை எப்படி எழுதுவேன்! :(

      இங்கே முகில்கள் மழையைப் பூரணமாகத் தராமல் வேறே திசையில் தான் போயிடுச்சுங்க! இடி மட்டும் அவ்வப்போது தலை காட்டுகிறது.

      நீக்கு
  8. ஸ்ரீராம் இரண்டாவது கவிதை மனதை என்னவோ செய்துவிட்டது! வரிகள் அட்டகாசம்...ஆனால் மனம் வேதனை..விஷுவலாகக் கவிதையை வாசித்ததால்..

    கீதா

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    எ. பியின் உறவுகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ஒரு வாரமாக வலைத்தளம் பக்கமே குடும்ப சூழ்நிலை காரணமாக வர இயலவில்லை. மன்னிக்கவும்.

    தொ. கதை எழுதியவர்களின் பெயர்கள் இன்று அறிவிப்பா? மனதினுள் இவர்களையும் நினைத்தேன். ஆனால் சொன்னது வேறு. இருவரும் வந்து வந்து கதைக்கு கருத்துரைகளை சொன்னதினால் சற்று குழப்பம் வந்து விட்டது. மிகவும் அருமையாக எழுதிய சகோதரிகளை மனமாற பாராட்டுகிறேன்.

    தொடர் கதையின் எழுத்தாளர்கள் சகோதரிகள் பானுமதி வெங்கடேஷ்வரன், கீதா ரெங்கன் இருவருக்கும் முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள். கதையை நல்லவிதமாக எழுதி சிறப்பாக முடித்திருக்கிறார்கள்.மிக மிக பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்.

    தாங்கள் காசிப்பயணம் மகிழ்வாக சென்று வந்தமைக்கும் வாழ்த்துக்கள் சகோதரரே.
    கவிதைகளை மிகவும் ரசித்தேன். அருமையாக வந்திருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருவரும் வந்து வந்து கதைக்கு கருத்துரைகளை சொன்னதினால் சற்று குழப்பம் வந்து விட்டது.//

      ஹா ஹா ஹா ஹா ஹா அதுதானே தெக்கினிக்கி!!!

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. பானுக்கா பின்னாடி வந்து சொல்லுவாங்க அவங்க சார்பிலும் நன்றி சொல்லிக்கறேன் கமலாக்கா..

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி.

      /ஹா ஹா ஹா ஹா ஹா அதுதானே தெக்கினிக்கி!!!/

      நல்ல "தெக்கினிக்கி.." உங்கள் கூட்டணி தெக்கினிக்கி அசர வைக்கிறது. ராகங்கள் பற்றி விரிவாக கதை வரும் போதே நீங்களும் ஒரு கதாசிரியர் என்ற சந்தேகம் வந்தது. அப்புறம் கருத்துக்களில் கதை பற்றிய விரிவாக பேச்சு இல்லாமல், அன்றைய பதிவை பற்றி மட்டும் அலசலாக பேசியிருக்கும் உங்கள் இருவரின் மேலும் டவுட்ஸ் வந்தது. ஆனாலும் யூகத்தை சொல்ல இயலவில்லை. காரணம் பதிவர்கள் எவரும் எழுதவில்லை என்ற க்ளு யாரோ சொன்னதாக நினைவு. (என்று, எந்த நாளில் படித்தேன் என நினைவில்லை.) எப்படியோ ரகசியம் ஒரு திருப்பமாக இருந்தது.

      கதை பிறந்த கதையும் இருவரின் எழுத்துக்களா? பிறந்து வந்த கதையை ரசிக்க ஆவலாய் உள்ளேன். இருவருக்கும் பாராட்டுக்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. கமலாக்கா ஹா ஹா உங்க யூகத்தைச் சொல்லியிருக்கலாமே...நான் எனக்கே கூட எதிர்க்கருத்து போட்ட நினைவு. ஹிஹிஹி

      அப்புறம் பதிவர் இல்லை என்று யூகித்தது ஜீவி அண்ணா.

      நன்றி கமலாக்கா.

      கீதா

      நீக்கு
    5. வாங்க கமலா அக்கா... உங்கள் கருத்துகளுக்கு எழுத்தாளர்கள் பதில் சொல்லி விட்டார்கள். இப்போது நான் இரண்டாவது வயலின்தான்!!! உங்கள் உடல்நிலை அல்லது குடும்பப் பணிகள் சரியாகிவிட்டனவா?

      நீக்கு
    6. ஒரு வாரமாக வலைத்தளம் பக்கமே குடும்ப சூழ்நிலை காரணமாக வர இயலவில்லை. மன்னிக்கவும். //

      காலையில் விடுபட்டுவிட்டது காப்பி பேஸ்ட் செய்யும் போது....இப்பத்தான் கவனித்தேன் கமலா அக்கா.

      இப்போது எப்படி உள்ளது உங்கள் குடும்பச் சூழல் எல்லாம் சரியாகிவிட்டதா? நாங்கள் எல்லோரும் பிரார்த்திக்கிறோம் அக்கா...

      ஸ்ரீராம் நீங்க ரெண்டாவது வயலினா!!! ஹா ஹா ஹா அப்ப சத்தம் கூடுதலா இனிமையா கேட்கணுமே!!!

      கீதா

      நீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஸ்ரீராம்
    குருவியின் ஓலம் மிகவும் பாதித்தது.
    இங்கேயும் வரவிருந்த மழை மேகத்தோடு நிலா உறவாடுகிறது.

    இத்தனை ராக அலசல் செய்வது கீதா ரங்கனாகத்தான் இருக்க முடியும் என்று நினைத்தேன்.
    பானு வெங்கடேஸ்வரனும் இணைந்தது

    கதைக்கு பாலன்ஸ் கொடுத்தது.
    அன்பின் நட்புகளுக்கு வாழ்த்துகள்.
    அனைவரும் நல்ல படியாக வோட் செய்து நல்லாட்சியைக் கொண்டு வாருங்கள். வாழ்த்துகள்.
    ஜெய் ராம் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா மிக்க நன்றிமா.

      பானுக்கா தான் கதைக்கு மெயின் ஆள். அவங்களோட கதைக் கரு...எல்லாமே நான் துணை நின்றதோடு சரி ஹா ஹா ஹா

      பானுக்காவும் வருவாங்க கடமை ஆற்றிவிட்டு....

      அக்காவின் சார்பிலும் இப்போ நன்றி சொல்லிக் கொள்கிறேன்

      கீதா

      நீக்கு
  11. கீதா ரெங்கன் - முதல் அத்தியாயத்திலேயே யூகித்தேன். மற்றவர் யூகிக்கவில்லை. நல்ல கதை, நன்றாக எழுதியிருந்தார்கள். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌ அண்ணா ஹா ஹா ஹா முதல் அத்தியாயம் எழுதியது பானுக்கா! அவங்களுக்கும் பாட்டு பற்றி நன்றாகத் தெரியும். ஏஞ்சலும் முதல் அத்தியாயம் வைத்து கெஸ் செய்தது இப்படி..

      விரிவாக அடுத்த பகுதியில் வரும்னு ஸ்ரீராம் சொல்லிருப்பது போல கருத்துகள் எல்லாம் வரும்.

      இப்ப எங்கள் இருவரின் சார்பிலும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் அக்கா வருவாங்க

      கீதா

      நீக்கு
  12. கவிதையில் குருவியின் மரணஓலம் மனதை உறுத்தியது...

    கதை பிறந்த கதை நாளை பார்ப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி க பி க நாளை வரலாம்...

      மிக்க நன்றி கில்லர்ஜி எங்கள் இருவர் சார்பிலும்

      கீதா

      நீக்கு
  13. இனிய காலை வணக்கம்.

    கதாசிரியர்கலள் இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட்ஜி மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு

      எங்கள் இருவர் சார்பிலும்

      கீதா

      நீக்கு
  14. ஸ்ரீராம் தலைப்பு சூப்பர்!! பொருத்தமாக!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  15. உண்மையைச் சொல்லணும்னா கீதா ரங்கனை கற்பனை செய்திருக்க மாட்டேன். அவங்க நீள எழுத்துக்குச் சொந்தக்கார்ர். சுருக்கமா பொதுவா எழுதிப் படித்ததில்லை.

    நான் கேஜிஜி சார் மட்டும் எழுதறார், ஶ்ரீராம் பங்களிப்பு கொஞ்சம் இருக்குமோன்னு நினைத்தேன்.

    கதை முடிவும் சடக்என சினிமாத் தனமாக முடிந்ததும் திருப்தி இல்லையே தவிர, தொடர்கதை அருமை.

    ராகம்லாம் கேஜிஜியின்்கைவண்ணம் என்றே நம்பினேன், கீதா ரங்கன் நடை இல்லாத்தால்.

    இருவரையும் பாராட்டுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவங்க நீள எழுத்துக்குச் சொந்தக்கார்ர். சுருக்கமா பொதுவா எழுதிப் படித்ததில்லை.// நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா ஹா ஹா

      இங்கு எபியில் எனது சின்னக் கதைகள் அந்த தாத்தா பாட்டிக்கு எழுதின 2 கதைகள், அப்புறம் அம்மா கதை எல்லாம் சின்னதுதானே.....இருந்தாலும் கீதாக்காவுக்கு கொடுத்திருக்கேன் பாருங்க ஹிஹிஹிஹி அதான்

      எனக்குச் சுருக்கும் கலை வருவதில்லை நு தோணுது நெல்லை. ஹிஹிஹிஹி...அது பெரிய கலை. மீக்கு அது ஜீரோ!!

      அப்படிச் சுருக்கும் போது நான் என்ன நினைத்து எழுதினேனோ அது ஒரு சில உணர்வுகள் ஜீவன் போகுதோனு எனக்குத் தோன்றியதால் சில கதைகள் அப்படியே தூங்குது நெல்லை...ஹா ஹா ஹா தூங்கட்டும் பார்ப்போம் எப்ப முடியுதோ அப்ப எழுப்பி விடலாம்...

      இந்தக் கலை எனக்கு டக்குனு வராததால், எல்லோரும் சிறிதாக என்று எதிர்பார்ப்பதால் இப்போது பதிவு, கதைகள் எழுதுவதில் தயக்கம்....அதிலிருந்து மீண்டு வர வேண்டும்...

      மிக்க நன்றி நெல்லை. பானுக்கா வந்து நீங்க கதை பற்றிச் சொன்னதுக்கு அழகா பதில் தருவாங்க!!!

      கீதா

      நீக்கு
    2. கீதா ரங்கன் - நான் எழுதியது குறையாக அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை, கதை எழுதுவதில். ஆனால் தொடர்கதை உங்கள் பாணியில் இருந்ததுமாதிரி எனக்குத் தோன்றவே இல்லை. கர்னாடிக் ராகங்கள் வந்ததால் நான் கேஜிஜி சார்தான் எழுதுகிறார், ஸ்ரீராம் பயணத்தில் என்பதால் அவருடைய நடை இல்லை என்று நினைத்தேன். நான் எப்பவாவது கதை எழுதினால் 'வளவள'தான். ரிஷபன் சார், 'வள வள'ன்னு எப்போதுமே எழுதிப் பார்த்ததில்லை, உரையாடல்களில் நிறைய புரியவைப்பார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நடை.. (எனக்கு மனதில், ஸ்ரீராமுக்கு கோவில் புராணங்கள் அந்த மாதிரி விளக்கமாக எழுத வராது என்பது எண்ணம். அவர் எழுத்து எல்லோரும் விரும்பிப் படிக்கும்படி இருக்கும். ஹாஹா)

      நீக்கு
    3. பாராட்டுக்கு நன்றி நெல்லை.
      //கதை முடிவும் சடக்என சினிமாத் தனமாக முடிந்ததும்//
      பாஸிட்டிவ் ஆகத்தான் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். தவிர எங்கள் கதாபாத்திரங்கள் எல்லோரும் நல்லவர்கள். சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் வில்லன். அதை எவ்வளவு இழுக்க முடியும்?

      நீக்கு
    4. ஆஹா நெல்லை!! நான் குறையாகவே எடுத்துக்க மாட்டேன் நெல்லை. எப்போதுமே!

      எல்லாவற்றையுமே அதன் மறுபக்கமான பாசிட்டிவ் சைடைப் பார்ப்பேன் நெல்லை. நோ க்ரீவன்ஸஸ். எனக்கு அந்தக் கலை வரமாட்டேங்குதேனுதான் எனக்கே உள்ள குறை ஹா ஹா ஹா...

      எனக்குமே தோன்றும் ரிஷபன் அண்ணா, பானுக்கா, ஸ்ரீராம் மாதிரி டக் டக்குனு சொல்லிப் போணும்னு நினைப்பதுண்டு....ஹிஹி ஆனா வரமாட்டேங்குதே...

      நெல்லை எனக்கும் கோயில் புராணம் எழுத வராது. சுத்தமாக எழுத வராது. ஏனென்றால் எந்தக் கதையும் நினைவில் நிற்காது ஹிஹிஹிஹி...குறிப்பு.எழுதி வைத்தால்தான். அதுவும் ஸ்வாரஸ்யமாக துரை அண்ணா, கீதாக்கா, கோமதிக்கா பானுக்கா, அனு, ராஜி, உங்களைப் போல எழுத வராது. என்னவோ தெரியவில்லை நான் எந்தக் கோயில் சென்றாலும் அதன் கதையை அறிந்ததும் இல்லை. அங்கு அமைதியாக இருந்துவிட்டு, கலையை ரசித்துவிட்டு முடிந்தால் கிளிக்கிக் கொண்டு வருவதோடு சரி.

      ஸ்ரீராம் எழுதிவிடுவார். அவர் எழுத்து அது தனி...புராணத்துலயும் கூட அவர் ஸ்டைல் தெரியும்!!

      கீதா

      நீக்கு
    5. //ஶ்ரீராம் பங்களிப்பு கொஞ்சம் இருக்குமோன்னு நினைத்தேன்.//

      எதை வைத்து அந்த கெஸ் என்று அறிந்து கொள்ள ஆவல் நெல்லை!

      //ஸ்ரீராம் பயணத்தில் என்பதால் அவருடைய நடை இல்லை என்று நினைத்தேன்.//

      ஆனால் கதை அதற்கு முன்னரே தொடங்கி விட்டதே...!


      //ஸ்ரீராமுக்கு கோவில் புராணங்கள் அந்த மாதிரி விளக்கமாக எழுத வராது என்பது எண்ணம். //

      ஹிஹிஹி.....


      //அவர் எழுத்து எல்லோரும் விரும்பிப் படிக்கும்படி இருக்கும். ஹாஹா//

      சரி, சரி... சமாதானமாயிட்டேன்!!!

      நீக்கு
    6. @கீதா

      //அவர் எழுத்து அது தனி...புராணத்துலயும் கூட அவர் ஸ்டைல் தெரியும்!!//

      ஹிஹிஹிஹிஹிஹி.....

      நீக்கு
    7. @கீதா ரங்கன் - நீங்க பாராட்டி எழுதுனதுனால (புராணத்திலயும்...), ஸ்ரீராம், 'பவிஷ்ய புராணப் பிரகாரம், இந்த காசி ஷேத்திரத்தில் குயலவன் என்பவன், தன்னுடைய படகை கங்கைக் கரையில் விட்டுவிட்டு நடந்து வந்தபோது, கால் இடறி கீழே விழுந்தான். அப்போது அந்த இடத்தில் கையளவு சிவப்பு நிறக் கல் ஒன்றைக் கண்டு-இல்லாட்டி, ஸ்டாண்டர்டா, அவன் வளர்த்துவந்த பசு ஒரு இடத்தில் நின்று பால் சொறிவதைப் பார்த்து, அந்த இடத்தைத் தோண்டியபோது கிடைத்ததுதான் இப்போது நாம் காசி விசுவநாதரின் சிலை...கலியுக ஆரம்பத்தில் வசிஷ்டர்.......' என்றெல்லாம் எழுதமாட்டார்னு நான் நம்புகிறேன்.ஆஹாஹா)

      நீக்கு
    8. ஏற்கெனவே இன்று தொடங்கி விடலாமா என்று நினைத்த பக யை இந்த மாதிரி பயமுறுத்தியதால்தான் ஒத்தி வைத்திருக்கிறேன். இது வேறயா? ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே என்று தொடங்கவா? யார் படிப்பார்கள்!

      நீக்கு
  16. அம்மாவுக்கும் சகோதரிக்கும் வாழ்த்துகள்... பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி எங்கள் இருவர் சார்பிலும். அக்கா வருவாங்க...பின்னர்

      கீதா

      நீக்கு
    2. நன்றி டி.டி. உங்கள் ஊரில் அம்மாவுக்கும் சகோதரிக்கும் நான்கு வயதுதான் வித்தியாசம் இருக்குமா?

      நீக்கு
    3. பானுக்கா இதை நான் காலையில் சொல்ல நினைத்து விட்டுவிட்டேன் !!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  17. குருவியின் ஓலம் -
    கொடூரர்களுக்குக்
    கேட்பதேயில்லை
    செவிப்பறை இருந்தும்!..

    வாசிப்பு அறியாததால்
    மரத்தின் வாக்குமூலத்தை
    வாசிக்க இயலவில்லை..
    இயற்கையை சுவாசிக்க
    முடியவில்லை!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​வாசிக்க முடியாதவர்கள் இல்லை அவர்கள். இயற்கையை நேசிக்கத் தெரியாதவர்கள்!

      நீக்கு
  18. இரண்டு கதாசிரியர்களும் அருமையாக கதையை நகர்திக்கொண்டு போனார்கள். படிக்கும்போது, இரண்டு பேர் கதையாசிரியர்கள் மாதிரியே தெரியவில்லை.
    இருவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கும்போது, இரண்டு பேர் கதையாசிரியர்கள் மாதிரியே தெரியவில்லை. //

      மிக்க நன்றி சொக்கன் சகோ. பானுக்காவும் இதைச் சொன்னார்கள்.

      எங்கள் இருவரின் சார்பில் மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
    2. //படிக்கும்போது, இரண்டு பேர் கதையாசிரியர்கள் மாதிரியே தெரியவில்லை.// நான் முதல் அத்தியாயம் எழுதி முடித்து விட்டு கீதா ரங்கன் தொடர்ந்த பொழுது நானும் இதைத்தான் சொன்னேன்.
      நன்றி சொ.சுப்பிரமணியன்

      நீக்கு
  19. இரண்டு கவிதைகளும் அருமை.
    குருவியின் அழுகை, மரத்தின் மரண வாக்குமூலம் படிக்கவே கஷ்டமாய் இருக்கிறது.

    பானுமதி வெங்க்டேஸ்வரன் அவர்களை கண்டு பிடித்து விட்டேன்.
    அப்புறம் கீதா ரெங்கனும் இருந்தார், ஸ்ரீராம் அப்பா எழுதியோ கதையோ என்ற எண்ணமும் இருந்தது.

    இருவருக்கும் வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள். எந்த பகுதி யார் எழுதியது என்று சொன்னால் நாம் ஊகித்தது சரியா என்று கண்டு பிடிக்க உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் எங்கள் இருவர் சார்பிலும். நீங்கள் கேட்டிருப்பது எப்பகுதி யார் எழுதியது என்பது அடுத்த பகுதியில் தெரியவரும் கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    2. உங்கள் ஊகம் சரியாகத்தான் இருக்கும்.ஆரம்பத்திலிருந்தே சிறப்பான பின்னூட்டங்களை அளித்து வந்தீர்கள். மிக்க நன்றி.

      நீக்கு
    3. நன்றி கோமதி அக்கா.

      //ஸ்ரீராம் அப்பா எழுதியோ கதையோ என்ற எண்ணமும் இருந்தது.//

      ஆச்சர்யமான, எதிர்பாராத கற்பனை.

      நீக்கு
  20. தில்லையகத்து கீதாஎழுத்தில் தெரிந்தார் ஆனால் பானுமதி நினைக்கவே இல்லை கதை கீதாவு எபி குழுவும் இணைந்தது என்றே நினைத்தேன்

    பதிலளிநீக்கு
  21. ஸ்ரீராம் கவிதைகளில் பின்னுகிறீர் சொல்லிச் செல்லும் விதம் அட்டகாசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி எம் பி ஸார்... ஆனால் இந்தக் கவிதைகள் எழுதி மூன்று நான்கு வருடங்கள் ஆகின்றன. அதிகம் பேர் முன்னர் படிக்காததால் அதை இங்கு போட்டு ஏமாற்றுகிறேன்!!!!

      நீக்கு
  22. மரத்தின் மரணமும், குருவியின் ஓலமும் மனதை சங்கடப்படுத்தி விட்டது.

    பதிலளிநீக்கு
  23. கதையை பாராட்டிய அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  24. ஓட்டு போடலாம் என்று சென்றோம். எங்கள் பெயர் ஓட்டர்ஸ் லிஸ்டில் இல்லாததால் ஓட்டு போட முடியவில்லை. தலைவலிதான் மிச்சம். இங்கே தங்கியிருக்கும் வீட்டில் தண்ணீர் வரவில்லை, ஏ.ஸி. வேலை செய்யவில்லை. நிதானமாக பதில் அளிக்கிறேன். மன்னித்து கொள்ளுங்கள்.
    பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பானுக்கா ரொம்பவே கஷ்டம்தான் இல்லையா....எங்களுக்கும் எங்கள் பெயர் அங்கு லிஸ்டில் இல்லைன்னுட்டாங்க. நாங்க போகவும் இல்லை...

      எங்கிருந்தாலும் வோட் போடுவதற்கான சிஸ்டம் வர வேண்டும்.

      இங்கு வந்து எதையும் மாற்றவும் முடியலை....புதுசா ஒரு இடத்துக்குப் போகும் போது ரென்டல் அக்ரீமென்ட் தவிர வேறு எதுவும் நம் பெயரில் இருக்காது அதுவும் அப்பெயர் கணவர் பெயரில் மட்டுமே இருக்கும். அதுவும் கூட ஆதார் கார்டை ஆன்லைனில் அட்ரெஸ் மாற்றலாம் என்றால் ரென்டல் அக்ரீமென்ட் அக்செப்ட் பண்ணலை. அப்புறம் காஸ் பில்ல்லும் அக்செப்ட் செய்யலை. ஒரு சிலதுக்கு இது எதுவுமே வொர்க் அவுட் ஆகலை. அதுவும் எனக்கு அட்ரெஸ் ப்ரூஃப் என்ன கொடுக்க முடியும்? ஒன்றுமே கிடையாது. சரி நேரடியாகச் சென்றுமாற்றலாம் என்றால் அதற்கு ஆயிரெத்தெட்டு டாக்குமென்ட்ஸ் கேக்கறாங்க. ரொம்பவே ப்ரொசீஜரலா இருக்கு.

      இந்த சிஸ்டம் எல்லாம் இன்னும் சிம்ப்ளிஃபை பண்ண வேண்டும். அட போங்கப்பா நீங்களும் உங்க சிஸ்டமும்னு விட்டாச்சு.

      கீதா

      நீக்கு
    2. நாங்க இங்கே வந்ததுமே வீட்டு விலாசத்தை வைத்து எரிவாயு இணைப்பு வாங்கினோம். அதற்கு முன்னால் வங்கிக்கணக்கைச்சென்னையிலிருந்து மாற்றி இருந்தோம். அதுவும் உதவியது! பின்னர் மெதுவாக எரிவாயு இணைப்பு, வங்கிக்கணக்கு ஆகியவற்றை வைத்து ரேஷன் கார்ட், வோட்டர் ஐடி, ஆதார் கார்ட் ஆகியவற்றை மாற்றினோம். பின்னர் பாஸ்போர்ட்புதுப்பிக்கையில் பாஸ்போர்ட்டிலும் விலாசத்தை மாற்றி விட்டோம். ரேஷன்கார்டில்பொருட்கள்வாங்குவதில்லை. சும்மா ஓர் அடையாளத்துக்குத் தான் ரேஷன் கார்ட். அந்த வீட்டிலிருந்து இங்கே மாற்றி வந்ததும் அதே போல் எல்லாவற்றையும் மாற்றி விட்டோம். பிரச்னை வரவில்லை.

      நீக்கு
    3. கீசா மேடம்... உங்களுக்கென்ன.... செயலில் புலி வீட்டில் இருக்கார். ஒண்ணும் தெரியாத நானெல்லாம் என்ன செய்யறது? இப்போ மெதுவா கன்னட எழுத்துக்களைக் கத்துக்க ஆரம்பிக்கணும்.

      நீக்கு
    4. எடுத்த காரியத்தை முடிக்கும் வரை இரண்டு பேரும் வேறே வேலை பற்றிப் பேச மாட்டோம். அதோடு புது வீட்டுக்கு வந்ததும் ஆதார் கார்டில் விலாசம் மாற்ற நண்பர் ஒருத்தரும் உதவினார்.

      நீக்கு
  25. சென்னையை ஏன் இப்படி வறுத்தெடுத்திருக்கிறீர்கள்.. அதுவும் ஒரு பட்டணந்தானே!

    குருவியின் ஓலம் கேட்கிறது. போதாக்குறைக்கு மரணவாக்குமூலம் வேறா கேட்கணும். மரங்கள் இந்த நாட்டில் பாவப்பட்ட ஜீவன்கள்.

    தொடர்கதைகளை நான் தொடர்வது அபூர்வம். அவ்வப்போதே படித்தேன். நாடகீயமாக அல்லது சட்-னு முடிக்கப்பட்டுவிட்டதா! முடிவு அத்தியாயத்திற்கு நான் வரவில்லையே..
    இடையிடையே படித்ததில் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. மர்ம எழுத்தாளர்கள் யார் என்பதை மற்றவர்கள் எப்படி யூகிக்கிறார்கள் எனக் கவனித்துவந்தேன். அப்பாடா! பூனை, பையிலிருந்து வெளிவந்துவிட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா மிக்க நன்றி எங்கள் இருவரின் சார்பிலும்

      அண்ணா மரங்களுடன் அதைச் சார்ந்து இருக்கும் ஜீவராசிகள் அனைத்துமே பாவப்பட்ட ஜீவன்கள் எக்செப்ட் மனுஷங்க. அவங்கதானே மரங்களையும் மத்த ஜீவ ராசிகளையும் படுத்துவது...மனுஷனுக்கும் தேவை மரங்கள் நு தெரிஞ்சும் தனக்குத் தானே குழியும் பறித்துக் கொண்டு அந்த மண்ணைத் தன் தலையிலேயே போட்டும் கொள்கிறான்...

      ஸ்ரீராமின் இக்கவிதை அசத்தல்..ஆனால் துளைக்குது...

      கீதா

      நீக்கு
    2. வாங்க ஏகாந்தன் ஸார்... சென்னை தகிக்கிறது. சென்ற நவம்பர் டிசம்பரில் பெயருக்கு கூட ஒரு மழை கிடையாது.

      நீக்கு
  26. //அப்பாடா! பூனை, பையிலிருந்து வெளிவந்துவிட்டது!// பூனைகள் பையிலிருந்து வந்து விடட்டன.. ஹாஹாஹா. நன்றி

    பதிலளிநீக்கு
  27. இங்கு நம் வீட்டிற்கு எதிரில் ஒரு பெரிய புங்கை மரம் இருக்கு. நம் வீட்டிற்குத் தொட்டடுத்த வீட்டினர் அந்த மரத்தடியில் குப்பைகளை ஒதுக்கிவிட்டு அதற்குத் தீயும் வைக்கிறார்கள். நான் பயந்து மனம் நொந்தும் போனேன் ஹையோ அந்த மரம் பிழைக்க வேண்டுமே என்று. தீ பற்றிக் கொண்டுவிட்டால்? மரத்தின் அடிப்பகுதி முழுவதும் ஒரு பக்கம் கருகி....என்ன சொல்ல....பாவம்...ஒரு வேளை புங்கைமரப்பட்டை தீப் புண்களை ஆற்றும் சக்தி கொண்டதுன்றதுனால தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளுமோ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //..அந்த மரம் பிழைக்க வேண்டுமே என்று. தீ பற்றிக் கொண்டுவிட்டால்? மரத்தின் அடிப்பகுதி முழுவதும் ஒரு பக்கம் கருகி..//
      அடிக்கடி மனிதம்.. மனிதம் என வார்த்தைகளை உதிர்த்துப் பார்த்துக்கொள்கிறான் மனிதன். ஆனால் குப்பையைக் கொளுத்துகிறேன் என்று பக்கத்தில் பச்சையாக வாழ்வதையும் பதைபதைக்கவைத்துவிடுகிறான். அழியக்கூடாததும் அழிந்துவிடுமே நம்முடைய அறிவுகெட்ட செயலால் என்கிற பிரக்ஞை ஏதுமில்லை. கேட்டால், அன்பே சிவமென்பான்!

      நீக்கு
    2. // கேட்டால் அன்பே சிவமென்பான்...//

      அன்பே சிவம் என்று உணர்ந்தவன் இப்படியெல்லாம் செய்வதில்லை....

      கலி யுக அரக்கர்கள் புதிதாய் தோன்றியிருக்கின்றார்கள்..

      நீக்கு
    3. //பாவம்...ஒரு வேளை புங்கைமரப்பட்டை தீப் புண்களை ஆற்றும் சக்தி கொண்டதுன்றதுனால தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளுமோ//

      அடடே....

      நீக்கு
    4. அன்பே சிவம் என்று உணர்ந்தவன் இப்படியெல்லாம் செய்வதில்லை....//

      அதே அதே துரை அண்ணா...

      கீதா

      நீக்கு
    5. இதே மாதிரி எனக்கும் நாய் வளர்ப்பவர்களைப் பற்றித் தோன்றியிருக்கிறது. தவறாக நினைக்காதீர்கள். காலைல நடந்தா, அவனவன் (பெண்களும் அடக்கம்) அவன் வளர்க்கிற நாயை வாக்கிங் கூட்டிக்கிட்டு வர்றேன்னு ரோட்டுல கண்ட கண்ட இடங்கள்ல உக்காத்திடறான். ஃப்ரான்ஸ்ல, நாயை வெளில கூட்டிக்கிட்டு வந்தா, அள்ளிப்போட பையும், அள்ளறதுக்கான பிளாஸ்டிக் சட்டுவமும் இல்லாம வெளிய வரமுடியாது.

      ஊரை அசிங்கப் படுத்தி, போற வர்றவங்களை துன்பப்படுத்தி அப்படி எதுக்கு நாயை வளர்க்கணும்? தெருவில் திரிந்துகொண்டிருக்கும் ஏழை பாழைகளுக்கு உதவக்கூடாதா? சக மனிதர்களிடம் இல்லாத அன்பு, நாயிடம் காண்பிப்பது போலித்தனமில்லையா? இல்லை, 'நாய்' வளர்ப்பதும், 'என்னிடம் அல்சேஷன்... உன்னிடம் சாதாரண நாய், என் நாய் இம்போர்டட்' என்று பெருமையடித்துக்கொள்ளவா?

      நீக்கு
    6. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... இதுவும் ஒரு கோணம்தான்!

      நீக்கு
    7. எல்லா வெளிநாடுகளிலும் நெல்லைத்தமிழர் சொல்லி இருக்கிறாப்போல் வளர்ப்புப் பிராணிகள் மலம் கழித்தாலோ, அல்லது நம்பர் ஒன் போனாலோ அவற்றை நாம் அள்ளிப் போட்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்து விட்டுத் தான் போகணும். யு.எஸ்ஸில் நிறையப் பார்த்திருக்கேன்.

      நீக்கு
    8. அடையாறுல, நாயைக் கூட்டிக்கிட்டு வாக்கிங் போறவங்களோட ஒரே எய்ம், அவங்க வீட்டைச் சுத்தமா வச்சிக்கிட்டு தெருவை அசிங்கம் பண்ணறதுதான். இதுல பெண்களும் அடக்கம். இதுல பெருமைக்கு அதுகிட்ட பேசுவாங்க. இவங்களுக்கும் குப்பத்து ஜனங்களுக்கும் என்ன வித்தியாசமோ...

      நீக்கு
  28. ஸ்ரீராம் ஜி கவிதைகள் மிக மிக நன்றாக இருக்கின்றன. ரசித்தேன். உங்களுக்குக் கவிதை கை வந்த கலையாக இருக்கிறது.

    சென்னையின் வெயிலின் கடுமையை அழகாகச் சொன்ன நேரத்தில் மரம் மற்றும் குருவியின் வேதனையைச் சொன்ன கவிதையும் அருமை.

    கதை எழுதியவர்கள் யாரென்று பார்த்ததும் ஆச்சரியம். கீதா சொல்லவில்லை. என்னாலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்.

    எங்கள் ஊரில் வோட்டு 23 ஆம் தேதிதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  29. கீதா பானு இல்லை பானு கீதா எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அந்த இரட்டையரின் இணைந்த கரங்களுக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மிக்க நன்றி ஜீவி அண்ணா உங்களின் வாழ்த்துகளுக்கு எங்கள் இருவர் சார்பிலும்

      கீதா

      நீக்கு
  30. நேற்று இங்கு நல்ல மழை இரவு. இரு நாட்களாவே மழை மாலையில் பெய்கிறது. நார்மலாகவே வெயில் பகலில் இருந்தாலும் இரவு அத்தனை கடினமாக இல்லை ஃபேன் போட்டுக் கொண்டால்.

    நேற்று நல்ல மழை இரவு வரை நீண்டதால் அதுவும் இடி மின்னலோடு....பவர் கட். இரவு வெகுநேரத்திற்குப் பிறகுதான் வந்தது. அப்புறம் இங்கு வந்து பார்க்க முடியவில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  31. துளசிதரனுக்கும், ஜீ.வி.சாருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  32. கதாசிரியர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். அவர்களின் தகுதிகளை முன்வைத்து எழுதிய விதம் அருமை. பாராடடுகள்.

    பதிலளிநீக்கு
  33. நான் ஆரம்பத்திலேருந்தே கீதா ரெங்கன் அப்புறம் பானுக்கா இவங்க ரெண்டு பேருமே நிச்சயம் எழுதியிருக்காங்கன்னு கன்பார்ம் பண்ணி வச்சிருந்தேன் கதை எழுதிய ஒரு வார்த்தையில் நெல்லை அப்புறம் உங்களை சேர்த்தேன் ஸ்ரீராம் .அதுவும் ஆசிரியர்கள் அப்படினு / ஆனா, ஏன் அவங்க அப்புறம் ஸ்ரீராமை உள்ள கொண்டு வந்தாங்கனு தெரியலை.//..இதுக்கு காரணம் மெயிலில் டைப்பி ப்ளூ லெட்டர்ஸில் நீங்க தானே எழுதுவீங்க உங்க பதிவு பெரும்பாலும் அப்படித்தான் படிச்ச நினைவு :)
    ஆனா பானுக்காவும் கீதாரெங்கனும் வித்யாசமே காட்டுமே ஒரே ஆசிரியர் எழுதினப்படி வருமோ அப்படி தான் எழுதியிருக்காங்க ..இருவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!