எனக்கு ‘நெல்லைத்தமிழன் ரெசிப்பி’ என்று எழுதத் தயக்கமா இருக்கு. ரசமலாய் செய்தது என் பெண். நான் அவள் இதனைச் செய்த அன்று ஊரில் இல்லை. நான் சென்ற ஊரில் லட்டு, பலாப்பழம் இத்தியாதி சாப்பிட்டுவிட்டு வந்த எனக்கு, ரசமலாய் கொடுத்தாள். எப்படி இருக்குப்பா என்று கேட்டாள். எனக்குத் தான், யாரையாவது பாராட்டுவது என்றால், என் பேக்கெட்டில் இருக்கும் பணத்தைக் கொடுப்பதுபோன்று உணர்வேனே...
அதுனால அவள்ட, ‘பரவாயில்லை. Not Bad” என்றேன். சிறிது நேரம் கழித்து வந்தவள், அதுல என்ன ப்ராப்ளம்னு கேட்டா. நான் சொன்னேன், ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. நீ வேணும்னா இப்போ அம்மாகிட்ட நீ எப்படின்னு கேளு, அவ உடனே ‘வாவ்..ஆஹா…ஓஹோ..உன்னை மாதிரி ஆளுண்டா செல்லம்’ என்றெல்லாம் சொல்லுவா, அப்புறம் எங்கிட்ட வந்து அதே கேள்வி கேட்டா, ‘ஏதோ ஓகே..’ என்றுதான் சொல்வேன். பொதுவா பசங்களைப் பாராட்டுவது என் வழக்கமில்லையே" என்றேன். (எப்போதும் சொல்லும் 'You are incorrigible' என்று சொன்னாள்… ஹா ஹா ஹா)
ரசமலாய் ரொம்ப நல்லா இருந்ததால், அவள்ட, படம்லாம் எடுத்தயா, இருந்தால் கொடு, நான் எங்கள் பிளாக்குக்கு எழுதறேன் என்றேன். ரசமலாய் ரொம்ப நல்லா வந்திருந்ததால அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சி. உடனே எடுத்தவரை படங்களைப் பகிர்ந்துகொண்டாள். எல்லா ஸ்டெப்ஸையும் படமா எடுக்கலைப்பா, அம்மா, ஒரு மணிநேரத்துக்குள்ள பண்ணிடணும், உனக்கு நிறைய படிக்கவேண்டியிருக்கு” என்று சொல்லிட்டா என்றாள்.
ஏற்கனவே நான் நீ செய்த ஆப்பிள் Pie எழுதி முடிக்கலை என்றேன். அதற்கு அவள், இதைவேணா முதலில் எழுதுங்கோ என்று சொல்லி, என்னிடம் ஸ்டெப்ஸ்லாம் சொன்னா. அதனால் உடனே ‘ரசமலாய்’ பதிவு எழுதி எ.பி.க்கு அனுப்பிவிட்டேன்.
பனீருக்கு (ரசகுல்லா) தேவையானவை
பனீர் செய்ய
பால் ½ லிட்டர்
1 மேசைக் கரண்டி தண்ணீர்
1 மேசைக் கரண்டி வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு
கார்ன் ஸ்டார்ச் ¼ தேக்கரண்டி
பனீர் உருண்டையை (ரசகுல்லா) போட்டுவைக்கும் பால் செய்ய
பால் ½ லிட்டர்
குங்குமப் பூ – சிறிது. இவற்றைப் போட்டால் சிறிது மஞ்சள் நிறம்தான் வரும். அதிகமாக வேண்டுமென்றால் சிறிது நிறமி சேர்க்கணும்.
ஏலக்காய் பவுடர் – புதிதாகப் பொடித்தது ¼ அல்லது ½ தேக்கரண்டி
பிஸ்தா – 6 (இதனை சிறிது சிறிதாக கட் செய்யணும்)
பாதாம் – 6 (இதனையும் சிறிது சிறிதாக கட் செய்யணும்)
ஜீனி – ½ கப்
பனீர் உருண்டையைக் கொதிக்கவைக்கும் சிரப்புக்கு
ஜீனி 1 கப்
தண்ணீர் 3 கப்
வெந்த ரசகுல்லாக்களை குளிர்விக்க
ஐஸ் கட்டிகள் கொஞ்சம்
Note: அது என்ன, ரசமலாய், ரசகுல்லாவாக எழுதியிருக்கீங்கன்னு கேட்காதீங்க. எல்லாம் செய்துமுடிக்கும்போதுதான் அது ரசமலாய். இடையில் ரசகுல்லாதான்…ஹா ஹா ஹா ஹா ஹா
செய்முறை
½ லிட்டர் பாலை சூடுபடுத்தவும். நன்றாக கொதித்து மேல் எழும்பும் நிலை ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைக்கவும்.
ஒரு சில நிமிடங்கள் காத்திருக்கவும். அதாவது நம் விரலை (சுத்தமான விரல்) பாலில் விடமுடியும் பதம்.
இதற்கிடையில் 1 மேசைக்கரண்டி தண்ணீர் மற்றும் 1 மேசைக்கரண்டி வினிகரையும் கலந்துவைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையை பொறுக்கும் சூட்டில் உள்ள பாலில் விடவும்.
இதனை நன்கு கலக்கவும். கொஞ்சம் திரிதிரியாக ஆகும்.
இப்போ ஒரு பாத்திரத்தில் மேல் மெல்லிய துணியைக் கட்டி, அதில் இந்தக் கலவையை விடவும். துணி, இதனை நன்கு வடிகட்டிவிடும்.
பிறகு அதில் தண்ணீர் விடவும். கொஞ்சம் கையால் கலந்துவிடவும். இதுமாதிரி ஒருமுறைக்கு இருமுறை செய்யவும். இது, வினிகரின் வாசனையையையும், அதிக புளிப்புச் சுவையையும் நீக்கிவிடும்.
இப்போ துணியை சிறிது பிழிவதுபோல ட்விஸ்ட் செய்தால், பனீர், ஒரு பந்துபோலாகும். அதில் உள்ள தண்ணீரும் போய்விடும்.
சரி..இப்போ ரசமலாயைப் போட்டுவைக்கும் பால் தயாரிப்பு வேலையைப் பார்ப்போம்.
அரை லிட்டர் பாலில் குங்குமப்பூ சேர்க்கவும். பாலைச் சூடுபடுத்தவும்.
அத்துடன் ஏலக்காய் பொடியும், பாதாம் பிஸ்தா பொடியையும் (சிறிது சிறிதாக கட் பண்ணினது) சேர்க்கவும். தேவையென்றால் உணவுக்கான நிறமியையும் (மஞ்சள் நிறம்) சேர்க்கவும்.
பாலை மெதுவாக கிளறவும்
பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் அனலைச் சிறிதாக்கிவிட்டு ஜீனியைச் சேர்க்கவும். (1/2 கப்).
ஜீனி கரைந்ததும், அடுப்பை அணைத்துவிடவும்.
இந்தக் கலவை நீர்க்க இருக்கும். துளிகூட பாகு பதம் இருக்காது. இது முக்கியம்.
இப்போ ரசகுல்லாக்கள் செய்து அதனை வேகவைப்பதைப் பார்ப்போம்.
தயாரித்த பனீரை நன்றாகப் பிசைந்து நன்றாகச் சேர்ந்த சப்பாத்தி/மைதா மாவு பதத்துக்குக் கொண்டுவரணும். இப்படிச் செய்யவில்லை என்றால், அதனைச் சிறிது சிறிதாக உருட்ட முடியாது. சிதறிவிடும்.
இதோடு, சிறிது (1/4 தேயிலைக்கரண்டி) கார்ன் ஸ்டார்ச் சேர்க்கவும். இது பனீரை இயைந்திருக்கச் செய்யும். (hold it together).
பிறகு நன்கு பிசையவும்.
அதிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து உருட்டி, உருண்டையாக ரசகுல்லா போன்று (ஜாமூன் போன்று) உருட்டவும். இதை ஒரு தட்டில் வைக்கவும். என் பெண், சிறிய சைஸில் உருட்டினாள் (அம்மணிக் கொழுக்கட்டையில் பாதி சைஸ் போன்று).
இதற்கிடையில், கடாயில், 1 கப் ஜீனி, 3 கப் தண்ணீர் சேர்த்துச் சூடுபடுத்தவும். தண்ணீர் கொதிக்கும் நிலைக்குப் போகணும்.
அதில், உருட்டி வைத்துள்ள ரசகுல்லாக்களைப் போடவும்.
கடாயை மூடிவைக்கவும். அவ்வப்போது திறந்து பாருங்கள்.
கொதித்து (வெந்து) உருண்டைகள் அளவில் இருமடங்காகி இருக்கும்.
இப்போ அடுப்பை அணைத்துவிடவும்.
இன்னொரு பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அதில் ஜீனி/தண்ணீர் சேர்த்த சிரப்பை (அதில்தான் பனீர் உருண்டைகளைக் கொதிக்கவிட்டிருந்தோம்) சேர்க்கவும்.
அதில் இந்த வெந்த உருண்டைகளைப் போடவும்.
தொடும் அளவு சூடு குறைந்ததும், அதனை எடுத்து சிறிது பிழிந்துவிட்டு (அப்போதான் ஜீனி சிரப் அதைவிட்டு வெளியேறும்) முன்னரே தயாரித்து வைத்திருக்கும் பாலில் (குங்குமப்பூ பாதாம் பிஸ்தா போட்ட பால்) அதனைப் போடவும்.
அந்த உருண்டைகள் பாலை ஈர்த்துக்கொண்டுவிடும்.
எல்லா உருண்டைகளையும் போட்டபிறகு, இதனை சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்தால், அருமையான ரசமலாய் தயார்.
குளிர்சாதப் பெட்டியில் வைக்கும் முன்பு, இன்னும் சிறிது குங்குமப்பூ மேலாகத் தூவினால், அது மெதுவாக அதன் நிறத்தை இழந்து, ரசமலாய் பார்க்க ரொம்ப அழகாகவும் இருக்கும்.
செய்முறைதான் ஏதோ நிறைய ஸ்டெப்ஸ் இருப்பதுபோலத் தோன்றும். என் பெண், ஒரு மணி நேரத்துக்குள் இதனைச் செய்துவிட்டேன் என்று சொன்னாள். (அவள் அம்மா, ஸ்டாப் வாட்ச் வைத்தாளாம்).
எனக்கு பஹ்ரைனில் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்கும் கடையில் ரசகுல்லா, ரசமலாய் சாப்பிட்ட நினைவு வந்துவிட்டது. அதிலும் சில நேரங்களில் ஃப்ரெஷ் பாலில் செய்வார்கள் (விலை கொஞ்சம் அதிகம்). அது இன்னும் சுவையாக இருக்கும்.
நீங்களும் செய்துபாருங்க.
வாழ்க நலம்...
பதிலளிநீக்குநலமே விளைக...
நீக்குஅன்பின் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குகீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் செந்தமிழ் வணக்கம்.. நல்வரவு....
காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். உங்களோடுஇணைந்து அனைவரையும் நானும் வரவேற்கிறேன்.
நீக்குதுரையோடும், ஶ்ரீராமோடும் சேர்ந்து நானும் அனைவரையும் வரவேற்கிறேன். நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
நீக்குவணக்கம் அனைவருக்கும்.... இணையத்துக்கு வரும் நேரம் ரொம்பவும் குறைந்துவிட்டது. பலரது தளத்துக்குச் செல்லவே இல்லை. மனநிலையை உற்சாகப்படுத்தும், கலாய்க்கலாம்னு தோன்றினால் சில தளங்களை எட்டிப் பார்ப்பதோடு சரி. சில இடுகைகளைப் படித்தாலும் கருத்துரை இடுவதில்லை.
நீக்குஇன்று யார் எழுதிய ரெசிப்பி என்று பார்க்க வந்தேன். ரசமலாய் சாப்பிட்ட நினைவே இல்லை... இது ரொம்ப மாதங்களுக்கு முன்புள்ளது.
இது என்ன செந்தமிழ் வணக்கம் என்று தோன்றியது. தமிழ் பேரைச் சொல்லித்தானே 55 வருடங்களா கல்லா கட்டறாங்க. அதுனால தமிழ் வளர்ந்ததாத் தெரியலை. அவங்க பணக்காரனானதுதான் மிச்சம்.
இன்றைக்கு மறுமொழி கொடுக்காமல் இருக்கமாட்டேன். அனைவருக்கும் வாழ்த்துகள். வெளியிட்ட எங்கள் பிளாக்குக்கு நன்றி.
பகவானுக்கு நிவேதனம் செய்யும் படத்தைக் காணோமே!...
பதிலளிநீக்குஹா.. ஹா... ஹா... பழக்கப்படுத்தி விட்டு இப்போ இல்லைன்னா எப்படி!
நீக்குபகவான் தண்ணிக்குள்ளே போய்ட்டார்..ன்ற தைர்யமா!?...
நீக்குதுரை செல்வராஜு சார்... நான் பண்ணும்போது (இங்கு) சன்னிதில வச்சு சிலமுறை படமெடுக்க விட்டுப்போயிடுது, இது பெண் செய்தது.
நீக்கு"தண்ணீருக்குள்"- சொன்னால் நம்புவதி கடினம். நான் அத்திவரதரை மூன்றுமுறை தரிசித்தேன். ஒவ்வொரு முறையும் இரவு முழுவதும் இறைவன் நினைப்பில் தூக்கம் வராமல், அன்று அதிசயமாக்க் கிட்டிய தரிசனங்கள். பெண்ணைக் கூட்டிச் சென்றபோது நின்ற திருக்கோலத்தின் முதல் நாள். நான் தரிசனம் செய்யும் திட்டம் இல்லை. அவளுக்கு மட்டும்தான் 300 ரூ டிக்கெட் கிடைத்தது. ஆனால் அவன் அருளால் இருவரும் பொது தரிசனத்தில் நின்று 2 1/2 மணி நேரத்தில் சேவித்தோம். அன்றைய பயணம் கடினமானதாக இருந்தது. கோவிலுக்கு நுழையவும் திரும்ப பேருந்து நிலையம் வரவும் ரொம்ப நடக்கவேண்டி வந்ததால்.
அவனருளாலே அவன் தாள் வணங்கி. என்பதுதான் நினைவுக்கு வருது
ம்...
பதிலளிநீக்குரசகுல்லாவுக்கும் ஐஸ் வைக்க வேண்டியதாக இருக்கிறது!...
நாட்டுல எதுக்குமே ஐஸ் வைக்கவேண்டியதா இருக்கு. நிலைமை அப்படியாயிடுச்சு.
நீக்குஅதிருக்கட்டும். நீங்க fried ice cream சாப்பிட்டிருக்கீங்களா?
Fried Ice Cream.. என்னன்னு தெரியலையே!...
நீக்குஅத்தி வரதரைக் கேக்கலாம்..ந்னு பார்த்தால்
அவரையும் தண்ணிக்குள்ளே வெச்சுட்டாங்க!...
பெரிய கம்பசூத்திரமில்லை. கார்ன் ஃப்ளவர் வைத்து ஒரு மேல் மாவு தயாரித்துக்கறாங்க. ஃப்ரீசர்ல இருக்கற ஐஸ்கிரீமை இந்த மாவுல புரட்டி அப்புறம் எண்ணெய்ல பொரிச்செடுக்கறாங்க. வித்தியாசமான சுவைல நல்லா இருக்கும். அந்த ஊர்லயே ஒருதடவை டிரை பண்ணிடுங்க. ஹா ஹா.
நீக்குஇங்கே வட இந்திய உணவகங்களில் ரசகுல்லா சாப்பிடுவதோடு சரி!...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜு சார்... குவைத்ல நான் தங்கியிருந்த இடத்திலிருந்து நடக்கும் தூரத்தில் ராஜஸ்தானி உணவகம் இருக்கு. அங்க இனிப்புகள் நிறைய இருக்கும். அங்கயும் சாப்பிட்டிருக்கேன் (கடைசியா 2006ல ஹா ஹா)
நீக்குஎன்ன இது!..
பதிலளிநீக்குஒருத்தரையும் காணோம்?...
நான் வந்துட்டேனே! தி/கீதாவைத் தான் காணோம். பானுமதி இன்னமும் மருத்துவமனையில்! :( இன்னிக்கு நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்ப்புடன் கடவுளைப் பிரார்த்திப்போம்.
நீக்கு/பானுமதி இன்னமும் மருத்துவமனையில்! :( இன்னிக்கு நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்ப்புடன் // - இதுவேதான் என் மனசுலயும் ஓடிக்கிட்டிருக்கு. நல்ல செய்தி வரட்டும், வரும்...
நீக்குரஸமலாய்க்குச் சின்னச் சின்னதாகத் தட்டை மாதிரித் தட்டிப் போடுவோம், பைன்டிங்கிற்குக் கார்ன்ஃப்ளவர் ஸ்டார்ச் சேர்த்தது புதியது. நான்பொதுவாக மைதா கொஞ்சம் போல் சேர்ப்பேன். மைதா வேண்டாம் என்பதால் இது நல்ல முறை. நெ.த. பெண்ணிற்குப் பாராட்டுகள். இந்த வயதில் படிப்பையும் கவனித்துக் கொண்டு இம்மாதிரியான முயற்சிகளில் ஈடுபடுவதும் மிகவும் பாராட்டுக்கு உரியது! சமையலில் எல்லாப் பெண்களுக்கும் ஈடுபாடு வருவதில்லை. சுத்திப் போடுங்க நெல்லைத் தமிழரே!
பதிலளிநீக்குஅன்பு கீதா, ஸ்ரீராம், துரை செல்வராஜு அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
நீக்குஇன்னும் வரப் போகிறவர்களுக்கும் இந்த நாள் நல்ல நாளாக அமையப் பிரார்த்தனைகள்.
மிக அருமையான விளக்கப் படங்களுடன், நெல்லைத்தமிழனின்
மகள் செய்திருக்கும் ரசமலாய் வெகு அற்புதம்.
என் மாமியாரும் தட்டையாகச் செய்துதான் ரசமலாய் கிண்ணத்தில் கொடுப்பார்.
நான் செய்தததில்லை.
மகளுக்கு நன்றாகச் செய்ய வரும்.
மகளுக்கு அருமையாகப் பயிற்சி கொடுக்கும் அம்மாவுக்கும்,
ஊக்கம் கொடுக்கும் அப்பாவுக்கும் வாழ்த்துகள்.
நாம் அனைவரும் காத்திருக்கும் நல்ல செய்தி சீக்கிரம் வரட்டும்.
வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.. நீங்களும் இதைப் பண்ணியிருக்கீங்களா? இந்த மாதிரி ஸ்பெஷன் இனிப்புகள்லாம் பேசாம கடைல வாங்குவது பெட்டர்னு எனக்குத் தோணும்.
நீக்குநீங்க வேற... என் பெண்ணுக்கு அவளுக்கு விருப்பமான ஐட்டங்களைப் பண்ணுவதில் மட்டுமே அப்போ அப்போ (அவ மனசுக்குத் தோணும்போது.. பத்து நாளுக்கு ஒரு முறை என்று) ஆர்வம் காட்டுவா..அவளே புதுசா டிரை பண்ணுவா. இரண்டு வாரங்களுக்கு முன்பு பனீர் கார்ன் இதெல்லாம் போட்டு ரொம்ப அருமையா சப்பாத்திக்கான சைட் டிஷ் பண்ணியிருந்தா. ஆனா படம்லாம் எல்லாம் எடுத்த மாதிரி நினைவில்லை. இருந்தால் எழுதி அனுப்பறேன்.
வாங்க வல்லிம்மா.... நான் கடைகள்ல தட்டையா ரசமலாய் நிறையதடவை சாப்பிட்டிருக்கேன். என்ன ஒரு பிரச்சனைனா... சாப்பிட்டுக்கிட்டே இருக்கத் தோணும். ஒரு தடவைல 8-10 பீஸ் சாப்பிட்டுவிடுவேன்.
நீக்குஅம்மாலாம் பயிற்சி கொடுக்கலை. அவளே முயற்சித்திருக்கா. நான் அந்த இலுப்புச்சட்டில வேகும் சிறுசிறு உருண்டைகள் படம் பார்த்துத்தான் அழகா இருக்கே..எழுதி அனுப்பலாம்னு அனுப்பினேன்.
நாங்க அதிகம் இருந்ததே பால் நிறையக் கிடைக்கும் மாநிலங்கள் தானே! அதனால் பாலில் செய்யப்படும் இனிப்பு வகைகள் எல்லாமே அநேகமாக வீட்டில் செய்து பார்த்துவிடுவேன். கொஞ்சம் சொதப்பியது மால்புவா தான். புஷ்கரில் கிடைப்பது போல் வரலை. ரசகுல்லா அவ்வளவாகப் பிடிக்காது. ஆகவே ரஸ்மலாயாகச் சாப்பிடுவோம். அம்பேரிக்காவில் ஓர் குஜராத்தி கடையில் மிக நன்றாக இருக்கும்.
நீக்குகீசா மேடம்.... கனடால நிறைய பஞ்சாபியர்கள் பால் சம்பந்தமான பொருட்களை வைத்து தொழில் செய்யறாங்க. ஐஸ்க்ரீம், ரசகுல்லா, ரசமலாய், ஜாமூன், fried items etc. எல்லாமே ஃப்ரோசன். Nanak brand. எனக்கு அவை ரொம்பப் பிடிக்கும்.
நீக்குஅது இருக்கட்டும். காசி, ப்ரயாக்ராஜ், ஆக்ரா, அயோத்தி - இங்கெல்லாம் என்ன சாப்பிட (கடைகள்ல வாங்கி) மறக்கக்கூடாது? கொஞ்சம் சொல்லுங்களேன். ப்ரயாகைல லஸ்ஸின்னு நினைவில் வச்சிருக்கேன்.
நல்லாத்தான் இருக்கு செய்து பார்க்கலாம்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் தமிழரே... தங்களது மகளுக்கு.
வாங்க கில்லர்ஜி... 'செய்து பார்க்கலாம்'-என்னைக் கேட்டால் செய்து பார்ப்பதைவிட, நல்ல கடைல காசு கொடுத்து ஒன்று இரண்டு பீஸ் சாப்பிட்டுப் பார்ப்பது பெட்டர்... ஹா ஹா
நீக்குஹலோ ரசமலாயை ஒரு மணி நேரத்தில் செய்ததற்கு பாராட்டுக்கள்..... ஆனால் அதற்கான ரிசிப்பையை இவ்வள்வு பெரிய பதிவாகவா போட்டு படிக்க ஒரு மணிநேரமாகவா ஆக்குவது ஹூம்
பதிலளிநீக்குவாங்க அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன். எதுவுமே செயல் சிறிய நேரம். விளைவு ரொம்ப காலம். யோசித்துப் பாருங்கள் ஹா ஹா. நம்ம பி.எம். ஆற்றுப்படுகை, காடுகளுக்குள் க்ரிசிலோடு சென்றிருந்த காணொளி பார்த்துவிட்டு அதுக்கு ஏதாவது இடுகை போட்டிருக்கீங்களான்னு பார்க்கணும். நீங்கதான் சான்ஸுக்கு வெயிட்டிங் ஆச்சே
நீக்கு1.நான் இப்ப மோடியை பற்றி அதிகம் எழுதுவதில்லை 2. மோடி காடுகளுக்கு சென்றது பற்றி சொல்லவேண்டுமானால் இப்படி தலைவர்கள் தனக்காக ஒரு டூர் இந்த மாதிரி இடங்களுக்கு செல்வது நல்லது அதுவும் கடந்த பல மாதம் தேர்தலுக்காக பல இடங்கள் பிரச்சாரம் செய்து அதனால் வந்த டென்ஷன் நீங்க இப்படி செல்வதுதில் தவறு இல்லை. 3 மோடி காடுகளுக்கு சென்ற கானொளி இன்னும் பார்க்கவில்லை
நீக்குவாங்க மதுரைத்தமிழன். இதுக்கு முன்னால ஒபாமா இப்படி பனிசூழ்ந்த இடங்களுக்கு க்ரிசிலுடன் போனதை டிஸ்கவரி சானலில் பார்த்திருக்கிறேன். இந்தியாவுக்கு இதுதான் முதல் முறை. (மேற்கத்தைய நாடுகள்ல தலைவர்கள் ரொம்ப கிரீடம் வச்சுக்க மாட்டாங்க. பொதுமக்களில் ஒருவர் என்று காண்பிச்சுக்குவாங்க. இந்தியால அப்படி இல்லையே ஹா ஹா)
நீக்குஇப்போ நீங்க வித வித டாபிக் எழுதறது நல்லா இருக்கு. தொடருங்க. உங்க அனுபவங்களையும் அப்போ அப்போ எழுதுங்க.
அதிசயமா மறுமொழி சொன்னதுக்கு நன்றி.
அருமை
பதிலளிநீக்குவாங்க கரந்தை ஜெயக்குமார் சார்.
நீக்குரசகுல்லா to ரசமலாய் செய்முறை, பொறுமை தேவை...
பதிலளிநீக்குஸ்டாப் வாட்ச் வைத்து பயிற்சி கொடுக்கும் அம்மாவிற்கும், அம்மாவிடம் கற்றுக் கொண்டதை (You are incorrigible) உங்களிடம் மிகச்சரியாக சொன்ன மகளுக்கும் வாழ்த்துகள்... பாராட்டுகள்... ஹா... ஹா...
வாங்க திண்டுக்கல் தனபாலன். பயிற்சிலாம் கொடுக்கலை. அப்போ அவளுக்கு எதுக்கோ படிக்க வேண்டியிருந்தது. அதுனால அவ அம்மா, ஒரு மணி நேரம்தான் இடைவெளி. அதுக்கு மேல டயம் வேஸ்ட் பண்ணக்கூடாது என்று சொல்லியிருந்தாளாம்.
நீக்குஎன் மகள் தன் மனதில் உள்ளதை வெளிப்படையா என்னிடம் சொல்லுவாள். எப்போதுமே விமர்சனம் கேட்கும்போது கஷ்டமா இருக்கும், ஆனால் உண்மையைத்தானே சொன்னாள் என்று மனசுக்குத் தோன்றும்.
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்... வாழ்க வளமுடன்
நீக்கு//செய்முறைதான் ஏதோ நிறைய ஸ்டெப்ஸ் இருப்பதுபோலத் தோன்றும். என் பெண், ஒரு மணி நேரத்துக்குள் இதனைச் செய்துவிட்டேன் என்று சொன்னாள். (அவள் அம்மா, ஸ்டாப் வாட்ச் வைத்தாளாம்).//
பதிலளிநீக்குபொறுமையாக செய்த உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்.
உங்களுடன் அத்தி வரதரை பார்க்க வந்த போதே பெண் பொறுமையானவள் என்று தெரிகிறது. இந்தக்கால குழந்தைகள் சிலருக்கு காத்து இருந்து கடவுளை பார்ப்பது பிடிக்காதே!
என் தங்கை இரவு இரண்டு மணிக்கு போய் காலை கதவு திறந்தவுடன் தரிசனம் செய்து வந்தாள்.
//படங்கள், செய்முறை விளக்கம் எல்லாம் அருமை.
இணையத்துக்கு வரும் நேரம் ரொம்பவும் குறைந்துவிட்டது. பலரது தளத்துக்குச் செல்லவே இல்லை. மனநிலையை உற்சாகப்படுத்தும், கலாய்க்கலாம்னு தோன்றினால் சில தளங்களை எட்டிப் பார்ப்பதோடு சரி. சில இடுகைகளைப் படித்தாலும் கருத்துரை இடுவதில்லை.//
ஏன் ? ஏன்?
வாங்க கோமதி அரசு மேடம்..
நீக்குஅவதான் வீட்டுல அத்திவரதரைப் பத்தி போன வருஷம் முதல்ல பேசினது. அவ கொஞ்சம் amiable. வரிசைல நிற்க கஷ்டமாகத்தான் இருந்தது அவளுக்கு. எனக்கு இன்னும் கஷ்டம்... எவ்வளவு நேரம் இதுனால அவ ரெஸ்ட் எடுப்பாளோ.. பரீட்சைக்குப் படிக்கும் காலமே என்று. அவ இந்த மாதிரி நம்ம கையை மீறின விஷயத்திலெல்லாம் அட்ஜஸ்ட் செய்துக்குவா.
/இந்தக் கால குழந்தைகள் சிலருக்கு/ - பலருக்கு என்று போட்டுக்கோங்க. நான் சில நேரங்கள்ல ஒரு நாளில் 5+ கோவில்களுக்கெல்லாம் அவங்களைக் கூட்டிக்கிட்டுப் போய் தொந்தரவு செய்திருக்கிறேன். அவங்களுக்கும்தான் ரொம்ப நேரம் காத்திருந்து...அல்லது ஒரேயடியாக கோவில் கோவில்னு போறதுல அவ்வளவு விருப்பம் கிடையாது.
உங்க தங்கை பொறுமைசாலிதான். கடவுளை தரிசனம் செய்துடலாம். திரும்ப எங்கேயோ இருக்கும் பேருந்து நிலையத்துக்கு கால் கடுக்க நடப்பதுதான் ரொம்ப கஷ்டமாக இருந்தது.
//ஏன்? ஏன்? // - காரணம் பிறகு உங்களுக்குச் சொல்றேன். ஒரு வாரம் உங்க ஏரியா (மாயவரம், தஞ்சை, கும்பகோணம்) பக்கம்தான் சுற்றித்திருந்தோம்.
அருமையான , வித்தியாசமான குறிப்பு!
பதிலளிநீக்குஇதை பனீரிலும் செய்யலாம். பால் பவுடரிலும் செய்யலாம். ஆனால் முட்டை கலந்து செய்ய வேண்டும். நான் அப்படித்தான் செய்வது வழக்கம்.
செய்முறை படங்களும் அருமை!
வாங்க மனோ சாமிநாதன் மேடம்....
நீக்குநீங்க எழுதினதைப் படிச்ச உடனே எனக்கு பஹ்ரைனில் நடந்தது நினைவுக்கு வந்தது. அங்க இருக்கும் 3 இனிப்பு கடைகள் (உத்திரபிரதேசத்தைச் சார்ந்தவங்க கிச்சன்ல இருக்காங்க) ரசகுல்லா, ரசமலாய் பண்ணுவாங்க. எனக்கு அவங்க முட்டை சேர்க்கறாங்களான்னு டவுட் வந்தது. அவங்கள்ட கேட்டேன். ஒரு கடைல, நிச்சயமா சேர்க்கமாட்டோம் அதுக்குப் பதில் இதைச் சேர்க்கிறோம்னு சோடா உப்பு மாதிரி ஒண்ணு காண்பிச்சாங்க. இன்னொரு கடைல, முட்டையின் வெண்பகுதி போடாம ரசகுல்லா நல்லா வராதுன்னாங்க. அதுலேர்ந்து ரசகுல்லா/ரசமலாய் நான் அங்க வாங்குவதை நிறுத்திவிட்டேன் (எல்லாம் மனசுதான் காரணம். வேறு காரணமில்லை)
ஆஆஆஆ தலைப்புப் பார்த்ததும், நெ தமிழன் பெண்ணாக இருந்தபோது செய்த ரெசிப்பி என நினைச்சு, ஹையோ தலைப்பு வச்சது ஶ்ரீராம்தானே.... இப்பூடி நெ தமிழனை ஆஆஆஆஆஆஆ...........ஜிங்கமாக்கிட்டாரே என நினைச்சு:)... பத்தி வச்சிடலாம்:) எனும் நல்லெண்ணத்தோடு ஓடி வந்தேன்ன்ன்ன்ன்:)... இது அனைத்துக்கும் காரணம் நெ தமிழன் தானொக் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
பதிலளிநீக்குஅதிரா - பெண்கள் செய்யும் வேலையை ஒழுங்காச் செய்யணும்னா அந்தப் பெண் மனநிலை வேண்டாமா? சமீபத்துல கூட ஒரு இடத்துல கோலம் போட்டேன். ஹா ஹா.
நீக்கு////
நீக்குஅதிரா - பெண்கள் செய்யும் வேலையை ஒழுங்காச் செய்யணும்னா அந்தப் பெண் மனநிலை வேண்டாமா///
நெ தமிழன்... யூஊஊஊஉ மீன்ன்ன்ன்ன்ன் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பூ?:)..... ஹையோ மீ எஸ்கேஏஏஏப்ப்ப் என் செக்:) ஐயும் காணம் யெல்ப்புக்கூ:)
மகள் அழகாகச் செய்திருக்கிறா... நீங்கதான் பாராட்டத் தயங்கிறீங்க... உங்களுக்குப் பாராட்டக்கூடாது எனும் மனமில்லை... ஓவர் கூச்ச சுபாவமா இருக்கிறீங்க அதனாலேதான் தயங்க்கம் காட்டுறீங்க...:).
பதிலளிநீக்குநான் 3 மாதத்துக்கு முன்னம் யூ ரியூப்பில் பார்த்து இதனை செய்யலாமே என நினைச்சேன்... பார்ப்போம் எப்போதாவது மூட் வரும்போது செய்யலாம்.
இன்று ஸ்கூல் ஆரம்பம்... அதனால மீ இப்போ அச்சம் மடம் நாணம் பயிர்ப்பாக ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப அடக்ஸ் ஒடுக்ஸ் ஆக இருக்கிறேனாக்கும்:).
ஹல்லோ... ஸ்டொதரி பேயே...
நீக்குயா...யையோ... அடக்ஸ் ஒடுக்ஸ் யேல்லாம் பெய்யன்னுக்கு கெடையாதோ...! பாவம் பேய்யன்...!
இன்னைக்கி மேனித நோயம் தோனாமாம்... ஐ..நா.. ஜோலிச்சி...! வொரு கேடிதம் வெனுப்புகிறேன் அவங்ங்ங்உளுக்கு...! வெரட்டுமா...?
வாங்க அதிரா. //ஓவர் கூச்சம்// - அப்படீல்லாம் இல்லை. மனசுல சின்ன வயதிலிருந்தே நம்ம பசங்களை பாராட்டக்கூடாது, அது தற்பெருமை என்று பதிந்துவிட்டது. என் இயல்புப்படி நான் யாரையும் பொதுவா பாராட்ட மாட்டேன். ரொம்ப இம்ப்ரஸ் ஆனா எழுதுவேன். அவ்ளோதான்.
நீக்கு//பயிர்ப்பாக// - ஹையோ ஹையோ.... அர்த்தம் தெரியாம.... யாரோ முற்காலத்துல அந்தக் காலத்து எதிர்பார்ப்புகளுக்கு எழுதிவச்சதை இன்னும் பெருமையா சொல்லிக்கிட்டிருக்கீங்க. (நான் சமீபத்துல ஆஸ்திரேலியா மாடல் - நிகழ்ச்சி பார்த்தேன்... சப்பை-சாதாரண பெண்களை... பெயிண்ட் அடிச்சு தட்டிக் கொட்டி மேக்கப் போட்டப்பறம்..அழகிகளாத் தெரியறாங்க. அப்புறம்தான் நல்லவேளை நம்ம ஆதர்ச நடிகைகளின் மேக்கப் இல்லாத படங்கள் வந்தா என்ன ஆகும்னு தோணிச்சு... அப்புறம் யாருக்கு ரசிகரா இருக்க முடியும்?. பெண்களுக்கு இயல்பா கன்னம் நாணத்தில் சிவக்கணும்...ஆனா இப்போ ரோஜ் இல்லாம சிவக்கற பெண் உலகத்துல எங்கயுமே கிடையாது ஹா ஹா)
ஆஆஆஆ அச்சச்சோ டிடி க்கு என்னமோ ஆச்ச்ச்ச்ச்ச்சூஊ :) நாக்குத் தடுமாறுறார்:) கடவுளே உடனே யே 999 க்கு அடிங்கோஓ:) ஹா ஹா ஹா என்ன நடக்குதிங்கின எனப் புரியுதேயில்லை கர்ர்ர்ர்:)...
நீக்குஆஆஆ இவ்ளோ நேரமாகியும் இன்னும் எம் பாலார் ஆரும் பொயிங்கவே இல்லையே:)....
நீக்குநெ தமிழன் எங்களுக்கு அச்சம் மட்டும்தான் இல்லையாக்கும்:) மற்றதெல்லாம் இறு:)க்கூஊஊஊஊஊஊஊ:).... ஹையோ இப்போ எனக்கு மேக்கப் போடாமலேயே கன்னம் சிவந்திடுச்சே ஹா ஹா ஹா:)....
ஏதோ பெண்கள் மட்டும்தான் மாறிட்டோமாம்:) ஆண்கள் இப்பவும் தனியே போய் புலி சிங்கத்தோடு சண்டைப்பிடிக்கும் பலசாலிகளாகவே இருப்பதைப்போலவே பில்டப்பூஊஊஉ கர்ர்ர்ர்ர்ர்ர்:)..
வாங்க அதிரா.
நீக்கு'தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யனெப் பெய்யும் மழை'
என்ற காலத்தில் ஆண்கள் பொறுப்புணர்ந்து புலியோட சண்டை, காளையோடு மோதல்னு ரொம்ப ஸ்டிராங்க் ஆக இருந்தோம். காலம் மாறி, வீட்டில் மனைவி என்ற பெயரில் இருக்கும் 'பெண் புலி'யோடு சண்டை போட்டு சண்டை போட்டு, எங்க பலம் முழுசும் போய், 'புலி' என்று எழுதினாலே பயமா இருக்கும் நிலைக்குப் போயிட்டோம். அதுனால 'அப்பாவி ஆண்களைக்' குறை சொல்லாதீங்க. ஹாஹா. 'அச்சப்பம் பண்ணுகிறவர்களை' (யாருன்னு தெரியுதா?) கத்தியைத் தூக்கச் சொல்லலாமோ?
நான் /இயல்பா கன்னம் நாணத்தில்// - இதெல்லாம் கலாய்க்க எழுதினேன். கீதா ரங்கன் பிஸியாக இருப்பதால் பொயிங்கவில்லை. ஹா ஹா.
@நெ.த
நீக்கு///என்ற காலத்தில் ஆண்கள் பொறுப்புணர்ந்து புலியோட சண்டை, காளையோடு மோதல்னு ரொம்ப ஸ்டிராங்க் ஆக இருந்தோம்//
ச்ச்சும்மா ஒரு பேச்சுக்கு அப்பப்ப எதையாவது சொல்லிடுறோம் நாங்க, என்பதுக்காக:) ஒரேயடியாக நீங்களெல்லாம் புலியோடு ஜண்டைப்பிடிச்ச பறம்பறை:)) எனச் சொல்லலாமோ?:)).. எதையும் நாங்க பார்க்கவில்லை:) எந்த ஆதார வீடியோவும் இல்லை அதுக்கு:)).. எல்லாம் செவிவழிக்கதைதான்:)... மட்டர் அப்பூடி இருக்க:))
நாம் நம் கண் முன்னே பார்க்கும் ஆண்களின் வீரத்தை மட்டும்தேன் நெம்புவோம்ம்:)).. அதாவது பாம்பு வந்திட்டால் எதுக்கு மேலயாவது ஏறி நின்று கொண்டு[சேஃப் ஆ:)].. கெதியா அடியுங்கோ ஓடிடப்போகுது எனக் கத்துவோரையும்:)).. ரோட்டில பப்பி விரட்டினால்ல்:) வேகமா ஓடிப்போய்க் கேட்டை லொக் பண்ணிப்போட்டு.. கிட்ட வந்துபார்.. நொருக்கிப்போடுவேன் தெரியுமோ என வீரங்காட்டுவோரையும்{ கொஞ்சம் நில்லுங்கோ புரைக்கடிக்குது எனக்கு ஹா ஹா ஹா:)]} தானே பார்த்து வளர்கிறோம் என ஜொள்ள வந்தேன்ன்ன்:)) மீ ஜொன்னது டப்போ?:)).. ஹையோ நான் நாட்டில் இல்லை:)).. எதுவும் தேவை எனில் என் செக்:) ஐப் பிடிங்கோ அவ நாட்டில் உள்ளா:))..
அச்சப்பம் புகழ்:)) எங்கட டேவடைக் கிச்சின் ஓனரின்- ஓனரை விட வேறு யாரும் உளரோ?:)) ஹா ஹா ஹா..
//அதாவது பாம்பு வந்திட்டால் எதுக்கு மேலயாவது ஏறி நின்று கொண்டு[சேஃப் ஆ:)].// - அதிரா... அதான் சொல்லிட்டேன் இல்ல. இந்தக் காலத்துல பெண்கள்தான் தைரியமா இருக்கணும். ஆண்கள் நாங்க பாவம் இல்லையா? அதுனால பழைய காலத்துல முறத்தால புலிகளை அடிச்சு விரட்டினதுபோல இந்தக் காலத்துல நீங்கதான் தைரியமா எங்களைக் காப்பாத்தணும். ஹா ஹா.
நீக்குஹையோ ஆரோடயாவது ஜண்டைப்பிடிக்கலாம் என ரெடியானால்... வீட்டிலதான் டமால் என சரண்டராகீனம் எனப் பார்த்தால் வெளியிலயும் அதேதான் நடக்குது:)... சே சே ஜண்டைக்கே வரமாட்டினமாம் ஆரும் ஹா ஹா ஹா:)...
நீக்குநெ தமிழன் ஸ்கூலில் நாட்டார் பாடல்கள் என ஒரு புக் இருந்தது சிலபஸ்ல... அது முழுக்க நாட்டுப்புறப் பாடல்கள்...
அதில் ஒரு பாட்டில் ஒரு வசனம் வரும்... அம்மா தன் பிள்ளைக்குப் பார்த்துப் பாடும் பாடல்...
எட்டு நாளாய்
செத்துக் கிடந்த
சாரப்பாஆஆஆம்பை
எட்டி நிண்டு
தொட்டுப் போட்டார்
உங்கள் ஐயா(அப்பா):;)
ஹா ஹா ஹா எனக்கு அப்பவே தெரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்:)...
சாரப்பாம்பு - நாட்டார் பாடல்.
நீக்குஇது வேறு ஒன்றை நினைவுபடுத்துது. நான் 6 வது படித்துக்கொண்டிருந்தேன். எங்க அப்பா ஸ்கூல் ஹெட்மாஸ்டர். அங்க உதவி தலைமையாசிரியர் ஒருத்தர் இருந்தார். அவர் வீட்டுல ஒரு நாளைக்கு சாரைப்பாம்பை (செத்தது) கையால் உருவி விட்டுக்கொண்டிருந்தார். அப்படிச் செய்தால் சமையல் நல்லா வருமாம் என்றார்.
நீங்களும் சில நாட்டார் பாடல்களை உங்க இடுகைல பதிவு செய்யலாமே.
உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமோ? அடிக்க வராதீர்கள். கலாய்ப்புதான். து கண்டால் தூ வி. அதுதான் எல்லோரும் சரண்டராவதற்கு காரணமோ?
நெ தமிழன்
நீக்குஏன் டெபியூட்டி ஹெட் தான் வீட்டில சமைப்பாராமோ:) என்ன கொடுமை சாமீ:)...
சில சில வரிகள்தான் நினைவில் நிக்கிது... முழுப்பாடலாக நினைவில்லையே....
தூர விலகுங்கோ எண்டுதானே பயமொழியில ஒளவைப்பாட்டி ஜொல்லி இருக்கிறா:)... இது தூர ஓடாமல் நிண்ட இடத்திலேயே மருந்தடிச்ச பூச்சி மாதிரி விழுந்தால் என்னதான் பண்ணுறது ஜொள்ளுங்கோ:)... ஹா ஹா ஹா
இதில ஶ்ரீராம் மட்டும் விதிவிலக்கா என்ன?:) ஹா ஹா ஹா 2 நாளா ஆளைக் காணம் அதுதான் கோர்த்து விட்டேன்ன்ன்:)..
//2 நாளா ஆளைக் காணம்// - ரொம்ப நாளாவே ஆளைக் காணோம்... ரொம்ப பிஸின்னு தோணுது.
நீக்கு/இது தூர ஓடாமல் நிண்ட இடத்திலேயே// - நாங்கள்லாம் பாவமானவங்க. விட்டில் பூச்சிகள். விளக்கு சூடு ஆபத்துன்னு தெரிந்தும் வெளிச்சமா இருக்கேன்னு நம்பிவிடுகிறோம். ஹா ஹா
நெ.த ஐயா அவர்களுக்கு, அவனருளாலே தாள் கொடுத்தால், அவாள் மட்டும் தாள் கொடுக்காமலே வணங்கலாம் என்கிற நிலை...! அதனால் இந்தப்பாட்டு...!
பதிலளிநீக்குவரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா...!
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா...!
ஹாய் (குழு) ஹா ஹாய் (குழு) ஹாய் ஹாய் அய்சலக்கா...! (குழு) ஹாய் ஹாய் அத்திரிபச்சா...! (குழு)
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா... கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா... (2)
நகையும் நட்டும் போட்டிருந்தா, சொர்ணலட்சுமி...!
நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரித் தந்தா, தான்யலட்சுமி...!
டாண்ட டண்டடண் டண்டா (குழு) டண்டடண் டண்டா (குழு) டாண்டாண்டா டாஆ (குழு) (2)
மானம் காக்க துணிஞ்சு நின்னா வீரலட்சுமி... மானம் காக்க துணிஞ்சு நின்னா வீரலட்சுமி... எதிலும் மனசு வச்சு ஜெயிச்சு வந்தா விஜயலட்சுமி...
எத்தனை லட்சுமி பாருங்கடாஆஆஆ... இவ என்ன லட்சுமி கூறுங்கடாஆஆ... (2) நம்ம அத்தனை பேருக்கும் படி அளக்கும் அன்னலட்சுமி ஆகுமடா...? ஆமா அன்னலட்சுமி ஆகுமடா..? (குழு)...
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா...! கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா...!
[சலங்கை சத்தம்] ஹாய் (குழு) [சலங்கை சத்தம்] ஹாய் (குழு) ஹாய் ஹாய் அய்சலக்கா...! (குழு) ஹாய் ஹாய் அத்திரிபச்சா...! ( குழு )
தண்டைச் சத்தம் கலகலன்னு முன்னால் வருது... வாழைத்தண்டு போல கால் நடந்து பின்னால் வருது... டாண்ட டண்டடண் டண்டா (குழு) டண்டடண் டண்டா (குழு) டாண்டாண்டா டாஆ ( குழு )
பாக்குறப்போ பசி மயக்கம் தன்னால் வருகுது... பாக்குறப்போ பசி மயக்கம் தன்னால் வருகுது... பேச்சு கேக்கிறப்போ, வந்த மயக்கம் தானா குறையுது...!
சாதம் போல சிரிக்குறா...! மீன் குழம்பு போல மணக்குறா...! ரகசியமா ஏதும் சொன்னா, ரசத்தைப் போல கொதிக்குறா...!? ஆஹா ரசத்தைப் போல கொதிக்குறா...!? (குழு)
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா... கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா...
குலாம் காதர் குலாவிலே கறி கெடக்குது... அது அநுமந்தராவ்வ்வ் ஆஹ்ஹ்,,,,,,,, (குழு) அநுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது...! யஹ்ஹஹ் ஹஹ்ஹ ஹாஆஆஆ (குழு) ஹும்ஸ்ஜக்கு (குழு) ஹும்ஜக்கு (குழு) ஹும்ஸ்ஜக்கு (குழு) ஹுக்கும் ஹுக்கும் (குழு)
மேரியம்மா கேரியரில் எறா இருக்குது... மேரியம்மா கேரியரில் எறா இருக்குது... அது பத்மநாப அய்யர்
வீட்டு குழம்பில் கிடக்குது...!
சமையலெல்லாம் கலக்குது - அது சமத்துவத்த வளக்குது...!
ஜாதி சமய பேதமெல்லாம் சோத்த கண்டா பறக்குது...! (?)
ஆஹா சோத்த கண்டா பறக்குது (குழு)
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா...! கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி வஞ்சி வருதப்பா...!
//அவாள் மட்டும் தாள் கொடுக்காமலே வணங்கலாம் என்கிற நிலை...// - திண்டுக்கல் தனபாலன் - உங்க perception ஐ, சிந்தனையை என்னால் மாற்ற முடியாது. ஆனால் இதில் உண்மை கடுகளவும் இல்லை என்பது எனக்குத் தெரியும்.
நீக்கு//அவனருளாலே அவன் தாள் வணங்கி. என்பதுதான் நினைவுக்கு வருது//இதான் சரியானது டிடி. இறைவனின் தாளை வணங்கக்கூட அவன் அருள் வேண்டும் என்பதே பொருள். 1330 குறளுக்கும் பொருள் சொல்லும் உங்களுக்குத்தெரியாததா? எந்த அவாளும் தாள் எதுவும் கொடுக்க மாட்டாங்க! அவனுக்குத் தாள் கொடுக்கும் அளவுக்குப்பெரியவங்க இங்கே யாருமே இல்லை. அவன் தாளே பெரிது!
நீக்குகீசாக்கா பாட்டில இருந்து ஒன்று மட்டும் தெளிவா தெரியுது:)... பெண்களுக்கு எத்தனை வடிவம்... எத்தனை பெயர்கள்.... வேஏஏஏஏஏஏற லெவல் நாங்களெல்லாம்:)...
நீக்குஆவ்வ்வ்வ்வ் மீக்கு பெல் அடிக்கப் போகுதூஊஉ என்னை ஆரும் தேட வேண்டாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)
ரசமலாய் எல்லாம் வீட்டில் செய்ததில்லை செய்து பார்க்க வேண்டும் சாரி செய்யச் சொல்ல வேண்டும் உங்களுக்கு பாராட்டு வராது என்பதுதான் தெரிந்த விஷயமாச்சே என் இரண்டாம் பேரன் எட்டு வயதில்எழுதியதிலேயே குறைகண்டவராயிற்றே சொற் குற்றம் பொருட் குற்றம் என்று ஏதோ
பதிலளிநீக்குவாங்க ஜி.எம்.பி. சார்... கேக் செய்வது மட்டும்தான் உங்க டிபார்ட்மெண்ட்னு வச்சுக்கிட்டீங்களா? உங்கள்ட நான் கேட்கணும்னு நினைத்தேன்... உணவின் ருசியில் மாற்றம் இருக்கா? 'என்னத்தச் சாப்பிட்டு என்னத்த என்று தோன்றுகிறதா இல்லை, இதைச் செய் என்று இப்போவும் சொல்வீங்களா? உங்க பேரன் எழுதினதில் குறை கண்டேனா? அது நீங்க எழுதினது என்று நினைத்துச் சொல்லியிருப்பேன். ஹா ஹா
நீக்குரசமலாய் பிடிக்கும். ஒரே ஒரு பீஸ் சாப்பிடுவேன். எது பிடிக்குமோ அதைக் கொஞ்சமாக சாப்பிட்டு நிறைய ரசிப்பது சின்ன வயதிலிருந்தே என்னோடு வருகிறது. ஜாங்கிரி,பாதுஷா, ரஸகுல்லா (பெங்காலி உச்சரிப்பில் ரொஸொகுல்லா!) போன்ற சங்கதிகளும் பிடிக்கும். Again, just a piece! நண்பர்கள் உரிமையோடு கடிந்துகொள்வதுண்டு: ஏக் அவுர் லேலோ பாய் !
பதிலளிநீக்குதாள் வணங்குவதிலிருந்து தாள் கொடுக்கும் அளவுக்கு ஏன் போய்விட்டீர்கள்! ரஸமலாய் எஃபெக்ட்டா ?
வாங்க ஏகாந்தன் சார்.
நீக்கு//எது பிடிக்குமோ அதைக் கொஞ்சமாக சாப்பிட்டு// - நீங்க கொடுத்துவைத்தவர். எனக்கு அந்த மனநிலையே வந்ததில்லை. என் பீகார் பகுதியைச் சேர்ந்த பாஸ் சொல்லுவார் (அந்த ஊர் ஆஃபீஸ்ல).. எதையும் வேண்டாம்னு சொல்ல மாட்டேன். இனிப்பு தந்தா 1/2 ஸ்பூன் அளவு சாப்பிடுவேன். ருசிப்பேன். அது போதும். அதுக்கு அப்புறம் இன்னும் சாப்பிடணும்னு நினைக்கறதெல்லாம் அர்த்தமில்லாதது என்பார். நான் வெயிட் குறையணும்னு சில சமயம் இனிப்பைத் தவிர்க்கும்போது அவருடைய அட்வைஸ் இது.
/போன்ற சங்கதிகளும் பிடிக்கும்// - ஓ...இனிப்பு... அதில் எனக்குப் பிடிக்காததே இல்லை (ஒரு காலத்தில்). ஏன்..அமுல் ஸ்ரீகண்ட் கூட ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டே இருப்பேன்..
//தாள் கொடுக்கும் அளவுக்கு// - புரியலை... பெண் படித்துக்கொண்டிருப்பதால் அவளுக்கு சீக்கிரம் தரிசனம் கிடைக்கட்டுமே என்று 300 ரூ டிக்கெட் புக் பண்ணினது (எனக்கு அப்படி பண்ண முடியலை). அப்புறம் இருவரும் பொது தரிசனத்தில்தான் சென்றோம். 300 ரூ ஆலயத்துக்குக் கொடுத்ததுபோல்தான். ஹா ஹா
நாங்களும் யோசித்து, யோசித்து ஒருவழியாக அத்தி வரதரை சேவித்துவிட்டோம். என்ன, ஒரு ஆறுமணி நேரம் நிற்கவைத்துக் கூப்பிட்டார்..அது அவர் விருப்பம். நல்ல தரிசனம். தரிசனத்துக்கு அப்புறம்தான்.. இருக்கு இன்னும்.. என்பது தெரியவில்லை அப்போது. மேற்கு கோபுரத்திலிருந்து செருப்பு போடாமல் கிழக்குக்கு நடந்து, அங்கே ஆட்டோவும் கிடைக்காமல் .. ஒருவழியாக பார்க்கிங்கில் இருந்த எங்கள் யாத்ரா டாக்ஸியை அடைவதற்குள் வைகுண்டமே போய்ச்சேர்ந்துவிட்டது போலிருந்தது. எல்லாம் அவன் செயல்..
நீக்குஏகாந்தன் சார்.. நான் 4ம் நாளில் சென்றபோது எல்லாம் சுகமாகத்தான் இருந்தது. தரிசனத்துக்குப் பிறகு வெயிலில் 500 மீட்டர் நடக்கவேண்டியிருந்தது. பிந்தைய நாட்களில் இது 2 கிலோமீட்டருக்கும் அதிகமாகிவிட்டது. என் பெண்ணோடு போயிருந்தபோது, அங்க அங்க நின்று ஏதாகிலும் குளிர்பானம் வாங்கிச் சாப்பிட்டு, எப்படா பஸ் ஸ்டாண்ட் வரும் என்று ஆகிவிட்டது. இதைமட்டும் அதிகாரிகள் சரியாகச் செய்யவில்லை (10 ரூபாய் என்பது பேருந்துக்கு லாபம்தான். பொதுவா 5 ரூபாய் டிக்கெட் உள்ள இடத்துக்கு. ஏனோ இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை போலிருக்கு)
நீக்குஎங்கே கீதாவைக் காணம்......
பதிலளிநீக்குகீதாவும் வேலைக்குப் போகிறாரே, அதனால் அதிகம் வர முடிவதில்லை. இப்போத் தான் பானுமதி அவர் கணவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் வருகைக்குக் காத்துக் கொண்டிருப்பதாக தி/கீதா வாட்சப்பில் சொன்னார். நல்லபடியாக மருத்துவமனையிலிருந்து வந்து விடுவார் என ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.
நீக்குஅறுவை சிகிச்சையா? எந்த ஊரில் நடந்தது என்று ஒன்றும் தெரியவில்லையே..
நீக்குஓ கீதாவும் இப்போ வேர்க் பண்ணுகிறாவோ? ஆவ்வ்வ் வாழ்த்துக்கள்.
நீக்குபானுமதி அக்காவின் கணவருக்கு என்ன எனத் தெரியவில்லை.. அவர் நலமே வீடு வந்திடுவார் பிரார்த்திப்போம் நாங்களும்.
அன்பு அதிரா, திரு . ஏகாந்தன் சார், பங்களூரில் தான்
நீக்குசிகித்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கீதா ரங்கனுக்குத் தெரியும்.
நலம் அடைந்து விரைவில் வீடு திரும்ப பிரார்த்தனைகள்.
ஓ நன்றி வல்லிம்மா.
நீக்குவணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குரசமலாய் அழகான படங்கள், செய்முறை விளக்கங்கள் நன்றாக உள்ளது. வீட்டில் நான் இந்த மாதிரியெல்லாம் செய்ததே கிடையாது.தங்கள் பதிவை பார்த்த பின் ஒரு தடவை செய்து பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது .அருமையாய் இதை செய்த தங்கள் மகளுக்கும்,அதை அழகாக விவரமாக எழுதி பதிவிட்ட தங்களுக்கும் வாழ்த்துகளுடன் நன்றிகள். பகிர்வினுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... நானும் இதெல்லாம் செய்ததே கிடையாது. எனக்கு செய்வதற்கு விருப்பமானது பெரும்பாலும் நம்முடைய பாரம்பரிய இனிப்பு வகைகள்தாம். நன்றி
நீக்குநெ.த. ஐயா :- நல்லவேளை வரிகள் மாற்றிய பாடலை, இங்கு கருத்துரையாக சொல்லவில்லை... அதுவரையில் மகிழ்ச்சி... ஆனால் நடந்து முடிந்த பல உண்மைகள் மலையளவு உள்ளன...!
பதிலளிநீக்குகீதா அம்மா :- முதல் அதிகாரமே "கடவுள் வாழ்த்து"... ஆனால் அதில் உள்ள பத்து குறள்களில் கடவுளும் இல்லை, வாழ்த்தும் இல்லை... வரிவாக பிறகு... அதேபோல் கடவுள் என்ற சொல் எந்த குறளிலும் இல்லை...
"தெய்வம்" எனும் சொல் ஆறு குறள்களில் உள்ளது... ஆனால் அதற்கான பலரின் விளக்கம், தெய்வம் என்பது எந்த மனிதரிடமும் இல்லாத ஆற்றலை கொண்டது கடவுள் என்றும், விதி என்றும் சொல்லப்பட்டுள்ளது...
"எழுதிய உரைகள் எல்லாம் சரியான விளக்கமா...?" பதிவு எழுத வேண்டும்... பார்ப்போம்... நன்றி அம்மா...
திண்டுக்கல் தனபாலன் - எதையும் எப்படியும் மாற்றிப் பொருள் கூறலாம். கடவுள் என்பதற்கான அர்த்தம் எல்லாவற்றையும் கடந்தவன், மிகப் பெரியவன் என்பது. தெய்வம் என்பதும் அத்தகைய பொருளே. "மலர் மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்' என்பதற்கும் நாம் நினைத்தபடி எப்படி வேண்டுமானாலும் பொருள் கொடுத்து, அதுதான் சரி என்றும் சொல்லிக்கொள்ளலாம். உங்களுக்கான பாடல்,
நீக்குதெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
தொல்காப்பியத்தில் 'கடவுள்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதனை 'அனைத்தும் கடந்தவன்' என்ற பொருளில், நம்மையெல்லாம் விட உயர்ந்தவன் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளனர்.
நீக்குகொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
திருவள்ளுவரும் 'இறை' என்று உபயோகப்படுத்தியுள்ளார். அது எல்லாமே அவருடைய தந்தை அவரைவிடப் பெரியவர் என்ற பொருளில் திருவள்ளுவர் தந்தையைக் குறிக்கும் என்றுகூட நாம் பொருள் சொல்லலாம். ஆனால் உண்மை வேறல்லவா?
// மலர் மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் //
நீக்குமு.கருணாநிதி, மு.வரதராசனார், சாலமன் பாப்பையா, மணக்குடவர், வீ. முனிசாமி - இவர்களின் விளக்கம் எல்லாம் மலர் என்றால் மனம் / அகம் / நெஞ்சம், என்றே எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது... ஆனால் ஏகினான் என்கிற சொல்லுக்கு, பரிமேலழகர் உரையை ஆராயும் போது, மலர் என்பது விரிந்த பூ என்றே தோன்றுகிறது...
அப்படி என்றால், நீங்களே யோசியுங்களேன்...! அடிமுடி பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்... இந்த குறளில் முடியை பற்றி அறியலாம்...
(கைபேசியில் typeபுவது எவ்வளவு சிரமம் என்று இன்று தான் தெரிந்தது... no bold and italic letters)
மலர் மிசை ஏகினான் - தாமரை மலர் மீது நின்றிருப்பவன் - திருமால் - என்பது எனக்குப் புரிந்த பொருள். இல்லை.. சமண பெளத்த முறையில் என்றால் - தியானம் செய்யும்போது 7 நிலை சக்கரங்களில் கடைசியாக புருவத்திற்கு மேல் உள்ள சஹஸ்ரம்-ஆயிரம் இதழ் தாமரை போன்றுள்ள இறை சக்தி - இதைத்தான் தியானிக்கின்றனர் - குண்டலினி சக்தியை மேலே எழுப்பி கடைசியில் சஹஸ்ராவில் அடையச் செய்வதுதான் தியானத்தின் உயர் நிலை. அப்படி சஹஸ்ராவில் சக்தியை அடையச் செய்யும் தவ முனிவர்களின் அடியிணையை அடைந்தவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
நீக்குகடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுடைய விளக்கம் அர்த்தமில்லாமல் இருக்கும். மு.கருணாநிதி எழுதுகிறார்,
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
இதில் ஏதேனும் பொருள் இருக்கிறதா? குறளுக்கும் இதற்கு தொடர்பு இருக்கிறதா?
// மு.கருணாநிதி, மு.வரதராசனார், சாலமன் பாப்பையா, மணக்குடவர், வீ. முனிசாமி - இவர்களின் விளக்கம் எல்லாம் மலர் என்றால் மனம் / அகம் / நெஞ்சம், என்றே எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது... //
நீக்குஅதையே தான் நானும் சொன்னேன்... ஏன் சங்கித்தனமாக பதில்...?
// இந்த குறளில் முடியை பற்றி அறியலாம்... //
இதற்கென்ன பதில்...?
// தியானத்தின் உயர் நிலை //
செய்துள்ளீர்களா...? "விவேகானந்தர் அப்படித்தான்" என்று விளக்கம் சொல்ல முற்படாதீர்கள்... நன்றி....!
திண்டுக்கல் தனபாலன் - எனக்கு சங்கித்தனம், சண்டியர்த்தனம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நீங்கள் ஒவ்வொருவர் சொல்லும் பொருளிலும் ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டால் அதில் அர்த்தம் எதுவும் இருக்காது.
நீக்குஉள்ளத்தாமரை என்று பொதுவாகச் சொல்லுவோம். அதனால் 'மலர்' என்றால் மனம் என்று பொருள் கொள்வது வலிந்து பொருள் கொள்வதில் முடியும்.
நீங்கள் சொல்லியிருக்கும் சாலமன் பாப்பையா, மணக்குடவர் போன்றோரும், உள்ளத்தாமரையில் இருக்கும் கடவுளின் சிறந்த திருவடியை என்றுதான் பொருள் கொள்கிறார்கள்.
பரிமேலழகர், 'பூமேல் நடந்தான்' என்று பொருள்கொண்டு பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர்" என்று சொல்லியிருக்கிறார். அதன்கண், பரிமேலழகர், வைணவ சமயத்தவர் இல்லை என்பது தெளிவு.
கருணாநிதி சொல்லும் பொருள் என்ன? //மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்// - இதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
தியானத்தைப் பற்றி இதற்குமேல் நான் எழுத விரும்பவில்லை. அது ஒரு தனி சப்ஜெக்ட். தெரிந்தவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் சப்ஜெக்ட்.
'தெய்வம் என்றால் அது தெய்வம்..’ என்று செல்லும் கண்ணதாசனின் பாடல்வரிகளின் மூலம் நம்மாழ்வாரின் இந்தப் பாசுரம்:
பதிலளிநீக்குஉளனெனில் உளன் அவன் உருவம்இவ் வுருவுகள்
உளனலன் எனில் அவன் அருவமிவ் வருவுகள்
உளனென இலனென இவைகுண முடைமையில்
உளன்இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே
அவன் இருக்கிறான் என்றால் இருக்கிறான். அவன் இந்தந்த உருவம் என்றால், அந்தந்த உருவங்களில் அவன். மாறாக, அவன் இல்லை எனில், அவன் அருவம். அருவமே உருவாக இருக்கிறான் அவன். இப்படி, உளன் எனவும், இலன் எனவும் கூறப்படும் எதிரெதிர் குணாதியங்களை உடையவன் ஆதலால், என்றும் அழியாதவனாக எங்கும் பரந்து காணப்படுகிறான்.
இதெல்லாம் நான் அவ்வப்போது சொல்பவை. திண்டுக்கல் தனபாலனுக்கு எழுதியதால் இதனைக் குறிப்பிடவில்லை. இந்தப் பத்து பாசுரங்களையும் ஆழ்ந்து படித்தால், 'இறைவன்' என்பதற்கான முழு விளக்கமும் கிடைத்துவிடும்.
நீக்குஅவரவர் தமதமது அறிவறி வகைவகை - அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் - அவரவர் விதிவழி அடைய நின்றனரே
இன்னொன்று, 'ஆம் அவையாய் அவை நின்ற அவரே' - இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதை ஸ்தாபிக்கும் பாசுரம்.
// கொடிநிலை கந்தழி வள்ளி என்ற //
பதிலளிநீக்குகொடிநிலை = கொடிபோல உயர்ந்த நிலையில் இறைவனின் புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கும் அறம்...
கந்தழி = பற்றற்ற தன்மை
வள்ளி = மழை
தொல்காப்பியர் கூற்றுப்படி, கடவுள் வாழ்த்து - அடுத்து அறம் - அடுத்து மழையின் சிறப்பு...
(நம்ம) தாத்தா வள்ளுவரோ, கடவுள் வாழ்த்து - அடுத்து வான் சிறப்பு...
அறத்தைவிட... ம்ஹிம்... அனைத்தையும் விட மழையே இன்றியமையாதது...
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்
பொறுமையான விவரிப்புகளை படிப்படியாக படித்து ரசித்தேன். தங்கள் மகளுக்கு கங்கிராட்ஸ்.
பதிலளிநீக்குநிறமி என்ற வார்த்தை எப்படி உருவாயிற்று?.. தமிழ் மொழி ஆர்வலர்கள் ஆராயலாம்.
மிக்க நன்றி ஜீவி சார். விஷம்-கொடியது. விஷமி-கொடிய செயல்களைச் செய்பவன். நிறம்-வண்ணம் நிறமி-வண்ணத்தை உண்டாக்குபவன்/உண்டாக்கும் பொருள். சரியா இருக்கா?
நீக்குஉதாரணத்துடன் வீளக்கியது அருமை.. தமிழன் என்று பெயர் கொண்டது தகும். அதற்கான ஆர்வம் உங்களிடம் நிறையவே இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி ஜீவி சார்... எல்லாப் புகழும் எனக்கு தமிழ் ஆர்வத்தைத் தூண்டிவிட்ட என் தமிழாசிரியர்களுக்கே உரியது. இப்போ கூட, திண்டுக்கல் தனபாலன் மலர் என்பதற்கு மனம் என்று பொருள் (மத்தவங்க சொல்லியிருக்காங்க) என்று சொன்னபோது, அது எப்படி என்று என் மனது யோசித்துக்கொண்டிருந்தது.
நீக்குமனனக மலமற மலர்மிசை எழுதரும் - என்ற ப்ரபந்த வரிகளில் மலர் என்பதற்கு அர்த்தம் என்ன என்றெல்லாம் புரட்டிப் பார்த்தேன். எல்லாம் தமிழின் மீதான ஆர்வம்தான்.
"ஏகினான்" என்பதை அறிந்தால், மலர் தானாக விரியும்... அதன்பின் மேலே... மேலே...
நீக்குஅடிமுடி-யில் 'முடி'யை அறிய முடியும்... தெரிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ, கட+வுள் - அவ்வளவு எளிதல்ல... நன்றி...
// தெய்வம் என்றால் அது தெய்வம்
பதிலளிநீக்குவெறும் சிலை என்றால் அது சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை //
வீட்டு கணினியில் வாசியுங்கள்... DD Mix உண்டு... அதனால் சொல்கிறேன்...
http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post.html
நன்றி...
ரஸ்மலாய் வீட்டில் செய்ய வேண்டியதில்லை இங்கே. எனக்கும் பிடிக்கும்.
பதிலளிநீக்குவாங்க வெங்கட்.... உங்க ஊர் (தில்லி) போல வருமா? இனிப்புகளின் சொர்க்கம்னா அது.
நீக்குநெல்லை ஹையோ எங்க வீட்டுல இது அப்படிப் போணியாகும். நான் முன்பு வீட்டில் செய்வதுண்டு. உருட்டிப் போட்டதில்லை. தட்டையாகக் கடையில் கிடைப்பது போல.
பதிலளிநீக்குஅப்புறம் சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம்/ப்ரௌன் சுகர் போட்டுச் செய்ததும் உண்டு அப்படியும் முயற்சி செய்தேன் நல்லாவே இருந்தது.
நன்றாக வரவும் செய்தது.
உங்கள் பொண்ணு அசத்துகிறார். நிஜம்மாவே!!! அதுவும் ஒரு மணி நேரத்தில் என்று வாவ்!!! செம நெல்லை. பாராட்டுகள் அவங்களுக்குச் சொல்லிடுங்க..
கீதா
வாங்க கீதா ரங்கன். ரொம்ப பிஸியாயிட்டீங்க போலிருக்கு.
நீக்குப்ரெளன் ஷுகர் போட்ட பாலும் நல்லாத்தான் இருக்கும். ஆனா பாருங்க... கொஞ்சம் கொஞ்சமா உருட்டி போடறதுலாம் பெரிய வேலைதான்.