English: The girl has a heart of gold என்று விளக்கம் சொல்லப்படும் படம்! பாலமுருகன் கதை வசனத்தில், P. மாதவன் தயாரிப்பில் தேவராஜ் மோகன் இயக்கத்தில் 1973 இல் வெளிவந்த திரைப்படம்.
மழை பெய்யும்போது வீட்டுக்குள் ஒழுகினால் என்ன செய்வீர்கள்? தண்ணீரை பிடித்து அப்புறப்படுத்தலாம். வேறு அறைக்குச் செல்லலாம். சிவகுமார் ஓரமாக அமர்ந்து வீட்டு உரிமையாளரின் பெண் - ஜெயசித்ரா - வந்து தண்ணீரைத் தள்ளி விடும்போது ஆவலுடன் டூயட் பாடுவதாய்க் கனவு காண்கிறார்!
இளையராஜாவின் குரு ஜி கே வெங்கடேஷ் இசை அமைத்துள்ள இந்தப்படத்தின் இந்தப்பாடலை எழுதியிருப்பவர் கவியரசர். இந்தப் பாடலில் வரும் கிடார் இசை இளையராஜா கைவண்ணம் என்றுபுல்லரித்து போகிறார்கள் அவர் ரசிகர்கள்.
பாடலைப் பாடி இருப்பவர்கள் எஸ் பி பாலசுப்ரமணியம் - எஸ் ஜானகி.
சிவகுமார் -ஜெயசித்ரா நடித்த இந்தப்படத்தின் காட்சியிலும் அவர்கள்தான். ஆனால் காட்சியில்லாமல் கானம் இடம்பெறுகிறது இந்த வாரம். பாடலை மட்டும் ரசிக்கலாம். "கன்னங்களே என்கிற வார்த்தை எங்கு வருகிறது என்று கேளுங்கள். அந்த இடத்தில எஸ் பி பி தன் ட்ரேட்மார்க் சிரிப்பை விடுவார்!
மிகவும் எளிமையான, சிக்கனமான பாடல் வரிகள்.
தேன்சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும்வாழ்க..
பன்னீரில் ஆடும் செவ்வாழைக் கால்கள்
பனிமேடை போடும் பால்வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம் பருவங்கள் வாழ்க
வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தால் வேறென்ன வேண்டும்?
சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க
கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்
கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களே இதம் பதம் காலங்கள் வாழ்க
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்
பதிலளிநீக்குகீதா
இன்று வரலக்ஷ்மி விரதம் பூஜை ஸோ ஸ்ரீராம் பிசி.
நீக்குஎல்லோருக்கும் நல்லதே நடந்திடட்டும்.
கீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். ஆமாம்... ஆரம்பிக்குமுன் சில நிமிடங்கள்...!!
நீக்கு// இன்று வரலக்ஷ்மி விரதம் பூஜை ஸோ ஸ்ரீராம் பிசி.//
நீக்குஇந்த பாடல் கேட்டால் "பூஜைக்கு" நல்லது...!
அட ட்ராஃபிக் ஜாம்ல மாட்டிக்கிட்டாலும் முதல்ல வந்திருக்கேனே...மூச்சு இரைக்குது ஓடி வந்து...அங்கு வெங்கட்ஜி தளம் கருத்தை போட ரொம்ப லேட்டானதும் இங்கு வந்து ஓப்பன் பண்ண முயற்சி செய்தால் இதுவும் இத்தனை நேரம் எடுத்தது...கர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குகீதா
தளங்கள் ரொம்பவே படுத்துகிறது!
நீக்குஸ்ரீராம் அருமையான பாடல் இது. படம் பற்றியோ வேறு தகவலோ தெரியாது ஆனால் இந்தப் பாடல் பல முறை கேட்டு ரசித்த ஒன்ரு...அப்போது. அப்புறம் இப்பத்தான் கேட்கிறேன் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குசமீப காலமாகத்தான் வீட்டில் நெட்டில் பாடல்கள் கேட்க ஆரம்பித்துள்ளேன்....அது போல கதைகளும் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்...
கீதா
கேளுங்கள்... கேளுங்கள்... கேட்டு ரசியுங்கள்!
நீக்குமேலும் ஸ்ரீராம் சார் (மைண்ட் வாய்ஸ்) :-
நீக்குஆம் கேட்டு மட்டுமே ரசியுங்கள்... காட்சி என்னவென்பதை மறந்து விடுங்கள்...
நான் மட்டும் கோவிலுக்கு சென்று வருகிறேன்...
இது இன்றைய திட்டமிட்ட பதிவு ( scheduled post) என்பதை மட்டும் மறந்து விடுங்கள்...
மாலை வந்து அனைவருக்கும் மறுமொழி தருவேன்... ஐயோ.. நெட் வேறு படுத்துகிறது...!
//நான் மட்டும் கோவிலுக்கு சென்று வருகிறேன்...//
நீக்குஉங்களை கோவிலுக்குச் செல்லவேண்டாம் என்று நான் தடுக்கிறேனா என்ன DD? கோவிலுக்குச் சென்று விட்டு வந்து மற்ற வேலைகளை பார்ப்போம் இல்லையா?
வந்திருக்கும் தி/கீதாவுக்கும், இனி வந்து வரவேற்கப் போகும் துரைக்கும், கொழுக்கட்டை செய்வதில் மும்முரமாக இருக்கும் ஸ்ரீராமுக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்று வரலக்ஷ்மி நோன்பு கொண்டாடும் அனைவருக்கும் நோன்பு சிறப்பாகக் கொண்டாட வாழ்த்துகள், பிரார்த்தனைகள். வரலக்ஷ்மி அனைத்து வளங்களையும் அனைவருக்கும் தரப் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா...
நீக்குநல்வரவும், வணக்கமும்.
//கொழுக்கட்டை செய்வதில் மும்முரமாக இருக்கும் ஸ்ரீராமுக்கும் //
ஹிஹிஹிஹிஹி....
உங்க வீட்டு வரலக்ஷ்மியையும் உங்க கடைசி மாமா வீட்டு வரலக்ஷ்மியையும் பார்த்து வணங்கியாச்சு. கொழுக்கட்டை தான் கிடைக்கலை! இன்னிக்கு நானே பண்ணலாமானு நினைச்சேன். போணி ஆகறதில்லை! :(
நீக்குபடையலுக்கு - கொழுக்கட்டை / ரவா லட்டு / அதிரசம் / இன்னும் பிற... எல்லாம் 18 - for படையல்...!
நீக்குஅஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகா லட்சுமி ஸ்தோத்திரம் இன்னும் பிற சொல்லியாச்சு...
ஆனாலும் இன்றைய பதிவு 18+... சே...
waiting for இன்றைய ஸ்ரீராம் சாரின் சால்ஜாப்பு...!
நன்றி அம்மா...
சால்ஜாப்பு என்று முடிவு கட்டி விட்டால் என்ன சொன்னாலும் எதிர்வாதம்தான் வரும்!
நீக்குஓ இளையராஜாவின் குரு வெங்கடேஷ் அவர்களா...இது எனக்கு தகவல்...
பதிலளிநீக்குகீதா
ஆமாம், ஆமாம்! இளையராஜா தி வி பாலகிருஷ்ணன், பாலமுரளியிடம் கூட சங்கீதம் கற்றார் என்றுநினைக்கிறேன்.
நீக்கு"பொண்ணுக்குத் தங்க மனசு" தலைப்பு ஜிவாஜி நடிச்ச "ராமன் எத்தனை ராமனடி!" படத்தின் பாடலை நினைவூட்டியது. இந்தப் படமும் பார்த்திருப்பேனோ? நினைவில் இல்லை. தொலைக்காட்சி தயவில் சிவகுமார்-ஜெயசித்ரா நடித்த சில, பல படங்களைப் பார்த்திருக்கேன். "வெள்ளிக்கிழமை விரதம்" என்று கூட ஒரு படம் வந்திருந்ததுனு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅருண் பிரசாத் மூவிஸ் என்றாலே எனக்கு சிவாஜி கணேசன் நினைவுதான் வரும். இந்தப் படத்தில் உன்னிடம் மயங்குகிறேன் என்றொரு பாடலிருக்கும் என்று நினைவு. உன்னிடம் மயங்குகிறேன் என்றொரு படம் உண்டு.
நீக்குஎன்ன அருமையான யமுனாகல்யாணி!!! இழைசல்...பாட்டு கேட்கவில்லை ஸ்ரீராம் இனிதான் கேட்டு அப்புறம் வருகிறேன்...கருத்திற்கு
பதிலளிநீக்குஇந்தக் கமென்டை நெல்லையின் கண்ணில் படாமல் ஒளிச்சு வைச்சுருங்க ஸ்ரீராம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கீதா
யமன் கல்யாணியா? அடடே...
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்....
பதிலளிநீக்குஅப்போதும் இப்போதும் பேசப்படும் பாடல்...
பதிலளிநீக்குகவியரசரின் கைவண்ணம்....
இந்தப்படம் பார்த்ததில்லை...
நேற்ரு முந்தினம் கூட இந்தப் பாடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்....
பார்த்துக்கொண்டிருந்தீர்களா? கேட்டுக்கொண்டிருந்தீர்களா? அனைவருக்கும் பிடித்த பாடலிது என்று நினைக்கிறேன்.
நீக்குதுரை செல்வராஜூ சார்! இந்தப் படம் இன்றைக்கும் கூடப் பார்க்கிறமாதிரி கொஞ்சம் சுவாரசியமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டு தோழிகளுக்கிடையில் ஒரு சவால்! அதற்குத் தோதாக அவர்கள் திருமணம் செய்துகொள்வதும் இரு நண்பர்களை! அந்தஸ்துபேதம் எப்படித் தலைகீழாக மாறி கதாநாயகி ஜெயசித்ரா சவாலில் ஜெயிக்கிறார் என்பதுதான் கதை. ஆரம்பநாட்களில் ஜெயசித்ரா கொஞ்சம் துறுதுறுப்பாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று. நாயகர்கள் சிவகுமார், விஜயகுமார் எல்லாம் ஊறுகாய் மாதிரித்தான்!
நீக்குஅப்போது
நீக்குஎல்லாப் படங்களிலும் துறுதுறு என்று பேசிக் கொண்டிருக்கும் கேரக்டராக வருவார் ஜெயசித்ரா...
கூடப் படித்த பசங்கள் ஜெயசித்ரா மாதிரியே பொண்ணு தேடினானுங்க...
அப்போதெல்லாம் பன்னிரண்டாம் வகுப்பு முடிப்பதற்குள் கல்யாணம் காட்சி எல்லாம் முடிந்து விடும்....
பன்னீரில் ஆடும்
செவ்வாழைக் கால்கள்...
என்னமோ போங்க!...
இன்றும் எனது தளம் இங்கே வெளியாக வில்லை..
பதிலளிநீக்குஏன்... என்ன காரணமாக இருக்கும்?..
உங்கள் தளம் மாலைதான் வரமுடியும் என்றுநினைக்கிறேன்.
நீக்குஸ்ரீராம்! நானும் மின்னஞ்சலில் சொல்லவேண்டும் என்று நினைத்த விஷயம். ஏபி பக்கம் லோடாவதில் கடந்த ஒருவாரமாகவே வழக்கத்துக்கு மாறாக மிகவும் தாமதம்! அதையும் விட இடதுபக்கம் உள்ள விட்ஜெட்டுகள் லோடாவது இன்னும் அதிக நேரம் எடுக்கிறது.
நீக்குஏதோ சோதனை கிருஷ் ஸார்!!!
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். வரலக்ஷ்மி விரத வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குநல்ல பாடல். ஜி.கே.வெங்கடேஷ் ஸ்வரம் சொல்ல சொல்ல கண்ணதாசன் வெகு அனாயசமாக இந்த பாடல் வரிகளை சொன்னது பற்றி எஸ்.பி.பி. தொலைகாட்சியில் சுவைபட கூறினார்
பதிலளிநீக்குஓ... நான் கேட்டதில்லை.
நீக்குகன்னங்களே என்ற கடைசி பாரா வரிகளை கூர்ந்து கேட்டு ரசித்தேன் ஜி.
பதிலளிநீக்குவழக்கமாக கேட்ட பாடல்தான் இன்று விஷேசமாக கேட்டேன்.
நன்றி ஜி.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏.
பதிலளிநீக்குகேட்க. இனிமையான பாடல். கேட்டு ரசித்தேன்.
வணக்கம் வெங்கட். நன்றி.
நீக்குஇனிமையான பாடல்...
பதிலளிநீக்குநன்றி!!!
நீக்குஅருமையான பாடல்
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குசகோதரிகள் அனைவருக்கும் வரலெஷ்மி நோன்பு வாழ்த்துக்கள்.
நன்றி சார் , வாழ்க வளமுடன்
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குபாடல் இனிமையான பாடல் முன்பு வானொலியில் புதிய பாடல் தொகுப்பில் அடிக்கடி வரும்.
பதிலளிநீக்குகேட்டு மகிழ்ந்தேன் இப்போதும்.
இந்த படம் பார்த்து இருக்கிறேன் தொலைக்காட்சியில், வானொலியில் திரைச்சித்திரமாய் கேட்டு இருக்கிறேன்.
காவிரியின் மேன்மை கூறும் பாடல் இடம் பெறும். கிணறு சொந்தமாய் வெட்டுவார்கள் இந்த கதையில்.
இரண்டு தோழிகளின் கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்ட சபதம் தான் கதை .
ஜெயசித்திரா, விதுபாலா, சிவக்குமார், விஜயக்குமார் நடித்த படம். விஜயக்குமாருக்கு வேறு யாரோ குரல் கொடுத்து இருப்பார்கள்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குவானொலியில் ஒலிச்சித்திரமாய் ஒலி பரப்புவார்கள்.
பதிலளிநீக்குஇப்போதெல்லாம் அலுவலக வேலைகளுக்கிடையே ஆனந்தமாக திரையிசையில் மூழ்குவதற்கு நேரம் கிடைக்கிறது....
பதிலளிநீக்குபுதன் கிழமை மீண்டும் பார்த்த திரைப்படம் அக்னி நட்சத்திரம்..
விஸ்வநாத்திற்கு இரண்டாவது மனைவியாக அசோக்கிற்கு அம்மாவாக - கமலா....
ஆமாம். அதிலும் நடித்திருப்பார்.
நீக்குமன்னிக்கவும் ஸ்ரீராம் சார்... இதை சொல்வதற்கு எனது தளத்தில் கருத்துரை மேலே உள்ள குறளாக + குரலாக சொல்கிறேன்...
பதிலளிநீக்குschedule-படி = திட்டமிட்டபடி பதிவை வெளியீடு செய்வதை இனிமேலும் தொடர வேண்டாம் என்பதே எனது விருப்பம்...
எவ்வளவோ பாடல்கள் உள்ளது... இன்று இது தேவையா...? அதற்கு எடுத்துக்காட்டு :-
//ஆனால் காட்சியில்லாமல் கானம் இடம்பெறுகிறது இந்த வாரம்...// புரிந்தால் நலம்...!
இந்த பாடலை எந்த நாளிலும் சொல்லலாம்... இன்று எதற்கு...? உங்கள் மீது ஒருவித எரிச்சலை விட (கவனிக்க : எரிச்சல்... கோபம் அல்ல) இதற்கு ஒத்துவீதும் கருத்துரையாளர்கள் மீது தான் கோபம்... Relax... Relax...
கரகாட்டக்காரன் வசனம் : (மாற்றப்பட்டுள்ளது)
இவங்க கருத்துரை சொல்வதும், அவங்க அதுக்கு மறுமொழி சொல்றதும், ஜிவாஜியும் பத்மினியும்... அதே அதே...
நன்றி...
இன்றைய என்றைய வரலக்ஷ்மியை விட சரஸ்வதி தான் வலைப்பதிவிற்கு முக்கியம்...
ஒன்றுமே புரியவில்லை டிடி. ஜிவாஜியும் பத்மினியும் இங்கே எங்கே வந்தார்கள்? இந்தப் பாடலில் என்ன குறை?
நீக்குஅம்மா நீங்கள் கரகாட்டக்காரன் பார்க்கவில்லை போலும்... அதை ஸ்ரீராம் சார் அறிவார்...
நீக்குமேலே தங்களின் கருத்துரைக்கு ஒரு மறுமொழி கொடுத்துள்ளேன்... அதைப் பார்க்கவும்...
// இந்தப் பாடலில் என்ன குறை? //
மற்றபடி இந்தப்பாடலில் எந்தக்குறையும் இல்லை... காட்சியுடன் கானத்தை பாருங்கள்... புரிந்தால் நலம்...
நன்றி அம்மா...
எல்லாமே நலம் தான்...
நீக்குகாட்சியுடன் இன்றைய பாடல் வழங்கப்பட்டால் தான் என்ன?...
எல்லாவற்றையும் எல்லாரும் கடந்து தான் வந்திருக்கிறோம்....
73/74 ல் இந்தக் காட்சியைப் பார்த்ததற்கும்
2019 ல் இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கும்
வித்தியாசம் தெரிகிறது..
ஆனாலும்
நீங்கள் இதையெல்லாம் இன்னும் கடந்து போகவில்லையா!....
/// ஒத்து ஊதும் கருத்துரையாளர்கள் ///
நீக்குஎன்ன குற்றம் செய்தேன்?...
ஐயா... தங்களை சொல்லவில்லை... உங்களின் பதிவுகளே உங்களை பறைசாற்றும்...
நீக்கு// எல்லாவற்றையும் எல்லாரும் கடந்து தான் வந்திருக்கிறோம்...//
உண்மை... ஆனால், இன்றைக்கு இது தேவையா...? என்னுடைய மற்ற மறுமொழிகளையும் வாசிக்கவும்... தயவுசெய்து மேலும் உரையாடல் இதில் வேண்டாம்... நன்றி...
//புரிந்தால் நலம்...!//
நீக்கு//காட்சியுடன் கானத்தை பாருங்கள்... புரிந்தால் நலம்...//
புரியாதது அதைவிட நலம்!!!!
// ஸ்ரீராம்! நானும் மின்னஞ்சலில் சொல்லவேண்டும் என்று நினைத்த விஷயம். ஏபி பக்கம் லோடாவதில் கடந்த ஒருவாரமாகவே வழக்கத்துக்கு மாறாக மிகவும் தாமதம்! அதையும் விட இடதுபக்கம் உள்ள விட்ஜெட்டுகள் லோடாவது இன்னும் அதிக நேரம் எடுக்கிறது.//
பதிலளிநீக்குகிருஷ்ண மூர்த்தி S ஐயா...
வாசிக்க :- → இணைப்பு ←
உங்களுக்கு ஒரே ஒரு பக்கம் தான்... எனக்கு எல்லா பக்கமும் + ஒன்று தான்...!
மேற்கண்ட பதிவில் புரியவில்லை என்று தொடர்பு கொள்ளவும்... நன்றி...
இன்று வரலஷ்மி விரதம் “பாக்கியாத லட்சுமி பாரம்மா” பாடல் எதிர்பார்த்தேன் இதுவும் ரசித்த பாடல்தான்
பதிலளிநீக்குநான் அப்படி போடுவதில்லை ஜி எம் பி ஸார்!
நீக்குமறுபடியும் உரிமையோடு சொல்கிறேன் :-
பதிலளிநீக்குschedule-படி = திட்டமிட்டபடி பதிவை வெளியீடு செய்வதை இனிமேலும் தொடர வேண்டாம்...
இதற்கு அடுத்து eb ஆசிரியர்களே ஓரேவொரு வாரம்... வேண்டாம்... ஏனெனில்...
இனிமேல் உங்கள் blog என்று பெயரையா மாற்ற முடியும்...?
புரியா விட்டாலும் நன்றி...
//schedule-படி = திட்டமிட்டபடி பதிவை வெளியீடு செய்வதை இனிமேலும் தொடர வேண்டாம்...//
நீக்குஇந்தப் பாடல் முதல் நாள் இரவுதான் ஷெட்யூல் செய்யப்பட்டது DD.
//இதற்கு அடுத்து eb ஆசிரியர்களே ஓரேவொரு வாரம்... வேண்டாம்... ஏனெனில்...
/
:)))
நான் ரசித்த பாடல்களில் ஒன்று.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் வரலெட்சுமி விரத வாழ்த்துகள்.
நல்ல பாடல். நானும் முன்பெல்லாம் அடிக்கடி கேட்கும் போது ரசித்திருக்கிறேன். எஸ்.பி.பியின் குரல் மிகவும் இனிதாக இருக்கும். எஸ்.ஜானிகியின் குரலும் இனிதாக உடன் சேர்ந்து அருமையான பாடல். படம் பார்த்தாக நினைவில்லை. பாடல் இசையமைத்தவர் விபரங்கள் அறிந்து கொண்டேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குபாடல் பலமுறை கேட்டிருக்கிறேன்.இனிமை.
பதிலளிநீக்குவரலஷ்மி விரத வாழ்துகள்.
திருணோணமலை காளிஅம்மனை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
நன்றி சகோதரி மாதேவி.
நீக்குகச்சித வரிகளில் கண்ணதாசன். கதகதப்பான பாடல் (பெங்களூர். லேசான குளிர்!). ஜிகே வெங்கடேஷ் என்பதை இப்போதே அறிகிறேன்.
பதிலளிநீக்குஅலட்டல் தெறிக்காத அந்தக்கால எஸ் பி பி. இனிமை. அவருடைய அத்தகைய பாடல்கள் எனைக் கவர்கின்றன. உதா: 1. வானிலா.. நிலா அல்ல..உன் வாலிபம் நிலா! (கவிஞர் சும்மா விளையாடியிருக்கிறார்) 2.ஆயிரம் நிலவே வா.. 3. பௌர்ணமி நிலவில் பனிவிழும் இரவில்.. 4. விழியிலே மலர்ந்தது.. உயிரிலே கலந்தது.. (பஞ்சு அருணாசலத்தை நாம் சரியாகக் கவனிக்கவில்லையோ என நினைக்கவைக்கும் லிரிக்ஸ்.)
உங்கள் புண்ணியத்தில் யூ-ட்யூபிற்குள் கொஞ்சம் நுழைந்துவந்தேன்..
நன்றி ஏகாந்தன் ஸார்.
நீக்கு’மகா நடி’ (தெலுங்கு) மகாநடிப்பு காண்பித்ததாக நாட்டின் சிறந்த நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே கீர்த்தி !
பதிலளிநீக்குசிறந்த நடிகர்களாக பாலிவுட்டின் ஆயுஷ்மான் குரானா ( Andhaa Dhun ), விக்கி கௌஷல் ( Uri ). சிறந்த தமிழ்ப் படமாக.. இல்லை..நேர்கொண்ட பார்வை இல்லை.. ‘பாரம்’ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. சிந்தனையில் பாரமேற்றவேண்டாம். இன்னும் பொதுஜனங்களுக்கு அது ரீலீஸாகவில்லை!
ஆமாம், பார்த்தேன்.
நீக்குநேயர் விருப்பம் காணவில்லையே.:)
பதிலளிநீக்கு