சென்ற வாரப் பதிவில், கேள்வி கேட்ட கற்பனைப் பெயர்கள், ஊர் ஆகிய விவரங்களை இரசித்துப் பாராட்டிய பல்லாயிரக் கணக்கான (இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்!) வாசகர்களுக்கு கோடானு கோடி (இதுவும்) நன்றி!
பானுமதி வெங்கடேஸ்வரன் :
சில கை கடிகாரங்களில் வாட்டர் ப்ரூஃப் என்றும், சில கை கடிகாரங்களில் வாட்டர் ரெசிஸ்டெண்ட் என்றும் குறிப்பிடப்படுகின்றதே? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
$ வாட்டர் ப்ரூப் என்று சொன்னால் ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை தண்ணீர் உள்ளே புகாது.
Water resistant என்றால் தினசரி உபயோகத்தில் தண்ணீர் படும் பட்சத்தில் ஒன்றும் நேராது என்றாலும் தண்ணீருக்குள் விழுந்தால் நின்று போகும் வாய்ப்பு.
$ Most manufacturers claim their devices are either water-resistant or waterproof. Water-resistant means the smartphones can survive small splashes of water, rain, sweat, a drop in the snow, or a spill. Waterproof means the phone will be fine if it's completely submerged or soaked, so it'll be fine if you accidentally drop it in the pool, toilet, or your drink. You can get your waterproof phone wet from the shower, sink, or bathtub.
& சரியான பதிலை $ கூறிவிட்டதால், வாட்டர் ப்ரூஃப் ஜோக் ஒன்று இப்போ சொல்லிடறேன். படிச்சு சிரிங்க!
மிஸ்டர் எக்ஸ் தன்னுடைய சுவிட்சர்லாந்த் சுற்றுலா பயணத்தின்போது என்ன செய்தார் என்றால், அங்கு பிரபலமான ஒரு வாட்ச் கம்பெனிக்குச் சென்றார். அங்கே உள்ள விற்பனைப் பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்.
X : " சார் உங்க கம்பெனி வாட்ச் சிறப்புகள் என்னென்ன?"
வி பி அ : " சார் - நாங்க தயாரிக்கும் வாட்சுகள், water proof, shock proof, heat resistant, anti magnetic, + + + ...."
X : " நான் அதை டெஸ்ட் செய்யலாமா?"
வி பி அ : " ஓ எஸ் ! தாராளமாக! என்ன டெஸ்ட் செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்; நாங்களே அதை உங்கள் கண்முன்னால் செய்து காட்டுகிறோம்."
X : " ஓ கே ! இதை செய்யுங்கள். முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் எடுத்து அதைக் கொதிக்கவையுங்கள். அப்புறம் உங்க தயாரிப்பு வாட்சை கொதிநீரில் ஐந்து நிமிடங்கள் ஊறப்போடுங்கள். பிறகு அந்த வாட்சை கடலுக்குள் ஒரு கிலோமீட்டர் ஆழத்துக்கு கொண்டுசெல்லுங்கள். அதற்குப்பின், அதை இதோ இந்தப் பாறை மீது வெயிலில் வையுங்கள். அஞ்சு கிலோ சுத்தியலால், அதன் மீது ஒரு அடி அடியுங்கள். இதெல்லாம் முதலில் செய்யுங்கள். அப்புறம் என்ன செய்யவேண்டும் என்று சொல்கிறேன். "
வி பி அ : " சார்! நீங்க முதலில் இந்த இடத்தை விட்டுச் செல்லுங்கள். உங்கள் பரிசோதனைகள் எங்கள் வாட்சுக்கு சரிப்படாது. "
X : " Sir ! But you told that your watches are water proof, shock proof, heat resistant, anti magnetic, etc etc ....."
வி பி அ : " Yes sir ! Our watches are water proof, shock proof etc. But they are not fool proof! "
கீதா சாம்பசிவம் :
& கொண்டாட வேண்டியது அவசியமே. இன்னும் நான்கைந்து தலைமுறைகள் கடந்தால் சுதந்திர நாளை கண்டவர்கள் யாரும் உயிரோடிருக்கமாட்டார்கள். ஒவ்வொரு வருடமும் நம் தேச விடுதலை, குடியரசு அமைந்த விதம் எல்லாவற்றையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல இந்தக் கொண்டாட்டங்கள் அவசியம்.
2.நீங்கள் சிறு குழந்தையாக இருக்கையில் சுதந்திர, குடியரசு தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருப்பீங்க! இப்போதும்
அவ்வாறு உண்டா? உங்கள் குடியிருப்பு வளாகம் அல்லது உங்கள் தெருவில் அனைவரும் இணைந்து சுதந்திர தினம் கொண்டாடுவது
உண்டா?
2.நீங்கள் சிறு குழந்தையாக இருக்கையில் சுதந்திர, குடியரசு தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருப்பீங்க! இப்போதும்
அவ்வாறு உண்டா? உங்கள் குடியிருப்பு வளாகம் அல்லது உங்கள் தெருவில் அனைவரும் இணைந்து சுதந்திர தினம் கொண்டாடுவது
உண்டா?
& பக்கத்தில் எங்கு சுதந்திர, குடியரசு நாள் கொண்டாட்டங்கள் நடந்தாலும், தவறாமல் கலந்துகொள்வேன். குழந்தைகளின் சந்தோஷ முகங்களையும் மகிழ்ச்சியையும் காணும்போது என்னையும் அந்த சந்தோஷம் பற்றிக்கொள்ளும்.
4.கொடி ஏற்றி, இறக்குவதில் உள்ள சட்டதிட்டங்கள் பற்றி அறிவீர்களா?
& அதெல்லாம் தெரியாது! ஆனால், கொடி ஏற்றினால், மிட்டாய் கொடுக்கவேண்டும் என்று சட்டம் இருக்கு என்று பள்ளிக்கூட நாட்களில் நினைத்தது உண்டு!
5.ரக்ஷாபந்தன் பற்றி உங்கள் கருத்து என்ன?
அதை வட மாநிலங்களில் மட்டுமே கொண்டாடுகின்றனர். இங்கே ஏன் கொண்டாடுவது இல்லை? உங்களுக்கு இதைப் பற்றி எப்போது தெரியும்?
இந்தக் கேள்வியில் முதல் கேள்விக்கு மட்டும் பதிலளித்துவிட்டு மற்றவற்றுக்குப் பதில் அளிக்காமல் இருந்துடாதீங்க! :))))
& ரக்ஷாபந்தன் பற்றி அதிகம் தெரியாது. எனக்கு யாரும் கட்டியதும் இல்லை. சில படங்களில் மட்டும் நகைச்சுவையாக சில ரக்ஷாபந்தன் காட்சிகளைக் கண்டதுண்டு. எங்கள் குடும்பங்களில் நாக சதுர்த்தியன்று சகோதரிகள் கையில் தோரணம் கட்டி, ஆசீர்வாதம் வாங்கி அல்லது கொடுத்து பர்சிலிருந்து ரூபாயை உருவிக்கொண்டு சென்றுவிடுவார்கள். இங்கே ஏன் கொண்டாடுவதில்லை என்று நினைக்கிறீர்கள். பெயர் மாறலாம். ஆனால் கொண்டாட்டம், தாத்பரியம் எல்லாம் ஒன்றே!
முன்னெல்லாம் அதாவது சில, பல வருடங்கள் முன்னர் சென்னைக் கல்லூரி மாணவ, மாணவிகள் ரக்ஷாபந்தனைக் கொண்டாடிப் பார்த்திருக்கேன். இப்போது அப்படி இல்லை? ஏன்? பார்க்கப் போனால் வட இந்திய உணவு, உடைனு இப்போத்தான் தமிழ்நாட்டில் அதிகம் காண முடிகிறது! அப்படியும் ஏன் இல்லை?
இந்தக் கேள்வியில் முதல் கேள்விக்கு மட்டும் பதிலளித்துவிட்டு மற்றவற்றுக்குப் பதில் அளிக்காமல் இருந்துடாதீங்க! :))))
& ரக்ஷாபந்தன் பற்றி அதிகம் தெரியாது. எனக்கு யாரும் கட்டியதும் இல்லை. சில படங்களில் மட்டும் நகைச்சுவையாக சில ரக்ஷாபந்தன் காட்சிகளைக் கண்டதுண்டு. எங்கள் குடும்பங்களில் நாக சதுர்த்தியன்று சகோதரிகள் கையில் தோரணம் கட்டி, ஆசீர்வாதம் வாங்கி அல்லது கொடுத்து பர்சிலிருந்து ரூபாயை உருவிக்கொண்டு சென்றுவிடுவார்கள். இங்கே ஏன் கொண்டாடுவதில்லை என்று நினைக்கிறீர்கள். பெயர் மாறலாம். ஆனால் கொண்டாட்டம், தாத்பரியம் எல்லாம் ஒன்றே!
முன்னெல்லாம் அதாவது சில, பல வருடங்கள் முன்னர் சென்னைக் கல்லூரி மாணவ, மாணவிகள் ரக்ஷாபந்தனைக் கொண்டாடிப் பார்த்திருக்கேன். இப்போது அப்படி இல்லை? ஏன்? பார்க்கப் போனால் வட இந்திய உணவு, உடைனு இப்போத்தான் தமிழ்நாட்டில் அதிகம் காண முடிகிறது! அப்படியும் ஏன் இல்லை?
& கொண்டாடிக்கிட்டுதான் இருக்காங்க. நீங்க பார்க்கவில்லை. மேலும் ரக்ஷாபந்தனுடன் அழகான பெண்கள் வெளியே வந்தால், பல ஆண்கள் அஞ்சி ஓடி ஒளிந்துவிடுகிறார்கள்!
தமிழ்நாட்டில் சுதந்திர, குடியரசு தினங்களில் சமபந்தி போஜனம் என அரசியல் தலைவர்களும் ஆட்சி புரியும் அமைச்சர்களும் நடத்துகின்றனர். ஆட்சியில் இருக்கும் அரசு அறநிலையத்துறை சார்பில் நடத்துகிறது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? எல்லா ஓட்டல்களிலும் எல்லாப் பொதுமக்களும் கலந்து தான் உணவு உண்கின்றனர். அதே போல் அடுக்கு மாடிக் குடியிருப்புக்களில் மக்கள் கலந்து தான் வாழ்கின்றனர். இத்தகைய சூழலில் சமபந்தி போஜனமோ, சமத்துவபுரமோ தேவையா? அதிலும் இதிலும் உள்ள வேறுபாடு என்ன?
தமிழ்நாட்டில் சுதந்திர, குடியரசு தினங்களில் சமபந்தி போஜனம் என அரசியல் தலைவர்களும் ஆட்சி புரியும் அமைச்சர்களும் நடத்துகின்றனர். ஆட்சியில் இருக்கும் அரசு அறநிலையத்துறை சார்பில் நடத்துகிறது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? எல்லா ஓட்டல்களிலும் எல்லாப் பொதுமக்களும் கலந்து தான் உணவு உண்கின்றனர். அதே போல் அடுக்கு மாடிக் குடியிருப்புக்களில் மக்கள் கலந்து தான் வாழ்கின்றனர். இத்தகைய சூழலில் சமபந்தி போஜனமோ, சமத்துவபுரமோ தேவையா? அதிலும் இதிலும் உள்ள வேறுபாடு என்ன?
& எல்லாம் ஒரு ஷோதான்! நல்ல நோக்கம்தான். ஆனால் ஆத்மார்த்தமாக பங்குகொள்ளும் அரசியல்வாதிகள் மிகவும் குறைவு. சும்மா பெயருக்காகவும், விளம்பரத்துக்காகவும் செய்யாமல் இருந்தால் நல்லது. உணவு உண்ணுவது என்பது அல்ல பாயிண்டு. உணர்வுகளை மதிக்கவேண்டும். இந்த சமபந்தி போஜனம், கலந்துண்ணுவது எல்லாம் இன்னும் அதிக தூரம் செல்லவேண்டும். ஜப்பானின் 'டீ செரிமனி' நிகழ்வு போல.
======================================
'பி ஏ சி வேண்டாம், போர் அடிக்குது' என்று எனக்கு மெசேஜ் அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி கூறி, பி ஏ சி யை மறப்போம், மன்னிப்போம்!
======================================
எங்கள் கேள்வி: உங்கள் பதில்களைப் பதியுங்கள்.
நீங்கள் இதுவரையிலும் படித்த non fiction புத்தகங்களில், உங்களை மிகவும் கவர்ந்த, அல்லது உங்கள் வாழ்க்கையையே மாற்றி அமைத்த புத்தகம் எது?
======================================
======================================
எங்கள் கேள்வி: உங்கள் பதில்களைப் பதியுங்கள்.
நீங்கள் இதுவரையிலும் படித்த non fiction புத்தகங்களில், உங்களை மிகவும் கவர்ந்த, அல்லது உங்கள் வாழ்க்கையையே மாற்றி அமைத்த புத்தகம் எது?
======================================
மீண்டும் சந்திப்போம்,
இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம் அப்புறம் இங்கு வரப் போகும் அனைவருக்கும் காலை வணக்கம். இனிய நாளாக அமைந்திடவும்.
பதிலளிநீக்குபானுக்காவின் கணவர் விரைவில் குணமாகிட வேண்டும் என்ற பிரார்த்தனைகளும்.
கீதா
காலை வணக்கம்
நீக்குவாட்ச் விளக்கங்கள் சூப்பர்.
பதிலளிநீக்குஜோக் ஏற்கனவே வாசித்திருந்த நினைவு இப்போது மீண்டும் சிரித்துவிட்டேன் வாசித்து.
மீதிக்கு வருகிறேன்..
கீதா
நன்றி
நீக்குரக்ஷாபந்தனுடன் அழகான பெண்கள் வெளியே வந்தால், பல ஆண்கள் அஞ்சி ஓடி ஒளிந்துவிடுகிறார்கள்! //
பதிலளிநீக்குஹா ஹா ஹா அதானே!!
கௌ அண்ணா சொல்லியிருப்பது போல் பெயர் தான் மாறுகிறது ஆனால் அடிப்படைத் தாத்பர்யம் ஒன்று போலத்தான் இருக்கிறது.
இங்கு பக்கத்துக் கடையில் வித விதமாகக் கயிறுகள் பல டிசைன்கலில் பரப்பி வைத்திருந்தார்கள். இங்கு வட இந்தியர்கள் அதிகம்.
அது போல என் தில்லித் தங்கை இப்போது வந்து சென்ற போது தம்பிக்கு கையில் கயிரு கட்டிட தம்பி அவளுக்குப் பரிசு கொடுத்திட....அவள் மணம் ஆகி தில்லி சென்றுவிட்டதால் இப்பழக்கம் வந்தது.
கீதா
பாச மலர்கள் வாழ்க!
நீக்குதமிழ்ல டி வாங்கினவங்க இங்க வந்தாங்களா? நான் இன்னும் பயத்தில் கீழ போய்ப் பார்க்கவே இல்லையாக்கும். எல்லாம் பயம் (மய்யத்தின் குரலில்!!!!) எதுக்குக் கேட்கிறேன் என்றால் மேலே இருக்கும் என் கருத்துகளில் உள்ள ஸ்பெல்லிங்க் மிஸ்ரேக்கு (இப்படி அடித்தால்தான் தமிழ்ல டி வாங்கினவங்களுக்குப் புரியும்!!!!!!) இருக்கல்லோ? அது அவங்க கண்ணில் படாமல் கொஞ்சம் மறைச்சு வைச்சுருங்க கௌ அண்ணா அல்லது ஸ்ரீராம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் வேண்டி ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.
நடுவில் இரண்டு நாட்கள் வலைத்தளம் வரமுடியாத சூழ்நிலைகளாக அமைந்து விட்டது. மன்னிக்கவும். அனைவரின் தளங்களுக்கும் இனிதான் செல்ல வேண்டும். கேள்வி பதில்கள் அருமை. மற்றொரு முறை நிதானமாக படித்து விட்டு மீண்டும் வருகிறேன்..பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி, மீண்டும் வருக.
நீக்குஅனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். விடுமுறையை ஆனந்தமாய்க் கழிக்கும் துரைக்கும் வாழ்த்துகள், நல்வரவு, வணக்கம், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குநல்வரவு, வணக்கம்.
நீக்குகுலதெய்வம் கோயிலுக்குப் போய்விட்டு வந்தப்புறமா ஸ்ரீராமைப் பார்க்கவே முடிவதில்லை! ஏன் என்ன ஆச்சு? உடல் நலம் தானே?
பதிலளிநீக்குநலமே!
நீக்குஇன்னிக்கு மற்ற ஆ"சிரி"யர்கள் இருவரையும் # $ காணோம். $ கடிகாரங்கள் பற்றிய கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி இருக்கார். மூன்றாவது கேள்விக்கு பதிலைக்காணோமேனு கௌதமனை மாட்டிவிடப் பார்த்தால் நானே 3 வது கேள்விக்கு எண்ணை 4 என மாற்றிப் போட்டிருக்கேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அ/வ/சி
பதிலளிநீக்குதவறு என் பக்கம். உங்கள் கேள்விகளை நான் நேற்றுதான் பார்த்தேன். மற்ற ஆசிரியர்களை கலந்தாலோசிக்க நேரம் இல்லாமல் போய்விட்டது.
நீக்குநாகசதுர்த்தி சகோதர, சகோதரிகளுக்கான பண்டிகை என்பதை இன்றே அறிந்தேன். ஸ்ரீராமும் வேறொரு சமயத்தில் பதிவில் கருத்தாகக் கொடுத்திருந்தார். கடைசிக்கேள்விக்கு நல்ல பதில். அனைத்துக்கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொன்னதுக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி, நன்றி,
நீக்குநாகசதுர்த்தி பற்றி நானும் இன்றுதான் அறிந்தேன் கீதாக்கா...
நீக்குகீதா
சுவாரஸ்யமான பதில்கள் குறிப்பாக வாட்சை உடைப்பதை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஸ்ரீராமும் ஊருக்குப் போய் விட்டாரோ ஹாஹா,
பதிலளிநீக்குஅன்பு கீதாமா, அன்பு கீதா ரங்கன், அன்பு கமலாமா அனைவருக்கும் இந்த நாள் நன்னாளாக இருக்கட்டும்.
கேள்விகள் கேட்ட கீதா, பானுமாவுக்குப் பாராட்டுகள்.
பதில்களும் அருமை.
கொடியேற்றுவதை ஒரு கடமையாக என் தந்தை செய்வார். ஏற்றுவது இறக்குவது, மடித்துப் பெட்டியில் வைப்பது
எல்லாம் உண்டு.
இப்பொழுது எல்லாம் தொலைக்காட்சியில் தான்.
இனிய காலை வணக்கம். ஆம். சுதந்திரத்தின் பெருமை உணர்ந்தவர்கள் கொடிக்கு மரியாதை செலுத்துவார்கள்.
நீக்குநான் ஃபிக்ஷன் தமிழில் படித்ததுண்டு.
பதிலளிநீக்குமஞ்சரியில். ஆங்கிலத்தில் இல்லை. லிண்டா குட்மன் புஸ்தகம் வேண்டுமானால் சொல்லலாம்.
வல்லிம்மா... நானும் இரண்டையும் (சன்ஷைன்ஸ் மூன்ஷைன்ஸ்) படித்திருக்கிறேன் 89கள்ல. அப்புறம் யாரைப் பார்த்தாலும் இவங்க எந்த ராசின்னு கேட்டுப்பேன்.
நீக்குஆம். நானும் படித்திருக்கேன். ஜோதிடத்தில் சுவாரஸ்யம் வந்தது அந்த லிண்டா குட்(வு)மன் புத்தகம் படித்துதான்!
நீக்குநன்றி கௌதமன் ஜி.
நீக்குஉடல் ஆரோக்கியம் பற்றி நிறைய புத்தகங்கள் படிப்பேன்.
லிண்டா குட் வுமன் //நல்ல எழுத்தாளர்.
ராசிகள் படியும் ,எண்கள் படியும் அனைவரது குண நலன் களை
அவர் விவரிப்பது வெகு சுவாரஸ்யம்.
@ நெல்லைத் தமிழன். எனக்கு எண்களிடம் மிகுந்த நம்பிக்கை.
அதே போல கை ரேகையிலும்.
இந்த non fiction புத்தகம் குறித்த கேள்வியை இப்போது தான் கவனிக்கிறேன்.François Gautier French Journalist எழுதியவற்றை நிறையப் படித்திருக்கிறேன். அவ்வப்போது படிப்பேன். பையர் சில புத்தகங்களை எனக்கு ஸ்கான் செய்து ப்ரின்ட் அவுட் எடுத்துக் கொடுத்திருக்கார். இது non fiction புத்தகங்களில் வருமானு தெரியலை! :))))
நீக்குகேள்விப்பட்டதில்லை. இனிமேல் கூகிள் ஆண்டவர் துணை கொண்டு பார்க்கிறேன்.
நீக்குகேள்வி பதில்களை ரசித்தேன். இந்த வாரமாவது கேள்விகள் அனுப்பணும். (பழைய கேள்விகள் பாக்கி இருக்கோ?)
பதிலளிநீக்குஎங்கள் பக்கம் ஒன்றும் பாக்கி இல்லை சார்!
நீக்குநான் படித்ததில் 'இமயமலையில் ஒரு இதய குரு' படம் (ஆசிரியம் ஸ்ரீ எம்) புத்தகம்தான் மிக மிக அருமையான புத்தகம். அதுதான் இதைப்போன்ற சில நூல்களை வாசிக்க எண்ணத்தை ஏற்படுத்தித் தந்தது. இதனை இன்னும் 20 வருடங்களுக்கு முன்பே படித்திருக்கக்கூடாதா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
பதிலளிநீக்குபாரததேசம் ஒரு கர்ம பூமி என்பதை ஆணித்தரமாகச் சொல்லும் புத்தகம். இதன் விமர்சனத்தை (அல்லது அறிமுகத்தை) ஒரு நாள் 'சனி அல்லது ஞாயிறு' கிழமைக்கு அனுப்பலாம் என எண்ணியிருக்கிறேன்.
அனுப்புங்க, அனுப்புங்க. நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்!
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குகடிகாரம் பதில்கள் சிறப்பு. நகைச்சுவை படித்ததே என்றாலும் மீண்டும் ரசிக்க முடிந்தது.
ரக்ஷா பந்தன் - நம் ஊரில் இப்போதெல்லாம் நிறைய வட இந்திய பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள் - ஹோலி உட்பட!
ஆம். உண்மைதான்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்!
நீக்குகேள்வியும், பதில்களும் அருமை.
பதிலளிநீக்குவாட்டர் ப்ரூஃப் ஜோக் மிக அருமை.
ரக்ஷாபந்தன் வடநாட்டில், நாகசதுர்த்தி கன்னடம், ஆந்திரம் நாடுகளில் விமரிசையாக செய்வார்கள்.
ரக்ஷாபந்தன் இப்போது தமிழ் நாட்டில் நம் குடும்பங்களில் புகுந்து கொண்டது.
உடன்பிறப்புகள் ஒற்றுமையாக இருந்தால் சரிதான் என்று பெரியவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
அதே, அதே!
நீக்குகோமதிக்கா தமிழ்நாட்டிலும் கனுப்பொங்கல்னு வைக்கிறது சகோதர சகோதரிகளின் ஒற்றுமைக்காகத்தானே?! இல்லையா...
நீக்குகீதா
ஆமாம் கீதா.
நீக்குகேள்வி பதில்கள் அருமை...
பதிலளிநீக்குவாழ்க்கையையே மாற்றி அமைத்து கொண்டிருக்கிற புத்தகம் : உலகப்பொதுமறை
ஆனால், அறிந்தது மலையளவு... தெரிந்தது கடுகளவு... புரிந்தது அணுவளவு...
நன்றி! ஆம். உண்மை.
நீக்கு//பி ஏ சி வேண்டாம், போர் அடிக்குது' என்று எனக்கு மெசேஜ் அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி கூறி...//
பதிலளிநீக்குவேண்டாம் என்றவர்களுக்கு நன்றியா, அப்போ வேண்டுங்கறவங்களுக்கு? அநன்றியா?..
வ்
வேண்டும் என்று யார் கேட்டார்கள் ? :))
நீக்கு//இதன் விமர்சனத்தை (அல்லது அறிமுகத்தை) ஒரு நாள் 'சனி அல்லது ஞாயிறு' கிழமைக்கு அனுப்பலாம் என எண்ணியிருக்கிறேன்.. //
பதிலளிநீக்குநான் கேட்ட விமரிசனப் பகுதிக்கு அனுமதி தந்து விட்டார்களா, நெல்லை?
அப்படீல்லாம் ஒன்றும் தெரியலை ஜீவி சார்... இந்தப் புத்தகம் என்னைக் கவர்ந்த புத்தகம். விமர்சனமோ இல்லை முக்கியக் குறிப்புகளோ அனுப்பினால் பிரசுரம் செய்வார்களா என்று தெரியாது.
நீக்குசனிக்கிழமை பதிவுகளில் வெளியிடலாம் என்று நினைக்கிறேன். ஸ்ரீராம் என்ன சொல்கிறார்?
நீக்குகணேஷ் பாலாவும், ஆ.வி. யும் சேர்ந்து புத்தக விமரிசனங்களுக்கு எனத் தனி வலைப்பதிவு வைத்திருந்தார்கள். ஆ.வி. கேட்டுக் கொண்டதற்கிணங்க நானும் 2,3 விமரிசனங்களை அங்கே பகிர்ந்திருக்கிறேன். கல்யாணம் ஆனதும் ஆ.வி ஆளே காணாமல் போயிட்டார். கல்யாணத்துக்கும் கூப்பிடலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))
நீக்குநேற்றே சொல்லவேண்டும் என்று நினைத்தேன். தாராளமாக அனுப்பலாம். இந்த வாரம் விமர்சனம் யாரும் முன்னெடுக்கவில்லை என்பதால் வெளியிடலாம்.
நீக்குஎதுக்கு இப்ப இந்த ’Happy Underground Day'? டெல்லில தேடிக்கிட்டிருக்கற ஆளைப்பத்திப் பேசாம இருக்கமுடியலையாக்கும்!
பதிலளிநீக்குஓஹோ! அப்படி ஒரு கோணம் இருக்குதா! அவர் ரக்ஷா பந்தனுக்கு பயந்து ஒளியவில்லை.
நீக்குஹாஹாஹா கௌதமன் சார், நல்ல சமாளிப்ஸ்! :))))))
நீக்குதொலைக்காட்சியில் வரும் இப்போதைய பட்டிமன்றங்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதிலளிநீக்குபார்க்கும் வழக்கம் உண்டா?
அவற்றில் ஆக்கபூர்வமான சிந்தனைகளை ஏற்படுத்தும் வண்ணம் தலைப்புக்களில் வாதாடுகிறார்களா?
பட்டிமன்றங்களில் சொல்லும் ஹாஸ்யங்கள் உங்களுக்குச் சிரிப்பை ஏற்படுத்துமா? எரிச்சலை ஏற்படுத்துமா?
தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்கும் வழக்கம் உண்டா?
அவற்றைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
தொடர்கள் எல்லாமே தற்கால மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறதா?
பதிலளிப்போம்.
நீக்கு15 வயதுப் பெண் தன் காதலனுடன் அலைபேசியில் பேசுவதைத் தந்தை தடை செய்ததால் அவருக்குத் தூக்க மருந்து கொடுத்துப் பின்னர் காதலனுடன் சேர்ந்து குத்திக் கொன்று பின்னர் உடலைக் குளியலறையில் எரித்திருக்கிறாள். இத்தகைய நிகழ்ச்சிகள் தற்காலங்களில் அதிகம் நடக்கின்றன. நேற்று ஒரு காவல்துறை அதிகாரி பேசும்போது இப்படியான நிகழ்வுகளுக்குத் தொலைக்காட்சிகளும், திரைப்படங்களும் காரணம் என்று சொல்லும்போதே அதை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சானல் பாதியில் நிறுத்திவிட்டது.
பதிலளிநீக்குஎன் கேள்வி இத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் உண்மையிலேயே மனித குணம் மாறுமா? அதுவும் பெற்ற தகப்பனையே கொல்லும் அளவுக்கு?
அடக்கடவுளே! தொலைக்காட்சி தொடர்கள், குடும்ப உறுப்பினர்களிடையே - குறிப்பாக மாமியார் - மருமகள், சம்பந்திகளிடையே பிரச்னைகளை உருவாக்குகின்றன என்று என் அனுபவம் கூறுகிறது. இப்போ பெற்றோர் - குழந்தைகளிடம் கூட விஷம் பரவிவிட்டதா!
நீக்குமுன்னெல்லாம் பெண்கள் வீட்டு வேலைகளைச் சரியாகச் செய்யவில்லை எனில் அவள் பெற்றோரைக் குறை சொல்வதோடு அவர்களிடம் புகாரும் சொல்லுவார்கள். இப்போ அதுவே மாறி விட்டது. கணவனைப் பற்றி மனைவி அவன் பெற்றோரிடம் குறை கூறும் அளவுக்கு மாறிவிட்டது. வீட்டு வேலையில் கட்டாயமாகக் கணவன் பங்கு எடுக்கவேண்டும் என்றே எல்லாப் பெண்களும் விரும்புகின்றனர். அதில் குறை கண்டால் கணவனின் பெற்றோரிடம் சண்டை போடுகின்றனர்.
பதிலளிநீக்குஇந்நிலை விரும்பத் தக்கதா? இது மாறுமா? முன்னெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்பட்டது இப்போது அநேகமாகப் பலரும் சொல்ல ஆரம்பித்து விட்டனர்! இது சரியா?
பெரிய கேள்வி. பதிலளிக்கிறோம்.
நீக்குகோபம், பாபம், சண்டாளம் என்பார்கள். உங்களால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பது அறிந்ததே! ஆனாலும் சில அக்கிரமங்களைக் கண்டால் வரும் கோபத்தை (அறச்சீற்றம்னு சொல்லலாம்) எப்படிக் கட்டுப்படுத்துவது?உடனே பொங்கி எழத் தோன்றுகிறதே!
பதிலளிநீக்குசெய்திகள் கேட்கும் போதும், சில அக்கிரமங்களைக் காணும் போதும் கோபம் வரத்தான் செய்கிறது.
நீக்குஎல்லோரும் ஒன்று சேர்ந்து அந்தக் கோபத்துக்கு ஒரு அர்த்தம்
கொடுக்கணும்னு நினைக்கிறேன் கீதா மா.
எல்லோருமே புத்தராக முடியாது.நாமும் மனிதர்கள் தானே.
அத்து மீறினால் ரௌத்திரம் பழக வேண்டியதுதான்.
கௌதம புத்தரே சரணம்!
நீக்குகீதாக்காவின் கடைசிக் கேள்விக்கான பதில் அருமை.
பதிலளிநீக்குஆனால் கீதாக்கா இப்போதும் பல கிராமங்களில் இந்த சாதிப் பிரச்சனைகள் இருக்கின்றதே. நகரங்களில் சிறு நகரங்களில் நீங்கள் சொல்வது போல எல்லாரும் கலந்துதான் வாழ்கிறார்கள் அது போல ஹோட்டல்களிலும்.
ஆனால் எனக்குத் தெரிந்து குக் கிராமங்களில் உணவகங்களில் தனித்து வழங்கப்படுவது நடப்பதாக என் தோழி சொல்லி அறிந்தேன். ஆனால் அது என்ன கிராமம் என்பது மறந்துவிட்டது. அதுவும் தமிழ்நாட்டை விட பிற மாநிலங்களில் கிராமங்களில் அதிகமாகவே இருக்கிறது.
கீதா
பிரச்னைகள் வெளியே இல்லை ; காண்பவர்களின் மனதில் இருக்கிறது.
நீக்குகௌ அண்ணா, நான்ஃபிக்ஷன் புத்தகங்கள் என்று சொல்வதற்கில்லை ஆனால் கட்டுரைகள் மற்றும் பொன்மொழிகள் பல என்னைச் சிந்திக்க வைத்து ஏதேனும் கொஞ்சத்தை நடைமுறைப்படுத்த முயன்று அதிலும் சிலவே முடிந்தது என்று சொல்லலாம். குறிப்பாக இது என்று சொல்ல முடியவில்லை அண்ணா. ஆனால் மனம் பக்குவம் (கொஞ்சம் தான்) அடைந்து வருவது என்பது என் அனுபவங்களினால்தான் என்பதை மட்டும் ஆணித்தரமாகச் சொல்ல முடியும். ஆனால் இன்னும் பக்குவமடைய வெகுதூரம் இருக்கிறது...
பதிலளிநீக்குகீதா
கருத்துக்கு நன்றி.
நீக்குசகோதரிகளின் கேள்விகளும், பதில்களும் அருமை.
பதிலளிநீக்குமிஸ்டர் எக்ஸ் ஜோக்கை ரசித்தேன். முன்பு இப்படி மிஸ்டர் எக்ஸ் ஜோக்குகள் ஆனந்தவிகடன் என்று நினைவு அதில் வந்த நினைவு. அப்போது நான் தமிழ்நாட்டில் இருந்ததால்.
துளசிதரன்
நன்றி சார். மிஸ்டர் எக்ஸ் உருவானதின் காரணம், சர்தார்ஜி, நம்பூத்ரி போன்ற குறிப்பிட்ட பிரிவினரை கேலிப் பொருள் ஆக்காமல் பொதுவான ஆளாக மிஸ்டர் எக்ஸ் என்று கூறி அதே சர்தார்ஜி / நம்பூத்ரி ஜோக்குகளை வெளியிட்டார்கள். அதனால் எந்தக் குறிப்பிட்ட பிரிவினரும் மனம் வருத்தம் அடையாமல் இருப்பதற்காக.
நீக்குகொசுக்கடியிலிருந்து தப்புவது எப்படி? (குட்நைட் போன்ற விரட்டிகள் இல்லாமல்) இயற்கை முறையில் ஏதேனும் இருக்கிறதா?
பதிலளிநீக்குகோயில்களில் பூசாரிகள் தட்டை நீட்டுவது (நாம் பணம் போடுவோம் என்ற எதிர்பார்ப்பில்), அல்லது முகத்தில் ஒருவித எதிர்பார்ப்புடன் நம்மைப் பார்ப்பது சரியா?
கோயில் வாசல்களில் யாசிப்பவர்கள் அதிகமாக இருப்பது ஏன்? காரணங்கள் ஏழ்மையா? உழைப்பின்மையா, அவர்களுக்கு ஏற்ற வேலை கிடைக்காமையா? கோயில் வாசல்களில் யாசித்தால் கண்டிப்பாக ஏதேனும் கிடைக்கும் என்ற எண்ணமா?
துளசிதரன்
பதிலளிப்போம்.
நீக்குதுளசிதரன், வேப்பெண்ணெய் வாங்கி ஓர் அகலில் ஊற்றித் திரி(பஞ்சுத் திரி நலம்) போட்டு எரிய விடவும். கொசுக்கள் காணாமல் போகும். இந்த மாதத்தோடு கொசுக்கள் குறையும் எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் 365 நாட்களும் கொசுக்கள் இருக்கின்றன என்பதே உண்மை! நீங்கள் வாங்கும் குட்நைட் ட்ராப்ஸ் விட்டு உபயோகிக்கும் பாட்டிலிலும் அது தீர்ந்த பின்னர் வேப்பெண்ணெய் விட்டு வையுங்கள்! இலுப்பெண்ணெய் கிடைத்தாலும் கலந்து கொள்ளலாம்.
நீக்குகோயில்களில் உணவு கொடுக்கும் வழக்கமே யாத்ரிகர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் தான்.சின்ன வயசில் முன்னெல்லாம் மீனாக்ஷி கோயிலுக்குப் போகும்போது உச்சிக்கால வழிபாடு முடிந்து வெளிவரும்போது மடப்பள்ளியில் இருந்து சாதம் (உண்டைக்கட்டி என்பார்கள்) கொண்டு வந்து அங்கே காத்திருக்கும் யாத்ரிகர்கள், ஏழைகள் எனக் கொடுப்பார்கள். பார்த்திருக்கேன்/கோம். அதே போல் சிருங்கேரி, காஞ்சி மடத்தில் அன்னக்கொடி போட்டும் அன்னதானம் செய்வது உண்டு. இப்போதைய காலகட்டத்தில் அந்த அளவுக்கு ஏழ்மை வெளியே தெரியவில்லை. எங்கானும் ஒரு சிலர் இருக்கலாம்.
நீக்குபொதுவாகக் கோயிலுக்கு வருகிறவர்கள் தானம் செய்யும் நோக்கத்துடனும் அப்போதைக்கானும் இளகிய மனத்தோடும் தான் வருகின்றனர். ஆகவே கிடைத்தவரை லாபம் என யாசிக்கலாம். ஒரு சிலர் உழைக்கச் சோம்பல் என்பது பார்த்தாலே தெரியும். அவர்களுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மறுப்பார்கள். பணம் தான் வேண்டும் என்பார்கள். இது எங்கள் அனுபவம்.
நீக்குதுளசியின் கேள்விகளை நான் டைப்பும் போது, கோயில் வாசலில் யாசிப்பவர்கள் பற்றிய கேள்வியைப் பார்த்ததும் எனக்கு இக்கேள்வி எழுந்தது.
பதிலளிநீக்குபிச்சை புகினும் கற்கை நன்றே என்பதன் விளக்கம்? இங்கு பிச்சை எடுத்தேனும் கல்வி பயில வேண்டும் என்பது இப்படி யாசிப்பதா அல்லது கடன் வாங்கியேனும் அல்லது செல்வந்தர்களின் உதவி பெற்றேனும் கல்வி கற்க வேண்டும் என்பதாகன பொருளா?
பொது இடங்களில் யாசிப்பவர்கள் யாரேனும் அப்படி யாசித்து அப்பணத்தைக் கொண்டு கல்வி பயின்றவர்கள் உள்ளனரா? அல்லது பெற்றோர் அப்படி யாசித்துத்தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்தவர்கள் என்று அறிந்ததுண்டா?
கீதா
பதிலளிப்போம்.
நீக்குசெருப்புத் தைக்கும் தொழிலாளியின் குழந்தைகள் நன்கு படித்து உன்னத நிலைக்கு வந்திருக்கின்றனர். யாசித்துப் படிக்கவைக்கவில்லை என்றாலும் பிறர் உதவியுடன் படிக்க வைப்பது உண்டே! யாசித்துப் படிக்க வைப்பது என்பதைப் படித்ததும் முன்னெல்லாம் உபநயனம் முடிந்து தினம் பிக்ஷை எடுத்துப் படித்த காலங்கள் நினைவில் வந்தன. ஒரு காலத்தில் யாசித்து உணவு உண்டு தான் படித்தார்கள்.
நீக்குஅதெல்லாம் அந்தக் காலம். வேதங்களில் சொல்லப்பட்ட வாழ்க்கை வாழ்வதாக இருந்தால், வேதம் பயின்ற அந்தணர்கள், எதையும் யாசித்துப் பெறவேண்டும், எதையும் சேர்த்து வைக்கக்கூடாது = தானியங்கள் உட்பட. பவதி பிக்ஷாம் தேஹி என்று வீடு வீடாக என்று பிக்ஷை பெற்று, அந்த அரிசியை தானே சமைத்து உண்ணவேண்டும் - என்றெல்லாம் உண்டு. பிக்ஷை கிடைக்காவிட்டால் களத்தில் சிந்திக்கிடக்கும் நெல் மணிகளைப் பொறுக்கி, அதைக் குத்தி அரிசி எடுத்து, சமைத்து உண்ணவேண்டும்.அதுவும் கிடைக்கவில்லை என்றால், பட்டினி கிடக்கவேண்டும். இந்தக் காலத்துக்கு இது எதுவும் சரிப்படாது.
நீக்குஉண்மை, கௌதமன் சார். ஶ்ரீகிருஷ்ணன் கூட உபநயனம் முடிந்து பிக்ஷை எடுத்திருக்கிறான். ராஜஸ்தானில் அந்தக் கோலத்துடன் ஶ்ரீகிருஷ்ணனை ஒரு கோயிலில் வரைந்திருப்பார்கள். அந்தக் கோயில் ஓர் சக்திபீடம். ஶ்ரீகிருஷ்ணனின் குடும்பத்தின் குலதெய்வம் என்றும் அங்கே தான் ஶ்ரீகிருஷ்ணனுக்கு மொட்டை போட்டதாகவும் சொல்லுவார்கள். இப்போவும் பக்தர்கள் அங்கே மொட்டை போட்டுக் கொள்ளுவது உண்டு. கோயில் பெயர் நினைவு வந்தால் சொல்றேன். எங்கேயோ இருந்து எங்கேயோ போயிட்டேன்.
நீக்குகிளவுட் பர்ஸ்ட் போல இந்த வாரம் கேள்விகள் பர்ஸ்ட் போல. எனவே நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஎன் மகன் சிறுவனாக இருந்த பொழுது அவனுக்காக ஒரு டிஜிட்டல் வாட்ச் வாங்கி கொடுத்திருந்தோம். கேசியோ என்று ஞாபகம். ஒரு முறை விளையாடுவதற்காக தன் கையில் கட்டிக்கொண்டிருந்த வாட்சை அவிழ்த்து தன் டிரௌசர் பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருக்கிறான். எடுக்க மறந்து தோய்க்கப் போட்டு விட்டான். அதை அறியாத நான் அதை சோப்புத் தண்ணீரில் ஊற வைத்து, தோய்க்கும் கல்லில் அடித்து துவைத்து, காயப்போட்டு விட்டேன். அயர்ன் பண்ணும் பொழுதுதான் கவனித்தேன். இதில் ஹை லைட் என்னவென்றால் இத்தனைக்கும் பிறகும் அந்த வாட்ச் நன்றாக ஓடியது!!!
பதிலளிநீக்குஅட! வியப்பாக இருக்கிறது!
நீக்குகேள்விகள் கேட்ட எல்லோருக்கும் நன்றி. அடுத்த புதன் பதிவில் பதில் அளிப்போம்.
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு