சனி, 24 ஆகஸ்ட், 2019

கஞ்சாவும் உப்பும் - இமயகுருவின் இதய சீடன்


1)  பெண் இன்ஸ்பெக்டரின் முயற்சியை, உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என, பலரும் பாராட்டி வருகின்றனர்.  அவர் முயற்சியால் மதுரையில், பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்து வந்தவர், தற்போது, உப்பு வியாபாரியாக உழைத்து பிழைக்கிறார்.





2)  பேராவூரணி ஏரியை தூர் வார உதவிய பிரெஞ்சுக்காரர்.  மக்கள் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி.(நன்றி ஏகாந்தன் ஸார்)





3)  ...........  இதை கவனித்த சிவக்குமார், மரங்களை இழந்த விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க நினைத்தார். இதன்படி, நேற்று, தன் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு, இலவசமாக, அதிக விலை கொண்ட சந்தனம், செம்மரக் கன்றுகளை இலவசமாக வழங்கினார். நேற்று மட்டும், 700 மரக்கன்றுகள் வழங்கினார். ஏற்கனவே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தன் டீக்கடையில் இருந்த கடன்களை சிவக்குமார் தள்ளுபடி 
செய்துள்ளார்.........






=========================================================================================

விமர்சனம்தான்.  ஆனால் எங்கள் தளப் பதிவுகள் பற்றிய விமர்சனம் அல்ல...   புத்தக விமர்சனம்.

புத்தக விமர்சனம் – நெல்லைத்தமிழன் -  “இமய குருவின் இதய சீடன் – யோகியின் சுய சரிதை – ஸ்ரீ எம்”


 இந்தப் புத்தகம் நான் சென்னை விமானநிலையத்தில் 2012 பயணத்தின்போது வாங்கினேன். நான் பொதுவா அலுவலகப் பயணமா வந்தால் சென்னை விமானநிலைய ஹிக்கின்பாதம்ஸில் தமிழ் புத்தகங்கள் 1000 ரூபாய்க்கு வாங்குவேன். அதில் எனக்குப் பிடித்தது அனுபவம், தன் வரலாறு, தமிழ் மன்னர்கள் போன்றவர்களைப் பற்றிய புத்தகங்கள் போன்றவை.  அப்படி ஒரு பயணத்தின்போது இந்தப் புத்தகத்தை வாங்கினேன்.  இதற்கு முன்பு நான் பரமஹம்ச யோகாநந்தர் என்பவர் எழுதிய ‘யோகியின் சுய சரிதை’ என்ற நூலைப் படித்திருக்கிறேன்.  அதில்தான் அவர் இறைவனின் தரிசனம் தனக்குக் கிடைத்ததை (கிருஷ்ணர் வடிவத்தில்) என்று எழுதியிருந்தார்.  அதைப் படித்ததிலிருந்து, அதைப் போன்று ஒரு யோகியின் சுயசரிதை போன்று தெரிந்ததால் இந்தப் புத்தகத்தை வாங்கினேன்.

பொதுவாக ஆன்மீகத்தைத் தேடுபவர்கள், அந்தப் பாதையில் செல்பவர்கள், வழியில் கிடைக்கும் எந்த அனுபவங்களையும் பிறரிடம் பகிர மாட்டார்கள்.  இந்த அனுபவங்கள் எல்லோருக்கும் வாய்க்காது. தகுதி உடையவர்களுக்கு (முன்வினைப் பயனோ அல்லது முந்தைய ஜென்மங்களில் இந்தப் பாதையில் தொடர்ந்து சென்றவர்களுக்கோதான்) மட்டும்தான் வாய்க்கும். ஆனால் தகுதி உடையவர்களா என்பதை சட் என்று கண்டுபிடித்துவிட முடியாது. அதனால்தான் தியானம் பழகித்தருவதற்கு முன்பு தியானம் பழகச் சொல்லித்தரும் குரு, செல்லும் வழியில் எந்த விதமான சக்திகள் அல்லது அதிசயங்கள் குறுக்க வந்தாலும், அதில் நின்றுவிடக்கூடாது, அதைக் கவனியாமல் தியானம் தொடர்ந்து பழகவேண்டும்  என்று சொல்லியிருந்தார். 

எங்கள் பிளாக், சனிக்கிழமைக்கு ‘புத்தக விமர்சனம்’ எழுதலாமே என்று தோன்றியது. அதனால் இதனை எழுத ஆரம்பித்தேன்.  நான் 300 புத்தகங்களுக்கு மேல் வாங்கியிருக்கிறேன். அதில் பஹ்ரைனிலிருந்து வரும்போது அங்குள்ள தமிழ் மன்றத்துக்கு பெரும்பாலான புத்தகங்களைக் கொடுத்துவிட்டேன். அனைத்துப் புத்தகங்களிலும் நம்பர் 1 என்று நான் நினைப்பது இந்தப் புத்தகத்தைத்தான்.

சரி.. இப்போ புத்தக விமர்சனத்துக்கு வருகிறேன்.

மிகுந்த தயக்கத்துக்குப் பிறகுதான் இந்தப் புத்தகத்தை ஆசிரியர் எழுத ஆரம்பித்தாராம்.  எழுதத் தயங்கியதற்கு இரண்டு காரணங்கள் குறிப்பிடுகிறார். ஒன்று ஆன்மீகத்தைத் தேடும் அன்பர்கள், ஆன்மீக உலகில் உலவும் வசீகரமான கட்டுக் கதைகளில் சிக்கி, அந்தப் பாதைக்குரிய அவசிய மற்றும் நடைமுறைப் பயிற்சிகளைத் தவற விட்டுவிடக் கூடாது என்னும் பயம். இரண்டாவது, இதைப் படிக்கும் பகுத்தறிவாளர்கள், இதில் எழுதப்பட்டிருக்கும் சில சம்பவங்களை நம்பவே முடியாத விசித்திரங்களாகக் கருதி, இந்தப் புத்தகத்தையே கருப்பு மை அப்பிய வெற்றுக் காகிதக் கட்டு என்று ஒதுக்கி விடுவார்களோ என்ன்னும் பயம்.


ஆனாலும் அவர் இந்த அனுபவக் கட்டுகளை (சுய சரிதையை) எழுதக் காரணம், அவர் அடைந்த அனுபவங்களை பிறருக்குப் பகிர்ந்துகொள்வது அவரது கடமை என்று நினைத்ததாலும்,  கடவுள் நம்பிக்கை இல்லாத சிறுபான்மையினருக்காக, நம்பிக்கை உடைய பெரும்பான்மையினருக்கு உபயோகப்படுவதை பகிராமல் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தினால்தான் என்று குறிப்பிடுகிறார்.

இந்தப் புத்தகம் ஸ்ரீ. எம். அவர்கள் இமாலயத்தில் அடைந்த அனுபவங்களைச் சொல்லவேண்டும் என்பதினால் எழுதியிருக்கிறார்.  பெரும் ஆசான்களின் அருள், புத்தகத்தைப் படிக்கும் நம்முடன் என்றும் நிலைத்திருக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு அவர் பயணத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். 

ஸ்ரீ.எம் எனப்படுபவர், இஸ்லாமியராக திருவனந்தபுரத்தில் பிறந்து ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட மும்தாஜ் அவர்கள்  சிறு வயதிலிருந்தே அவருக்கு திருவனந்த புரத்தில் ஏற்பட்ட அனுபவங்கள், ஆன்மீகத் தேடலுக்காக வீட்டை விட்டுச் செல்லவேண்டும் என்ற உந்துதல், எப்படி முதல் முதலில் தன் குரு தன் 9ம் வயதில் தன்னைக் காண வந்தார் என்று விளக்கும் நிகழ்ச்சி, தன்னால் அந்தச் சிறு வயதிலேயே படுக்கும்போது ஆழ்நிலைத் தியானத்திற்குச் செல்ல முடிந்தது, கனவுகளில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்று ஒவ்வொரு பக்கமும் நம்மை புத்தகத்தின்பால் ஈர்க்கவைக்கும்.  புத்தகத்தில் இருந்து ஒரு சில பகுதிகளை (நிறைய edit செய்து) உதாரணத்துக்காக எடுத்தாள்கிறேன்.

ஸ்ரீ.எம் அவர்களின் குரு ஸ்ரீ.மது அவர்கள், பிற்காலத்தில் தன் சீடனிடம் ஒரு நிகழ்வைச் சொல்லுகிறார். அதற்குமேல் வேறு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்றாலும், அதுவே மும்தாஜ் என்ற சிறுவனின் பிறப்புக்கான காரணம் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார்.


 புனித ஸ்தலமான பத்ரிநாத்தின் பின்புறத்தில் எளிதில் செல்லமுடியாத மலை உச்சிகளில், சிறியதும் பெரியதுமான பல குகைகள் உள்ளன.  அவற்றில் குளிர் காலத்தில் அசாதாரண மனிதர்கள் மட்டுமே தங்கியிருப்பார்கள்.  நூறு ஆண்டுகளுக்கு முன்பு அப்படிப்பட்ட அசாதாரண யோகி இடுப்பில் ஒற்றைத் துணியுடன் தியானத்தில் ஈடுபட்டிருந்தார்.  அந்த இளம் யோகி புனித வாரணாசியில் வேதக் கல்வியறிவு பெற்றிருந்த குடும்பத்திலிருந்து வந்தவர்.  அவரது முன்னோர்கள் ஸ்ரீ குரு பாபாஜி என்ற பழம்பெரும் யோகியின் சீடர்களாக இருந்தவர்கள். அவரது அப்பாவினால் பெருமைமிக்க யோகியிடம் தன் 9 வயதில் அர்ப்பணிக்கப்பட்ட அவர், பதினெட்டு வயதானபோதுதான் சுதந்திரமான யோகியாக மாறினார்.  இளம் யோகி, சமாதி என்ற ஆழ்நிலைத் தியானத்தில் இருந்தபோது அந்தச் சம்பவம் நடந்தது.

அந்தப் பகுதியில் எதிர்பார்க்க முடிந்திராத ஒரு முதிய மனிதர், மிகுந்த பிரயாசையுடன் பாறைகளைக் கடந்து யோகி இருந்த குகைக்கு முன்னால் வந்துவிட்டார். அவரது அழுக்கு நிறைந்த தலைப்பாகை, மிகவும் கிழிந்துபட்ட ஆடைகள், மருதாணியினால் நிறம் மாறியிருந்த தாடியுடன் இருந்த அவரது தோற்றம் அவர் ஒரு முஸ்லீம் பக்கிரி என்பதை பறை சாற்றிற்று. அவர் உடலில் திறந்திருந்த பாகங்கள் எல்லாம் காயத்தில் வெட்டுப்பட்டு, புண்களோடு இருந்தது.  மிகுந்த வலியோடு அவரது பிரயாணம் அமைந்ததுபோல இருந்தது. ஆனால் குகையில் இருந்த யோகியைப் பார்த்ததும் அவருக்கு வலியின் வேதனை மறைந்து புன்னகை வர ஆரம்பித்தது. பைத்தியக்காரனைப்போல் சிரிக்க ஆரம்பித்தார். ‘அல்லாவுக்குப் பெருமை உண்டாகட்டும்’ என்று கூறி அழுதார்.

நிஷ்டை கலையாத யோகியை, நெடுஞ்சாண்கிடையாக வணங்கிவிட்டு, யாரும் செய்யத்துணியாத காரியமாக, கட்டி அணைத்துக்கொண்டார்.  முறையற்ற விதத்தில் தியானம் கலைந்த யோகி, தன்னை அணைத்துக்கொண்டிருந்தவரை உலுக்கி விலக்கி, ரத்தம் சொட்டிக்கொண்டிருந்த அந்த விநோதமான ஜந்துபோன்றவரிடமிருந்து தன்னைத் தாக்கிய அருவருப்பான நாற்றத்தைப் போக்கிக்கொள்ள முனைந்தார்.

‘என்ன தைரியம் உனக்கு. விலகி நில்’ என்று கோபித்தார்.  அதற்கு அந்தப் பக்கிரி ‘என்னை மன்னியுங்கள். என் கதையைச் சொல்ல ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்’ என்றார்.

“போய்விடு. நான் அலக்னந்தாவில் முழுக்கு போடவேண்டும். அப்போதுதான் தியானத்தைத் தொடர முடியும். உன்னைப் போன்ற மாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிக்கு இங்கு இடம் கிடையாது. தொலைந்துபோ” என்று யோகி கூறினார்.

பக்கிரியோ விடுவதாயில்லை. “தயவு செய்து நான் சொல்வதைக் கேளுங்கள்.  நான் ஒரு சூஃபி. நஷபந்திய பிரிவின் சூஃபி ஆசானின் தலைமைச் சீடனாவேன். என் ஆசான், உயிர் விட ஆறு மாதங்கள் இருக்கும்போது, உன்னை எவ்வளவு தூரத்துக்கு அழைத்துப் போக முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு ஆன்மீகத்தில் அழைத்துச் சென்றுவிட்டேன். இதற்கு மேல் உன்னைக் கூட்டிச் செல்ல எந்த சூஃபி ஆசானும் இங்கு இல்லை. கவலைப்படாதே.. இமயமலையில் பத்ரிக்கு அருகில் ஒரு இளம் யோகி வசித்து வருகிறார். அவரைக் கண்டுபிடித்து உதவி கேள் என்றார். அவர் உங்களைத்தான் குறிப்பிட்டு இருக்கிறார். பல கடும் முயற்சி செய்து வேதனைகளை அனுபவித்து இன்று உங்களைப் பார்த்துவிட்டேன். களைப்பினால் நான் இறந்தாலும் இறந்துவிடுவேன். நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டாலே போதுமானது. என் ஆத்மா அமைதியுடன் சென்றுவிடும். உங்களிடம் பிச்சை கேட்கிறேன்” என்று கெஞ்சினார்.

“நீ சொல்லும் யாரையும் எனக்குத் தெரியாது. நான் யாரையும் சீடர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. இப்போது நீ தடை செய்த தியானத்தை அலக்னந்தாவில் குளித்துவிட்டு மீண்டும் தொடர வேண்டும். இங்கிருந்து தொலைந்துபோ” என்று இளம் யோகி கோபத்தில் இரைந்தார்.

“ஓ யோகியே..இதுதான் உங்கள் இறுதி வார்த்தைகள் என்றால் நான் இனிமேல் வாழ விரும்பவில்லை. என் வாழ்க்கையின் கனவு நொறுங்கிவிட்டதால் இந்த நதியில் குதித்து என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன். பிரபஞ்சத் தலைவன் எனக்கு வழி காட்டட்டும்” என்றார் பக்கிரி.

“நீ என்ன வேணுமானாலும் செய்துகொள். உனக்கு உதவ முடியாது. உன் அதிர்ஷ்டம் நான் உனக்கு சாபம் எதுவும் கொடுக்கவில்லை. உன் பாதையில் நீ போ.  நான் என் பாதையில் போகிறேன்” என்றார் யோகி.

அந்தப் பக்கிரி, விடைபெறும் நோக்கத்தோடு யோகியை மீண்டும் விழுந்து வணங்கி, உதடுகளில் ப்ரார்த்தனையோடு நதியின் சுழலில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டார். இளம் யோகி, குற்ற உணர்ச்சியின்றி, தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்வதற்கான மந்திரங்களை உச்சரித்தவாறே நதியில் ஒரு முழுக்கு போட்டார். நதியிலிருந்து வெளியில் வந்து குகையை நோக்கிச் செல்லும்போது தனக்குப் பரிச்சயமான குருவின் குரல், ‘மது’ என்று இனிமையாக அழைப்பதைக் கேட்டார்.  ஒரு பாறையின் விளிம்பின் பின்னிருந்து அவரது குரு தோன்றினார். அவரின் கண்கள் தன் இளம் சீடன் மீது விழுந்தது.

“மகனே.. எவ்வளவு கொடுமையான காரியத்தைச் செய்திருக்கிறாய்?” என்று மிருதுவாகக் கேட்டார்.  உடனே தான் செய்த கொடூரமான செயல் மனதில் மின்னல் போல எழ, ‘பாபாஜி” என்று நெடுஞ்சாண்கிடையாக பாபாஜியின் பாதங்களில் விழுந்தார்.

குகைக்குச் சென்றபிறகு, இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.

“எப்போது பேசினாலும் என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்பதை நினைவில் கொண்டு பேசவேண்டாமா? வெளித் தோற்றத்தை மட்டும் பார்த்து முடிவெடுக்காமல் அந்த முதியவர் என்ன சொல்ல வருகிறார் என்று பொறுமையாகக் கேட்டிருக்கலாமே.  என் அருமைச் சீடர் கபீர் சொன்னதுபோல, நீ வாளை விட்டுவிட்டு வாளின் உறைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாயா? கடவுளின் ஓர் அற்புத பக்தனை புண்படுத்தி துயரம் கொடுத்துவிட்டாய். பல வருடங்கள் கடுமையாக உழைத்ததின் பலன்களை எல்லாம் மின்னல் வேகத்தில் அழித்துவிட்டாய்.  ஒரு நிமிடம் கருணையோடு இருப்பது நூறு ஆண்டுகள் தீவிரமாகத் தவம் செய்வதற்கு ஒப்பானதாகும். அந்த நஷ்டத்தை நீ ஈடு செய்யவேண்டும்”

அதற்குள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்ட யோகி, அமைதியாகி, ‘குருவே நீங்கள் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

பாபாஜி, “அந்தப் பக்கிரியின் ஆன்மீகத் தேவைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.  அகம்பாவத்தால் உன் ஆன்மீக வளர்ச்சியை நீ நிறுத்திவிட்டாய். அதற்குப் ப்ராயச்சித்தம் வேண்டுமென்றால் நீயும் அந்தப் பக்கிரி அனுபவித்த வலிகளையும் துயரங்களையும் அனுபவிக்கவேண்டும். கேசரி முத்ராவின் கடைசி கிரியாவைச் செய்வதற்குத் தயாராகு. உன் மூச்சு ஆக்ஞா சக்கரத்தின் வழியே வெளியேறட்டும். உன்னை அந்த ஏழைப் பக்கிரி வாழ்ந்த சூழலில் பிறக்கச் செய்கிறேன். இப்பொழுதே கிரியாவைச் செய்”

மும்தாஜின் முற்பிறப்பு இப்படி இருந்தது என்று கோடிகாண்பித்துவிட்டு, ஸ்ரீ.எம். அவரது வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார். அவரை எவ்வாறு ஆன்மீகப் பெரியவர்களின் தரிசனத்துக்கு விதி இட்டுச் சென்றது, திருவனந்தபுரம் மற்றும் தமிழகக் கடைக் கோடியில் எப்படி அவருக்கு யோக ஆசான்கள் காட்சி கொடுத்து, சில யோக முறைகளைச் சொல்லிக்கொடுத்து அவரை இந்த வழியில் திருப்பிவிட்டனர், அவரது அப்பா இதனை எப்படிப் புரிந்துகொண்டார் என்றெல்லாம் மிகவும் விளக்கமாகச் சொல்லுகிறார்.  எப்படி இமயமலையை நோக்கி அவரது பயணம் அமைந்தது, அவரது ஆசானை எப்படி அவர் சந்திக்கிறார், அவருடன் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் என்று பலவற்றையும் எழுதியிருக்கிறார், ஆஜ்மீர் தர்காவுக்குத் தன் ஆசானோடு சென்றதையும், அங்குள்ள சூஃபி பெரியவர்கள் எப்படி அவருக்கு அவர் ஆசான் சொல்லியவற்றைக் கற்றுக்கொடுத்தனர், ஆன்மீக வழியில் அவர் சந்தித்தவை என்று நான்கு நாட்களில் முழுப் புத்தகத்தையும் (500 பக்கங்கள்) நான் படித்து முடிக்கும்படியாக மிகவும் ஆச்சர்யர்யகரமான சம்பவங்களோடு எழுதியுள்ளார்.  அதில் நிறைய யோகிகளுடனான சந்திப்புகள், ஷீரடி சத்யசாயி பாபாவை ஷீரடியில்  ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று ஏராளமானவர்கள் வருகின்றனர்.


 இமாலயத்தின் பள்ளத்தாக்குகள், தோலிங்க மடம், ஹேமகுண்டம், திபெத்திய லாமா, காசி அகோரிகள், வெளிநாட்டுப் பெண்ணைச் சந்திப்பது, ஆகாயத்திலிருந்து ஒரு நெருப்புப் பந்து, பேராசானுடன் சந்திப்பு என்று ஒவ்வொரு அத்தியாயமும் நமக்கு  தரும் ஆச்சர்யமும், உண்மைக்கு மிக நெருக்கமான அவர் எழுத்து தரும் சிலிர்ப்பும், படிக்கும்போது உங்களுக்கும் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

இதை முழுமையாகப் படிக்கும்போது, மதம், ஜாதி இவற்றைத் தாண்டிய இறைவனை நாம் உணரமுடியும், இறை என்பது எவ்வாறு இருக்கும், பேராசான்கள் என்பவர்கள் யார் என்றெல்லாம் நமக்கு ஓரளவு பிடிபடும் என்று நான் நினைக்கிறேன்.  

இமய குருவின் இதய சீடன் – ஒரு யோகியின் சுயசரிதை
ஸ்ரீ எம்.
தமிழாக்கம் டாக்டர் பி. உமேஷ் சந்தர் பால்
மஜண்டா பதிப்பகம்
விலை – 360 ரூ  (ஆங்கிலம் 500 ரூ.)

கிரி டிரேடிங் மைலாப்பூரில் இந்தப் புத்தகத்தைப் பார்த்துள்ளேன்.

பின்குறிப்பு:  புத்தக மேலட்டை தவிர மற்றப் படங்கள் என்னுடைய இமயமலை பயணத்தின்போது எடுத்தவை.



100 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் புத்தக விமர்சனம் எழுதிய நெல்லைக்கும்..

    இனி தொட இருக்கும் அனைவருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. புத்தகம் முதலில் ஸ்வாமி ராமா பற்றிய புத்தகம் என்று நினைத்துவிட்டேன். அப்படியான புத்தகங்கள் நம் வீட்டில் இருக்கின்றன..இது வேறு என்று தெரிகிறது. முழுவதும் வாசிக்க பின்னர் வருகிறேன் நெல்லை

    //ஒன்று ஆன்மீகத்தைத் தேடும் அன்பர்கள், ஆன்மீக உலகில் உலவும் வசீகரமான கட்டுக் கதைகளில் சிக்கி, அந்தப் பாதைக்குரிய அவசிய மற்றும் நடைமுறைப் பயிற்சிகளைத் தவற விட்டுவிடக் கூடாது என்னும் பயம்.//

    இப்படியானவர்களைப் பார்த்தும் வருகிறேன். கட்டுக் கதைகள் என்றில்லை, இதில் வேறு விதமாகச் சிக்கி ஆழ்ந்து போகும் போது நடைமுறைச் சிக்கல்கள் நிறையவே முளைக்கின்றன. மனம் சிலருக்குப் பிறழ்ந்தும் போவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வரிகள் மிகவும் உண்மையே...

      கீதா

      நீக்கு
    2. ஸ்வாமி ராமா பற்றிய புத்தகங்களும் மிகவும் ரசனையாகவும் உண்மைக்கு வெகு அருகிலும் இருக்கும். அந்தப் புத்தகங்களில் குறிப்பிடப்படும் இமயமலை யோகிகள், இந்தப் புத்தகம் இன்னும் ஒரு சில புத்தகங்கள் -- இவற்றை ஒப்பிட்டாலே இந்தப் புத்தகங்களின் உண்மைத்தன்மை தெரியும்.

      //மனம் சிலருக்குப் பிறழ்ந்தும் போவதுண்டு.// - எதை நோக்கிப் போகிறோம், எந்த காரணத்துக்காகப் போகிறோம் என்பதில் மிகுந்த கவனம் வேண்டும். வழியில் இருக்கும் கிளைப்பாதைகளின் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து, நம் முன்னேற்றத்துக்குத் தேவையில்லாததில் ஆழ்ந்தால், அதற்குரிய பலனைப் பெறுவதற்கும் தயாராக இருக்கணும்.

      எனக்குத் தெரிந்த ஒருவர் அமெரிக்காவில் இருக்கும்போது, யோக வித்தைகளை முயற்சிக்கிறேன் என்று சொல்லி, தன் உயிரை இன்னொரு உயிரின் மீது பிரயோகம் செய்ய முயற்சித்து, .... அவரது உடலை சில நாட்கள் கழித்து அவரது ஃப்ளாட்டில் நண்பர்கள் கண்டுபிடித்தனர்.

      நீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

      நீக்கு
    2. வாங்க கீதா அக்கா...

      வாங்க வல்லிம்மா...

      நல்வரவும், வணக்கங்களும்....

      நீக்கு
  4. பரமஹம்ஸ யோகாநந்தரின் சுயசரிதை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்புத் தான் "யோகியின் சுயசரிதை" என்னும் பெயரில் வந்திருக்கிறது என நினைத்தேன். இது வேறே புத்தகம் போல. கிடைத்தால் வாங்கிப் படிக்கணும் என்னும் ஆவலைத் தூண்டி விட்டது. பார்ப்போம். சென்னை விமான நிலையத்தில் ஹிகின்பாதம்ஸுக்கு நான் போனதே இல்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அப்படிதான் நினைத்தேன். அப்புறம்தான் இது வேற புத்தகம் என்று தெரிந்தது. வாங்கவேண்டும்.

      நீக்கு
    2. ஆமாம் கீதாமா. யோகியின் சுய சரிதை என்னிடம் தமிழில் இருக்கிறது. மிக
      அருமையான வாசிப்பு.
      நெல்லைத்தமிழனின் வாசிப்பின் உச்சம் என்று எண்ணம்
      இந்தப் புத்தகத்தின் சுருக்கமான விஸ்தரிப்பில் எழுகிறது.

      நம் குழந்தை ஸ்வாமிகளின் நினைவு வருகிறது. வாழ்வில்
      குருவின் முக்கியத்துவத்தை உணர்த்திவிட்டு இப்போது
      தொடர்பிலிருந்து விலகினாலும் மனதிலியே இருக்கிறார்.

      நீக்கு
    3. கஞ்சா விற்றவரை உப்பு விற்கும் நல்ல மனிதராக மாற்றிய இன்ஸ்பெக்டருக்கு
      சமூகம் கடமைப் பட்டிருக்கிறது.
      அதே போல் பேராவூரணி ,ஏரியைச் சுத்தம் செய்ய உதவிய கனடாக்காரருக்கும்
      நாம் கடமைப்படுகிறோம்.
      மரக்கன்றுகளைத் தந்து உதவும் டீக்கடைக்காரரின்
      பெருந்தன்மை மிக நெகிழ்வு.
      எவ்வளவு உயர்ந்த உள்ளங்கள்.
      மனம் நிறை வாழ்த்துகள்.

      நீக்கு
    4. இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று வியக்க
      வைக்கிறது, நெ த வின் புத்தகம். எத்தனையோ பேருக்குப் போன ஜன்மா பற்றியெல்லாம்
      நம்பிக்கை இல்லை.
      இந்த அற்புதமான புத்தகம் அந்த நம்பிக்கையை
      ஆழமாக விதைக்கிறது.
      ஆன்மீக முன்னேற்றத்துக்கு இது போல வாசிப்புகள் மிக மிக அவசியம் என்று நம்புகிறேன்.

      இமயமலைப் படங்கள் தென்றலாக இதயத்தைத் தொடுகின்றன.
      மிக நன்றி முரளி மா.


      நீக்கு
    5. கீசா மேடம்... 4 புத்தகங்கள், பரமஹம்சரின் யோகியின் சுய சரிதை, ஸ்ரீ. எம். அவர்களின் இமயமலையின் ஒரு இதய குரு, சுவாமி ராமாவின் இமயத்து ஆசான்கள், ஜஸ்டிஸ் ஓ ப்ரையனின் இமயத்து ஆசான் சுவாமி ராமாவுன் ஒரு பயணம். இந்த புத்தகங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தவை.

      நம் தர்மம் சொல்லும், முற்பிறவி, கர்மங்கள், வரும் பிறவி என்பதையெல்லாம் உண்மை என நமக்குக் காட்டுபவை இந்தப் புத்தகங்கள்.

      நீக்கு
    6. வல்லிம்மா.... முந்தைய ஜென்மா, நாம் சேர்த்துவைத்த பாவ புண்ணியம் - இவைகள் இல்லாவிட்டால் கெட்டவன் பெரிய பதவியிலும் பெரும் பணக்காரனாகவும், அப்பாவிகள் தண்டிக்கப்படுவதையும், நல்லவர்களில் பலர் ஏழையாக இருப்பதையும் இன்னும் பல நிகழ்வுகளையும் எப்படி புரிந்துகொள்ள முடியும்?

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம். இன்றைக்கும் கொடுத்திருக்கும் மூன்று செய்திகளும் சிறப்பு.

    புத்தக விமர்சனம் சிறப்பு. புத்தகம் வாசிக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் வாங்கி வாசிங்க வெங்கட். நீங்க பயணம் செய்யும் இடங்களைப் பற்றிய பார்வை மாறும். ஏற்கனவே நீங்கள் ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தீர்கள். எனக்கு 'எப்படிப்பட்ட வாய்ப்பு வெங்கட்டுக்குக் கிடைத்திருக்கிறது' என்று நினைத்துக்கொண்டேன்.

      நீக்கு
  6. விமர்சனத்தின் ஆழம் மிகவும் அழகாக இருக்கிறது நண்பரே...

    இவைகளை மனம் ஒன்றி படித்தால் மட்டுமே இப்படி விமர்சித்து எழுத இயலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி... மதம், சாதி இதனைப்பற்றிய கண்ணோட்டத்தை முற்றிலும் இந்தப் புத்தகம் மாற்றியமைக்கும். நம் ஆன்மீகத் தேடலுக்கும் உறுதுணையாக இருக்கக்கூடும்.

      நீக்கு
  7. கஞ்சா வியாபாரியை உப்பு வியாபாரியாக மாற்றியது சாதனையே...

    பதிலளிநீக்கு
  8. தலைப்பை கஞ்சாவும் உப்பும் மற்றும் இமய குருவின் இதயச் சீடன் என்று போட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது இன்னமும் மோசமான தலைப்பான்னா இருக்கு ஜீவி சார். ஹா ஹா

      நீக்கு
  9. நெல்லை, நீங்கள் ஏற்கனவே இந்தப் புத்தகத்தைப் பற்றி எனக்குச் சொன்ன போதே தேடினேன். கிரி டிரேடிங், மாம்பலம் கிளையில் கிடைக்கவில்லை. அவர்கள் மைலாப்பூர் கிளைக்கு தொலைபேசி அங்கும் கைவசம் இல்லை என்று சொன்னார்கள். மறுபடியும் முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆன்லைன்லயும் கிடைக்குது போலிருக்கு 10 சதவிகித டிஸ்கவுண்டுடன். தேடிப்பாருங்கள். பயணத்தின்போது படிப்பதற்கும் மீண்டும் சிந்திப்பதற்கும் உறுதுணையான புத்தகம்

      நீக்கு
  10. போற்றத்தக்க அரிய மனிதர்கள், செயல்கள் வழக்கம்போல அருமை. மற்ற இரண்டையும் பிற தளங்களில் படித்தேன். சிவக்குமார் பற்றி உங்கள் மூலமாகவே அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  11. //ஆன்மீகத்தைத் தேடும் அன்பர்கள், ஆன்மீக உலகில் உலவும் வசீகரமான கட்டுக் கதைகளில் சிக்கி, அந்தப் பாதைக்குரிய அவசிய மற்றும் நடைமுறைப் பயிற்சிகளைத் தவற விட்டுவிடக் கூடாது என்னும் பயம்.//
    வழி தப்புவதற்கு மிகச் சரியான காரணம்.
    வழியைத் தப்பாமல் தொடர்வதற்கான அவசிய மற்றும் நடைமுறைப் பயிற்சிகளைப் பற்றி இந்த நூலிலேயே குறிப்பிடாமல் விட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அத்தகைய நடைமுறைப் பயிற்சிகள் நம் அன்றாட வாழ்வில் அனுபவத்தில் கொண்டு வருகிற அளவுக்கு சாத்தியப்பாடுகள் கொண்டிருக்கின்றனவா? - என்று தெரிந்து கொள்ள ஆசை. அல்லது வாசிப்பின் பிரமிப்புடனேயே நின்று விட வேண்டியதாகத் தான் இருக்கிறதா?.. இதில் உங்கள் அனுபவம் என்ன? - என்பதனையும் பற்றி குறிப்பாகச் சொன்னால் அந்த அனுபவமும் ஒரு வழிகாட்டியாக இருக்கலாம் என்ற ஆவலில் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நடைமுறைப் பயிற்சிகளைப் பற்றி // - இந்தப் புத்தகம் சுவாமி ஸ்ரீ. எம். அவர்களின் அனுபவ வரலாறுதான். வேறு எதையும் அவர் இங்கு குறிப்பிடவில்லை. அதனால் இதில் யோக முறைகள் எதையும் குறிப்பிடவில்லை.

      பொதுவா தியானம் பழகும்போது, நமக்கு பூர்வ கர்ம பலன் இருந்தால், சில சக்திகள் கிடைக்கலாம். ஆனால் அதனை அக்கணமே மறந்துவிட்டு தியானத்தைத் தொடரவேண்டும். விளையாட்டுத்தனமான சக்திகளின் வசீகரத்தில் ஆழ்ந்தால் அதற்கு மேல் நம்மால் முன்னேற முடியாது. இதைப்பற்றி புத்தகம் குறிப்பிடவில்லை.

      //வாசிப்பின் பிரமிப்புடனேயே// - வாசிப்பு என்பது என்ன? உருப்படியான புத்தகம் நம்மைச் சிந்திக்கத் தூண்டும். நமக்கு அந்தப் பாதையில் ஆர்வம் இருந்தால், என்ன செய்யலாம் என்று எண்ணுவோம். தக்க குரு வேண்டும் என்று நம் சிந்தனை தீவிரமாக இருந்தால், அதுவே தக்க குருவை நாம் காண வழிவகுக்கும்.

      காந்தியின் வரலாறு படிக்கும்போது, 'சத்யமேவ ஜெயதே' என்ற அவரது 'உண்மையின்' மீதான பிடிப்பு நம்மை பிரமிக்கவைக்கும். அதைத் தொடர்ந்து நாமும் 'உண்மையையே பேசுவது' என்று நடைமுறைப்படுத்திப் பார்த்தால்தான் அதிலுள்ள பிரச்சனையும், நமக்கு அது அளிக்கும் பயனும் புரியும். எதுவுமே நாம் படித்த புத்தகத்தை வைத்து எப்படி உபயோகப்படுத்துகிறோம் என்பதில்தான் இருக்கிறது.

      நீக்கு
  12. //மதுரையில், பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்து வந்தவர்//

    ஹையோ இது மதுரைத்தமிழனாக இருக்குமோ:)).. ஹா ஹா ஹா ஆண்டவா படிச்சதும் கிழிச்ச்சு ஸ்ரீராம் வீட்டு மொ.மாடியில ஒளிச்சிடுங்கோ பிளீஸ்ஸ்.. ட்றுத் இன்று இப்பக்கம் வரமாட்டார் எனும் நம்பிக்கையில் சொல்லிட்டேன்ன்:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  13. //க விமர்சனம் – நெல்லைத்தமிழன் - “இமய குருவின் இதய சீடன் – யோகியின் சுய சரிதை – ஸ்ரீ எம்”
    //

    ஆஆஆஆஆஅ என்ன இது நதி திசை மாறி ஓடுகிறது:).. இதுவும் உண்மையில் நல்ல ஒரு திருப்பம்.. வரவேற்கிறேன்.

    நெ.தமிழன் இப்புத்தகத்தையோ என்னைப் படிக்கச் சொன்னீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா...இந்தப் புத்தகத்தைத்தான். நமக்குத் தெரியாத ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறைய உண்டு என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

      இதுமாதிரி ஒரு புத்தகத்தில் (ஜஸ்டிஸ் ஓ ப்ரையான் எழுதியது), இயேசு கிறிஸ்துவின் உடல் காஷ்மீரில் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்றும், அவரது அம்மா மேரியின் உடல் இமயமலையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பள்ளத்தாக்கின் படத்தையும் (கல்லறையின் முகப்பு) போட்டு பெரிய புத்தகமே எழுதியிருந்தார். ரொம்ப இண்டெரெஸ்டிங் புத்தகம்.

      நீக்கு
  14. //சென்னை விமானநிலைய ஹிக்கின்பாதம்ஸில் தமிழ் புத்தகங்கள் 1000 ரூபாய்க்கு வாங்குவேன். //
    இதென்ன கணக்கு இது?

    //தமிழ் மன்னர்கள் போன்றவர்களைப் பற்றிய புத்தகங்கள் போன்றவை.//
    எனக்கு ஒரு நண்பி இருந்தா, அவவுக்கும் இது பைத்தியம்போல வாங்கி வாசிப்பா.. அதுவும் லைபிரரியில் பொன்னியின் செல்வன் சைஸ் க்கு எடுத்துப்போவா புத்தகத்தை , பார்த்தால் 2 நாளில் திரும்பிக் குடுப்பா. தனக்கு அப்படிப் புத்தகங்கள் எனில் நித்திரையே வராதாம்.. அப்படியே வாசிச்சிடுவேன் என்றா... ஹையோ பொ.செ நும் மீயும் படும் பாடிருக்கே:))..

    ஆனாலும் மீயும் அரச கதை படிப்பேன்.. அது கண்ணதாசன் அங்கிள் எழுதியிருந்தால் மட்டும்.. சில மாதங்களுக்கு முன்பும் ஒன்று படிச்சு முடிச்சேன்ன்.. “பாரி மலைக் கொடி” என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மீயும் அரச கதை படிப்பேன்.. அது கண்ணதாசன் அங்கிள் எழுதியிருந்தால் மட்டும்.. // - இந்த வசனம் எங்கிட்ட வேண்டாம். நீங்க கண்ணதாசன் எழுதிய 'சேரமான் காதலி' புத்தகம் படிச்சிருக்கீங்களோ? அது கேரளாவில் அரச குடும்பத்தில் பிறந்து கடைசியில் இஸ்லாமியராக மாறி, கடைசி காலத்தில் சவுதி அரேபியா அருகில் இறந்துபோனவரைப் பற்றிய கதை. நான் ஓமனில் (சலாலா) ஒரு இஸ்லாமிய துறவியின் தர்காவுக்குச் சென்றிருந்தேன். அது 30 அடி நீளம். கேட்டபோது, அவர் அவ்வளவு உயரமாக இருந்தார் என்று சொன்னார்கள். அதன் படத்தை பிறிதொரு சமயத்தில் பகிர்கிறேன்.

      நீக்கு
    2. ///இந்த வசனம் எங்கிட்ட வேண்டாம்.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா சொன்னா நெம்போணும்:))..

      ஆஆஆஆஅ சேரமான்காதலியை எழுதியவர் கண்ணதாசன் அங்கிளோ? அதை நான் கவனிக்கவில்லையே..

      இப்போ ஸ்ரீராமால ஆரம்பிச்ச ஓன்லைன் வாசிப்பு.. கிண்டில் க்குப் போய், கையில்லாத பொம்மை வாசிக்கிறேன்.. எப்போ முடியுமோ தெரியவில்லை.. ஹொலிடேயால் வாசிக்கவில்லை, மீண்டும் ஆரம்பிக்கோணும்.. அது முடியட்டும் சே.கா லியை ஆரம்பிச்சிடுறேன் பூஸோ கொக்கோ என பார்க்கப்போறீங்க நீங்க எல்லோரும்:)).

      //அது 30 அடி நீளம். கேட்டபோது, அவர் அவ்வளவு உயரமாக இருந்தார் என்று சொன்னார்கள்//
      அப்போ அது புனைகதை:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  15. ///அனைத்துப் புத்தகங்களிலும் நம்பர் 1 என்று நான் நினைப்பது இந்தப் புத்தகத்தைத்தான்.//

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!

    //ஆனாலும் அவர் இந்த அனுபவக் கட்டுகளை (சுய சரிதையை) எழுதக் காரணம், அவர் அடைந்த அனுபவங்களை பிறருக்குப் பகிர்ந்துகொள்வது அவரது கடமை என்று நினைத்ததாலும், //
    ஓ இப்புத்தகம் எழுதியவரின் நேரடி அனுபவம்... அவரே புத்தகமும் எழுதியிருக்கிறாரோ...

    //“நீ என்ன வேணுமானாலும் செய்துகொள். உனக்கு உதவ முடியாது. உன் அதிர்ஷ்டம் நான் உனக்கு சாபம் எதுவும் கொடுக்கவில்லை. உன் பாதையில் நீ போ. நான் என் பாதையில் போகிறேன்” என்றார் யோகி.///

    இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே... ஞானிகள் யோகிகள் எனில்... மனிதர்களைக் கவனிக்காமலேயே கடவுளைத் தேடுவார்களோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஞானிகளானாலென்ன யோகிகளானாலென்ன... அவர்களும் சாதாரண மனிதர்களாகிவிடுகிறார்களே சில தருணங்களில். நீங்க கூட கேள்விப்பட்டிருப்பீங்களே... எத்தனை முனிவர்கள், துர்வாசர் போல, கோபத்தில் சாபம் கொடுத்துவிடுகிறார்கள் என்று........

      கடவுளைத் தேடுபவர்களில் நிறையபேர்கள், மனிதரை கவனிக்க மறந்துவிடுகிறார்கள் என்பது உண்மைதான்.

      நீக்கு
  16. //எப்போது பேசினாலும் என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்பதை நினைவில் கொண்டு பேசவேண்டாமா? வெளித் தோற்றத்தை மட்டும் பார்த்து முடிவெடுக்காமல் அந்த முதியவர் என்ன சொல்ல வருகிறார் என்று பொறுமையாகக் கேட்டிருக்கலாமே.//

    சின்னனில் அம்புலிமாமாவில் படிச்ச கதையில் ஒரு தத்துவ வசனம் இருந்தது, அது என் ஆழ் மனதில் அப்படியே பதிந்துவிட்டது.. அதை எப்பவும் கடைப்பிடிப்பேன்ன்ன்.

    “ஆடையைப் பார்த்து எடை போட்டுவிடாதீர்கள், சேற்றிலேதானே செந்தாமரை மலர்கிறது”

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /ஆடையைப் பார்த்து எடை போட்டுவிடாதீர்கள்//-ஜாடையையும் பாருங்கள் என்று சொல்வீங்களோன்னு நினைத்தேன். ஹா ஹா.

      நாம் போற்றும் புனுகு, செந்தாமரை.............. இதனால்தான் நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்று சொல்வர்.

      நீக்கு
  17. //ஒரு நிமிடம் கருணையோடு இருப்பது நூறு ஆண்டுகள் தீவிரமாகத் தவம் செய்வதற்கு ஒப்பானதாகும்.//

    ஓஓ...

    //உன்னை அந்த ஏழைப் பக்கிரி வாழ்ந்த சூழலில் பிறக்கச் செய்கிறேன். இப்பொழுதே கிரியாவைச் செய்”//
    ஓ இப்படித்தான் மறுபிறப்பு தீர்மானிக்கப் படுகிறது போலும்.. நமக்குத் தெரியாமலேயே.

    // அதில் நிறைய யோகிகளுடனான சந்திப்புகள், ஷீரடி சத்யசாயி பாபாவை ஷீரடியில் ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று ஏராளமானவர்கள் வருகின்றனர்.//

    இதில ஏதோ வசனம் பிழைக்கிறதே நெல்லைத்தமிழன்...

    ஷீரடி பாபா வேறு, சத்திய சாயிபாபா வேறு என்கின்றனரே... ஷீரடி பாபாவுக்கு டொரண்டோவில் கோவில் இருக்கு... அங்கு நிற்கும்போது வியாளக்கிழமைகளில் நாங்களும் போவோம்... நிறைய மக்கள் வருவார்கள்.

    https://www.youtube.com/watch?v=lBfI4bkZyN8&feature=share&fbclid=IwAR2qdHfzlfpw398oElZGuHNXTigUhihrHiuEtk0o0i97OXmtV0RkSiVcUY4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /வசனம் பிழைக்கிறதே// - ஆமாம் அவசர அவசரமாக எழுதும்போது மனம் போகும் வேகத்துக்கு தட்டச்ச முடிவதில்லை. பிழை வந்துவிடுகிறது.

      ஷீரடி பாபா - இவர் ஷீரடியிலேயே வாழ்ந்து மறைந்தவர். புட்டபர்த்தி சத்ய சாய் பாப - இவர், தான் ஷீரடி பாபாவின் அடுத்த பிறவி என்று சொன்னவர். பொதுவா ஷீரடி சாய்பாபா பக்தர்கள் எல்லோரும் புட்டபர்த்தி சாய்பாபா பக்தர்களாக இருப்பதில்லை. ஆனால் புட்டபர்த்தி சாய்பாபா பக்தர்கள் அனைவரும் ஷீரடி பக்தர்களாகவும் இருப்பார்கள்.

      வியாழக் கிழமைகளில் சாய்பாபா ஆலயங்களில் நிறைபேர் வருவார்கள். இதைப் பற்றி பின்னொரு சமயம்

      நீக்கு
    2. ஷீரடி பாபா, சத்ய சாயி பாபா, ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று ஏராளமானவர்கள்.. இப்படிப்போகிறதே ஸ்ரீ.எம்.-ன் கதை!
      அதென்ன ‘ஸ்ரீ எம்.’? ’மிஸ்டர் எம்’, ’ஸ்ரீ மு’- என்றெல்லாம் வைத்துக்கொண்டால் ஆன்மீக லைனில் இம்ப்ரெஸ்ஸிவ்வாகத் தோன்றாதோ - என்று கேட்க நினைத்தேன்.
      //..இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே... ஞானிகள் யோகிகள் எனில்....//

      - ஒயிட் ஹவுஸ் விளையாடுவதால் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
    3. //வியாழக்//

      ஹையோ ஆண்டவா.. இந்த ழ போட்டு பின்பு டவுட்டில அழிச்சுப்போட்டு ள போட்டேன் தெகிறியமாக:)) ஏச்சுப்போட்டுதே கர்ர்ர்:)).

      // ஒயிட் ஹவுஸ் விளையாடுவதால் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
      //
      ஹா ஹா ஹா ஏ அண்ணன் நீங்க மச் பார்த்துப் பார்த்து... அதுபோலவே பேசுறீங்க.. மீயும் சிக்ஸர் அடிக்கிறேன்ன்:))

      நீக்கு
  18. //இதை முழுமையாகப் படிக்கும்போது, மதம், ஜாதி இவற்றைத் தாண்டிய இறைவனை நாம் உணரமுடியும்,///

    உண்மை நெல்லைத்தமிழன் நாங்களும் எப்பவும் நினைப்பது... எத்தனை மதப் பிரிவுகள் இருப்பினும் மூலப்பொருளாக இருப்பது எல்லோருக்கும் ஒரு சக்திதானே... எதுக்கு பிரிவினை, அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு... நமக்குப் பிடிச்சதை நாம் செய்யலாமே தவிர, அடுத்தவரின் நம்பிக்கையை ஏளனப்படுத்தவோ உதாசீனம் செய்யவோ கூடாது என நினைப்பேன்..

    பெரிய சுய சரிதத்தை, மிக அழகாகச் சுருக்கிக் கூறிட்டீங்க, படிக்க சுவாரஷ்யமாக இருக்கு...

    //பின்குறிப்பு: புத்தக மேலட்டை தவிர மற்றப் படங்கள் என்னுடைய இமயமலை பயணத்தின்போது எடுத்தவை.//

    ஓ இமயமலைப் பனியோ அது.. அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /அடுத்தவரின் நம்பிக்கையை ஏளனப்படுத்தவோ உதாசீனம் செய்யவோ கூடாது என நினைப்பேன்..// - நல்ல சிந்தனை. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. ஆனால் 'என்னுடையதுதான் உசந்தது' என்று மற்றவர்களை ஏளனப்படுத்துவது மிகத் தவறானது மட்டுமல்ல, அவங்களிடம் பக்தி இல்லை என்பதை அவங்களே காண்பித்துக்கொள்ளுவதாகத்தான் அர்த்தம். என் தாய் உசந்தவள் என்று சொல்வதில் தவறல்ல. என் தாய் மட்டும்தான் உயர்ந்தவள் என்பது தவறு.

      /இமயமலைப் பனி/ - அது தரும் பரவசம், பய உணர்வு தனி..

      நீக்கு
  19. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    தங்களுடைய இமாலயப் படங்கள் அருமை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கரந்தை சார். எனக்கு ஒரு அருமையான வாய்ப்பு வந்தது. நேபாள் பொகாராவில் தங்கியிருந்தபோது, அங்கு ஒரு ஓட்டுநர் (டாக்சி மாதிரி), என்னை அன்னபூர்ணா மலை அடிவாரம் வரை கொண்டுபோய் காட்டுகிறேன் 600 ரூபாய்க்கு என்றார். நான், புது இடமே என்று தயங்கிவிட்டேன். ஆனால் இமயமலையின் சிகரங்களின்மேல் சென்றபோது அது தந்த உணர்ச்சி தனிதான்.

      நீக்கு
  20. இரண்டாவது செய்தி புதிது - பிரான்சிஸ் + கோடி வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  21. இமய குருவின் இதய சீடன் - யோகியின் சுய சரிதை விமர்சனம் சிறப்பு...

    // பொதுவாக ஆன்மீகத்தைத் தேடுபவர்கள், அந்தப் பாதையில் செல்பவர்கள், வழியில் கிடைக்கும் எந்த அனுபவங்களையும் பிறரிடம் பகிர மாட்டார்கள்... //

    இதைப்பற்றி மேலும் பேச, வள்ளலார் மற்றும் துணைக்கு வேதாத்திரி மகிரிஷி அவர்களையும் அழைக்க வேண்டும்... பிறகு...!

    இதற்கு அடுத்த ஒரு பத்தி வாசித்தவுடன், தாத்தா ஞாபகம் வந்தது :-

    தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
    அஃதிலார் மேற்கொள் வது...

    விமர்சனம் முழுதும் வாசித்தவுடன், தவம் அதிகாரத்தின் 70% குறள்கள் இதற்கு பொருந்தும்...

    மைலாப்பூர் தானே... அடுத்த வாரம் முழுவதும் பயணம் தான்... கிரி டிரேடிங் சென்று விடுகிறேன்... நன்றி நெ.த. ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
      அஃதிலார் மேற்கொள் வது என்பது உண்மைதான். தவ ஒழுக்கம் என்பதற்கான விளக்கம், தனக்கு நேரும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்தலும், பிற உயிர்க்குத் துன்பம் விளைவிக்காமையும்தான். அதாவது புலாலுண்ணாமையும் தவ நெறியில் வரும். மற்ற ஒழுக்கங்கள் தவநெறிக்குச் சொல்லவில்லை.

      புத்தகத்தில் அவர்களுடைய உணவாகக் குறிப்பிட்டிருப்பவை சுவாரசியமானது. (பிறப்பினால் இஸ்லாமியரான ஸ்ரீ.எம், தான் வீட்டிற்குத் திரும்பியபோது முட்டை சேர்த்த உணவை உண்டதையும் சொல்லியிருக்கிறார்)

      ஆன்லைனில் புத்தகத்தை ஆர்டர் செய்தால் காசு மிச்சம் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  22. முதல் செய்தி அருமை. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக, தவறு செய்பவர்களை வழி காட்டி திருத்தினால் நல்லதுதான். பெண் போலீஸ் அதிகாரிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள். நல்ல செயல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. ப்ரெஞ்சுக்காரர் அசத்துகிறார் என்றால் சிவகுமார் அவர்கள் வாவ் போட வைத்தார். ஒரெ நாளில் 700 மரக்கன்றுகள்! பிரமிக்க வைக்கிறார். அருமையான பணி! இருவருக்குமே பாராட்டுகள். தொடரட்டும் இப்படியான பணிகளை.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. எப்படி முதல் முதலில் தன் குரு தன் 9ம் வயதில் தன்னைக் காண வந்தார் என்று விளக்கும் நிகழ்ச்சி, தன்னால் அந்தச் சிறு வயதிலேயே படுக்கும்போது ஆழ்நிலைத் தியானத்திற்குச் செல்ல முடிந்தது, //

    வாவ்! அசாத்தியமான அனுபவம் என்று தெரிகிறது நெல்லை.

    அடுத்து வந்த வரிக்ள் ஏனோ நெருடலாக இருக்கிறதே. யோகிகளுக்கு கோபம் இப்படி வரலாமா? யோக நிலை என்பது அன்பு இருந்தால்தானே அதை அடைய முடியும் இல்லையா? அதுவும் இப்படியான கடும் வார்த்தைகளா? ம்ம்ம்

    நான் எதிர்மறையாகச் சொல்கிறேன் என்று தவறாக நினைக்காதீர்கள் நெல்லை. நாம் தான் சாதாரண மனிதர்கள். கோபம் தாபம் ஒரு நிமிடம் கூடத் தியானம் அல்லது மன அமைதியில் ஈடுபட முடியாத மிக மிக மிகச் சாதாரண மனிதர்கள். யோகனிலை என்பது மிக மிக உயர்வாகச் சொல்லபடும் ஒன்றல்லவா? அப்படியான ஒரு நிலையில் இப்படி கடும் வார்த்தைகள் என்பது மனதிற்கு வேதனையாக இருக்கிறது என்பதால். எனக்கு ஆன்மீகம் அற்றி அதிகம் தெரியாது என்பதை விடக் கொஞ்சமும் தெரியாது என்பதால்.. இந்தக் கேள்வி என்னுள் எழுகிறதாக இருக்கலாம். எனக்குப் புரிதலும் குறைவாக இருக்கலாம். தவறாக நினைக்காதீர்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /யோகிகளுக்கு கோபம் இப்படி வரலாமா? யோக நிலை என்பது அன்பு இருந்தால்தானே அதை அடைய முடியும் இல்லையா?// - அப்படி இல்லை என்று நினைக்கிறேன். யோக நிலையில் மிக மிக முன்னேறும்போதுதான் மனது சாஃப்ட் ஆகும்னு நான் நினைக்கிறேன். ரொம்ப பக்தி உடையவர்களும், தெய்வ சிந்தனை உடையவர்களுமே ரொம்பக் கோபப்பட்டுப் பார்த்திருக்கிறேன். கோபம் பாபம் பழி என்பது உண்மையல்லவா?

      நீக்கு
  25. “மகனே.. எவ்வளவு கொடுமையான காரியத்தைச் செய்திருக்கிறாய்?” என்று மிருதுவாகக் கேட்டார். //

    ஹப்பா இப்போதுதான் மனம் சமாதானம் அடைகிறது/.

    //“எப்போது பேசினாலும் என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்பதை நினைவில் கொண்டு பேசவேண்டாமா? வெளித் தோற்றத்தை மட்டும் பார்த்து முடிவெடுக்காமல் அந்த முதியவர் என்ன சொல்ல வருகிறார் என்று பொறுமையாகக் கேட்டிருக்கலாமே. என் அருமைச் சீடர் கபீர் சொன்னதுபோல, நீ வாளை விட்டுவிட்டு வாளின் உறைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாயா? கடவுளின் ஓர் அற்புத பக்தனை புண்படுத்தி துயரம் கொடுத்துவிட்டாய். பல வருடங்கள் கடுமையாக உழைத்ததின் பலன்களை எல்லாம் மின்னல் வேகத்தில் அழித்துவிட்டாய். ஒரு நிமிடம் கருணையோடு இருப்பது நூறு ஆண்டுகள் தீவிரமாகத் தவம் செய்வதற்கு ஒப்பானதாகும். அந்த நஷ்டத்தை நீ ஈடு செய்யவேண்டும்”//

    அருமை அருமை அருமையான வரிகள்.மீண்டும் மீண்டும் வாசித்தேன். நம் எல்லோருக்குமே இது பொருந்தும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகத்தின் உண்மைத் தன்மைதான் என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் புத்தகத்தில் வேறு சில ஆச்சர்யங்களும் உண்டு.

      நீக்கு
  26. ஆஆஆஆஆ இன்று அரைச்சதம் அடிச்சது மீயேதான்ன்ன்ன்ன்ன்ன்:))..

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
    கஞ்சா விற்று வந்தவரை நல்வழியில் திருத்திய காவல் துறை பெண் அதிகாரி பாராட்டுக்குரியவர்.

    பேராவூரணி ஏரியை தூர் வார உதவிய பிரெஞ்சுக்காரின் செயலுக்கும், அதிகப்படியான மரக்கன்றுகளை ஒரே நாளில் விவசாயிகளுக்கு கொடுத்துதவிய சிவக்குமார் அவர்களின் நல்ல மனதுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    சகோதரர் நெ. தமிழரின் ஆன்மிக புத்தக விமர்சனம் அருமை. படிக்க படிக்க மனதை ஈர்க்கிறது.

    /இந்த அனுபவங்கள் எல்லோருக்கும் வாய்க்காது. தகுதி உடையவர்களுக்கு (முன்வினைப் பயனோ அல்லது முந்தைய ஜென்மங்களில் இந்தப் பாதையில் தொடர்ந்து சென்றவர்களுக்கோதான்) மட்டும்தான் வாய்க்கும். ஆனால் தகுதி உடையவர்களா என்பதை சட் என்று கண்டுபிடித்துவிட முடியாது. /

    உண்மையான வரிகள். ஆன்மிக பாதை என்பது எளிதில் எல்லோருக்கும் வாய்த்து விடாது.தொடர்ந்து தினமும் தவறாது இறைவழிபாடு செய்து இறையுடன் நெருங்கிப் போகவே காலமும் நேரமும் ஒத்துழைக்க வேண்டும்.இதில் பந்த பாசம் என்ற கட்டுக்களை அவிழ்த்து விட்டு ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலந்து இன்பம் எய்துவதற்கு இந்த ஒரு பிறவி நிச்சயம் போதாது. எத்தனை பிறவிகளிலோ இது போன்ற எண்ணங்களுடன் பிறந்து வாழ்ந்து வளர்த்து வந்தாலன்றி இது சாத்தியமாகாது. நிதர்சனமான இந்த வரிகளை படிக்கும் போது மனம் கட்டுக்கடங்காமல் நெகிழ்ந்தது.

    புத்தக விமர்சனம் மிக அருமையாக இருந்தது. மனதை ஒருநிலை படுத்தி இதைப் படித்தாலன்றி இந்த மாதிரி விமர்சனம் செய்ய முடியாது. தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். நல்ல நேரங்கள் கூடும் போதுதான் இம்மாதிரியான ஆன்மிக புத்தகங்களே நம் கண்களுக்கு தென்படும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்தியோகம் ரொம்ப கடினமானது. ரொம்ப வருடம் தொடர்ந்து பக்தியோடு இருக்கணும். பொதுவா ஆன்மீகம் சொல்வது, ஒவ்வொரு பிறவிலயும் நாம குறைகளைவிட நிறைகள் அதிகமாக ஆக ஆக நம் ஆன்மீக முன்னேற்றமும் தங்குதடையின்றி இன்னும் முன்னேறும்.

      வாய்ப்பிருந்தால் படித்துப் பாருங்கள் கமலா ஹரிஹரன் மேடம்.

      நீக்கு
  28. ஸ்ரீராம்! உள்ளது உள்ளபடியே சொல்வதானால் கஞ்சா விற்றவன் உப்பு வியாபாரியான இன்ன பிற பாசிட்டிவ் செய்திகளைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது நெல்லைத்தமிழனின் புத்தக அறிமுகம்! (விமரிசனமாக எதையும் காணேன்!) கொஞ்சம் கவனமாக இந்தமாதிரி புத்தக அறிமுகம், அல்லது விமரிசனங்களைத் தொடர்ந்து வெளியிட்டால், சனிக்கிழமைப் பதிவைத் தேத்த வேண்டிவராது! வருடங்களுக்குப் பிறகும் கூட இந்தமாதிரி புத்தக அறிமுகம் தேடிப்பிடித்துப் படிக்கிற மாதிரி இருக்கும்! சந்தேகமே வேண்டாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிருஷ்ணமூர்த்தி சார்... அதில் விமர்சிக்கணும் என்றால், யோகத்தில் இவ்வளவு முன்னேறி, பிறகு குழந்தைகளுக்காக (சிறுவர்களுக்காக) கல்வி நிலையம் என்று அவருடைய வாழ்க்கை எங்கேயோ சென்றுவிடுகிறது. இப்போதும் அவர் ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கிறார். அவருக்கு முன்பு ஒரு மெயில் அனுப்பியிருந்தேன். பதில் வரவில்லை. ஒருவேளை பெரிய யோகிகளாக இருந்தாலும், அவரும் சமூகத்தின் பெரிய ஆட்களை மட்டுமே கவனிப்பாராயிருக்கும், இல்லை அதற்கேற்ற நிலையை நான் அடையவில்லையாயிருக்கும்.

      புத்தகத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதால் இதனைப் பற்றி விஸ்தாரமாக விமர்சிக்கவில்லை.

      நீக்கு
    2. /மெயிலுக்கு பதில் வரலை/ - இதனை தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. கிரேசி மோகன், அவருடைய ட்ரூப்புக்கு ஆட்களை, நடிக்கும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதில்லை. எவ்வளவு தூரம் நட்புத்தன்மையோடு இருப்பார்கள் என்று பார்த்துத்தான் தேர்ந்தெடுப்பாராம். ஷாம்ஸ் என்ற சுவாமிநாதன், அவரது டிராமாவின்போது 3 மாதங்கள் தொடர்ந்து தேவுடு காத்து பிறகுதான் அவரை ட்ரூப்புக்கு எடுத்து முதன் முதலாக ஒற்றை வசனம் மைக்கில் பேசச்சொன்னாராம். அப்படித்தான் மெதுவாக அவரது குழுவில் இடம் பெற்றாராம்.

      அதுபோல வெறும் மெயில் அனுப்பினால் ரெஸ்பான்ஸ் வராது. தொடர்ந்து ஒருவேளை முயற்சியெடுத்திருந்தால், பார்க்கவும் முயன்றிருந்தால் ஏதேனும் கற்றுக்கொண்டிருக்கலாம்.

      நீக்கு
    3. நெ.த! விமரிசனம் என்பதற்கு தமிழ் இணையச் சூழலில் ஒரு விபரீதமான அர்த்தம், பிரயோகம் எல்லாம் உண்டு.

      ஒரு புத்தகத்தை வாசித்து உள்வாங்கிக் கொண்டு, அதன் குறைநிறைகளைச் சொல்வது விமரிசனம். விரிவாகச் சொன்னால் திறனாய்வு. அதல்லாமல் புத்தகத்தில் அங்கே இங்கே சொல்லியிருப்பதை வைத்து மட்டும் செய்யப்படுவது புத்தக அறிமுகம் என்று ஒரு வரையறையை நான் வைத்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியாது இல்லையா? :-)))

      தெரிந்த ஒருத்தர் ஜீவி சார்! அவரும் இப்போது என்னோடு கா" விட்டுவிட்டார்!

      நீக்கு
    4. I understand Krishnamurthy Sir. இந்த மாதிரி புத்தகத்தை விமர்சனம் என்ற தலைப்பில் எழுதுவதை விட, 'அறிமுகம்' என்ற தலைப்புதான் சரியா வரும்.

      நான் ஒரு புத்தகம் (பெயர் மறந்துவிட்டது, விகடன் பதிப்பகம். இந்திராகாந்தி குடும்பம் பற்றியோ இல்லை இந்திய வரலாறோ.. எழுதியது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக எம்.பி..- கொஞ்ச வருடத்துக்கு முந்தைய) ஆவலுடன் வாங்கினேன். அது ஒரு மொழிபெயர்ப்பு புத்தகம். அதைப்போல் ஒரு கோரமான மொழிபெயர்ப்பு புத்தகம் நான் படித்ததில்லை. எப்படி விகடன் அந்த மாதிரி புத்தகத்தை வெளியிட்டு வாசகர் பணத்தை இழக்க வைக்குதுன்னு தெரியலை. புத்தகத்தில் கொஞ்சம்கூட ஒன்ற முடியலை.

      நீக்கு
  29. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியெல்லாம் இல்லை, நெல்லை. எதை அவரே கோடிட்டுக் காட்டினாரோ அது இல்லை என்றவுடன் பின்னூட்டத்தைத் தொடரவில்லை, அவ்வளவு தான்.

      நீக்கு
    2. ஆன்மிகம் தொடர்பாக என்னுடைய அப்ரோச் வேறே மாதிரி. அது ஆத்ம விசாரசம் சம்பந்தப் பட்டது. ஆத்மாவைத் தேடி அலைவது.
      நேற்று கூட கிரி டிரேடிங் போயிருந்தேன். இரு புத்தகங்கள் வாம்கினேன்

      1. ஆத்ம சாதனை - குருஜி
      சாது ஸ்ரீ அருள்

      2. ஆதி கால பிராமணர்களின் தாயகம் தமிழகமே என்ற ஆய்வு நூல்.

      நீக்கு
    3. * அது ஆத்ம விசாரம் சம்பந்தப் பட்டது என்று திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  30. ஓ மும்தாஜ் அவர்களின் முற்பிறப்பின் கதையா அது...

    //ஷீரடி சத்யசாயி பாபாவை ஷீரடியில் ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று ஏராளமானவர்கள் வருகின்றனர்.//

    ஓ!!!!! அப்ப பெரியவர் இல்லையா...

    //இதை முழுமையாகப் படிக்கும்போது, மதம், ஜாதி இவற்றைத் தாண்டிய இறைவனை நாம் உணரமுடியும், இறை என்பது எவ்வாறு இருக்கும், //

    நல்ல வரிகள். உண்மையாவே இறை என்பதற்கு எந்த மதமும், ஜாதியும் இல்லை அதையும் தாண்டியதுதான். இதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. இறை என்பது நாம் வழக்கமாகச் சொல்வதற்கும் அப்பாற்பட்ட ஒரு விஷயம்..என் நம்பிக்கையும் அதே.

    என்றாலும், நாம் யாருடைய நம்பிக்கையையும் உதாசீனப்படுத்தக் கூடாதுதான். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. அதை ஏளனமாகவோ, சரியல்ல என்றோ பேசக் கூடாது என்றே நினைப்பதுண்டு. எனக்குத் தெரிந்தவர்க்ளே அதுவும் மிகவும் நெருங்கியவர்களே ரொம்பவும் அடுத்தவரின் நம்பிக்கையைத் தவறு என்று சொல்லி தனக்கு எல்லாம் தெரிந்தது போன்ற ஒரு கர்வத்துடன் விவாதிப்பதையும் நான் பார்த்துவருகிறேன்.
    இப்படியும் மனிதர்கள்...
    நல்ல ஸ்வாரசியமான புத்தகம் என்று தெரிகிறது உங்கள் விமர்சனம் மூலம். நல்ல விமர்சனம் நெல்லை. நல்லா எழுதியிருக்கீங்க..

    ஒரு வரி சொல்ல விட்ட்டுப் போச்ஹ்கு...கருணை// ஆம் அது ஒன்று இருந்தாலே அந்த வரி அருமை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்... ஒரு புத்தகத்தில், இறைவன், அவருக்குக் கீழே குருநானக், இயேசு கிறிஸ்து, பாபாஜி, ... என்று 6-7 ஆன்மீகத்தில் வெகு உயர்நிலை எய்தியவர்கள் என்று இறை ராஜ்ஜியத்தின் படிகளைப் போட்டிருந்தது. நாம் படித்திருக்கும் 'பாதாள லோகம்', 'நாக லோகம்' இவையெல்லாம் உண்மைதான் என்றும் போட்டிருந்தார்கள். புத்தகத்தின் உண்மைத் தன்மை, இந்த மாதிரி அவர்கள் எழுதியவற்றிர்க்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது.

      /தனக்கு எல்லாம் தெரிந்தது போன்ற ஒரு கர்வத்துடன்// - நிறைகுடம் என்றும் தளும்பாது. இதுதான், இப்படித்தான் என்று இறைவனைப் பற்றி, இயற்கையைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இலர்.

      நீக்கு
  31. பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.
    கஞ்சா விற்ற்வர், உப்பு விற்பது நல்ல செயல்.
    மீண்டும் அவரை அந்த செயலில் ஈடு படுத்தியவர்கள் தொந்தர்வு கொடுக்காமல் இருக்க வேண்டும்.
    உதவி செய்த பேண் காவலருக்கு வாழ்த்துக்கள்.

    பேராவூரணி ஏரியை தூர் வாரும் இளைஞ்ர்கள், உதவிய பிரெஞ்சுக்காரர் அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    மரகன்று வழங்குதல், கடன் தள்ளுபடி செய்யும் டீக்கடைக்காரருக்கு வாழ்த்துக்கள்.
    நல்ல மனங்கள் வாழ்க!

    நல்ல செய்திக்கு வாழ்த்துக்கள்.




    பதிலளிநீக்கு
  32. ஸ்ரீராம் சனிக்கிழமை அன்று இப்படியான விமர்சனப் பகுதி சூப்பர். ஆதர்வு!!! முழு ஆதரவு. வரவேற்கிறோம்..அவரவர் வாசிக்கும் புத்தகத்தை விமர்சிக்கலாம் விருப்பம் இருந்தால். அதை இங்கு வெளியிடலாம். கதைப் புத்தகம் என்றாலும் சரி அல்லது ஆன்மீகப் புத்தகம் என்றாலும் சரி. இல்லை ஏதேனும் கட்டுரையாக இருந்தாலும்..

    அது போல எபி வார விமர்சனம் கூட ஏதேனும் ஒரு நாளின் பதிவை எடுத்துக் கொண்டு விமர்சிக்கலாம். வித்தியாசமாக இருக்கும்.

    ஸ்ரீராம் நீங்கள் புத்தக விமர்சனம் ஏதேனும் எழுதினால் அதையும் இன்றோ அல்லது வியாழனன்றோ கூட சேர்த்துக் கொள்ளலாம். கௌ அண்ணா உங்களுக்கும் தான்...மற்ற ஆசிரியர்களும் சனிக்க்ழமை விமர்சனம் எழுதலாமே. ஆங்கில புத்தகம் என்றாலும் கூட...

    இப்பகுதி மிக நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் புத்தக விமர்சனம், அல்லது வேறு விமர்சனம் எழுத யார் ரெடி?

      நீக்கு
    2. புத்தக விமரிசனப்பகுதி நன்றாக இருக்கிறது என்று இருகரம் நீட்டி வரவேற்றிருக்கிற தில்லையகத்துக்கு ஒரு புத்தக விமரிசன அறிமுகம் உடனடியாகப் பார்சேல்ல்ல்ல்ல்!

      வர்ண ஜாலம்! எண்டமூரி வீரேந்திரநாத்!

      வர்ண ஜாலம் இரண்டு பாகங்களாக திருமதி கௌரி கிருபானந்தன் மொழிபெயர்ப்பில் வந்த எண்டமூரி வீரேந்திரநாத்தின் புதினத்தை மீண்டும் இப்போது எடுத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்ததில், இடையில் மூடிவைக்க மனமே வரவில்லை.
      https://consenttobenothing.blogspot.com/2019/01/blog-post_34.html

      நீக்கு
    3. கோட்டயம் புஷ்பநாத், எண்டமூரி விரேந்திரநாத் நாவல்கள் ரொம்பவும் நல்லா இருக்கும். அதிலும் துளசிதளம், மீண்டும் துளசி போன்றவை வார இதழ்களில் தொடர்கதையாக வந்து ஜில்லிடச் செய்தவை. என்னிடம் இந்த 'வர்ணஜாலம்' புத்தகம் இல்லை.

      நீக்கு
  33. புத்தக விமர்சனம், இமயமலை படங்கள் எல்லாம் அருமை.

    //“எப்போது பேசினாலும் என்ன பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்பதை நினைவில் கொண்டு பேசவேண்டாமா? வெளித் தோற்றத்தை மட்டும் பார்த்து முடிவெடுக்காமல் அந்த முதியவர் என்ன சொல்ல வருகிறார் என்று பொறுமையாகக் கேட்டிருக்கலாமே. என் அருமைச் சீடர் கபீர் சொன்னதுபோல, நீ வாளை விட்டுவிட்டு வாளின் உறைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாயா? கடவுளின் ஓர் அற்புத பக்தனை புண்படுத்தி துயரம் கொடுத்துவிட்டாய். பல வருடங்கள் கடுமையாக உழைத்ததின் பலன்களை எல்லாம் மின்னல் வேகத்தில் அழித்துவிட்டாய். ஒரு நிமிடம் கருணையோடு இருப்பது நூறு ஆண்டுகள் தீவிரமாகத் தவம் செய்வதற்கு ஒப்பானதாகும். அந்த நஷ்டத்தை நீ ஈடு செய்யவேண்டும்”//


    அந்தக்கால முனிவர்களை பற்றி படிக்கும் போது கோபத்தால் தன் தவவலிமை இழந்து மீண்டும் தவம் செய்ய போவார்கள். இது சொல்வது என்ன கோபத்தை தவிர்க்க வேண்டும் வேதாத்திரி மகரிஷி சொல்வது "சினம் தவிர்த்தல்"

    அப்பர் பாடும் தேவாரத்தில் மனம்எனும் தோணீ பற்றி செறிகடல் ஓடும் போது என்ற பாடலில் கோபத்தை நீக்க ஓன்றியூர் பெருமானை கூப்பிடுகிறார்.
    கோபம் தான் அனைத்துக்கும் மூலகாரணம் கோபத்தை குறைத்தால் நலமுடன் வாழலாம்.

    சக மனிதனை நேசிக்க முடியாதவர்கள் இறைவனை அடைய தவம் எத்தனை செய்து என்ன பலன் என்பதை இந்த புத்தகம் சொல்கிறது.

    கோபத்தால் இழப்பு தான் ஏற்படுகிறது ஒரு பயனும் அடைய முடிவது இல்லை.

    பரங்கி பேட்டையில் இருக்கும் பாபாஜி கோவிலுக்கு போன போது இரண்டு புத்தகங்கள் வாங்கி வந்தேன். 'பதினென் சித்தர் யோகக் கோவை பாராயணப்பா' , "கிரியாஹடயோகம்'
    உங்களை போல் ஆழ்ந்து படிக்கவில்லை இப்போது படிக்க தோன்றுகிறது.

    https://mathysblog.blogspot.com/2013/04/blog-post_26.html

    நேரம் இருந்தால் இந்த பதிவை படித்து பாருங்கள்.
    பாபாஜி கோவிலைப் பார்த்துக் கொள்பவர் எளிமையாக சொன்னது

    "அன்பு செலுத்துங்கள் எல்லோரிடமும் . அது தான் அவருக்கு பிடித்தது என்றார். பாபாஜி இன்றும் ஜீவித்து இருப்பதாய் சொல்கிறார்."


    கிருஷ்ணஜெயந்தி அன்று வெளியூர் பயணமாகி விட்டதே ! அவரை அவசர அவசரமாய் கும்பிட்டுவிட்டு போக வேண்டியது இருக்கே ! என்று மனதில் நினைத்துக் கொண்டு பயண்ம செய்தேன். வழியில் காலை உண்வுக்கு ஓட்டலுக்கு போனோம்.அங்கு டிரைவருக்கு ஒருவர் பகவத் கீதை சுருக்கம் புத்தகம் கொடுத்து இருக்கிறார்.டிரைவர் 'அம்மா இது உங்களுக்கு' எனக்கு எங்கே நேரம் படிக்க என்று என்னிடம் கொடுத்தார். நினைத்தால் வருவார். எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவர். நமக்கு அவரை நினைக்கும் எண்ணத்தையும் அவரே தர வேண்டும் .

    அப்புறம் கும்பகோணத்தில் ஓட்டலில் தங்கினோம், அங்கு டி.வியில் சாந்த சக்குபாய் என்ற படம், கிருஷ்ணபக்தி என்ற பழைய படங்கள் இறுதி பகுதி பார்த்தேன்.

    பொதிகையில் கிருஷ்ணன் பாடல்கள். எங்கும் எதிலும் கானும் இடமெல்லாம் நந்தலாலாதான்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /பாபாஜி இன்றும் ஜீவித்து இருப்பதாய் சொல்கிறார்."// - இந்தப் புத்தகத்தில் நிறைய வசீகர சம்பவங்கள் இருக்கின்றன. காசி ghatல் நடக்கின்றவை என்றெல்லாம். பாபாஜி அவருடைய உருவத்தில் இவரிடம் வருவது, கும்பமேளாவில் நடப்பது என்று சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லை.

      கிருஷ்ணஜெயந்தி உங்களுக்குச் சிறப்பாக அமைந்துவிட்டதா? வாழ்த்துகள். யாராவது அப்பம், சீடை கொடுத்தார்களோ?

      நீக்கு
    2. // வேதாத்திரி மகரிஷி சொல்வது "சினம் தவிர்த்தல்" //

      நன்றி அம்மா...

      நீக்கு
    3. சக்கரபாணி கோவிலில் பானகம் கொடுத்தார்கள் .
      அவரை தரிசனம் செய்து வந்தேன்.

      நீக்கு
    4. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி நெல்லைத் தமிழன்

      நீக்கு
    5. தனபாலன் வேதாத்திரி மகரிஷி சொல்லி விட்டார் எளிதாக சினம் தவிர்த்தல் என்று.
      அதை கடைபிடிக்கத்தான் முயற்சி செய்து வருகிறோம்.
      கைவரபெற்றால் அனைத்தும் நலம்.

      நீக்கு
    6. //சக்கரபாணி கோவிலில் பானகம் கொடுத்தார்கள் // - சார்ங்கபாணி கோவிலுக்கும் இராமசாமி கோவிலுக்கும் போனீங்களோ கோமதி அரசு மேடம்?

      நீக்கு
    7. //எளிதாக சினம் தவிர்த்தல் நன்று // - இது எப்படி சாத்தியம்னு எனக்குத் தெரியலை. ஆனால் நான் முன்பு தியானம் பழகிக்கொண்டிருந்த காலத்தில் (3 வருடங்கள்), என் குணம் கொஞ்சம் சாந்தமாகிவிட்டது என்று என் மனைவி சொல்லுவா. ஆனா பாருங்க... ஒரு தடவை தியானம் பழகும்போது மனம் கொஞ்சம் ஆழ்ந்திருக்கும்போது என் பெண் (சின்ன வயசு) கொச கொசன்னு பேசிக்கிட்டிருந்தா. தியானத்தை நிறுத்திவிட்டு சத்தம் போட்டேன்.... ஹா ஹா

      நீக்கு
    8. சக்கரபாணி கோவில் மட்டும்.
      முன்பு எல்லா கோவில்களும் பார்த்து இருக்கிறோம் அடிக்கடி.
      நேரம் இன்மையால் மற்று எங்கும் போகவில்லை.
      ஸ்ரீ அபிமுகேஸ்வரர் திருக்கோயில் போய் இருந்தோம் கோயில் பக்கத்து மண்டபத்தில் திருக்குட்ஸ்ந்த்சித் திருமுறை மன்றத்தின் 46 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் சார் உரை எழுதிய "ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் " நூல் வெளியிட்டார்கள் அதற்கு போய் விட்டு வந்தோம். இரவு கும்பேஸ்வரர் கோவில் போய் மங்களாமிகை கால் அடியில் புத்தகத்தை வைத்து வணங்கி வந்தோம். அன்று வெள்ளிக்கிழமை அலங்காரம் மிக அருமை, பார்த்து கொண்டே இருக்கலாம் கண்குளிர மனம் குளிர விரட்டுவார் யாரும் இல்லை. மறு நாள் காசி விஸ்வநாதர் கோவில், சக்கரபாணி கோவில், சுவாமிமலை பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

      நீக்கு
    9. திருக்குடந்தைத் திருமுறை மன்றம்
      என்று படிக்கவும்.

      எத்தனையோ கோவில் கும்பகோணத்தில் பார்த்து இருக்கிறோம், இந்த அபிமுகேஸ்வரர் கோவில் பார்த்தது இல்லை.அழகான சின்ன கோவில். சுவாமி, அம்மாள் , தட்சிணாமூர்த்தி எல்லாம் அழகு. இரவு அவசர அவரமாய் பார்த்தது. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிதானமாய் பார்க்க வேண்டும். பைரவருக்கு அஷ்டமி அபிசேகம் நடந்து கொண்டு இருந்தது.

      நீக்கு
    10. சினம் ஒரு சங்கிலி என்கிறார் மகரிஷி.
      தொற்று நோய் போன்றது என்கிறார்.
      சினமானது சங்கிலி தொடர் போலச் சென்று பலருக்கு துன்பத்தை விளைவிக்கும் என்கிறார்.
      ஒருவர் மீது சினம் கொண்டால் அவர்கள் படும் வருத்தம் ஒரு சாபமாகவே மாறுகிறது என்கிறார்.
      கோபபட்டு பின் வருந்தும் நிலைதான் நமக்கு.

      பயிற்சியால் தான் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். நாமும் செல்லுபடியாகும் இடத்தில்தான் கோபபடுகிறோம். மற்றவர்களிடம் சிரித்து பேசுகிறோம்.

      மனதாலும் கோபம் கொள்ளாமல் இருக்க பழக வேண்டும்.
      மனதில் அடக்கி வைக்கும் கோபம் மிக கொடியது ஒரு நாள் வெடித்து வெளியே வரும். அதைத் தான் " சாது மிரண்டால் காடு கொள்ளாது "என்பர்.

      நீக்கு
    11. சிறப்பான கருத்து. அப்படி இருக்க நான் பழகி வருகிறேன்.

      நீக்கு
    12. ஸ்ரீராம் , உங்களுக்கு கோபம் வருமா?

      நீக்கு
  34. நெல்லை அவ்வப்போது வந்துதான் கருத்து சொல்ல முடிகிறது இன்று. அப்போது சொல்ல விட்டுப் போனது...உங்கள் படங்கள் அட்டகாசம். இமயமலை வாவ் பனிச்சிகரங்கள் அனைத்தும் செமையா இருக்கு..அருமையான புகைப்படங்கள்....பாராட்டுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன் - நீங்க எப்போதுமே வஞ்சனையில்லாம பாராட்டறீங்க (என்னை மாதிரி பாராட்டறதுக்கே யோசிக்கிறமாதிரி இல்லாம). பனிச் சிகரங்களின்மீது ஹெலிகாப்டர் பறக்கும்போது பயம், தொட்டுவிடும் தூரத்தில் பனிச் சிகரங்கள். ஹிந்தி எனக்கு நன்றாகப் பேசத் தெரிந்தால், எப்போவோ ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரி கோவில் அதற்கு மேல் ... என்று கிளம்பியிருப்பேன்.

      நீக்கு
  35. மூன்று பாசிட்டிவ் செய்திகளும் அருமையானவை. செய்திகளில் இடம்பெற்றவர்கள் நற்செயல்கள் புரிபவர்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.

    புதியதாக இப்படியான விமர்சனப்பகுதியா? இது நன்றாக இருக்கிறதே. நாம் வாசித்த புத்தகங்களைப் பற்றிய விமர்சனம் இல்லையா? தமிழ்ப்புத்தகமாகத்தான் இருக்க வேண்டுமோ? ஆங்கிலப் புத்தகங்கள் இடம் பெறலாமா?

    ஆரம்பமே பிள்ளையாச் சுழி போடுவது போல இறை/ஆன்மீகம் பற்றியதாக அமைந்துள்ளது நல்லதொரு தொடக்கம்.

    நெல்லைதமிழன் உங்களின் விமர்சனம் நன்றாக இருக்கிறது. மிகவும் ஆழ்ந்து வாசித்திருக்கிறீர்கள் என்றும் தெரிகிறது.

    ஓ எழுதியவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரா? இப்போதுதான் அறிகிறேன். நிறைய ஆன்மீக அனுபவம் பெற்றவர் போன்று தெரிகிறது.

    கடைசியில் சொன்ன வரிகள் மிக மிக அற்புதமான வரிகள். எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவன் இறைவன் என்பது. உங்கள் விமர்சனம் இப்புத்தகத்தை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. பாராட்டுகள்.

    வாழ்த்துகள் நெல்லைத்தமிழன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசிதரன்... பொதுவா எல்லாரும் தமிழ்ப்புத்தகங்கள் மீது ஆர்வமாக இருப்பார்கள் என்பதால் தமிழ்ப்புத்தக விமர்சனம். ஆங்கிலப் புத்தகங்களை விமர்சிக்கக்கூடாது என்று எ.பி. சொல்லலை.

      கேரளாவில் மலைச் சரிவு, பெரும் வெள்ளம் என்று கேள்விப்படும்போது உங்கள் நினைவும், என் பெண்ணின் பாட்டுட் டீச்சர் நினைவும் வந்துபோகும். நீங்க உங்க தளத்துல எழுதறதை ரொம்ப குறைச்சுக்கிட்டீங்க. தொடர்ந்து எழுதுங்க, இணையத்தில் ஆக்டிவா இருங்கன்னு கேட்டுக்கறேன்.

      நீக்கு
  36. ஞானிகள், யோகிகள்பற்றிய புத்தகங்கள் - அவை ’சரி’யாக எழுதப்பட்டிருந்தால் - வாசிக்க இதமானவை. உள்ளே ஊடுருவிச் செல்பவை. அது கிட்டத்தட்ட அந்த ஞானியை சந்தித்ததுபோன்ற நிலைக்கு நம்மை இட்டுச்செல்லும் - நம் மனமும் அந்த நிலையில் இசைந்திருந்தால். இல்லையெனில், அந்தப் புத்தகம் howsoever interesting it may read, or holy it may sound, it will not work for the reader.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் சார்... வெறும் பழமொழி, அட்வைஸ், தத்துவங்கள் என்று எழுதும் புத்தகங்கள் என்னை அவ்வளவாக ஈர்ப்பதில்லை. அவையெல்லாம், நீங்களும் நானுமே முயற்சித்தால் எழுதிவிடலாம். ஆனால் தனக்கு நடந்த அனுபவங்களை, ஈர்ப்பு குறையாம சொல்வது என்பது கலை. அதைப் பற்றிப் பீற்றிக்கொள்ளாமல் எழுதுவதும் ஒரு கலைதான். மற்றபடி Holy Books need not be interesting to read, possibly good to keep them in shelf

      நீக்கு
  37. அருமையான நூல் பற்றிய கண்ணோட்டம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!