ஷில்லாங்கிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது செல்லவேண்டிய இடம்.
காலை எழுந்தவுடன் காஃபி என்று பழகியவர்களுக்கு மீன் சமைக்கும் வாசனை (?) வரவேற்கிறது
அந்த இடத்தின் ஒரிஜினல் பெயர் ‘Ka kshaid lai pateng khohsiew. ஆனால் ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்டிருக்கும் பெயர்தான் இப்போதிருக்கும் பெயர்.
மூன்றாவது மாடியின் மேல் இருக்கும் விளம்பரங்களை படிக்கவேண்டும் என்றால் எதிரே இருக்கும் விடுதியில் ரூம் எடுத்துத் தங்கவேண்டுமாக்கும்
காலையில் டூரிஸ்ட் ரெடி ஆகிறார்கள்
இந்த இடத்துக்கு ஆங்கிலேயர்கள் அப்படிப் பெயர் வைத்ததற்கான காரணம் அங்கிருக்கும் ஒரு பாறை அப்படித் தோற்றம் அளித்ததுதான். ஆனால் 1897 இல் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தில் அந்தப் பாறையும் அழிந்து விட்டது என்றாலும் (காரணப்)பெயர் நிலைத்து விட்டது!
நாங்கள் அப்போவே கிளம்பிவிட்டோம்
நேற்று மாலை பார்த்த மேகாலயா அசெம்பிளி இருக்கும் சாலை தான்
அதன் ஓரினினல் பெயருக்கேற்ப மூன்று கட்டங்களைக் கொண்ட இந்த இடத்தில் அந்த மூன்றாவது கட்டம்தான் ஸ்பெஷல். கட்டம் என்றால் இங்கு இடம் என்றுகொள்ளுங்களேன். ஆனால் இங்கு ஏறும் படிகள் செங்குத்தாக வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பயம் கொடுப்பவையாக இருக்கின்றன!
கொஞ்ச தூரத்துக்கு மிலிட்டரி கெடுபிடிகள் தொடரும்
எல்லா வண்டிகளும் ஷில்லாங் விட்டு வெளியே
கும்பல் கும்பலாக குடியிருப்புகளும் அலுவலகங்களும்
அங்கே ....தூரத்தில் தெரியும் பச்சைக் கட்டடத்தை முன்பே பார்த்த மாதிரி இல்லை ?
இந்த மரங்களின் பின்னே IAF தலைமையகம்
வந்து விட்டோம்
எங்கே என்று சொல்லும் முன்
எத்தனை எத்தனை மலர்கள்
மலர்க்கண்காட்சி போல
இன்னும் கொஞ்ச தூரம் என்கிறார்கள். அத்தனை படிகளையும் ஏறி போகவேண்டும் என்று நினைக்கும்போதே ....
பாலத்தின் மீதிருந்து ஓர் பானோ ரமா
இங்கு காணப்படும் fern மிகப்பழமையான தாவர வகை என்கிறார்கள்
பானோரமா (கொடுமை) தொடர்கிறது
ஒரு புறம் பார்த்தால் ....காலை வெயில் ...மறு புறம் குளிரோ குளிர்
எங்கு வந்திருக்கிறோம் என்று இன்னமும் சொல்லாமல் இருக்கலாமா ....ELEPHANT FALL S
இந்த இடத்தைச் சுற்றி நிறைய அருவிகளிருக்கின்றனவாம். Bishop Falls, Elephant Falls, Spread Eagle Falls, Sweet Falls, Crinoline Falls and Beadon Falls என்று பெயர்கள்....
வாழ்க நலம்..
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்..
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குவந்திருக்கும் துரைக்கும் மற்றும் அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்கு
நீக்குவாங்க கீதா அக்கா...
நல்வரவும், வணக்கமும்.
அன்பின் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குகீதாக்கா/ கீதா, வல்லியம்மா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....
வழிமொழிகிறேன்.
நீக்குவரவேற்கிறேன்.
முழுசாத் திறக்க ஒரு நிமிடத்துக்கும் மேல் ஆகிறது! அதிலும் இந்த வாரம் எக்கச்சக்கமான படங்கள்.
பதிலளிநீக்குஆமாம் கீதா அக்கா... மற்ற தளங்கள் இப்போது சரியாகிவிட்ட நிலையில் எங்கள் தளம் இன்னமும் கொஞ்சம் படுத்துகிறது! முன்னைக்கு இப்போ கொஞ்சம் தேவலாம் போல!
நீக்குமலர்களின் கண்காட்சி அருமை....
பதிலளிநீக்குநன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்குகீழிருந்து மூன்றாவது படம் பாதி இருட்டாய் இருக்கு. பனோரமா அப்படி ஒண்ணும் கொடுமை எல்லாம் இல்லை. நான் எடுப்பதை விட நல்லாவே இருக்காங்க. சும்மாவே படம் எடுக்கையில் சரியா வராது. இதிலே பனோரமா எல்லாம் நான் எங்கே எடுக்கிறது! இஃகி,இஃகி
பதிலளிநீக்குபனோரமா ...ங்கறது யாரு?..
நீக்குமனோரமாவுக்கு சொந்தக் காரங்களா!...
ஹா... ஹா.. ஹா...
நீக்குஹா ஹா ஹா துரை அண்ணா எனக்கும் அந்தத் தலைப்பை பார்த்ததும் மனோரமா பனோரமா என்று தோன்றியது....
நீக்குவந்தா நீங்க இங்க கொடுத்திருக்கீங்க!!!!!!
கீதா
மலர்களின் படங்கள் அருமை ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா..
நீக்குவாங்க.. வாங்க..
இனி அடுத்த பதிவில் அருவிகள் படம் வரும்.
பதிலளிநீக்குபடங்கள் மூலம் போகும் இடங்களை பார்த்துக் கொண்டே வருகிறோம்.
பானோ ரமா காட்சிகள் மூலமும் பார்த்து ரசித்தோம்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குபனோரமா புகைப்படங்கள் நன்றாக இருக்கும்... ஆனால் நம் வலைத்தள அகலத்திற்கு உகந்ததல்ல...
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குநன்றி DD.
புகைப்படங்களும், கேப்ஷன்களும் வழக்கம்போல் நன்றாகத்தான் இருந்தன, ஆனால் அவைகளுக்கும் தாளிப்பிற்கும் என்ன தொடர்பு??
பதிலளிநீக்குமன்னிக்கவும் தலைப்பு என்று வரவேண்டியது தாளிப்பு என்று வந்து விட்டது.
பதிலளிநீக்குபரவாயில்லை பானு அக்கா...
நீக்குதலைப்பின் சம்பந்தம் யூகிக்க முடியவில்லையா?!!
பானுக்கா அது எலிஃபன்ட் அருவியைக் குறித்தது.!!
நீக்குஇன்று அருவியின் படங்கள் வரவில்லை...அது இருக்கும் இடமும் அந்தச் சுனையும் தானே வந்திருக்கு! அதான்...தலைப்பு!
கீதா
அதே... அதே...
நீக்குஅழகான படங்கள். மேகாலாயவில் நிறைய அருவிகள் உண்டு. காலத்தைப் பொறுத்து தான் அங்கே தண்ணீர் வரத்து இருக்கும். தண்ணீர் வரத்து இருக்கும்போது பார்க்க மிகவும் ரம்மியமாக இருக்கும்.
பதிலளிநீக்குமேலும் படங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
நன்றி வெங்கட்.
நீக்குFalse இல்லாத நிஜ Falls-_கள். அருமை.
பதிலளிநீக்குஹா...ஹா,... ஹா...
நீக்குநன்றி ஜீவி ஸார்.
ஹா ஹா ஹா ஜீவி அண்ணா உங்கள் கமெண்டை ரசித்தேன்..
நீக்குகீதா
அருமையான காட்சிகள். Elephanta falls இருக்குமிடம் மிக ரம்மியான சூழலுடன் உள்ளது.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
நீக்குதலைப்பு அருமை...
பதிலளிநீக்குயானை வரும் பின்னே படங்கள் வரும் முன்னே!!!!!
இம்முறை படங்கள் எல்லாம் க்ளாரிட்டி...அது போல கொஞ்சம் விவரங்களும் கூடவே வந்தது சிறப்பு...
ஃபாஸ்ல் இருக்கும் இடங்கள் எல்லாமே அருமையாக இருக்கும். ஹப்பா எத்தனை அருவிகள் அங்கு!!
எலிஃபன்ட் அருவி எப்போது வரும் என்று எதிர்பார்ப்புடன்...
கீதா
நன்றி கீதா ரெங்கன்.
நீக்குகார் முன் கண்ணாடி வழியாக எடுத்திருக்கும் படங்களில் 4, 10 மிக நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குமலர்கள் அழகு. கலர்ஃபுல்.
அருவி இருக்கும் இடமே செமையா இருக்கு. பக்கத்தில் இருக்கும் அருவிகளின் படமும் வருமோ?!!!!
நெட் வந்தாலும் கூகுள் பேஜஸ் அவ்வப்போது போய்விடுகிறது. வரமால்..நெட் வருவதி சில சிரமங்கள். மழை அவ்வப்போது பெய்வதால் இருக்குமோ தெரியவில்லை. ச்மீபகாலமாகவே இந்தப் படுத்தல் தொடர்கிறது.
கீதா
நன்றி கீதா.
நீக்குஎனக்குஇப்போது நெட் பிரச்னையோடு கணினிப்பிரச்னையும்! யு பி எஸ் பிரச்னை செய்கிறது.
ஆ! அடடா யுபிஎஸ் பிரச்சனையுமா...கஷ்டம்தான் ஸ்ரீராம்..
நீக்குகீதா
கேரளத்தில் மலப்பபுரம் மாவட்டம் செமையா பாதிக்கப்பட்டிருக்கு. துளசி இருக்கும் கிராமத்தின் வெகு அருகில் இருக்கும் ஆறு பாலம் முங்கி ஓடுகிறது. சென்ற ஒரு வாரத்திற்கும் மேல் மின்சாரம் பிரச்சனை. சென்ற 4 நாட்கள் தொடர்ந்து மின்சாரம் தடை போலும்.. இன்றுமதியம் மேல்தான் வந்திருக்கிறது போலும்....ஃபோன் சிக்னல் எதுவும் சிரமமாக இருந்த்ருக்கிறது. இவர்கள் ஏரியாவை அடுத்தும் மலைதான் என்றாலும் இவர்கள் வீடுகள் அருகில் வெள்ளமோ ம்லைச்சரிவோ இல்லை. ஆனால் சாலைகள் எல்லாம் மிகுந்த பாதிப்பு போலும். அருகில் இருக்கும் நிலம்பூர் ரொம்பவே வெள்ளத்தில் பாதிப்பு போலும்.
பதிலளிநீக்குகீதா
குன்னூரிலிருந்து கூடலூர் வழியா நான் நிலம்பூருக்குப் போயிருக்கிறேன். எர்ணாகுளத்தில் ஈ.எம்.எஸ்., ஏகேஜி காலத்தில் நடந்த சி.பி.எம். அகில இந்திய மாநாட்டில் பொதுஜனமாய் கலந்து கொள்ள...
நீக்குதுளசி நிலம்பூருக்கு அருகில் தான் இருக்கிறாரா?.. எப்படி இருக்கிறார்? தகவல் தெரிந்து கொள்ள வாய்ப்புண்டா?..
சுற்றுலாவின் இனிமை
பதிலளிநீக்குபுகைப்படங்களாய் சொல்லாக்கமாய்!