திரு வெங்கடேச்வரன் அவர்களுக்கு
எங்கள் பிளாக்கின் இதய அஞ்சலிகள்
எங்கள் பிளாக்கின் வாசகரும், சக பதிவருமான திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களது கணவர் நேற்று 31 ஆகஸ்ட் 2019 அன்று அகால மரணமடைந்தார்.
மறைந்த திரு வெங்கடேஸ்வரன் அவர்களது ஆத்மா சாந்தியடைய எங்கள் ப்ரார்த்தனைகள்
இந்த கடினமான தருணத்தில் நாங்கள், திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களது துயரத்தில் பங்குகொள்கிறோம்.
நேற்று இரவு தாமதாகத்தான் மின் அஞ்சல் பார்த்து அறிந்தேன்..அதிர்ச்சியாக இருந்தது. அவர் உடல் நலன் சரியில்லாமல் இருந்தது அறிந்திருந்தாலும். எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். அவரின் ஆன்மா இறைவன் அடியில் சாந்தி அடைய பிரார்த்தனைகள். சகோதரிக்கும் அவரது குடும்பத்திற்கும் இத்துயரிலிருந்து மீண்டிட இறைவன் அருள்புரிய பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குதுளசிதரன்
வெங்கடேஸ்வரன் மாமாவை நேரில் பலமுறை சந்தித்து இருந்ததால் ன்ம் வீட்டிற்கும் அவர் வந்திருந்தால்...அந்தத் தருணங்கள் எல்லாம் நினைவில் வருகிறது. நானும் அக்காவும் சேர்ந்து எழுதிய கதைக்கு இறுதியில் சஸ்பென்ஸ் உடைத்து கருத்துகளுக்கு எங்கள் பதில்களை க் கொடுக்க வீடியோ எடுக்க மிகவும் பொறுமையாக எடுத்துக்க கொடுத்தெல்லாம் நினைவில்...
பதிலளிநீக்குஅவரின் ஆன்மா அமைதியை அடைய பிரார்த்தனைகள்...இரங்கல்களும். பானுக்காவிற்கு எங்கள் வருதங்களை த் தெரிவித்து அவருக்கும் குடும்பத்திற்கும் தூக்கத்திலிருந்து மீட்டு இறைவன் அமைதி நல்கிட பிரார்த்தனைகள்....
கீதா
நாங்களும் பானுமதி வெங்கடேச்வரன் மேடத்துக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். வெங்கடேச்வரன் சார் ஆன்மா சாந்தியடைய ப்ரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குஆழ்ந்த அஞ்சலிகள். அன்னாரின் ஆத்ம சாந்தி அடையவும், திருமதி பானுமதி அம்மா அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கிடைக்கவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஅன்னாரது ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குகிட்டத்தட்ட சொந்தத் தங்கை போலவே பழகிய பானுமதிக்கு அவர் கணவரின் பிரிவு எத்தனை துக்கத்தைத் தரும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. முதல் முறை மட்டும் எங்க வீட்டு அவர் வரவில்லை. பின்னர் நாங்களும் நன்றாக அரட்டை அடிப்போம் என்பது தெரிந்து அதன் பின்னர் 2 அல்லது 3 முறை திரு வெங்கடேஸ்வரன் பானுமதியுடன் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். உறவினர் போலவே ஆகி விட்டோம். இந்தச் செய்தியின் துக்கம் கொடுத்து இருக்கும் தாக்கத்திலிருந்து மீள அனைவருக்குமே கொஞ்ச நாட்கள் ஆகும்! எல்லோருடனும் பானுமதியின் துக்கத்தில் பங்கு கொள்கிறோம். பானுமதி தைரியமான மனோபலம் மிக்க பெண்மணி என்றாலும் இந்தச் சோகம் தனிப்பட்டது. அதிலிருந்து அவர் மீண்டு வரப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள். இந்தத் துயரத்திலிருந்து, அவரது குடும்பத்தினர் மீண்டு வர எனது பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஜிஎம்பீ ஐயா சென்னையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு பதிவர் சந்திப்பிற்கு சகோதரி பானுமதி வந்திருந்தார். அவர் கணவர் திரு. வெங்கடேஸ்வரனும் கூட வந்திருந்ததினால் அவருடன் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. மிக எளிமையாக சகஜமாக பழகும் தன்மையாவவர். அவரின் இழப்பு எதிர்பாராதது. அவர் ஆன்மா சாந்துயடைய பிரார்த்தனைகள். அவர் இழப்பைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தாருக்கு இறைவன் அருளட்டும். .
பதிலளிநீக்குநேரடிப்பரிச்சயம் இல்லை! எங்கள்blog வழியாகத்தான் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அறிமுகம் என்றாலும் மதியம் DDயுடன் பேசிக்கொண்டிருந்தபோதுதான் திரு வெங்கடேஸ்வரன் அவர்களுடைய மறைவைப் பற்றி அறிந்தேன். தம்பதியரில் ஒருவருடைய இழப்பு இன்னொருவருக்கு எத்தனை சோகமான அனுபவம் என்பதை வாழ்க்கையின் பலதருணங்களில் பார்த்திருக்கிறேன். திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் தன்னுடைய இழப்பின் சோகத்திலிருந்து மீண்டு வரவும், வெங்கடேஸ்வரனுடைய ஆத்மா உத்தம கதியடையவும், ஸ்ரீ அரவிந்தர், அன்னையின் திருவடிகளில் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்
பதிலளிநீக்குசெய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சகோதரி பானுமதியின் கணவரான திரு. வெங்கடேஷ்வரன் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பது தெரியாத போதும், அவருக்கு உடல் நலமில்லாதிருப்பதும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதும், எ. பி மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். அவருக்காக சகோதர, சகோதரிகள் பிரார்த்தனை செய்யும் போது, நானும் பிரார்த்தனை செய்தேன். ஆனால் இப்படி எதிர்பாராமல் சோதனையாக நடந்து விட்டது மனதுக்கு மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.
பதிலளிநீக்குசகோதரி பானுமதி அவர்களுக்கு நாம் அனைவரும் எத்தனை தைரியங்களை கூறினாலும்.இந்த கொடுமையான இழப்பின் வேதனையிலிருந்து அவர் மீண்டு வர காலந்தான் அவருக்கு பரிபூரண துணையாக இருக்க வேண்டும். சகோதரிக்கும், அவர், குடும்பத்தினருக்கும் இந்த இழப்பின் வேதனையை தாங்கும் மனோதிடத்தை ஆண்டவன் தர வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். சகோதரியின் கணவர் திரு. வெங்கடேஷ்வரன் அவர்களின் ஆத்மா சாந்தியடையும்,கடவுளை பிரார்த்திக்கிறேன்.
பதிவர் அன்பின் கீதா ரங்கன் , சொல்லி
பதிலளிநீக்குதிரு வெங்கடேஸ்வரனின் சிரமங்களை அறிந்து கொண்டேன்.
நிறைய சோதனைகளைச் சந்தித்துவிட்டார்.
பானுமதி வெங்கடேஸ்வரனுக்கு இதிலிருந்து நீள்வது மிகக் கடினம்.
குடும்பத்தாரின் துணையோடு
அவர் சிறிது சிறிதாக மீள வேண்டும்.
நம் பிரார்த்தனைகள் அவர்களோடு இருக்கும்.
ஆழ்ந்த இரங்கல்கள்.... பானுமதி அம்மாவின் மனம் அமைதியடைய எங்களது பிரார்த்தனைகள்...
பதிலளிநீக்குமிகுந்த வருத்தமான செய்தி .வெங்கடேஸ்வரன் சார் அவர்களின் ஆன்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன் .
பதிலளிநீக்குபானு அக்கா I am sending my love and prayers to help heal your grieving heart .
நேற்று நள்ளிரவு கீதாக்கா அவர்களின் தளத்திற்குச் சென்றபோது
பதிலளிநீக்குசெய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்...
ஸ்ரீ வெங்கடேஸ்வரன் அவர்கள் வேதனைகளிலிருந்து மீண்டு வருவார் என்பதே அனைவரது பிரார்த்தனையாக இருந்தது..
ஆயினும் இயற்கையை வெல்லுதற்கு ஆகுமோ?..
ஸ்ரீமதி பானுமதி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மனோதிடத்தைக் கடவுள் தான் தந்தருள வேண்டும்...
திரு. வெங்கடேஸ்வரன் அவர்களின் ஆன்மா இறைநிழலில் கலந்திருப்பதாக..
சிலரிடம் பார்த்து பழகிய பின் தான் பிடிக்கும் சிலரை நேரில் பார்க்காவிட்டாலும் போட்டோவில் அல்லது அவர்கள் எழுதுவதை பார்த்தவுடனே பிடித்து போகும்.அப்படித்தான் எனக்கும் பானுமதி அவர்களை ரொம்பவும் பிடிக்கும் அவருக்கு ஏற்பட்ட இழப்பு எனக்கு மன வருத்ததை தருகிறது...ஆனால் அவருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை... எங்கள் ப்ளாக்கில் இருக்கும் மற்றவர்கள் அவருக்கு நேரிலோ அல்லது போனிலோ கண்டிப்பாக அவருக்கு ஆறுதல் சொல்வார்கள் இருந்த போதிலும் காலம் ஒன்றே அவருக்கு ஆறுதலை தரமுடியும்...
பதிலளிநீக்குவெங்கடேஸ்வரன் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஎங்கள் துயரையும் பகிருகிறேன்.
துயரமான செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள்.
பதிலளிநீக்குஎன்னால் இச்செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது, யூ ரியூப் வீடியோவில் பார்த்த பானுமதி அக்கா முகம்தான் கண்ணுக்குள் வருகிறது... அவ நலமாகி வருகிறார் எனத்தானே இங்கு வரும் கொமெண்ட்ஸ் மூலம் அறிஞ்சேன்.. இது அகாலமரணம் என ஶ்ரீராம் போட்டிருக்கிறாரே..
பதிலளிநீக்குபானுமதி அக்கா மன அமைதி பெற்று, நம்மோடு பழையபடி வந்து உறவாடி, நோர்மல் நிலைமைக்கு திரும்ப வேண்டும் எனவும், பானுமதி அக்காவின் கணவரின் ஆத்மா அமைதி பெறவும் இறைவனைக் கேட்கிறேன்.
இந்த வீக்கெண்ட் வீட்டில் இருக்கவில்லை, இப்போ வீட்டுக்கு திரும்பியதும் தான் செய்தி அறிஞ்சு ஓடி வந்தேன்.
இத்தனை அன்பிற்கு நான் எப்படி கைமாறு செய்யப் போகிறேன்? என் சோகத்தை பகிர்ந்து கொண்ட எல்லோருக்கும் நன்றி என்பது மிகவும் சம்பிரதாயமான சிறிய வார்த்தை. இறைவா!🙏🙏🙏
பதிலளிநீக்குஆழ்ந்த அனுதாபம்.
பதிலளிநீக்குதிருமதி பானுமதி அவர்கள் இத்துயரிலிருந்து மீள வேண்டுகிறேன்.
காலை பார்த்தேன் போஸ்ட் இல்லை. இன்று தான் பார்த்தேன்.
பதிலளிநீக்குதிரு வெங்கடேஸ்வரன் அவர்களது ஆத்மா சாந்தியடைய என் ப்ரார்த்தனைகளும்
நான் பானுமதி அவர்களுக்கு வாட்ஸப்பில் வருத்தம் தெரிவித்து செய்தி அனுப்பினேன்.
இழப்பில் இருந்து மீண்டு வர வேண்டும் அவர்.
இறை நம்பிக்கை உடையவர் பானுமதி , மனசாந்தியை , மனபலத்தை இறைவன் அருள்வார்.
அவர் குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு பக்கபலமாக இருப்பார்கள்.