செவ்வாய், 10 செப்டம்பர், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை - களத்து மேட்டுக் காவலன் 3 - துரை செல்வராஜூ

களத்து மேட்டுக் காவலன் 3

துரை செல்வராஜூ 
=======================
இதோ முனீஸ்வரன் நாலாவது வீட்டு வாசலில்!..

டட்டட டட்டட... டும்டும்டும்... டட்டட டட்டட டும்!...
டட்டட டட்டட... டும்டும்டும்... டட்டட டட்டட டும்!...

வலது கையை உயர்த்திக் காட்டியது சாமி.

டக்.... - என, நின்றது தாரை தப்படைகளின் சத்தம்...

வலக்கையிலிருந்த வேல் கம்பை ஓங்கி உதறி
அதிர ஊன்றியது பூமியில்!...

" ஜங்!.. " - என்று ஒலித்து அடங்கின மணிகள்...

வீட்டிலிருந்து எந்தச் சலனமும் இல்லை..

'' ஐயா வந்து நிக்கிறாரு.. வெளிய வாடா குப்பு!... ''

பெரியவர் ஒருவர் சத்தம் போட்டார்...

'' வாராத சாமி வந்திருக்கேன் வாசலுக்கு...
கேளாத வரம் தந்திருக்கேன் காவலுக்கு!.. ''

முனீஸ்வரன் குரல் கொடுத்துப் பேசினார்...

எவ்வித அசைவுமில்லை வீட்டுக்குள்ளிருந்து...

'' மகளே!.. ஒனக்காகத்தானே வந்திருக்கேன்!?... ''

அடுத்த சில நொடிகளில் தாழ்ப்பாள் திறக்கப்படும் சத்தம்..

சரட்.... என்று ஒரு செம்பு தண்ணீருடன் ஓடிவந்த அருணா
அதை அப்படியே முனீஸ்வரனின் காலடியில் போட்டு விட்டு விழுந்தாள்...

கதறிக் கதறி அழுது முனீஸ்வரனின் கால்களைக் கண்ணீரால் நனைத்தாள்...

காலடியில் கிடந்தவளைக் குனிந்து தூக்கியது சாமி...

அப்படியும் அருணா ஓயவில்லை..

முனீஸ்வரனின் இடுப்பைக் கட்டிக் கொண்டு கதறினாள்...

'' மகளே.. அழக்கூடாது...  அழவே கூடாது...
எங்கே ஒன்னோட கொலுசு... எங்கே ஒன்னோட வளையல்?... ''

'' கழட்டிப் போட்டுட்டேன்.... ''

'' ஏன்?.. ''

'' என்னோட அறிவே போனதுக்கு அப்புறம்...
எனக்கெதுக்கு ஆடம்பரம்?.. எனக்கெதுக்கு அலங்காரம்?.. ''

அதற்குள் குப்புசாமியும் தண்ணீர் குடத்துடன் கனகவல்லியும்
கலங்கிய முகத்துடன் வந்து சாமியின் அருகில் நின்றனர்....

'' பத்து நாளா சோறு தண்ணியில்லாம நொந்து நூலாக் கிடக்கிறா!... ''

பேசிக் கொண்டிருந்த குப்புசாமியை இடைமறித்த முனீஸ்வரன்

'' கொலுசு போட்டுக்குறது ஆடம்பரம்..ன்னு எவன் சொன்னான்!?..
ஏ.. கனகு.. அந்த கொலுசை புள்ளை கால்...ல போட்டு விடு!.. ''

- சத்தமாக உத்தரவிட்டார்...

குடத்து நீரை சாமியின் கால்களில் ஊற்றி விட்டு கும்பிட்டு எழுந்த
கனகவல்லி வீட்டுக்குள் சென்றாள் கொலுசை எடுப்பதற்கு....

'' சின்ன பேச்சு... நேரங்காலம் தெரியாமப் பேசப் போக
பெரிய விஷயமாப் போச்சு!... ''

'' ஆமாம்.. சாமீ!.. ''

'' இதுக்குத்தான் நேரங்கெட்ட நேரத்தில ஏடாகூடமாப் பேசக்கூடாது..ங்கறது...  ஆசை அடங்காம ஆவியாப் போனவங்க குறுக்கால புகுந்து கெடுத்துடுவாங்க... ''

'' அன்னைக்கு அப்படித் தான் நடந்தது!... அருணா மனசுக்குள்ள நுழைஞ்ச
ப்ரேதம் ஒனு அது இஷ்டத்துக்கு நடத்திடுச்சு... ''

'' ஆனாலும் நாங்க விட்டுடுவோமா!?...  பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்ததால அருணா பொழச்சுக்கிட்டா!...''

'' ஆனாலும் அந்தப் பையன்!... ''

'' எந்தப் பையன்?... ''

'' அதான் அருணாவோட சிநேகிதக்காரன்... ''

'' அவனப் பத்தி உனக்கெதுக்குக் கவலை?...  உன்னோட ஆத்தாளுக்குத் தான் அந்தப் பையனைப் பிடிக்கலையே!..  நீயும் தான் ஆத்தாவோட பேச்சை மீறி நடக்கமாட்டே!..''

" இருந்தாலும் என்னவெல்லாமோ ஆகிப் போச்சே.. பாவம்.. நல்ல பையன்!.. "

'' அந்தப் பையன் நல்லவன்... னா சொல்றே நீ ?... .''

'' ஆமாம்... நல்ல பையன்... நல்ல நடத்தை... நாலு எழுத்து படிச்சவன்...
வந்து கேட்டா அருணாவைக் கொடுத்துடுவோம்...ன்னு தான் இருந்தேன்...
அதுக்குள்ள இப்படிக் கோளாறாப் போயிடுச்சு... ''

'' வந்து கேட்டா கொடுத்துடுவ தானே!... ''

'' கொடுத்துடுவேன்... ஆனா அந்தப் பையன் இருக்கானா... இல்லையா... ஒன்னுந்தெரியலையே?.. ''

திகைத்து நின்றார்கள் அங்கிருந்த அனைவரும்...

'' ஏஞ் சாமீ!.. என் வீட்டு வாசல்ல.. நாலு நல்ல சேதி சொல்லப்படாதா?... ''

கையில் தீபத்தட்டுடன் நின்றிருந்தார்கள் காளிமுத்து தம்பதியினர்..

'' வந்துட்டேன்...டா காளீ!... வந்துட்டேன்!... ''

அருணாவை ஆதரவாக அணைத்தபடி காளிமுத்துவின் வாசலுக்கு நடந்தார் - முனீஸ்வரன்....

வாசலில் வைத்திருந்த தண்ணீரை ஊற்றி பாத பூஜை செய்தனர்...

'' எங்குடும்பம் இப்படி ஆயிடிச்சே!... எங்களை மறந்துட்டீங்களா சாமீ!... ''

'' டே... காளி உன்னையும் மறக்கிறவனா நான்!.. பத்து வருசத்துக்கு முன்னால இந்த ஊருக்கு ஆட்டுக் கிடையோட வந்து நின்னப்போ  எம் பரிவாரத்துக்கு பள்ளயம் வெச்சியே ஞாபகம் இருக்கா... இல்லையா?... ''

'' அந்த வைகாசிப் பௌர்ணமி அன்னைக்கு புதுப்பானையில பொங்கல் வெச்சியே!... தலை வாழை எலை போட்டு ஆட்டுப்பாலும் வாழைப்பழமும் பனஞ்சக்கரையோட பிசைஞ்சு
வெச்சியே!... ''

'' அது என்னமோ..  ஞாபகத்துக்கு வரலை சாமீ!... ''

'' மனுசனுங்க மறந்தாலும் தெய்வம் மறக்காதுடா.. காளி!... தெய்வம் மறக்காது!.. ''

'' ஓ!.. '' - என்று அழுதார் காளிமுத்து...

'' அப்படி இருந்துமா எம்புள்ளைய எங்கிட்ட இருந்து பிரிச்சே.. அப்படின்னு
நெனைக்கிற நீ!... இல்லையா?... ''

கலங்கிய கண்களுடன் தலையசைத்தார் காளிமுத்து...

'' கெரக சூழ்நிலை சரியில்லாத நேரத்தில அவன் இங்க இருக்குறது ஆபத்து..ன்னு நான் தான் அவனைப் பிரிச்சு வெச்சேன்!... ''

'' அவன் எங்கே இருக்குறான்..ன்னு ஐயா சொல்லக்கூடாதா!...அழுத கண்ணும் சிந்துன மூக்குமா கெடக்காளே பெத்தவ... ''

'' இங்கே வந்திருக்கிறது யாருன்னு புரியுதா?... ''

'' புரியுதுங்க சாமி!.. ''

'' யாரோட வந்திருக்கேன்..ன்னு தெரியுதா?... ''

'' தெரியுதுங்க சாமி!... ''

'' இந்தா!... இனிமே இவ தான் இந்த ஊட்டுக்கு மகாலக்ஷ்மி!... ''

இதைக் கேட்ட அருணா அப்படியே மயங்கிச் சரிந்தாள்...

'' ஓவ்!....'' - ஆகாயத்தைப் பார்த்து எக்காளமிட்டார் முனீஸ்வரன்...

பெண்கள் சிலர் சட்டென ஓடி வந்து அருணாவைத் தூக்கி நிறுத்தி முகத்தில் தண்ணீரைத் தெளித்தனர்...

'' யம்மாடி... இங்க பாரு... இங்க பாரு!...  சாமி நல்ல வாக்கு சொல்லப் போவுது!.. ''

மெல்ல விழித்துப் பார்த்தாள் அருணா..

'' திக்குத் தெசை எல்லாம் போனீங்களேடா..  திருஅண்ணாமலைக்குப் போனீங்களாடா?.. ''

'' இல்லீங்களே சாமீ!... ''

'' பொழுது விடிஞ்சதும் திருஅண்ணாமலைக்குக் கிளம்புங்க!... ''

'' திருஅண்ணாமலையில எங்கே..ன்னு தேடறது?... ''

'' ஈசான லிங்கம் சந்நிதியில உட்கார்ந்து இருக்கான்!...''

'' சாமியாராப் போய்ட்டானோ?... ''

'' அவன் எப்படிடா சாமியாராப் போவான்!...  அருணாவோட மாங்கல்யம் அவனை இழுத்துப் பிடிக்குறப்போ அவன் எப்படிடா சாமியாராப் போவான்?... ''

புள்ளைங்க ரெண்டு பேரும் கல்யாணம் கட்டிக்கிட்ட மூனாம் நாளு
களத்து மேட்டுக்கு வந்து பொங்க வைக்க வேணாமா!...
எனக்கு பொங்க வைச்ச புள்ளைங்க மனச நான் பொங்க வைக்க வேணாமா!..

வேல்கம்பை ஓங்கி உதறி பூமி அதிர நாட்டினார் முனீஸ்வரன்....

ரெண்டு குடும்பத்தினரும் அப்படியே விழுந்து வணங்கினார்கள்...

'' எங்கேடா சந்தனம்?.. வெத்தலை பாக்கு?... '' - சாமி சப்தமிட்டதும் திருவிழாக் கூட்டத்தில் இருந்து
சந்தனக் கிண்ணமும் தாம்பூலமும் நொடியில் வந்து நின்றன....

'' ஒருத்தருக்கொருத்தர் தாம்பூலம் மாத்திக்கிடுங்க!... ''

மாற்றிக் கொண்டார்கள்...

'' மகளே... சந்தோஷந்தானே!... ''

கழுத்திலிருந்த மாலைகளில் ஒன்றைக் கழற்றிப் போட்டு
திருநீற்றைப் பூசி விட்டார் முனீஸ்வரன்...

அருணா மறுபடியும் முனீஸ்வரனைக் கும்பிட்டு எழுந்தாள்..

வயதில் மூத்தவர்கள் சிலர் விண்ணப்பித்துக் கொண்டார்கள்...

'' சாமி கோவப்படாம அன்னைக்கு நடந்ததைச் சொல்லவேணும்!...

'' அதுல நெறைய தேவ ரகசியம் இருக்கு... ஆனாலும் சொல்றேன்...
பேய் பிசாசு பிரேதங்களோட சேட்டை தான் அன்னைக்கு நடந்தது... ''

'' ஒரு பிரேதத்தோட தூண்டுதல் தான்அருணா ஆத்துல குதிச்சதுக்குக் காரணம்... ''

'' ஆனா அந்தப் பக்கம் -படித்துறைப் பிள்ளையாரைப் பார்த்ததும்
பயந்து போன பிரேதம் அருணாவை விட்டுட்டு ஓடிடிச்சி..

ஆனாலும், அருணா பிரக்கினை இல்லாம தண்ணிக்குள்ள முங்கிட்டா..
தண்ணி வேகம் அதிகமாகிடுச்சு...  அறிவழகனால எட்டிப் புடிக்க முடியலை... ''

'' களவாணிப் பயலுங்க கரையோர மரத்தை எல்லாம் வெட்டிப் போட்டுட்டானுங்களா... கரையோரமா ஒதுங்குனாலும் புடிச்சு ஏறுறதுக்கு
வாட்டமா ஒன்னும் இல்லாம போச்சு... ''

'' விடாதே புடி!... - ன்னு நொண்டி வீரனுக்கு நாந்தான் சத்தம் கொடுத்தேன்...  நொண்டி வீரனும் ஓடிப் போயி தண்ணியத் தடுத்து நின்றான்...  அதுக்கு அப்புறம் தான் அறிவழகன் அருணாவ எட்டிப் புடிச்சான்...  நொண்டி வீரனும் அறிவழகனும் சேர்ந்து அருணாவை கரையில தூக்கிப் போட்டாங்க... ''

'' இந்த துஷ்டங்கள அடிச்சு விரட்ட முடியாதா.. சாமி?.. ''

'' அதுக்கெல்லாம் மனுசங்களோட நல்ல காரியம் பெருகி புண்ணியம் சேரணும்..  அப்படி ஆகும் போது தான் துஷ்டங்களால நெருங்க முடியாம போகும்!... ''

'' இதுக்கெல்லாம் வாங்கி வந்த வரம்... கிரக சூழ்நிலை எல்லாமும் நல்லபடியா கூடி வரணும்!... ''

அதற்குள்ளாக குப்புசாமியின் தாயைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்...

'' ஆத்தா வாய் தொறந்து பேசி பத்து நாள் ஆவுது..
அதிர்ச்சியில பேச்சு நின்னு போச்சு போல இருக்கு.. சாமி!.. ''

'' நம்ம பேச்சாலத் தானே இப்படியெல்லாம் ஆச்சு...ங்கிற
மன வருத்தத்துல பேசாம இருக்கிறா சன்னாசி மக!...
இன்னும் ரெண்டு நாள்.. ல தானா வாய் தொறந்து பேசுவா!...
அவ பேச வேண்டியது தான் இன்னும் இருக்கே...
பேத்தி வந்து தானே கிழவிய அடக்குவா!... ''

அங்கிருந்த எல்லாரும் சிரித்தார்கள்...

கிழவியின் நெற்றியிலும் திருநீற்றைப் பூசிய முனீஸ்வரன்
கையிலிருந்த வேல்கம்பை ஓங்கி உதறி பூமி அதிர நாட்டினார் ....

'' போட்றா... வாணத்தை!...''

சர்.. சர்... - என்று புறப்பட்ட வாணங்கள்
வானில் ஏறி வெடித்து வண்ணங்களாகச் சிதறி உதிர்ந்தன...

'' கொட்றா... மேளத்தை!.. ''

டட்டட டட்டட... டும்டும்டும்... டட்டட டட்டட டும்!...
டட்டட டட்டட... டும்டும்டும்... டட்டட டட்டட டும்!...

அடுத்தொரு வாக்கு சொல்வதற்கு
அதிர நடந்தார் முனீஸ்வரன்!...





மல்லிகையின் வாசமும் மக்களின் நேசமும்
முனீஸ்வரனைத் தொடர்ந்தன...
ஃஃஃ


நிறைந்தது 


52 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம்...

    அவைவருக்கும் வணக்கம்... அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரஸ்யமான கதையைத் தந்ததற்கு உங்களுக்கும் எங்கள் நன்றி.

      நீக்கு
  3. ஐப்பசி முதல் முகூர்த்தத்தில அறிவழகனுக்கும் அருணாவுக்கும் கல்யாணமாம்...

    எல்லாரும் குடும்பத்தோட வந்துடுங்க... வந்துடுங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்துடுவோம்... வந்துடுவோம்...   

      விருந்தில் புளியோதரை உண்டாமா?

      கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க!

      நீக்கு
    2. கல்யாண விருந்தில் புளியோதரை இருக்காது...

      மறு வீடு போகும் போதும் புளியோதரை இருக்காது..
      எல்லாம் இனிப்பு வகையறாக்களாஅக இருக்கும்...

      தாலி பெருக்கிப் போடும்போது கூட சந்தேகந்தான்...
      ஏன்னா - காப்பரிசிதான் பிரதானம்...

      வளைகாப்பின் போது சித்ரான்னங்கள் இருக்கும்..
      கண்டிப்பாக புளியோதரை போடும்படி சொல்லி விடுகிறேன்...

      நீக்கு
    3. அன்பின் ஜி

      அழகான முடிவு அறிவழகனும், அருணாவும் இணைந்ததில் மகிழ்ச்சி. வாழ்க நலம்

      நீக்கு
    4. அப்படியா....  சரி...  எப்படியோ கிடைத்தால் சரி!

      நீக்கு
    5. மனம் நிறை காலை வணக்கம் அன்பு துரை. அன்பு ஶ்ரீராம். முனீஸ்வரன் வந்து நல் வார்த்தை சொல்லி. இணைத்து விட்டார். சாமிக்குத்தான் எத்தனை கருணை. அண்ணாமலையார் செய்தி சொல்லி விட்டு, களத்மேட்டு. சாமி முடித்து வைத்தார். ஐப்பசி கலயாணத்துக்கு. எல்லோரும் வரோம் . சரக்கரைப் பொங்கல் முதல் பந்தியில் இருக்கட்டும்.

      நீக்கு
    6. இனிய காலை வணக்கம் தேவ் கோட்டை ஜி.

      நீக்கு
    7. வல்லியம்மா அவர்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

      சர்க்கரைப் பொங்கல் இல்லாத சந்தோஷமா!...

      வாழ்க நலம்...

      நீக்கு
  4. வித்தியாசமான கதை. எங்கள் தெரு முனீஸ்வரர் கோவில் திருவிழா எல்லாம் இப்போது மனக்கண்ணில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரிஷபன் ஸார்...  நல்வரவும், வணக்கமும்.

      நீக்கு
    2. அன்பின் திரு ரிஷபன் அவர்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. நொண்டி வீரன் படம் போடவில்லையே துரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நொண்டி வீர சாமியின் படம் கிடைக்கவில்லையம்மா..

      வரட்டும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அவரும் வந்து கலந்து கொள்வார்...

      அருணா கல்யாணத்தோட வீரசாமிக்கு பட்டு வச்த்ரம் எடுத்து வைத்து பூசை போடப் போவதாக பேசிக் கொண்டார்கள்...

      நீக்கு
  6. @ கில்லர் ஜி...
    >>> அழகான முடிவு<<<

    அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
  7. அன்பின் ஸ்ரீராம்..

    முதல் இரு பதிவுகளுக்கும் இணைப்பு கொடுக்கலாமா!..

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  9. //' திக்குத் தெசை எல்லாம் போனீங்களேடா.. திருஅண்ணாமலைக்குப் போனீங்களாடா?.. ''//

    நேற்று சகோவின் பதிவில் அண்ணாமலையார் இடம் பெற்றதின் காரணம் தெரிந்து விட்டது.

    நமக்கு கஷ்டம் வரும் போது முதலில் குலதெயவ வழி பாடு முதலில் செய்ய வேண்டும் என்பார்கள்.

    முனீஸ்வரன் வாசலில் வந்து// '' மகளே.. அழக்கூடாது... அழவே கூடாது...
    எங்கே ஒன்னோட கொலுசு... எங்கே ஒன்னோட வளையல்?... ''//

    கேட்டவுடன் தெரிந்து விட்டது அறிவழகன் வந்து விடுவான் அருணாவை கல்யாணம் செய்து கொள்வார் என்று.

    நல்லதை நினைக்க வேண்டும், மரங்களை வெட்டியதால் ஏற்படும் தீங்கு எல்லாம் கதையில் வருகிறது.

    //மல்லிகையின் வாசமும் மக்களின் நேசமும்
    முனீஸ்வரனைத் தொடர்ந்தன...//

    மிக அருமை. மக்களின் நேசம் தொடரட்டும் , அனைவருக்கும் முனீஸ்வரன் நல்லதை செய்யட்டும்.

    வாழ்த்துக்கள் அருமையான கதைக்கு.

    வாழ்வில் நம்பிக்கை வாழ வைக்கும் என்று உணர்த்தும் கதைக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    ஆஹா... நல்ல முடிவு. பாராட்டுகள் துரை செல்வராஜூ ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே.

    நல்ல முடிவு. கதையை சுபமாக முடித்து வைத்தமைக்கு மகிழ்ச்சி.காவல் தெய்வம் முனீஸ்வரரும், அண்ணாமலையாரும ஒருவர்தானே! அவருக்கு தெரியாதா.! அறிவழகனை காப்பாற்றி அருணாவுடன் சேர்த்து வைக்க.. அதுதான் முடிவில் சேர்த்து விட்டார். கல்யாணம் சிறப்பாக நடந்து அனைவரும் வளமுடன் வாழட்டும். மணமக்களை மனதாற வாழ்த்துவோம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணமக்களை மனதார வாழ்த்துவோம்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  13. டும் டும் டும் மேளச் சத்தத்தோடு கதை அழகாக முடிந்திருக்கிறது... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அதிரா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  14. ஒரு வெளிச்சப்பாடின் கதை போல் இருந்தது நம்மூர் சாமியாடிகள் போன்றவர்கள் ஒரு காலத்தில் மலையாள சினிமாவில் நிர்மால்யம் என்று நினைவு இவர்களின் வாழ்க்கை முறை பற்றிகூறி இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  15. நிகழ்வை தத்ரூபமாக மூன்று பகுதிகளிலும் சித்தரிப்பதற்கு இமைப் பொழுதும் சோராமல் முயற்சித்திருப்பது தான் கதைக்கான வெற்றியாக பூத்துச் சொரிந்திருக்கிறது.
    அந்த உழைப்பே ஒரு கதைக்கான ஆரம்பமும் முடிவுமாக பின்னலிட்டுக் கொண்டிருக்கிறது.

    டும்டும்டும்.. டட்டடட. டட்டடட்ட.. டும்டும்டும்.. என்று திருவிழா கொட்டு சப்தம் எங்கு கேட்டாலும் இந்தக் கதையும் அந்த சாமியாட்டமும் நினைவுக்கு வந்து விடும். வாழ்த்துக்கள், துரை சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும்
      வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  16. முதல்லேருந்து படிச்சுட்டு வரேன். யாருமே என்னைத் தேடலை போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா..

      தாங்கள் நல்லபடியாக அமேரிக்கா சென்று சேர்ந்ததை FB வழியாக அறிந்தேன்..

      பாச பந்தங்களுடன் மகிழ்ந்திருக்கும் இவ்வேளையிலும்
      தாங்கள் வருகை தந்து கருத்துரை வழங்கியமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. சுபமாக முடிந்ததுக்கு வாழ்த்துகள். புதுமணத்தம்பதிகள் சீரோடும் சிறப்போடும் வாழட்டும்.

      நீக்கு
    3. அன்பின் அக்கா...
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. கதாசிரியர் அந்த நிகழ்வு நடக்கும் களத்தில் அப்படியே நம்மைக் கொண்டு போய் நிறுத்தி ஒரு கதையையும் உள்ளுக்குள்ளே ஊடாட வைக்கும் சாமர்தியத்தையும் சொல்ல வேண்டும். அடுத்து என்ன நடக்குமோ என்ற விறுவிறுப்பைக் கூட்டுவதற்கு கதைக்கான களத்தை அவர் உபயோகித்துக் கொண்டிருக்கும் பாங்கில் ஆசிரியர் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிற விதத்தில் ஒரு மெஸ்மரிச மயக்கத்தில் நம்மை ஆழ்த்துவதையும் சொல்ல வேண்டும். கதை எப்படி முடிந்தாலும் ஏற்றுக் கொள்கிற பக்குவத்தில் வாசகனைக் கொண்டு வந்து நிறுத்தி வாசகனின் எதிர்பார்பப்புக்கு ஏற்ப கதையை முடிப்பதும் ஒருவித சாமர்த்தியம் தான்.

    கடைசியாக ஒரு கேள்வி. கதையா அந்தக் கதையை நடத்தி வைப்பதற்கு ஏற்ற களமா எது ஆசிரியரைப் பொறுத்த மட்டில் முக்கியமாகிப் போகிறது என்றால் களம் தான்.
    அந்த சாமியாட்ட களத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தத் தான் அதற்கேற்ப ஒரு கதை ஆசிரியர் எண்ணத்தில் உருவாகியிருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...

      >>> கதையா அந்தக் கதையை நடத்தி வைப்பதற்கு ஏற்ற களமா எது ஆசிரியரைப் பொறுத்த மட்டில் முக்கியமாகிப் போகிறது என்றால் களம் தான்..<<<

      என் மனதில் இருந்ததை அப்படியே படம் பிடித்தாற்போல கருத்துரை வழங்கிய தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி... மகிழ்ச்சி..

      நீக்கு
  18. ஆகா!முனீஸ்வரன் வந்துவிட்டாரா :) அனைத்தும் நிறைவே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  19. இப்போதுதான் கதையைப் படிக்க முடிந்தது. அழகான நெகிழ்வான கதை. காட்சிகளை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தி விட்டது.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  20. மிக மிக மகிழ்ச்சி ...

    மன நிறைவான முடிவு ....

    அடுத்தொரு வாக்கு சொல்வதற்கு
    அதிர நடந்தார் முனீஸ்வரன்!......நல்வாக்கு கொடுக்கட்டும் நம் சாமி ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபிரேம்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...
      அன்பின் கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!