இந்த Pieக்கு தமிழில் என்ன எழுதலாம் என்று தேடினால், ‘வேகவைத்த உணவு’ என்று அர்த்தம் சொல்கிறது கூகுள். நாம எதைத்தான் வேகவைக்காம சாப்பிடறோம்? பேசாம ‘பை’ என்றே எழுதலாம்னு நினைத்தேன். என் பெண் அவளுக்கு என்ன பிடித்தமானதோ, அதை மட்டும், அவளுக்கு மூடு வரும்போது சமையலறையில் நுழைந்து செய்வாள். பெரும்பாலும் எங்க யாருக்கும் நுழைய அனுமதி கிடையாது. நான் அவள்ட, போட்டாவாவது எடுத்துக்கறேன், எ.பிக்கு, நல்லா வந்தா எழுதி அனுப்புவேன் என்பேன். அதுக்கு அவள், நானே போட்டோ எடுக்கறேன், சரியா வந்தால் உங்களிடம் தர்றேன் என்று சொல்லுவா.
எனக்கு டிரெடிஷனல் உணவு தவிர வேறு எதிலும் விருப்பம் கிடையாது (கீதா ரங்கன்..நோட் திஸ் பாயிண்ட். உங்க வீட்டுக்கு வரும்போது புது ஐட்டம்-கேள்விப்படாத புது ஐட்டம் எதுவும் எனக்கு கொடுக்காதீங்க. நீங்க செய்த ராகி இடியாப்பம் படம் ரொம்ப அழகா இருந்தது. இருந்தாலும் அரிசி அரைச்சுப் பண்ணற டிரெடிஷனல் சேவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதுக்காகவே, நான் பெங்களூர் கிளம்பும்போது, நீங்க சென்னைக்குப் போயிட்டிருக்கேன்னு மெசேஜ் தட்டாதீங்க). ஆனாலும் அவள் செய்த ப்ராடக்ட் அழகா இருந்தது. மனைவியும் சாப்பிட்டுப் பார்த்து ரொம்ப நல்லா இருக்கு என்றாள். அதுனால இந்த வாரம் ‘ஆப்பிள் பை’. இதைப் படித்துவிட்டு, உங்க முறைலதான் செஞ்சுருக்கேன் என்று சொல்லி, எனக்கு சாப்பிடக் கொடுத்துடாதீங்க. கேக் வகைகளில் எனக்குப் பிடித்தது பனானா கேக் மட்டும்தான்.
ஆப்பிள் பைக்கு தேவையானவை
மைதா – 4 கப்
வெண்ணெய் – ஒரு கப்புக்கு சிறிது குறைவு
வினிகர் – 1 டீஸ்பூன் (ஐயோ… இதை நினைத்தாலே எனக்கு பஹ்ரைன் அனுபவம் ஞாபகம் வருது)
உப்பு – ½ அல்லது ¾ ஸ்பூன்
குளிர்ந்த நீர் – ½ கப்
Pie சைஸைப் பொருத்து 4 or 5 ஆப்பிள்கள் தேவையாயிருக்கும்.
½ கப் வெள்ளைச் சர்க்கரை
½ கப் இயற்கைச் சர்க்கரை (கேரமல் நிறம் வருவதற்காக. பிரவுன் ஷுகர்னு எழுதினா நிறைய கேள்விகள் வரும்)
சினமன் பவுடர் (இலவங்கப்பட்டை பவுடர்)
பம்ப்கின் ஸ்பைஸ் – இது வால் மிளகு, ஜாதிக்காய், சின்னமன் பவுடர் சேர்ந்த கலவை. என் பெண், அவள் தேவைக்குப் பண்ணிவைத்திருக்கிறாள். கடைல வாங்குவதில்லை.
செய்முறை
மைதா மாவில் தேவையான உப்பைச் சேர்த்து கலந்துகொள்ளவும்.
அத்துடன் வெண்ணெயைத் திருவிச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மாவு பிசிர் பிசிராக உதிரணும்.
இதில் கொஞ்சம் குளிரிந்த நீரையும் வினிகரையும் சேர்த்து விடவும்.
பிறகு நன்றாக சப்பாத்தி மாவு பதத்துக்கு நன்கு பிசையவும்.
தேவையென்றால் சிறிது நேரம் ஃப்ரீசரில் வைத்துவிட்டு எடுக்கவும். (குளிர்ந்த மாவுதான் இதெல்லாம் செய்ய நன்றாக இருக்கும்.)
ஆப்பிளை எடுத்து அதன் தோலை எடுக்கவும். பிறகு அதனுடைய நடுப்பகுதியையும் நீக்கிவிட்டு, சிறிது சிறிதாக கட் செய்துகொள்ளவும்.
ஒரு கடாயில் வெண்ணெயைச் சேர்த்து உருகவைக்கவும். பிறகு அதில் ஜீனி சேர்த்து அத்துடன் சின்னமன் அல்லது Pumpkin Spice சேர்க்கவும். இது தனி வாசனையைத் தரும்.
இதனை நன்றாகக் கலக்கவும். கலவை, கடாயில் நன்கு உருகியிருக்கணும். குமிழ் குமிழாக வரணும். பிறகு இதனை ஒரு பாத்திரத்தில் இருக்கும் ஆப்பிள் துண்டங்களோடு கலக்கவும்.
இன்னொரு முறையில், தண்ணீரை எடுத்துக்கொண்டு, பிரவுன் மற்றும் வெள்ளை சர்க்கரையைக் கலந்து, அதனுடன் கார்ன்ஸ்டார்ச், சின்னமன் (cinnamon) அல்லது பரங்கிக்காய் ஸ்பைஸ் (Pumpkin Spice) ஒரு கடாயில் சேர்த்துக் கலந்து, அந்தக் கலவை கெட்டியாகும்வரை சூடுபடுத்தவும். இதற்கு ½ கப் வெள்ளைச் சர்க்கரை, ½ கப் பிரவுன் சர்க்கரை, 3 கப் தண்ணீர், 1/3 கப் கார்ன் ஸ்டார்ச், ½ தேக்கரண்டி சின்னமன் அல்லது ¾ தேக்கரண்டி பம்ப்கின் ஸ்பைஸ் உபயோகிக்கவும். பிறகு, ஆப்பிள் துண்டங்களைச் சேர்த்து உடனே அடுப்பை அணைத்துவிடவும்.
இந்த இரண்டு முறைகளிலும், ஆப்பிளை சூடுபடுத்துவதில்லை. அப்படிச் செய்தால் அது உடனே வெந்துவிடும். பிறகு கேக் செய்வதற்காக Bake பண்ணும்போது நன்கு மசிந்து குழந்தைக்குக் கொடுக்கும் உணவாக ஆகிடும். அதுனால, ஆப்பிள் துண்டங்களைச் சேர்த்துக் கலந்த பிறகு ஆப்பிள் raw வாகவே இருக்கும்.
இப்போ நம்மிடம், மாவும் தயாரா இருக்கு. ஆப்பிள் கலவையும் தயாரா இருக்கு.
கேக் செய்யும் அந்த மாவை ரோல் பண்ணி, நல்ல மோல்டிற்கு மாற்றவும்.
இதனை சில நிமிடங்கள் வெதுவெதுப்பானில் வேக வைக்கவும். பிறகு அதனை எடுத்துவிட்டு, அதில் இந்த ஆப்பிள் கலவையை நிரப்பவும். இதன் மேல், அதே மாவுக்கலவையை வைத்து மூடிபோன்று செய்து மூடிவிடலாம்.
இல்லை, அழகாக இருக்கவேண்டும் என்றால், படத்தில் கொடுத்துள்ளவாறு, மாவை சப்பாத்திபோல் பரத்தி, சிறிய சிறிய பட்டைகளாக வெட்டி, ஜடை பின்னுவதுபோல் பின்னி, அதனைக்கொண்டு ஆப்பிள் கலவையை மூடலாம்.
ஓரங்களை நன்றாக மூடவேண்டும். கொஞ்சம்கூட திறந்திருக்கக்கூடாது.
பின்னல் டிசைன்போல் செய்யாமல், வெறும் மாவுக்கலவையை மூடிபோன்று மூடியிருந்தால், உள்ளே காற்றுப் புகாது. அதனால் Bake செய்வதற்கு முன்பு, மேற்பகுதியின் நடுவே ப்ளஸ் குறி போன்று கத்தியால் லைட்டாக வெட்டிவிடவும். இது ஆப்பிள் கலவை Bake பண்ணும்போது ரொம்ப சூடாகி சிதறாமல் இருப்பதற்காக. பின்னல் டிசைனில் சிறிது இடைவெளி இருக்கும் (காற்றுப் புகும்படியாக). அதனால் ப்ளஸ் போன்று வெட்டிவிடத் தேவையில்லை.
பிறகு இதனை வேகவைக்கவும் (Bake செய்யவும்).
அவ்ளோதான்…ஆப்பிள் Pie தயார்.
நல்லா வந்திருக்கேன்னு நினைத்து, உடனே என்னை மாதிரி அப்பாக்களிடம் ‘இந்தாங்க’ என்று கொடுத்துடாதீங்க. அவங்களுக்கு இந்த மாதிரி புதுமையானவைகள்லாம் பிடிக்காது. அவங்க, மோர் சாதம், இட்லி, உப்புமா, மைசூர்பாக் பார்ட்டிங்க. உங்க வற்புறுத்தலுக்காக ரெண்டு துண்டு எடுத்துக்கொண்டு, முகத்தில் மலர்ச்சியைக் காண்பிக்காமல், அஷ்டகோணலாக முகத்தை வைத்துக்கொண்டு, ‘ஓகே’ என்பார்கள். அப்புறம் உங்களுக்கு புதிது புதிதாகச் செய்யும் ஆர்வமே போய்விடும். அதுனால உங்கள் வயதை ஒத்தவர்களுக்கோ இல்லை புதுமை விரும்பிகளான பெண்களுக்கோ கொடுத்தால், நன்றாக சுவைத்துச் சாப்பிடுவாங்க, அதைப் பாராட்டுவாங்க, நேர்மறை விமர்சனம் செய்வாங்க. நீங்க உணவைத் தயார் செய்த கஷ்டத்துக்கும் முயற்சிக்கும் ஏற்ற திருப்தி கிடைக்கும்.
நீங்களும் செய்துபாருங்கள்.
பின் குறிப்பு: என் பெண், ஆங்கிலத்தில் எழுதினதை முடிந்த அளவு தமிழ்ப்படுத்தியிருக்கேன். Melted, bubbly, peel, core and dice, fill with apple filling, pastry dough, bakeனுலாம் எழுதிட்டா. பத்தாக் குறைக்கு Pumpkin Spiceனுலாம் எழுதிட்டா. தமிழ் சம்பந்தப்படாத பாரம்பர்ய உணவின் செய்முறையைத் தமிழ்ப்படுத்துவதும் கடினம்தான் போலிருக்கு. ஒருவேளை ரஞ்சனி நாராயணன் மேடத்திடம் இதுக்கு ஒரு கோர்ஸ் படிக்கணுமோ? அவங்கதான் மொழி சம்பந்தமாக நிறைய கோச்சிங் கொடுக்கறவங்க ஆச்சே.. (எனக்கு இலவசமாச் சொல்லிக்கொடுத்தாங்கன்னா…ஹா ஹா)
அன்புடன்
நெல்லைத்தமிழன்
இனிய காலை வணக்கம் நெல்லைத்தமிழன், ஸ்ரீராம்
பதிலளிநீக்குஇன்னும் வரப் போகிற
அனைவருக்கும். இந்த வாரம் இனியதாக இருக்கட்டும். பதிவைப் படித்து விட்டு வருகிறேன்.
இனிய காலை வணக்கம் வல்லிம்மா...
நீக்குவாங்க... வாங்க...
வணக்கம் வல்லிம்மா..... இப்போல்லாம் உற்சாகக் குறைவாகிவிட்டது. வம்பு செய்து மனநிலையைச் சந்தோஷமாக்க கீதா ரங்கன் காணலை. இரட்டையர்களும் அபூர்வமாகிட்டாங்க.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...
நீக்குநெல்லை அவர்களின் Apple Pie அருமை..
பதிலளிநீக்குஇதையே அமெரிக்க ஆப்பிள்களைத் தவிர்த்து ஈரானிய ஆப்பிளில் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்...
அமெரிக்க ஆப்பிள்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை என்கிறார்கள்...
நீர்ச்சத்து மிகுந்திருக்கும்படி வடிவமைத்திருக்கின்றார்கள்..
எல்லாம் ஒரே நிறம்... ஒரே எடையாக எடுத்து (180 Grms) பெட்டியில் அடைத்திருப்பார்கள்...
எனக்கு ஆப்பிள் உண்ணுவதில் விருப்பம் இருப்பதில்லை...
எனினும் எளிய செய்முறைகளுடன் இனிமை...
வாழ்க நலம்...
வாங்க துரைசெல்வராஜு சார்... எனக்கு ரொம்பப் பிடித்தது ஹிமாச்சல் பிரதேஷ் ஆப்பிள். இயற்கையான மாவுச் சத்தோட இருக்கும். என் பெண், ஜூஸியா வேணும்னு கேட்டதுனால இங்க ரொம்ப விலைக்கு விற்கும் அமெரிக்கன் ஆப்பிள் (1 ஆப்பிள்தான். இன்று 49 ரூபாய். கட்டுப்படியாகுமா?) வாங்கினேன். மாஸ் ப்ரொடக்ஷன், விற்பனைக்காக தகிடு தத்தம் (மெழுகு பூசுவது, கெமிக்கலில் முக்குவது போன்று) செய்கிறவர்கள் அனேகம். அந்த மெதட்களை முதலில் கண்டுபிடித்தது அமெரிக்காதான்.
நீக்குமுதன் முதல்ல தேன் மெழுகுதான் உபயோகித்தனர் (ஆப்பிள்மேல் பூச). அப்புறம் சைனாக்காரந்தான் கண்ட கண்ட பிளாஸ்டிக் பூச்சே ரொம்ப சீப் என்பதைக் கண்டுபிடித்து அதனைச் செய்ய ஆரம்பித்தது. மொத்தத்தில் நமக்குக் கெடுதல்தான்
இங்க செப்டம்பர் மாசம் ஆப்பிள், பம்ப்கின் பை என்று
பதிலளிநீக்குகடைகளில் வந்து கொண்டிருக்கின்றன. கோடை முடிந்து
இலையுதிர்காலம்
வரப் போகிறது. எல்லாமே ஆரஞ்சு வண்ணத்தில் மிளிரும்.
முரளிமா,
உங்கள் பெண் ரொம்ப சமத்து. எத்தனை அழகா செய்து படங்களும் போட்டிருக்கிறாளே.
This is a lengthy process. and needs lots of patience.
ஒன்னும் செய்யலாம் .நீங்கள் செய்து வையுங்கள்.
ஒரு பிட் எடுத்துக்கறேன்.
பார்க்க நல்ல உழைப்புடன் செய்தது தெரிகிறது.specially the top covering.
It looks so authentic.
Congratulations ma.உங்கள் மகளிடம் சொல்லுங்கள்.
வாங்க வல்லிம்மா. உங்க ஊர்ல ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்டிராபெர்ரி தோட்டங்களுக்குப் போய், பக்கெட் பர்சேஸ் செய்திருக்கீங்களோ?
நீக்கு//lengthy process. and needs lots of patience.// - உண்மைதான். நம்ம பாரம்பர்ய உணவுல எது ரொம்ப நீளமான ப்ராசஸ்? ஏதேனும் நினைவுக்கு வருதா?
நீக்குOh yes. summer activities ma.நம்ம ஊர்ல அதிக நேரம் எடுப்பது மைசூர்பாகு, ஜாங்கிரி,
நீக்குபருப்புருண்டைக் குழம்பு நிறைய இருக்குமா.
Apple Pie மிக அருமையாக வந்திருக்கிறது ப்ரொபஷனல் பேக்கர் செய்தது மாதிரி இருக்கிறது. பாராட்டுக்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி அவர்கள் உண்மைகள் துரை.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஆப்பிள் பை ரெசிப்பி பிறகு வந்து படிக்க வேண்டும். கடமை அழைக்கிறது.
வாங்க வெங்கட். மெதுவாகப் படிங்க. உங்க ஊர்ல இருந்து 50+ கிலோமீட்டர் தூரம் வரை நான் இந்த முறை வந்தேன். (ஆக்ரா)
நீக்கு250 கிமீ - By express way.
நீக்கு2 மிஸ் ஆகிவிட்டது ( :-) ). தில்லியில் வாழ்ந்த என் பெரியப்பா, அவரது 24+ வயதுகளில், மாலை சைக்கிளில் புறப்பட்டு நண்பர்களோடு ஆக்ரா வந்து தாஜ்மஹாலுக்கு வருவாராம். மறுநாள் பார்த்துவிட்டுத் திரும்புவாராம். ஆக்ரா கோட்டையிலிருந்து எட்டிப் பார்த்தேன். செங்கோட்டை தெரியவில்லை.
நீக்குApple Pie வித்தியாசமாக இருக்கிறது...
பதிலளிநீக்குஎனக்குமே வித்தியாசமாகத்தான் இருந்தது திண்டுக்கல் தனபாலன்.
நீக்குஇந்த மாதிரி ரெசிப்பிக்களை முழுவதுமாக தமிழாக்கம் செய்வது கடினம்தான். ஆனாலும் நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குவாங்க டிபிஆர் ஜோசப். நன்றி.
நீக்குபேக்கரியில் செய்தது போலவே தெரிகிறது வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குநன்றாக இருக்கிறது மகளுக்கு எனது வாழ்துகளை தெரிவியுங்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி மாதேவி.
நீக்குஆஆஆ நெல்லைத் தமிழன் ரெசிப்பியா.... இன்று லேட்டாகும்போல இருக்கே நான் இங்கு வர.....
பதிலளிநீக்குவாங்க அதிரா.. என்னோட ரெசிப்பிதான். ஆனால் அதைச் செய்தது நானல்ல.
நீக்குபடையப்பா?:) ஹா ஹா ஹா...
நீக்குஆப்பிள் பை நன்றாக இருக்கிறது. உங்கள் மகளுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்.
நீக்குசே சே இன்று நேரம் கிடைக்குதில்லையே பை சாப்பிட.
பதிலளிநீக்குசூப்பராக பொறுமையாக செய்திருக்கிறா மகள். அழகாக வந்திருக்கு.
எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் அப்பிள் பை பிடிக்கும். இங்கு விதம் விதமாக வாங்கலாம்.
திங்கள் முழுதும் நீங்க பிஸி. இதற்கிடையிலும் வந்திருக்கீங்க.
நீக்கு///பெரும்பாலும் எங்க யாருக்கும் நுழைய அனுமதி கிடையாது. ///
பதிலளிநீக்குஹா ஹா ஹா இது எல்லோர் வீட்டிலும் இருக்குமென நினைக்கிறேன், எங்கள் மகனும் நான் வீட்டிலிருந்தால் எதுவும் செய்ய மாட்டார் :).. ஆனா இல்லாத நேரம் கிச்சின் புல்லா கிளீனிங் வோஷிங் என செய்து ஏதும் சின்னதாக குக்கிங்கும் செய்வார் சிலசமயம்.
ஓ... என் பெண் என்ன செய்யப்போகிறேன் என்றும் சொல்லமாட்டா. என் மனைவிதான், அவ எது செஞ்சால் என்ன, அவளுக்கு விருப்பமானதைச் செய்யட்டும் என்பா. எனக்குத்தான் அவ்வளவு பொறுமை கிடையாது. ஹா ஹா (எல்லா ஆண்களும் அப்படித்தானா? தெரியலை...)
நீக்கு///எனக்குத்தான் அவ்வளவு பொறுமை கிடையாது. ஹா ஹா (எல்லா ஆண்களும் அப்படித்தானா? தெரியலை...)//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க எதுக்கு கிச்சின் விசயத்தில மூக்கை நுழைக்கிறீங்க?:)) என்னைப் பொறுத்து ஆண்கள் எப்படி இருக்கோணும் எனில், கிச்சின் விசயத்தில் தலையிடக்கூடாது:)) கிச்சின் எப்படி இருந்தாலும் என்ன சமைச்சாலும் அதில் மூக்கை நுழைக்கக்கூடாது:)).. விரும்பினால் கெல்ப் பண்ணலாம், கிளீன் பண்ணலாம்:)) சமைச்சுத் தரலாம்:)) ஹா ஹா ஹா இப்படித்தான் எங்கள் வீட்டில் நடக்குது:)).
எங்கட அப்பாவில் இருந்த ஒரு குறை, கிச்சினுக்குள் வந்தால், அதை ஏன் மூடவில்லை, இது ஏன் இப்படி இருக்கு?.. இப்படிக் கேள்வி கேட்பார் அம்மாவிடம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது எனக்குப் பிடிப்பதில்லை:)).. முடிஞ்சால் கெல்ப் பண்ணோனும்:)) முடியவில்லையா அதை மனைவி பார்த்துக் கொள்ளுவா என பேசாமல் விட்டிடோணும்:))
ஹையோ என் செக் கையும் காணமே இங்கின:)) மீ ஜம்பிங்:)) தேம்ஸ்ல:))
எங்க வீட்டில், நான் கிச்சனுக்குள் நுழைந்தால், எந்தப் பொருள் எங்க இருக்கணுமோ அது அங்க இருக்கணும். மாற்றி இருக்கக்கூடாது. பஹ்ரைன் கிச்சன்ல, கண்ணை மூடிக்கிட்டு கையை நீட்டினா அந்தப் பொருள் அங்க இருக்கும். இப்பவுமே.. இங்க மிளகாய் (செத்தல்), பெருங்காயம், கடுகு..... எல்லாம் எங்க இருக்கோ அப்படியே இருக்கணும். அப்பத்தான் எண்ணையைக் கொதிக்க வச்ச பிறகு டக்குனு அதை அதை எடுக்க முடியும். இடம் மாத்தி வச்சால் கஷ்டமில்லையா?
நீக்கு//மனைவி பார்த்துக் கொள்ளுவா என பேசாமல் விட்டிடோணும்:))// - கேள்வி கேட்கும் உரிமை கூட ஆண்களுக்குக் கிடையாதா? ஆண்டவா? இந்த ஸ்காட்டிஷ் மட்டுமே இப்படியா இல்லை எல்லாப் பெண்களுமா? (அடுத்த முறை பெண்களை டிசைன் செய்யும்போது இந்தக் குறையெல்லாம் சரி பண்ணிடு ஆண்டவா.)
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...
நீக்கு//எனக்கு டிரெடிஷனல் உணவு தவிர வேறு எதிலும் விருப்பம் கிடையாது///
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர் இப்பூடிச் சொல்லிச் சொல்லியே, மகள் செய்யும் வெஸ்ரேன் உணவுகளை எல்லாம் சாப்பிட்டு முடிப்பது நீங்கதானே:).... எனக்கு அம்மம்மாட பயமொயி ஒன்று நினைவு வருதே.....
“பேச்சுப் பல்லக்கு , தம்பி கால் நடை”...
ஹையோ நேக்கு பெல் அடிக்கப் போகுதே மீ ரன்னிங்கூஊஊஊ ஹா ஹா ஹா...
இதைப் படிக்கும்போது, இப்போ என் மகள் செய்து என் மனைவி தந்தது, தோசை மாவில், பீட்ரூட் கலந்து, அதன் மேல் சீஸ், கேப்சிகம்லாம் போட்டு குட்டி குட்டி தோசையா இரண்டு தந்தா. நான், இதைத் தந்துவிட்டு, லஞ்சை கட் பண்ணிடாதே, எனக்கு டிரெடிஷனல் தோசை அல்லது இட்லிதான் வேணும் என்றேன்.
நீக்கு//“பேச்சுப் பல்லக்கு , தம்பி கால் நடை”...// - முதல் முறை கேள்விப்படறேன். நீங்க உங்களுக்கு நினைவில் இருக்கற பழமொழிகளை வைத்து இடுகை எழுதுங்க. நாங்க இதற்கு சமமாச் சொல்றது, 'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போவேன்'னு சொல்வது போல
நீக்கு//நாங்க இதற்கு சமமாச் சொல்றது, 'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போவேன்'னு சொல்வது போல//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) டமில் புரிபிஸர் அதிராவிடம் மாட்டுப்பட்டிட்டார்ர்ர்:)).. இது வேறு கருத்து, என்னுடையது வேறு கருத்து.
என்னுடையது வந்து, பேசும்போது பெரிய லெவலாகப் பேசுவார்கள், நாமும் அப்படியே நம்பிடுவோம்ம்.. சில சமயம் நமக்கு கவலைகூட வரும்.. சே..சே... இப்பூடி இருக்கிறார்களே நம்மால முடியவில்லையே என, ஆனா அதற்கு எதிராக செயல் இருக்கும்:))..
இதற்கு ஒரு நல்ல உதாரணம்..
எங்கள் அப்பா வழி உறவுக்காரர் ஒருவர் பச்சைப் புழுகர்:) ஹா ஹா ஹா.. இது முன்பு அப்பா அம்மாவுக்கு தெரியாதாம், நாங்கள் சின்னனாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம்:))..
அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்[அவருக்கு திருமணமான புதிசில:)], லேட்டாகிவிட்டதாம், அப்போ அப்பா சொல்லியிருக்கிறார், நைட் இங்கு நின்று நாளைக்குப் போகலாமே தம்பி என..
அதுக்கு சொன்னாராம்.. “இல்லை அண்ணனி, என் ஒரு கார் ரோட்டில விட்டிட்டு வந்திட்டேன், உள்ளே எடுத்து விடோணும், மற்றக் கார் கராஜ் க்கு வெளியே நிக்குது, “ அதையும் உள்ளே விட்டுப் பூட்டோணும், பயமெல்லோ வெளியே விடுவது.. அதனால நான் போயே ஆகோணும் என:))..
அப்பா அம்மா வாயடைச்சுப் போயிட்டினம், பொம்பிளை வீடு பணக்காரர் ஆக்கும்.. கார் எல்லாம் கொடுத்திருக்கினம் போல என:)).. பின்பு கன காலத்துக்குப் பின் விசாரிச்சால்.. ஒரு ஓட்டைச் சைக்கிள் மட்டுமே நிற்குதாம் வீட்டில:)) ஹா ஹா ஹா.. அவ்ளோ புழுகர் அவர்:))..
.. ஆனா என் பழமொழியின் மெயின் மீனிங் பொய் சொல்வதல்ல, பேசுவது பெரிதாக இருக்கும், செயல் சின்னதாக இருக்கும்:))
//நீங்க உங்களுக்கு நினைவில் இருக்கற பழமொழிகளை வைத்து இடுகை எழுதுங்க.//
இல்ல, அப்பப்ப உங்களுக்கே பாவிக்கிறேனே:)) ஹா ஹா ஹா..
அதிரா... இன்னொன்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆளைப் பார்த்தால் அஜக் உள்ள பார்த்த லொடக். ஆளு பார்க்க ரொம்ப அழகா வடிவாத் தெரியுமாம். ஆனா ரொம்ப ஆராய்ந்து பார்த்தால் உடலில் ஏகப்பட்ட நோய் இருக்குமாம்.
நீக்குநீங்க சொன்ன சம்பவத்தை யோசிச்சு, நானும் யாரையேனும் அண்டப் புளுகரை சந்தித்திருக்கேனான்னு பார்க்கிறேன். நினைவுக்கு வரலை. அது சரி..மறுநாள் உண்மை தெரிஞ்சுடுமே..அப்புறம் எப்படி உங்க அப்பா முகத்துல விழிப்பார்?
ஆஆஅ உங்கட பழமொழி எனக்குப் புதிசு:)...
நீக்குஅது அவர் இருந்தது வேறு மாகாணம், தொலைவில், ஆனா ஊருக்குப் போயிருந்தபோது வீட்டுக்கு வந்திருக்கிறார்:).. அதனால எதுவும் தெரிய ஞாயமில்லை அத்தோடு பெரிய குளோஸ் சொந்தமில்லை,,,
///கேக் வகைகளில் எனக்குப் பிடித்தது பனானா கேக் மட்டும்தான்.///
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் டேட்ஸ் கேக்கை சாப்பிட்டபின் இப்பூடிச் சொல்ல மாட்டீங்க:)
அதிரா... தயவு செய்து உங்க கேக்கை குறைவா மதிப்பிடாதீங்க. நீங்க நல்லாவே கேக் பண்ணுவீங்க. அதை நான் சாப்பிட்டு உயிரோடத்தான் இருப்பேன். எனக்கு இருக்கிற இந்த நம்பிக்கை உங்களுக்கு இல்லாமல் போச்சே.
நீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)... நெல்லைத்தமிழன் நீங்க ஜி எம் டயட் தொடங்குன்கோ
நீக்குஜி.எம். டயட் பற்றி நிறைய நான் எழுதுவேன். அதை 4-5 தடவை இதுவரை செய்திருக்கிறேன்.
நீக்குநம்ம கண்ணுக்கு gm டயட் ஜெனிடிக்கல்லி modified னு பட்டுச்சு :) இது வேறயா ?
நீக்கு//கர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் டேட்ஸ் கேக்கை சாப்பிட்டபின் இப்பூடிச் சொல்ல மாட்டீங்க:)//
நீக்குஉண்மையை உரக்க சொல்லிய பூஸாருக்கு 10 அச்சப்பம் பார்சேல் :)))))))))
ஜி.எம். டயட் - முதல் ரெண்டு நாட்கள் கொஞ்சம் கஷ்டம். அப்புறம் பிரச்சனையில்லை. நான் முதல் முறை உபயோகப்படுத்தியபோது 3 3/4 கிலோ குறைந்தேன். பிறகு 3, அப்புறம் 2 (இதற்கிடையில் வெயிட் அதிகமானதையும் சொல்லணும்). வாழைப்பழம், பால் சாப்பிடும் நாளும், 6 தக்காளிகள் மட்டும் சாப்பிடும் நாளும் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.
நீக்கு//வாழைப்பழம், பால் சாப்பிடும் நாளும்//
நீக்குவாழைப்பழம் பாலைக் குறைச்சு.. பழங்களைச் சாப்பிடலாம்...
//6 தக்காளிகள் மட்டும் சாப்பிடும் நாளும் //
தக்காளி ஒத்துக்கொள்ளாதோர் என்ன பண்ண முடியும்.. அதனால புரோக்கோலி + வெஜ் சாப்பிடலாம்... ஆனா டயட் பண்ணினால் போதாது.. அதை மெயிண்டைன் பண்ணோணும்.
இதுக்கு பதிலா அது, அதுக்கு பதிலா இதுன்னு மாத்தக்கூடா. தக்காளிப்பழம் சாப்பிடும் அன்று தக்காளிப்பழம் மட்டும்தான் சாப்பிடணும். அதுபோல வாழைப்பழம் நாளிலும் அப்படித்தான்.
நீக்குநீங்க சொல்ற டயட்டு, வாழைப்பழம் சாப்பிடும் நாளில் 2 முழு பலாப்பழம், தக்காளிக்குப் பதிலா 5 புரோக்கோலி போட்டு கறி, மற்ற காய்கறிகளை ஃப்ரை பண்ணிச் சாப்பிடணும்னு சொல்வது. அது டயட்ல வருமோ?
அவங்க சொல்றாங்க பசிக்கும்போது எவ்வ்ளோ வேணுமெண்டாலும் சாப்பிடுங்கோ என்றுதான் ஆனா உப்பு இல்லாமல் அதிகம் சாப்பிடவே முடியாதே. இன்னொன்று பால் குடிக்க சொல்வது வாழைப்பழம் சொல்வது முதல் மூன்று நாட்களில் உடம்பில் கல்சியம் பொட்டாசியம் குறைந்திருக்கும் அதை பலன்ஸ் பண்ணவே.
நீக்குஅதுபோலதான் தக்காளியும், அதனால தக்காளியில் என்ன சத்துக்கள் இருக்கோ அதுக்கு நிகரான ஒன்றை மாத்திச் சாப்பிட்டால் என்ன குறைஞ்சா போயிடுவோம் ஹா ஹா ஹா:)
///பின்னல் டிசைன்போல் செய்யாமல், வெறும் மாவுக்கலவையை மூடிபோன்று மூடியிருந்தால், உள்ளே காற்றுப் புகாது. அதனால் Bake செய்வதற்கு முன்பு, மேற்பகுதியின் நடுவே ப்ளஸ் குறி போன்று கத்தியால் லைட்டாக வெட்டிவிடவும்///
பதிலளிநீக்குசூப்பரா சொல்லிட்டா... நெல்லைத்தமிழன் இனி எங்களுக்கு உங்கட ஆதிகாலக் குறிப்பெல்லாம் வேண்டாம்:)... மகளுடையதுதான் வேணும்:)
இது என்ன வம்பாக்கிடக்கு. நல்ல நல்ல ரெசிப்பில்லாம் நான் எழுதுவேனே.... அதை விட்டுட்டு ஆப்பிள் பை, கேக் இதெல்லாம் யாருக்கு வேணும்னு சொல்வீங்கன்னு பார்த்தா.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குவணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவாக தங்கள் மகளின் ஆப்பிள் கேக் (பை) நன்றாக உள்ளது. நான் இந்த மாதிரியெல்லாம் செய்ததேயில்லை. இதற்கு பதிலாக மைதாவில் செய்யும் கடலைபருப்பு, தேங்காய் வெல்லம் போட்ட போளி, ஜீனி போட்டுச் செய்யும் இடுபோளி என் பழைய கற்கால நாகரீகந்தான்..கற்று கொண்டிருக்கிறோம். தங்கள் மகள் காய்கறிகள், பழங்கள் வைத்து புதிதாக விதவிதமாக ரெசிபிகள் செய்து அசத்துகிறார். தங்கள் மகளுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
இந்தக்கால தலைமுறைகளுக்கு இந்த மாதிரி புது விதமான உணவுகள் மிகவும் பிடிக்கிறது. நம் காலத்தில் ஆப்பிள் விலையை பார்த்து விட்டே நம் வீட்டு பெரியவர்கள் அவ்வளவாக காலத்துக்கு தகுந்த மாதிரி வரும் முக்கனிகளை தவிர்த்து பிறவற்றை எப்போதும் வாங்குவதில்லை. வீட்டு பூஜைகளுக்கு வாங்கும் இந்த பழங்கள் அதிசயமாக நினைத்து துண்டாக்கி பகிர்ந்து கொடுக்கப்படும். மற்றபடி வாழைப் பழங்கள்தாம் தினசரி நம்முடன் கூடவே வந்தது.
ரெசிபி நன்றாக படங்களுடன் விளக்க உரைகளுடன் நன்றாக உள்ளது. தங்கள் மகளுக்கு மீண்டும் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்...
நீக்கு//என் பழைய கற்கால நாகரீகந்தான்// - அதைப் பற்றி வருத்தப்படாதீங்க. இந்த பழையகால ஐட்டங்கள்லாம் பண்ணின உடனே இந்தக் கற்கால மனிதன் நெல்லைத் தமிழனை மறக்காம சாப்பிடக் கூப்பிடுங்க.
//ஆப்பிள் விலை// - அதை ஏன் கேட்கறீங்க. பஹ்ரைன்ல இருந்த போது அவ்வளவு பழங்கள் வாங்குவேன். ரொம்ப விலைலாம் கிடையாது, அனைத்தும் இம்போர்டட் என்றபோதும். ஆனா இன்னைக்கு ஒரு ஒரே ஒரு ஆப்பிள் பழமுதிர்ச்சோலைல வாங்கினேன். மீடியம் சைஸ் 49 ரூபாய். ஒரு பியர் பழம். 51 ரூபாய். கட்டுப்படியாகுமா? ஆனால் பெண் பழம் வாங்கிக்கிட்டு வரச் சொன்னாள். ஒன்றும் பேசாம வாங்கிக்கிட்டு வந்தேன்.
மிக்க நன்றி.
அனைவருக்கும் மாலை/காலை வணக்கம். நேற்றே இதைப் பார்த்தேன், படித்தேன். ஆனால் கருத்திடவில்லை. ஆப்பிள்களில் ஹிமாசலில் விளையும் இந்திய ஆப்பிளுக்கு ஈடு, இணை இல்லை. பத்ரிநாத் போகும்போதும், திருக்கயிலை யாத்திரையின் போதும் நிறையச் சாப்பிட்டிருக்கேன். மொத்தமாக வட்டமாக இருக்கும் ஆப்பிள்களை விடக் கொஞ்சம் கோணலாக மேல் பாகம் குறுகி வளைந்து இருக்கும் ஆப்பிள்களே இனிப்பு அதிகமாக இருக்கும். இங்கே அம்பேரிக்காவில் கிடைக்கும் பச்சை ஆப்பிளில் நான் 2004 ஆம் ஆண்டு வந்திருந்தபோது துண்ட மாங்காய் ஊறுகாய் போலவும், தொக்குப் போலவும் போட்டிருக்கிறேன். தொக்கு ரொம்பவே பிரபலம் அடைந்தது. அப்போதெல்லாம் எழுத்தாளி ஆகாததால் இதை எல்லாம் எழுதலை.
பதிலளிநீக்குவாங்க கீசா மேடம்.
நீக்குசமீபத்துல சித்ரகூட்ல கிலோ 80 ரூபாய்க்கு ஹிமாச்சல் பிரதேஷ் ஆப்பிள் வாங்கினேன். நம்ம ஊர் ஆப்பிள் போல வரவே வராது. இதுல அமெரிக்கா ஆப்பிள்லாம் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது (மருந்து சேர்த்து 8 மாசம் ஆனாலும் புதிது போலவே வைக்கறாங்க என்பது என் எண்ணம்). நைமிசாரண்யத்துல கிலோ 40 ரூபாய் புதிய கொய்யா. நேற்று இங்கு அடையாரில் ரோட்டில் விற்கும் கடையில் கொய்யா கிலோ 180 ரூபாய். அடுக்குமா?
பத்ரிநாத் அடுத்த வருடம் போவேன் (ப்ராப்தமிருந்தால்). இந்த ஆப்பிள் பிஸினெஸை நினைவு வச்சுக்கறேன்.
நெல்லைத் தமிழரின் மகள் சமையலில் வெளுத்து வாங்குகிறாள். அதோடு பொறுமையும், நிதானமும் கைகூடி இருக்கிறது. எத்தகைய விமரிசனங்களுக்கும் அஞ்சமாட்டாள் எனவும் நினைக்கிறேன். ஆப்பிள் பை பார்த்திருக்கேன், தெரியும். ஆனால் சாப்பிட்டதில்லை. தேர்ந்த பேக்கரிக்காரர்கள் மாதிரி மிக அழகாக ஆப்பிள் பை செய்திருக்கிறாள். மனமார்ந்த வாழ்த்துகள், ஆசிகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி கீசா மேடம். கட்டாயம் அவள்ட சொல்றேன். இந்த ஜெனெரேஷன் காரங்க, நம்ம அவங்க பின்னால இருக்கோம் (அவசரத்துக்கு) என்ற நினைப்பே அவங்களுக்குப் போதும்னு நினைக்கறேன். அவங்களே அவங்க லைஃபை பார்த்துக்குவாங்கன்னு தோணுது. உங்கள் ஆசிக்கு நன்றி
நீக்குஅருமை யா இருக்கு ...
பதிலளிநீக்குரொம்ப நீளமான செய்முறை சில வருடங்களுக்கு முன் நானும் செய்து பார்த்தேன் ...என்ன எங்க பசங்களுக்கும் பிடிக்காம நானே சாப்பிட வேண்டியதாச்சு ...
அப்போவே முடிவு பண்ணயாச்சு ..இனி செய்ய கூடாது ன்னு ..
அதனால் பார்த்து மட்டும் ரசிச்சுகிட்டேன் ....
ரசித்ததற்கு நன்றி அனுராதா ப்ரேம்குமார். எனக்கு யாராவது வாழைப்பழ கேக் செய்து தருவார்களான்னு பார்க்கிறேன். எங்க ஊர் கீதா ரங்கனைக் காணவே காணோம்..
நீக்குவாழைப்பழ கேக் இன்னும் ரொம்ப ஈசி ஆச்சே ...எங்க வீட்டில் இப்போ அடிக்கடி செய்வது உண்டு ..
நீக்குஉங்க பொண்ணு ட்ட சொல்லுங்க ஈசி செஞ்சு தருவாங்க ..
கீதா அக்கா ட்ட நான் கூட பேசவே இல்லை ரொம்ப நாள் ஆச்சு ..
இவ்வுணவை இன்று தான் அறிகிறேன்
பதிலளிநீக்குசெய்முறை வழிகாட்டல் அருமை
நன்றி யாழ்பாவணன்
நீக்குவெண்ணை திருவி சேர்த்து என்றால்....
பதிலளிநீக்குButter scrubbing. நாம் பச்சிடிக்கு கேரட்டைச் சீவுவது போல
நீக்குமைதா - ரொம்பவும் ஆபத்தான சமாச்சாரம் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு.
பதிலளிநீக்குமைதாவுக்கு பர்த்தியாய் என்ன செய்யலாம்? நைஸ் கோதுமை மாவு?..
வாங்க ஜீவி சார்... கோதுமை மாவு சரியாக வரும். ஆனா பாருங்க...இப்போலாம் கோதுமை மாவே கிடைப்பது வெகு அரிது. கிடைப்பது எல்லாம் ஆட்டா மாவு, அதாவது சப்பாத்தி மாவு. அதில் கோதுமையைத் தவிர மற்றவைகளும் கலந்திருப்பார்கள்.... எல்லாம் காலக் கொடுமை.
நீக்குகடைசி கோரிக்கை டாப். அதனாலே அப்பா போல வயசானவங்க தூர ஒதுங்கிப் போய் நின்று அந்த ஆப்பிள்+பையை ஓரக்கண்ணால் பார்த்தபடி ஜோரா ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கை தட்டுங்க, பாக்கலாம்!!
பதிலளிநீக்குஜீவி சார்... வயசுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லைனு நினைக்கறேன். வெங்கட் கூட புதிய புதிய உணவுகளை ரசிக்கிறார். எனக்கு விருப்பம், சப்பாத்தி, மட்டர் பனீர் (அல்லது கடாய் வெஜ் போன்றவை). புதியதாக ஒன்றையும் முயற்சிக்க மாட்டேன்.
நீக்குபானுமதி வெங்கடேச்வரன் மேடம் இணையதளத்துக்கு மீண்டும் வரணும் என்று கேட்டுக்கறேன்.
பதிலளிநீக்குநோஓஓஓஓஓஓஒ நெல்லைத்தமிழனின் ரெசிப்பிக்கு வந்திடக்கூடா பானுமதி அக்கா:)).. அதிராவின் ரெசிப்பிக்கு வாங்கோ கட்டாயம்:)).. இண்டைக்குப் போய் ஐஸு வைக்கிறார்:)) ஏன் நேற்றுக் கூப்பிட்டிருக்கலாம்:)) இல்ல நாளைக்குக் கூப்பிட்டிருக்கலாம்:)) ஹா ஹா ஹா அதிரா கண்ணுக்கு எல்லாமே தெரியுமெல்லோ:))
நீக்குஏங்க... இந்த ரெசிப்பி படிக்கவா கூப்பிடுவேன். அவங்க மீண்டும் இணைய தளத்துக்கு வந்தா அவங்க மனசு கொஞ்சம் மாறுமே என்ற எண்ணம்தான். நான் காசி கயா யாத்திரை செல்வதற்கு முன்னால் அவங்க போயிட்டு திரும்ப வருவதாக திட்டம் போட்டு அந்த யாத்திரையை இராமேஸ்வரத்துல இருந்து ஆரம்பிச்சாங்க. எனக்கே செய்தியின் தாக்கம் இன்னமும் இருக்கு. இருந்தாலும் இணையத்துக்கு வரும்போது மனசு ஆறுதலாகும் இல்லையா?
நீக்குநீங்க சொல்றது எனக்குப் புரியுது அதிரா. உங்க ரெசிப்பி ஷாக், அவங்களுக்கு மற்ற ஷாக்கை மறக்கச் செய்யும்தான்.
///சிறிய சிறிய பட்டைகளாக வெட்டி, ஜடை பின்னுவதுபோல் பின்னி, அதனைக்கொண்டு ஆப்பிள் கலவையை மூடலாம்.//உங்களுக்குத்தான் தெரியுமே ஊருக்கே தெரியுமே எனக்கும் இனிப்புக்கும் எட்டா தொலைவுன்னு :)ஆனாலும் இந்த படத்தை பார்த்தும் பாராட்டாம போனா எனக்கே மனசுக்கு வலிக்கும் :)
பதிலளிநீக்குஇந்த வெட்டி பின்னி செம அட்டகாசம் அழகா செஞ்சிருக்கா மகள் .ஸ்பெஷல் பாராட்டுக்கள் சொல்லிடுங்க .மிகவும் பொறுமையா neat ஆ செஞ்சிருக்கா .
மிக்க நன்றி ஏஞ்சலின்... அவ பொறுமைசாலி (ஒருவேளை பெண்கள் எல்லோரும் பொறுமைசாலிகளோ? என் மனைவியும் பொறுமைசாலி).
நீக்குஇனிப்பு சாப்பிடாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என்னவோ போங்க..
//இனிப்பு சாப்பிடாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என்னவோ போங்க..//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இனிக்காத வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா எனக் கேட்டிருந்தால் உங்களுக்காக இப்பவே ஒரு பனானா கேக் செய்து அனுப்பியிருப்பேன்:)).. இது இனிப்பு சாப்பிடாத வாழ்க்கை எனக் கேட்டிட்டீங்களே:)).. எங்கின போய்க் குதிப்பேன் நான்:))
வெதுப்பிய ஆப்பிள் பின்னல் கூடை அப்படீன்னு சொல்லலாமா :)
பதிலளிநீக்குசிமியோன் டீச்சரின் மாணவிகிட்ட கேட்டு சொல்லுங்க
அவங்கள்ட கேட்கறதுக்கு பேசாம ஆப்பிள் பை என்றே சொல்லிடலாம். ரொம்ப சுலபமா இருக்குல்ல...
நீக்குஆமாம் உங்க டேவடை கிச்சன் மற்ற தளங்கள்லாம் என்னாச்சு? 4 மாதம் இடுகையோ ஆக்டிவிடீஸோ இல்லைனா, தளங்களை எடுத்துவிடப்போகிறதா கேள்விப்பட்டேனே
///அவங்கள்ட கேட்கறதுக்கு பேசாம ஆப்பிள் பை என்றே சொல்லிடலாம். //
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மீ சொல்ல வந்தேன்:)) இதைப் படிச்சபின்னர் ஆரும் பதில் சொல்லுவினமோ?:)) வைர அட்டியலை தூக்கிக்குடுத்தாலும் ஜொள்ள மாட்டேனாக்கும் பூஸோ கொக்கோ?:)) ஹா ஹா ஹா
திரும்பவும் பார்த்து ரசித்தேன் அந்த வெட்டியா பின்னல்கள்தான் எவ்ளோ ஈவனா ஒரே சைசில் இருக்கு ..
பதிலளிநீக்கு//(கேரமல் நிறம் வருவதற்காக. பிரவுன் ஷுகர்னு எழுதினா நிறைய கேள்விகள் வரும்)//
அஸ்கா சர்க்கரையா ? சீக்கிரம் caramelise ஆகும் .
கொஞ்சமா moist தன்மையா இருக்கும்ல ..நான் காபிக்கே demerara சர்க்கரை தான் யூஸ் பண்றேன்
நான் காபி/பால் உபயோகப்படுத்துவதில்லை.... என்ன ஒண்ணு... ரொம்ப இனிப்பு சாப்பிடுவேன்.
நீக்குஇங்கே காஃபி, தேநீர் போன்றவற்றிற்கெல்லாம் பல வருடங்களாகப் பையர் ப்ரவுன் சர்க்கரையே பயன்படுத்துகிறார்.
பதிலளிநீக்குஎனக்கு கருப்பு காபி கருப்பு தேநீருக்கு மட்டுமே சர்க்கரை சேர்க்கும் வழக்கமுண்டு கீதாக்கா .ப்ரவுன் சுகர் மட்டுமே சேர்க்கிறேன் .வெள்ளை சர்க்கரை எதோ மயக்க உணர்வு வருது .கிட்டத்தட்ட 4 வருஷமா ஒன்லி ப்ரவுன் சர்க்கரை
நீக்குப்ரவுன் ஷுகர் சாப்பிட்டால்தான் மயக்கம் வரும். வெள்ளைச் சர்க்கரைக்கே மயங்குபவரா நீங்கள் ஏஞ்சலின்? ஆச்சர்யம்தான்.. ஹா ஹா
நீக்குHaahaa grrrrrr
நீக்குIt's this//Demerara sugar. Unrefined cane sugar.///
//https://en.wikipedia.org/wiki/Brown_sugar//நெல்லைத் தமிழர் நினைப்பது வேறே. இந்த ப்ரவுன் சர்க்கரை பழுப்புச் சர்க்கரை என்னும் பெயரில் நம் நாட்டில் பல காலமாகப் புழங்குகிறது. சுத்திகரிக்கப்பட்டுச் செயற்கை முறையில் ரசாயன இனிப்பைச் சேர்க்காத சர்க்கரை. சுத்தமான நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போல். இதைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆனால் இப்போதெல்லாம் நம் நாட்டில் குறிப்பாய்த் தமிழகத்தில் இதைக் கேட்டால் புரிந்து கொள்ளவோ அல்லது இருக்கு எனக் கொடுக்கவோ ஆள் இல்லை. அதே போல் குழைவு ஜீனி என்னும் ஒரு ரகமும் உண்டு. அதைத் தான் ரவா லாடு, மாலாடு போன்றவை பிடிக்கப் பயன்படுத்துவார்கள். இது ப்ரவுன் ஷுகருக்குத் தங்கை முறை. இந்தக் குழைவு ஜீனியும் இப்போதெல்லாம் கிடைப்பதில்லை. நாட்டுச் சர்க்கரையும் அறவே ஒழிந்து போயாகி விட்டது.
நீக்குஆமாம்க்கா .இந்த நம்மூர் சர்க்கரை ஆயுதபூஜை டைமில் பொரி உடைத்த கடலை கூட சேர்த்து விநியோகிப்பாங்க .தனியா எடுத்து வச்சி சாப்பிடுவேன்
நீக்குஎங்க மாமனார் வீட்டில் இந்த அன் ரிஃபைண்ட் ஜீனி (பிரவுனா இருக்கும்) உபயோகப்படுத்தறாங்க. ஆர்கானிக் ஜீனி என்ற பெயரிலும் அது வருது.
நீக்கு//என்னை மாதிரி அப்பாக்களிடம் ‘இந்தாங்க’ என்று கொடுத்துடாதீங்க. அவங்களுக்கு இந்த மாதிரி புதுமையானவைகள்லாம் பிடிக்காது. அவங்க, மோர் சாதம், இட்லி, உப்புமா, மைசூர்பாக் பார்ட்டிங்க. உங்க வற்புறுத்தலுக்காக ரெண்டு துண்டு எடுத்துக்கொண்டு, முகத்தில் மலர்ச்சியைக் காண்பிக்காமல், அஷ்டகோணலாக முகத்தை வைத்துக்கொண்டு, ‘ஓகே’ என்பார்கள். அப்புறம் உங்களுக்கு புதிது புதிதாகச் செய்யும் ஆர்வமே போய்விடும். அதுனால உங்கள் வயதை ஒத்தவர்களுக்கோ இல்லை புதுமை விரும்பிகளான பெண்களுக்கோ கொடுத்தால், நன்றாக சுவைத்துச் சாப்பிடுவாங்க, அதைப் பாராட்டுவாங்க, நேர்மறை விமர்சனம் செய்வாங்க. நீங்க உணவைத் தயார் செய்த கஷ்டத்துக்கும் முயற்சிக்கும் ஏற்ற திருப்தி கிடைக்கும்.//
பதிலளிநீக்குஉண்மையை அழகாய் சொல்லி விட்டீர்கள்.
உங்கள் பெண் மிக அருமையாக பொறுமையாக செய்து இருக்கிறார்கள்.
இதற்கு அவர் வயதை ஒத்தவர்கள், புதுமையை விரும்புவர்கள் கருத்து சொன்னால் மிகவும் நல்லதே!
பின்னல் அழகு.
வாங்க கோமதி அரசு மேடம்... இப்போ உடல் நலம் தேவலையா?
நீக்கு//உண்மையை அழகாய் சொல்லி விட்டீர்கள்// - இது உங்க வீட்டுல அல்லது தெரிந்தவர்கள் வீட்டுலயும் நடந்திருக்கா?
பொதுவா பெண்கள் (அம்மா ஸ்தானத்துல இருந்தாலும்) புதுமையை விரும்புவாங்கன்னு நினைக்கறேன்