வியாழன், 12 செப்டம்பர், 2019

கன்னி நீ சரி என்றால் கணத்துக்கொரு முத்தம்...



'இந்திய நாட்டின் எரிமலைத் தியாகிகள்'   -  இந்த நூல் மூன்று பாகங்கள் கொண்ட புத்தகமாக எங்கள் இல்லத்தில் இருந்து படித்திருக்கிறேன்.  சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட புத்தகம்.  இப்போதும் இருக்கிறதா என்று அந்த புத்தகக் கடலில் தேடமுடியாத நிலை.  அட்டைப்பெட்டிக்குள் சிறைப்பட்டிருக்கின்றன புத்தகங்கள்!  இது தினமலர் ஆகஸ்ட் மாதம் திண்ணை பகுதியில் பகிரப்பட்டது.

பாரதிபித்தன் எழுதிய, 'இந்திய நாட்டின் எரிமலைத் தியாகிகள்' நுாலிலிருந்து: சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர், செண்பகராமன் பிள்ளை. நாஞ்சில் நாட்டை சேர்ந்த இவர் மீது, 17 வயதிலேயே ராஜ துரோக குற்றம் தேடி வந்தது. 

ஆங்கிலேயரிடம் சிக்கி, கொடுமைப்படுவதை விட, தலைமறைவாகி விடுவதே நல்லது என, மும்பைக்கு பயணமானார். அங்கிருந்து, ஒரு ஆங்கிலேயர் உதவியுடன், இத்தாலி சென்றார். இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தில் மேற்கல்வி படித்து, ஜெர்மனிக்கு சென்று, டாக்டர் பட்டமும் பெற்றார்.

இதனிடையே, சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரில் இருந்தபோது, 'அனைத்துலக இந்திய ஆதரவு குழு' ஒன்றை துவக்கினார். அது சார்பாக, 'இந்தியா ஆதரவு' என்ற பத்திரிகையையும் துவக்கி நடத்தினார்.

ஜெர்மன் மன்னருடன் நல்ல நட்பில் இருந்தார், செண்பகராமன். 


ஜெர்மனியில், ஆங்கிலேய எதிர்ப்பு பிரசாரம் செய்து, ஆதரவு பெற்றார். இந்தியாவில் ஆங்கிலேயரை விரட்ட முயன்றவர்களுக்கு, ஆயுதம் வினியோகம் செய்து, அவர்களை விரட்ட வேண்டும் என்பது, அவரது திட்டம்.


அப்போது, திலகரை தொடர்பு கொண்டார். திலகர் ஆதரவாளராக இருந்த, வ.உ.சிதம்பரனாருக்கும் இந்த விஷயம் தெரிய வந்தது. 

ஜெர்மன் ஆதரவு இருந்ததால், ராணுவ பயிற்சியும் பெற்றார், செண்பகராமன். 'எம்டன்' நீர்மூழ்கி கப்பலில், அதிகாரியாக, இந்தியாவிற்கு வந்தார்.


கப்பலில் இருந்த மற்ற ஜெர்மானிய அதிகாரிகளுக்கு, தென் மாநில கடற்கரைகளை பற்றி தெளிவாக கூறினார். சென்னை உட்பட பல இடங்களில், பொதுமக்களை தாக்காமல், அதே சமயம், ராணுவ இலக்குகளை மட்டும் தாக்க ஏற்பாடு செய்தார்.

இந்திய கடல் பகுதியிலும், கடற்கரையிலும் குண்டுகளை வீசினார். சென்னை நகர கடற்கரையிலும் குண்டு விழுந்தது. 'எம்டன்' கப்பல், பசிபிக் கடல் வரை சென்றது. இருந்தும், அந்த கப்பலை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை. அதிலிருந்து, 'எம்டன்' கப்பல் மிக பிரபலமாயிற்று. 

கேரள மாநிலத்தின் கொச்சியில் இறங்கி, பல தகவல்களை சேகரித்து, மீண்டும் தலைமறைவானார், செண்பகராமன்.

அந்த காலத்திலேயே, செண்பகராமனை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு என, ஆங்கிலேய அரசு அறிவித்தது. இருந்தும், கடைசி வரை, அவர் பிடிபடவே இல்லை. 25 ஆண்டுகள், ஜெர்மனியில் இருந்தார்.

கடந்த, 1931ல், ஜெர்மனியில், ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது.


'நாஜி' கொடுமைகளை எதிர்த்து பேச ஆரம்பித்ததால், ஹிட்லருக்கு எதிரான ஆளாக கருதப்பட்டார். மே, 1934ல், நாஜி ஏஜன்டுகளால், விஷம் வைத்து கொல்லப்பட்டார், செண்பகராமன். அப்போது, அவருக்கு வயது, 43. அவரின் உடல், இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அஸ்தி மற்றும் அவர் சார்ந்த பதிவேடுகளுடன், மும்பையில் குடியேறினார், அவர் மனைவி லட்சுமிபாய். 1947ல், இந்தியா சுதந்திரம் பெற்ற போதிலும், 1966ல் தான், அன்றைய காங்கிரஸ் அரசு, செண்பகராமனை கவுரவிக்க முன்வந்தது.

செண்பகராமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவரா, தமிழகத்தை சேர்ந்தவரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. இருந்தாலும், அவருடைய முயற்சி, உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை! 

**********************************************

ஆக., 15, 1947 நள்ளிரவு, சுதந்திரம் கொடுக்க, முடிவு செய்தது, ஆங்கிலேய அரசு. அப்போதைய கவர்னர் ஜெனரலான மவுண்ட்பேட்டன், நேருவை அழைத்து, 'உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம். அதை எப்படி கொடுப்பது?' என்று கேட்டார்.

'எதை அடையாளமாக வைத்து பெறுவது...' என, நேருவுக்கும் குழப்பமாக இருந்தது.

உடனே, ராஜாஜியை அணுகி, 'நான், நாத்திகன். எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது. அதனால், தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்...' என்றார்.

'கவலை வேண்டாம். எங்கள் தமிழகத்தில், மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலை, புதிய மன்னருக்கு கொடுப்பது வழக்கம். நாமும் அந்நியனின் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குருமகானின் கையால் செங்கோலை பெற்று, ஆட்சி மாற்றம் அடையலாம்...' என்றார், ராஜாஜி.

'நேரம் குறைவாக உள்ளது. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்...' என்று உத்தரவிட்டார், நேரு. 

திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார், ராஜாஜி.

முறையாக செங்கோல் தயாரித்து, தங்க முலாம் பூசி, இளைய ஆதீனம், தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்படைத்தார், தலைமை ஆதீனம். கூடவே, ஓதுவார் மூர்த்திகளையும், உடன் அனுப்பி வைத்தார். ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில், டில்லி போய் சேர்ந்தனர். 

அப்போது, 1,000 ஆண்டு அடிமைதனத்தில் இருந்து, இந்தியா விடுதலை பெறும் விழாவிற்காக, அனைவரும் காத்திருந்தனர். அந்த சுதந்திர வைபவ தினத்தில், மவுண்ட்பேட்டனிடம் இருந்து, குருமகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம், தம்பிரான் பண்டார சுவாமிகள், செங்கோலை பெற்று, அதற்கு புனித நீர் தெளித்தார்.

ஓதுவார் மூர்த்திகள், 'வேயுறு தோளிபங்கன்...' என்று துவங்கும், கோளறு திருப்பதிகத்தை பாட, 11வது பாடலின் கடைசி வரியான, 'அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே...' என, முடிக்கும் போது தான், செங்கோலை, நேருவிடம் கொடுத்தார், சுவாமிகள்.

அந்த நிகழ்வை தான், நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம். இந்த நிகழ்வு, தமிழுக்கும், தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை. 



திருவாவடுதுறை ஆதீன மடத்தில் செங்கோல் வைபவம், கருப்பு - வெள்ளை புகைப்படமாக உள்ளது.

==========================================================================================

ஜூலை ஆறாம் தேதி உலக முத்த தினமாம்.  விடலாமா?  நாமும் ஜோதியில் கலப்போமே என்று இரண்டு எழுதி அப்போது பேஸ்புக்கில் போட்டேன்... இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்!



(2)


கோபமாய்ப் பார்த்ததற்கு ஒரு முத்தம் 

கொஞ்சிப் பேசியதற்கும் ஒரு முத்தம்
காதலாய்க் கனிந்ததற்கு ஒரு முத்தம் 
கடுமையாய் ஏசியதற்கும் ஒரு முத்தம் 
காக்க வைத்ததற்கு ஒரு முத்தம்
கண்ணிலே நீர் வந்ததற்கு ஒரு முத்தம் 
பேசிக் கொண்டே இருந்ததற்கு ஓர் முத்தம் 
மௌனமாய்க் கொல்வதற்கும் ஒரு முத்தம் 
சிரித்து நின்றால் ஒரு முத்தம் 
சீறி விழுந்தாலும் ஒரு முத்தம் 
எத்தனை முத்தம் வேண்டுமடி 
காரணமே தேவையில்லை...
கன்னி நீ சரி என்றால் 
கணத்துக்கொரு முத்தம்
கணக்கில்லாமல் தரலாம் 
உலக முத்த தினமாம் இன்று! 



=============================================================================================================

மாலை கிளம்பி ஸ்வாமிமலைச்சென்றோம்.  ஒப்பிலியப்பன் அளவு எளிதான தரிசனம் கிடைக்கவில்லை.  திரைபோட்டு முக்கால்மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்தோம்.  திரை விலகிய பின்னும் முன்னே இருந்த கூட்டம் கலையவே இல்லை.  பின்னர் தள்ளிக்கொண்டு முன்னால் சென்று முருகனை தரிசித்தோம்.







"ப்ரணவ மந்திரத்தை மறந்துட்டான்னு நீ பாட்டுக்கு பிரம்மனை செயில்ல போட்டுட்டியே கண்ணு... உனக்குத் தெரியுமா?"



"தெரியாதுன்னா நேரடியா கேளு நைனா...  சொல்றேன்...   அதை விட்டுட்டு...  சொல்றேன் கேளு.. காதைக் கொண்டா இப்படி..."



சுவாமிமலை.  அந்தி மாலையில் ஆறுமுகனை தரிசித்து விட்டு வெளிவந்தோம்.



உள்நுழையும்போது வரவேற்ற அண்ணன் ஆனைமுகன், வெளிவந்த பின் எங்களை வழியனுப்பி வைக்கிறார்.

இடதுபுறமாய் யாசகர்கள் வரிசையில் மேலே முதலாவதாய் அமர்ந்திருக்கும் தலைப்பாகை அணிந்த பெரியவர் திடீரென கிளம்பி எங்களிடம் வந்தார். எங்கள் அருகே இருந்த இளைஞன் ஒருவனிடம் கையிலிருந்த பணத்தைக்காட்டி "இது இருபது ரூபாய் நோட்டா?" என்று இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பக் கேட்டார்.

அவனும் "ஆமாம்"  என்று சொல்ல, தாண்டிச் செல்லும் அவர் கையில் இருந்த நோட்டைப் பார்த்தால் ஐநூறு ரூபாய் நோட்டு மாதிரி இருந்தது.

இளைஞனிடம் "பார்த்தால் ஐநூறு ரூபாய் நோட்டு மாதிரி இருக்கிறதே" என்று கேட்டால். "இல்லை அங்கிள்... புது இருபது ரூபாய் நோட்டு என்று நினைத்தேன்" என்றான்.

அது இருபது ரூபாய் நோட்டோ, ஐநூறு ரூபாய் நோட்டோ....  அவர் திரும்பிச் சென்று அவர் இடத்தில அமர்ந்து விட்டார்!

அங்குவாசலிலொரு லெமன் ஜூஸ் குடித்துவிட்டுக் கிளம்பி சென்னை திரும்பும் வழியில் ஜெயங்கொண்டத்தில் ஒரு நல்ல ஹோட்டலில் நிறுத்தி இரவு உணவை முடித்துக்கொண்டு நள்ளிரவு சென்னையை அடைந்தோம்.


========================================================================================================

2018 இல் குடந்தை பக்கம் பக்தி சுற்று சென்றபோது பட்டீஸ்வரம் கோவில் வாசலில் பார்த்த பூ மாலைகள்.மிக அழகாய் இருக்கின்றன இல்லை?








==============================================================================================================

78 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்த நாள் அனைவருக்கும் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    சுவையான மாறுபட்ட கதம்பம். படங்கள் மிக அழகாக உள்ளன. காலை எழுந்தவுடன் கோபுர தரிசனமும், கோவில்கள் அழகும் கண்டு கொண்டேன். விரிவாக படித்த பின் வருகிறேன்.

    கவிதைகள் மிக அருமை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      காலை வணக்கம்.  இனிதான பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. அன்பு ஸ்ரீராமுக்கும் ம் நன்றி.அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

      மீனுட்ம் வருகிறேன். அருமையான படங்களுக்கு மிகவம

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா.....  காலை வணக்கம்.

      மெதுவா வாங்க...

      நீக்கு
  2. ஆள் ஊரில் இல்லை என்றதும் அனுஷ்கா ராஜ்யம் கொடிகட்டி பறக்கிறது.

    காலை வணக்கம் அனைவருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுஷ் ரொம்ப குண்டாயிட்டாங்களாம் நெல்லை...  செய்தித்தாளில் பார்த்தேன்.

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆ இப்போதான் கொமெண்ட்ஸ் பார்க்கிறேன், விடிய ஓடி விட்டேன், இன்று நெல்லைத்தமிழன் லாண்டிங் ஆஆஆஆஆ.. ஒரு பக்கம் மட்டும் புளொக் சரிஞ்சுது.. நெல்லைத்தமிழனோ இல்ல கீசாக்காவோ என ஜந்தேகப்பட்டேனாக்கும்:))..

      கீதா .. ஆளையே காணமே.. இன்னும் கை சுகமாகவில்லையோ.. புது வேலை கையைத்தாக்குதோ...

      நீக்கு
    3. //அனுஷ் ரொம்ப குண்டாயிட்டாங்களாம் நெல்லை... செய்தித்தாளில் பார்த்தேன்.//

      ஆஆஆஆஆஆஆ அபோ காசு செலவழிச்சு வெளிநாடு போய் மெலிஞ்சதெல்லாம் வேஸ்ட்ட் ஆஆஆஅ?:)) இதனாலதான் ஸ்ரீராம் இப்போ அனுஸ்[ஸ்ரீராம் முறையில ஜொன்னேன்:)] ஐ விட்டு கொஞ்சம் ஒதுங்கிப்போறாரோ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விட மாட்டோம்ம்ம்:)) எனக்கு தேவை நீதி நேர்மை கடமை எருமை:))

      நீக்கு
    4. ஆமாம் அதிரா...   கட்சி மாறப்போகிறேன்!

      நீக்கு
  3. சுதந்திரம் அடைந்த வேளையில் சீர் வளர் சீர் திருவாவடுதுறை ஆதீனத்தாரின் கைங்கர்யத்தை முன்பே வாசித்திருக்கிறேன்.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  4. உலக முத்த தினமாம்!..
    இதையெல்லாம் எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது?..
    அதுவும் அனுக்கா படத்துடன்!...

    (குருவே.. அதெல்லாம் பல்லு இருக்கிறவங்களோட சமாச்சாரம்... பகோடா சாப்பிடுறாங்க!..
    அடே.. ஞான சூன்யம்!.. பல்லுக்கும் முத்தத்துக்கும் என்னடா சம்பந்தம்?...)

    நமக்கெதுக்குங்க ஊர் வம்பு?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதையெல்லாம் எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது?..//

      நமக்குதான் பேஸ்புக் இந்நாளில் அன்று வசதி கொடுக்கிறதே....    அதிலிருந்து பிடித்து விட வேண்டியதுதான்!

      பல்லில்லா விட்டால் எதிர் வாய்க்குள் இந்த வாய் மாட்டிக்கொண்டு விடும் என்று நினைக்கிறேன்.  இபப்டி எல்லாம் ஆராய்ச்சி செய்ய வைக்கப்படாது...

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

    செண்பகராமன் சிலிர்க்க வைத்தார். ஆதீனம் தகவல் முன்னரே படித்தது.

    முத்தக் கவிதைகள் நன்று. அனுஷ்கா - நெல்லை சொன்னது மாதிரி கொஞ்சம் ஓவர்....

    கும்பகோணம் பயணம் முடிவு... பூ மாலை படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட்.

      அனுஷ்...   ஆமாம் கொஞ்சம் ஓவராதான் குண்டாயிட்டார்!

      ஹா...   ஹா...  ஹா...


      நன்றி.

      நீக்கு
  6. இந்த ராஜாஜி விடயம் சமீபத்தில் யாருடைய பதிவிலோ படித்த நினைவு.

    முத்ததினம் போய் ஒரு வாரமாகி விட்டது இப்ப ஏன் ஞாபகப்படுத்துறீங்க ஜி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வாரமா?   ஜூலை ஆறாம் தேதி ஜி...  ரொம்ப நாளாச்சு...

      நன்றி ஜி கருத்துக்கு.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  8. 'இந்திய நாட்டின் எரிமலைத் தியாகிகள்' புத்தகத்தில் உள்ள செய்தி பதிவுக்கு நன்றி.
    செண்பக ராமன் பிள்ளை அவர்களை பற்றியும் முன்பு செய்தி தாளில் படித்து இருக்கிறேன்.
    //திருவாவடுதுறை ஆதீன மடத்தில் செங்கோல் வைபவம், கருப்பு - வெள்ளை புகைப்படமாக உள்ளது.//

    பார்த்து இருக்கிறேன்.

    முகநூல் கவிதை பகிர்வு அங்கும், இங்கும் படித்தேன்.


    //பட்டீஸ்வரம் கோவில் வாசலில் பார்த்த பூ மாலைகள்.மிக அழகாய் இருக்கின்றன இல்லை?//

    வெகு அழகு பட்டீஸ்வர அம்மன் நல்ல உயரம் ! மாலைகளை அம்மனின் (கற்பனையில்) கழுத்தில் போட்டு பார்த்தேன் அழகாய் ஜொலிக்கிறாள் அம்மன்.
    மலர் மாலைகள் படம் அழகு.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாலைகளை அம்மனின் (கற்பனையில்) கழுத்தில் போட்டு பார்த்தேன் அழகாய் ஜொலிக்கிறாள் அம்மன்//

      ஆஹா...   மானசீகமாக வணங்கி விட்டீர்கள்.  இதற்கு சக்தி அதிகம்.

      நீக்கு
  9. சுவாமிமலை படங்கள் அழகு.
    சுவாமிமலை யாசகர் செய்தி முகநூலில் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  10. இந்திய நாட்டின் எரிமலைத் தியாகிகள் - விமர்சனம் அருமை...

    அழகு... அழகு... அழகோ அழகு... - பூ மாலைகளை சொன்னேன்...!

    அப்புறம் ஜோதியில் முத்தமாய் + மொத்தமாய் கலந்த மாதிரி இருக்கே... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  11. ///கன்னி நீ சரி என்றால் கணத்துக்கொரு முத்தம்...//
    அச்சச்சோ அபச்சாரம் அபச்சாரம்.. இன்று வியாழக்கிழமை எல்லோ.. வெள்ளிக்கிழமையோ என ஜந்தேகப்பட்டிட்டேன்ன்....

    புத்தக விமர்சனம் நன்று..
    புதிதாக அறியும் ஒரு பெயர்.. “செண்பகராமன்”.. பாருங்கோ இதிலும் பெண்ணின் பெயர் முன்னால் வருது.. என் கம்பராமாயணத் கதை நினைவுக்கு வருதோ...:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செண்பகராமன் பெயர் தமிழகத்தில் ரொம்ப பிரபலம்.  எம்டன்.

      வாங்க அதிரா... 

      காதல் தவறா என்ன?  காதல் தவறில்லை என்றால் காதலிக்கு கொடுக்கும் முத்தமும் தவறில்லைதானே?!!

      நீக்கு
    2. தவறே இல்லை, கடசிவரை கைவிடாத பட்சத்தில் ஹா ஹா ஹா:))

      நீக்கு
    3. அதிரா, என் பெரியப்பா பெயர் செண்பகராமன் காவல் உதவி ஆய்வாளராக இருந்தார்கள்.
      சின்ன பெரியப்பா பேர் லட்சுமணபெருமாள்.

      நீக்கு
    4. ஓ அப்படியோ கோமதி அக்கா.. எனக்கு எல்லா ராமர் பெயரிலும் இந்த செண்பகராமன் எனும் பெயர் நன்கு பிடிச்சுப்போச்சூ.. ஏனெனில் எனக்கு செண்பகம் ரொம்பப் பிடிக்கும்...

      நீக்கு
  12. ///கன்னி நீ சரி என்றால் கணத்துக்கொரு முத்தம்...//
    அதுக்காக எதுக்கு இவ்ளோ லேட்ட் ஞானம்:)) ஹா ஹா ஹா.. ஒருவேளை யூலை 6 குடுத்ததுக்கு இன்று திரும்பக் கிடைத்திருக்குமோ என்னமோ எனக்கெதுக்கு உர் வம்ஸ்ஸ்ச்:)) மீ ரொம்ப நல்ல பொண்ணு..:))..

    கவிதை அழகு.., படம்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக்கட்டுரை முடித்து, கடவுள் கவிதை படித்து இன்றுதான் முத்தக்கவிதைக்கு இடம் கிடைத்தது!

      நீக்கு
  13. //கோபமாய்ப் பார்த்ததற்கு ஒரு முத்தம்

    கொஞ்சிப் பேசியதற்கும் ஒரு முத்தம்
    காதலாய்க் கனிந்ததற்கு ஒரு முத்தம்
    கடுமையாய் ஏசியதற்கும் ஒரு முத்தம்
    காக்க வைத்ததற்கு ஒரு முத்தம்
    கண்ணிலே நீர் வந்ததற்கு ஒரு முத்தம்
    பேசிக் கொண்டே இருந்ததற்கு ஓர் முத்தம்
    மௌனமாய்க் கொல்வதற்கும் ஒரு முத்தம்
    சிரித்து நின்றால் ஒரு முத்தம்
    சீறி விழுந்தாலும் ஒரு முத்தம்
    எத்தனை முத்தம் வேண்டுமடி
    காரணமே தேவையில்லை...
    கன்னி நீ சரி என்றால்
    கணத்துக்கொரு முத்தம்
    கணக்கில்லாமல் தரலாம்
    உலக முத்த தினமாம் இன்று! ///

    ஹா ஹா ஹா இப்பூடி எனில் இண்டைக்கு எங்கும் சண்டையே இருக்காது போலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சண்டையே இருக்காதா?

      "அதெல்லாம் ச்ரத்தான்யா...   மொதல்ல பள்ள விளக்கிட்டு வாய்யா..." என்று சண்டை வந்து விடக்கூடும்!!!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அதுவும் சரிதான், சிலரை என்ன பண்ணியும் சமாதானப்படுத்தவே முடியாது..

      நீக்கு
    3. // "அதெல்லாம் ச்ரத்தான்யா...   மொதல்ல பள்ள விளக்கிட்டு வாய்யா..." என்று சண்டை வந்து விடக்கூடும்!!!//

      அதெல்லாம் சர்த்தான்யா...   மொதல்ல பல்லை விளக்கிட்டு வாய்யா..." என்று படிக்கவும்!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா நான் ஸ்பீட்டாப் படிப்பதால ஸ்பெல்லிங் மிசுரேக்கு தெரியல்ல.. முதல் எழுத்தைப் பார்த்து அச்சொல்லை முடிவு பண்ணி அடுத்த சொல்லிற்கு தாவிடுவேன் பெரும்பாலும்.. நேர அவசரம்:))

      நீக்கு
    5. பொழைச்சேன்!  இருந்தாலும் பி தி தரவேண்டியது என் கடமை அல்லவா!

      நீக்கு
  14. அனுக்கா மேலே கோபுரம் கீழேயா ஹையோ ஹையோ... ஆண்டவா பழனிமலை முருகா கண் திறந்து பாரப்பா..:)).

    மிக அழகிய கோபுரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடக்கத்தில் தராமல் பயணத்தை பாதியில் வைத்தேன்.  வித்தியாசமாய் இருக்குமென்று நினைத்தேன்!

      நீக்கு
    2. சரி சரி விடுங்கோ.. இதிலிருந்தே தெரியுது ஆருக்கு முதலிடம் என்பது என நான் ஜொள்ள மாட்டேன்ன் ஹா ஹா ஹா:).

      நீக்கு
  15. //பிரம்மனை செயில்ல போட்டுட்டியே கண்ணு//
    ஹா ஹா ஹா செயில்ல தானே போட்டார்ர்:))

    நாரதர் உடனிருக்கும் உருவச் சிலைகள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேல் கொமெண்ட்டிலேயே சொல்லிட்டனே கோபுரம் அழகு என.. நீங்கதான் கவனிக்காமல் ஜம்ப் ஆகிறீங்க கர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  16. //பட்டீஸ்வரம் கோவில் வாசலில் பார்த்த பூ மாலைகள்.மிக அழகாய் இருக்கின்றன இல்லை?//
    ரொம்ப அழகு.. பிளாஸ்ரிக் பூக்கள் போல இருக்கு பார்க்க., ஆனா இந்தப் பூமாலைகள் வில்பட்டுவிடுமோ? விற்கப்படாவிட்டால் அவர்களின் கதி என்ன ஆகும்? பின்னேரம் ஆனாலே வாடிவிடுமே, மற்றநாள் வைத்திருக்க முடியாதெல்லோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பூக்கள் அவ்வளவு சீக்கிரம் வாடும் என்று தோன்றவில்லை.  நேரில் பார்க்க அவ்வளவு அழகு...   விலையும் அதற்கேற்றாற்போல!!!

      நீக்கு
  17. அந்தக் குண்டுக் குண்டாக இருப்பது என்ன பூ? தெரியுமோ?.. அதனால்தான் பூமாலையே அழகுபெறுது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நானும் அப்படிதான் நினைத்தேன்.  என்ன பூ என்று கேட்டு விடாதீர்கள்!

      நீக்கு
    2. //என்ன பூ என்று கேட்டு விடாதீர்கள்!//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  18. ஓகே நான் ஓட வேண்டி இருக்குது இப்போ.. பின்பு வந்து பார்க்கிறேன் என்ன நடக்கிறதென..:). என் செக் ஐ இன்னமும் காணமே கர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க...   வாங்க...  மெதுவா வாங்க...

      புள்ளைங்க எல்லாம் சாப்டுட்டு பெஞ்சுக்கு வந்துட்டாங்க பாருங்க....!!!!!!!

      நீக்கு
  19. வீரர் செண்பக ராமன் பற்றிய செய்திகளில் பல தவறான செய்திகள் உள்ளன. தரவுகள் இல்லாத விஷயங்களை எப்படி உண்மையான செய்திகள் என்று நம்பி வெளியிடுகிறீர்கள் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது எந்த அளவு உண்மை என்று இப்படி வெளியிட்டால்தானே தெரிகிறது ஜீவி ஸார்?  இது தினமலரில் வந்தது.  அந்தப் புத்தகம் எங்களிடம் இருந்தது அல்லது இருக்கிறது!

      நீக்கு
    2. பாரதியாரின் வேதனைகளைப் புரிந்து கொள்ளாமால் அவர் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விட்டுத் தான் கடலூர் கைதிலிருந்து தப்பித்தார் என்றும் புத்தகம் போட்டிருக்கிறவர்களும் இருக்கிறார்கள் தாம். அந்த மாதிரி பேர்வழிகளின் அறியச்மையை நாமும் பவ்யமாக எடுத்தோத வேண்டாமே என்று தான்.

      நீக்கு
    3. இந்த விபரங்கள் குறித்து திரு ஹரிகிருஷ்ணன் ஓர் புத்தகமாகவே போட்டிருக்கார். இதே போல் தான் வீர சாவர்க்காரையும் சொல்லுவார்கள். அவர்களைப் போல் தனிமைச்சிறையில் துன்பங்களை அனுபவித்திருந்தால் அதன் வேதனை புரியும். காந்தி, நேரு போன்றவர்கள் சகல சௌகரியங்களும் அமைந்த சிறைவாசம் தான் செய்தார்கள். உதவியாளர்கள் உண்டு. அவர்கள் விரும்பும் உணவை உண்ணலாம். தினசரி செய்தித்தாள் படிக்கலாம். காந்தி தன் மனைவியோடு தான் சிறைவாசம் அனுபவித்தார். புனே எரவாடா சிறையில்! சாத்துக்குடிச் சாறு, வேர்க்கடலை, ஆட்டுப்பால் என அவர் விரும்பிய உணவுகள் அவருக்குக் கொடுக்கப்பட்டன.

      நீக்கு
  20. செந்நீரால் தோய்த்தெடுக்கப் பட்ட தியாக வரலாறு நாம் பெற்ற சுதந்திரம். மன்னர் ஆட்சியின் அடையாளமான செங்கோலை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதான செய்தியைப் பிரதானப் படுத்தி...
    காலாதிகாலத்திற்கு நாம் பெற்ற சுதந்திரத்தின் பெருமையே இது தான் என்பது போல வரும் தலைமுறைக்கு திருப்பித் திருப்பிச் சொல்லி புளகாங்கிப்பதற்கு ஏதுமில்லை. சொல்ல வேண்டிய முக்கியமான வீரச் சரித்திரங்கள் வேறு பல இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  21. ஆ!ஆ!அனுஸ்கா வந்து விட்டார்.:)

    சுவாமி மலை தரிசனம்,பட்டீஸ்வரம் பூ மாலைகள் எல்லாம் காணகிடைத்தது.

    பதிலளிநீக்கு
  22. செண்பகராமன் புதுத் தகவல். ஜீவீ சார் மறுப்பையும் பார்த்தேன்.

    ராஜாஜியே ராஜ குருவாக செயல் பட்டிருக்கிறார். சாசனம் எழுதிக் கொடுத்தால் போதுமே. ஹாண்டிங்க் ஒவர் த பாட்டன் போல முடியாட்சி முடிந்தது முடிந்ததாகவே இருந்திருக்கலாம்.
    அந்த நேரத்தில் என்ன கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தார்களோ.

    ஸ்வாமிமலை முருகன் படங்கள் அழகு. காப்ஷன்ஸ் முக நூலில்
    பார்த்த நினைவு.
    அந்தப் பட்டீச்சுரம் மாலைகள் அழகாக இருந்தாலும் இயற்கையாக இல்லையே.
    துளசி ஒன்றுதான் நிஜமாக இருந்தது.

    நீங்கள் வாடாது என்று வேறு சொல்லிவிட்டீர்கள். ஹாஹா.

    முத்த தினமா. சரிதான்.
    உங்கள் கவிதைப்படி நாள் முழுவதும் இதற்கே
    சரியாகிவிடும். ஆனாலும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது நிஜப்பூக்களால் ஆன மாலைதான் அம்மா. 
       
      நன்றிம்மா.

      நீக்கு
  23. // சென்னை திரும்பும் வழியில் ஜெயங்கொண்டத்தில் ஒரு நல்ல ஹோட்டலில் நிறுத்தி இரவு உணவை முடித்துக்கொண்டு நள்ளிரவு சென்னையை அடைந்தோம்.// ஜெயங்கொண்டம் வழியா ஏன் வந்தீங்கனு புரியலையே? சென்னை -கும்பகோணம் வழித்தடத்தில் எனக்குத் தெரிந்து ஜெயங்கொண்டம் வருவதில்லை. ஜெயங்கொண்டம் அரியலூர் மாவட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயங்கொண்டம் என்பது கங்கை கொண்ட சோழபுரம் கீதா அக்கா.   நல்வரவு வாங்க...   வாங்க...

      நீக்கு
    2. அட? அது தெரிஞ்சு தானே கேட்டேன்? கும்பகோணம் -- சென்னை வழியில் ஜெயங்கொண்டம் எப்படி வந்தது?

      நீக்கு
    3. கொஞ்ச தூரம் தென்மேற்கே வந்து பின்னர் வட கிழக்கே பிரயாணம் செய்தீர்களா?

      நீக்கு
  24. செண்பகராமன் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கலை போல. அவர் "எம்டன்" கப்பலில் வந்தார் என்பதே ஆதாரபூர்வமான தகவல் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆஅ கீசாக்காவும் கம்பி மேலே... கீசாக்கா அங்கு குளிரேல்லையோ?

      நீக்கு
    2. இல்லை, தினம் தினம் மழை பெய்கிறது.

      நீக்கு
    3. //அவர் "எம்டன்" கப்பலில் வந்தார் என்பதே ஆதாரபூர்வமான தகவல் இல்லை.//

      என்ன அக்கா பொசுக்கென இப்படிச் சொல்லிட்டீங்க....

      நீக்கு
    4. ஆமாம், அவர் "எம்டன்" கப்பலில் வரவில்லை. அவருடைய தம்பியோ அல்லது பிள்ளை(?) யாரோ நினைவில் இல்லை. அவர் குறித்த ஆதாரபூர்வமான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள். சில வருடங்கள் முன்னர் மின் தமிழில் கூட இது குறித்த விவாதம் நடைபெற்றது. அது கிடைத்தால் திரட்டித் தருகிறேன்.

      நீக்கு
    5. அவர் (செண்பகராமன் பிள்ளை) அந்தக் கப்பலில் இருந்திருக்கலாம் என்பது ஓர் சாத்தியக்கூறு. அவ்வளவே! உறுதியாகத் தெரியாது. இது குறித்த விவாதங்கள் அடங்கிய மின் தமிழ்ப் பக்கங்களை இவ்வளவு நேரம் தேடினேன். கிடைக்கவில்லை.

      நீக்கு
  25. வல்லிம்மா, நடந்த வரலாற்று உண்மைகளை திசை திருப்ப
    இந்த மாதிரி எத்தனையோ காரியங்கள் நடந்திருக்கின்றன என்பது உண்மை தான். யாரும் யாருக்கும் தட்டில் வைத்து நீட்டியதில்லை பெற்ற சுதந்திரம். சுதந்திரப் போராட்டத்தின் தியாகமும் தழும்புகளும் இளம் தலைமுறைக்கு தெரிந்தால் தான் தேசபக்தி என்ற வார்த்தைக்கே அர்த்தம் புரியும். அணையா விளக்காய் சுதந்திர தீபம் ஒளி உமிழ்ந்து சிறக்கும்.
    அந்த ஆதங்கத்தில் வெளிப்பட்டதே இந்த மாதிரி உணர்வுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!