ஒரு காம்பவுண்டுக்குள் பல குடும்பங்கள். ஸ்டோர் என்று சொல்லப்படும் இதுபோன்ற குடியிருப்பில் மதுரையில் என் அத்தை குடி இருந்திருக்கிறார். மதுரை, திருச்சி, சேலம் போன்றபகுதிகளிலும் சென்னையிலும் இதுபோன்ற பல ஸ்டோர்கள் இருந்த காலம் உண்டு. இப்போதும் இருக்கிறதா, இல்லை அழித்து அபார்ட்மெண்ட் ஆக்கி விட்டார்களா தெரியாது!
ஆனால் மதுரையில் நான் பார்த்த ஸ்டோர் குடியிருப்பில் இந்தப் படத்தில் வருவது போன்ற பந்தத்தைப் பார்த்ததில்லை! விசு படம் என்பதால் உணர்வு வெள்ளங்களுக்குக் குறைவில்லை.
வீட்டிலேயே இல்லத் தலைவியாக இருக்க விரும்பும் ஒரு மனைவி, வருமானம் இல்லாமல் இருக்கும் நிலையில் கணவனின் விருப்பத்துக்கு மாறாய் வேலைக்குச் செல்ல இருக்கும் ஒரு மனைவி.. கணவன் ஒரு ஊரில், மனைவி ஒரு ஊரில் என்று வேலை பார்க்கும் நிலையில் பிரிந்திருப்பவர்கள், பொறுப்பில்லாத கணவனைக் கொண்ட குடும்பம்.. இப்படி அந்த குடித்தனத்தில் பல கதாபாத்திரங்கள்...
குடித்தனங்களுக்குள் ரகசியம் என்று ஒன்று வைத்துக்கொள்ள முடியாது! ஒருவருக்கொருவர் உதவியாய்...
முன்பு ஒருமுறை ஜீவனாம்சம் படம் பார்த்தபோது விவாகரத்தை பெரிய விஷயமாக சொல்லி படம் எடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. அப்போதெல்லாம் விவாகரத்ததும், ஜீவனாம்சமும் கொஞ்சம் சமூக அதிர்ச்சி தந்த விஷயங்கள் போல...
அதுபோல நடுத்தர வர்க்கத்துக் கஷ்டங்களை சொல்லும் இந்தப் படத்தில் பெண் வேலைக்குப் போகும் சிரமம் பற்றி இருவேறாக சொல்லப்படுகிறது.
1981இல் வெளிவந்த திரைப்படம். குடும்பம் ஒரு கதம்பம். அப்போது இந்த சந்த அமைப்பில் சில படங்கள் வந்தன. ஆரம்பம் சம்சாரம் அது மின்சாரம் என்று நினைக்கிறேன். அப்புறம் காவலன் அவன் கோவலன், ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, பெண்மணி அவள் கண்மணி, திருமதி ஒரு வெகுமதி, வரவு நல்ல உறவு = பெரும்பாலும் விசு படங்கள்!
இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை விசு, ஆனால் இயக்கம் எஸ் பி முத்துராமன்.
விசு, கமலா காமேஷ், எஸ் வி சேகர், சுஹாசினி, பிரதாப் போத்தன், சுமலதா என்று நடிகர்கள் பட்டாளம். இந்தப் படத்தில் விசு சொல்லும் சில வசனங்கள் ரொம்பப் பிரபலம். உதாரணமாக "பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்...."
கண்ணதாசன் பாடலுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். அவரே பாடியிருக்கும் பாடல். எம் எஸ் விஸ்வநாதன் பாடியிருக்கும் பாடல்களில் பல பாடல்கள் எனக்குப்பிடிக்கும். இக்கரைக்கு அக்கரைப் பச்சை (ஏற்கெனவே பகிர்ந்து விட்டேன்) சொல்லத்தான் நினைக்கிறேன், கண்டதைச் சொல்லுகிறேன் (பகிர்ந்தாச்சு) ஜெகமே தந்திரம் மனிதன் யந்திரம், போன்ற பாடல்களை சொல்லலாம்.
குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம்
தினமும் மதிமயங்கும் பல எண்ணம் பல எண்ணம்
தேவன் ஒரு பாதை தேவி ஒரு பாதை குழந்தை ஒருபாதை
காலம் செய்யும் பெரும் லீலை
மனையாள் பணிசெய்தால் மணவாளன் வாழலாம்
அதிலே வருமானம் ஆனாலும் அவமானம்
வீடுகள் தோறும் இங்கே இதுதானே கேள்வி இன்று
விடிந்தால் ஒரு எண்ணம் எல்லோர்க்கும் தனியுள்ளம்
கணவன் பெரிதென்று மணந்தார்கள் மங்கையர்கள்
உழைப்பாள் அவளென்று மணந்தார்கள் நாயகர்கள்
பொருளாதாரத்திலே பொருள்தானா தாரம் இன்று
பொருளாதாரத்திலே பொருள்தானா தாரம் இன்று
இருவர் உழைத்தால்தான் இந்நாளில் பசிதீரும்
இரண்டு குதிரையிலே ஒரு மனிதன் போவதென்ன
இரண்டு நினைவுகளிலே சில மனிதர் வாழ்வதென்ன
காலங்கள்தோறும் அவர் சிந்தனையில் மாற்றமென்ன
மனிதன் நினைக்கின்றான் இறைவன் அதை மாற்றுகின்றான்
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கங்களுடன் இந்த நாள் அனைவருக்கும் இனிய மகிழ்வான நாளாக அமைய என்னுடைய பிராத்தனைகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலை வணக்கம் கமலா அக்கா...
நீக்குபிரார்த்தனைகளுக்கு நன்றி.
வாங்க... வாங்க...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் நன்றாக இருக்கும். அப்போதெல்லாம் விசு அவர்களின் படங்கள், நல்ல கதையம்சத்தை உடையதாக இருக்கும். என்ன.. ஒரே மாதிரி குடும்ப படமாக தொடர்ந்து தந்து விட்டதில், அதுவும் கடைசியில் அவர் படங்களுக்கு ஒரு தொய்வு வந்து விட்டது.
இந்த படம் பாட்டு கேட்டிருக்கிறேன். படமும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். நல்ல கதையோட்டத்துடன் இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று. பாடலை வரிகளில் படித்து மீண்டும் ரசித்தேன். பாடல் பிறகு நிதானமாக கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் கமலா அக்கா..
நீக்குஅவரின் சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் லட்சுமி பேசும் வசனம் ரொம்ப பிரபலம். குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களைமையமாக வைத்தே படம் எடுத்து வெற்றி கண்டவர் அவர்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஆஹா.... இன்றைக்கு குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் வரும் பாடலா? நல்ல படம். சமீபத்தில் கூட படத்தின் சில காட்சிகள் யூவில் பார்த்தேன்.
வாங்க வெங்கட்... காலை வணக்கம்.
நீக்குஇங்கும் சில சுவாரஸ்யமான காட்சிகளினைத்திருக்கிறேன். பார்த்தீர்களா?
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
நீக்குநல்ல பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் ஸ்ரீராம்.
நல்ல படம் கூட. விசுவின் நடிப்பு சூப்பர். கமலா காமேஷ் +அழுகை
பரிதாபம். மனோரமாவின் மகன் பூபதிக்கு நிறைய சான்ஸ் கொடுத்தார்
விசு. பிடித்த படம் மணல் கயிறு.
இன்னமும் பார்த்து சிரிப்பேன்..
முன்பு , திருவல்லிக்கேணியில் இது போலக் குடித்தனகள்
பார்த்திருக்கிறேன்.
ஒற்றுமையாக இருந்தார்களோ தெரியாது. இருந்திருப்பார்கள்.
ஆனால் சினிமாவுக்குக் கும்பலாகப்
போவார்கள்.
இந்தப் படத்துக்குப் பிறகு வந்த படங்களில் கதவு கதவாகத் திறக்கும் ஒவ்வொருவராக வெளியே
வருவார்கள்.
இந்தப் பாடல் காட்சி நன்றாக இருக்கும். விஸ்வனாதன் சார்
குரலுக்குக் கேட்பானேன்.
கைகொட்டிச் சிரிப்பார்கள் பாட்டை விட்டு விட்டீர்களே.ஹாஹ்ஹா.
//கைகொட்டிச் சிரிப்பார்கள்//
நீக்குஇது எம்எஸ்வி பாடியதா ?
ஷேக் முகம்மது இல்லையா ?
எனக்கு உறுதியாக தெரியவில்லை அம்மா.
>> கைகொட்டிச் சிரிப்பார்கள் <<<
நீக்குஇந்தப் பாடல் காயல் ஷேக் முகம்மது பாடிய பாடல்.. அபூர்வராகங்கள் படத்தில்!..
ஆமாம். அது எம் எஸ் வி பாடிய பாடல் அல்ல.
நீக்குசிவகாமியின் சபதம் படத்திலொரு பாடல் உண்டு "எதற்கும் ஒரு காலம் உண்டு... பொறுத்திரு மகளே... இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே.." நல்ல பாடல்.
True Sriram. my mistake.
நீக்குகுடும்பம் ஒரு கதம்பம் பாடல் நல்ல அர்த்தமுள்ள பாடல்.... நீங்கள் பகிர்ந்து கொண்ட பாடல் நல்ல பாடல்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஇப்பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது ஃபேவரிட் லிஸ்டில் உள்ளது.
பதிலளிநீக்கு1981-லேயே இப்பாடல் வரிகளின் அர்த்தமுள்ள, ஆழமான வரிகள் என்னை பிரமிக்க வைத்தன... இதை எம்எஸ்வி குரலில் கணீரென்று பாடியதாலேயே மேலும் சிறப்பு.
ஆமாம். கண்ணதாசனின் அழகான வரிகள். நன்றி கில்லர்ஜி.
நீக்குபழைய ஆல்பங்களைப் புரட்டுகிற மாதிரி நினைவலைகளைப் புரட்டிப் பார்த்தால் இன்னெதென்று சட்டென்று புரிபடாத இயல்பான சந்தோஷமே மனத்தில் புரண்டது.
பதிலளிநீக்குஇப்பொழுது இந்தப் படத்தையெல்லாம் திரையிட்டால் எந்த அளவிற்கு மக்கள் ரசிப்பார்கள் தெரியவில்லை. ஒரு மியூசியத்துள் நுழைந்தவுடன்
காணுகிற அன்றைய கலாச்சார நேர்த்திக்குக் கொடுக்கிற குறைந்த பட்ச மரியாதையைக் கொடுத்தால் கூட போதும்.
இப்போதும் இது மக்களால் ரசிக்கப்படும் படமே ஜீவி ஸார்.
நீக்குஅப்போ தொலைக்காட்சி சீரியல் பாக்கறவங்க, திரைப்பட தியேட்டருக்குத்
நீக்குதிரும்பிட்டாங்களா, ஸ்ரீராம்?
நெஜமாலுமே நல்ல காலம் பொறந்திடுச்சா?..
என்னவொரு டாப் கிளாஸ் பாடலைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். வரிகளை வாசிக்கும்போது எம் எஸ் வி அவர்களின் கணீர்க் குரல்.
பதிலளிநீக்குஅர்த்தம் பொதிந்த வரிகள்
ஆஆஆஆ வைகைப் புயல் வடநாட்டை விட்டு தென்னாட்டுக்குள் புகுந்துவிட்டதென பிபிசில சொல்லிச்சினம் அது சரிதான்போல:) ஹா ஹா ஹா
நீக்குவாங்க நெல்லை, வாங்க அதிரா...
நீக்குஉங்களுக்கும் இது பிடித்த பாடலாயிருப்பதில் மகிழ்ச்சி.
"ஸ்டோர்" என்பதைப் படித்ததும் கோபு சார் (பழம் பெரும்-ஹாஹா அது என்ன பழம்பெரும்னு கேட்கப்படாது... திருச்சி வை.கோபாலகிருஷ்ணன் சார்) எழுதிய இடுகைகள் நினைவுக்கு வந்தன. அவரே அத்தகைய ஸ்டோர்ஸில் வாழ்ந்தவர் தாமே
பதிலளிநீக்கு///கோபு சார்///
நீக்குஇதாரிது?:) இவர் எங்கிருக்கிறார்ர்??? என்ன சாப்பிடுறார்?:) ஹா ஹா ஹா
கோபு ஸார் எழுதி இருக்கிறார் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ஸார் எழுதி படித்திருக்கிறேன்.
நீக்கு//இதாரிது?:) இவர் எங்கிருக்கிறார்ர்??? என்ன சாப்பிடுறார்?:) //
நீக்குஅதோ அந்த தெரு முக்குல ஒரு வடைக்கடை இருக்கு இல்ல... அங்க கேட்டுப்பாருங்க... விவரம் தெரியும்.
ஹா ஹா ஹா அந்த உச்சிப்பிள்ளையார் கோயில் வீதியில் இருக்கும் குடும்பத்துக்கே தெரியேல்லையாம் :)), வடைக்கடைக்காரருக்கே தெரியப்போகுது ஹையோ என்னைக் காட்டிக் குடுத்திடாதீங்கொ ஸ்ரீராம்:))
நீக்குவிசுவின் படங்களில் நான் மிகவும் ரசித்த படம் இது.
பதிலளிநீக்குநன்றி TBRJ ஸார்.
நீக்குஅருமையான பாடல்... படமும் அவ்வாறே...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா... வாங்க...
நீக்குபாடல் நல்ல பாடல் கேட்டு இருக்கிறேன். படமும் தொலைக்காட்சியில் வைத்த போது பார்த்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குபிரிந்து வாழும் கணவன் கடிதம் மூலம் வாழ்வதை எல்லோரும் அமர்ந்து கேட்பது கமலா காமேஷ் அவரை எங்கே சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்கும் போது கண்ணில் நம்மை அறியாமல் கண்ணீர் வந்து விடும். அவருக்கு சமைத்து கொடுத்தால் காசு கிடைக்குமே என்று அவர் எதிர்ப்பார்ப்பு!
பொறுப்பில்லா கணவர், மகனை வைத்துக் கொண்டு அவர் படும் பாடு
உன் அப்பா இருப்பதால்தான் என்னை சுமங்கலி பூஜை சமையலுக்கு கூப்பிடுகிறார்கள் என்று அவர் சொல்லும் போது மிகவும் வேதனையாக இருக்கும்.
பாடலை கேட்டேன்.
ஓஒ கோமதி அக்கா படக்கதை சொல்றா.. நல்ல படக்கதைபோலதான் தெரியுது..... சே சே ரிவியூ எழுதியிருப்பேனே முன்னமே தெரிஞ்சிருந்தால்:)..
நீக்குகமலா காமேஷுக்கும் கண்ணீருக்கும் அவ்வளவு நெருக்கம்!!
நீக்குஆனால் நீங்கள் சொல்வது எல்லாம் நல்ல அக்கட்சிகள்தான். எல்லோரும் ரசித்த காட்சிகள்.
விசு படம் எல்லாமே நல்ல கதை அம்சத்துடன் ரசிக்கும்படி இருக்குமே அதிரா.. பார்த்திருப்பீர்களே...
நீக்குசில படங்கள் பார்த்ததுண்டு ஸ்ரீராம், அவரின் படங்கள் பார்க்கலாம்.. சம்சாரம் அது மின்சாரம், அவளும் சுமங்கலிதான்[கார்த்திக்] பார்த்தேன்.
நீக்குகாணொளியும் அருமை. மீண்டும் பார்த்தேன்.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்....
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...
நீக்குஇந்தப் படம் வெளி வந்த அந்தக் கால கட்டத்தில் சூழ்நிலை அப்படிப் பட்டது தான்...
பதிலளிநீக்குஆனால் இன்றைக்கு அப்படி இல்லையே!...
கணவனும் மனைவியும் இன்னும் இன்னும் என்று சம்பாதித்தாலும்
ஆன பயன் என்ன?.. என்று தெரியவில்லையே...
நிம்மதியை சந்தோஷமாக அனுபவிக்கின்றார்களா என்றால் அப்படியெல்லாம் இல்லை...
>>> அப்போதெல்லாம் விவாகரத்தும்,
ஜீவனாம்சமும் சமூகத்திற்கு அதிர்ச்சி தந்த விஷயங்கள்..<<<
இன்றைக்குத் தெருவுக்குத் தெரு சர்வசாதாரணமாகி விட்ட விஷயங்கள்...
அதற்கு என்ன காரணம்?...
பொருளாதாரத்திலே பொருள் தானா தாரம் இன்று?..
கவியரசர் கேட்டு வைத்தார் கேள்வியை..
விடை தான் இல்லை நம்மிடம்!..
ஆமாம் துரை ஸார்...
நீக்குநான் ஜீவனாம்சம் படம் பற்றி ஒரு பதிவு எழுத எண்ணியிருந்தேன் முன்பு... அப்படியே போச்சு! 'இருவர் உழைத்தால்தான் இந்நாளில் பசிதீரும்' என்கிற வரியும் பொருள் நிறைந்தது. ரசிக்கக்கூடியது.
ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதுவும் என்னுடைய பாட்டூஊஊஊஊஊ.... முன்பு என்பக்கத்தில் போட்டிட்டேனே:)...
பதிலளிநீக்குஅருமையான தத்துவப் பாடல் , எழுதியது ஆரூஊ அதிராட அங்கிள் எல்லோ:)
ஓ.... முன்னாலேயே போட்டிருந்தீர்களா நீங்கள்?
நீக்குவாங்க அதிரா... நல்ல பாடலை எல்லோரும் ரசிக்கலாம்!
///இரண்டு குதிரையிலே ஒரு மனிதன் போவதென்ன
பதிலளிநீக்குஇரண்டு நினைவுகளிலே சில மனிதர் வாழ்வதென்ன ///
மிகவும் பிடித்த, ரசிக்கும் வசனம்...
எல்லா வரிகளையுமே ரசிக்கலாம் இல்லை?
நீக்குஇன்றே படம் பார்க்கப்போறேன்ன்ன் .... நிறையப் படப் பெயர்கள் சொல்லியிருக்கிறீங்க... கதைப்புத்தகப் பெயர்கள்போல நன்றாக இருக்குது எல்லாம்.... படம் பார்க்கும் ஆசை வருது.
பதிலளிநீக்குஎல்லாப்படங்களையும் நம்பிப் பார்க்கலாம் விக தொக தவிர!
நீக்கு//விக தொக தவிர!//
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு நேரடியாகச் சொன்னாலே புரியாது:) இதில கோர்ட் வேர்ட் டா ஹா ஹா ஹா..
விடுகதை தொடர்கதை!
நீக்குபானா வரிசையில் சிவாஜிகணேசன்..பீம்சிங் படங்கள் போல விசுவின் பல படங்கள் மிகவும் அருமையாக ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தன. நினைவுகூர்ந்து கூறிய விதம் அருமை.
பதிலளிநீக்குஉண்மைதான் முனைவரஜம்புலிங்கம் ஸார்.
நீக்குநன்றி.
அது என்னவோ தெரியவில்லை ஒரு படத்தில் நாகேஷ் மாது வந்திருக்கிறேனென்பார் அதுதான் நினைவுக்கு வந்தது குடும்பப்படங்கள் சிலவற்றில் சில கருத்துகள் எடுபடாமல் போய் இருக்கின்றன
பதிலளிநீக்குஅது எதிர்நீச்சல் படம் ஜி எம் பி ஸார்... கேபி படம்.
நீக்குமாது வந்திருக்கேன்னு சொல்வது வயிற்றை சங்கடப்படுத்தும். ஜிஎம் பி சார்.
பதிலளிநீக்குஆமாம். நாகேஷ் செம நடிப்பு.
நீக்குஆஹா ஷேக் முஹம்மதுவா அந்தப் பாடல். இத்தனை நாட்களாக
பதிலளிநீக்குநான் நினைத்ததே தவறாகிவிட்டதே. நன்றி துரை, தேவகோட்டைஜி,
ஸ்ரீராம்.
அதனால் என்ன அம்மா...
நீக்குரேவதி, உங்களோட வாட்சப்பை நீங்க பார்க்கவே மாட்டீங்களா? :(
நீக்குpaaththutten paa.Geetha ma
நீக்குவெள்ளி வணக்கம். பாடல்பற்றி நீண்ட அலசல்கள்.
பதிலளிநீக்குஅநேகமாக விசுவின் எல்லாப் படங்களும் தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். இப்போதெல்லாம் அத்தகைய படங்கள் ஓடாது என்றே நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகுடும்பக் கதைக்கு 'விசு' தான் சிறப்பு
பதிலளிநீக்கு