செவ்வாய், 17 செப்டம்பர், 2019

கேட்டு வாங்கிப்போடும் கதை : மாயமனம் - ரேவதி நரசிம்மன்.

மாயமனம்
ரேவதி நரசிம்மன் 



 செல்லி, செல்லிம்மா எழுந்திருடா.   ஞாயிற்றுக்கிழமை தூங்கினது போதும்

இன்னிக்கு நாம் தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலுக்குப் போகணுமே.  வா வா. குளித்து உடை மாத்திக்கோ.

' நீ காமாட்சி கோவிலுக்கும் அழைச்சுப் போனாதான்
நான் வருவேன். ..'

'சரி,, இரண்டு கோவிலுக்கும் போலாம்.'

வில்வண்டி கூட வந்துட்டது.  மாட்டு சத்தமும் சலங்கை சத்தமும் கேட்க விழித்துக் கொண்ட செல்லாவுக்கு தான் இருக்கும் இடம் புரியவில்லை.  'அம்மா,அம்மா' என்று தீனக் குரல் எழுப்பினாலும் அம்மாவைக் காணவில்லை.

இன்னோரு குரல்தான் 'அம்மா எழுந்திருங்க.. எத்தனை நேரம் தூங்குவீங்க.
இதோ மருமகள் கஞ்சி கொண்டு வந்துட்டாங்க. வாயத் திறங்கமா ' என்று அழைக்கும் இன்னோரு குரல்.

தன்னிச்சையாகத் திறந்த வாயில், கஞ்சி ஊறியது. விழுங்கவும் முடியவில்லை.
அரைமணி கழித்தே சாப்பாட்டு வேலை முடிந்தது.  செல்லி என்கிற செல்லாப் பாட்டிக்கு 85 வயது.  அவள் மனம்  சென்று வந்ததோ கடந்த காலங்கள்.

வைத்தியர் நரம்புத் தளர்ச்சிக்குக் கொடுத்த மருந்து வேலை செய்ய மீண்டும் துயில்.

அவளத்தட்டி எழுப்பியது கணவரின் குரல்.  'தூங்க விடாமல் என்னன்னா தொந்தரவு.  குழந்தையைப் பார்த்துக்கோங்கோ.  நான் தூங்கறேன்'

'அம்மா நான்தான் சின்னி மா. உன் பையன்.  எழுந்திருமா. உன் பேரன்களைப் பார்....'



உடனே மழலைக் குரல்கள்.   'பாட்டி.. பாட்டி...  நான் பாடட்டுமா'  என்று கட்டிலில் ஏறியது குழந்தை.

'பள்ளிக்கூடம் போலியா நீ' என்று வார்த்தைகள் வெளிவந்ததும் ஒரே கரகோஷம்.
'பாட்டிக்கு  சதீஷைத் தெரிந்துவிட்டது.  ஓ ஷி இஸ் பெட்டெர் டுடே' என்ற ஆர்ப்பரிப்பு.

அவள் தன் மகன் என்று நினைத்துச் சொன்ன சொல்.  குழந்தையின் கன்னங்களை வருடிக் கொடுத்தபடியே துயிலில் ஆழ்ந்தாள் பாட்டி.

உடன் வந்த நினைவில்,  'செங்கமலம் கிணற்றங்கரையில் விழுந்துட்டா.  யாரது பாசியை விட்டு வைத்தது. குழந்தை விழுந்துவிட்டாளே.  வீட்டுப் பொண்களுக்கு விதரணை வேண்டாமா'  என்று ஒலித்த கணவரின் குரல்.

உடல் எல்லாம் நடுங்கியது.

'சாப்பாடு ,சமையல் தூக்கம் ,பன்னீர் மாதிரி ரசம் பண்ணான்னு பெருமை.
மாமியாரின் அதட்டல். குழந்தையை வண்டியில் அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்ததென்னவோ செல்லிப்பாட்டிதான்.

தொண்டை நிறைய துக்கம் அழுத்த விசும்பினாள் பாட்டி. 

 அருகிலிருந்த தலையணையைத் தட்டிக் கொடுத்து 'ஒண்ணுமில்லடா தூங்கு
அம்மா பார்த்துக்கறேன்'  நிஜக் கண்ணீர் இருபுறம் வழிய, துடைத்து விட்டது மருமகளின் கரங்கள்.

'ஒண்ணும் இல்லமா.  நாங்க எல்லாரும் சௌக்கியம்'  என்று தட்டிக் கொடுத்தாள்  நிர்மலா.

'அம்மாக்குப் பழைய பாட்டுகளைப் போட்டு வைக்கலாம். மனசுக்கு நிம்மதி கிடைக்கும்.'  இது சின்ன மகன்.  '1950,60 வருடப்  பாட்டுக்களை போடு.  
அம்மாவுக்குப் பிடிக்கும்.'


இது ஒரு நாள் நிகழ்வு.  இது போல பல வருடங்களைத் தாண்டியே உடல் நலம் நலிந்து,மகிழ்ச்சிக்கும்,துக்கத்துக்கும்,கற்பனை செய்த பயங்கரகளுக்கும் பயந்து,மகிழ்ந்து,அழுது தன் உலகத்தில் வாழ்ந்து மறைந்தாள் செல்லிப்பாட்டி .

அவளை விடக் கலங்கியது அவள் குடும்பம் தான்.  கண்முன்னே உயிரோடு இருந்த, ஆனால் தங்களை மறந்த அன்னையைப் பார்க்கத்தான் சகிக்கவில்லை.

இறைவன் நம்மைக் காக்கட்டும்.

பல நினைவுகளைக் கொண்டு வந்த பாட்டி படத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

62 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆமாம்.

      என் கவிதைக்குஅந்தப் படத்தை  பேஸ்புக்கில் பார்த்ததுமே அம்மா எழுதி அனுப்பிய கதை இது.

      நீக்கு
  2. அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவும், வணக்கமும், பிரார்த்தனைகளுக்கு நன்றியும் கீதா அக்கா...  வாங்க.. வாங்க...

      நீக்கு
  3. இதைப் படிச்சதுமே இது போல் எல்லாம் இல்லாமல் நல்லபடியாகப் போய்ச் சேர வேண்டும் என்னும் ஆசையே மேலோங்குகிறது. மற்றதுக்குப் பின்னர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா மா.
      இருமல் தேவலையா. உண்மைதான்.யாருக்கும் எந்த விதத் தொந்தரவும் வரவேண்டாம்.
      எல்லோரும் நலமாக இருப்போம்.

      நீக்கு
  4. கடந்த காலத்திற்கும் நிகழுக்கும் ஊடாடும் உயிர் வலி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ஸ்ரீராம் ,
      இன்று இந்தக் கதையா.
      மறந்து கூடப்போய்விட்டேன்மா.

      அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      இந்தச் செல்லாப்பாட்டி போல எத்தனை பெண்மணிகளையும்
      முதியவர்களையும் பார்க்க நேருகிறது.

      இந்த நிகழ் காலத்தில் தான் இது போல நிறையக் காதில் விழுகிறது.

      முன்னெல்லாம் இப்படிக் கிடையாதே.

      மாப்பிள்ளையின் அம்மாவுக்கும் சிலகாலம் இது போலக் கழிந்தது.
      கீதா சொல்வது போல வரக்கூடாது.
      பகவான் அருளட்டும்.
      ஸ்ரீராம் உங்கள் படமும் கவிதையும்
      என்னை இந்தக் கதையை உடனே எழுத வைத்தன.
      நிறைய பேர் படித்து வருத்தப் படுவார்களோ என்று யோசனை வருகிறது.

      வாழ்வில் நிகழும் நடப்புகளில் ஒன்றாக
      எடுத்துக் கொள்ளும்படி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      எங்களுக்கு இரவாகிவிட்டது. மீண்டும் இறைவன் கருணையில்
      காலை சந்திக்கலாம்.

      நீக்கு
    2. அன்பு ரிஷபன் சார். நீங்கள் சொல்வதுதான் உண்மை.
      எங்கிருந்து வந்தது இந்த நோய்.

      நீக்கு
  5. கதையோ... உண்மையோ...
    மனம் ரணம் ஆகின்றது...

    மற்றவைகளுக்கு இறைவனே துணை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு துரை, இனிய மாலை வணக்கம்.
      நிலையான மனமும் கலையாத அறிவும் அன்னை அபிராமி வழங்குவாள் மா. வருத்தம் வேண்டாம்.

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    வல்லிம்மா எழுதிய கதை.... நன்று.

    பல வீடுகளில் இது தான் நிதர்சனம். யாருக்கும் இப்படி வலி இல்லாமல் இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அன்பு வெங்கட்,
      நம் மனமே உறக்கத்தில் ஒரு இடம் விழிப்பில் ஒரு இடம் என்று போய் வரௌவதை இந்த வியாதி நிரந்தரமாக்கி விடுகிறது.
      காரணிகள் பலவாக இருந்தாலும்,
      அவதி யுறுவதென்னவோ உற்றவர்கள் தான். இறைவன் காப்பான்.

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம். வல்லிம்மா பெயரைப் பார்த்தவுடனேயே மனசில் 'அடேடே' என்று ஒரு கூத்தாட்டம்.

    கதைத் தலைப்பு? மாய மனம். அடடா! இந்த மனம் தான் எத்தனை விதமாய் பெயர் பூணுகிறது என்று பிடிபடாத ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ஜீவி சார் ,
      வணக்கம்.
      ஸ்ரீராம் கொடுத்த படமும்,கவிதையும்
      மனதை உலுக்கியதுதான்.
      இந்தக் கதையின் ஆதாரம்.
      எங்கள் அத்தை மகனில்
      ஆரம்பித்த கதை. ப்ரில்லியண்ட் என்ற வார்த்தைக்கு அவன் தான் அடையாளம்.

      நான் அவனைப் போய்ப் பார்க்கவே இல்லை.
      அவனுடைய மகள்,வரவேண்டாம் அப்பா மிகவும் சிரமப் படுகிறார் என்று சொல்லி விட்டாள்.

      அதற்குப் பிறகு நிறைய கேட்டுவிட்டேன்.
      மிக மிக நன்றி மா.

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய மாலை வணக்கம் கோமதி. எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்.
      மனம் அலையாமல் அன்னை அருள வேண்டும்.

      நீக்கு
  9. அந்த ஒரு படத்திற்கு தான் -- சொல்லப் போனால் - அந்த பாட்டு தலை சாய்த்து ஒருக்களித்துப் படுத்திருத்தை கண்ணுற்ற தருணத்திலேயே கவிதை, கதை என்று இரக்கம் அல்லவோ சுரந்திருக்கிறது?.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ஜீவி சார். அந்தப் படம் முதலில் என் அம்மாவைத்தான் நினைவுக்குக் கொண்டு வந்தது.
      இதயம் பாதிக்கப் பட்டவுடன், சில நாட்களே
      இந்த மறதி ஆட்கொண்டு பத்தே நாட்களில்
      பறந்துவிட்டாள். Very Powerful Image.எழுத்து உருவாவது,//என்னைப் பொறுத்தவரை//
      மனம் அதிர்ச்சி அடையும் போதுதான்.
      அனேக மனங்களுக்கு உல்லாசமே
      கவிதையாக வடிவெடுக்கிறது. ஸ்ரீராமின் மன வருத்தம் இன்னோரு
      அலையாக நம்மை வந்தடைகிறது.

      நீக்கு
  10. பதில்கள்
    1. மாய மனம். அடடா! இந்த மனம் தான் எத்தனை விதமாய் பெயர் பூணுகிறது என்று பிடிபடாத ஆச்சரியம்.//மாய மான் பிடிபட்டு உயிர் துறந்தது ஜீவி சார்.
      இந்த மனம் பிடிக்குள் அடங்கவில்லை. நனறி நன்றி.

      நீக்கு
  11. படம், கதைக்களமானதறிந்து மகிழ்ச்சி. உணர்வுபூர்வமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  12. லாசராவிற்கு வாய்த்திருந்திருந்த அந்த எழுத்து நடை கொடுப்பினை
    வல்லிம்மாவிற்கும் வாய்த்திருப்பது இறைவனின் கொடையே. வார்த்தைகள் வரி வரியாய் நீண்டு மனசில் தோய்ந்து போனது. பார்த்த ஒரு காட்சி ஏற்கனவே மனசில் பதிந்திருந்த இன்னொன்றை விடுவிப்பது மனத்திற்கே வாய்த்த அதிசயம். பாட்டி அந்த குழந்தையின் கன்னத்தை வருடும் போதே மனம் நெகிழ்ந்து போனது, வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அன்பு ஜீவி சார்,
      உங்கள் பாராட்டுக்கு நான் தகுதியான பாத்திரமா
      என்று தெரியவில்லை.

      படித்த கதைகளின் எழுத்து என்னை ஆக்ரமித்து, நானே எழுதும் மீண்டும் வேறு ஒரு
      உருக் கொள்கிறது என்றே நினைக்கிறேன்.
      லாசரா நான் அதிகம் படித்ததில்லை. கலைமகளில்
      வந்த போது உள் வாங்கி இருக்கலாம்.
      உங்கள் மனமார்ந்த வார்த்தைகளுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
      நன்றி சார்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. அன்பு தனபாலன். கலங்க வேண்டாம். அம்மா.
      நூற்றில் ஐவருக்கு இது வரலாம்.
      என் இரண்டு பாட்டிகளும் , புகுந்த வீட்டுப் பாட்டியும்
      88,90 என்று இருந்து விட்டுத்தான்
      போனார்கள். மன சிதைவு எல்லாம் இல்லாம்ல்,
      முதுமையினால் இறந்தார்கள்.
      கவலை வேண்டாம்மா. நலமே வாழ்க,

      நீக்கு
  14. ஹைக்கூ கவிதை மாதிரி ஷார்ட்டா இருந்தாலும் மனதை தொட்ட கதை...

    பதிலளிநீக்கு
  15. காலையிலேயே கலக்கம் கொடுக்கும் கதையா?

    ஆனா...ஜீவன் உடலை விட்டு எப்படியும் போய்த்தான் ஆகணும். சிலருக்கு இப்படி வாய்த்துவிடுகிறது போலிருக்கு. அன்பான உறவுகள் இருந்தால், சாகரத்தைக் கடந்துவிடுவது சுலபம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு முரளி மா.
      மன்னிக்கணும் மா. அப்போது அந்தப் படம்
      என்னை மிகவும் பாதித்தது.
      உடனே இந்த நோயால் ஆக்கிரமிக்கப் பட்ட
      நெருங்கிய ஒரு அத்திம்பேர், ஒரு அத்தை, ஒரு சம்பந்தி
      எல்லோரும் என்னை எழுத வைத்தார்கள்.

      எல்லோரையும் பிடிப்பதில்லை இந்தக் கலவரம்.
      நாம் நன்றாக இருப்போம்.

      நீக்கு
  16. நினைவுகளில் வாழும் முதியவர்.அவரை அன்பாக பார்த்துக் கொள்ளும், மகன்கள், மருமகள்கள், பேரன் பேத்தி இருப்பது கொடுத்து வைத்தவர். நம்மை அன்புடன் பார்க்க எத்தனை அன்பான நெஞ்சங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமலே போய் விட்டது தான் வருத்தம்.

    இப்படியும் நடக்கிறது என்பதை அக்காவின் கதை சொல்கிறது.
    அருமையாக கதை ஆக்கம் செய்து இருக்கிறார்கள்.
    வாழ்த்துக்கள் அக்கா. ஸ்ரீராம் கவிதையும் படமும் அக்காவை எழுத வைத்தது அதற்கு ஸ்ரீராமுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கோமதி மா. அந்த வகையில்
      உங்கள் மாமியார், மாமனாரைக் கவனித்துக்
      கொண்ட விதம் இன்னும் மனதில்

      நிற்கிறது. பிரம்மன் எழுதிய விதத்தில்
      நம் வாழ்வு நல்ல படியாகவே நடக்கும். வீண்கவலைகளை மனதில் போட்டு

      குழப்பினால் புத்தியும் கலங்கிவிடுகிறது.
      வாழ்வின் பலமாகக் கணவரும் குடும்பத்தினர்.
      எல்லாம் இருந்தால் நன்மையே.
      இந்தப் பாட்டிகளும், வயதான ஆண்களும் 80க்கு அப்புறமே
      இந்தப் பிரச்சினை சந்தித்தார்கள். நலமே வாழ்க.

      நீக்கு
  17. //வாழ்வில் நிகழும் நடப்புகளில் ஒன்றாக
    எடுத்துக் கொள்ளும்படி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//
    மிக சரியா சொன்னிங்க வல்லிம்மா .மிக அழகா பாட்டியின் படத்துக்கு உணர்வுபூர்வமான கதை எழுதியிருக்கீங்க .பாட்டிக்கு அமைந்த உறவுகளும் அன்பே உருவானார் .எனக்கு பாட்டியின் படத்தை பார்த்ததும் அவங்க தலையை கைகளை வருடி கொடுக்கணும் போல தோணுது .புகைப்படத்துக்கு உயிர்கொடுத்த அன்பான வல்லிமாக்கு  வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  18. நான் அப்பப்போ எட்டிபார்ப்பதால ஸ்ரீராம் கவிதையை பார்க்கலை .படம் மேலே கவிதை வரிகளை சேர்த்திருக்கலாம் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. dear Angel. Here are his words. Srirams kavithai
      Sriram Balasubramaniam
      July 20
      கட்டில் சாம்ராஜ்யம்
      ---------------------------------

      பல்லில்லா வாயிலிருந்து
      பலவிதமாய்
      வந்து விழுந்து கொண்டிருக்கின்றன
      பிரச்னைகளுக்கான தீர்வுகள்

      சமயங்களில் ஏதோ நகைச்சுவை சொல்லி
      சின்ன குரலில்
      தானே வாய்விட்டு சிரிக்கிறாள்
      கட்டிலில் படுத்திருக்கும் பாட்டி

      சமயங்களில்
      சிறு கானமும் இசைப்பதுண்டு

      ​அவ்வப்போது அறையிலிருந்து
      வெளிவந்து
      அனைவரும் பேசுவதைப் பார்த்துப்
      போவது உண்டு
      காது கேட்காததால்
      கண்கள் மட்டுமே
      ஒவ்வொருவர் மேலும் தாவும்

      தனக்குத் தானே கேள்வி கேட்டு
      தானே பதிலும் சொல்லிக் கொள்கிறாள்
      தனிமைப் பட்டுப் போன பாட்டி
      கலந்துபேசி வளையவந்த
      கடந்த கால நாட்களின்
      நினைவுகள்
      கண்ணில் வந்துபோகின்றன

      இப்போதைய வீட்டின் பிரச்னைகளுக்கு
      அப்போதைய தன் மதிப்பை
      மானசீக பதிலாக்குகிறாள்
      அந்தக்காலக் குடும்பத்தலைவி

      அன்பாய்தான் இருக்கிறார்கள்
      ஆனாலும் பேசமுடியவில்லை
      பேரன்களுக்கிணையாய் ​பாட்டியால் ​

      ​சேர்ந்திருந்தாலும்
      தனியாய்த்தான்
      இருக்கிறாள் பாட்டி.

      நீக்கு
    2. கவிதையும் கதையும் படமும் fantabulous! போட்டிபோட்டு பாராட்டுகளை குவிக்கும் 

      நீக்கு
    3. Thank you dear. My prayers are with people suffering from Alzhimers or Dementia.

      நீக்கு
  19. இன்று வல்லிம்மா கதையோ... வருகிறேன்ன்ன் ... எத்தனை மணியாகுமெனச் சொல்ல முடியல்லியே.....

    பதிலளிநீக்கு
  20. இப்படியானால் குடும்பத்துக்கு கலக்கம்தான்.

    சொல்லிய விதம் நன்று.

    பதிலளிநீக்கு
  21. மனம் காட்டும் காட்சிகள்.. இடையே மருந்து எனும் பெயரில் உள்ளே செலுத்தப்படும் அபத்தங்கள். மனித வாழ்க்கை இன்னும் என்னென்ன சொல்லவிருக்கிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் ஜி.
      உடல் நலத்தை மீட்கக் கொடுத்த மருந்துகள்
      பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தின. தன் வயம் இல்லாமல் காலை இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் சக்கிர நாற்காலியில் வாழ்ந்தார்.
      ஹோமியோபதி கொஞ்சம் சுகப்படுத்தியது.

      நன்றி ஜி.

      நீக்கு
  22. மனதை கலங்க வைத்தது அம்மா. கதையெனும் தங்களது பழைய உறவுகளின் நினைவுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு தேவ கோட்டைஜி, கலங்க வேண்டாம் மா. தெளிவுடன் செயல் படுங்கள். காலம் காக்கும்.

      நீக்கு
  23. கதையா இது ஒரு அவலப் புலம்பல்தானே வயதாகி உயிர்ப்பும் உணர்வும் இன்றி தடுமாறும் நேரங்களில் காரணகாரியங்கள் இல்லாமல் வந்து போகும் நினைவுகள் வேண்டாமடா சாமி என்று நினைக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஐயா. புலம்பல் பரவாயில்லை. புலம்பலை அடக்கி வைத்தால்
      மன அழற்சி வருகிறது.

      நீக்கு
  24. வல்லி சிம்மனா ரேவதி நரசிம்ஹனா

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    சகோதரி ரேவதி நரசிம்மன் அவர்கள் எழுதிய கதை மனதை உருக வைத்து விட்டது. இறுதியில் மரணத்தை தொடும் முன் எத்தனை மனப் போராட்டம்.. அத்தனையும் நிதர்சனப்போராட்டம்.. மாயமனம்தானே! அது நிமிடத்துக்கு மாறும் மனமாக மனதை தொட்டு விட்டது கதை. படத்துக்கேற்ற கதை தந்த சகோதரிக்கு அன்பான வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கமலா ஹரிஹரன். இனிய காலை வணக்கம்.
      ஸ்ரீராம் கொடுத்த படமும் கவிதையும்
      பலரை நினைக்க வைத்தது. கங்கிய மனம் சிறபட்ட உடலில் எத்தனை துன்பங்களை அனுபவிக்குமோ என்று கண்ணீரே வந்து விட்டது.
      அந்த சூழ்னிலையில் மறைந்த சிலரின் நினைவும் என்னை
      ஆக்கிரமிக்க இந்தக் கதை தானே வந்துவிட்டது.
      எல்லாப் பதிவுகளையும் நன்கு ஆராய்ந்து பின்னூட்டமிடம் பாங்கு
      கண்டு மகிழ்கிறேன். நன்றி மா.

      நீக்கு
  26. கதை படிச்சு மனம் கலங்குகிறது, என்னதான் தைரியமாக இருந்தாலும் மனித வாழ்க்கையின் நிஜம் இதுதானே....

    சிம்பிளாக சொல்லிட்டீங்க செல்லி பாட்டியின் எண்ணவோட்டத்தை.... இதே மன ஓட்டம் நமக்கும் ஒருநாள் வரத்தான் போகிறது... எதையும் தாங்கும் மன நிலையை இறைவன் நமக்குத் தர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ஆதிரா,
      கவலைப் படவேண்டாம். எல்லோரையும் தாக்குவதில்லை இந்த நோய்.

      நாம் நம் மனதுக்குப் பயிற்சிகள் கொடுத்து வந்தால் எதிலிருந்து மீளலாம். வளம் பெறுங்கள்.

      நீக்கு
  27. பதில்கள்
    1. அன்பு அனு மா. வாழ்க்கையே பலவித அனுபவங்களைக் கொடுத்துப்
      புரட்டிப் போடுகிறது.
      மனதை ஸ்திரப் படுத்த முயற்சிக்கலாம். நன்றி ராஜா.

      நீக்கு
  28. கருத்துகளை உள்ளார்ந்த அன்புடன் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
    பட்மும், கவிதையும் கொடுத்து என்னை முனைந்து எழுத வைத்த ஸ்ரீராமுக்கும் எங்கள் ப்ளாகுக்கும்
    அனேக நன்றிகள். அனைவரும் ஆரோக்கியமக இருப்போம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!