ஒரு பழைய அனுபவம்... கொஞ்சம் அல்ல, நிறையவே பழசு!
அந்தக் குடும்பம் பழகிய குடும்பம். அவர்களுக்கு அப்போது என் சக்திக்கு மீறி என்னால் முடிந்த அளவு உதவிகள் செய்திருக்கிறேன்.
அப்பாவும் அம்மாவும் தாங்கள் கூட சாப்பிடாமல் மகளை படிக்க வைத்தனர். இன்று மிக நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
எப்போதுமே உதவி கேட்க அந்த வீட்டுக் குடும்பத் தலைவிதான் வருவார். இத்தனைக்கும் குடும்பத் தலைவர்தான் என்னோடு பணிபுரிபவர். ஆனால் அவர் அந்த அளவு என்னிடம் நேர்மையாக இருக்கவும் மாட்டார். மிகச் சில சமயங்களில் பொறுமை இழந்தும் பேசியிருக்கிறேன். நிறைய உதவியும் இருக்கிறேன். அவர் மகள் படிப்பதற்காகத்தான் அத்தனையும்.
உதவி கேட்க அவர் வராமல் மனைவியே வருவது அவருக்கே உறுத்தி இருக்கவேண்டும். அவர் எனக்கு வசனம் சொல்லித் தந்தார். "நானே எவ்வளவு நாள் உதவ முடியும்? என் குடும்பத்து செலவே அதிகம். நீங்கள்தான் சமாளிக்க வேண்டும். என்னிடம் கேட்காதீர்கள்" என்று கணவரிடம் சொல்லச் சொன்னார்.
நானும் ஒருமுறை அப்படிச் சொன்னேன். அப்புறமும் உதவிக்கொண்டுதான் இருந்தேன். அலுவலகத்தில் அவர் சொல்லும் பொய்கள் எனக்குத் தெரியும். ஆனால் அவர் வீட்டுக்கு அவை தெரியாது!
புரிதலில் தவறு ஏற்பட்ட ஒரு நாளில் சண்டை வெடித்தது. அதன் பின் வந்த நாட்களில் அவர் தனது மனைவியிடம் நான் சொன்னதை - அதாவது அவர் மனைவி அவரிடம் சொல்லச் சொல்லி நான் சொன்னதை - கொஞ்சம் கூடக் குறைய சொல்லி இருக்கிறார். மீண்டும் பெரும் சண்டை வெடித்தது. "நீங்கள் சொல்லிதானே நான் சொன்னேன்?" என்று நான் கேட்டது ஏனோ அவர்களுக்கு எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தது போலிருந்தது. இன்னும் சண்டை பெரிதானது.
நீண்ட நாட்கள் சண்டையும் சமாதானமுமாக ஓடின நாட்கள். இன்றுவரை புரியாதது அவர் சொன்னது அவருக்கே மறந்திருக்குமா?
இப்போதும் கேட்கமுடியாது. ஏனென்றால் இப்போது மிக நல்ல முறையில் எங்கள் இரண்டு குடும்பமும் பழகிக் கொண்டிருக்கிறது!
====================================================================================================
அமெரிக்கா இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தயாராய் இருந்ததா? அப்புறம் என்ன ஆச்சு? ஏன் தாக்குதல் நடத்தவில்லையாம்?
===================================================================================================
இந்தக் கேள்விக்கு சில சுவாரஸ்யமான பதில்கள் கிடைக்கக்கூடும்.
==============================================================================================
ஆறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்டு பேஸ்புக்கில் போட்டது! விகடனில் ஏதோ ஒரு சிறுகதை படித்து விட்டு அதனால் எழுந்த சிந்தனையை வரிகளாக்கியது!
ஏதோ ஒரு
வலிய காரணத்தின்
எளிய கணத்தில்
எளிய கணத்தில்
கணவர்களிடமிருந்து
மகன் கைகளுக்கு
மாறுகிறது
மனைவிகளின் மீதான
ஆதிக்கம்!
ஆதிக்கம்!
'எளிய காரணத்தின்
வலிய கணத்தில்'
என்று மாற்றியும் படிக்கலாம்!
இதற்கு வந்த கமெண்ட்ஸ் பின்வருமாறு :
==================================================================================================================
அட? எல்லோரும் எங்கே போனீங்க? இன்னும் யாரும் வரலையா? விகடனில் வந்த பத்ரியின் சிறுகதையைப் பகிர்ந்திருக்கலாமோ?
பதிலளிநீக்குவாங்க கீதாக்கா... இனிய மாலை வணக்கம்!
நீக்குஅனைவருக்கும் நல்வரவு,வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் நல்வரவும், பிரார்த்தனைகளும்.. கால் வலி தேவலாமா?
நீக்குகால்வலிக்கு என உள்ள மருந்தை 2 நாட்களாகச் சாப்பிடுவதில் வலி குறைந்து வருகிறது. இருமல் தான் ஒரு வழி பண்ணி விடுகிறது. ரேவதியோடு இன்னிக்கானும் பேசலாம்னு முயற்சி செய்தால் அவங்க ஃபோனையே எடுக்கலை. தூங்கிட்டு இருந்தாங்களோ என்னமோ!
நீக்குஇங்கேயும் இருமல் படுத்துகிறது. இருமலுக்கு சாப்பிட்ட மருந்து ஒன்றில் பிரச்னை வந்து எம் ஐ எல் ஆஸ்பத்திரி சென்று வந்த சம்பவமும் நடந்தது! எங்கள் எல்லோருக்குமே இருமல்! எனக்கு எப்போதுமே உண்டு!
நீக்குநீங்க உங்க அலுவலக நண்பருக்கு உதவி இருக்கீங்க! அவங்களோடு சச்சரவு வந்திருக்கிறது. ஆனால் எங்களுக்கு நெருங்கிய உறவினருக்கு உதவிவிட்டு நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கோம். நாங்க ஏதோ அவங்களோட உரிமையைத் தட்டிப் பறிக்கிறாப்போல் பேசுவாங்க! இன்னமும் அவங்களுக்கு எங்களைக் கண்டால் அலட்சியம் தான்! அதிலும் என்னை எப்படி இருக்கேனு விசாரிக்கக் கூட யோசிக்கிறாங்க!
பதிலளிநீக்குஇன்னும் சொல்லப்படாத சங்கதிகள் உண்டு.
நீக்கு:))))
ஆமாம், இங்கேயும் மறக்கமுடியாத கசப்பான அனுபவங்கள்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் வெங்கட்... வாங்க...
நீக்குஉதவி செய்யப்போய் கஷ்டப்பட்ட அனுபவம் எனக்கும் உண்டு....
பதிலளிநீக்குகவிதை... :)
அநேகமாக எல்லோருக்குமே இருக்கும் அனுபவம்!
நீக்குகவிதையும்!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கிக் கொண்டிருக்கும்
மழையும் புயலும் ஓய வேண்டும்.
நம் ஊரிலும் நல்ல மழை பெய்திருக்கிறது. ஈரம் ஏறட்டும்.
இரக்க குணம் எப்பொழுதும் நன்மை பயப்பதில்லை மா.
கடன் கொடுப்பதும் வாங்குவதும் கசப்பில் தான் முடிகிறது.
பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு
கணவனை கொஞ்சம் ஒதுக்கும் அம்மாக்களைப் பார்த்திருக்கிறேன்.
கொடுமை என்றால் அதுதான்.
இந்தக் குழந்தைகளை முன்னுக்குக் கொண்டு வர அவர் எவ்வளவு
சிரமப் பட்டிருப்பார்.
இனிய காலை வணக்கம் வல்லிம்மா... வாங்க... வாங்க...
நீக்குஇன்று காலை ஒருமணிமுதல் சென்னையில் இடி மின்னல் மழை... இப்போது கூட பெய்துகொண்டிருக்கிறது.
இரக்ககுணம் இந்த உலகில் நன்மை பயப்பதில்லை! என்று ஆறுதலாகச் சொல்லிக்கொள்ளலாம்!
ஆமாம்.... குழந்தைகள் பக்கம் சட்டென சாய்ந்துவிடும் அம்மாக்கள்! ஏதோஒரு படத்தில் விசு கூட வசனம் சொல்வார்... "நீங்கல்லாம் தாலிக்கொடிக்கு தரும் மரியாதையை விட தொப்புள்கொடிக்குதாண்டி அதிகம் மரியாதை கொடுக்கறீங்க..."
என்னை மிகவும் பாதித்தது டாக்டர் ஷிவாகோ.
பதிலளிநீக்குஅப்படியாம்மா... கோபப்பட்டதே இல்லையே... என்ன முடிவு என்று சுருக்கமாகச் சொல்லி, ஏன் பாதித்தது என்று சொல்லுங்களேன்...
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குGeetha ma. phone was in mute. enakku ketkavillai. The handy man is putting up a shelf. drilling is so noisy:)
பதிலளிநீக்குஇந்திரா - வங்க தேச மக்களைக் காப்பாற்றி நின்றார்.. உண்மைதான்.. ஆனால் -
பதிலளிநீக்குஅன்றைய வங்க தேசத்தின் இன்றைய கழிசடை வாரிசுகள் சொல்வது என்னவென்று தெரியுமா?...
இங்கே குவைத்தில் அத்தகைய மூடர்களுடன் 20 வருடங்களாக இருக்கின்றேன்...
நன்றி மறந்தவர்களாக முதலிடத்தில் அவனுங்களை வைக்கலாம்...
சமீபத்தில் கூட வங்கதேச தீவிரவாதி ஒருவன் சென்னையில் சிறை பிடிக்கப்பட்டிருக்கின்றான்...
உள்ளூர் முரடர்களின் ஆதரவு இல்லாமல் இப்படி நடக்கக் கூடுமா?... சொல்லுங்கள்!...
'பாக்'குக்கு இணையாக தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் இறக்கும் நாடு! அது சரி... அமெரிக்காவுக்கு அப்போது வந்த கோபம்!
நீக்குஉலக அரசியல் வந்துவிட்டதால் இரண்டு விஷயங்கள் இங்கு:
நீக்கு1) ‘சோனார் பங்களா’ (தங்க வங்கம்) எனத் தான் நாட்டை அழைத்து (இந்திய உதவியுடன்) பாக்.குடன் போராடி எவர் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தாரோ, அவரை அவரது குடும்பத்தோடு சேர்த்து, அந்த நாட்டு ஆர்மிக்காரனே கொன்றான், நாலே வருடங்களில். இதில் சர்வதேச சதிக்கணக்குகள் பல.
வங்கதேசத்து பள்ளிப் புத்தகங்கள், அவர்களது சுதந்திரத்தில் இந்திய பங்களிப்புப் பற்றி நெல்முனையளவுகூடக் குறிப்பிடவில்லை. இந்தியவீரர்கள் வங்கத்தில் செத்தது, பல இந்தியப் பெண்கள் விதவைகளானது என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை அங்கே. அவர்களுக்காக உருகி, காக்கா கரைவதுபோல் கரைகிறது நமது அரசியல் கிழம் ஒன்று -மமதா !
2) அமெரிக்காவின் கோபம் - இது பல சிக்கலான பரிணாமங்களை உடையது. வெறுமனே இந்திரா-நிக்சன்-கிஸ்ஸிங்கர் என்பதல்ல இங்கு காட்சி. லியானிட் ப்ரஷ்னேவ் முக்கிய கதாபாத்திரம். வங்கம் ஆசிய வரைபடத்தில் வந்தது, தோல்வியில் துவண்டுபோன பாக். ஜெனரல் நியாஸி தன் 90000-க்கும் மேற்பட்ட சிப்பாய்களுடன், இந்திய லெஃப்.ஜெனரல் ஜக்ஜீத் சிங் அரோராவின் காலில் விழுந்தது, காட்டிய இடத்தில் கையெழுத்துப்போட்டு ஓடியது.. என பல சரித்திர நிகழ்வுகளின் நியூக்லியஸ் இந்த ப்ரஷ்னேவ். இப்படி நிறைய..
பிரஷ்னேவ் சம்பந்தம் அமெரிக்காவை கோபப்படுத்தியிருக்கும்.
நீக்குமேற்கு வங்கத்தில் அகதிகளாக அல்லது அகதிகள் போர்வையில் வந்திருக்கும் வங்கதேசத்தவர்களை வாக்குக்காக களை எடுக்காமல் இருக்கிறார்கள் என்று அங்கு ஆட்சியாளர்கள் மேல் குற்றச்சாட்டு உண்டு இல்லையா?
ஒன்று இரண்டல்ல, நிறைய. அப்போதிலிருந்தே.. அதாவது ஜோதி பாஸு, காங்கிரஸின் சித்தார்த்த ஷங்கர் ரே ஆகியோரின் காலத்திலிருந்தே இந்திய தேசத்தின் இறையாண்மையைப்பற்றிக் கவலைப்படாமல், தீவிரவாதம் பெருகிடுமே என்கிற கவலை இல்லாமல், வெறும் ஓட்டுவங்கி, ஆட்சியைப் பிடித்தல் என்பதற்காக மட்டுமே அகதிகளைக் கொல்லைப்புறமாக வரவழைத்துக் குடிமகன் களாக ’ஆக்கிய’ திருப்பணி, ஜாம் ஜாம் என்று நடந்துவருகிறது இன்னும். தேசிய நலனில் அக்கறை காட்டும் மத்திய ஆட்சி இதனைப் பிடிக்க, தடுக்க, நிறுத்த முயன்றால் அது பெருங்குற்றம். இதுவரை 60 வருட மத்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஏதேனும் கேள்விகேட்டார்களா.. நீங்கள் மட்டும் ஏன் குதிக்கிறீர்கள் எனக் கூச்சலிடுவதும், சராசரி வங்காளிகளை, அஸாமிகளைக் குழப்பி, மத்திய அரசுக்கெதிராகத் திருப்ப முயல்வதும் - இன்றைய வங்கத்தின் கீழ்த்தர அரசியல்.. இந்த லட்சணத்தில் ’பங்களா (Bangla)'என மேற்குவங்கத்திற்குப் பெயர் மாற்றவேண்டுமாம் - மமதா கோரிக்கை-எத்தைத் தின்றால் பித்தம் தீரும் என்கிற நிலை.. தேர்தல் வருகிறது அல்லவா (பிஜேபி வந்து தொலைத்துவிடாமல் இருக்கவேண்டுமே!)..
நீக்குபடித்திருக்கிறேன். கேள்விப்பட்டிருக்கிறேன்.
நீக்கு>>> உதவி செய்யப்போய் கஷ்டப்பட்ட அனுபவம் எனக்கும் உண்டு....<<<
பதிலளிநீக்குமிகச் சமீப நாட்கள் வரை...
ஜூலை கடைசி வரை பக்கத்துக் கட்டிலிலேயே கிடந்தது!..
நினைக்கவே ஆச்சர்யம்... எப்படி அதையெல்லாம் பொறுத்துக் கொண்டேன்!.. - என்று..
ஆம். நீங்கள் சொல்லி இருப்பது நினைவில் இருக்கிறது.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கங்களுடன் இந்த நாள் இனிமையாக இருக்கவும் என் பிரார்த்தனைகள்.
இந்த மாதிரி அனுபவங்கள் சில சமயம் நம்முள் ஒருவித வெறுப்பை தோற்றுவிக்கும். ஆனால் எப்போதுமே கசப்பானவை அல்ல..முகம் கொடுத்து பேச வைக்கும் சந்தர்ப்பங்களில் பழகிய நட்பில், அவை மறந்து இன்னமும் பேசக் கூடாதா என்ற எண்ணத்தையும் உருவாக்கிப் போகும்.
கவிதை அழகு. வயோதிகம் (ஆண், பெண் இருவருக்குமே) சில சமயங்களில் சுயநலமாக மாறி கணவருக்கு எதிராக செயல்படுமோ .. இல்லை,
தந்தை, சகோதரர், கணவர், மகன் என்ற ஒரு பெண்ணின் முறைப்படுத்திய ஆதரவு மனப்பான்மையில், மனது மகனின் அன்பை பெற்று இறுதி வரை தக்க வைத்துக் கொள்ள ஆவல் கொள்ளுமோ?
மனதின் எண்ணங்கள் ஆழ்கடல். அவைகளின் அலையோட்டத்தை சட்டென தீர்மானிப்பது சிரமந்தான.
பொதுவாக ஆசையை வெல்ல கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான கல்விக்கூடங்கள் சுலபமாக எவரின் கண்களிலும் தென்படுவதில்லை.
கதம்பம் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலை வணக்கம் கமலா அக்கா...
நீக்குதங்கள் இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.
டிபெண்டன்ஸி... அது காரணமாக இருக்கலாம்தான்.
பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்று என்று சும்மாவா சொன்னீர்கள்?
பதிலளிநீக்குநன்றி ஜோசப் ஸார்.
நீக்குநான் எனது வாழ்வில் எவ்வளவோ உதவிகள் செய்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் எல்லோருமே இன்று பகை காரணம் அன்று வெளிநாட்டிலிருந்து விருந்தாளியாக வந்து போய்க்கொண்டு இருந்ததோடு உதவிகளும் செய்தேன்.
பதிலளிநீக்குஇன்று உள்ளூர்க்காரன் வருமானம் இல்லை தொடர்ந்து உதவு என்றால் ??? நான் ரிசர்வ் பேங்கில் கணக்கு இருந்தால் நடக்கும்.
"கொடுத்து பகையாளி ஆவதைவிட கொடுக்காமல் பகையாளி ஆகி இருக்கலாம்"
எனது அப்பா 30 வருடங்களுக்கு முன்பு சொல்லிச் சென்றது இன்றே அர்த்தம் புரிகிறது.
உங்கள் அனுபவங்களை நண்பர்கள் நாங்கள் நன்றாகவே அறிவோம் கில்லர்ஜி... உங்கள் அனுபவங்கள் எங்களுக்கும் பாடம்.
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்கள் உதவி செய்யப்போய் கசப்பான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன எனினும் அவர்கள் இன்று நல்ல நிலையில் இருக்க உதவினீர்கள் என்பது உங்கள் மனதுக்கு மகிழ்சி தருமே.
பதிலளிநீக்குஅது என்னவோ உண்மைதான். நன்றி சகோதரி மாதேவி.
நீக்கு
பதிலளிநீக்குஆஆஆஆஆஆஆஅ கற்பூர வாசம் வீசுதா உங்கள் எல்லோருக்கும்??? பயந்திடாதீங்க அது அதிரா லாண்டிங்:)) ஹா ஹா ஹா..
ஆனாப் பாருங்கோ இன்னும் கொஞ்ச நேரத்தில மணிச்சத்தம் கேய்க்கும்:)).. அப்போ அலேர்ட் ஆகி, எங்காவது மரக்கொப்பில ஏறி இருந்திடுங்கோ:)) பிக்கோஸ்ஸ்ஸ்ஸ் ஆனைக்கு:)) மரம் ஏறத் தெரியாது:)).. ஹா ஹா ஹா..
வாங்க அதிரா...
நீக்குதஞ்சையம்பதியில் உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் இங்கு வருவீர்கள் என்று கா(பார்)த்திருந்தேன்!
ஹா ஹா ஹா நன்றி நன்றி....கொஞ்சம் அவர அலுவல் பின்பு வாறேன்ன்...மன்னிக்கவும்.
நீக்குஎங்கட அப்பா சொல்லும் ஒரு கதை நினைவுக்கு வருது.. கரடிக்கு ஒருமாதிரி மரம் ஏறத் தெரியுமாம் ஆனா இறங்கத் தெரியாதாம்:), ஒரு காட்டில ஒரு கரடி மிக தொல்லை கொடுத்ததாம், அதனால அந்தக் காட்டு மிருகங்கள் எல்லாம் சேர்ந்து ஐஸு வச்சூஊஊஉ[இது நெ.தமிழன் சொல்லும் ஐஸ் இல்லை என நினைச்சிடாதீங்கோ:) அதே ஐஸு தேன்ன்:)] கரடியை மரம் ஏற்றி விட்டதாம், கரடியால இறங்கத் தெரியாதெல்லோ.. கரடி மரத்திலேயே இருந்துதாம், ஏனைய மிருகமெல்லாம் நிம்மதியா வாழ்ந்துதாம்.. ஹா ஹா ஹா இது ஏதும் நீதிக் கதையா இருக்குமோ??. அப்போ ஜிந்திக்கவில்லை:) இப்போ சிந்திக்கிறேன் பிக்கோஸ் இப்போதானே சுவீட் 16 நடக்குது:)) சந்திச்சதும் ஜிந்திக்கும் வயசாக்கும்:))..
பதிலளிநீக்குஹையோ எனக்கென்னமோ ஆகிக்கொண்டிருக்குது ஜிம் போயிட்டு வாறேன்ன்ன்ன் ஹா ஹா ஹா..
சரி... ஏன் இந்தக் கதை என்று புரியவில்லையே!
நீக்குஇல்ல இல்ல ஹையோ எடுத்தோஒம் கவிழ்த்தோம் என அதிராவைத் தப்பா நினைச்சிடாதீங்க கர்ர்ர்:)).. எனக்கு ஒரு சுவிட்சைத் தட்டினால் நிறைய பல்ப் எரியுமாக்கும்:)).. ஆனைக்கதை மேலே எழுதினேனா.. அதனால கரடிக்கதை நினைவு வந்திட்டுது.. அவ்ளோதேன்ன்ன்:))... சிறீராம் நீங்க பொஸிடிவ்வா ஜிந்திக்காட்டில் உங்களுக்கும் நெல்லைத்தமிழனுக்கு குடுத்த பயமொயியைக் குடுத்திடப்போறேன்ன் ஹா ஹா ஹா.. ஹையோஒ.. பின்பு வாறென்ன்ன் மீ ரன்னிங்ங்ங்ங்:))
நீக்குஅவசரத்தில் நீங்கள் செல்வதால் / சொல்வதால் பாதி அபுரி எனக்கு. இருந்தாலும்.. மெல்ல வாங்க... பதிவு எங்கே ஓடிவிடப்போகிறது?
நீக்கு//
பதிலளிநீக்குஇந்தக் கேள்விக்கு சில சுவாரஸ்யமான பதில்கள் கிடைக்கக்கூடும்....//
இதென்ன இது புயுப் பயக்கம்:).. புதன் கிலமையில நாங்க கேல்வி கேட்டால், விசாலக்கிழமையில நீங்க கிலவியைக் கேய்ப்பீங்கலோ?:))..
இன்றைய குடி நியூஸ்: இப்போ தான் மோடி அங்கிலிடம் இருந்து வட்சப் மெசேஜ் எனக்கு வந்துது:), அகராதியில இருந்து ள, ழ வைத் தூக்கிட்டாராம்.. இனிமேல் ழ,ள வரவேண்டிய இடத்தில ..ல போடச்சொல்லி ஓடர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா இன்றைய பொலுதைக் கொண்டாடிட்டு வாறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.. கொஞ்சம் லேட்டா வாறேன்ன்ன்ன்ன்:))
ஹையோ அது குட் நியூஸாக்கும்..
நீக்குசினிமாசம்பந்தப்பட்ட கேள்வியாய் இருப்பதால் சுவாரஸ்யமான பதில்கள் கிடைக்கக் கூடுமென்று எதிர்பார்த்தேன். ஊ...ஹூம்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... மாலை வணக்கம்.
நீக்குஅந்தக் குடும்பம்! உங்கள் அனுபவம்! இப்படி ஆங்காங்கே நடந்திருக்கும் எனத் தோன்றுகிறது. சில ஆசாமிகள் தான் அழுத்தமாக இருந்துகொண்டு, பொண்டாட்டியை நைஸாக அனுப்புவது - பேச, உதவி கேட்க என. அவள் காரியத்தை சாதிக்கட்டும். நமக்கு ஃபாய்தா! அதே சமயம், நாம் மாட்டுக்கு ஒன்னுமே தெரியாததுபோல் பொழுதைப்போக்குவோம் என. இன்னும் இப்படி சில்மிஷங்கள்.. சர்வதேச அரசியலைவிட மோசமான சமூக அரசியல்!
பதிலளிநீக்குஆமாம். ஓரளவு தெரிந்தே நடந்ததுதான். அது ஒரு காலம்.
நீக்கு//நீண்ட நாட்கள் சண்டையும் சமாதானமுமாக ஓடின நாட்கள். இன்றுவரை புரியாதது அவர் சொன்னது அவருக்கே மறந்திருக்குமா?
பதிலளிநீக்குஇப்போதும் கேட்கமுடியாது. ஏனென்றால் இப்போது மிக நல்ல முறையில் எங்கள் இரண்டு குடும்பமும் பழகிக் கொண்டிருக்கிறது!//
மறதியாலதான் இப்போது நல்ல நண்பர்களாக பழக முடிகிறது. அவர் மறந்து போனாரோ! அல்லது மறந்தது போல் இருக்கலாம்.
இருக்கலாம் கோமதி அக்கா.
நீக்குதினமலர் செய்தி, சினிமா செய்தி கவிதை அனைத்தும் கலந்த பதிவு அருமை.
பதிலளிநீக்குசினிமா கிளைமேகஸில் அந்தக் காலத்தில் சுமதி என் சுந்தரி நன்றாக இருந்தது.
பாக்கியராஜ படங்கல் கிளைமேகஸ் நன்றாக இருக்கும்.
சில படங்களில் கிளைமேக்ஸ் காட்சிகள் எரிச்சலை ஏற்படுத்தும்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஆமாம், பாக்யராஜ் பட கிளைமேக்ஸ்கள் நன்றாய் இருக்கும்.
பாக்கியராஜ் படங்கள்
பதிலளிநீக்குசில காலகட்டத்தில் கணவன் அருகில் இருந்து பார்த்துக் கொண்டாலும் பிள்ளைகளை தேடும் பெண் உள்ளம். அவள் சும்மா இருந்தாலும் அக்கம் பக்கம், உறவினர் குழந்தைகள் அருகில் இல்லாத தனிமையை நம்ககு உணர்த்துவார்கள்.
பதிலளிநீக்குஅந்தக் காலம் போல அப்பா அம்மா குழந்தைகள் ஒரே குடும்பமாய் வாழ்வது இனி அசாத்தியம்.
நீக்குஅந்தக்காலத்தில் மனைவிக்கு ஆறுதல் தேவைப்படும்போது, கூட்டுக் குடும்பத்தில், கணவன் மனைவிக்கு அருகில் போயிருப்பது கூட நடக்காது, அதனால பிள்ளைகளைத் தேட வேண்டி இருந்திருக்கும். ஆனா இக்காலம் அப்படி இல்லையே..
நீக்குஆஆஆஆஆஆஆ மீ திரும்ப வந்திட்டேன்ன்ன்.
பதிலளிநீக்கு//ஒரு பழைய அனுபவம்... கொஞ்சம் அல்ல, நிறையவே பழசு!//
ஓ அப்போ இப்போ ஸ்ரீராமுக்கு ஒரு 80 பிளஸ் இருக்கும்போல:)) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:)
ஸ்ரீராம் வயசைப் பத்திச் சொல்லும்போது ஒரு நியாயம் வேணாம்? சும்மா 80னு சொல்றீங்க. மீதி வயசை யார் சொல்லுவா?
நீக்குநல்லவேளை... ஆறுவயசு கம்மியாய்தான் சொல்லியிருக்கீங்க...
நீக்குபார்த்தீங்களோ.. ஏதோ பெண்கள்தான் வயசைச் சொல்ல மாட்டினம் எனும் கருத்தெல்லாம் இப்போ பிளேனேறி விட்டது:)).. இப்போ ஆண்களும் தம் வயசைக் குறைச்சுச் சொல்லி:)) வயசு குறைஞ்ச பெண் தேடுகின்றனராம்ம்ம்ம்ம்:)).. எண்டு அறிஞ்சேன்:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:) ஹா ஹா ஹா ஆனாலும் ஸ்ரீராம் அனுக்கா உங்களுக்கே:))
நீக்கு//இப்போதும் கேட்கமுடியாது. ஏனென்றால் இப்போது மிக நல்ல முறையில் எங்கள் இரண்டு குடும்பமும் பழகிக் கொண்டிருக்கிறது!
பதிலளிநீக்கு//
இதைப் படிச்சால்?:))..
ஆனாலும் அதெப்படி கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் அடிக்கடி உதவி கேட்டார்களோ...
அப்போதைய அவர்கள் நிலையில் அவர்கள் கேட்காமல் நானே கூட ஓரிருமுறை உதவி இருக்கிறேன்.
நீக்கு//அமெரிக்கா இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தயாராய் இருந்ததா? அப்புறம் என்ன ஆச்சு? ஏன் தாக்குதல் நடத்தவில்லையாம்?//
பதிலளிநீக்குஅதுவோ ஸ்ரீராம், அது நான் தான் சொன்னேன் ட்றம்ப் அங்கிளிடம், எனக்குத் தெரிஞ்ச பலர் அங்குள்ளனர் அதனால வாணாம் என:)).. இல்லாட்டில் இப்போ தேவகோட்டை என்ற ஒரு கோட்டையே இருந்திருக்காது ஹா ஹா ஹா...
ட்ரம்ப் அப்பவே இருந்தாரா? அல்லது அப்பவே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது உங்கள் வயசு எனக்கு தெரிகிறது!
நீக்குகர்ர்ர்ர்ர்:)) நான் இன்றுகூட கொமெண்ட்டில் சொன்னேனே என் வயசை:)) நான் எப்போ மறைச்சேஎன்?:).. சுவீட் 16 என்பதை ஆரும் மறைப்பினமோ:)) ஹா ஹா ஹா.
நீக்குசில பல விஷயங்கள் காலம் கடந்து யோசிக்கும்போது நமக்கு ஏற்றவாறு திரிக்கும் சாத்தியக் கூறும்நாம் அறியாமலேயே நிகழலாம் இப்பதிவுக்கு எல்லாக் கேள்விகளுக்கும் சேர்த்து பதி ல் எழுதுவதால் கன்ஃப்யூஸ் ஆக்லாம்
பதிலளிநீக்குஆமாம் ஜி எம் பி ஸார்.
நீக்கு//இந்தக் கேள்விக்கு சில சுவாரஸ்யமான பதில்கள் கிடைக்கக்கூடும்.?//
பதிலளிநீக்குஇதில் நான் சின்ன வயசிலிருந்தே செலக்ட் பண்ணிப் படங்கள் பார்த்ததில்லை, ஆனா அப்பா செலக்ட் பண்ணிப் பார்க்க விடுவார்:)),..
இருப்பினும் என்னைப்பற்றிக் கொஞ்சம் சொல்லோணும், எனக்கு குட்டி வயசிலிருந்தே கதைப்புத்தகம் எனினும், படம் எனினும் சோகமாக இருந்தால்தான் பிடிக்கும்.. இப்போ அப்படி இல்லை சின்ன வயசில ஒரு பைத்தியம்.. படம் பற்றி ஆராவது சொன்னால் உடனே கேட்பேன் சோகப்படமோ என?:)... அப்படி இருந்தேன்..
அதனால மனதில் நிற்கும் சில காட்சிகள்..
மூன்றாம் பிறையில்.. கடசியில் கமல் அங்கிள் விஜி விஜி என.. சில ஆக்ஷன்ஸ் எல்லாம் போட்டுக் காட்டுவார்ர், ஆனா ஸ்ரீதேவிக்கு எந்த நினைவும் வராது.. ஒரு உணவுப்பார்சலைத் தூக்கிக் கொடுப்பா ரெயின் போகும்...
ரயில் பயணங்களில்.. அந்த அமைதிக்குப் பெயர்தான் சாந்தி.. பாடும் போது, கணவர் சிகரெட்டால சுடுவாரே...
பாலைவனச் சோலையில்.. புல் தரையில் இருந்து சுகாஷினி.. மேகமே மேகமே பாடுவாவே...
காதல் படத்தில்.... மோட்ட பைக்கில் மடியில் குழந்தையுடன் போகும்போது, ஒரு பஸ் ஸ்ராண்டில் பழைய காதலன் கையில் தாலியுடன் சுத்துவாரே... அதைக் கண்டு குமுறிக் கத்தி அழுவா....
கண்ணீர்ப் பூக்களில்.. மனைவியைக் கொடுமைப்படுத்தி இறந்த அடுத்த கணமே.. இன்னொரு பெண்ணைத் திருமணம் முடிச்சு ஊர்வலம் போவார் தந்தை, அதை மூத்த மனைவியின் தங்கை, அக்காவின் இரு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு பாடுவா ஒரு பாட்டு.. கல்யாணம் பாரு அப்பாவோட கல்யாணம் பாரு.. நீ பார்க்க குடுத்து வச்சிருக்கே என...
இப்போ 96 இல், கடசியாக விஜய்சேதுபதி தன் பழைய காதலியை வீட்டுக்கு கூட்டி வந்து தான் சேர்த்து வச்சிருக்கும் பொருட்களைக் காட்டுவாரே.. இப்படி இன்னும் இருக்கு, ஆனா நகைச்சுவையையும் சொல்றேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து...
சோகப்படங்கள் பிடிக்குமா? பிழிய பிழிய அழ வைக்க எப்போதுமே கே எஸ் ஜி படங்கள் இருக்கும். அப்புறம் சில சிவாஜி படங்கள்...
நீக்குநீங்கள் சொல்லி இருக்கும் படங்களில் கபூ மட்டும் நான் பார்க்காத படம்.
உதவி செய்யப்போய் கஷ்டம் - இது சாதாரணம்தான்.
பதிலளிநீக்குபொதுவா காதலுக்கு உதவி, திருமணம் நடக்கறதுக்கு உறுதுணையா இருந்தவங்களை, தம்பதி ஆனப்பறம் மறந்துடுவாங்க.
வேலைக்கு உதவினாலும் பிறகு மறக்கறது மட்டுமல்லாமல், அலட்சியமா பேசுவாங்க.
பாவம் பார்த்து கடன் கொடுத்தோம்னா, திருப்பிக் கேட்கும்போது நாம அவங்களுக்கு எதிரியாகவே ஆகிடுவோம்.
திருமணத்தில் எங்களுக்கு உதவிய இருவரை நாங்கள் மறக்கவில்லை! அதே போல எங்களுக்கு வேறுவகையில் உதவியவர்களையும் நாங்கள் மறக்கவில்லை.
நீக்கு//திருமணத்தில் எங்களுக்கு உதவிய இருவரை நாங்கள் மறக்கவில்லை! //
நீக்குஏன் ஸ்ரீராம், உங்கள் காதலில் எதிர்ப்பு இருந்ததோ? உங்கள் காதல் கதையை ஒரு போஸ்ட்டில் எங்களுக்குச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. கூச்சப்படாமல்:).
உங்களின் அனுபவம் போல பலருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்...
பதிலளிநீக்குஒன்றே ஒன்று : நாம் மனதில் மறைத்திருப்போம்... அவர்கள் மறந்திருப்பார்கள்...
பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா...
பொல்லாத கண்களடா, புன்னகையும் வேஷமடா...
நன்றி கெட்ட மாந்தரடா...
நானறிந்த பாடமடா...
பிள்ளையாய் இருந்து விட்டால்...
இல்லை ஒரு துன்பமடா...
அந்த சம்பவம் அந்த அளவு என்னை பாதிக்கவில்லை டிடி. பாஸ்தான் ஃபீல் பண்ணினார். இப்ப அவரும் அதை புன்னகையுடன்தான் நினைக்கிறார்.
நீக்குவரிகளை மாற்றிப் படித்தாலும் :-
பதிலளிநீக்குஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா...
உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா...
அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா...
அது எப்போதும் கிளியல்ல - கிணற்றுத் தவளை தான் இப்போது தெரிந்ததம்மா...
இல்லை டிடி.. இது காதல் ஜோடி மாறிய விஷயம் இல்லையே.... அதனால் இது சரியாய் வராது!
நீக்குஎந்தத் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் உங்களால் மறக்க முடியாதது...?
பதிலளிநீக்குஒன்றா...? இரண்டா...? எடுத்துச் சொல்ல...
ஒன்றா...? இரண்டா...? எடுத்துச் சொல்ல...
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல...!
எண்ணம் ஒன்றா...? இரண்டா...?
எடுத்துச் சொல்ல...!
பாடிய பாடலுக்கு ஒரு படமாவது சொல்லியிருக்கலாம்!!!
நீக்குஹா... ஹா... ஹா...
//ஒன்றா...? இரண்டா...? எடுத்துச் சொல்ல...//
நீக்குஸ்ரீராமின் கேள்வி பார்த்ததும், இந்த வசனம்தான் என் மனதிலும் ஓடியது:))..
//பாடிய பாடலுக்கு ஒரு படமாவது சொல்லியிருக்கலாம்!!!//
அதானே ஹா ஹா ஹா.
அந்த ஏழு நாட்கள்ல, பாக்யராஜ் கொடுத்த கிளைமாக்ஸ் இல்லைனா படமே சரியா வந்திருக்காது.
பதிலளிநீக்குஒரு தலை ராகம் படத்துல வேற கிளைமாக்ஸ் (சுப முடிவு) கொடுத்திருந்தால் இன்னும் அதிகமா அந்தப் படம் ஓடியிருக்கும். பாலசந்தர் படங்களுக்கும் இதைச் சொல்லலாம். ஒருவேளை சோக முடிவு கொடுப்பது இயக்குநரின் வக்ரபுத்தி காரணமாக இருக்குமோ?
சுபமுடிவு கொடுத்திருந்தால் ஒருதலை ராகம் ஓடி இருக்காது! கேபி எப்போதுமே தனது கதாநாயகிகளை சந்தோஷமாக வைத்ததில்லை!
நீக்குஉண்மைதான் அந்த முடிவாலதான் அப்படம் ஹிட்:).. அதில் வருபவர் விஜயனாமே:)) எனக்கது தெரியாது, ஆனா கண்ணீர்ப்பூக்கள் படம் ரிவியில் அடிக்கடி போட்டார் கள் முன்பு, இங்கு வந்தபின்னர்தான்.. அப்போ மீயும் அலுக்காமல் பார்த்தேன் ஒரு 5,6 தடவைகள் பார்த்திருப்பேன்.. நீங்கள் பார்க்கவில்லை என்கிறீங்கள்.. நேரம் கிடைச்சால் பாருங்கோ ஸ்ரீராம்.
நீக்குஒருதலை ராகத்தில் பிடிச்ச விஜனை, கபூ வில் வெறுத்து விட்டேன் ஹா ஹா ஹா.. அப்போ சினிமா நினைச்சால் நம்மை எப்படியும் மாற்ற முடியுமோ?:).
ஒரு தலை ராகத்தில் விஜயனா? எனக்குத் தெரிந்து இல்லையே... சங்கர்தானே?
நீக்குகடவுளே இன்று என்னவோ தெரியவில்லை, நானும் எவ்ளோ முயற்சி பண்ணியும் முழுமையாக இங்கு வர முடியவில்லை, சில நாட்களில் இப்படித்தான் ஆகி விடுகிறது, இதனால்தான் பொதுவாக விடிய எழுந்தவுடன் கொமெண்ட்ஸ் போட்டு விடுவேன்... சரி இப்போ எங்கின விட்டேன் ஜாமி:)).. சரி கொமெடிக் கட்டம் சொல்கிறேன் என்றேன், வேண்டாம் ரொம்ப லேட்டாயிட்டுது, அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக்கொள்ளலாம், இப்போ போஸ்ட் படிச்சு முடிக்கப் போகிறேன்.
பதிலளிநீக்குஇன்று உங்களுக்கு ரொம்ப வேலையோ... ரொம்ப பிஸி ஷெட்யூலிலும் இங்கு வந்து கமெண்ட்ஸ் போட்ட அதிராவுக்கு ஜே...!
நீக்கு//ஏதோ ஒரு
பதிலளிநீக்குவலிய காரணத்தின்
எளிய கணத்தில்
கணவர்களிடமிருந்து
மகன் கைகளுக்கு
மாறுகிறது
மனைவிகளின் மீதான
ஆதிக்கம்!//
இதில் “சில மனைவிகளின்” என வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்... இதுபற்றி பெரிய பட்டிமன்றமே நடத்தலாம்.
பெண்கள் மென்மையானவர்கள் தங்கமானவர்கள் அன்பானவர்கள் என ஒரு பக்கம் போற்றினாலும்.. இன்னொரு பக்கம் சில பெண்கள் இருக்கிறார்கள்தான், இவர்களெல்லாம் பெண்களோ என எண்ணுமளவுக்கு கொடுமையாக..
எல்லாவற்றிலுமே விதிவிலக்குகள் உண்டுதானே? எனவே சில பெண்கள் என்றே சொல்லலாம்.
நீக்கு