திங்கள், 2 செப்டம்பர், 2019

"திங்க"க்கிழமை : வெண்டைக்காய் சாம்பார் – நெல்லைத் தமிழன் ரெஸிப்பி

நண்பர்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

மற்றும் 
கொழுக்கட்டை தின வாழ்த்துகள்!

============================================================================

இன்னும் ஒரு வாரத்துக்கு நான் காலை உணவு தயார் பண்ணறதுன்னு தீர்மானித்தேன். இதுதான் சாக்கு என்று புதிது புதிதாக (என் வீட்டைப் பொருத்தவரையில்) பண்ணவேண்டும் என்று நினைத்தேன்.  அதன் ஒரு பகுதியாக இன்று வெண்டைக்காய் சாம்பார் செய்தேன். இதிலென்ன புதுமை என்று கேட்பவர்களுக்கு, இதில் நான் சாம்பார் பொடி போடவில்லை, பொதுவா பருப்பு குழம்பு செய்யும் முறையில் செய்யவில்லை என்பதுதான் பதில். 

தேவையானவை

புளி ஜலம் – 1 ½ கப். ரொம்ப நீர்க்க இருக்கவேண்டாம்.
வெண்டைக்காய் – நான் 14 காய்களை உபயோகித்தேன். பொதுவா 15 துண்டங்கள் இருந்தால் போதுமானது
துவரம் பருப்பு 1 கப்
பச்சை மிளகாய் – இதனை குறுக்கே கட் பண்ணி நான்காக்கிக்கொள்ளவும்
மஞ்சள் பொடி சிறிது
உப்பு தேவையான அளவு
கருவேப்பிலை ஒரு ஆர்க்
கொத்தமல்லி தழை – சிறிது

திருவமாற

சிறிது எண்ணெய் (அல்லது நெய்)
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம் சிறிது (நான் பால் பெருங்காயம் உபயோகித்தேன். ரொம்ப வாசனையாக இருந்தது)
சிவப்பு மிளகாய் 1 (உருண்டைனா 2)
கருவேப்பிலை 1 ஆர்க்


செய்முறை

வெண்டைக்காயை அலம்பி தானுக்கு ஏற்றவாறு நறுக்கிக்கொள்ளவும். பச்சை வெண்டைக்காயை நேரடியாக புளித்தண்ணீரில் போட்டுக் கொதிக்கவிடாமல், நான் முதலில் அவனில் போட்டு கொஞ்சம் வேகவைத்துக்கொண்டேன்.



குக்கரில், 1 கப் துவரம்பருப்பில் 2 கப் தண்ணீர் விட்டு தளிகைப்பண்ணிக் கொள்ளவும்.   பிறகு அதில் ¾ கப் மேலாக உள்ள தண்ணீரை எடுத்துவைத்துக்கோங்க (அதை ரசத்துக்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம். இல்லைனா, வெறும்னயே சாப்பிட்டுக்கோங்க). மிச்சம் இருக்கும் 2 கப் வெந்த பருப்பை நன்கு மசித்துக்கொள்ளவும்.



புளி ஜலம், குறுக்கில் வெட்டின பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, கருவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.



பச்சை வாசனை போனபிறகு, அதில் வெண்டைக்காய் தான்களைப் போட்டு 4 நிமிடம் கொதிக்கவிடவும்.



பிறகு அதில் பருப்புக் கடைசலை விடவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.  இப்போ போட்ட  உப்பு போதுமான்னு பார்த்துக்கோங்க.



இப்போ திருவமாறுவதற்குக் கொடுத்துள்ள பொருட்களைத் திருவமாறி, குழம்பில் சேர்க்கவும்.  அதற்குப் பிறகு ஒரு நிமிடம் சாம்பார் சூடு படுத்தினால் போதும்.



அடுப்பை அணைத்த பிறகு, சாம்பாரில் கொத்தமல்லித் தழைகளைச் சேர்க்கவும்.



சுவையான வெண்டைக்காய் சாம்பார் ரெடி.

எனக்கு பெங்களூரில் இதனைச் சொன்னவங்க, புளி ஜலம் கொதிக்கவைக்கும்போதே ஒரு கட்டி (சுக்குவெல்லம் சைஸ்ல) வெல்லத்தையும் சேர்க்கச் சொன்னார். ஆனால் நான் முதல் நாளிலேயே என் பெண்ணுக்கு ‘என்ன சாம்பார் இனிக்குது ‘என்ற சந்தேகத்தை வரவழைக்க விரும்பலை. அதுவும்தவிர எனக்கு தமிழக சாம்பார்தான் பிடிக்கும். பெங்களூரில் அவர்கள் சேர்க்கும் இனிப்பு பிடிப்பதில்லை.


நான் அன்று இந்த சாம்பாரும், செளசெள தேங்காய் போட்ட கரேமதும் செய்திருந்தேன்.  பெண் ‘நல்லாத்தானே இருக்கு’ என்றாள்.  ஏன் இவ்வளவு வெண்டைக்காய் தான் என்றாள். காய் எந்த ரூபத்தில் சேர்ந்தாலும் நல்லதுதானே.

இந்த சாம்பார், சப்பாத்திக்கு நல்ல சைட் டிஷ் ஆக இருக்கும்.

அடுத்து வெங்காயம் போட்டு வத்தல் குழம்பு செய்துபார்க்கலாம் என நினைத்திருக்கிறேன் (இதெல்லாம் மனைவி இங்க இருந்தால் அனுமதிக்கவே மாட்டாள். ஹா ஹா). அதுவும் நன்றாக வந்தால் பகிர்கிறேன்.

அன்புடன்

நெல்லைத்தமிழன்

92 கருத்துகள்:

  1. புதுமையான சாம்பாராக இருக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கு வாழ்த்துகள். உங்க ஊர் அரசியல் நிலை என்ன, இப்ப்டி தினம் ஒரு ஸ்டேட்மெண்ட் விடும் டிரம்ப் அவர்கள் மீண்டும் வரும் அளவு அவருக்கு ஆதரவு அதிகமாகுதா? இதை வைத்து ஒரு இடுகை போடுங்க.

      நீக்கு
  2. என்னது எல்லோரும் புள்ளையார் சதுர்த்தி பூஜையில் இருப்பாங்க போல இருக்கு,,,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த 'பூஜை' லாம் சும்மா உள உளாக்காட்டிக்குத்தான். சிலர் கொழுக்கட்டை தயாரிப்பதில் மும்மரமாக இருப்பாங்க. பலர், எப்படா இவங்க கொழுக்கட்டை முடிச்சு நமக்குத் தரப்போறாங்களோ என்று காத்துக்கொண்டு இருப்பார்கள். அவ்ளோதான்

      நீக்கு
  3. எல்லோருக்கும் புள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மதுரைத்தமிழன். உங்களுக்காக தேங்காய் பூரணம் உடைய பிள்ளையார் கொழுக்கட்டை செய்முறை எழுதலாம்னு பார்த்தேன். எதுக்கு வம்பு.. திரும்பவும் பாதி மாவை நீங்க கேரேஜ்ல ஒளிச்சுவைக்க வேண்டியிருக்கும். அதுனால அதை அனுப்பலை.

      நீங்க பிள்ளையார் சதுர்த்தி என்று ஏதேனும் ஸ்பெஷலாகச் செய்வீர்களா இல்லை அதெல்லாம் 'அந்தக் காலமா?'

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கமும், விநாயகச் சதுர்த்தி வாழ்த்துகள்.
    கணேசன் அனைவருக்கும் நலங்களை அளிக்கட்டும்.

    பொடியில்லாத வெண்டைக்காய் சாம்பாரா.
    இதை நாம் தால்னே சொல்லலாமே.

    குழம்பில் நிறைய தான் போட்டால் தான் காணும்.
    அதுவும் குறைந்த அளவு எண்ணெயில் நன்றாகவே இருக்கிறது.
    மைக்ரோவேவ் செய்தால் வெண்டையின் குழகுழப்பு
    போய்விடும் இல்லையா.
    நல்ல யோசனை.
    நல் வாழ்த்துகள் முரளிமா.

    சௌசௌ பார்க்கவே சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா. 'தால்'னு நான் சொல்றது சப்பாத்திக்குத் தொட்டுக்கற பாசிப்பருப்பு கூட்டை. அதுல காய்லாம் போடறதை நெனைச்சுக்கூட பார்க்கமுடியலை.

      இன்றைக்கு வெண்டைக்காய் கரேமது செய்ய, மைக்ரோவேவ் செய்தேன். அப்படியும் கொஞ்சம் கொழகொழன்னு கரேமது இருக்குன்னு பெண் சொன்னாள். நான் பொதுவா, கடாய்ல வெண்டைக்காயை வதக்கிச் செய்யும்போது கொழகொழப்பு இருக்காது.

      நல்ல வார்த்தைகளுக்கு நன்றிம்மா.

      நீக்கு
  5. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
    நல்லாத்தான் இருக்கு பார்க்கலாம் இன்று.

    பதிலளிநீக்கு
  6. விநாயகர், கொழுக்கட்டையோடு பதிவு ஆரம்பம். அருமை.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

    தங்கள் ரெசிபியான வெண்டைக்காய் சாம்பார் புதுவிதமாக நன்றாக உள்ளது. செய்முறையும் எளிதாக உள்ளது. படங்கள், செய்முறை விளக்கம் மிக அழகாக, அருமையாக பதிவாக்கி பகிர்ந்துள்ளீர்கள்.

    விநாயக சதுர்த்தியன்று முதலில் என்னப்பன் விக்னேஷ்வரன் படமும், அவருக்கு பிடித்தமான கொழுக்கட்டைகள் படமுமாக தங்கள் கை வண்ணமான வெ. சாம்பார் மணக்கிறது.

    சாம்பார் பொடி போடாமல்,வெறும் பச்சை மிளகாய் மணத்துடன், இது ஒரு தனி சுவையாகத்தான் இருக்குமென்பது படிக்கும் போதே என் நாவில் தெரிகிறது. என்னவொரு ஆச்சரியம் என்றால் இன்று இங்கும் வெண்டைக்காய் சாம்பார் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. இதைப் போலவும் ஒருநாள் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.
    அடுத்து வெங்காய வத்தல் குழம்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.... இந்த எங்கள் பிளாக், விநாயக சதுர்த்தி அன்று ஒரு இனிப்பு இடுகை போடாமல் சாம்பார் இடுகை போட்டிருக்கிறதே....

      கொழுக்கட்டை செய்தீர்களா? நாங்க பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவதில்லை. ஆனால் இனிப்பு கொழுக்கட்டைகள் கொடுத்தால் வாங்கிக்கொள்வேன் ஹா ஹா.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      எப்போதும் மூன்று விதமான கொழுக்கட்டைகளுடன், புளியோதரை தயிர்சாதம், வடை, பாயாசம் என்ற விதவிதமான அயிட்டங்களுடன் விநாயகர் பூஜை சிறப்பாக உண்டு. இந்த தடவை எங்களுக்கு ஒருவருட பண்டிகைகள் (என் கணவருக்கு அண்ணா தவறி விட்டமையால்) கிடையாது. அதனால் வெறும் பிரார்த்தனைகள்தான்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. உப்புக்கொழுக்கட்டை (உளுந்தம் பூரணம்), வெல்லக் கொழுக்கட்டை (தேங்காய் பூரணம்) தெரியும். அது என்ன மூன்றாவது கொழுக்கட்டை? எள்ளுப்பூரணமோ?

      நீக்கு
    4. ஆமாம். எள்ளு கொழுக்கட்டைதான். கருடபஞ்சமி, வரலெட்சுமி விரத நோன்பு, பிள்ளையார் சதுர்த்தி இம்மூன்றிலும், எள்ளுப்பூரணம் கண்டிப்பாக உண்டு. அன்றைய தினங்களில் எள்ளுக் கொழுக்கட்டைகள் சாஸ்திரத்திற்கு கொஞ்சம் செய்தாலும், பூரணமாக இரண்டொரு நாட்கள் வைத்திருந்து சாப்பிட்டு விடுவோம். என் கணவருக்கு இது மிகவும் பிடித்தமானது.

      நீக்கு
    5. பொதுவாக எங்க பக்கம், (மதுரைப்பக்கம்) உளுத்தம் கொழுக்கட்டை, தேங்காய்க் கொழுக்கட்டை, கடலைப்பருப்பு+தேங்காய்+வெல்லம் சேர்த்த மோதகம், (இதைத் தான் மோதகம்னு சொல்லுவோம்), எள்ளுக்கொழுக்கட்டை ஆகியவை செய்வது உண்டு. இப்போல்லாம் என் மன்னி, தம்பி மனைவி ஆகியவர்கள் கூட இப்படிச் செய்வதில்லை. வெறும் தேங்காய்க் கொழுக்கட்டை+உளுத்தம் கொழுக்கட்டையோடு நிறுத்திடறாங்க!

      நீக்கு
    6. கீசா மேடம்... இதெல்லாம் முன்னமே தெரிஞ்சிருந்ததுனா போன விநாயகர் சதுர்த்தி (போன வருஷம்) உங்க வீட்டுக்கு வந்திருப்பேன்

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம். இன்று பிரயாணம் துவங்குகிறது. ஒரு வேளை மொபைலில் கருத்திட்டால், தட்டச்சுப் பிழைகள் நேரிடலாம்.

    விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

    அழகான கொழுக்கட்டை படங்கள் மட்டும் போட்டு, கொழுக்கட்டை தராமல் அல்வா கொடுத்த ஸ்ரீராமுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  10. பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்! அனைவருக்கும்

    பதிலளிநீக்கு
  11. வெண்டைக்காய் சாம்பார் செய்முறை அருமையாக இருக்கிறது.
    பருப்பு குழம்பு என்று எங்கள் வீடுகளில் செய்வோம். சாம்பார் பொடி போடாமல், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் கிள்ளிப் போட்டு வைப்போம். கிள்ளி போட்ட சாம்பார் என்றும் சொல்வோம். அது போல் இருக்கிறது.

    செய்முறை படங்கள், செய்முறை விளக்கம், எல்லாம் அருமை. சவ் சவ் கரேமது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். எனக்கு இந்தக் குழம்பு வித்யாசமா இருந்தது.

      உங்க வீட்டில் இன்று கொழுக்கட்டை உண்டோ?

      நீக்கு
  12. பிள்ளையார், மற்றும் மோதகம், எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் போட்டு என்னை மாதிரி அப்பாவிகளின் ஆசையை ஶ்ரீராம் தூண்டுகிறாரே

      நீக்கு
  13. ஆஆ இன்று எதிர்பார்த்தேன் நெ தமிழன் ரெசிப்பியை ஆனா சத்தியமாக வெண்டிக்காய் சாம்பாறை எதிர் பார்க்கவில்லை நான்:)... நேற்று போன இடத்தில் பெரீய தமிழ்க்கடை இருந்தது வெண்டிக்காய் வாங்கி வந்தோம்... இதை செய்யலாமா என மீ யோசிக்கி ங்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா. பயணத்துல இருக்கேன்.

      வெண்டைக்காய் வாங்கியாச்சா? இன்னும் ஒரு வேலை பாக்கி இருக்கு. அதுக்கு அப்புறம் சாம்பார் செய்யலாம்.

      கொஞ்சம் டவுன் டவுன் போய், போயி, போயி.. இன்ஷ்யூரன்ஸ் மட்டும் எடுத்துக்கோங்க

      நீக்கு
    2. இன்சூரன்ஸ் ஶ்ரீராம் எடுத்திட்டார் புளொக்குக்கு.

      நீக்கு
    3. என் வழி தனி(ஈ ) வழீ ஈ :) @miyaaw

      எதுக்கு சொன்னேன்னு கண்டுபுடிங்க @நெல்லைத்தமிழன் :)

      நீக்கு
    4. புரியலையே ஏஞ்சலின்.

      பயணத்துல சட்னு யோசிச்சாலும் நினைவுக்கு வரலை

      நீக்கு
  14. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

    புதிய முறையில் வெண்டைக்காய் சாம்பார். முயற்சிக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். தில்லில பிள்ளையார் கொழுக்கட்டை உண்டோ?

      நீக்கு
  15. இன்று என்னால் குண்டுப் பிள்ளையாருக்கு மோதகம் கொளுக்கட்டை செய்ய முடியாமல் போச்சூஊ... சதுர்த்தி நேற்று வந்திருக்கலாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் நாளைக்கு செய்யக் கூடாதா இல்லை அடுத்த வாரம்? அன் சீசன்ல வர மாங்காய்க்கு மதிப்பு ஜாஸ்தி. அடுத்த வாரம் செஞ்சீங்கன்னா கண்டிப்பா பிள்ளையார் நினைவு வச்சிக்குவார் (இது யாருடா அமெரிக்காவுக்கு மேற்கே 200 டைம் ஸோன்கள் தள்ளி இருக்கறதுன்னு)

      நீக்கு
    2. ஸ்ஸ்ஸ்ஸ் நேற்றெனில் லீவு நாளெல்லோ... பிள்ளையாரின் வயிறு முட்டும்வரை செய்திருக்கலாமுன்னேன்ன்ன்ன்:).... இதுக்குப் போய் 200 சோனைப்பற்றிக் கதைச்சால்ல்ல் அஞ்சு இப்போ ரென்சனாகிடப்போறா கர்ர்ர்ர்:)

      நீக்கு
  16. ////தளிகைப்பண்ணிக்///
    இது சேர்ந்து வருமோ? ப் பன்னா போடலாமோ? டவுட்டா வருது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்லாம இருந்தா கன்ஃப்யூஷன் உங்களோடயே போயிருக்கும். இப்போ எனக்கும் வந்திடுச்சு (அந்த தெய்வமே கலங்கி நின்னா அந்தத் தெய்வத்துக்கு யாராலே ஆறுதல் சொல்ல முடியும் - எஃபெக்ட்)

      நீக்கு
    2. வரும் வரும் ப்பண்ணா வரும் இல்லன்னா அது :) babe கேரக்டெர் ஆகிடும்

      நீக்கு
  17. ////ப்போ திருவமாறுவதற்குக் கொடுத்துள்ள பொருட்களைத் திருவமாறி, குழம்பில் சேர்க்கவும்////
    குழம்பு என்றால் என்ன? நாங்கள் மிளகாய்த்தூள் சேர்த்தவற்றைத்தான் குழம்பு என்போம்ம் ஓவராக் குழப்புறார் இன்று என்னை கர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா.. நாங்க சாம்பார்னு எதையும் சொல்லமாட்டோம். (வெங்காய சாம்பார் - ஆனா எங்க வீட்டில் - ஒரு ஜெனெரேஷன் முந்தி பண்ணமாட்டோம்).

      டமிள் டி யை குழப்பியது சந்தோஷம்

      நீக்கு
    2. எங்கள் ஊரில் சாம்பாறு என்றால் அது ஒன்றே ஒன்றுதான்.... நிறைய மரக்கறிகள் போட்டு வைப்போம்ம்ம்... அனைத்தும் சேர்ந்தால்தானே அது சாம்பாறு? இல்லை எனில் கறி எண்டு சொல்லோணும்:)

      நீக்கு
    3. Shhh miyaw its Aambaar
      There's no sambar in poosh dictionary:))))))))

      நீக்கு
    4. சாம்பாற் னு எழுதியிருக்காங்க. இல்லைனா ஆம்பாற் னு எழுதுவாங்க. எப்படி எழுதினாலும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் விடுவாங்க.

      இல்லைனா அது டமிள் டி அதிரா அல்ல

      நீக்கு
  18. ////இதெல்லாம் மனைவி இங்க இருந்தால் அனுமதிக்கவே மாட்டாள். ஹா ஹா). ///
    ஆஆஆ நெல்லைத்தமிழன் சூப்பர் மாட்டீஈஈ:)... அண்ணி கோபிச்சுக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போயிட்டா ஹ ஹா ஹா:).. இப்போ நீங்க செய்யுங்கோ மல்ட்டி ராஸ்க் ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜமாவே வீட்டு வேலைகள் என்பது ரொம்ப கடுமையான தொடர்ந்து செய்யற வேலை. ஆபீஸ் போறேன்னு சொல்ற ஆண்களின் வேலையைப்போல் பல மடங்கு வேலை. பெண்கள் வீட்டின் கண்கள்.

      இதெல்லாம் எனக்குப் புரிந்தது கடந்த 6-7 வருடங்களாத்தான்.

      நான் அப்போ அப்போ மேல் ஷாவனிஸ்ட் மாதிரி கலாய்ப்பதை சீரியசா எடுத்துக்காதீங்க

      நீக்கு
    2. ///நான் அப்போ அப்போ மேல் ஷாவனிஸ்ட் மாதிரி கலாய்ப்பதை சீரியசா எடுத்துக்காதீங்க///
      இப்பூடி டக்குப் பக்கென சரண்டராகாதீங்க:).. நீங்க ஜண்டைப்பிடிங்கோ:).. நாங்களும் பிடிப்போம்:)...

      என்னாதூ பெண்கள் வீட்டின் கண்களென்பது ஆறேழு வருடமாய்த்தான் தெரியுமோ?:).... இந்தக் கதை ... உங்கட அம்மாக்குத் தெரியுமோ....

      நீக்கு
    3. நாம பெண்கள் செய்யும் வேலைகளைச் செய்துபார்க்காம எப்படி அவங்க கஷ்டம புரியும்? எங்க அம்மாவோட இருந்த வரைல வீட்டுக்கா வேலை செய்த நினைவே இல்லை (உங்களை மாதிரி ஹா ஹா)

      நீக்கு
  19. வழமையை விட எங்கள் புளொக் உறங்கியிருப்பது மனதுக்கு கஸ்டமாக இருக்கு... பானுமதி அக்கா மனதுள் நிற்கிறா... ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் பேசினால் அவவுக்கும் மற்றும் எல்லோருக்கும் மன இறுக்கம் கொஞ்சமாவது குறையலாம் என நினைச்சுப் பேசிக் கொண்டிருக்கிறேன்...
    இதுவும் கடந்து போகும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னைக்கு கீதா சாம்பசிவம் மேடம் வரலை பாத்தீங்களோ? லீவு லெட்டர்கூட கொடுக்காம காணாமல் போயிருக்காங்க. அதைக் கேட்க உங்களுக்கு தைரியமில்லையே.

      நீக்கு
    2. அதேதான் அதிரா சகோதரி. என்னதான் எ.பிக்கோ, மற்ற பதிவுக்கோ வந்து பதிவை படித்து கருத்திட்டாலும், மனம் ஒரு வித சோகத்திலிருந்து விடுபட மறுக்கிறது. தங்கள் சொல்படி எல்லாவற்றையும் கடக்க முயற்சித்தாலும், நினைவுகளை ஒதுக்க இயலவில்லை. மனம் இறுக்கமாக, கட்டிய மாதிரி உணர்வுடன் இன்றெல்லாம் உலா வருகிறோம். பானுமதி சகோதரிக்கு ஏற்பட்டிருக்கும் மனபபுண்ணை காலந்தான் கொஞ்சம், கொஞ்சமாக ஆற்ற வேண்டும் என கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    3. நேற்று ஆவணி அவிட்டம், பிள்ளையார் சதுர்த்தி இரண்டும் சேர்ந்து கொண்டது இந்த வருடம். ஞாயிறன்றில் இருந்து வேலைகள். ஊருக்குப் போக சாமான்கள் தயார் செய்வது, பெட்டியில் வைப்பது என யோசித்து யோசித்துச் செய்ய வேண்டி இருக்கு. நேற்றுப் பூரா வீட்டு வேலைகள். மத்தியானம் படுத்து விட்டேன்.சாயந்திரம் வேறு சில தனிப்பட்ட வேலைகளைக் கணீனியில் செய்ய வேண்டி இருந்தது. அதோடு மனம் இன்னமும் சரியாகவில்லை. பானுமதி தைரியமாக இருப்பதாகத் தி/கீதா சொன்னார் என்றாலும் மனம் ஆறவில்லை. அவங்களிடம் இன்னமும் பேசவில்லை. பேசணும். :( தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கேன்.

      நீக்கு
    4. இப்போதான் பார்த்தேன். அப்போ இராமர் படம், கொழுக்கட்டைகளோட இடுகை வரும்

      நீக்கு
  20. திருவமாவதற்கு - அப்படின்னா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆ உங்களுக்கு தெரியாதோ உந்தப் பாஷை?:)... எனக்குத் தெரியுமே சமஸ்கிருதமும்:)...

      நீக்கு
    2. ஜீவி சார்.. அது தாளிக்கறது. கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை அல்லது கடுகு கருவேப்பிலை தாளிப்பது.

      முதல் முதல்ல ரெசிப்பி அனுப்புனபோது ஶ்ரீராம் இந்த லேங்குவேஜ்லயே இருக்கட்டுமான்னு ரெண்டு தடவை கேட்டுக்கிட்டார் ஹா ஹா

      நீக்கு
  21. புளி ஜலத்தில் தானைப் போட்டு கொதிக்க வைத்தால் காய் வேக நேரமாகும். அதனால் காய் வெந்த பிறகு புளியைக் கரைத்து வைத்திருந்த ஜலத்தை விட்டு அதற்கேற்ற உப்பை போட்டு நன்கு கொதித்து வந்ததும் அரிசி மாவுக் கரைசலை ஊற்றி லேசான கொதிக்குப் பின் தாளித்துக் கொட்டி கருவேப்பலை போட்டு ஒரு கொதிக்குப் பிறகு இறக்க வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஆண்டவா... உலகம் கெட்டுப்்போச்சு. ஆண்கள்லாம் ரெசிப்பி போடறாங்க, சமையல்ல எக்ஸ்பர்ட் ஆயிட்டாங்க.

      இந்தப் பெண்கள்லாம்.. லாம்.. லாம்..

      ஆபீஸ் போறேன்னுட்டு எங்க வேலைக்கு உலை வைக்கறாங்க.

      நீக்கு
    2. ஆணுக்கு பெண் துணையாய், பெண்ணுக்கு ஆண் துணையாய... சொர்க்கம் இங்கே, இங்கே, இங்கே தான்!..

      நீக்கு
    3. ///இந்தப் பெண்கள்லாம்.. லாம்.. லாம்..

      ஆபீஸ் போறேன்னுட்டு எங்க வேலைக்கு உலை வைக்கறாங்க.///%

      Grrrrrrrrr....

      நீக்கு
  22. தாஜ்மஹாலில்.... ,சொர்க்கம், இங்கே, இங்கே, இங்கே தான்.. என்று சலவைக் கல்லில் பொறித்த வாசகம் ஒன்று உண்டு!!

    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் வணக்கம்...

    அன்பின் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்...
    ஸ்ரீ கணேசனின் நல்லருள் எங்கெங்கும் நிறையட்டும்...

    வாழ்க வையகம்.. வாழ்க விநாயகன்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெறும் நல்வாழ்த்துகளோட நிறுத்திட்டீங்களே. அப்போ குவைத்ல கொழுக்கட்டை நஹீன்?

      நீக்கு
    2. கொழுக்கட்டை பூரணம் எல்லாம் வருகிற சனிக்கிழமை செய்யலாம் என்றிருக்கிறேன்..
      ஏனெனில் அன்றைக்கு அறையில் நானும் பிள்ளையாரும் மட்டுமே!....

      நீக்கு
    3. சாப்பிடும்போதாவது என்னை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்

      நீக்கு
  24. வெள்ளிக் கிழமை காலை குவைத்திற்குத் திரும்பியாயிற்று..

    கைத் தொலைபேசியை மகனிடம் கொடுத்து விட்டதால் -
    மாலை அலுவலகத்திலிருந்து திரும்பிய பின்னரே பதிவுலகத்துள் நுழைய முடிகின்றது...

    அடுத்து நிகழ்ந்ததொரு வேதனையால் மனம் இன்னும் ஆறவில்லை!...
    என்ன செய்ய?.. காலம் தான் அவரது துயரினை ஆற்ற வேண்டும்...

    இன்று இப்பதிவு வெளியாகும்போது கணினியில் இருந்தாலும்
    வாழ்த்தையும் வரவேற்பையும் பின்னர் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்.. உங்கள்ட பேசியே பல மாதங்களாச்சு. நம் ஊரில் தலங்கள் தரிசனம் ஆச்சா? மெதுவா இடுகைகளை எதிர்பார்க்கலாமா?

      நீக்கு
  25. நெல்லை அவர்களின் கைவண்ணம் அருமை...

    சமையலறை கைவசம் இருந்தபோது அடிக்கடி இந்த மாதிரி செய்வேன்...

    ஆனாலும் வெண்டைக்காயுடன் அல்ல.. முருங்கைக் காய் அல்லது அவரைக்காயுடன்!...

    ஏக சக்ராதிபதியாக சிறுவெங்காயத்துடன் பச்சைமிளகாய்களை நறுக்கிப்போட்டு தாளித்து இறக்கினால்!.

    ஆகா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போவும் சமையலறை உங்க வசம் வல்லியா?

      நல்ல ரூம் மேட் கிடைத்தாரா?

      நீக்கு
    2. சமையலறையை வங்கதேசிகள் முழுதாக ஆக்ரமித்துக் கொண்டார்கள்...
      நான் அங்கே சமைப்பதில்லை..

      சிகரெட் பிடித்துக் கொண்டே சமைக்கின்ற பன்னாடைகள்...

      நமக்குத்தான் சமையலறை அதன் சாதனங்கள், உணவுப் பொருட்கள் எல்லாம் மரியாதைக்குரியவை..

      அவர்களுக்கு அப்படியில்லை...
      அதனால் உணவுக்கு மரியாதை என்பதெல்லாம் கிடையாது...

      அறைக்குப் புதிதாக குஜராத் முஸ்லீம் ஒருவர் வந்திருக்கிறார்... 52 வயதுடைய அவரால் இதுவரை பிரச்னை இல்லை.. இனியும் வராது...

      வாழ்க நலம்...

      நீக்கு
    3. அப்படீன்னா நல்லது.

      பிள்ளையார் கொழுக்கட்டை செய்முறை எபில வரப்போகுது போலிருக்கு

      நீக்கு
  26. எங்கள் பிளாக் வாசகர்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் .எனக்கு சுண்டல் மட்டும் வேணும் அதுவும் நவரத்தின சுண்டல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்னது மியாவ்ச்?
      உங்க பல் செட் தவறி விழுந்து போச்சோ ?? :)) இல்லை வைரமெல்லாம் சிதறி கிடக்கே :)

      நீக்கு
    2. நவரத்ன சுண்டலா? கேள்விப்பட்டதே இல்லை. டேவடை கிச்சன்ல வருமா?

      நீக்கு
    3. எனக்கு ரொம்பப் பிடிக்கும் நவரத்தன் குருமா அதன் ஸ்லைட் இனிப்புக்கு

      நீக்கு
  27. இந்த சாம்பார் கிள்ளி போட்ட சாம்பார் னு சொல்வாங்க .எங்கம்மா இதைத்தான் இட்டிலிக்கு செய்வாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சலின். பக்கத்துல கிள்ளறதுக்கு யாரும் இல்லைங்கறதுனால இதை கிள்ளிப் போட்ட சாம்பார்னு சொல்லமாட்டோம்.

      பிஸிலயும் வந்ததற்கு நன்றி

      நீக்கு
    2. கிள்ளு மிளகாய் சாம்பார்னு எங்க வீட்டில் பண்ணுவாங்க!

      நீக்கு
  28. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கிள்ளு மிளகாய் சாம்பாருக்கு இத்தனை அலட்டலா? சரியாப் போச்சு போங்க. மற்றக் காய்கள் மாதிரி வெண்டைக்காயைத் தனியே வேகவிட்டா சேர்ப்பாங்க! உருத்தெரியாமல் போயிடும். சாம்பார் செய்யும் கல்சட்டி, உருளி அல்லது உங்க வழக்கப்படி நான் ஸ்டிக் பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை மட்டும் நன்கு வதக்கிக் கொண்டு அதோடு கடுகு, வெந்தயம், சிவப்பு மிளகாய், பச்சைமிளகாய், கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு நன்கு வதக்கி அதிலே புளி ஜலத்தைக் கரைத்து வைத்திருக்கும் பருப்போடு சேர்த்துக் கலந்து விட்டுக் கொதி விட்டால் சாம்பார் ரெடி. இந்தச் சின்ன விஷயத்துக்குப் போய் வெண்டைக்காயை மைக்ரோவேவ் பண்ணிக் கொண்டும், தனியாக வேக வைத்துக் கொண்டும்! கஷ்டம், கஷ்டம்! இதை நாங்க சாம்பார்னு சொல்லுவதில்லை என்றாலும் பரவாயில்லைனு நெ.த.வுக்காகச் சொல்லிக்கலாம். இதையே வெறும் தக்காளி மட்டும் போட்டு, முருங்கைக்காய், சின்ன வெங்காயம் போட்டுனும் பண்ணுவோம். இட்லிக்கு நன்றாக இருக்கும். சப்பாத்திக்கும் தால் மாதிரி இருக்கும். மாவெல்லாம் கரைத்து விடக் கூடாது. பருப்புக் கரைசல், புளி ஜலம், தான்கள் என்று அதுவே சேர்ந்து கொள்ளும். மாவு விட்டால் அதில் உள்ள ஒரிஜினல் ருசி காணாமல் போயிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்.

      எனக்கு நேற்று ஶ்ரீராம் பாண்டு பேப்பர்ல கையெழுத்துப் போட்டு கொடுத்திருந்தாரே. கீசா மேடத்துட்ட பேசறேன், இன்னைக்கு பிஸ் வரமாட்டாங்க, வந்தப்பறம் ஆஹா ஓஹோன்னு நெ த வை பாராட்ட நான் கேரண்டின்னு சொன்னாரே. சரி.. ஶ்ரீராம்ட அப்புறம் வச்சிக்கறேன்.

      ஆனா நான் எதிர்பார்த்த மாதிரியே ரெண்டு மூணு வகை சொல்லியிருக்கீங்க. நன்றி. திங்கள் பிள்ளையார்ல பிஸியா இல்லை ஆவணி அவிட்டமா?

      நீக்கு
    2. வெண்டைக்காய் மட்டுமில்லாமல் முருங்கைக்காய், கத்திரிக்காய்,வெங்காயம் போன்றவற்றையும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றிக் கொண்டு வதக்கிக் கொண்டு சாம்பாரில் சேர்த்தால் நன்கு வெந்து விடும். தனியாக வேக வைக்கவும் வேண்டாம், தான்கள் நிறமும் மாறாமல் இருக்கும். பாகற்காய்ப் பிட்லை என்றாலும் அதை வதக்கிக் கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடிசேர்த்து வேக விட்டுப் பின்னர் நீரை வடித்துவிட்டுப் பிட்லைக்காகக் கொதிக்கும் புளி ஜலத்தில் சேர்க்கலாம். தான்கள் தனித்தனியாக வருவதோடு கசப்பும் தெரியாது. என்றாலும் எங்க வீடுகளில் பாகற்காய்ப் பிட்லைக்குக் கொஞ்சம் போல் வெல்லம் சேர்ப்போம்.

      நீக்கு
    3. //திங்கள் பிள்ளையார்ல பிஸியா இல்லை ஆவணி அவிட்டமா?// ரெண்டும், bhபோத்!

      நீக்கு
  29. சாம்பார் என்னும்பெயரை மாற்றுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எம் பி சார். நீங்களே நாமகரணம் செய்திருக்கலாமே

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!