வியாழன், 22 ஏப்ரல், 2021

நாலாவது தலைமுறையும், ஏழாவது தலைமுறையும்...

 ஒரு திடீர் சோகமாக நடிகர் விவேக் மறைந்த அன்று 'அர்பன் ஆப்'பில் முன்பதிவு செய்து வைத்திருந்ததால் வீட்டுக்கு வந்து  என் முடிதிருத்திச் சென்றார் நண்பர்.   ஏன் நண்பர் என்று குறிப்பிடுகிறேன் என்றால், மூன்றாவது முறையாக அவரையே நான் பரிந்துரைத்து வருவதால்.

கடைசி நிமிடத்தில் புக் செய்தால் கன்னாபின்னாநேரம்தான் கிடைக்கும்.  ஓரிரு நாட்கள் முன்னதாகவே புக் செய்தால் காலை 7 மணிக்கே முடித்து விடலாம்!  ஒருமுறை மதியம் இரண்டு மணிக்கு வந்தார்.

மூன்று முறை (அல்லது நான்கு முறையோ) ஒருவரையே 'நேயர்' ஒருவர் பரிந்துரைத்து வரவழைத்து விட்டால் அவருக்கு ஒரு கிரேட் உயரும் என்று அவர் சொன்னார்.

இதில் ஒன்று, நாம் அர்பனில் புக் செய்யும்போது இவர்தான் வேண்டும் என்று நாம் தேடவேண்டிய அவசியம் இன்றி, கடைசியாக வந்தவர் பெயரையே நமக்கு அந்த ஆப் முன்னுரிமையாகக் காட்டும்.  வேண்டுமென்றால் அவரையே புக் செய்யலாம், அல்லது புதிதாக வேறொருவரை புக் செய்து கொள்ளலாம்.

மூன்று பாத்ரூம்களையும் க்ளீன் செய்யவும் ஒருவரை புக் செய்திருக்கிறோம்.  அவர் மூன்று மணிக்கு வருவார் என்று சொன்னது அந்த ஆப்.

முடிவெட்ட வந்தவர் கைகளை சானிடைஸ் செய்துகொண்டு, நீட்டாக கருப்பு பெரிய பேப்பர் ஒன்றை தரையில் விரித்து, கத்தரி, மெஷின் மேலே போர்த்தும் பேப்பர் போர்வை என்று ஒவ்வொன்றையும் சானிடைஸ் செய்து எடுத்து தயாரானார்.  வேலை முடிந்ததும் அந்த இடம் முழுக்க அவரே சுத்தம் செய்து எடுத்துச் சென்று விடுவார்.

சிலபேர் பேசிக்கொண்டே செய்வார்கள்.  சிலர் மௌனமாகச் செய்வார்கள்.  இவர் பேசும் ரகம்.

ஒவ்வொரு கஸ்டமர் ஒவ்வொரு விதம் என்று சில அனுபவங்களை சொன்னார்.  ஒருவார்த்தை கூட பேசாமல் மௌனமாகவே இருக்கும் கஸ்டமர், உள்ளே நுழைந்தது முதலே கடுகடுவென்று இருக்கும் கஸ்டமர்,  குறையாகச் சொல்லும் கஸ்டமர், "உங்களைப்போல" முகம் மலர வரவேற்றுப் பேசும் கஸ்டமர்,  என்று வகைகளை சொன்னார்.  நானும் என் சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன்.

பேசிக்கொண்டே இருந்ததில் எங்கெங்கோ சென்றது சப்ஜெக்ட்.  விவேக் பற்றி பேசும்போது திடீரென்று அவர் சொன்னார்.  "ஒவ்வொரு 7 தலைமுறைக்கும் வாரிசு நின்று போகும் என்று சொல்வார்கள்"

"அவர் மகன் கூட முன்னரே இறந்து விட்டார் பாருங்கள்" என்றார்.

அதாவது 7 வது தலைமுறையோடு அந்த தலைமுறை வாரிசற்றுப் போகும் என்று.  அவர்கள் சொத்து பொதுவில் வந்து விடுமாம்.  நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை.  அப்படி எதுவும் நான் கேள்விப்பட்டதில்லை.  சரி என்றும் தோன்றவில்லை.  

ஒவ்வொருவருக்கும்  பிறவியில் ஏழு ஜென்மம் உண்டு என்று சொல்வார்கள்.  மூன்று தலைமுறைகளை நினைவில் வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.  சிலர் நான்கு தலைமுறைகளோ அதற்கும் மேலோ நினைவில் வைத்திருப்பார்கள்.  கீதா அக்கா கூட முன்பு ஒரு பதிவில் அவர்கள் முன்னோர் பற்றிக் கூறி இருந்த நினைவு.

எனக்கு 'நாலாம் தலைமுறையைப்பார் ' பழமொழி நினைவுக்கு வந்தது.

===================================================================================================

கீழே உள்ள இந்த புகைப்படத்தை நடிகர் விவேக் தன் ஆயுள் பூரா தேடி இருந்திருக்கிறார்.  பத்திரிகையாளர் ஜென்ராம் அவர் பேட்ச் என்பதும் தெரிகிறது.  அவர் மறைந்த உடன் அவருடன் பயிற்சிபெற்ற ஒருவர் இதைப் பகிர்ந்திருக்கிறார்.  ஜீவி ஸாரும் வாட்ஸாப்பில் இந்தப் படத்தை அனுப்பி இருந்தார். தினமணியில் செய்தியாகவும் படித்தேன்.

இந்தப் படத்தில் மேலே நிற்கும் வரிசையில் விவேக் இருக்கிறார்.


இவர் அங்கு பயிற்சியில் இருந்த காலங்களில்  நான் அந்த தல்லாக்குளம் பகுதியில் ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறைகளுக்கும் மேல் சைக்கிளில் அலைந்திருக்கிறேன்.

==========================================================================================================

இன்று என் அப்பாவின் நினைவு தினம்.  ஐந்து வருடங்களுக்கு முன் அவர் மறைந்த தினம்.   என் அம்மா மறைந்ததும் அவர் என் அம்மா பெயரில் 'ஹேமாஞ்சலி' என்று ஒரு புத்தகம் போட்டு உறவினர் வட்டத்துக்கு மட்டும் கொடுத்தார்.  அதில் அவர் உருகி உருகி அம்மா பற்றி எழுதி இருந்தார்.  அதிலிருந்து சில வரிகள்...




............. இளமைக்கும் முதுமைக்கும் 
இல்லறமே பாலம்;
இடையிலது முறிவதுதான் 
எஞ்சியவரின் பாவம்........


....................அறியாமல் பிழையுனக்கு ஆயிரம் செய்திருப்பேன் 
தெரியாமல் புரியாமல் தீங்கும் இழைத்திருப்பேன் 
பெரியமனதுடனே எனை மன்னித்து அருள்செய்வாய் 
பிறழாத அன்புகொண்ட என்பெற்றி அறிந்தவள் நீ ...........


.....................எல்லாக் கொடுமைகளின் இறுதிக் கட்டம்
நானும் அவளும் 
புரிந்தும் பேசவில்லை 
பேசியும் கேட்கவில்லை 
இப்படித்தான் இது என்று தாங்கிக் கொள்ள 
இரும்புமனம் எனக்கில்லை. எனக்கே இல்லை...




===========================================================================================================


 கணையாழியின் கடைசிப் பக்கங்கள் பகுதியில் சுஜாதா தான் யார் என்று சொல்லாமல் முதலில் 'ஸ்ரீரங்கம் எஸ் ஆர்' என்று எழுதி வந்தார்.  அதில் சகட்டுமேனிக்கு எல்லோரையும் விளாசிக் கொண்டிருந்தார்.  தமிழக அரசியல்வாதிகள், கேபி உள்ளிட்ட தமிழக இயக்குனர்கள், திரைப்படங்கள், சக எழுத்தாளர்கள் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை.  சமயங்களில் தன்னைத்தானே கூட சொல்வார்.


ஒரு இதழில் எழுதி இருக்கிறார்.." ஆண்டாளு அம்மாள், சுஜாதா, பரகால ஜீயர்...அடுத்த சமயம் நான் இல்லாதபோது யார் எழுதப் போகிறார்கள்?  ரிக் ஷாக்கார முனுசாமியா?"

அதாவது அவர் இல்லாத சமயம் கணையாழியின் கடைசிப் பக்கத்தை இவர்கள் எல்லாம் எழுதினார்களாம்.  ஆண்டாளு...   ஸ்ரீரங்கம் தாயார், சுஜாதா, தெரியும் பரகாலஜீயர்...  புரிந்து கொள்ளலாம்.  ஆக, வெவ்வேறு பெயர்களில் இவரே எல்லாவற்றையும் எழுதி விட்டு இப்படி ஒரு கேள்வி!  ஆனால் முனுசாமி பெயரில் நிச்சயம் வந்திருக்காது!

கணையாழியில் படித்துவிட்டுதான்,  சென்ற வாரம்


என்று கேட்டிருந்தேன்.  அது படிக்கப்படாமலேயே, கவனிக்கப் படாமலேயே சென்றது.


====================================================================================================

என் பைண்டிங் கலெக்ஷனிலிருந்து எடுத்து பேஸ்புக்கில் சென்ற வருடம் கொரோனா லாக்டவுனில் பகிர்ந்து இது...


ரசிகமணி வீட்டு தோசை
-----------------------------------------------------------

"டி கே சி வீட்டு புகழ்பெற்ற தோசையைப்பற்றிச் சொல்லாவிட்டால் நான் நன்றி கொன்றவனாவேன்" என்கிறார் பாஸ்கரத் தொண்டைமான்.
"டி.கே.சி வீட்டுத் தோசையைத் தின்பதற்காகவே சென்னையிலிருந்து குற்றாலத்துக்குப் பயணம் மேற்கொள்ளலாம். தோசை என்றால் உங்கள் வீட்டு தோசை, எங்கள் வீட்டு தோசை அல்ல.
தோசைக்கென்றேஒரு தனி அரிசி, 'குலை வாளை' என்று பெயர். அதைப் பயிரிட்டு வைத்திருப்பார் அபரிமிதமாக.
அந்த அரிசியோடு அளவான உளுந்து, அந்த அரிசி மாவையும், உளுந்து மாவையும் ஆட்டுவதற்கென்றே தனி உரல் - நல்ல அகலமானது - இவ்வளவுக்கும் மேலே அந்த தோசை சுடுகின்ற 'சைஸ்' நிருமதி பிச்சம்மாள் அண்ணி ஒருவருக்குதான் தெரியும்.
ஐம்பது தோசை சுட்டாலும் சரி, ஆறு நூறு தோசை சுட்டாலும் சரி எல்லாம் ஒரே சைஸ், காம்பஸ் வைத்து வட்டம் போடுபவர்களுக்குக் கூட கொஞ்சம் கை பிசகும். அண்ணி சுடும் தோசை எல்லாம் நல்ல பூரண சந்திரன் போல வட்ட வடிவமே.



இதையெல்லாம் விட தோசையின் மென்மை : அனிச்ச மலர் மிகவும் மென்மை வாய்ந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறோம். பார்த்ததில்லை! அனிச்ச மலர் எப்படி இருக்குமென்றால், டி கே சி வீட்டு தோசையைப் போல என்று சொல்வது அனிச்ச மலருக்கு நல்ல விளக்கம்" என்கிறார் திரு. பாஸ்கரத் தொண்டைமான், "ரசிகமணி டி கே சி" என்கிற தனது புத்தகத்தில்.

டி கே சி யின் புதல்வர் டி சி தீத்தாரப்பன் இளவயதிலேயே காசநோயால் இறந்துவிட, இழப்பின் துக்கம் தாங்காத டி கே சி தம்பதியினர் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை வீட்டை விட்டு குற்றாலத்தில் வந்து தங்குகிறார்கள். அவர்களுடைய மகன் இழப்புக்கு வருந்தி கவிமணி ஒரு இரங்கற்பா அனுப்புகிறார்.

"எப்பாரும் போற்றும் இசைத் தமிழ்ச் செல்வா
என் அப்பா அழகிய செல்லையா நான்-
இப்பாரில் சிந்தை குளிர சிரித்தொளிரும் உன் முகத்தை
எந்த நாள் காண்பேன் இனி"

இந்தப் பாட்டைப் படித்ததும் டி கே சி சோகத்தால் துடித்திருப்பார் என்றா நினைக்கிறீர்கள்? மகனை மறந்தார். பாட்டின் அருமையை அனுபவித்தார். "இப்படி ஒரு
அருமையான
கவி தமிழுக்குக் கிடைக்குமானால் உயிரைக் கொடுத்துக் கூட அதைப் பெறலாம்" என்றாராம்.
டி கே சி யின் கவிச்சுவை பற்றி சொல்ல வேண்டுமென்றால், 1-8-1937 ல் வெள்ளக்கால் ராவ் சாகிப் வெ ப சுப்ரமணிய முதலியாருக்கு எண்பதாம் ஆண்டு விழா. தமிழ்நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வாழ்த்துப் பாக்களும், கடிதங்களும் வந்திருக்க, பாடியவரின் பெயரும் ஊரும் இல்லாமல் ஒரு பாடல் வந்திருந்ததாம். எல்லோரும் அதைப் பற்றிக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த டி கே சி பாடலைப் படிக்கிறார்.
"எண்பதாண்டான இளைஞனே!
இன்னமுதின் பண்பெலாம் காட்டு தமிழ்ப் பாவலனே!
நண்பனே! வெள்ளக்கால் செல்வனே!
வேள் சுப்ரமணிய வள்ளலே!
வாழ்க மகிழ்ந்து"
படித்தார் ஒருமுறை. பாடியும் பார்த்தார். "தமிழ்நாட்டில் இப்படி எழுத ஒரே ஆள்தான் உண்டு. கவிமணியின் வரிகள் இவை. இதை உடனே அச்சிட்டு அனைவருக்கும் கொடுங்கள்" என்றாராம்.

அதான் ரசிகமணி.

=======================================================================================================

என் பாஸின் தோழி ஒருவர் நான் பிளாக்கில் எழுதுகிறேன் என்று தெரிந்ததும் அவற்றில் சிலவற்றை அனுப்புங்களேன், நான் படிக்க ஆவலாக இருக்கிறேன் என்று பாஸிடம் சொல்லிருக்கிறார். நாங்களே படிப்பதில்லை என்று இவர் சொல்லியும் பிடிவாதமாக அவர் கேட்க, நான் எதை அனுப்பலாம் என்று ஆராய்ந்து இதை அனுப்பினேன். அனுப்புவதற்குமுன் அந்தப் பதிவை மறுபடி பார்க்க நேரிட்டபோது ஜீவி ஸாரின் இரண்டு கமெண்ட்டுகள் என்னைக் கவர்ந்தன.




அது சரி.. நான் எழுதியதைப் படித்துவிட்டு பாஸின் தோழி என்ன சொன்னார் என்று ஆர்வம் வருகிறதல்லவா... இப்போதெல்லாம் அவர் பாஸைக் கண்டாலே ஒளிந்துகொள்கிறார்.

================================================================================================================

இப்பவும் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லலாம்.



=======================================================================================================








=====================================================================================================

164 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் எல்லாருக்கும்

    வீட்டிற்கு வந்து முடி திருத்துகிறார்களா அட!

    அப்பாவின் நினைவு தினக் கவிதை நெகிழ்ச்சி பொறுக்கிக் கொண்டேன் வழக்கம் போல

    மீண்டும் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே..  கீதா.. வாங்க..  வணக்கம்.  உடனே வந்துட்டீங்க..

      //வீட்டிற்கு வந்து முடி திருத்துகிறார்களா அட!//

      இப்போ  என்ன,நான் சின்ன பிள்ளையா இருக்கறப்போவே வீட்டில் வந்து முடி திருத்தி இருக்கிறார் விஸ்வநாதன் என்கிறவர்.

      அப்பாவின் நினைவுதினக் கவிதை யாவும் அப்பா எழுதியது.

      நீக்கு
    2. கிராமத்தில் வீட்டிற்கு வருவாங்க ஸ்ரீராம் என் மகனுடன் நான் ஊருக்குச் சென்ற போதெல்லாம் அங்கு ரத்தினம் என்பவர்தான் மகனுக்கு ஆஸ்தான முடி திருத்துபவர் வீட்டுத் திண்ணையில் நடக்கும் ஏனென்றால் மகன் முடி திருத்திக் கொள்ள ஒத்துழைக்க மாட்டான் அவரிடம் மட்டும் தான் செய்து கொள்வான்!!

      சென்னையிலும் என்பதைப் பார்த்ததும் கேட்கத் தோன்றியது ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    3. கணினி இப்போது அவைலபிள்...அதான் வந்துவிட்டேன் அப்புறம் என்றால் பிசி ஆகிடும் என் கணினி இன்னும் சரியாகவிலையே..

      ஓ அப்பா எழுதிய கவிதைகளா!! வாசித்துவிட்டேன் நீங்கள் கொடுத்த் விளக்கத்தை படத்தின் மேல். முதலில் கவிதை மட்டுமெ பட்டதா உடனே நீங்கள் எழுதியதோ என்று நினைத்துவிட்டேன்...விளக்கத்தை வாசிக்காமல் கருத்து போட்டுவிட்டேன்...

      ஒவ்வொன்றும் நிதானமாக வாசிக்க வேண்டும்

      கீதா

      நீக்கு
    4. எனது இளமைப்பருவம் தஞ்சையில்!  அங்கு அப்பாவுக்கு வீட்டுக்கு வந்து முடி திருத்திச் செல்வார் விச்சு!!

      ஓ..   உங்கள்  மகனுக்கும் அந்த அனுபவம் உண்டா?

      மெதுவாக ஒவ்வொன்றாக வாசித்துக் கருத்திடுங்கள்...  வீ ஆர் வெயிட்டிங்!

      நீக்கு
  2. இந்தப் பதிவு என் டாஷ் போர்டில் அப்டேட் ஆகவே இல்லை. என்னடா இதுனு யோசித்துக்கொண்டே வந்தால், பதிவும் வந்து உடனடியாகக் கருத்துப் பரிமாற்றங்களும் நடந்திருக்கின்றன. தி/கீதா வந்துட்டார் இல்லையா? அதனால் இனிமேல் தினம் தினம் நான் தனியாகப் பேசிட்டு இருக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீப காலங்களில் எனக்கும் அப்படி நடக்கிறது.  கில்லர்ஜி வெங்கட், தஞ்சையம்பதி பதிவுகள் அப்டேட் ஆகவில்லை இன்னும்!

      நீக்கு
    2. தஞ்சையம்பதி எதுவும்வ் வரவிலையே

      கில்லர்ஜி எனக்கு இப்போதுதான் அப்டேட் ஆனார்! வெங்கட்ஜி அப்டேட் ஆகிவிட்டார்...

      கீதா

      நீக்கு
    3. தஞ்சையம்பதி இன்று எதுவுமில்லை.  நேற்று வந்திருந்ததைச் சொன்னேன்.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் பெருகட்டும். இன்னும் பதிவைப் படிக்கலை. பெரிசா இருக்கோ? படிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. நானும் ரொம்ப நீளமா போகக்கூடாதுன்னு பார்க்கறேன்.  எபப்டியோ பெரிசாயிடுது பதிவு.

      நீக்கு
  4. இன்றைய பகுதியில் அதிகம் கவர்ந்தது அப்பாவின் நினைவுகளும் கவிதைகளும். நன்று.

    பதிலளிநீக்கு
  5. எல்லாம் படிச்சுட்டேன். பாஹே அவர்கள் எழுதியவை முன்னர் படிச்சிருக்கேனோ? படித்த நினைவு இருக்கு. முடி வெட்டிக் கொள்ள வீட்டுக்கே வருவது புதுசெல்லாம் இல்லை. இங்கேயும் போன வருஷ லாக்டவுனின் போது வந்தார். இப்போது வருவதில்லை. நாங்க ராஜஸ்தான், குஜராத்தில் இருந்தப்போ ராணுவத்தினருக்கான முடிவெட்டுபவர் மாசம்/அல்லது 2 மாசங்களுக்கு ஒருதரம் வீட்டிற்கு வந்து மாமனார், நம்மவர், பிள்ளை ஆகியோருக்கு முடிவெட்டிச் செல்வது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஹே முன்னர் இதைப் படித்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.  உங்களுக்கெல்லாம்த் தூறல்கள் புத்தகம்தான் கொடுத்த்தேன்.  இது கொடுக்கவில்லை.

      லாக்டவுன் காலத்தில் நிறைய இடங்களில் வீட்டுக்கு வந்து சேவை செய்தார்கள் - காசு வாங்கி கொண்டுதான்!  அது இன்னும் தொடர்கிறது!

      நீக்கு
  6. அதாவது 7 வது தலைமுறையோடு அந்த தலைமுறை வாரிசற்றுப் போகும் என்று. அவர்கள் சொத்து பொதுவில் வந்து விடுமாம். நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அப்படி எதுவும் நான் கேள்விப்பட்டதில்லை. சரி என்றும் தோன்றவில்லை. //

    நானும் கேள்விப்பட்டதில்லை ஸ்ரீராம். கொஞ்சம் ஆராய்ந்தால் புள்ளிவிவரம் கிட்டுமோ? ஆனால் ஏழு தலைமுறை நினைவிருக்க வேண்டுமே. அதிலும் முந்தைய தலைமுறையில் இரண்டு மூன்று மனைவிகள்? அல்லது எக்ஸ்ட்ரா இருந்தால்? எதை வாரிசு என்பார்கள்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுல ஆராய்ச்சி செய்ய வேண்டாம். ஏழு தலைமுறை ஆகும்போது ஓட்டாண்டி ஆவார்கள். இதனை ஆராய்ந்தால் உண்மை புரியும்.

      நீக்கு
    2. அப்படியா என்ன? தலைமுறை தலைமுறையா நாங்க ரிச்சோ ரிச்சுனு சொல்றவங்களூக்கும் இருக்காங்களே நெல்லை

      கீதா

      நீக்கு
    3. நெல்லை...  எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை..


      கீதா...   சில அரசியல்வாதிகள், பிரபலங்கள் எவ்வளவு செலவு செய்தாலும் குறையாத பணம் வைத்திருக்கிறார்கள்!

      நீக்கு
    4. நீங்க ஆராய்ந்து பாருங்க. எழு தலைமுறை வாழ்ந்தவனும் இல்லை ஏழு தலைமுறை கெட்டவனும் இல்லை. நம்ம அரசர்கள் பரம்பரையை ஆராய்ந்தாலும் இதே கதைதான் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    5. //சில அரசியல்வாதிகள், பிரபலங்கள் எவ்வளவு செலவு செய்தாலும் குறையாத பணம் வைத்திருக்கிறார்கள்!// அப்படியெல்லாம் சொல்ல முடியாது ஶ்ரீராம். எத்தனைசாம்ராஜ்ஜியங்கள் சரிந்திருக்கின்றன.

      நீக்கு
    6. சாம்ராஜ்யங்கள் சரிய சில பேராசைகளும் படையெடுப்புகளும் காரணமாயிருந்திருக்கலாம்.  இவர்கள் அதை அறிந்து பணத்தை வெளியில் விடாமல் கவனமாகவே இருப்பார்கள்!

      நீக்கு
    7. என் புக்ககத்தின் குடும்ப மரம் நான் போட்டு வைத்திருந்தேன். இணையத்திலும் அதை இணைத்திருந்தேன். பல்லாண்டுகள் முன்னர். இப்போ அதைத் தேடிக் கண்டு பிடிக்கவே முடியலை!

      நீக்கு
    8. //இவர்கள் அதை அறிந்து பணத்தை வெளியில் விடாமல் கவனமாகவே இருப்பார்கள்!// பணம் இவர்களை விட்டு நீங்க வேண்டும் என்ற நேரம் வந்தால் அதற்கேற்றார்  போல் தவறான முடிவுகளை எடுப்பார்கள், அல்லது காலம் சதி செய்யும். தவறான வழியில் வந்த பணம் நிலைக்காது. 

      நீக்கு
  7. பொதுமக்கள், கருணாநி பேச்சைக் கேட்கவும், எம்ஜிஆரைப் பார்க்கவும்தான் காத்துக்கொண்டிருப்பார்கள். வாக்களிக்கும்போது அவர்கள் மனதில் எம்ஜிஆரே நிற்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மண்டேலா படத்தில் ஒரு காட்சி.  ஒரு ஓட்டுக்காக ஒரு வயதான மாதை பொத்திப் பொத்தி வைத்திருப்பார்கள்.  கூட இருப்பவர் யாருக்கு வோட்டுப் போடுவே?"என்று கேட்பார்.  அவர் கேட்பது ஊர்ப் பஞ்சாயத்துத்தலைவர் எலெக்ஷன்.  அந்த பாட்டி இதென்ன கேள்வி......  எம்ஜாருக்குதான்" என்பார்!  அட...  எம்ஜார் செத்துட்டார்"" என்று இவர் சொன்னது äஎ..  எம்ஜாரு செத்துட்டாரா..."என்று அந்தப் பாட்டியும் உயிரை விட்டு விடுவார்!

      நீக்கு
    2. //கருணாநி பேச்சைக் கேட்கவும், எம்ஜிஆரைப் பார்க்கவும்தான் காத்துக்கொண்டிருப்பார்கள்.// கருணாநிதி சிறந்த பேச்சாளர்தான்,ஆனால் அவரை விட சிறந்த பேச்சாளர்கள் கழகத்தில் உண்டு. அந்தக் கால தி.மு.க கூட்டங்களில் கருணாநிதி, மதியழகன்,அன்பழகன்,நெடுஞ்செழியன்,அண்ணாதுரை என்ற வரிசையில்தான் பேச வைக்கப் படுவார்களாம். திறமையில் குறைந்தவருக்கு முதல் வாய்ப்பு. கருணாநிதியின் நிபுணத்துவம் அவருடைய அரசியல் சாணக்கியத்தனம்.

      நீக்கு
    3. ஒவ்வொருவராக மறைய மறைய வரிசை  மாறியது!

      நீக்கு
  8. விவேக்கின் மரணம் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. நல்ல மனிதர். படத்தில் அவரை எளிதாக அடையாளம் காண முடிந்தது. கல்லூரியி படிக்கும் போது அவர் பரதநாட்டியம் ஆடியிருக்கிறார் அப்படியான படமும் தகவலும் முன்பு அவர் சினிமாவில் நுழைந்த போது ஏதோ ஒரு பத்திரிகையில் பார்த்த நினைவு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நானும் படித்த நினைவு.  விவேக் மரணம் ஜீரணிக்க முடியாததுதான்.

      நீக்கு
  9. அப்பா/அம்மாவின் நினைவுகள் என்றுமே போற்றத் தகுந்தது. 2015 ஆம் ஆண்டில் திரு ஜீவி சொன்ன கருத்துக்களுக்கும் இப்போது என்னோட கதை "பாசவலை"க்கு அவர் எழுதிய கருத்துரைகளுக்கும் எவ்வளவு வேறுபாடுகள்? மாற்றங்கள் இதிலும் உண்டு என்பது ஆச்சரியமே! ஆனால் பலரும் உண்மைக்கதை/கதை அல்ல நிஜம் என்னும் பெயரில் எழுதியது/எழுதுவது உண்டு. நான் மட்டும் புதுசல்ல! அன்றும்/இன்றும்/என்றும் அதையே தான் சொல்லி வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபிப்ராயங்கள் மாறலாம்.  மாறாமல்தான் இருக்கக் கூடாது!

      நீக்கு
    2. அட? அப்படீங்கறீங்க? எனக்கெல்லாம் அபிப்பிராயங்கள் அவ்வளவு எளிதில் மாறாது! எங்க வீட்டில் "நீ பிடிச்ச பிடி" என்பார்கள். ஆனால் அதான் சரியாய் இருக்கும் என்பதைப் பின்னால் உணர்ந்தாலும் அவங்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள். :))))))

      நீக்கு
  10. விவேக்கைப் பற்றி அளவுக்கு அதிகமாக மீடியாக்கள் எழுதுகின்றன என நினைக்கிறேன். அவரின் நல்ல குணம், செய்கை பற்றி எழுதலாம். ஏதாவது தீனி கிடைக்குமா என்று அதீதமாக அவர் வீட்டைச் சுற்றி வருகின்றனர். முடிதிருத்தும் கலைஞர் அகப்பட்டால் அவரிடமும் விவேக் பற்றிப் பேசி காணொளி வெளியிடுவார்கள் போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரபரப்பான செய்திகளுக்கு அலைகிறார்கள்.  ஆனால் விவேக் செய்தி மக்கள் மனதிலிருந்து மறைய நீண்ட நாட்களாகும்.

      நீக்கு
  11. ரசிகமணி வீட்டு தோசை பற்றிக் கல்கியும் எழுதி இருக்கிறார். இப்போது அவர் வாரிசுகள் யார் இருக்காங்கனு தெரியலை. குற்றாலம் போனப்போ அவர் வீட்டைத் தேடினோம். பலருக்கும் புரியலை! :( சுஜாதா/ஶ்ரீரங்கம் எஸ்.ஆர் இருவரும் ஒன்றே என்பதை நான் நாலைந்து இதழ் கணையாழி படிச்சப்போவேக் கண்டு பிடிச்சுச் சித்தப்பாவிடம் சொன்னேன். அவருக்கு உள்ளூர ஆச்சரியம். நான் எழுத்தில் உள்ள சில குறிப்பிட்ட நடையைப் பற்றிச் சொன்னதும், இத்தனை கூர்ந்து கவனிப்பாயா? என்றும் கேட்டிருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்கி எழுதியதை நான் படித்ததில்லை.  ஸ்ரீரங்கம் எஸ் ஆர், சுஜாதா - நீங்கள் அப்போதே கண்டுபிடித்து விட்டது ஆச்சர்யம்.

      நீக்கு
    2. //குற்றாலம் போனப்போ அவர் வீட்டைத் தேடினோம்.// - அடக் கடவுளே... கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடியிருக்காங்களே....

      சித்திர சபைக்குத் திரும்பும்போது கார்னர் வீடு ரசிகமணியினுடையது. அங்கு பெரிதாக எழுதியிருந்தார்கள் என்று நினைவு. புகைப்படம் எடுத்திருந்தால் பகிர்கிறேன்.

      நீக்கு
    3. பின்னாடி நாங்களே கண்டு பிடிச்சோம். போய் இறங்கிய உடனே கண்டுபிடிச்சுப் பார்க்கும்படியா எல்லாம் இல்லை. பலருக்கும் ரசிகமணி டி.கே.சி. என்றால் புரியவே இல்லை.

      நீக்கு
  12. விவேக் அவர்கள் திடீரென மறைந்தது அதிர்ச்சி/துக்கம்/வருத்தம். ஆனால் விதி இப்படி இருக்க யாரைச் சொல்லுவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலவற்றை டைஜஸ்ட் செய்வது கடினம். விவேக்கின் மரணமும்தான்.

      நீக்கு
    2. சொல்லத் தயக்கமாக இருக்கிறது. விவேக் மிகச் சிறிய வயதில் போனது வருத்தம் தான் என்றாலும் உங்களை எல்லாம் போல் நான் நினைக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் ஒரு விஷயம் உறுத்தல். நூறு சதவீதம் அடைப்பு இருந்த மனிதரால் எப்படி இவ்வளவு சுறுசுறுப்புடன் இருக்க முடிந்தது. கொஞ்சமானும் மூச்சுத்திணறல், வலி, படபடப்பு, மயக்கம், வந்திருக்காதா? என் நாத்தனார் கணவருக்கு 60% அடைப்பு இருந்ததுக்கே அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதைப் பார்த்திருக்கோம்.

      நீக்கு
    3. //நூறு சதவீதம் அடைப்பு இருந்த மனிதரால் எப்படி இவ்வளவு சுறுசுறுப்புடன் இருக்க முடிந்தது. கொஞ்சமானும் மூச்சுத்திணறல், வலி, படபடப்பு, மயக்கம், வந்திருக்காதா?// இது எனக்கும் தோன்றியது.  சிலர் உடம்பு வாகு அப்படியா? அல்லது அவருக்குத் தென்பட்ட சிம்டம்களை அவர் அலட்சியப் படுத்தி விட்டாரா? எங்கள் தூரத்து உறவில் ஒரு இளைஞன் சற்று ஒபீஸாக  இருப்பான். நிறைய சிகரெட் குடிப்பான், அவ்வப்பொழுது மது அருந்துவான், தினசரி, டென்னிஸ், யோகா போன்ற பயிற்சிகள் செய்வான். தான் ஆரோக்கியமாக இருப்பதாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தான். ஒரு நாள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த பொழுது ஸ்ட்ரோக் வந்து விழுந்து விட்டான். அதற்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது  கார்டியாக் அரெஸ்ட் வந்து இறந்து விட்டான். அப்பொழுது அவனுக்கு முப்பத்தைந்து வயதுதான்.  சில விஷயங்களை விஞ்ஞானத்தால் விளக்க முடியவில்லை. 

      நீக்கு
  13. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
    எல்லோரும் என்றும் பாதுகாப்புடன் இருக்க இறைவன் அருள
    வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. இங்கே எல்லாம் யாரும் வீட்டுக்குள் வருவதில்லை.
    மாப்பிள்ளைதான் தன் பசங்களுக்கு முடி சேவை செய்கிறார்.
    உங்கள் வீட்டுக்கு வருபவரின் நேர்த்தி வியக்க வைக்கிறது.

    ஏழு தலைமுறைக்கப்புறம் வாரிசில்லாமல் போகுமா.
    புரியவில்லை. எங்கள் வீட்டில் ,சிங்கத்தோடு சேர்ந்து
    ஐவர். அதில் ஒருவருக்குத் தான் பேத்தியோ
    பேரனோ பிறக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் ஊரில் ஜாக்கிரதை ஜாஸ்தி.  வீட்டுக்கு வரமாட்டார்கள்.

      ஏழாவது தலைமுறை விஷயம் புதிர்தான்.

      நீக்கு
  15. இரும்புமனம் என்று வந்திருக்க வேண்டும் இல்லையா ஸ்ரீராம்? டைப்போ.

    என்னைப் பற்றி அறிந்தவள் நீ? டைப்போ?

    அழகான கவிதாஞ்சலி! நெகிழ்ச்சியும் கூடவே..

    அவரது திறமை உங்களுக்கும் வந்திருக்கிறது ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கிறேன் கீதா..  ஆனால் பெற்றி என்றுதான் புத்தகத்தில் இருக்கிறியாது..  அது அந்தக் கால பாஷையோ என்று நினைத்தேன்.  அப்பா அப்படி சில வார்த்தைகள் உபயோகிப்பார்.

      நீக்கு
  16. சுஜாதா சாரின் ,இந்த பன்முகங்கள் எனக்கு அன்னியனை நினைவூட்டியது:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா..  ஹா...   அந்நியனில் சுஜாதா பங்களிப்பு உண்டே...

      நீக்கு
  17. அப்பாவின் கவிதை முகம் கண்ணீர் வரவைக்கிறது.
    எத்தனை அழுத்தத்தில் எழுதினாரோ.

    மிகக் கடினமான தருணங்களாக இருந்திருக்க வேண்டும்.
    இதெல்லாம் மாறாத வடுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டுக்கு, காட்டுக்கு வரி படிக்குபோதெல்லாம் மனம் / கண்கலங்கி விடுவேன்.

      நீக்கு
  18. வைத்தீஸ்வரன் என்ற பெயரிலும் சுஜாதா எழுதியிருக்கிறாரோ?

    எல்லோரையும் சகட்டுமேனிக்கு விளாசிய அந்த விளாசலை முடிந்தால் பகிருங்களேன் ஸ்ரீராம். அல்லது இணையத்தில் கிடைக்குமோ? பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை.  வைத்தீஸ்வரன் வேறு ஆள்.

      இங்கேயே கொஞ்சம் கொடுத்திருக்கேனோ...   வேறு கிடைத்தால் பின்னர் பகிர்கிறேன் கீதா.

      நீக்கு
    2. வைத்தீஸ்வரன் என்ற பெயரிலும் சுஜாதா எழுதியிருக்கிறாரோ?// அவர் தீவிர வைஷ்ணவராயிற்றே? வைத்தீஸ்வரன் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்வாரா?

      நீக்கு
    3. இந்த குறிப்பைதான் பதிவில் நான் மறைமுகமாக சொல்லி இருக்கிறேன்!

      நீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. ரசிகமணி ,மகனைப் பற்றி ஐயா கி.ராஜ நாராயணனும் இதே போல எழுதி இருக்கிறார்.
    தோசையைப் பற்றியும் தான்.
    அவர்கள் காலம் சாரல் காலம்.
    நமக்குப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவருக்கொருவர் எழுத்தாளர்கள் எவ்வளவு கூடி வாழ்ந்திருக்கிறார்கள்...  கிரா நான் படித்ததில்லைம்மா.

      நீக்கு
    2. அது யாரிட்ட என்ன சாபமோ தெரியவில்லை.

      எழுத்தாளர்கள் ஒன்று சேரும் பொழுது எழுத்து பற்றியே பேச மாட்டார்கள்.. இந்த மாதிரி ஏதானும் தான். பிரபல எழுத்தாளர்கள் சிலரிடம் சோதித்துக் கூடப் பார்த்திருக்கிறேன்.. இவர்கள் பிறர் எழுத்தை வாசிக்கக் கூட மாட்டார்களா என்று தோன்றும். ஒரு தடவை நா.பா.விடம் "இந்த வாரம் ஆ.வி.யில் ஜெயகாந்தன் முத்திரை கதை பிரமாதம்.. வாசித்தீர்களா?" என்று கேட்டேன்.

      நா.பா. "அப்படியா?.." என்று அசுவாரஸ்யமாகக் கேட்டதோடு சரி.

      ஆனால் அவர் எழுத்தைப் பாராட்டி அவரிடமே சொல்லும் பொழுது சொல்வதை தன்னை மறந்து ரசித்துக் கேட்பார். அவர் கல்கியில் எழுதிய காலத்தில் அவர் கதைகளை விமரிசித்து நிறைய எழுதியிருக்கிறேன். அடுத்த இரண்டு நாட்களில் மணிமணியான கையெழுத்தில் கார்டு சைஸில் அவர் பெயர் பொறித்த அட்டையில் பதிலெழுதி விடுவார். 'உங்களைப் போன்ற வாசகர்களின் அன்பு தான் என்னை எழுதவே வைக்கிறது' என்பது போன்ற கவனமாக கோர்த்த வரிகள் அதில் இருக்கும். நடிகர்கள் ரசிகர்களை சேர்த்தது போல தனக்கென்று ஒரு வாசகர் வட்டத்தை அவர்களின் முகவரிகள் சகிதமாக உருவாக்கி வைத்திருந்தார் அவர். பிற்காலத்தில் அவர் 'தீபம்' பத்திரிகையை ஆரம்பித்த பொழுது இந்த சேகரிப்பு அவருக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

      ஜெயகாந்தனோ இதற்கு நேர்மாறு. அவரோடு சரிசமமாக உரையாடுவதற்கே தனித்தகுதிகள் வேண்டும். நாம் ஒன்று கேட்டால் பட்டென்று குட்டியாக "அதற்கென்ன?"என்பது மாதிரி எதிர்க்கேள்வி வரும். அந்த 'அதற்கென்ன?' என்பதிலேயே சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் தடுமாறிப் போவோம்.
      நறுக்குத் தெரித்தாற் போல ஓரிரண்டு சொற்கள் தாம். எத்தனை ஆண்டுகள் இடைவெளி இருந்தாலும் ஒரு வினாடியில் அதை சரி செய்வார்.
      போன் போட்டால், "சொல்லுங்க, ஜீவி.." என்பார். ஏதோ விட்ட உரையாடலைத் தொடர்கிற மாதிரி.

      மவுண்ட் ரோடு அண்ணா சிலைக்கு அருகே பிரியும் எல்லீஸ் சாலையின் ஆரம்பத்தில் இருந்த குறுக்குத் தெரு நல்லத்தம்பி தெரு. இந்தத் தெருவிலிருந்த ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்தது 'தீபம்' பத்திரிகை ஆபிஸ்.
      முதல் மாடியில் ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்த 'கல்பனா' பத்திரிகை அலுவலகம். இரண்டு ஜெயிண்ட்கள் ஒரே கட்டிடத்தில்.

      ஜே.கே.யை எப்பவாவது தான் பார்க்கலாம். ஆனால் அறந்தை நாராயணனை எப்பவும் பார்க்கலாம். அற்புதமான மனதிற்கு மிகவும் இசைந்த தோழர்.

      எதையோ சொல்ல ஆரம்பித்து எங்கேயோ எண்ணம் சிதறி விட்டது. நான் சொல்ல நினைத்தது இது தான். சுஜாதா காலமானவுடன் அவருக்கான அஞ்சலி கூட்டத்தில் 'சுஜாதா வீட்டு காஃபி அருமையாக சுவையாக இருக்கும்' என்று ஒரு பிரபல எழுத்தாளர் பேசினார்.

      நீக்கு
    3. இந்த்ச் மாதிரி இரண்டொரு சொந்த சமாச்சாரங்கள். அவ்வளவு தான். ஒரு எழுத்தாளரின் இரங்கல் கூட்டத்திற்கான பேச்சு போலவே அது இல்லை. இப்பொழூது நினைத்துப் பார்த்தால் இது அந்தக் கோட்டத்திற்கு மிகச் சரியான பேச்சு போலத் தோன்றுகிறது. எழுத்தாளன் என்பவனும் மனிதன் தான். அவன் எழுத்தைத் தாண்டி அவனிடம் தான் வைத்திருந்த தனிப்பட்ட நேசத்தை அவர் பகிர்ந்து கொண்டிருந்திருக்கிறார் என்று இப்பொழுது புரிகிறது.

      நீக்கு
    4. கோட்டத்திற்கு -- கூட்டத்திற்கு

      நீக்கு
    5. ஆனால் எழுத்தை வைத்து இன்னார்தான் எழுதினர் என்று சட்டென அடையாளம் காண முடிந்திருக்கிறது.

      நீக்கு
    6. ஜேகே, நாபா, அறந்தை நாராயணன் பற்றய சுவாரஸ்யமான மேலாதிக்கத் தகவல்களுக்கு நன்றி ஜீவி ஸார்.  ஜேகேயிடம் உங்கள் பெயர் சொன்னால் புரியுமளவு நட்பு இருந்ததா?  அட...

      நீக்கு
    7. ஆமாம், ஸ்ரீராம். தோழமை என்று சொல்லலாம் என் வசந்த கால நினைவுகள் வாசித்திருக்கிறீர்களே! அதில் எழுதியிருக்கிறேன். 1964-ல் துளிர் விட்டது. பின் ஆசானானார். மாணவனாக கல்வி கற்றேன். இன்றும் அவரின் பாதிப்பு (influence) என்னில் நிறைய உண்டு. வெகு அருகில் வசித்தும் கடைசி பத்தாண்டுகள் சந்திக்காமலேயே கழிந்தது. இருந்தும் அதனால் எந்த பாதிப்பும் நேர்ந்திடவில்லை.. எதை எழுதும் தருணத்திலும் அவர் அருகாமையை உணர்கிறேன்.

      நீக்கு
  21. //உங்களைப்போல" முகம் மலர வரவேற்றுப் பேசும் கஸ்டமர், என்று வகைகளை சொன்னார். நானும் என் சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன்.//

    நண்பர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.
    விவேக் என்று நன்றாக அடையாளம் தெரிகிறது.





    பதிலளிநீக்கு
  22. //இன்று என் அப்பாவின் நினைவு தினம். ஐந்து வருடங்களுக்கு முன் அவர் மறைந்த தினம்.//
    வணங்கி கொள்கிறேன் அப்பாவை.
    அம்மாவின் மேல் எழுதிய கவிதை மனதை நெகிழசெய்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லறம், பாவம் வரிகள் டைப் செய்யும்போது எனக்கு உங்கள் நினைவும் வந்தது.

      நீக்கு
  23. மற்ற பகிர்வுகளு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராம் உங்கள் பதிவுமா ஈர்க்கவில்லை? ஆச்சரியம்....

    என் சொந்த நொந்த அனுபவம். அதனால் யாரிடமும் நான் எழுதுவதைச் சொல்வதில்லை. கதையும் ஷேர் செய்வதில்லை ப்ளாக் லிங்கும் கொடுப்பதில்லை. என் நட்பு வட்டமும் சரி, உறவினர் வட்டமும் சரி ஒரே ஒரு உறவினரைத் தவிர!!! நானும் அப்படி ஒன்றும் ஊர் ஆறியும் எழுத்தாளரும் அல்லவே!!!!!

    அதுதான் யதார்த்தம். நெகட்டிவாகச் சொல்லவில்லை யதார்த்தத்தைச் சொன்னேன்.

    ஆனால் உங்கள் பதிவுகளும், ப்ளாகும் என்பது ஆச்சரியம்!!! ஸ்ரீராம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Actually relations நம் எழுத்துக்களைப் படிப்பது hindrance என்பது என் அபிப்ராயம். எழுத்து என்பது தனிமனித உணர்வு. அதற்கு வாசகர்கள்தாம் இருக்க முடியும்.

      நீக்கு
    2. @அவசியமில்லை நெல்லை, உறவினர்கள் நல்ல வாசகர்களாக இருக்கும் பட்சத்தில் எந்த பிரச்சனையும் வராது.

      நீக்கு
    3. அதற்கு வாசகர்கள்தாம் இருக்க முடியும். அவர்கள் உறவினர்களாகவும் இருக்கலாம் என்பது உள்கருத்து. வெறும் உறவினர்கள் என்ற ஹோதாவில் படித்தால் நமக்கே சங்கடமாக இருக்கும் என்று நினைக்கிறேன் (ஒவ்வொருத்தர் பெர்சப்ஷன் வேறு என்பதால்)

      நீக்கு
    4. சில சமயங்கள் நான் என்னை மறந்து ஒரு ஃப்ளோவில் சிலவற்றை எழுதி விடுவேன். பின்னர் நினைவு வரும். நீக்குவேன். ஆனாலும் சில விஷயங்கள் அப்படியும் வெளியே வந்துடும். நேற்று உளுந்து வடை மாதிரி! :)))))

      நீக்கு
  25. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா அக்கா...  வாங்க...  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
    2. என்னவோ இந்தப்பதிவு என் "நண்பர்கள் பதிவில்" இன்னமும் வரவேயில்லை.. எப்போதும் உடனே வந்து விடும்.. இப்போதெல்லாம் சமீப காலமாக பதிவு வெளிவந்து ஒருமணி நேரத்தில் வந்து கொண்டிருந்தது. இன்று இன்னமும் வரவில்லை. சுற்றித்தான் வந்திருக்கிறேன்.

      நீக்கு
    3. ஆக, அப்டேட் எல்லோருக்கும் தாமதமாகிறது என்று தெரிகிறது!

      நீக்கு
  26. உண்மையிலேயே உங்கள் அப்பாவின் கவிதைகள் உங்களுடையதைக் காட்டிலும் நன்றாக  உள்ளன.
     
    பாஸ்ஸின் தோழி பாசைக் கண்டால் ஏன் ஒளிந்து கொள்கிறார். காரணம் நீங்கள் அனுப்பிய பதிவு அவருடைய நிஜக் கதையாக இருக்குமோ?  

    புது மேனேஜர் படம் யார் என்ற தெளிவில்லை. காலத்தை குறிப்பிட்டிருந்தால் புரிந்து இருக்கலாம் 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கும் பின்னே? அதுவும் இந்தக் கவிதைகள் இழப்பால் விளைந்த மனக்குமுறல்களின் வெளிப்பாடு.

      நிஜக்கதையோ, இல்லை அந்தத் தோழி என் எழுத்துகளால் பீதியாகி விட்டாரோ..!

      புது மானேஜர் கருணா. அவர் குறிப்புடுவது காமராஜரை.

      நன்றி JC SIR..

      நீக்கு
    2. வைத்தீஸ்வரன் என்ற பெயரிலும் சுஜாதா எழுதியிருக்கிறாரோ?// தெளிவாக தெரிகிறதே?

      நீக்கு
    3. புது மானேஜர் கருணா. அவர் குறிப்புடுவது காமராஜரை.// அது தெளிவாக தெரிகிறதே.

      நீக்கு
    4. தெளிவாகத் தெரிவதை மாற்றி போட்டு விட்டீர்களோ!

      நீக்கு
  27. எனக்கு முன்பு உள்ள ஆறு தலைமுறைகளின் பெயர் எனக்கு தெரியும்.

    என்னையும், மகனையும் சேர்த்தால் எட்டாவது தலைமுறை எனது பெயர்த்திகள் ஒன்பதாவது தலைமுறையாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறு தலைமுறைகள் பெயர் தெரியுமா? பாராட்டப்பட வேண்டிய விஷயம் ஜி.

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    கதம்பம் அருமை. வீடுகளுக்கு வந்து இந்த மாதிரி சேவை செய்பவர்கள் கிராமத்தில் நிறைய பேர்கள் உண்டு. பிறந்த வீட்டில் எங்கள் அப்பாவுக்கு இந்த மாதிரி வந்து முடி திருத்தி செல்வர். இந்த காலகட்டத்தில் இந்த சேவையும் இப்போது கட்டாயமாக தேவைப்படுகிறது.

    ஏழு பிறவியுடன் மனித வாழ்வு முடிந்து விடுகிறதா? செய்த பாவங்கள் ஏழேழு பிறவிக்கும் தொடரும் என்பது உண்மைதான் போலிருக்கிறது. யோசிக்க வேண்டிய விஷயங்கள். ஆனால், யோசிப்பின் முடிவில் ஞானம் உதித்தால் நன்றாக இருக்கும். அது எத்தனையாவது பிறவியிலோ....?

    அந்த படத்தில் விவேக் நன்றாக அடையாளம் தெரிகிறார். நல்ல மனிதர். நல்ல ஆத்மா.. போகும் போது நிறைய இன்னல்களை அனுபவிக்காமல் அகன்று விட்டது.

    உங்கள் அப்பாவின் யதார்த்தமான கவிதைகள் அருமை. முதல் கவிதையும், மூன்றாவதும் மனதில் பாரங்களை உண்டாக்குகிறது. உங்கள் அம்மாவின் மேல், உங்கள் அப்பா வைத்திருந்த பாசம் வரிகளாய் வெளிப்பட்டு மனதை நெகிழ வைத்தது.

    உங்கள் அப்பாவை போலவே நீங்களும் அருமையாய் கவிதைகளை படைக்கிறீர்கள். அப்பாவின் நினைவு தினத்தை பற்றி கூறியது வருந்தத்தக்கது. உங்கள் அப்பாவை நானும் வணங்கி கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் 'பிறவி விஷயங்கள்' எல்லாம் கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் கதைதான் கமலா அக்கா.

      விவேக் பற்ளி நீங்கள் சொல்லியிருப்பது சரி.

      கவிதைப் பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  29. அனைவருக்கும் காலை வணக்கம். வியாழன் பதிவு பாட்ஸ்மேன் பிட்சா? பின்னூட்டங்கள் வந்து கொட்டியிருக்கிறதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா.. வணக்கம். இங்குதான் அனுபவப் பகிர்வுகளின் சங்கமம்தானே..

      நீக்கு
  30. நீங்க உங்க அப்பா மாதிரி இருக்கீங்க.

    பெற்றியோர் - என்று ப்ரபந்தத்துல (திருச்சந்தவிருத்தம்) ல வரும். அதுக்கு பெரியோர்கள், மஹான்கள் என்று அர்த்தம். டிக்‌ஷனரில, இயல்பு, தன்மை, விதம் என்றும் பொருள் உண்டு. இங்கு, என்பெற்றி என்பதற்கு என் பெருமை என்பதைவிட என் இயல்பு என்று பொருள் கொள்ளலாம்.

    (மேலேர்ந்து உங்க அப்பா சிரிப்பாரோ... நான் என்னைப்பற்றி என்று எழுதுவதில் விளைந்த எழுத்துத் தவறு என்று?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பொருளை வைத்து மறுபடி வாசித்துப் பார்க்க்கலாம் நெல்லை..

      நீக்கு
  31. அப்பாவின் கவிதை நெகிழ்ச்சி! இந்த லாக் டவுன் காலத்தில் எங்கள் வீட்டு பெண்கள் முடி திருத்தும் வேலையை கையில் எடுத்துக் கொண்டு விட்டார்கள். "உன்னைத்தான் திருத்த முடியவில்லை, உன் முடியையாவது திருத்துகிறேன் என்று சொல்லியபடி திருத்தியிருப்பார்களோ? தலையைக் கொடுத்த கணவர்கள் சிரித்த முகத்தோடு புகைப்படத்தை வாட்ஸாப்பில் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். All is well!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் உறவினர் இல்லங்களிலும் சில இடங்களில் அப்படி 'திருத்தம்' நடந்ததுதான்!

      நீக்கு
    2. இன்டர்நெஷனல் அளவில் பெண்கள்  கையில் கத்திரி கிடைச்சிருக்கு :))))))))))) கோவிட் காரணமா :)

      நீக்கு
  32. நல்ல உணர்வு பூர்வமான கவிதைகள். உண்மையில் நாம் எல்லோருமே அவரவர் வாழ்க்கைத் துணைவிக்குக் கொடுத்ததைவிட பெற்றது மிக மிக அதிகம் என்றுதான் தோன்றுகிறது.

    40+ நாட்கள் ஆஸ்பத்திரி - என்பது மனதளவில் மிகவும் பாதிக்கக்கூடியது இருவருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை நெல்லை. அந்தக் காலகட்டங்கள் வடுவாகிப் போனவை. அவர்கள் மதுரையில். நாங்கள் சென்னையிலிருந்து மறுபடி மறுபடி விடுப்பு எடுத்து சென்று வந்தோம்.

      நீக்கு
  33. எண் ஏழு (7) தொகுப்பின் போது, இது போலும் சிலரின் நம்பிக்கையை வாசித்துள்ளேன்... ஜென்மங்கள் 7, தலைமுறைகள் 7 எனவும் உண்டு...!

    தந்தையின் கவிதை வரிகள் அருமை...

    ரசிகமணி சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழு என்பது சிறப்பான எண் போலும்!  நன்றி DD.

      நீக்கு
    2. சப்த கன்னியர், சப்த ரிஷிகள்,இப்படி ஏழு நிறையவே இருக்கே!

      நீக்கு
    3. ஆம் நிறையவே உண்டு... கிட்டத்தட்ட 43 தகவல்களை சேமித்து வைத்துள்ளேன்...

      இங்கு சொல்ல வந்தது ஜென்மங்கள் என்பது வேறு, தலைமுறைகள் என்பது வேறு...

      நீக்கு
  34. எம்.ஜி.ஆர்., கமல் ஃபோட்டோவிற்கான கற்பனை வாசகம் சூப்பர்! கே.ஜி.ஜி.சாராக இருந்திருந்தால் இதை ஒரு போட்டியாக அறிவித்திருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  என்ன போட்டியாக இருந்திருக்கும்?

      நீக்கு
    2. வேறு என்ன போட்டி வைக்க முடியும்?  நீங்கள் எழுதியிருப்பது போல் ஒரு கற்பனை உரையாடலை எழுதச் சொல்லித்தான். 

      நீக்கு
  35. எனக்கு முந்தைய ஆறு தலைமுறைகளின் பெயர்களை வலைச்சர ஆசிரியராக இருந்தபோது வெளியிட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பு.  எனக்கு மூன்று தலைமுறை பெயர்தான் தெரியும்.,

      நீக்கு
    2. என் கணவர் "குடும்பம் மரம் "வரைந்து கிளைகளில் எல்லோர் பேரும் குறிபிட்டு
      உள்ளார்கள். என் மாமனாரின் 100 வது பிறந்த நாளில் வெளியிட்டார்கள் சிடியாக.

      நீக்கு
  36. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    நலம் வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  37. இன்றைய கதம்பம் அருமை..

    தங்களது தந்தையார் எழுதியிருக்கும் கவிதை மனதை நெகிழ்த்துகின்றது..

    பதிலளிநீக்கு
  38. // வீட்டுக்கு வந்து முடி திருத்துகின்றார்கள்.. //

    இதைத் தான் காலத்தின்
    சுழற்சி என்கின்றார்களோ!?..

    பதிலளிநீக்கு
  39. அப்பாவின் கவிதைகள் நன்று.

    வீட்டில் வந்து முடிதிருத்துவது முன்னரே உண்டு. நெய்வேலியில் இருந்த போது நிறைய முறை இப்படிச் கொண்டிருக்கிறேன். பிறகு அருகிலேயே இருந்த கடை! அந்த கடையில் முடி திருத்தியவரின் பெயர் - காந்தி! சென்ற ஆண்டு இங்கேயும் வீட்டிற்கே வந்து தான் முடிதிருத்தினார் - அவர் சுதீர்.

    பதிலளிநீக்கு
  40. சொல்ல மறந்த ஒன்று :

    // FollowByEmail widget (FeedBurner) is going away //

    மேலே உள்ளது போல் நம் வலைப்பூ முகப்புத்திரை பக்கத்தில் ஒரு அறிவிப்பை சில நாட்களாக வந்திருக்கும்... இதனால் நம்மை மின்னஞ்சல் மூலம் தகவல் பெற்றுத் தொடரும் நண்பர்களுக்கு, ஜூலை மாதத்திற்குப் பின் நம் புது பதிவுகள் செல்லாது... வலைப்பூ என்றால் என்னவென்றே தெரியாத பற்பல நண்பர்களும் நம் வலைப்பூவில் இந்த FollowByEmail widget மூலம் சந்தாதாரர் செய்து இருப்பார்கள்... நம் புதிய பதிவு அவர்களின் மின்னஞ்சலுக்குச் சென்றவுடன் அதன் இணைப்பைச் சொடுக்கிப் பதிவை வாசிக்க மட்டும் செய்வார்கள்... இனி அவர்களுக்கு அறிவிப்பு போகாது என்பது தான் வருத்தமான செய்தி... என்ன செய்யலாம்...?

    DETAILS

    மேலுள்ள இணைப்பின்படி தரவிறக்கி (Excel file) கொள்ளலாம்... அதில் உள்ள நண்பர்களுக்கு புதிய பதிவின் இணைப்பை நம் மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்...

    FollowByEmail widget - இதற்கு மாற்று இது வரை அறியவில்லை... இதற்கும் நம் blog list-ல் வைத்திருக்கும் + நாம் தொடரும் வலைப்பூக்களின் அறிவிப்பு தாமதம் ஆவதற்குச் சம்பந்தம் உண்டா என்றும் தெரியவில்லை... இதைப் பற்றிப் பதிவு எழுதுவதா ? வேண்டாமா ? என்றும் புரியவில்லை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி DD.  நேரம் இருக்கும்போது பார்க்கவேண்டும். 

      நீக்கு
  41. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    அம்மாவுக்காக அப்பா எழுதிய கவிதை படித்து நெகிழ்ந்தேன். விவேக் என்னும் நல்ல மனிதரை இழந்துவிட்டோம். அவரின் நினைவாக மரங்கள் நடுவது மனதிற்கு இதம்.

    வீட்டிற்கு வந்து முடி திருத்துவதும், அதற்கு என்று ஒரு app, நான் அறியாததே.

    தமிழ் அறிஞர்கள் வீட்டு திசையிலும் ஒரு தனிசுவை.சுவையான செய்தி.

    சுஜாதா நான் என்றும் வியக்கும் தொலைநோக்கு கொண்ட எழுத்தாளர்!

    இன்றைய கதம்ப பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  42. லைமுறை விஷயங்கள் புரியலை ...
    வீட்டுக்கே வந்து முடி திருத்தராங்களா ?? ம்ம் இங்கே பல மாத லாக் டவுன் ரிலாக்ஸ் ஆனபின் இப்போதான் சலூன்ஸ் திறந்தாங்க .ஆனாலும் எங்க வீட்டு ஹேர் ஸ்டைலிஸ்ட் நான்தானாக்கும் :) 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தலைமுறை விஷயங்கள் புரியலை//

      ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா ..காப்பி பேஸ்ட் பண்ணி பப்லிஷ் ஆனதும்தான் பார்த்தேன் //த / வெட்டுப்பட்டிருக்கு 

      நீக்கு
    2. இங்கு லாக்அவுட் கொஞ்சம் எளிதானதும் இதெல்லாம் சாத்தியமாயின.  பிழைப்புக்கு வகைவகையாக வழி செய்து கொண்டார்கள்.

      நீக்கு
  43. விவேக்  கல்லூரி பங்க்ஷனில் பார்த்தேன் .தூர இருந்துதான் .. பள்ளிக்கூட காலத்தில் காஸ்ட் விசிடி பிரபலமான காலகட்டத்தில் இவரின் மிமிக்ரிஸ் கேட்டதுண்டு .இருக்கும்போது தேடும்போது கிடைக்காதது இப்போ கிடைச்சிருக்கு பாருங்க :(

    பதிலளிநீக்கு
  44. அப்பாவின் கவிதை வரிகள் நெகிழ்ச்சி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது அதை எழுதிவிட்டு, படித்துக் காட்டுகிறேன் என்று போனில் பேசும்போதே தழுதழுப்பார்.

      நீக்கு
  45. 51 ஆண்டுகள் உடன் பயணித்தவருக்குத்தான் அந்த வாழ்வின் அருமை புரியும் .பாவம் அப்பா மிகவும் மனம் நொந்து வலியுடன் இருந்திருக்கிறார் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  எங்களுக்கும் மிகவும் கடினமான காலங்கள் அவை.

      நீக்கு
  46. டிகேசி அவர்கள் பற்றிய பகிர்வு அருமை .அந்த தோசை ரெசிப்பி கிடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்  .குலை வாளை அரிசி அப்படின்னா எப்படி இருக்கும் ??  தீட்டாத கொளியல் பச்சை அரிசி கேள்விப்பட்டிருக்கேன் இப்போ வீட்டிலும் இருக்கு அதுதான் இதுவோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குதிரைவாலி அரிசி என்று சொல்லப்படுவதுதானோ அது?  தெரியவில்லை.

      நீக்கு
  47. /பாஸின் தோழி என்ன சொன்னார் என்று ஆர்வம் வருகிறதல்லவா...   இப்போதெல்லாம் அவர் பாஸைக் கண்டாலே ஒளிந்துகொள்கிறார்.//
    ஹஆஹாஆ :) ஒளியாம பின்னே என்ன செய்வார் :) என் உறவு வட்டத்தில் யாருக்கும் நான் பிளாக் ஓனர் என்பது தெரியாது :) என் பொண்ணு மட்டும் எப்பவாச்சும் கேட்பா //அம்மா ககிடபூக்காள் // (இப்படித்தான் சொல்வா ) இன்னும் எழுதறீங்களானு .அவளுக்கு தமிழ்  எழுதப்படிக்க தெரியாது என்பதால் தப்பித்தேன் :) .ஒருமுறை .எங்கோ குண்டு பூனைன்னு அதீஸ் மேடத்தை சொல்றத பார்த்து செம திட்டு குடுத்தா :) அது ஷேமிங் ஆம் ..அவ்வ் .தெரிந்தோர் வட்டத்தில் நான் எதுவும் சொல்வதில்லைபிளாக் எழுதுவது பற்றி :) 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு சொன்னாலும் பயனில்லை!  இப்போது இப்போது என் தங்கை, அக்கா, அண்ணன்(அவ்வப்போது) படிக்கிறார்கள்.  பாஸ்?  ஊ...ஹூம்!  தைரியமாக எது வேண்டுமானாலும் எழுதலாம்!

      நீக்கு
  48. ஸ்ரீராம். இது அப்பாவின் கவிதை என்று நீங்கள் சொல்லாமல் அது பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கணித்திருக்க வேண்டும். இது தான் கீதாம்மாவின் கதைக்கும் நான் சொம்னது.
    பத்திரிகை உலகில் சில விஷயக்களை மறைத்து பின்னால் வெளியிடுவது தனி சுவாரஸ்யம்.
    ஒரு தடவை துக்ளக்கில் சோ என்ன செய்தார் என்றால் --+
    யாராவது சொல்கிறார்களா என்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துக்ளக்கில் சோ செய்தது நினைவிருக்கிறது.  அப்பா எழுதியதை யார் என்று சொல்லாமல் வெளியிடுவதில் எனக்கு விருப்பமில்லை ஜீவி ஸார்...   மேலும் இன்று அவர் நினைவு நாள் வேறு...

      நீக்கு
    2. சரியே. நீங்கள் சொல்வது.

      நீக்கு
  49. அது சரி.. நான் எழுதியதைப் படித்துவிட்டு பாஸின் தோழி என்ன சொன்னார் என்று ஆர்வம் வருகிறதல்லவா... இப்போதெல்லாம் அவர் பாஸைக் கண்டாலே ஒளிந்துகொள்கிறார்.//

    இவ்வளவு எஃபெக்ட்டா ஒங்க எழுத்துக்கு!
    அதுக்காகத் தளர்ந்துபோயிராம வெளுத்துவாங்குங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...   ஏதோ நீங்கள் சொல்கிறீர்களே என்று எழுதுகிறேன்...!

      நீக்கு
  50. உங்கள் பெற்றோருக்கு என் வணக்கம். உங்கள் அம்மாவைப் பற்றிய அப்பாவின் வரிகள் நெகிழ்ச்சி.

    நடிகர் விவேக் தேடிய படம் செய்தியாக நானும் அறிய வந்தேன்.

    பாஸைக் கண்டாலே ஒளிந்துகொள்கிறாரா? அப்படி நடக்க வாய்ப்பில்லையே..

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ராமலக்ஷ்மி...

      //பாஸைக் கண்டாலே ஒளிந்துகொள்கிறாரா? அப்படி நடக்க வாய்ப்பில்லையே..//

      ஹா..  ஹா..  ஹா..  தினமும் கண்ணில் படுபவர் அப்புறம் கண்ணில் படவே இல்லையே...

      நீக்கு
  51. // "உங்களைப்போல" முகம் மலர வரவேற்றுப் பேசும் கஸ்டமர்//

    ஆஹா அப்போ 4ம் தடவையாகவும் அவரையே அழைக்கப் போகிறார் ஸ்ரீராம்:)) ஹா ஹா ஹா.

    ட்7 உடன் தலைமுறை நின்றுவிடும் என நான் கேள்விப்படவில்லை ஸ்ரீராம், ஆனால் 5 ஓ 7 ஓ தலைமுறையுடன் அவர்களின் சொத்து, சுகம் மாறிவிடும் என அறிஞ்சேன்.. அதாவது பணக்காரர் எனில் ஏழையாக மாறிவிடுவார்களாம், பேரன் பூட்டன் எல்லாம் சொத்தை அழித்து.. அதேபோல ஏழை எனில் பணக்காரர்களாகிவிடுவார்களாம்... பணமோ ஏழ்மையோ குறிப்பிட்ட தலை முறைக்கு மேல் நிற்காதாம், மாறிவிடுமாம். அது உண்மை போலத்தான் தெரிகிறது பலரைப் பார்க்கும்போது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட்டத்தட்ட நீங்களும் அதையேதான் சொல்கிறீர்கள் அதிரா...   அப்போ அப்படி ஒரு பேச்சு வழக்கு உண்டுதான் போல...

      நீக்கு
  52. பாருங்கள் ஸ்ரீராம் அதற்குள் 5 ஆண்டுகள் ஓடிவிட்டது.. எங்கள் அப்பாவினதும் ஏப்ரலில்..:(.

    கவிதை படித்து மனம் கனத்து விட்டது, நாம் என்னதான் நல்லபடி தங்கத்தட்டில் வைத்துத் தாங்கியிருந்தாலும், அவர்கள் இல்லை என்றானபின், சே அப்படிச் செய்திருக்கலாம் இப்படிச் செய்திருக்கலாம் என நம் மனம் பதைப்பதை எப்பவும் தடுக்க முடியாதுதான்.. எல்லாம் விதி வரைந்த பாதை, அதை மாற்ற அந்த ஆண்டவனாலும் முடியாதாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...   நினைவிருக்கிறது.  காலம் வேகமாக ஓடுகிறதுதான்.  நன்றி அதிரா.

      நீக்கு
  53. தோசைக் கதை சொல்லி, ஆசையத் தூண்டி விட்டீங்கள், தோசை சுட்டு பல நாளாகுது.. இப்பவே உளுந்து ஊறப்போடப்போகிறேன்..

    உங்கள் பொஸ் இன் தோழி, உங்கட தக்காளித் தோசையைப் பார்த்திருப்பார் அதுதான் ஒளிக்கிறார்போலும் ஹா ஹா ஹா ஏன் எனக் கேட்டிடாதீங்கோ எனக்கே தெரியாது:)).. ச்சும்மா வாயில வந்துது எழுதிட்டேன் ஹையோ மீ ரன்னிங்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோசை ஊற்றி நாளாகுதா?  என்ன ஆஸாஹர்யம்?  இட்லி தோசைதானே எப்பவும் கிடைப்பது, இருப்பது!

      நாம் அனுப்பும் லிங்க்கையே திறந்து பார்க்கத் தெரியுமா தெரியாது!  இதில் எங்கே அதை எல்லாம் பார்த்திருக்கப் போகிறார்கள்!!!

      நீக்கு
  54. ஒரு தொலை பேசி அழைப்பு போதும்என் வீட்டுக்கே வந்து முடி திருத்துவார் எங்கள் ஆஸ்தான நாவிதர் அது என்னவொ தெரிய வில்லை எங்களுக்கு உதவ நிறைய பேர் இருக்கின்றனர் இருந்தாலும் மாங்காய் பறிக்கவும் தேங்காய் பறிக்கவும்தான் ஆட்கள் இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா...   மாங்காய் தேங்காய் பறிக்க 'அர்பன் ஆப்'பில் ஆட்கள் கிடைக்க மாட்டார்களா ஜி எம் பி ஸார்?

      நீக்கு
  55. அவைகளாவது மொட்டை அடிக்கப்படாமல் இயற்கையோடு இயறகையாக இணைந்து பூத்துக் குலுங்கட்டும்!!

    பதிலளிநீக்கு
  56. நல்ல பதிவு. இலங்கையில் இவ்வாறு ஆப் வழியாக வீட்டுக்கு வந்து முடிவெட்டுவது இல்லை. நல்ல வியாபாரம் போல. ஆரம்பித்து விடலாமோ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!