1964 இல் வெளிவந்த வாழ்க்கை வாழ்வதற்கே படத்திலிருந்து 'அவன் போருக்குப் போனான்' பாடலை நேயர் விருப்பமாக வல்லிம்மா கேட்டிருந்தார்கள்.
கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், ஜெமினி கணேசன் சரோஜா தேவி நடித்த திரைப்படம். கண்ணதாசன் பாடல்கள். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. வசனம் முரசொலி மாறன்.
பி சுசீலா - பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்
******************
இனி என் விருப்பப் பாடல்.
1982 இல் வெளிவந்த திரைப்படம். சரத்பாபு, ரூபாராணி நடித்தது. ஏ எல் எஸ் கண்ணப்பன் இயக்கம். இசை கங்கை அமரன்.
பாடல்களை கங்கை அமரனே எழுதி இருக்கக் கூடும். அலலது வாலியாய் இருக்கக் கூடும். விவரம் தெரியவில்லை.
தன்னை விட வயதில் மூத்தவர்களை விரும்பும் கதை என்றும், அதன் காரணமாகவே ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும் கதையாம்.
இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் பிடிக்கும். ஒன்று ஏற்கெனவே பகிர்ந்த நினைவு. 'தென்றல் ஒரு தாளம் சொன்னது' என்று ஜெயச்சந்திரன் குரலில் ஒரு இனிய பாடல். நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் ஒன்று.
இன்று எஸ் பி பி குரலில் வரும் இனிய பாடல் ஒன்று.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கங்கை அமரன் 'ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா' எனும் கவிஞர் கருத்தைப் பிரதிபலித்திருந்தார்.
அதாவது அவர் இசை அமைத்த 'நீலவான ஓடையில்' பாடல் பழைய தியாகம் படப்பாடலான "வசந்த காலக் கோலங்கள்" பாடல் சாயலில் இருக்கிறதே என்று பாஸ்கி கேட்க,
'ஆமாம்' என்று ஒத்துக்கொண்ட கங்கை அமரன் "நான் மட்டும் காபி அடிக்கிறேன் என்று எடுத்துக் கொளலாதீர்கள். எல்லோருமே அப்படிதான்.." என்றார்.
வசந்த கால கோலங்கள் பாடலே 'ஏ ஜிந்தகி' என்கிற (அனார்கலி) ஹிந்திப் பாடலிலிருந்து தமிழ் அனார்கலியில் 'என் சிந்தை நோயும் தீருமா' என்ற பாடலாக உருவெடுத்து அது வசந்த கால கோலங்களாகி, நீல வான ஓடையானது என்று குறிப்பிட்டார்!
கங்கை அமரன் இசையமைத்ததில் நிறைய இனிய பாடல்கள் இருக்கின்றன. இதுவும் அதில் ஒன்று.
பாடலைக் கேட்டு, கொஞ்ச நேரத்துக்கு பழைய காலத்துக்குப் போய்விடுவீர்கள். இளமையின் உணர்வுகளை, ஏக்கங்களை, பரவசத்தை சொல்லும் பாடல். எஸ் பி பி, பாடலுக்கு உணர்வுகளால் உயிரூட்டுகிறார் என்றால் மிகையில்லை. "நெஞ்சத்தில் வேதனை சேர்க்குதம்மா" எனும் வார்த்தையிலேயே வேதனையைத் தெறிக்க விடுகிறார். ஏக்கம் தணிய பாடலை எவ்வளவு தரம் வேண்டுமானாலும் கேட்கலாம்!
காட்சியோடு வரும் பாடல் இங்கே. ஆனால் அதில் தரம் இல்லை. எனவே கீழே தரமான ஒலியமைப்பில் உள்ள பாடலைப் பகிர்கிறேன்.
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே
வெறும் கனவுகள் கற்பனைகள்
கள்ளம் இல்லா உண்மைக் காதலென்றால்
கள்ளம் இல்லா உண்மைக் காதலென்றால்
கண்களில் ஆரம்பமா
கண்கொள்ளாக் காட்சியில் ஆரம்பமா
வெள்ளமும் வெள்ளமும் சேர்வதுபோல்
உள்ளம் பிணைந்திடுமா
அன்பினால் ஒன்று கலந்திடுமா
பெண் மனதிலே வீண் சலனமா
பொன் ஒளியிலே கண் திறக்குமா
நல் வாழ்வு மலர்ந்திடுமா
காலை இளம் வெய்யில் தீண்டும் முன்னே
காலை இளம் வெய்யில் தீண்டும் முன்னே
சோலை மலர்ந்ததம்மா
வண்டுக்கோர் ஓலை வரைந்ததம்மா
வேளை தெரியாமல் காளை மனம்
வேடிக்கை பார்க்குதம்மா
நெஞ்சத்தில் வேதனை சேர்க்குதம்மா.
துணை கிடைக்குமா சுகம் பிறக்குமா
அன்பு நிலைக்குமா எண்ணம் பலிக்குமா
மன ஏக்கம் தணிந்திடுமா
காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குயாரு காலைல சீக்கிரம் எழுந்துக்கறாங்க என்று சோதிப்பதற்காக இன்றைய இடுகையை ஐந்து மணிக்கே வெளியிட்டாச்சா?
வணக்கம் நெல்லை.. வாங்க... இரண்டு மூன்று நாட்களாகவே ஐந்து மணிதான்! ஏனென்றால் டாஷ் போர்டில் அப்டேட் ஆக நேரம் எடுக்கிறது என்பதால் கொஞ்சம் அட்வான்ஸ் பண்ணியிருக்கிறோம்!
நீக்குஅனைவருக்கும் காலை, மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொற்றின் கொடுமையும் வீரியமும் குறைந்து அனைவரும் உடல்/மன ஆரோக்கியத்துடன் இருக்கப் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஇணைந்து பிரார்த்நனை செய்ஙோம். வாங்க கீதா அக்கா வணக்கம்.
நீக்குஅன்புன் ஸ்ரீராம், முரளிமா, கீதாமா
பதிலளிநீக்குஇன்னும் வரப்போகும் அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக
அமையவும், வரும் காலங்கள்
அமைதி ஆரோக்கியமாக இருக்கவும் இறைவன்
அருள வேண்டும்.
இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஅந்த நாளைய பாடலை அழகாகப்
பதிலளிநீக்குபத்விட்டிருக்கிறீர்கள் ஸ்ரீராம். மிக நன்றி.
இந்தப் படங்கள் எல்லாம்
வந்த காலத்தில் நிறைய தடைகள் உண்டு.
அதாவது வீட்டிலிருந்து தள்ளி இருக்கும் தியேட்டர்களுக்குப்
போக அனுமதி கிடையாது.
வீட்டில் உதவி செய்யும் தேவானை தயாராக இருந்தும் அப்பா
அனுமதி மறுத்ததால் பாடலை மட்டும்
வானொலியில் எப்பொழுதும் கேட்டு மகிழ்வேன்.
இப்பொழுதும் கேட்க மட்டும் முடிந்திருந்தாலும் அதே மகிழ்ச்சிதான்.
சிறுவயதுத் தோழர்களைச் சொல்வது போலப்
பாட்டு அமைந்திருக்கும்.
இருவரும் சிறிய வயதில் வீடு கட்டி விளையாடும்
பாடல் ஆற்றோரம் மணலெடுத்து பாடல் ஒன்றும் இந்தப் படத்தில் வந்தது
என்று நினைவு.
மிக மிக நன்றியும் வாழ்த்துகளும் ஸ்ரீராம்.
இந்தப் படத்தில் வரும் 'நான் பாடிய பாடல்' எனக்கு மிகவும் பிடிக்கும். எளிய ஆனால் ஆழ்ந்த வரிகள்.. கைவேல் கொண்டான் கணவேல் கண்டான் காலத்திலே வந்தான்.. அருமையான மெட்டு துள்ளும் இசை இனிய குரல்கள்.
நீக்கு//இந்தப் படத்தில் வரும் நான் பாடிய பாடல்..//
நீக்குஎனக்கு இப்போத் தான் தெரியும். நீங்க கூட சினிமாக்கு பாடியிருக்கீங்களா, துரை?
அப்பப்போ பாடுவேன்.. இது போன ஜன்மத்துல பாடுனது..
நீக்குஅன்பு அப்பாதுரை,
நீக்குபாடலைச் சொல்லி விட்டேன். யாருக்குப் பிடிக்குமோ என்று நினைத்தேன்.
இத்தனை பேருக்கும் பிடித்திருக்கிறாதே ஒரு மகிழ்ச்சி.
பள்ளிக்கூடத்தில் சில அக நானூற்றுப் பாடல்கள்
மட்டும் அனுமதி உண்டு.
இந்தப் பாடலில் உள்ள வரிகளில் தலைவி
வாசலில் நின்று கணவனை/காதலனை
எதிர் நோக்கிச் சொல்லும் வரிகள்
பதிந்த நாட்கள். மிகவும் லயித்துக் கேட்போம்.
நன்றி மா.
போருக்குப் போனேன் - நான் பாடிய பாடல் இரண்டும் back to back ஒரே பாட்டுனு இந்த்ஹ விடியோ பாத்ததும் தான் தெரிந்தது.. தனிப்பாடல்கள் என்று நினைத்திருந்தேன்.
நீக்குநான் போன ஜன்பத்துல பாடினதால நினைவில்லாம போயிருக்கலாம் (ஜீவி சார் கவனிக்க)
நன்றி வல்லிம்மா. நன்றி அப்பாதுரை.
நீக்குஉங்கள் விருப்பமாக வந்திருக்கும் பாடலையும் கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குபடம் பார்த்ததில்லை.
எந்தப் பாடலையும் உயிர் கொடுத்து லயிக்க வைக்கும்
திறன் எஸ்பி பி சாருக்கு மட்டும்
எப்படித்தான் முடிந்ததோ.
இப்படி ஒரு குரலையும் இனிமையையும் கொடுத்த
இறைவன் நல்ல நீண்ட வாழ்வையும்
கொடுத்திருக்கலாம்.
பாகாக உருகுகிறாரே பாட்டில். !!
மிகச் சிறப்பான தேர்வு. நன்றி ஸ்ரீராம்.
எஸ் பி பி எஸ் பி பி தான்!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். பாடல்களை கேட்டுவிட்டு சொல்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் வாங்க பானு அக்கா.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் வாங்க கமலா அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய இரண்டு பாடல் பகிர்வும் அருமை. இரண்டு பாடல்களுமே நான் இதுவரை கேட்டதில்லை. இப்போதுதான் கேட்டு ரசித்தேன். பாடல்கள் இடம் பெற்ற படங்களும் இதுவரை பார்த்ததில்லை.
முதல் பாடல் பி.பி.ஸ்ரீனிவாஸ்,சுசீலா அவர்களின் அருமையான குரலில் அபிநய சரஸ்வதி சரோஜதேவியின் நடனத்துடன் அழகாக இருந்தது.
இரண்டாவது எஸ்.பி.பியின் குரல் இனிமையில் அற்புதமாக இருந்தது. நீங்கள் குறிபிட்ட வார்த்தைகளையும் கேட்டேன். இரண்டுமே நல்ல கருத்தும்,கானமும் மிகுந்த பாடல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குஇரண்டுமே இனிமையான பாடல்கள்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஇனிமையான பாடல்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே..
நீக்குஇரு பாடல்களுமே இப்போதுதான் கேட்கிறேன் ஸ்ரீராம். முதல் பாடல் பிபிஸ்ரீ வந்த பிறகு வரும் இடங்கள் வேறொரு பாடலை நினைவுபடுத்துகிறது.
பதிலளிநீக்குகீதா
அந்த இடம் மதுகௌன்ஸ் ராகம் போலத் தெரிகிறது..
நீக்குகீதா
நன்றி சின்ன கீதா!
நீக்குஇரண்டாவது பாடலும்/உங்கள் விருப்பப் பாடலும் வேறொரு பாடலை நினைவுபடுத்துகிறது...
பதிலளிநீக்குகங்கை அமரன் சொல்லியிருப்பது போல அப்படி நினைவுபடுத்தும் போல!!!!!
கீதா
நன்றி கீதா ரெங்கன்!
நீக்குஇரண்டாவது கல்யாணி என்பதால் அப்படி நினைவுபடுத்துவது போல இருக்கிறதோ?!!! எஸ்பிபி வாய்ஸ் வாவ். அந்தப் பெண் குரல் பார்வதின்னு மற்றொன்றில் Paraui - Paravai இப்படி போட்டிருக்கு உண்மையில் என்ன பெயர்? யார் பெண் குரல்? ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
அதெல்லாம் யாருக்குத் தெரியும்? எனக்குத் தெரிந்ததெல்லாம் எஸ் பி பி எஸ் பி பி எஸ் பி பி...!!!
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குநலமே வாழ்க எங்கெங்கும்..
வணக்கம் துரை .செல்வராஜூ ஸார்.. வாங்க...
நீக்குஇன்றைய பதிவின் பாடல்கள் இரண்டுமே இனிமை.. அருமை..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குவெள்ளம் போலே - பாடல் நன்று. எப்போதோ ஓரிரு முறை கேட்டதுபோல இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குதிருமதி வல்லி சிம்ஹன் தேர்வு செய்திருக்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த, நான் எப்போதும் அடிக்கடி கேட்கும் பாடல்! திருமதி சுசீலாவின் குரலில் அத்தனை இனிமை! அந்தப்படத்தில் ' நான் பாடிய பாடல்', 'ஆத்தோரம் மணல் எடுத்து', நெஞ்சத்தில் இருப்பது' என்று எல்லா பாடல்களுமே மிக மிக இனிமையாக இருக்கும்!!
பதிலளிநீக்குஉங்களின் தேர்விலும் இனிமையான பாடல்! எண்பதுகளில் வந்த படம். அவ்வளவாக கவனத்தில் பதியாத, சுமாராக ஓடிய படம். இந்தப்பாடல் மட்டும் நிறைய பேருக்கு பிடித்தது.
நன்றி மனோ.
நீக்குபார்ப்பது அப்புறம் வந்தது. நாமெல்லாம்
கேட்டே வளர்ந்திருக்கிறோம்.
ஒரு சோகத்துக்கு அப்புறம் அந்தப் பாடல் மகிழ்ச்சியை நோக்கித் திரும்பும்
நேரம் என்ன ஒரு இனிமையான இசை!!!
சின்ன கீதா சொல்லி இருப்பது
போல பல பாடல்கள் நினைவுக்கு வரும்.
நன்றி மா. இசை இணைக்கிறது.
நன்றி.
நீக்குஅவன் போருக்குப் போனான்.. சுசீலா ரம்யமாகப் பாடியிருக்கிறார். ரொம்பநாளைக்கப்புறம் இதனைக் கேட்கிறேன்.
பதிலளிநீக்குஒல்லியான சரோஜாதேவி வெள்ளி போனஸ் !
நன்றி.
நீக்குஜி,
பதிலளிநீக்கு60களில் வந்த ஒரு பாட்டையும் இதுவரை
கேட்காமல் இருந்ததில்லை.
இசையும் திரையும் என்னோடு சேர்ந்து அனுபவித்த தோழிகளுக்காகவே கேட்பேன்.
ஒல்லியான சரோஜாதேவி வெள்ளி போனஸ் ! :)))))))))
நன்றி.
நீக்குஇரண்டு பாடல்களும் இனிமை.
பதிலளிநீக்குஇரு பாடல்களும் கேட்டு வெகு காலம் ஆகி விட்டது.
கேட்டேன்.
நன்றி.
நன்றி கோமதி அக்கா.
நீக்கு