உங்களுக்கு தாராசங்கர் பந்தோபாத்யாய் தெரியுமோ? பெங்காலி எழுத்தாளர் அவர். எனக்கும் அவரைத் தெரியாது. ஆனால் அவர்தான் 'படித்தால் மட்டும் போதுமா' படத்தின் ஒரிஜினல் கதைக்கு சொந்தக்காரர்!
1962 இல் வெளிவந்த இந்தத் திரைப் படத்தை பீம்சிங் இயக்க, கண்ணதாசன் (ஒரு பாடல் மட்டும் மாயவனாதன் எழுதியது) பாடல்களுக்கு இசை மெல்லிசை இரட்டையர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.
படம் பெரும் வெற்றி பெற்ற படமாம்.
பாலாஜி நல்லவர்தான். அவர் செய்யும் ஒரே ஒரு தவறு பெரிதாகி அவரை வில்லனாக்கி விடுகிறது.
இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே நன்றாகத்தான் இருக்கும் என்றாலும் ரொம்பப் பிடித்தது நான்கு பாடல்கள். 'ஓஹோஹோ மனிதர்களே' 'நான் கவிஞனும் இல்லை', 'பொன்னொன்று கண்டேன்', 'தண்ணிலவுநிலவு தேனிறைக்க
இதில் இன்று இரண்டு பாடல்கள் மட்டும் இங்கு பகிர்கிறேன்.
இந்தப் பாடல் கவிஞர் மாயவனாதன் எழுதியது. சுசீலாம்மாவின் குரலில் சாவித்ரியின் இனிமையான நடிப்பில் விளைந்த காட்சி. ஓரளவு ஒல்லியான சாவித்ரி.
இரண்டு பாடல்களையும் காட்சியையும் பார்த்து ரசிக்கலாம்.
தண்ணிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க
தண்ணிலவு தேனிறைக்க, தாழை மரம் நீர் தெளிக்க,
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்,
இளம் காதலனைக், கண்டு, நாணி நின்றாள்,
நாணி நின்றாள்,
நெஞ்சமதில் அலை எழும்ப தஞ்சமலர் அடி கலங்க
நெஞ்சமதில் அலை எழும்ப, தஞ்சமலர் அடி கலங்க,
அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள்,
அங்கு அன்பருள்ளம், தனை நினைந்து நின்றாள்,
நினைந்து நின்றாள்,
விண்ணளந்த மனம் இருக்க மண்ணளந்து அடி எடுக்க
விண்ணளந்த மனம் இருக்க மண்ணளந்து அடி எடுக்க
பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள்
ஒரு பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்
கண்டு நின்றாள்
பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மனமிருக்க
பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மனமிருக்க
கட்டிலிற்கு மிக நெருங்கி வந்தாள்
இரு கண் விழியில் கவிதை கண்டு நின்றாள்
கண்டு நின்றாள்
இத்திரைப்படத்தை தஞ்சாவூர் ராஜேந்திரா டூரிங் டாக்கீஸில் பார்த்திருக்கிறேன்! அப்போது என்னைக் கவர்ந்த பாடல் 'ஓஹோஹோ மனிதர்களே' தான். அப்போதெல்லாம் அறிமுகக் கட்சியில் கதா நாயகர்கள் குதிரையில் வந்து கொண்டே பாடுவது ஒரு ஸ்டைல். அப்புறம் அப்புறம் பைக்கில் காரில் எல்லாம் வந்துகொண்டே பாடினார்கள்!!
இந்த படத்திலும் ஆரம்பக் காட்சியில் சிவாஜி கணேசன் குதிரையில் வந்துகொண்டே பாடும் பாடல். அதனாலேயே அப்போது பிடித்தது! நான் படம் பற்றிய விவரமே சொல்லவே வேண்டாம். இந்தப் பாடல் காட்சியைப் பார்த்தால் போதும். எல்லாம் அந்தக் காட்சியில் வந்து விடுகிறது! சிவாஜி குதிரையில் வருவது ராஜ் பவனில் எடுக்கப்பட்டதாம். கண்ணதாசன் பாடல்.
ஓஹோ ஓஹோ ஹோ மனிதர்களே
ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்
(ஓஹோ...)
அழுகிப் போனால் காய்கறிக் கூட சமையலுக்காகாது
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறித் திரிபவன் வார்த்தைகளில் ஒரு உருப்படி தேறாது
காலம் போனால் திரும்புவதில்லை
காசுகள் உயிரைக் காப்பதும் இல்லை
(ஓஹோ...)
அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காற்றுக்கு நிக்காது
அழகாய் இருக்கும் காஞ்சிரைப் பழங்கள் சந்தையில் விக்காது
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது
விளக்கிருந்தாலும் எண்ணையில்லாமல் வெளிச்சம் கிடைக்காது
கண்ணை மூடும் பெருமைகளாலே
தம்மை மறந்து வீரர்கள் போலே
(ஓஹோ...)
ஒதிய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரமாகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது
படிப்பதினாலே தெளிவுள்ள மனசு பாழ்பட்டு போகாது
பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது
காற்றை கையில் பிடித்தவனில்லை
தூற்றி தூற்றி வாழ்ந்தவனில்லை
AHAAAAAAAA. MIKAP PIDITHTHA PAATTUKAL.
பதிலளிநீக்குஉங்கள் மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது!
நீக்குஅன்பின் ஸ்ரீராம் ,
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம்.
அனைவரும் எல்லா நாட்களிலும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
தொற்று என்று காதில் விழாத நாள் வரவேண்டும்.
இறைவன் துணை.
வாங்க வல்லிம்மா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குநலம் வாழ்க எங்கெங்கும்...
நலம் வாழ்க. வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குபிடித்தமான பாடல்..
பதிலளிநீக்குமிகவும் பிடித்த பாடல்...
மிக மிகப் பிடித்தமான பாடல்...
நன்றி. மிக மிக மிகப் பிடித்தமான பாடல்கள்!
நீக்குகவியரசரின் தத்துவப் பாடல்களில் முதல் பத்துப் பாடல்களுக்குள் இந்தப் பாடல் !...
பதிலளிநீக்குஅப்படி அடக்க முடியுமா என்ன!
நீக்குஇதற்கு விடை கவியரசரின் பாடலிலேயே -
நீக்குகங்கை வெள்ளம் சங்குக்குளே
அடங்கி விடாது!...
ஹா.. ஹா.. ஹா.. ஆமாம்.
நீக்குஇந்தப் பாடலில் வரும் -
பதிலளிநீக்குபாதையை விட்டு விலகிய கால்கள்
ஊர் போய்ச் சேராது...
- எனும் வரிகள்,(இந்தப் படத்துக்குப் பிறகு)
வேறு சில பாடல்களிலும் இடம் பெற்றிருப்பது ஒன்றே இப்பாடலின் சிறப்புக்குச் சான்று...
உளறித்திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்ப =டி தேறாது வரிகளை அடிக்கடி உச்சரிப்பேன்.
நீக்குஅது சரி.. நேற்றோ அதற்கு முதல் நாளோ நீங்கள் ஒதிய மரங்கள் பற்றி இங்கு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள்.. நினைவிருக்கிறதா?
நினைவுக்கு வரவில்லையே!..
நீக்குதேடிப்பார்க்கிறேன்.
நீக்குவாழ்க கவியரசர்..
பதிலளிநீக்குவாழ்க மெல்லிசை மன்னர்கள்..
வாழ்க நடிகர் திலகம்...
வாழ்க வாழ்கவே...!
நீக்குமெல்லிசை மன்னர்கள் எனக் குறிப்பிட்டு இருந்தாலும் எம் எஸ் விஸ்வநாதன் சம்பந்தப்பட்ட நிகழ்வை டைரக்டர் சரண் வாயிலாக காணொளியில் கேட்டது நினைவுக்கு வருகிறது.
நீக்குகாதல் மன்னன் படத்தில் எம் எஸ் விஐ ஒரு பாத்திரத்தில் நடிக்க வைக்கணும் என சரண், விவேக்கின் துணை கொண்டு ஆறு மாதங்கள் முயன்று கடைசியில் விஸ்வநாதனைச் சம்மதிக்க வைத்தார்களாம். எம் எஸ் வி சொன்னது, சரி நடிக்கிறேன், என்னுடைய சம்பளத்தில் பாதியை ராம்மூர்த்திக்குக் கொடுத்துவிட வேண்டும் என்றாராம். அதன்படி 5 ரூபாய் ராம்மூர்த்திக்குக் கொடுத்தார்களாம்.
எம் எஸ் வி, தன் குணத்தால் பல படிகள் உயர்ந்து நிற்கிறார்
இது நான் உண்மையிலேயே கேள்விப்படாத தகவல். உயர்ந்து நிற்கிறார் எம் எஸ் வி.
நீக்குபடிக்காத மேதை ரங்கன் கூட
பதிலளிநீக்குவங்கத்துப் பையன் தான்!...
ஹா.. ஹா.. ஹா... ஆமாம். இவை இரண்டும் ஜோடிபபடங்களாய் என் மனதில் நிற்கும்!
நீக்குதமிழ்த் திரையில் அதிக அளவிலான படங்களில் குதிரையில் ஆரோகணித்து வந்தவர் நடிகர் திலகம் அவர்களாகத் தான் இருக்க முடியும்...
பதிலளிநீக்குஅப்படியா? பாடல் காட்சியிலா? MGR?
நீக்குஏதோ ஆர்வத்தில் சொல்லி விட்டேனே தவிர ஒரு ஓரமாக உட்கார்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும்...
நீக்குஹா.. ஹா... அந்தக்காலத்தில் எல்லா நடிகர்களும் குதிரையில்தான் வந்திருக்க முடியும்!!
நீக்குபாவம் அந்தக்குதிரை என்று பரிதாபப்பட இங்கே யாருமே இல்லையா? #என்னகொடுமைஇது ஸ்ரீராம்!
நீக்குவிளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது
பதிலளிநீக்குவிளக்கிருந்தாலும் எண்ணையில்லாமல் வெளிச்சம் கிடைக்காது////////யாருக்கு என்ன புரிந்ததோ. இன்னும் அப்படியே தான் இருக்கிறோம்.
உண்மை. மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா தெரியவில்லை.
நீக்குதமிழக கட்சித் தலைவர் ஒருவரைப் பற்றி (இப்போதுள்ள) அப்பவே கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறாரோ?
நீக்குஒருவரைப் பற்றிதானா?
நீக்குஓரளவு ஒல்லியான சாவித்ரி.!!!!!!!!!!!!!!!!!!!சாவித்ரி, பாலாஜி இருவரின் நடிப்பும் மிக இனிமை.
பதிலளிநீக்குசாவித்ரி அம்மாவின் கண்களில் தான் எத்தனை காதலும் நாணமும்.
நடிப்பிற்கே பிறந்தவர்.
உண்மை. உண்மை. நனிகையர்த் திலகம் அல்லவா..
நீக்கு*நடிகையர்
நீக்குபின் நாட்களில் அவர் 'தடி'கையர் திலகம் ஆகிவிட்டார் !
நீக்கு:>))
நீக்குஉரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
பதிலளிநீக்குஉளறித் திரிபவன் வார்த்தைகளில் ஒரு உருப்படி தேறாது////////எதை நினைத்து இந்தக் கருத்தை சொன்னாரோ.:(((
எத்தனை பேர்களைப் பார்த்திருப்பார்...!
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க..
நீக்குஇரண்டு பாடல்களும் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குகேட்டு மகிழ்ந்தேன்.
நன்றி அக்கா.
நீக்குராஜ் பவனில் எடுக்கப் பட்ட காட்சியா அட இது எனக்கு
பதிலளிநீக்குபுது செய்தி.
//காலம் போனால் திரும்புவதில்லை.
காசுகள் உயிரைக் காப்பதும் இல்லை//
எத்தனை உண்மை. இவரைப் போல
எழுத முடிந்தவர் யார்?
இந்த வரிகள் இந்தக் கொரோனா காலத்துக்கு எவ்வளவு பொருத்தம்!
நீக்குவெங்காயத்தில் ஒன்றும் இல்லை என்று அன்றைக்கே உதறி எறிந்து விட்டு -
பதிலளிநீக்குஅதைப் பாடலிலும் உரித்துக் காயப் போட்டு விட்டார் கவியரசர்..
ஹா.. ஹா.. ஹா.. உண்மை. புதுமாதிரி சிந்திக்கிறீர்கள்.
நீக்குஸூப்பர் பாடல்கள் ஜி
பதிலளிநீக்குஆமாம். நன்றி ஜி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். நல்ல பாடல்கள், பின்னர்தான் கேட்க பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா.. வணக்கம்.
நீக்குமுதல் பாடல் இனிமை...
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் வரிகளில் ஒரு பதிவையும் எழுதி இருக்கிறேன்...
நன்றி DD.
நீக்குஉரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
பதிலளிநீக்குஉளறித் திரிபவன் வார்த்தைகளில் ஒரு உருப்படி தேறாது..
தமிழர்கள் பாட்டுக் கேட்கிறார்கள் நன்றாக. நித்தம் நித்தம்.
எதையும் புரிந்துகொள்ள முயற்சி மட்டும் செய்வதில்லை என்றும்!
இனிமையில் மனதைப் பறிகொடுத்து பொருள் தெரிந்துகொள்ள மறந்து விடுகிறார்கள்.
நீக்குதண்ணிலவு தேனிறைக்க,
பதிலளிநீக்குதாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனைக் கண்டு
நாணி நின்றாள்..
-அருமையான பாடல். மாயவா ! நன்றி!
ஆனால்..
இந்தக்காலத்துக் குஞ்சுகளுக்கு இந்தப் பாடல் வரிகளின் அர்த்தம் புரியாது. முதலில் இதையெல்லாம் கேட்டுத் தங்களைக் கஷ்டப்படுத்திக்கொள்ளமாட்டார்கள்.
நடை பயின்று சென்றாள்.. you mean, she was practising walking..? பணக்காரி...கார்லதான் வந்துபோய் பழக்கம்போல.
நாணி நின்றாள்..! - அப்படீன்னா? வாட்! சே.. திஸ் டமிள் இஸ் டிஃபிகல்ட். ஐ டோண்ட் ஸ்பீக் திஸ் லாங்க்வேஜ்..
அப்பாடா... முதல் பாடல் பற்றி முதல் கமெண்ட்.
நீக்குஏகாந்தன் சார்... நடிகை ராதிகாவை பாரதிராஜா 80ல் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து, படப்பிடிப்பில், வெட்கம் வருவது போல முகத்தை வைத்துக்கொள்ளுங்கள் என்றதற்கு, வெட்கம்னா என்ன..எனக்கு அது வரவே வராது, சிரிப்புதான் வரும் என்று ராதிகா சொன்னாராம். அப்புறம் ரொம்ப அட்ஜஸ்ட் பண்ணி அந்தப் படத்தில் ஒப்பேற்றினாராம். அதனால, அப்போவே அந்தக் கதைதான்.
நீக்குவெட்கம் மட்டுமா? மாஞ்சோலைக்கிளிதானோ பாடலுக்கு ராதிகா ஆடும் 'பரதநாட்டியம்'?!!
நீக்கு..வெட்கம்னா என்ன..எனக்கு அது வரவே வராது, சிரிப்புதான் வரும் என்று ராதிகா சொன்னாராம்//
நீக்குஅப்பவே சரத்குமாரைக் கல்யாணம் பண்ணிக்க ரெடியாயிட்டாரு!
கிழக்கே போகும் ரயிலைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன் - பாரதிராஜா நல்லா எடுத்திருக்காருன்னு. கிராமத்து முகமாக ராதிகாவிடம் ஒரு freshness காணப்பட்டது. பொருத்தமாயிருந்தது படக் கதைக்கு. அந்தக் காலகட்டத்தில் தமிழில் நல்ல படங்கள் சில தலைகாட்டிக்கொண்டிருந்தன.
ஷூட்டிங் ஸ்பாட், நகரங்களையும், செட்டுகளையும் விட்டு கிராமங்களுக்கும், இயற்கையான இடங்களுக்கும் பயணப்பட்ட நேரம்.
நீக்குஅவர் ஒரு கவியின் மனதோடு தன் டீமை அழைத்துக்கொண்டு கிராமம் சென்றார் விளைவு நல்ல படங்கள் நமக்கு. (அந்தக்கால பாரதிராஜா..)
நீக்குஇப்போதும் கிராமப் பக்கம் போகிறார்கள் அடிக்கடி. குப்பையைக் கூட்டிக்கொண்டு போகிறார்கள். குப்பையை அள்ளிக்கொண்டுவந்து நம் முன்னே கொட்டுகிறார்கள். ஆஸ்காருக்கு என் படம் செலெக்ட் ஆகவில்லையா.. என்னே அநீதி எனப் புலம்புவார்கள்! நம் விதி..
ஆயினும் அப்படி ஆரம்பித்த பாரதிராஜாவும் பின்னர் நீர்த்துப்போனார்!
நீக்கு//அதனால, அப்போவே அந்தக் கதைதான்.// நடிகைகள்தான் உலகமா?
நீக்குமாஞ்சோலைக் கிளி தானோ!...
நீக்குஒரு நல்ல பாடல் காட்சியை வேண்டும் என்றே கெடுத்தவர் பாரதி ராசா!..
அருமையான பாடல்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே..
நீக்குமுதல் பாடல் மிக இனிமை.கேட்டு நிறைய நாட்களாகிவிட்டது. இரண்டாவதில் "உளறித் திரிவோர்...உருபடியில்லை" ஒருவரை ஞாபகப்படுத்துகிறது.பாடல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஒருவரை மட்டுமா?!!!
நீக்குநன்றி வானம்பாடி.
///"உளறித் திரிவோர்...உருபடியில்லை"// ஒருவரை ஞாபகப்படுத்துகிறது.
நீக்குஹி ஹி!
இந்தப் படமெல்லாம் தூர்தர்ஷன் தயவில் பார்த்தவை. வெளியாகிப் பல்லாண்டுகள் கழித்து. ஆனால் எங்க அப்பா மட்டும் போயிட்டு வந்து கதை சொல்லி இருக்கார். அந்தக் காலத்தில் எடுத்த பல தமிழ்ப்படங்கள் வங்காளக் கதை தான். "காத்திருந்த கண்கள்" என்ற ஓர் படம். ஜெமினி, சாவித்திரி(இரட்டை வேடம்), சௌகார் ஜானகி "மாலைப் பொழுதின் மயக்கத்திலே" என்று ஒரு பாடல் காட்சியில் நடித்திருப்பாரே, அந்தப் படம், ஹிஹிஹி, பெயர் மறந்துட்டேன்! "பாக்யலக்ஷ்மி? இந்தக் கதையும் வங்காளக் கதை தான். மொழிபெயர்ப்புக்கள் எல்லாமும் படிச்சிருக்கேன். தாகூரின் ஓர் நாவல் கூடத் தமிழ்த் திரைப்படமாக வந்த நினைவு.
பதிலளிநீக்குநான் இந்தப் படம் டூரிங் டாக்கீஸில் பார்த்தேன்! நீங்கள் சொல்லும் பாடல், ஆம், பாக்யலக்ஷ்மிதான்.
நீக்குமாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்.. என்ன ஒரு அசத்தலான பாடல்!
நீக்குகுங்குமம் உட்பட சிவாஜியின் பலபடங்கள் வங்காளக் கதையை வைத்து எடுக்கப்பட்டவைதான்! இப்போது டிவி சீரியல்களிலும் அந்த ட்ரெண்ட் இருக்கிறது
நீக்குபாடல்கள் எல்லாமே நன்றாக இருந்தாலும் படத்தின் முடிவு எனக்குப் பிடிக்காது. அநியாயமாய் பாலாஜியைக் கொன்று சிவாஜியைக் குற்றவாளியாக்கி! ம்ஹூம், ஜிவாஜி மேல் பரிதாபமெல்லாம் வரலையே! எரிச்சல் தான் வந்தது. :)))))
பதிலளிநீக்குஎனக்கும் முடிவு பிடிக்காது. நல்ல குணமுள்ள சாவித்ரி கேரக்டரை கஷ்டப்பட வைப்பதில் ஒரு குரூரம் தெரிகிறது!
நீக்குஏனக்கா நீங்கள் ஜிவாஜி என்று பார்க்கின்றீர்கள்?...
நீக்குஅந்த்க் கதையில் ஒரு பாத்திரம் என்று கொள்ளுங்களேன்!...
சரி... நடிகர் திலகம் நடித்த படங்களுள் எதுதான் பிடித்தது?.. எனக்கு மட்டும் சொல்லுங்க...
ரசிகனாகிய எனக்கும் அவரது படங்களுள் சில பிடிக்காது தான்...
(ப.க. பைரவன், லா.டி. ராஜாக்கண்ணு, சந்திப்பு, மு.ம. இப்படி இன்னும் சில..)
இவையெல்லாம் இங்கு கணக்கில் வராது..
அந்த முடிவு ,சிவாஜிக்காக இல்லை. அந்த நாளில் சாவித்ரியை அந்தக் கோணத்தில்
நீக்குபார்க்க சகிக்க முடியாத எங்களுக்காக கீதாமா.!!!
ஆண்ட்டி க்ளைமாக்ஸ்.
மேற்குக் கடற்கரை, கிழக்குக் கடற்கரைக் கதையாளர்களின் சுபாவம்
சோகம். ஏன் என்று தான் தெரியாது.:(
@துரை! நீங்க சொல்லி இருக்கும் படங்கள் வந்ததே எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஜிவாஜி "நடிக்காத" ஒரே படம் முதல் மரியாதை! அதனாலேயே அந்தப் படம் பிடிக்கும். பாடல்களும் அலுக்காதவை! :))))) ஆனால் "உயர்ந்த மனிதன்" படத்தை நான் பார்த்திருக்கும் கணக்கில் தீவிர ஜிவாஜி ரசிகர்களான நீங்கல்லாம் பார்த்திருப்பீங்களா? சந்தேகமே! ஓர் தண்டனை போலப் பார்த்திருக்கேன். :)))))
நீக்குஇரண்டு பாடல்களும் கேட்டு ரசித்த பாடல்கள். மீண்டும் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குவெள்ளிக்கிழமைன்னா திரைப்பாடலுக்கு மட்டும் தானா? ஒரு படப்பாடல் என்றால் லேசா அந்தத் திரைப்படக் கதையையும் பத்து வரிகளில் தொட்டுச் செல்லலாம், இல்லையா?
பதிலளிநீக்குதாராசங்கர் இந்தக் கதையில் போட்டிருக்கும் முடிச்சை (நாட்) அவ்வளவு லேசில் மறக்க முடியாது. இதெல்லாம் நம்ம ஆட்களுக்கு சுட்டுப் போட்டாலும் வராது.
இதே மாதிரி 'எதிர்பாராதது'திரைப்படம். பத்மினி--சிவாஜி-- நாகையா என்ற முக்கோண வார்ப்பெடுப்பில் சிக்கலான முடிச்சு. 'சிற்பி செதுக்காத பொற்சிலையோ' பாடலைப் போட்டு கதையம்சத்தை லேசா தொட்டுச் செல்லலாம். டைரக்டர் ஸ்ரீதருக்கு ஆரம்ப காலங்களிலேயே இம்மாதிரியான பயிற்சிக் களங்கள் கிடைத்து 'இவர தான் ஸ்ரீதர்' என்று அவரையே உருவாக்கியது தான் ஆச்சரியம்.
வங்காள, கேரள அந்தாளைய திரைப்படங்களின் உச்சம் தொட்ட சிறப்புகள் குறைந்தபட்சம் நம்மவர்களுக்கு அறிமுகமாவது ஆகவேண்டும்.
அவ்வப்போது வெவ்வேறு வித்தியாச முயற்சிகளில் பாடல்களை வழங்க முயற்சித்திருக்கிறேன் ஜீவி ஸார்.
நீக்கு//விண்ணளந்த மனம் இருக்க மண்ணளந்து அடி எடுக்கபொன்னளந்த உடல் நடுங்க வந்தாள்
பதிலளிநீக்குஒரு பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்//அடடா! எத்தனை அழகான வரிகள்! அதற்கு பொருத்தமான இசை, உயிர் கொடுத்திருக்கும் சுசிலாவின் குரல், சாவித்திரியின் நடிப்பு....! சாவித்திரியின் முகத்தில் நாணம் மட்டுமா? என்னவொரு பெருமிதம்! இப்படி ஒரு நடிகை இனி வருவாரா?
வரிகள்... ஆம் இரண்டு பாடல்களிலுமே அவைதான் மிகக் கவர்கின்றன. அப்புறம்தான் மற்றவை. இரண்டு வெவ்வேறு திறமையான கவிஞர்கள்.
நீக்குநடிகையர் திலகம் போல் இனி ஒருவர் வருவதற்கில்லை தான்...
நீக்குஆனாலும்
அவரைத் தான் தடிகையர் திலகம் என்று சொல்லியாயிற்றே!...
கொஞ்சம் தடித்திருந்தாலும் அழகல்லவா பெண்கள்!...
சாவித்திரிபோல் நளினம் காட்டிய, திறன்மிகு நடிகையை இனித் தமிழுலகம் பார்ப்பதற்கில்லை. Beauty, style, all grace. எப்பேர்ப்பட்ட பெண்..
நீக்குஇந்த நினைவில் யூ-ட்யூப் போய் அந்தப் பாடலைக் கேட்டுப் பார்த்தேன்:
இளமை கொலுவிருக்கும்
இயற்கை மணமிருக்கும்
இனிமை சுவையிருக்கும் பருவத்திலே
பெண்ணில்லாமல் சுகமில்லை உலகத்திலே..
.. ..
இன்று தேடி வரும், நாளை ஓடிவிடும்..
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா - எந்தச்
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா..
கண்ணதாசனின் களிப்பான வரிகளை சுசீலா தேன்குரலால் இசைக்க, சாவித்திரியின் மென்முகபாவங்கள், அசைவுகள்.. அடடா..
🤗🙂😊😊😊😊😊😊😊😊😊😊 Super song.
நீக்குசாவித்திரி வலது இடுப்பில் குடத்தை வைத்துக் கொண்டது பொருத்தமில்லாமல் தோன்றியது. ஆனால் அவர் இடது கை பழக்கம் கொண்டவர் இல்லையா? So It's OK!
பதிலளிநீக்குஓ.. அவர் இடதுகை பழக்கமுடையவரா... உங்களுக்குதான் என்னென்ன விவரங்கள் தெரிகின்றன...!
நீக்குநம் பானுவுக்குத் தெரியாத விஷயங்களே கிடையாது.அன்பு வாழ்த்துகள் மா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல்கள் இரண்டும் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் கேட்டு ரசித்தேன். படமும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். முடிவுதான் வேதனை தரக்கூடியது. நேற்று வலைப்பக்கம் என்னால் வர முடியவில்லை. அதனால் இன்று தாமத வருகை. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.