பானு அக்காவின் விருப்பத்தில் ஒரு பாடல். 2014 ல் வெளிவந்த காவியத்தலைவன் படத்திலிருந்து "யாருமில்லா தனியரங்கில்" என்கிற பாடல்.
படத்தின் கதை தலைசுற்றவைக்கும் பாகவதர் காலத்து ராஜபார்ட் டிராமா ட்ரூப் கதை. வசந்தபாலன் இயக்கம். ஏ ஆர் ரஹ்மான் இசை. பாடல் எழுதியது யார் என்கிற விவரம் தெரியவில்லை.
நான் இந்தப் பாடல் கேட்டதில்லை. சித்தார்த், பிரித்விராஜ், வேதிகா நடித்திருக்கும் இந்தப் படத்தில் சித்தார்த் பாகவதர் கிராப்புடன் வளைய வருவது தெரிகிறது.
ஸ்ரீனிவாஸ், ஸ்வேதா மோகன் குரலில் பாடல். ஆரம்பம் சட்டென ஒரு பி சுசீலா பாடலை நினைவு படுத்துகிறது (கானலுக்குள் மீன் பிடித்தேன் என்கிற 'காதல் பரிசு' பாடல்)
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
ஆ…
இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய்
ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் அது இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
யாருமில்லா தனியரங்கில் …
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே …
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்
யாருமில்லா தனியரங்கில் …
பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே
சிற்பம் போல செய்து என்னை சேமித்தவன் நீயே நீயே
மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல்
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்
ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்
இனி என் தெரிவுக்கு வருகிறேன்.
முதன்முதலாக ஒரு காரியம் செய்யப் போகிறீர்கள். என்னென்ன பார்ப்பீர்கள்? நல்ல நாள், நல்ல நேரம், மங்களகரமான பெயர், நல்ல விஷயம்... முதலில் இதை காரியம் என்று சொல்வதே தப்பு, வேலை என்று சொல்லலாமே என்று கூட திருத்தத் தோன்றும். இல்லையா?
முக்தா சகோதரர்கள் திரு ஸ்ரீனிவாசனும், திரு ராமசாமியும் தங்கள் முக்தா நிறுவனத்துக்காக முதலில் ஸ்ரீநிவாசன் இயக்கப்போகும் படத்துக்குத் தேர்ந்தெடுத்த கதை அதிருஷ்டமில்லாத பெண் பற்றியது! அவளை பார்த்தாலே அபசகுனம் என்று அறியப்படும் ஒரு பெண்ணைப் பற்றிய கதையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
ஹிந்தியில் 1959 இல் வெளிவந்த அர்தங்கினி என்கிற படத்தைத் தமிழில் பனித்திரை என்று 1961 இல் எடுத்தார்கள். தலைப்புக்கான காரணம் என்ன என்று படம் பார்த்தவர்களைதான் கேட்கவேண்டும்! மூலத்தை எழுதியவர் சந்திரகாந்த் என்பவர்.
அதிருஷ்டம் இல்லாத அபசகுனப் பெண்ணாக சரோஜாதேவி. மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை இல்லாதவராக, அதிருஷ்டமில்லாத சரோஜா தேவியை மணம் செய்து ஆபத்தில் சிக்குபவராக ஜெமினி. படம் வெற்றி பெற்றதா, தெரியாது. ஆனால் முக்தா பிலிம்ஸ் அப்புறம் நிறைய படங்கள் எடுத்தார்கள்.
ஏழுபாடல்களில் இரண்டு பாடல்கள் கொத்தமங்கலம் சுப்பு. மற்ற பாடல்கள் கண்ணதாசன். இசை கே வி மகாதேவன்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த பாடல், இன்று இங்கே பகிரும் இந்தப் பாடல். பி பி ஸ்ரீனிவாஸ் குரலில் ஒரு அற்புதமான பாடல். என்ன, ஜெமினியின் அபிநயங்கள்தான் கொஞ்சம் விநோதமாய் இருக்கும். 1961 ஆம் வருடத்து வாலிபன்! தனியாய்க் கேட்கும்போது பிபி ஸ்ரீனிவாஸ் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். பின்னாட்களில் அவரே இதே பாடலைப் பாடிக் கேட்டபோது அதை நிறுத்தி விட்டேன்! எப்பவுமே ஒரிஜினல் ஒரிஜினல்தான்!
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்
அவன் ஏனோ மரம் போல்
வளர்ந்து விட்டான்
ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்
அவன் ஏனோ மரம் போல்
வளர்ந்து விட்டான்
எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததெற்கெல்லாம் வாடுகிறான்
எதிலும் அச்சம் எதிலும் ஐயம்
எடுத்ததெற்கெல்லாம் வாடுகிறான்
தன் இயற்கை அறிவை மடமை என்னும்
பனித்திரையாலே மூடுகிறான்
பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான்
பெண்ணே தெய்வம் அன்னை கடவுள்
பெருமை என்று பேசுகிறான்
பெண் பேதைகள் என்றும் பேடிகள் என்றும்
மறுநாள் அவனே ஏசுகிறான்
நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும்
நன்றி என்னும் குணம் நிறைந்திருக்கும்
நரியாய் அவனே உருவெடுத்தாலும்
தந்திரமாவது தெரிந்திருக்கும்
காக்கை குலமாய் அவதரித்தாலும்
ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்
காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால்
கடுகளவாவது பயனிருக்கும்
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும்
அறிந்தே மனிதன் பிறந்து விட்டான்
அந்த ஆறாம் அறிவை தேறா அறிவாய்
அவனே வெளியில் விட்டு விட்டான்
இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்..
பதிலளிநீக்குஅட நம் செல்லம் பற்றிய பாட்டா..தலைப்பு பிடித்தது
கீதா
வாங்க கீதா... காலை வணக்கம். செல்லம் பற்றிய பாட்டு இல்லை, மனித உள்ளம் பற்றிய பாட்டு!
நீக்குநேற்று மற்றபகுதிக்கு கருத்து சொல்ல முடியவில்லை அதன் பின் வர முடியலை ஸ்ரீராம்
பதிலளிநீக்குஅதனால் நண்பர் துளதியின் கருத்துகளையும் போட முடியவில்லை
கீதா
அதனால் என்ன கீதா...
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஎங்கெங்கும் நலம் வாழ்க...
வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா.. வாங்க.. இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஇனிய காலை வணக்கம் அன்பு கீதா ரங்கன்.
பதிலளிநீக்குஅன்பு ஸ்ரீராம். அனைவரும் நலமாக இருக்க இறைவன் அருள் என்றும் வேண்டும்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குபானுவின் பாடல் தேர்வு மிக இனிமை.
பதிலளிநீக்குஇப்படிப் படம் வந்தது தெரியாது.
ஏதோ வசன நடையாக இருக்கிறதே என்று பார்த்தால் அதற்கும் இசை அமைத்த மேதையைப்
பாராட்டத் தான் வேண்டும்.
சித்தார்த் வேதிகா நல்ல நடிப்பு.
இசையும் மிக அருமை. மிக மிக நன்றி பானு.
இந்தப் பாடலை எப்படித்தான் கண்டு பிடித்தீர்களோ
ஸ்ரீராம்.!!!!
நன்றி வல்லிம்மா.
நீக்கு//அதற்கும் இசை அமைத்த மேதையைப்
நீக்குபாராட்டத் தான் வேண்டும்.// வேறு யார்? ஏ.ஆர்.ஆர்.தான். அந்தப் படத்தில் பாடல்கள் இனிமைதான். ஆனாலும் அந்தக் காலத்திர்கேற்ற(சுதந்திரதிற்கு முந்தைய காலம்) இசையாக இல்லை என்று எனக்குத் தோன்றியது.அதற்கெல்லாம் இளையராஜா வர வேண்டும். இந்தப் படத்தில் ஏய் மிஸ்டர் என்னை ஏன் நீ பார்கிற.." என்று ஒரு பாடல் உண்டு. அதை கேட்டுப் பாருங்கள். மிகவும் நவீனமாக இருக்கும்.
ஸ்வேதா மோகனின் குரலினிமையை விட்டு விட்டீர்களே வல்லி அக்கா. என்ன இனிமை!
நீக்குYes ma. Appreciate her voice anytime.
நீக்குயாருமில்லா விடியோவின் பெண் ஸ்ரீவித்யா போலிருக்கிறார். இனிமையான மெட்டு. இந்தப் பதிவில் வராவிட்டால் கேட்பதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. :-)
நீக்கு1961 இல் வெளிவந்த படம் எங்கள் திண்டுக்கல்லில் நன்றாகத்தான் ஓடியது.
பதிலளிநீக்குஇதில் வந்த ஏப்ரில் ஃபூல் பாட்டு அப்போது கிலோன் வானொலியில் ஒவ்வொரு
ஏப்ரில் முதல் தேதியும் ஒலி பரபரப்படும்.
சரோஜாதேவியின் 'வரௌக வருக என்று சொல்லி அழைப்பார் பாட்டும்,
'இருக்குமிடம் எங்கே சொல் இறைவா'
மற்றும்ஜெமினி சரோஜாதேவியின் டூயட் ஒன்றும்
மிக சிறப்பாக இருக்கும்.
பேசும்படத்தில் விளம்பரம் வந்த போதே
நானும் தோழிகளும் தீர்மானம் செய்து
அவரவர் அம்மாக்களைக் கெஞ்சிக் கேட்டு சென்ட்ரல்
தியேட்டரில் பார்த்த படம்.:))))))))
இந்த ஏதோ மனிதன் பாட்டு மிக மிக அருமை.
கொஞ்சம் ''காலங்களில் அவள்'' மாதிரியே ஜெமினி நடந்து
அசைந்து பாடி இருப்பார்.:)
பிபி ஸ்ரீனிவாஸ் அவர்கள் குரல் நன்றாகத்தான் இருக்கும்.
வயசான பிறகும் பாடுவேன் என்று அடம் பிடித்திருக்கக்
கூடாது...பாவம் மனுஷர்:((
ஆம். நீங்கள் சொல்லும் பாடல்களும் படத்தில் இருக்கின்றன. எனக்கு இந்தப் பாடல் மட்டுமே பிடித்தது!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றும் உங்கள் பதிவு எனக்கு அப்டேட் ஆகவில்லை.முன்பெல்லாம் உடனே வந்து விடும். பின்புற வாசல் வழியாகத்தான் வருகிறேன்.
இன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டுமே அருமை. முதல் பாடல் கேட்டதில்லை. இரண்டாவது பாடல் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். ஆனால், படம் பார்த்ததில்லை. பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலினிமையுடன் கூடிய பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். நடிகர் ஜெமினி கணேசனுக்கு அவர் குரல் பொருத்தமாக இருக்கும்.
இரண்டிலுமே நீங்கள் சேகரித்து தந்த விபரங்கள் அருமை. இரண்டிலுமே வெவ்வேறு பாடகர்கள் பாடியதென்றாலும்,"ஸ்ரீநிவாசன்" பெயர் பொருத்தம் பொருந்தியுள்ளது. இரண்டையும் கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆஹா.. கமலா அக்கா.. நீங்கள் சொல்லும்வரை எனக்கு அந்தத் பெயர் ஒற்றுமை மனதில் உரைக்கவே இல்லை!
நீக்குஓ. தப்பாக சொல்லி விட்டேன். ஆடி ஓடி நடித்திருக்கிறார். ஜெமினி.
பதிலளிநீக்குமிக நல்ல பாடல்.
என்னுடைய விருப்பமாக ஒரு பாடல்
பதிகிறேன்.
வாழ்க்கை வாழ்வதற்கே
என்று ஒரு படம் வந்தது.
அதில் ''அவன் போருக்குப் போனான்"
என்று ஒரு பாட்டு. சுசீலா அவர்களும் ஸ்ரீனிவாசும்
பாடியது.
நன்றாக இருக்கிறது என்றால் பதிவிடுங்கள் ஸ்ரீராம்.
அடுத்த வெள்ளிக் கிழமைக்கு!!!
வினோத அபிநயங்கள்! ஜீவி ஸாரின் அபிமான நடிகர் ஜெமினி!
நீக்குநடிகராக மட்டுமல்ல, நல்லதொரு மனிதராகக் கூடத்தான்.
நீக்குநன்றி ஜீவி ஸார்.
நீக்குஇரண்டாவது பாடல் நான் அடிக்கடி விரும்பி கேட்பது ஜி
பதிலளிநீக்குநன்றிஜி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்! என்னது இது ஒரு கீதா வந்தவுடன் இன்னொரு கீதா(அக்கா) எங்கோ ஒளிந்து கொண்டு விட்டார்?
பதிலளிநீக்குஅவர் வெள்ளிக்கிழமை பூஜையில் பிஸி!
நீக்குஹாஹாஹா, வெள்ளிக்கிழமை பூஜை எல்லாம் இப்போப் பண்ணுவதே இல்லை. கீழே உட்கார்ந்தால் யார் தூக்கி விடுவார்கள்? சும்மா நாற்காலியில் உட்கார்ந்த வண்ணம் சில ஸ்லோகங்கள், ராகுகால விளக்கு ஏற்றலோடு சரி!
நீக்குகாலையில் வந்தேன்/பதிவையும் படிச்சேன். ஆனால் கருத்துச் சொல்லவில்லை. நம்ம ரங்க்ஸ் அதுக்குள்ளே வேறே முக்கியமான வேலை கொடுத்துட்டார். அதனால் மூடிட்டு எழுந்துட்டேன். :))))
நீக்கு//கீழே உட்கார்ந்தால் யார் தூக்கி விடுவார்கள்? //
நீக்கு:((
என்னுடைய விருப்பப் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடலை கேட்டதும், சிறு வயதில் "ஏதோ மனிதன் பிதந்து விட்டான், அவன் ஏனோ மதம் போல் வளர்ந்து விட்டான்.." என்று கேலி செய்தது நினைவுக்கு வந்தது. பி.பி.எஸ்ஸின் குரலினிமையை ரசிக்கத் தெரியாத வயது.:((
சிறுவயதில் சண்டையில் நான் என் சகோதரரைப் பார்த்து ஏதோ மனிதன் பிறந்து விட்டான் மரம்போல் வளர்ந்து விட்டான் என்று அவரைச் சுட்டிப் பாடுவேன். அடிக்க துர்த்திக் கொண்டு வருவார்!
நீக்குHAHHAHAHAHAHHAAHAHAHAHHAAHAHAHHAAHAHAHAHAHAHHAHAHA. Same. point.
நீக்குஇர்ண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன் கொஞ்சம் நினைவு. பொருள் பொதிந்த பாடல். வரிகள் அருமை.
பதிலளிநீக்குமுதல் பாடல் இப்போதுதான் கேட்கிறேன். ஓகே...
கீதா
அதே... அதே நானும்!
நீக்குஇனிமையான பாடலும் கருத்துள்ள பாடலும்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க...
நீக்குஇரண்டு பாடல்களும் நன்றாக இருக்கிறது. இரண்டாவது பாடல் முன்பு அடிக்கடி வானொலியில் வைப்பார்கள். நல்ல பாடல்.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்கு//இசையால் ஒரு உலகம்.. அதில் நீ, நான் மட்டும் இருப்போம்.. //
பதிலளிநீக்குநீ, நான் இசையோடு உன் இசைவோடு சேர்ந்திருப்போம்..
முதல் படமோ/பாடலோ கேட்டதே இல்லை. புதிசு. அடுத்தது நிறையக் கேட்டிருக்கேன். பனித்திரை ஹிந்திப் படத்தின் மொழிபெயர்ப்பா? தெரியாது. நான் எழுத்தாளர் ஆர்வி அவர்கள் "பனித்திரை" என ஒரு நாவல் எழுதினதாகவும் அதுதான் படமாக வந்ததாகவும் நினைச்சுட்டு இருக்கேன்.
பதிலளிநீக்குகீசா மேடம் இந்தப் பாட்டைக் கேட்டிருக்கேன் என்று சொல்லியிருக்கிறார். படமும் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருந்தால், என்னை எப்படி மயக்கத்திலிருந்து எழுப்பியிருப்பார்கள் என்று யோசிக்கிறேன்.
நீக்குஹா.. ஹா.. ஹா...
நீக்குஆர்வி வேற, எல்லார்வி வேற இல்லே?
நீக்குஆமாம். ஆர்வி அவர்கள் அசோக்நகர் வீட்டில் நான் இருந்த பொழுது பின்பக்கம் நாயக்கமார் தெருவில் தான் ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வந்தார். நாட்களுக்கு ஒரு தடவையாவது மாலை வேளைகளில் போய் பேச்சுத்துணையாய் இருப்பேன். அவர் எழுத்தில் சாதனை செய்தவர். எல்லாம் மறந்து போய் விட்டது. அவர் கைவசம் அவர் எழுதினதில் ஒன்று கூட இல்லை. அவர் மறந்த நினைவுகளை நினைவுபடுத்துவதற்கு துணையாய் இருந்ததில் எனக்கும் அளவிட முடியாத சந்தோஷம். எல்லாம் இறைவன் கருணை தான்.
நீக்குஇதோ பெரியவர் ஆர்வி. விக்கிப்பீடியாவின் இணைப்பிலிருந்து பூவனத்திற்கு. வாசித்துப் பாருங்கள்:
http://jeeveesblog.blogspot.com/2008/03/blog-post_30.html
உங்கள் பக்கம் சென்றால் அந்தப்பக்கம் அதாவது நீங்கள் தேடி வந்திருக்கும் பக்கம் காணோம், மன்னித்துக் கொள்ளுங்கள் என்கிறது பூவனம்!
நீக்குஆமாம், ஶ்ரீராம், எல்லார்வி திருநெல்வேலிக்காரர். அவர் எழுதிய கோலாட்ட ஜாத்திரை பற்றிய ஒரு கதை இலஞ்சியில் நடப்பதாக எழுதி இருப்பார். அதுவும் இன்னொன்று ஒரு பெண்ணின் கணவன் உடலில் அவளைப் பழிவாங்கக் காத்திருக்கும் வேறொருவனின் ஆவி புகுந்து கொண்டு அவள் கணவன் போல் நடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்துடுவான். அந்தப் பெண்ணிற்கு உண்மை புரிந்து விடும். ஆனால் சொல்ல முடியாமல் தவிப்பாள். இதை எல்லாம் சின்ன வயசிலே படிச்சுட்டு என்ன ஆச்சோ/ஏன் ஆச்சோ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டு இருப்பேன்.
நீக்குhttps://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)
நீக்குகிடைக்கவில்லை என்றால் மேல்கண்ட இணைப்பிற்குப் போய் --
எழுத்தாளர் ஜீவி கட்டுரை என்பதைக் கிளிக் பண்ணிப் பாருங்கள்.
படிக்க முடிந்தது. ஆனால் அங்கு பின்னூட்டம் இடமுடியவில்லை.
நீக்குஇளையவன், மாயூரன் குருமூர்த்தி என்று நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் பலரைத் தெரியாது!
ஆர்வி ஆற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். எவ்வளவு ஜாம்பவான்கள் அவர் வீட்டில் கூடி இருந்திருப்பார்கள் என்று அறிய முடிகிறது.
மேற்கண்ட பதிவில் அமரர் டோண்டு ராகவன் அவர்களின் பின்னூட்டம் வாசிக்க வியப்பூட்டும்.
நீக்குவல்லிம்மா அவர்கள் எவ்வளவு ஆர்வமாக தன் நினைவுகளை நினைவு கொள்கிறார் பாருங்கள்.
நீக்கு/மேற்கண்ட பதிவில் அமரர் டோண்டு ராகவன் அவர்களின் பின்னூட்டம் வாசிக்க வியப்பூட்டும்./
நீக்குபடித்தேன்.
கண்ணன் பத்திரிகையில் எழுதிய மாயூரன் குருமூர்த்தி பிற்காலத்தில் ஆர்வி அவர்களின் மாப்பிள்ளை ஆனார். மாம்பலத்தில் பக்கத்தில் வசித்த அவரும் எனக்கு அருமை நண்பரானார். மிகச் சிறந்த எழுத்தாளர் அவர்.
நீக்குநிறைய நூல்கள் பிரசுரமாகியிருக்கின்றன.
அருள்மிகு ஆலயங்கள் -- எல்கேஎம் பப்ளிகேஷன்ஸ் - விலை 120- 00
தேவியின் திருத்தலங்கள் -- கண்ணபிரான் பதிப்பகம் - விலை 60--00
இவரது இரண்டு நூல்களும் அருமையாக இருக்கும்.
மாயூரன் குருமூர்த்தியின் மருமான் (அக்கா பிள்ளை) தான் எங்க சம்பந்தி. அவர் வீட்டில் ஆர்வி இருந்தப்போப் போயிருக்கோம். என்னை சம்பந்தி அம்மா என்றே ஆர்வி கூப்பிடுவார். எங்க பிள்ளை நிச்சயதார்த்தம் அன்று சித்தப்பாவும் அவரும் வெகுநாட்கள்/ஆண்டுகள் கழித்துப் பார்த்துக் கொண்டார்கள்.
நீக்குநான் அவரிடம் "திரைக்குப் பின்னால்" கதையைப் பற்றியும் அதன் முடிவு எனக்குப் பிடிக்கலை என்றும் அந்தக் கதைக்கருவை வைத்துப் பின்னாட்களில் ஹிந்தியில் அமிதாப் பச்சன், ரேகா நடிச்சுப் படம் வந்தது பற்றியும் கேட்டேன். சாவகாசமாகப் பேசணும் உன்னோடு! ஒரு நாள் வா! என்றார். அப்புறமாப் போக முடியவில்லை.
நீக்கு//பின்னாட்களில் ஹிந்தியில் அமிதாப் பச்சன், ரேகா நடிச்சுப் படம் வந்தது பற்றியும் கேட்டேன். //
நீக்குஎன்ன படம்?
அமுதசுரபி விக்கிரமனை மறந்து விட்டேனே! நீண்ட காலம் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராய் இருந்தவர். பக்கத்திலேயே ஜெய்சங்கர் தெருவில் வசித்தார். கல்கிக்கு அடுத்து ஜெகசிற்பியனுக்கு முன்னால் வரலாற்று நாவலகளில் விஸ்வரூபம் எடுத்தவர். பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து கடைசி அத்தியாயத்தில் கல்கி கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக இவர் எழுதிய நந்திபுரத்து நாயகி மறக்க முடியாத படைப்பு. இவர் கூட சமயங்களில் ஆர்வியைப் பார்க்க வருவார். மொத்தமும் கதராடைக் குழுமம்.
நீக்குஅப்படித் தான் ஒரு தடவை ஆர்வி அவர்கள் தன் வீட்டில் விக்கிரமனுக்கு என்னைப் பற்றிச் சொல்லி என் பக்கம் திரும்பி, "பக்கத்தில் தான் ஜெய்சங்கர் தெருலே இருக்கார். ஐ.ஓ;பி-க்கு அடுத்த தெரு.." வீட்டையும் அடையாளம் காட்டி வைத்தார். சமயங்களில் அங்கேயும் போவேன். ஆனால் அவரை வீட்டில் பார்ப்பதே அரிது. ஞாயிற்றுக் கிழமைகளில் நிச்சயம் இருப்பார். குந்தவையை
குந்தவ்வை என்று குறிப்பிட்டிருப்பார். அந்த இடைஞ்சலைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வாதாடி அவர் அதற்கு தகுந்த விளக்கங்கள் சொல்லி--
எவ்வளவு இனிமையாக காலம் போயிற்று என்கிறீர்கள்?..
@ கீதா சாம்பசிவம்
நீக்கு//மாயூரன் குருமூர்த்தியின் மருமான் (அக்கா பிள்ளை) தான் எங்க சம்பந்தி.//
ஆஹா.. அப்படியா?.. கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவு அருமைய்யான மனிதர்கள்?.. அவர்களின் அப்பாவின் நண்பர் என்ற
உரிமையில் எல்லாரும் பாசத்தோடு பழகுவார்கள். நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்.
ஆர்வியின் திரைக்குப் பின்னால் சுதேசமித்திரனில் தொடராக வெளிவந்தது, ஸ்ரீராம்.
நீக்குதொல்பொருள் ஆராய்ச்சி பணியில் இருக்கும் கதை நாயகன் என்று நினைவு.
எத்தனை ஆண்டுகள் ஆயின?.. எல்லாம் மறந்தே போய் விட்டது.
ஓஹோ... செம ஃபார்மில் இருக்கீங்க போல ஜீவி ஸார்...
நீக்குகீதாம்மா,
பதிலளிநீக்குகண்ணன் ஆர்வி அவர்கள் அல்ல.
எல்லார்வி பனித்திரை என்ற பெயரில் ஒரு நாவல் எழுதியிருப்பதாக நினைவு. ஆ.வி.யில் வசுமதி ராமசாமி அவர்கள் கூட இந்தப் பெயரில் தொடர்கதை எழுதியிருப்பது போல ஓவியத்துடன் நினைவில் நிற்கிறது.
வசுமதி ராமசாமியா? இல்லை அநுத்தமாவா? பனித்துளி என்றொரு நாவல் அந்தக் கால ஆனந்தவிகடனில் வந்தது நினைவில் இருக்கு. கதை ஆரம்பமே தினசரிக் காலன்டரின் ஷீட்டைக் கிழித்துக் குமுட்டி அடுப்பைப் பற்ற வைப்பதாய் இருக்கும்.
நீக்குஅம்மாடி... உங்கள் இருவரின் ஞாபக சக்தி ஆச்சர்யப்பட வைக்கிறது.
நீக்குஆமாம், பனித்துளி தான். You are right. நிச்சயம் அனுத்தமா இல்லை.
நீக்குசரோஜா ராமமூர்த்தியோ?
ஸ்ரீராம்! வல்லிம்மாவை வீட்டுட்டீங்களே! அவர் வந்தால் டக்கென்று சொல்லிவிடுவார். தில்லானா மோகனாம்பாளின் கோபுலுவின் சித்திரங்களை அவர் ரசித்த ரசிப்பு என்னங்கறீங்கறீங்க?
நீக்குஅதுதானே... வல்லிம்மா... மன்னிச்சுக்குங்க!
நீக்குஇல்லை ஶ்ரீராம், அந்தக் கதை முத்துச் சிப்பி. தப்பாய்ப் பனித்துளினு சொல்லிட்டேன். பின்னர் நினைவில் வந்தது. பனித்துளி எழுதினது சரோஜா ராமமூர்த்தி தான் என நினைக்கிறேன். "காப்டன் கல்யாணம்" என்றொரு தொடரும் இவர் அந்தக் கால விகடனில் எழுதிய நினைவு. ஸிம்ஹா அவர்களின் ஓவியம்னும் நினைவு.
நீக்குகாப்டன் கல்யாணம் தான் வசுமதி ராமசுவாமினு நினைவு. சரோஜா ராமமூர்த்தி இல்லையோ? அப்போல்லாம் இந்த நாவலைக் காத்திருந்து படிச்சிருக்கேன். இவங்க நாக்பூரில் இருந்ததாகவும் தனக்கு நன்றாய்த் தெரிந்தவர் எனவும் என் பெரிய நாத்தனார் சொல்லுவார்.
நீக்குமுத்துச்சிப்பியும் சரோஜா ராமமூர்த்தி எழுதினது தான் என நினைக்கிறேன்.
நீக்குஎனக்கு ஒன்றும் புரியவில்லை!
நீக்குஹாஹாஹா, சரோஜா ராமமூர்த்தி எழுதினவற்றில் முத்துச் சிப்பி, பனித்துளி ஆகியவை அடக்கம். வசுமதி ராமசுவாமி எழுதினதில் காப்டன் கல்யாணம்.
நீக்கு😍😍😍😍😍😍😍😍😍😍😍
நீக்குமுத்துச் சிப்பி அட்டைப் படம் நினைவிருக்கிறது.
நீக்குஅந்தக் காலண்டர் தாள் ,அடுப்பு,அம்மா அதன் முன் உட்கார்ந்திருக்க,
அவள் மூக்குத்தியில் அந்த வெளிச்சம் பட
அற்புதமான ஓவியம்.
பனித்திரை ,குமுதத்தில் கூட வந்தது. பி.எஸ் என்று நினைக்கிறேன்.
நன்றி ஜீவி சார்.
வசுமதி ராமசாமியின் கதைகளை
மிக விரும்பிப் படிப்பேன்.
நீங்களும் சேர்ந்து கொண்டதில் சந்தோஷம், வல்லிம்மா.
நீக்குஅசோக் லேலாண்ட் சேஷசாயி அவர்களை கெளதமன் அறிவார். அவர் அம்மா தான் வசுமதி ராமசாமி என்று நிறைய பேருக்குத் தெரியாது.
பதிலளிநீக்குஓ...
நீக்குமாமியாரின் நல்ல தோழி. மிக மிக அடக்கம்.
நீக்குஅந்த நாட்களில் பௌர்ணமிக்குப் பௌர்ணமி
ஏழைப் பெண்களுக்குப் புடவை, மாங்கல்யம்
என்று மகளிர் குழு மூலம் ஏற்பாடு செய்தவர்.
இரண்டாவது பாடல் மிகவும் பிடித்த பாடல். குரல் அழகாக இருக்கும் வரைதான் பாடணும். அந்த சக்தி போயிடுச்சு என்றால் பாட முயலக்கூடாது. எல்லாரும் எஸ் பி பி ஆக ஆகமுடியாது. அதற்குக் கொடுப்பினை வேண்டும்.
பதிலளிநீக்குமுதல் பாடல் கேட்டதில்லை. பிறகு கேட்டுவிட்டு எழுதுகிறேன்.
/பாகவதர் காலத்து ராஜபார்ட் டிராமா ட்ரூப் கதை// - எனக்கு என்ன ஆச்சர்யம்னா, வெற்றி பெறாது என்று தெரிந்தும் இப்படித் தயாரிப்பாளர்களை போண்டி ஆக்க முயல்வது நியாயமா? இது என்ன ஓவியமா? எப்படி இருந்தாலும் விலை போயிடும் என்று நினைப்பதற்கு? இது வியாபாரத் துறை. அப்புறம் எப்படி நிறைய படங்கள் இயக்குவதற்கு வரும்? (நல்ல டைரக்டராக இருந்தபோதும்)
முதல் பாராவை அப்படியே ஆதரிக்கிறேன்!
நீக்குவருமானவரி கணக்கு காட்ட நஷ்டம் காட்டுகிறார்களோ என்னவோ...
படம் மோசமாக இல்லை. எல்லோரும் நன்றாக நடித்திருந்தாலும் சித்தார்தால் அந்த ரோலை carry பண்ண முடியவில்லை.
நீக்குபடம் பார்க்கும் தைரியம் எனக்கில்லை!
நீக்கு//வெற்றி பெறாது என்று தெரிந்தும் இப்படித் தயாரிப்பாளர்களை போண்டி ஆக்க முயல்வது நியாயமா?// இந்தப் படம் ஓடும், இது ஓடாது என்று கணிப்பது கஷ்டம். அது மட்டும் முடிந்தால் எல்லோரும் வெற்றிப் படங்களைத்தானே எடுப்பார்கள். 'வேட்டையாடு,விளையாடு ஓடவே ஓடாது என்றாராம் கமலஹாசான். எஸ்.பி.பி கூட அதன் தெலுங்கு பதிப்பிற்கு டப்பிங் பேசி முடித்து விட்டு, அதன் தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணனிடம்,"ஏண்டா இந்தப் படத்தை எடுத்த? இது ஓடாது" என்றாராம். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.
நீக்குபஞ்சதந்திரம் போன்ற ஜனரஞ்சகமான படம் வெற்றி பெறவில்லையாம்.
இது செய்தி!
நீக்குமினிமம் கேரண்டி என்பதுபோல படங்கள் எடுக்கலாம். கையைக் கடிக்காது. சில படங்களின் தீம், தயாரிப்பாளரை போண்டியாக்கிவிடும். ஆனால் தயாரிப்பாளர்களும் டக்குனு தயாரித்து கோடிகளைப் பெருக்கலாம்னு நினைக்கறாங்க, இந்த டைரக்டரை புக் பண்ணலாம், இந்த நடிகர் கால்ஷீட் இருக்கு என்று செல்வதால்தான் தோல்வி ஏற்படுகிறது. உதாரணமா, சிம்பு, தயாரிப்பாளரை எப்படி போண்டியாக்குவது என்பதில் நன்கு ஆராய்ச்சி செய்தவர். இயக்குநர் பாலாவும்தான் ஹாஹா.
நீக்குகமலஹாசன், நிச்சயம் தோல்வியடையும் என்று எதிர்பார்த்த மகாநதி பெரும் வெற்றி. இதுமாதிரி விதிவிலக்குகள் இருக்கலாம். அவ்ளோதான்.
முதல் பாடல் இது வரை கேட்டதில்லை. இப்பொழுது தான் கேட்கிறேன். இரண்டாம் பாடல் பல முறை கேட்ட பாடல். நல்ல பாடலும் கூட.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குசே! இந்த க்ரூப் ஒரே ஒல்டீஸ்! பழைய பாடல்களைத்தான் ரசிக்கிறார்கள். என்னைப் போன்ற யூத்துகளுக்கு கம்பெனி இல்லை.ஹூம்!
பதிலளிநீக்குசில வாரங்களுக்கு முன்பு கே.பி.சுந்த்ராம்பாள், கிட்டப்பா காதல் பற்றி பேச்சு ஓடிய பொழுது இந்தப் படமும், பாடலும் நினைவுக்கு வந்தன. பாய்ஸ் (நாடக)கம்பெனி பற்றிய இந்தப் படத்தில் நாசரின் கதாபாத்திரம் சங்கரதாஸ் ஸ்வாமிகளின் பாத்திரமாம். சித்தார்த், வேதிகா பாத்திரங்கள் எஸ்.ஜி.கிட்டப்பா, சுந்தராம்பாள் என்று முழுமையாக சொல்ல முடியாவிட்டாலும், கே.பி.எஸ். கிட்டப்பாவிற்கு எழுதிய கடிதங்களை அடிப்படையாக கொண்டதுதான் இந்தப் பாடல். இயக்குனர் வசந்தபாலனும் ஒரு சின்ன ரோலில் வருவார். சோகமான முடிவு.
:>))
நீக்கு//அதற்கும் இசை அமைத்த மேதையைப்
பதிலளிநீக்குபாராட்டத் தான் வேண்டும்.// வேறு யார்? ஏ.ஆர்.ஆர்.தான். அந்தப் படத்தில் பாடல்கள் இனிமைதான். ஆனாலும் அந்தக் காலத்திர்கேற்ற(சுதந்திரதிற்கு முந்தைய காலம்) இசையாக இல்லை என்று எனக்குத் தோன்றியது.// என்னுடைய இந்த பதிலுக்கு, பா.வெ.மேடம், என்ன சொல்கிறீர்கள்? அந்தக் கால இசை என்றால் 'காயத கானகத்தே..'என்ற டியூனிலா போட முடியும்? இப்போது யார் கேட்பார்கள்? என்று நெ.த. கமெண்டிடுவார் என்ரு எதிர்பார்த்தேன்.
:-))
நீக்கு..அந்த ஆறாம் அறிவை தேறா அறிவாய்
பதிலளிநீக்குஅவனே வெளியில் விட்டு விட்டான்..!//
அழகான வரிகள். அருமையான பாடல். ரேடியோவில் கேட்கையில் அல்லது ஆடியோவை மட்டும் அனுபவிக்கையில், ஆனந்தம் மிகத் தரும் பாடல். சின்ன வயதில் பிபி ஸ்ரீனிவாஸின் குரலின்மீது மதிப்பு மிக, காரணமான சில பாடல்களில் ஒன்று.
ஆம். காட்சியைப் பார்க்காமல் இந்தப் பாடலை ரொம்பவே ரசிக்கலாம். வரிகள் ஸ்பெஷல்!
நீக்குஜீவி சாரின் இணைப்பில் சென்று படித்தேன். 2008இல் வந்த பதிவு.
பதிலளிநீக்குஎங்கள் ஆதர்ச எழுத்தாளர்கள் ,
அத்தனை பெயர்களும் அங்கே இருக்கிறது.
மீண்டும் அனுபவித்தேன்.
இன்று புத்தகங்களுக்கான நாள்.
எழுத்தாளர்களைப் பற்றிய பதிவாகிவிட்டது எபிளாக்.
நன்றி ஜீவி சார், ஸ்ரீராம், கீதாமா, பானுமா.
//இன்று புத்தகங்களுக்கான நாள்.
பதிலளிநீக்குஎழுத்தாளர்களைப் பற்றிய பதிவாகிவிட்டது எபிளாக்.//
ஆஹா.. இதெல்லாம் கோர்வையாய் சொல்லத் தெரியாமப் போச்சே! இதுக்குத் தான் வல்லிம்மா வேணுங்கறது...
ஜீவி சார்.நன்றி.
நீக்கு///நான் இந்தப் பாடல் கேட்டதில்லை// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என்ன ஸ்ரீராம் சொல்றீங்கள்.. எவ்வளவு பேமஸ் ஆன பாட்டுத்தெரியுமோ இப்பாட்டு.. பலமுறை நான் கேட்டிட்டேன்..
பதிலளிநீக்குஉங்கள் பாட்டும் அழகு.. கேட்டதுண்டு.
பதிலளிநீக்குகீதாவும் லாண்டட் போல தெரிகிறதே... கார்த்திகைப்பிறைபோல:))
நூறாவது பின்னூட்டமும் இருக்கட்டும் என்று
பதிலளிநீக்குஎழுதுகிறேன். நன்றி எங்கள் ப்ளாக்.
இரண்டாவது பாடல் அடிக்கடிக் கேட்கும் அருமையான பாடல்
பதிலளிநீக்கு