பிரபுவின் நூறாவது படம் என்று அவர்கள் சொந்தத் தயாரிப்பில், அதாவது சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான படம் ராஜகுமாரன். வெளியான ஆண்டு 1994.
நதியா, மீனா என்று இரட்டைக் கதாநாயகிகள். இளையராஜா இசையில் பாடல்களை எழுதி, இயக்கி இருப்பவர் ஆர் வி உதயகுமார்.
எஜமான் கதை அமைப்பிலேயே படம் இருந்தது என்று விமர்சிக்கப்பட்டது. படம் பயங்கர தோல்வி என்று சொல்கிறது விக்கி. ஆனால் இதில் 'சித்தகத்திப் பூக்களே, சின்னச்சின்ன சொல்லெடுத்து, பொட்டு வைத்ததாரு' என்று இரண்டு மூன்று பாடல்கள் நன்றாய் இருக்கும்.
சமீபத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் மேடை நிகழ்ச்சி ஒன்று யு டியூபில் பார்த்தேன். அதில் இந்தப் பாடலைப் பாடும் முன் ஆர் வி உதயகுமாரை மேடைக்கு அழைத்து அவர் எழுதிய 'பச்சைமலைப்பூவு' பாடலை சரணத்தில் பாடி ரொம்ப சிலாகித்தார் எஸ் பி பி.
அப்புறம் இந்தப் பாடல் பற்றியும் சொன்னார். இதில் இரண்டாவது சரணத்துக்கு முன் ஆ... என்று இழுத்து விட்டுத் தொடங்குவார். அதற்கு பிரபு பிரமாதமாக நடித்திருந்தார் என்று SPB சொன்னதும் என் ஆர்வம் எகிறியது. என்னடா அப்படி நடிப்பு என்று பார்ப்பதற்காக இந்தப் பாடலைப் போட்டுக் கேட்டுப்பார்த்தேன். எனக்கு அப்படி ஒன்றும் அந்த இடத்தில் பிரமாதமான நடிப்பு தெரியவில்லை என்றாலும் பொதுவாகக் காட்சி அமைப்பு ரசிக்கும்படிதான் இருந்தது.
பிரபுவைக் காதலிக்கும் மீனா அவர் தன்னைப்பற்றி பாடுவதாக நினைத்துக் கொள்ள, நதியாவைக் காதலிக்கும் பிரபு அவரைப் பார்த்துப் பாடுவார்.
சும்மா சொல்லக் கூடாது. உண்மையிலேயே எஸ் பி பி குரல் ஜாலம்தான் புரிந்திருக்கும் இந்தப் பாடலில். மேல் ஸ்தாயியில் தொடங்கும் சரணமாகட்டும், சரணத்தையும் பல்லவியையும் இணைக்கும் குழைவுகளாகட்டும்... பின்னி இருக்கிறார் எஸ் பி பி. சபாஷ் இளையராஜா. (பாடகர் என்பதால் எஸ் பி பி தன் மகளுக்கு பல்லவி என்றும், மகனுக்கு சரண் (சரணம்) என்றும் பெயர் வைத்திருக்கிறார் தெரியுமோ... அப்புறம் இன்னொரு சம்பந்தமில்லாத விஷயம் "பல்லவியே சரணம்" என்று ஒரு பாட்டு பாடி இருக்கிறார் எஸ் பி பி!!).
ஆர் வி உதயகுமார் சிறுவயதில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது கேட்டு பிரமித்த குரலாம் எஸ் பி பி. பின்னாட்களில் அவர் எழுதப்போகும் பாடலையே எஸ் பி பி பாடியதை வெகுவாக சிலாகித்தார். காலம்தான் ஒவ்வொருவரையும் எங்கெங்கு கொண்டு நிறுத்துகிறது? கொடுத்து வைத்தவர்கள்.
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிறைந்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ
அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் காணாத தேன் நிலா
தெம்மாங்கு பாடிடும் சின்ன விழி மீன்களும்
பொன் ஊஞ்சல் ஆடிடும் கன்னி கருங் கூந்தலும்
முத்தாடும் மேடை பார்த்து வாடி போகும் வான் பிறை
முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தீர்க்கும் தாமரை
வண்ண பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க தாளாமல் நாணுவாள்
புது பூ கோலம் தான் காலில் போடுவாள்
கண்ணோரம் ஆயிரம் காதல் கணை வீசுவாள்
முந்தானை சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாய மேகம் ஆகி ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடி பாடி ஓடுவாள்
அதிகாலை மூச்சு அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்
யாருக்குமே இந்தப் பாட்டுப் பிடிக்கலையா? அல்லது பாட்டைத் தாலாட்டுனு நினைச்சுத் தூங்கிட்டு இருக்காங்களா?
பதிலளிநீக்குபுனித வெள்ளி கோவிலுக்குச் சென்று விட்டு வருவார்கள்.
நீக்குவந்துடுச்சுங்க வந்துடுச்சு. இந்த ரோபோவுக்குப் பயந்து யாரும் வரலை போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குஇரண்டு மூன்று நாள் வரும், அப்புறம் வராது!
நீக்குஅனைவருக்கும் காலை மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஇனிமே மதிய வணக்கத்தையும் சேர்த்துக்கோங்க கீசா மேடம்.
நீக்குஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!! இன்னுமா யாரும் வரலை! ஶ்ரீராம் கூடக் காணோமே!
பதிலளிநீக்குபணிக்குச் சென்று கொண்டிருக்கிறேன்.
நீக்குஅனைவருக்கும் ,நம் கீதாவுக்கும் இனிய காலை வணக்கம்.
நீக்குஇறைவன் கருணையில் அனைவரும் என்றும் நலத்துடன் இருக்க
பிரார்த்தனைகள்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஅருமையான பாடல் ஜி
பதிலளிநீக்குநீங்கள் சொன்ன ஆர்.வி.உதயகுமார் மேடை நிகழ்ச்சியை நானும் பார்த்து இருக்கிறேன்.
ஓ.. நீங்களும் பார்த்திருக்கிறீர்களா? நன்றி ஜி.
நீக்குஎஸ்பிபியின் பாடல்களில் எல்லாமே இனிமை. எல்லாமே ஏதாவது ஒரு விதத்தில் முத்திரை பதித்து விடுவார்.
பதிலளிநீக்குஇந்தப் பாடலும் அந்த ரகம் தான்.
பிரபுவும் பாலுசாரும் இணைந்து நடித்த பாடல்.
பிரபுவின் கன்னக் குழிகளுக்குக் கல்லூரி மாணவிகளிடம் மதிப்பு
நிறைய:)
அக்னி நட்சத்திரம் வந்த போது பார்க்க வேண்டும்.!!!!
இந்தப் பாடல் மூவரின் நடிப்புக்கும் நல்ல
சாட்சி.
பாலு சார் குரல் கொடுத்து ,உதயகுமார் டைரக்ட் செய்தால்
வரும் டோட்டல் ரிசல்ட் டாப் க்ளாஸ்.
இன்னோரு தடவை பாருங்கள். நல்ல Sync ஆகும்.
மிக மிக நன்றி மா ஸ்ரீராம்.
ஆமாம் அம்மா.. எஜமான், கிழக்குவாசல் போன்ற படங்கள் உதாரணம்.
நீக்குநன்றாகப் பாடியிருக்கிறார் எஸ்பிபி. (அதான் தெரியுமே சார் என்பீர்களோ!)
பதிலளிநீக்குநூறாவது படத்தில் அப்பாவை ரொம்பத்தான் காண்பிக்கப் பார்த்திருக்கிறார் ஹீரோ.
ஆமாம்.. ஆமாம்..
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா வாங்க..
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமினாதன் மேடம்.. வாங்க..
நீக்குநல்ல பாடலை பதிவு செய்திருக்கிறீர்கள்! ஆனாலும் இது வெளியில் மிகவும் புகழ் பெறவில்லை மற்ற எஸ்.பி.பியின் பாடல்கள் போல!
பதிலளிநீக்குஇல்லை மேடம். பாடல் அப்பவே ரொம்ப பேமஸ்தானே..
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். இனிமையான பாடல். பிரபு குழந்தைகளை கவர்ந்த நடிகர். திருமணம் செய்து கொண்டு ஒரு சிறிய ப்ரேக்கிற்குப் பிறகு நதியா நடித்த படம் இது என்று நினைக்கிறேன். படம் தோல்வியடைந்ததால் லண்டனுக்குச் சென்றவர் M.குமரன்,S/O மஹாலட்சுமியில் திரும்பி வந்தார்.
பதிலளிநீக்குஓ.. இந்தப் படத்துக்குப் பிறகு மகாலஷ்மிதானா?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் நல்ல பாடல். நானும் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். படம் பார்த்ததாய் நினைவில்லை. இந்தப் பாடலில், பாட்டுடன் ஆழ்ந்த பிரபுவின் முக பாவங்கள் நன்றாகத்தான் இருக்கும். நானும் ரசித்திருக்கிறேன்.
அதே போல "காதோரம் லோலாக்கு கதை சொல்லுதம்மா" என்ற பிரபு பாடும் பாடலும் நன்றாக இருக்கும். அது எந்த படம் என்று நினைவில்லை.
எஸ்.பி.பி பற்றி கூறியது நீங்கள் கூறியதனைத்தும் சிறப்பாக இருக்கிறது. . அவருடைய குழந்தைகளுக்கு பாட்டு சம்பந்தபட்ட பல்லவி, சரணம் (சரண்) பெயர்கள் வைத்திருப்பதை அவர் ஒரு பேட்டியில் கூறும் போது நானும் கேட்டிருக்கிறேன். அவர் குறிப்பிட்ட "பச்சைமலை பூவு" பாடலும் கேட்டிருக்கிறேன். இசை நன்றாக இருக்கும். அவர் குரலுக்கு அப்படியொரு வசீகர சக்தி. அது இறைவன் தந்த ஞானம். அதில் இறுதி வரை மாற்றங்கள் ஏதுமில்லை. அவரும் நம் நினைவுகள் இருக்கும் வரை நம்மோடு வாழ்பவர். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.. நீங்கள் சொல்லும் பாடல்களனைத்தையும் நானும் ரசித்திருக்கிறேன்.
நீக்குகாதோரம் லோலாக்குப் பாடல் எனக்கு ரொம்பவும் பிடிச்சது. ஒரு முறை பாடல் காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தப்போப் பிரபுவோட சுகன்யாவோ அது? அப்படித் தான் நினைவு. ஆனால் படம் பெயரோ கதையோ தெரியாது. பாட்டை அடிக்கடி கேட்டதால் ரசிப்பேன்.
நீக்குஇன்று நல்ல பாடல். நிறையதடவை கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலமே வாழ்க எங்கெங்கும்...
இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்.. ஆனாலும் அந்தப் படத்தைப் பார்த்ததில்லை...
பதிலளிநீக்குGood Morning to all! Nice to hear this song!
பதிலளிநீக்குகேட்ட பாடல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குஇனிமையான பாடல்... மேடை நிகழ்ச்சியையும் பார்த்துள்ளேன்...
பதிலளிநீக்குஇனிமையான பாடல். எப்படி பட்ட பாடல் என்றாலும் எஸ் பி பாலசுப்ரமணியம்அவர்கள் ரசித்து பாடுவதால் அந்த பாடல்கள் வெற்றி பெறுகிறது.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
இந்த படத்தை பார்த்திருக்கிறேன் அப்போ இப்பட பாடல்கள் எல்லாம் பிரபலம் .ரொம்ப ரிச்சா எடுத்திருப்பாங்க ராஜா ஜமீன் பரம்பரைன்னு .spb தகவல்கள் பகிர்வும் அருமை .அப்பாவைபோல் மகன் சரண் அவ்ளோ பிரபலமாகல்லை ஏனோ
பதிலளிநீக்குஅருமையான பாடல்
பதிலளிநீக்கு