புதன், 28 ஏப்ரல், 2021

நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ வினோதமான மேனரிசம் ஏதாவது உண்டா?

 

நெல்லைத்தமிழன்: 

1. மும்பைல எல்லாம், ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில், தளத்திற்கு காமன் டாய்லட், பாத்ரூம்கள் சகஜம். சென்னையிலும் பெங்களூரிலும் விரைவில் வரும் என்று தோன்றுகிறதா? அப்படி இருந்தால் தவறா?  (நானே, 4 பாத்ரூம் டாய்லட்டிற்கான இடம், ஒரு வீட்டில் வேஸ்ட் ஆகிறதோ என்று நினைப்பேன்)   

$ பக்கிங்ஹாம் மாளிகையில் இருக்கும் ஐநூற்று சொச்சம் அறைகளிலும் ஒரு பாத் ரூமும்... அம்மாடி கேட்கவே தலை சுற்றுகிறது..முழுக்க முழுக்க எஸ்ட்ர்னல்  குளியல் டாய்லெட் என்று 2/3 வீட்டுக்கு ஒன்று என்றிருந்தால் கூட தமிழ் மக்கள் கமல்ஹாசனுக்கு நிறைய வேலை கொடுத்து விடுவார்கள்.

# காமன் வசதிகளைப் பயன்படுத்த சற்று தயக்கம் பழகிவிட்டோம். 

& இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் இருக்கின்ற டாய்லெட் என்ன நிலையில் இருக்கும் என்று பார்த்தவர்கள் யாருமே காமன் டாய்லெட் என்று சொன்னாலே காத தூரம் ஓடுவார்கள்.  இந்திய சராசரி மக்களின் mentality காமன் கழிப்பறைகளுக்கு ஒத்து வராது. 

2.  மூன்று வேளையும் சாதத்தையே சாப்பிட்டு வாழ்ந்த முன்னோர்கள்., சாதமா..கூடவே கூடாது, வெயிட் போடும், சாலட் போதும், ஜீனி வேணாம், ஓட்ஸ் போதும் என்றெல்லாம் ரொம்பவே கட்டுப்பாடுடன் வாழும் நாம்.... இது முன்னேற்றமா?   

$ மூன்று வேளை சாதம் சாப்பிட்டது பற்றி நினைவு கூறும் நீங்கள், அவர்கள் சராசரி 10 மைல். தினமும் நடந்ததையும், மாவு இடித்தையும், விறகு வெட்டியதையும் இன்னும் பல வேலைகளில்  உடம்பில் ஒரு துளி சர்க்கரை சேராமல் வெயிலில் உழைத்ததையும் மறந்து விட்டீர்களே?

# சர்க்கரை தவிர்த்து சலாட் சேர்த்து என்பது ஆரோக்கியம் என்று ஆனபின் முன்னேற்றம்தான். பிட்ஸா கோலா நூடுல்ஸ் அதைப் பின் தள்ளுவதும் நடைமுறைதான். 

3. புத்தகத்தை எடுத்து முழுவதும் முடிக்கணும் என்ற மாதிரி நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகம் எது?     

$ பொன்னியின் செல்வன் (15 வது முறையாக இருக்கலாம்)

# அப்படியெல்லாம் ஆர்வமாகப் படித்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. 

& நிறைய distractions இருப்பதால் சமீப காலங்களில் அப்படி எந்தப் புத்தகத்தையும் படிக்க இயலவில்லை. 

4.  ஆண்களுக்கு முழு நேர சமையல், வீடு சார்ந்த வேலைகள் இருந்தால், அவர்களால் சமாளிக்க முடியுமா?   

$ செய்த வேலையை திரும்பத் திரும்ப செய்யும் பொறுமை ஆண்களிடம் இல்லை. ஆகையால் சமாளிக்க முடியாது.

# தேவை பலமாக இருந்தால் சமாளிப்பதை அறிந்திருக்கிறேன். 

& முடியாது. 

5.  பாயசம் என்பதில் உங்களுக்கு மிகவும் விருப்பமானது எது?     

$ பாசிப்பருப்பு பாயசம்.

# உண்மையாகச் சொல்வதானால் பயற்றம்பருப்பு வெல்லப் பாயசம்.

6.  நம் குழந்தை, அயலான் குழந்தை என்று அன்பில் வேறுபாடு வருமா? ஏன்?  (உண்மையை எழுதணும்))

$ வரும். ஏன் என்றெல்லாம் தெரியாது.

# நிச்சயம் வரும். காரணம் முழுமையான மனிதப் பண்பு நம்மிடம் இல்லாததுதான்.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

முட்டாள் தெரியும், அது என்ன அடி முட்டாள்?

# அது நான் தான் என பதில் சொல்ல ஆசை !

அடி என்றால் ஆகக் கீழ் மட்டம் (குளத்தின் அடியில் சேறு). எனவே இவரினும் அதிக மடையர் வேறில்லை என்று கொள்க.

$ முட்டாள் உலகத்து அடி மட்டத்தில் இருப்பவர் . அடிக்குழம்பு..முன்காலத்தில் கல்லும் மண்ணும் புளி சக்கையும் நிறைந்திருக்கும்.

& நுனி மரத்தில் அமர்ந்து, 'அடி' மரத்தை வெட்டுபவர். 

வேலை வெட்டி இல்லை, வெட்டியாக இருக்கிறான்,  வெட்டி வேலை என்றும் கூறுவார்கள். அது என்ன வெட்டி?

# வெற்று என்பதன் மரூஉ.  பயனில்லா உழைப்பும் கூட இல்லை என்ற நிலை.

& வியாழனில் 'வெட்டி' அரட்டை அடிப்பவர் பதில் சொல்வாரா? 

உங்கள் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ வினோதமான மேனரிசம் ஏதாவது உண்டா?

# உண்டு , விவரமாகச் சொல்லப் போனால் பொல்லாப்பு.

$ ஒருவர் வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் கிழக்கு திசையில் மட்டுமே செல்வார்.

மற்றவர் சென்ற வழியில் திரும்ப நடக்கமாட்டார்.

இன்னொருவர் ஒரு திருவாங்கூர் சமஸ்தானத்து காசை எப்போதும் பையில் வைத்திருப்ப்பார்.

& வேலை பார்த்த நாட்களில் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடும் ஒரு நண்பர் கையொப்பம், அதற்கு மேலே மீண்டும் ஒன்று, இன்னும் ஒன்று என்று போடுவார். 

இன்னொருவர், pay slip உள்பட எங்கே கையெழுத்துப் போட்டாலும் அந்தக் காகிதத்தின் மேல் பக்கத்தில் ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டே கையெழுத்துப் போடுவார். வருகைப் பதிவேட்டின் மேல் பக்கம் முழுவதும் மாதக் கடைசியில் பிள்ளையார் சுழிகளால் நிறைந்திருக்கும். 

"இந்த வருடம் மழைபெய்யவில்லை அதனால் விவசாயம் பாதிப்பு, அதிக மழையால் பயிர்கள் நாசம்" இதற்கு அரசாங்கம் ஈடு தர வேண்டும். கொரோனாவால் சரக்குகள் தேங்கி விட்டன, வியாபாரம் இல்லை, அரசாங்கம் ஈடு தர வேண்டும் என்று எல்லாவற்றிர்க்கும் அரசாங்கத்தை நிர்பந்திக்கும் போக்கு சமீப காலங்களில் அதிகமாக காணப்படுவதற்கு என்ன காரணம்?

# நான் கொடுக்கும் வரியில் நடக்கும் அரசாங்கம் எனக்கு இடர் வந்தபோது கைகொடுக்க வேண்டாமா என்ற உரிமைக்குரல்.  வணிகரும் உழவரும் தமக்கு வேண்டுவதோடு நிறுத்திக் கொண்டால் உலகம் தாங்குமா ?

$ அரசாங்கம் என்பதறியார் என்றுணர்வரோ! 

--- 

 

148 கருத்துகள்:

  1. முட்டாள், அடி முட்டாள் - கேள்வி பதில் நன்று. அது சரி... வடி கட்டின முட்டாள் என்ற பதம் இருப்பதை எல்லோரும் மறந்துவிட்டீர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வடி கட்டின முட்டாள் என்ற பதம் இருப்பதை எல்லோரும் மறந்துவிட்டீர்களே// எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி தன் கணவன் வீட்டு மனிதர்களை ஜமகாளத்தில் வடிகட்டிய சமத்து என்பார்.

      நீக்கு
    2. இந்த 'ஜமுக்காளத்தில் வடிகட்டிய' என்பதற்கு ஏதோ விளக்கம் எங்கேயோ (!) படித்தேன்.  நினைவில் இல்லை!

      நீக்கு
    3. இப்படி ஜமுக்காளம், பெட்ஷீட்,போன்ற கனமான துணி வகையறாக்களில் வடிகட்டும் போதே, சரியாக வடிபடாமல், அவர்கள் சுதாரித்து கொள்ள மாட்டார்களோ? அதனால்தான் சமத்து என்ற பட்டமும் உடனே கிடைத்துள்ளது போலும்..!

      நீக்கு
    4. சமர்த்தா, முட்டாளா?  வடிகட்டும்போது பிழைத்துக் கொண்டால் சமர்த்துதானே!!!

      நீக்கு
    5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    6. ஜமுக்காளம் போன்ற தடிமனான துணியில் வடிகட்டும்போது , நுண்ணிய துகள்கள் கூட வடிகட்டப்பட்டு, சுத்தமான தண்ணீர்/திரவம் மட்டுமே கிடைக்கும். அதுபோல வடிகட்டிய முட்டாள் என்பவர் அவரிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச புத்திசாலித்தனமும் வடிகட்டப்பட்டு pure முட்டாள்-ஆக இருப்பவர் என கொள்ளவேண்டும்.

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இறைவனின் கருணையால் எல்லோரும்
    நோய் அண்டாத வாழ்க்கை வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்து பிரார்த்திப்போம் வல்லிம்மா..  வாங்க...  வணக்கம்.

      நீக்கு
    2. வெட்டி, அடி முட்டாள் பதில்கள் மிக சிறப்பு.

      'காமன் ' பாத்ரூம் தலை சுத்துகிறது.
      அதுவும் இந்தத் தொற்று நேரத்தில் முடியவே முடியாது.
      ஒப்ரா வின் ஃப்ரீ இந்தியா வந்த போது
      எடுத்த மும்பை சீரிஸில்
      அம்மா, அப்பா, மூன்று பெண்குழந்தைகள் ஒரே
      அறையில் வசிப்பதைப்
      படம் எடுத்திருந்தார்.
      அந்தப் பெண்கள் வரிசையில் நின்று
      டாய்லெட் உபயோகிக்கிறார்கள்.
      எங்களுக்கு இதெல்லாம் பழகிவிட்டது.
      நான் படித்து லண்டன் போய் அம்மாஅப்பாவுக்குப்
      புது வீடு வாங்கிக் கொடுப்பேன் என்று
      மூத்த குழந்தை சொல்கிறது!!!

      நீக்கு
    3. டாய்லெட் போவதற்கு 'லண்டன் போவதாக' எங்கள் மாமா ஒருவர் சொல்வார்.  டாய்லெட் போவதற்கே லண்டன்தான் போகணுமா?!!!

      நீக்கு
    4. ஆமாம் எங்கள் வீட்டிலும் பிறந்த வீட்டில் நான் கிராமத்தில் இருந்தப்ப சொல்வதுண்டு. இந்த இந்தியன் வகை டாய்லெட் கூட ஆங்கிலேயர் வந்தப்பதான் அந்த பீங்கான் வந்ததென்பதால். அதன் பின் வெஸ்டர்ன் டைப்பையும் அப்படித்தா சொல்வாங்க. அப்பல்லாம் வெஸ்டர்ன் இல்லை ஊரில். அதுவும் திருக்குறுங்குடியில் அப்பா பாட்டி வீட்டில் டாய்லெட்டே கிடையாது. மண்சுவர்...கல்..சில சமயம் கல் பிரண்டுவிடும் கல் இல்லாமலும்...

      அம்மாவின் பாட்டி வீட்டில் சிமெண்டினால் இருக்கும் ஆனால் தண்ணீர் கிடையாது. கிணற்றில் இருந்துஎடுத்துச் செல்ல வேண்டும்...கூரை இருக்காது...பக்கத்துவீட்டில் மாமர்ம், தென்னை மரத்தில் ஆள் இருந்தால் அம்புட்டுத்தான்...அதெல்லாம் ஒரு காலம்! காமன் டாய்லெட்டுக்கு நாம் இப்போது நோ சொல்கிறோம்...அட்லீஸ்ட் கூரை இருக்கே!!!!!

      கீதா

      கீதா

      நீக்கு
    5. டாய்லெட் இருந்தாலும் அது போகும் வழி இருக்காது.  ஒரு ஆள் வந்து நித்தமும் சுத்தம் செய்து செல்லவேண்டும்!

      நீக்கு
  3. மேனரிசம் - வலது காலை எடுத்து வைத்துத்தான் படிகள் ஆரம்பத்திலும் முடிவில் ஏறும்போதும், வீட்டிலோ இல்லை எந்த இடத்திலும் நிழையும்போதோ அடியெடுத்துவைப்பேன், சுற்றும்போது (உடற்பயிற்சிக்காக கிரௌண்ட் உட்பட) பிரதட்சணமாகத்தான் நடப்பேன். இதெல்லாம் சென்டிமென்டில் வருமா மேனரிசத்திலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலது காலை எடுத்து வைத்துத்தான் படிகள் ஆரம்பத்திலும் முடிவில் ஏறும்போதும், வீட்டிலோ இல்லை எந்த இடத்திலும் நிழையும்போதோ அடியெடுத்துவைப்பேன், சுற்றும்போது (உடற்பயிற்சிக்காக கிரௌண்ட் உட்பட) பிரதட்சணமாகத்தான் நடப்பேன்.// எனக்கும் இந்தப் பழக்கம் உண்டு.
      கோவையில் வசிக்கும் எங்கள் உறவினர் வீடு அங்கு ஒரு பெரிய பிள்ளையார் உண்டே, அதற்கு அருகில் இருக்கிறது. எங்கள் உறவினர் தினமும் காலையில் முதல் முறை வெளியே செல்லும் பொழுது அந்த வினாயகரை,காரிலேயே மூன்று முறை வலம் வந்த பிறகுதான் தொடர்ந்து செல்வார்.
      இன்னொரு நண்பர் தினமும் முதல் முறை காரை எடுக்கும் பொழுது ரிவர்ஸ் எடுக்க மாட்டார்.

      நீக்கு
    2. மேலே குறிப்பிட்டவை மேனரிசம் என்பதில் வருமா?

      நீக்கு
    3. ஸ்‌ரீராம் பதில் தான் என்னுடையதும்..

      கீதா

      நீக்கு
  4. அரசாங்கம் என்பது என்ன என்பதை உணராதவர்கள்தான் அதனிடம் இந்த மாதிரி உதவி கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் இந்த மாதிரி உதவிக்கும் பக்கத்து வீட்டு பணக்கார்ரிடம் கையேந்துவதற்கும் வித்தியாசம் இல்லை என்பேன். இங்க ஒருத்தர்ட்ட கையேந்துஙதற்குப் பதில், நிறையபேர்ட்ட கையேந்துகிறோம்.. ஏதோ ஒரு ஜென்மத்தில் திருப்பித்தர வேண்டியிருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. ஶ்ரீராம் - இப்போதெல்லாம் நல்ல படங்களை கேஜிஜி சார் தேர்ந்தெடுக்காத்தன் காரணம் என்னவாயிருக்கைம்? நாம் இருவரும் ஒன்றும் சொல்வதில்லை என்பதாலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல படம் என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது என்று சமாளித்து விடவா?

      நீக்கு
    2. ஸ்ரீராம்! பாவம் நெல்லை அண்ணன்...போனா போகுது உங்க தம்பிக்கு நாளைக்கு ஒரு வயசான தம்னா படத்தையாவது போட்டுடுங்க!!!!!!!

      கீதா

      நீக்கு
    3. அவரின் ஒருவயது போட்டோவா?  கிடைக்குதான்னு பார்க்கிறேன்!

      நீக்கு
    4. //வயசான தம்னா// - அந்தம்மா விளம்பரம் வந்தாலே (தங்கத்தை வித்துடுங்க) நான் சேனலை உடனே மாத்திடுவேன். நேற்று ஏதோ சேனலில் பையா படம் வந்தது. அந்தப் பெண் எங்கே இந்தப் பெண் எங்கே...ஏணி வச்சாலும் எட்டாது. ஹாஹா

      நீக்கு
  6. இன்றைய கேள்விகளுக்கான பதில்கள் சிறப்பாக அமைந்திருந்தன. அதிலும் "முழு நேர சமையல்", அயலான் குழந்தை போன்ற பதில்கள் சிறப்பு

    பதிலளிநீக்கு
  7. கேள்விகள் எல்லாமே சுவாரஸ்யம். பதில்களும் அப்படியே.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    எங்கெங்கும் நலம் பெருக வேண்டிக் கொள்வோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைந்து பிரார்த்திப்போம். வாங்க துரை செல்வராஜு ஸார்... வணக்கம்.

      நீக்கு
  9. உங்கள் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ வினோதமான மேனரிசம் ஏதாவது உண்டா?//////////நிறைய இருக்கிறது. மூட நம்பிக்கையா, இல்லை பயமா இல்லை
    வெற்றி பெற்றதாலா தெரியவில்லை.
    என் பெரிய தம்பி நடக்கும் போது
    எண்ணிக்கை வைத்துக் கொள்வான்.
    பிறகு அந்த பெடோமீட்டர் வந்தது:)

    சின்னத்தம்பி பிள்ளையாரைப் பார்க்காமல்
    ஒரு வேலையும் செய்ய மாட்டான்.
    எனக்கு அரக்கு வண்ணம் மிகப் பிடிக்கும்.
    ஆனால் புதன் அன்று அதை உடுத்தவே மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  10. எடுத்த புத்தகத்தைக் கீழே வைக்க முடியாமல்
    செய்தது காலச்சக்கரம் நரசிம்மா நாவல்.
    ஒரே மூச்சில் படிக்க முடியவில்லை.
    நேரம் கிடைத்த போதெல்லாம் அதையே
    படித்து முடித்தேன்.

    சிறு வயதில் அப்படிப் படித்த புத்தகம்
    Arabiyan nights.

    பதிலளிநீக்கு
  11. & இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் இருக்கின்ற டாய்லெட் என்ன நிலையில் இருக்கும் என்று பார்த்தவர்கள் யாருமே காமன் டாய்லெட் என்று சொன்னாலே காத தூரம் ஓடுவார்கள்/////////ஷடாப்தி ரயிலில் இந்தக் கோலம் பார்த்தால் வியாதியே வந்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் காசி யாத்திரை சென்றபோது ரயிலில் டாய்லெட்கள் சுத்தமாக காணப்பட்டது ஒரு ஆச்சர்யம்!

      நீக்கு
    2. ஹிஹிஹிஹி, ஶ்ரீராம்! :)))))))

      நீக்கு
    3. நிசம்மா கீதா அக்கா...  நம்புங்க...    அப்போவே எழுதி இருந்தேனே...

      நீக்கு
    4. நான் சிரிச்சா அதில் காரணம் இருக்கும். கண்டு பிடிங்க!

      நீக்கு
    5. ம்ம்ம்...    ஒரு கெஸ் இருக்கு!  சொல்ல மாட்டேனே...

      நீக்கு
    6. எனக்கும் ஒரு கெஸ் இருக்கு ஆனா சொல்ல மாட்டேனே ஹெஹெஹெஹ்!!!

      கீதா

      நீக்கு
    7. உங்க கெஸ் தான் சரியாய் இருக்கும் @ஸ்ரீராம், @தி.கீதா! :))))

      நீக்கு
  12. அடி முட்டாள் விளக்கம் நன்று.

    பதிலளிநீக்கு

  13. //ஆண்களுக்கு முழு நேர சமையல், வீடு சார்ந்த வேலைகள் இருந்தால், அவர்களால் சமாளிக்க முடியுமா? //

    சமாளித்து இருக்கின்றேன் அதோட பிறந்த குழந்தையயும் கவனித்து வளர்த்து இருக்கின்றேன் இப்போதும் வேலைக்கு சென்று வந்து எங்கள் வீட்டில் சமைப்பது வீட்டை க்ளின் பண்னுவது வாஷிங்க் மிஷினில் டிஸ்வாசரில் பாத்திரங்கள் கழுவது விட்டிற்கு தேவையான பொருட்களை கடைக்கு சென்று வாங்குவதும் செய்து வருகின்றேன்... இந்த கொரோனா வந்த பின் தான் மனைவி அவள் துணிகளை அவளாக வாசிங்க் மிஷினில் துவைத்து கொள்கிறாள் . சில நேரங்களில் இந்த வேலையை அவ்வப் போது மனைவியும் செய்வதுண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அவ்வளவு பயமில்லை மதுரைத் தமிழன் துரை. ஹாஹா

      Actually I like doing whatever I can for her. எனக்கு 3 நாள் சமைக்கும்போதே எவ்வளவு கடினம் கிச்சன் வேலைகள் என்பது தெரியும். இதுக்கு நடுவுல வீட்டு வேலைகள் (கொரியர் காரன் வந்திருப்பான், போன் பேச்சுகள் என்று எவ்வளவோ வேலைகள்). இப்போதைக்கு பல வருடங்களாக என் துணிகளை நான் manage செய்துகொள்வேன். வீட்டிற்கான பொருட்கள்லாம் என்னுடைய வேலை, கிச்சனில் எல்லா பாட்டில்களையும் stock check பண்ணி, fill up பண்ணுவதும் நானே. அதனால் என்ன வாங்கணும், என்ன ஸ்டாக் இருக்குன்னு தெரியும்.

      சிவாஜி சொல்றதுபோல, இதெல்லாம் என்ன உதவியா...கடமை..ஹாஹா

      நீக்கு
    2. நான் பயந்து எல்லாம் இதைப் பண்ணவில்லை நெல்லைதமிழன்.. பூரிக்கட்டை அடியின் வலியை உணர்ந்து செயல்படுகிறேன்... அவ்வளவுதான்
      (இதை நான் என் மனைவிக்காக மட்டும் செய்யவில்லை சிறுவயதில் இருந்து என் அம்மாவிற்கும் இதை எல்லாம் செய்து தந்து இருக்கின்றேன்) எ

      நெல்லை உங்களின் கடமைக்கு என் பாராட்டுக்கள்.

      @பானுமதிம்மா நன்றி

      நீக்கு
    3. மதுரைத்தமிழன் கலக்குகிறார்.  நெல்லைத்தமிழன் கலக்கத் தொடங்கி இருக்கிறார்!

      நீக்கு
    4. அட! மதுரை நீங்களே சொல்லிட்டீங்களா!!!! கீழ உங்களையும் விசுவையும் சொல்லிட்டு வந்தேன்...

      ஸ்ரீராம் பானுக்கா நெல்லை.....நிஜமாவே மதுரை செமையா செய்வார் வீட்டு வேலை..!!!!!!!

      கீதா

      நீக்கு
    5. பூரிக்கட்டை சொல்ல நினைச்சேன் மதுரை நீங்களே சொல்லிட்டீங்க..

      ஓகே என் டைம் ஓவர்...அப்புறம் எப்ப வருவேன் பார்க்கிறேன்..

      இன்று கேள்வி பதில்கள் இங்கு கருத்துகள் ஸ்வாரஸ்யம்!!!

      கீதா

      நீக்கு
    6. தெரியும் கீதா...   மதுரையில் வாழ்ந்தவங்க எல்லோருமே நல்ல டைப்புதான்!

      நீக்கு
    7. ஸ்ரீராம்.... மதுரைத் தமிழன் துரையின் ஊர் செங்கோட்டை அதாவது நெல்லை. ஹாஹா. எனக்குத் தெரிந்து மதுரைக் காரங்க, ப்ரேமவிலாஸ் முந்திரி அல்வான்னு சொல்லியே அல்வா கொடுத்துடறாங்க. ஹாஹா

      நீக்கு
    8. @பானுமதிம்மா நன்றி. Pls. cut that Amma. chithi OK

      நீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா அக்கா  வாங்க...  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  15. இப்பொழதெல்லாம் எத்தனை பெட்ரூம்களோ,அத்தனை பாத்ரூம்கள் என்பது கொஞ்சம் அதிகம்தான் என்று தோன்றும். ஆனால் அதற்காக காமன் டாய்லெட்...! விபரீத கோட்பாடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் இத்தனை பாத்ரூம்கள் இருப்பது வசதி போல தோன்றினாலும் குடி வந்த பிறகு அதை க்ளீன் செய்யும் வைபவம் இருக்கிறதே...    அப்பப்பா....

      நீக்கு
    2. //விபரீத கோட்பாடு.//

      ஆ...   சுஜாதா கதை!

      நீக்கு
    3. நான் தினம் மூன்று குளியல்/கழிவறைகளைச் சுத்தம் செய்துவிட்டே குளிப்பேன். என்றாவது தவிர்க்க முடியாத காரணங்களால் தடைப்படும். படலாம். அப்போது மறுநாள் என்ன அதிகப்படி வேலையானாலும் சுத்தம் செய்துவிடுவேன். நான் குளிக்கும் குளியலறை/கழிவறையைத் தினமும் இருவேளை (சாயந்திரம் குளிக்கும்போது) சுத்தம் செய்துவிடுவேன்.

      நீக்கு
    4. தினமுமா?  இங்கு வாரம் இருமுறை...

      நீக்கு
    5. ஆமாம், தினமும் தான். அமாவாசை அன்று கூடச்சீக்கிரமாவே குளிக்கப் போவதால் அதற்கேற்ப நேரத்தை வைத்துக் கொள்வேன். எப்போவானும் தட்டும்.

      நீக்கு
    6. பாராட்ட வேண்டும்.  இங்கு பாஸ்தான் எல்லாம்..  ஆனால் வாரம் இருமுறை.  சென்ற வாரம் 'அர்பன் ஆப்'பில் போட்டு ஆள் வரவழைத்து க்ளீன் செய்தோம்.

      நீக்கு
  16. எடுத்த புத்தகத்தை முடித்து விட்டுதான் கீழே வைப்பது என்றிருந்ததெல்லாம் ஒரு காலம். எல்லாம் பொய்யாய்,பழங்கதையாய் போய் விட்டன :((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அப்போது வேலை செய்ய அப்பாஅம்மா இருந்தார்கள்.  இப்போது நாம் வேலையும் செய்துகொண்டு புத்தகமும் படிக்கவேண்டும்!  கஷ்டம்!

      நீக்கு
  17. அடிக்கடி மூக்கை தடவிக் கொள்ளும் பெண்கள் சிந்தனாவாதிகளாக இருப்பார்களாம். அது ஏன் பெண்கள்? ஆண்களை ஏன் குறிப்பிடவில்லை என்று தெரியவில்லை. நம் உலக நாயகருக்கு இந்த பழக்கம் உண்டு. பேட்டிகளின் பொழுது எங்கேயாவது மூக்கை பிய்த்து எடுத்துவிடப் போகிறார் என்று பயமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆண்களை ஏன் குறிப்பிடவில்லை// - ஆண்கள் எப்போதுமே சிந்தனாவாதிகள்தாம். எப்படி டக்குனு சமாளிக்கறது என்று எப்போதுமே ரெடியா இருப்பாங்க.

      நீக்கு
    2. தலையைத் தடவும் பெண்கள்?  (நான் கணவன் தலையைத் தடவும் பெண்களை சொல்லவில்லை!)

      நீக்கு
  18. இந்த மேனரிசங்களால் அதிகம் கேலிக்கு உள்ளாபவர்கள் ஆசிரியர்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பேசும் பொழுது லேசாக எம்பியபடி பேசும் ஒரு ஆசிரியருக்கு ஜம்பிங் மாஸ்டர் என்று பட்டப் பெயர். அடிக்கடி மூக்கை உறிஞ்சிக் கொள்ளும் பேராசிரியையின் பெயருக்கு முன்னால் மூக்குறிஞ்சி.... என்போம்.

    பதிலளிநீக்கு
  19. மேனரிசத்தில் சில ஆபத்தானவை. சிலர் கண்ணைச் சுருக்கிச் சுருக்கிப் பேசுவார்கள். அப்புறம் அதுவே வியாதியாகிடும். கண்ணைச் சுருக்காமல் அவங்களால பேசவே முடியாது. அது சரி... பாடகர்களில் சிலர் (கர்நாடக இசைக்கச்சேரிகளில்), கான்ஸ்டிபேஷன் இருப்பதுபோல முகத்தை வைத்துக்கொண்டு அல்லது கிணற்றிலிருந்து தோண்டியை நீரோடு இழுப்பதுபோல கையை வைத்துக்கொள்வது அல்லது உரலில் இட்லி மாவு அரைப்பதுபோல நடிப்பார்களே..இவையெல்லாம் மேனரிசமா இல்லை வியாதியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அப்பாவிடமிருந்து எனக்கும் என் அண்ணனுக்கும் வந்துள்ள பழக்கம், போன் பேசும்போதும், சில சமயம் சாப்பிடும்போதும் கண்களை மூடிக்கொண்டு பேசுவது / சாப்பிடுவது...

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அருமை. நிறைய யோசிக்க வைக்கின்றன. எப்போதும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் சகோதரர் கெளதமன் அவர்களை கொஞ்ச நாட்களாய் காணவில்லையே...? இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா...    இந்தப் பதிவை வெளியிட்டிருப்பபவரே கௌ அங்கிள்தானே!

      நீக்கு
  21. கௌதமன் சார் எங்கேனு நேற்றே/முந்தாநாளே கேட்டிருந்தேன். யாருமே கண்டுக்கலை. இன்னிக்குப் பதிவு பார்த்துட்டு "அப்பாடா!"னு இருந்தது.

    பதிலளிநீக்கு
  22. காலம்பர வந்தேன். தாமதமாக. படிக்கவோ, கருத்துச் சொல்லவோ முடியலை. அதுக்குள்ளே பெண் வேறே கூப்பிட்டாள். சரினு போயிட்டேன்.

    பதிலளிநீக்கு
  23. வித்தியாசமான கேள்விகள், பதில்கள். நான் ஒரே மூச்சாகப் படிச்சது சமீபத்தில் இல்லைனாலும் 2 வருஷம் முன்னர் பஞ்சநாராயணக் கோட்டம்! சென்னை சென்றபோது தம்பி லென்டிங் லைப்ரரியில் வாங்கித் தந்தார். அதை ஶ்ரீரங்கம் எடுத்து வர முடியாது என்பதால் ஒரே மூச்சாகப் படிச்சுட்டுக் கொடுத்தேன். அதன் பின்னர் சமீப காலங்களிலும் ஒரே மூச்சாய் இல்லாட்டியும் மத்தியானங்களில் விடாமல் படிச்சு "அத்திமலைத் தேவன்" ஐந்து பாகங்களையும் ஒரு வாரத்திற்குள்ளாகப் படிச்சு முடிச்சேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //"அத்திமலைத் தேவன்" ஐந்து பாகங்களையும் ஒரு வாரத்திற்குள்ளாகப் படிச்சு முடிச்சேன்// - எனக்கும் சமையல் செய்வதற்கும், வீட்டைச் சுத்தம் செய்வதற்கும் better half இருந்தால், இரண்டு "அத்திமலைத் தேவன்' புத்தகங்களைப் படித்துடலாம்னு யாருடைய மனத்துல நினைப்பது எனக்குக் கேட்குது. நாராயண

      நீக்கு
    2. ஹூம்! பொறாமைப் படாதீங்க நெல்லை! வேலைக்கு ஆள் வந்து செய்வதை விட அவங்க லீவ் எடுத்துக்கிறச்சே தான் எனக்குச் சீக்கிரம் வேலை ஆகும்! கையோடு எல்லாவற்றையும் செய்துடுவேன். எந்த வேலையும் நிற்காது! ஆகவே நான் அத்திமலைத்தேவன் படிச்சதுக்கும் வேலைக்கு ஆள் இருப்பதற்கும் எந்தவிதமன சம்பந்தம் இல்லைனு சொல்லிக்கிறேன்.

      நீக்கு
  24. சமையலறையில் பொருந்திச் செய்யும் ஆண்கள் பலர் உண்டு. அதிலும் கேரளா/பாலக்காட்டுப் பக்கத்து ஆண்கள் பொதுவாகவே மனைவிக்குச் சமையலில் கை கொடுப்பார்கள். தனியாக விட மாட்டார்கள். நம்ம ரங்க்ஸும் கல்யாணம் ஆவதற்கு முன்னால் எட்டு வருஷங்கள் சமைச்சுத் தான் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். ஒரு மாறுதலுக்கு ஓட்டலுக்குப் போவார்களாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போல்லாம் நிறைய வீடுகளில் ரூ மாறுதலுக்கு வீட்டில் சமைப்பார்களாம்...!!!

      நீக்கு
    2. ஹாஹாஹா, உண்மை, உண்மை! எங்க வீட்டில் முன்னெல்லாம் ஓட்டல் என்பதே இல்லாமல் எல்லாம் வீட்டிலே தான் செய்து கொண்டிருந்தேன். கடைகளில் பக்ஷணம் வாங்கத் தொடங்கியதே 2004 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான். 2005 ஆம் ஆண்டில் எனக்கு வந்த உடல் நலக்கேட்டினால் அதன் பின்னர் மெல்ல மெல்ல எல்லாம் குறைந்தது. இப்போவும் உடம்பு நல்லா இருந்தால் நானே பக்ஷணங்கள் பண்ணிடுவேன்.

      நீக்கு
    3. நான் உட்பட ஏனோ எப்போ வீட்டில் சமைத்து சாப்பிடுவது போர் அடித்து விடுகிறது.

      நீக்கு
  25. என் மாமியார் 92 வயது வரை கீழே உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டார். கொழுக்கட்டைச் சொப்புப் பண்ணுவார். காலை வாசல் தெளித்துக் கோலம் போடுவதை யாரிடமும் விட மாட்டார். காஃபிக்குச் சர்க்கரை கரண்டியால் தான்! அள்ளிப் போட்டுக் கொள்வார். ஏதோ வாயுக் கோளாறு/வீட்டில் மருந்து சாப்பிட்டால் சரியாகி இருக்கும். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மருத்துவமனை! அம்பானியோடது! அதில் சேர்த்தாங்க! :( சரியாய் வரலை! வீட்டுக்குப் போகணும்னு சொல்லிக் கூட அவங்களும் அனுப்பலை. இவங்களும் பயத்தில் அழைத்துப் போகலை! வீட்டுக்கு வந்திருந்தால் இன்னும் ஓரிருவருஷம் தாக்குப் பிடித்திருப்பாரோ என்னமோ! :((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு என் பாட்டி ஞாபகம் வருகிறது.  அஜ்ஜி என்று அழைக்கப்பட்ட எங்கள் ராஜிப்பாட்டி!

      நீக்கு
  26. இந்திய/உலக ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு வந்திருக்கிறேனாக்கும்!

    ஓட்டு போடறது மட்டும் தான் ஜனநாயகக் கடமையா? தடுப்பூசி போட்டுக் கொள்வதும் இப்பொது அந்தப் பட்டியல்தான்!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா...   பத்திரம் கீதா...   நாளை ஒருநாள் படுத்தக் கூடும்.  கவனமாக இருங்கள்.

      நீக்கு
    2. கீதாக்கா (ஹாஹா).. இப்போ 60+க்கு மட்டும்தானே தடுப்பூசி. மே 1ம் தேதிக்கு அப்புறம்தானே 18+க்கு?

      நீக்கு
    3. ஹா ஹா ஹா நெல்லை இதெல்லாம் சீக்ரெட் ரகசியம்!!!! நம்ம ஸ்ரீராம் போல வெளியில் சொல்ல மாட்டேனாக்கும்!!!!!!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  27. 1. காமன் டாய்லெட் நோ! வீட்டிற்கு அட்லீஸ்ட் ஒன்றேனும் இருக்க வேண்டும் ஒரு ரூம் உள்ள வீட்டில் அது ரூமில் இல்லாமல் தனியாக வெளியே குளியல் அறை, டாய்லெட் தனி தனியாக இருப்பது நல்லது வசதி.

    இரு ரூம் இருந்தால் ஒன்று ரூமிலும் மற்றொன்று வெளியில் அதாவது ரூமில் இல்லாமல் இருப்பது வசதி.

    இங்கு பெரும்பாலும் வாடகை வீட்டில் இரு ரூம் இருந்தாலும் கூட ஒரு குளியலறை, ஒரு கழிவறை என்றுதான் இருக்கிறது எங்கள் ஏரியாவில். நல்லகாலம் அது ரூமோடு இல்லாமல் ரூமிற்கு வெளியேதான். இரண்டும் தனி தனியாக

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாயிண்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  மற்றவை?  அவையும்தான்!

      நீக்கு
  28. 2. $ பதில் எஸ் எஸ்..அதே...உடலுழைப்பு அதிகமே அப்போது. இப்போது வாழ்க்கை முறை மாறியதால் சாப்பிடும் உணவும் அப்படியானது. உணவின் தரமும் மாறிவிட்டதே. எவ்வளவு இரசாயனம் கலக்குது!

    கௌ அண்ணா என்ன உங்களைக் கருத்தின் பதிலில் காணவில்லை? என்னாச்சு?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதேதான் நானும் கேட்டிருந்தேன்.ஸ்ரீராம்
      சகோதரர் அதற்கு சமாளித்து பதில் தந்து விட்டார்.:)

      நீக்கு
    2. புதனில் ஸ்ரீராம் பதில் சொல்வது இல்லை என்று வழக்கொன்று பதிவாகி இருந்தது!

      நீக்கு
  29. 3. அக்காலம் மலையேறிப் போச்சு..அப்போதே வீட்டில் கதைப்புத்தகம் வாசிக்க அனுமதி கிடையாது. கள்ளத்தனமாய் வாசித்த ஓரிரண்டு கஷ்டப்பட்டு ஒரே மூச்சில்..

    இப்போது சில புத்தகங்கள் பிடிஎஃப் வந்தன. ஆனால் வாசிக்க முடியாமல் இன்னும் 15 பக்கம் மேல் நகராமல்... தடவிக் கொண்டிருக்கிறேன்..!!!!!!!! கணினி கிடைப்பதே கஷ்டமா இருக்கு கிடைக்கும் போது ப்ளாக் வந்தா வாசிப்பு போய்விடுகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகமொத்தம், அந்தக்காலம் போல இல்லை இந்தக் காலம்!

      நீக்கு
  30. 4. இதுக்கு மதுரைத் தமிழன், விசு இருவரும் ரொம்பவே! வீட்டில் எல்லா வேலையும் செய்பவர்கள். மதுரைத்தமிழன் சைவ உணவும் நன்றாகச் சமைப்பார். வீட்டைப் பளிங்கு போல வைத்திருப்பார் என்று சில பட்சிகள் சொல்லியது!

    இங்கு ஸ்ரீராம் அண்ட் நெல்லை எனக்குத் தெரிந்து வீட்டு வேலைகள் செய்பவர்கள். கௌ அண்ணா சமையல் செய்வார் என்று தெரியும்.!!!!!.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடி..    நம்ம போரையும் லிஸ்ட்ல சேர்க்க ஆள் வந்தாச்சு!

      நீக்கு
  31. பானுக்கா முட்டாள் என்பதில் சதவிகித மாறுபாடு என்று சொல்லலாம்...அடி முட்டாள்..கடைசில இருப்பதாக இருக்கும்! காஃபியில் டீத்தூளில் தரம் இல்லையா அது போல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபடியும் சரியா சொல்லுங்!

      நீக்கு
    2. பானு அக்காவுக்கு பக்கத்தில் ஒரு கமா போட்டிருக்கலாம். சேர்ந்து படித்ததில் ஒரு நிமிடம் திக்கென்று ஆகி விட்டது.(வேணும், வேணும், எனக்கு வேணும்)

      நீக்கு
    3. ஆமாம் அக்கா..ஹையோ இப்பத்தான் கவனித்தேன்....டக்கென்று விட்டுப் போச்சு....எல்லாம் கணினி கிடைக்கும் அவசரத்தில் டக்கு பக்குன்னு அடிச்சு தள்ளறதுனால....ஹா ஹா

      இனி கவனமாக இருக்கிறேன் பானுக்கா!!!! ஸாரி பானுக்கா!!!

      கீதா

      நீக்கு
    4. ஹிஹிஹி, நான் படிச்சதுமே வந்து சொல்ல நினைச்சால்! பானுமதி முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடியே வந்து சொல்லிட்டாங்க! :)))))

      நீக்கு
  32. & வியாழனில் 'வெட்டி' அரட்டை அடிப்பவர் பதில் சொல்வாரா? //

    ஆஆஆஆ இது யாரை யாருக்கு!!!!???? ஸ்ரீராம் கமான்!! என்ன இது வாளாது இருக்கிறீர்கள்!! விடலாமா?!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்டி வெட்டி எத்தனை தரம் கேட்டாலும் பதில் கிடையாது!

      நீக்கு
  33. வணக்கம் சகோதரரே

    நம் குழந்தை. அயலார் குழந்தை இதில் அன்பு வைப்பதில் வேறுபாடு வருமா? என்ற கேள்விக்கு
    /நிச்சயம் வரும். காரணம் முழுமையான மனிதப் பண்பு நம்மிடம் இல்லாததுதான்./என்ற பதில் உண்மை. இன்றைய அனைத்து பதில்களுமே கேள்விகளுக்கு தகுந்த மாதிரி இருக்கின்றன.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  34. இன்னிக்கு பதிவு கேள்விபதில்கள் எல்லாம் சூப்பரா இருக்கு ஆனா பின்னூட்ட கும்மியில் கலந்துக்க முடியா நிலை .

    பதிலளிநீக்கு
  35. இந்த அடி முட்டாள்  பற்றி ஆசிரியர்பயிற்சியின்போது ஒரு பிரமிட் வரைந்து சொல்லிக்கொடுத்தாங்க moron தான் கீழ்ப்பக்கம் இருந்தது .

    பதிலளிநீக்கு
  36. சுவாரஸ்யமான பதிவு. கேள்விகளும் பதில்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  37. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.
    சுவாரஸ்யமான பின்னூட்டங்கள்.

    பதிலளிநீக்கு
  38. //ஆண்களுக்கு முழு நேர சமையல், வீடு சார்ந்த வேலைகள் இருந்தால், அவர்களால் சமாளிக்க முடியுமா?//

    நன்றாக செய்வார்கள். ஆனால் நாம் தான்(பெண்கள்) அவர்களை செய்யவிடாமல் நாமே செய்து பழக்கி இருக்கிறோம்.
    அவசியம் ஏற்படும் போது ஆண்கள் தங்கள் திறமையை காட்டுவார்கள்.

    பதிலளிநீக்கு
  39. பதில்கள்
    1. ரஜினியின் மேனரிசம் அடிக்கடி தலை கோதல். இன்ரு வரை பலரின் மேனரிசமாக அது இருக்கிறது. சிலர் அடிக்கடி தாடையை தடவிக் கொள்வர்.

      நீக்கு
  40. சுவாரசியமான கேள்வி பதில்கள்.

    எனக்குத் தெரிந்தவரை முட்டாள் என்று யாரையும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை ஒரு வேளை சாமர்த்தியம் இல்லாதவர்களை முட்டாள் என்று சொல்கிறோமோ?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  41. 1. நம் குழந்தைகள், நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவரும்போது இருவருக்கும் சாப்பாடு கொடுக்கையில் வித்தியாசம் பாராட்டும் அம்மாக்கள் செய்வது சரியா? உதாரணமாக தோசை வார்த்தால் சூடான தோசைகளை சொந்தப் பிள்ளைக்கும் ஆறின தோசைகளைக் கூடச் சாப்பிடும் நண்பருக்கும்! இம்மாதிரிக் கொடுப்பது தப்பில்லையோ?
    2. அந்த மாதிரி அனுபவம் உங்களுக்கு நேரிட்டது உண்டா? எனக்கு நிறையவே ஏற்பட்டிருக்கு. அந்த அனுபவங்களின் நினைவுகளால் தான் இந்தக் கேள்வியே!

    மறுபடி வரேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!