கைமா இட்லி
ஹோட்டல் சரவண பவனுக்கு எங்கள் நண்பர் ஒருவருடன் போனோம்.
அவர் இந்த ஹோட்டலில் கைமா இட்லி ரொம்ப நன்றாக இருக்கும் அதை ஆர்டர் பண்ணட்டுமாஎன்று கேட்டார் நான் சாப்பிட்டதில்லை என்று கூறி மறுத்தேன்.
அவர் அதை ஆர்டர் பண்ணி விட்டார்.தன்னுடைய தட்டிலிருந்து எங்களுக்கும் கொஞ்சம் போட்டார் .டேஸ்ட் பண்ணி பாருங்க என்றார்.
ஆஹா..... நன்றாக இருந்தது உடனே நாங்களும் ஆர்டர் பண்ணோம் என்பது சொல்லவும் வேண்டுமா
நான் அந்து சர்வரிடம் அதை பண்ணுவது எப்படி என்று ரெசிபி கேட்டு தெரிந்து கொண்டேன். அதை என் மகன் மருமகள் பேத்திக்கு செய்துகொடுத்து பாராட்டையும் பெற்றேன். நீங்களும் செய்து அனைவரின் பாராட்டையும் பெறலாமே!!!!!
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம்........2
தக்காளி....................... .......2
குடைமிளகாய்................... 1
இஞ்சி.......,................. ............1 அங்குலம்
பூண்டு........................ ............5 பல்
மிளகாய்த்தூள்....,............ ...1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள்..............1 டீஸ்பூன்
கடுகு......................... .............1 டீஸ்பூன்
எண்ணெய்....................... .... இரண்டு கரண்டி
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி தழை.... ஒரு பிடி
Step 1
வெங்காயம் தக்காளி குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
இஞ்சி& பூண்டு இரண்டையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்
3. ஐந்து இட்லியை 1"சதுர துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும்
செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்க வேண்டும் அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்க வேண்டும் பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள கறி காய்களை போட்டு காஷ்மீர் சில்லி பவுடர் அல்லது மிளகாய் பொடி கரம் மசாலாத்தூள் உப்பு ஆகியவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
நன்றாக வெந்ததும் கீழே இறக்கி வைத்து விட வேண்டும். மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் இட்லி துண்டுகளை போட்டு பொரித்தெடுக்க வேண்டும்
அதை காய்கறி கலவையில் கொட்டி நன்றாக கலக்க வேண்டும்
அத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை போட்டு கலக்க வேண்டும். சூப்பர் கைமா இட்லி தயார்!!!!!
இந்த கொரொனாடகாலத்தில் எதையும் வீணாக்காமல் புதிய டிஷ் செய்தால்யார் தான் உங்களை பாராட்டாமல் இருப்பார்கள்? நீங்களும் ஹோட்டல் கைமா இட்லி செய்து அசத்துங்களேன்.
காலை வணக்கம் எல்லோருக்கும்.
பதிலளிநீக்குஓ இதற்கு கைமா இட்லி என்று சொல்கிறார்களா!!
ரெசிப்பி சூப்பர்.
நம் வீட்டில் இது நன்றாகச் செல்லுபடியாகும்....மசாலா இட்லி என்று..இட்லி மீந்தால் அது பல அவதாரங்கள் எடுக்கும் வீட்டில்!!!!!!!!
கீதா
வணக்கம் கீதா.. வாங்க...
நீக்கு//இதற்கு கைமா இட்லி என்று சொல்கிறார்களா!!//
ஆமாம்மா...!
கீர பின்னூட்டத்தை வல்லிம்மா என்று நினைத்துவிட்டாரா இல்லை கீர ரொம்பப் பெரியவங்கன்னு தோணிடுச்சா இந்த ஶ்ரீராமுக்கு? நாராயண
நீக்குஹாஹ ஹா நெல்லை அதானே..கரீக்டா பிடிச்சீங்க!
நீக்குபாத்தீங்களா சகோதரி (சேஃப் வேர்ட் நோட் இட் நெல்லை!!!) க்கு எப்படி சப்போர்ட்!! வரிந்து கொண்டு வந்துவிட்டார் நெல்லை! பாருங்க ஸ்ரீராம்!
நானும் குழம்பினேன் தான். சரி பாவம் ஸ்ரீராம் ஏதோ டென்ஷனில் வேலைக்கு கிளம்பும் அவசரம்!!!
இல்லை ஆமாமாம் என்று அடித்தது டைப்போ ஆகிருக்கும்!!
கீதா
கைமாவுக்கு ரைமிங்கா ஆமாம்மா..!
நீக்குகீதாக்கா எங்கே காணும்?
பதிலளிநீக்குவல்லிம்மா இப்ப வருவாங்க...வல்லிம்மா மாலை வணக்கம்!
கீதா
தோ... ரெண்டு பேர்களும் இதோ வந்துடுவாங்க... கொஞ்சம் அந்த சேர்ல உட்காருங்க... காபி சாப்பிடுறீங்களா?
நீக்குஅந்த சேர்ல மாஸ்க்கை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டு உட்காருங்க. நீங்க பெங்களூர் இல்லையா?
நீக்குஹா... ஹா... ஹா... இழுத்தெல்லாம் விட வேண்டாம். ஒழுங்கா அப்படியே இருக்கட்டும்!
நீக்குவந்துட்டேன் தி/கீதா. ஶ்ரீராம் கொடுக்கும் காஃபியைக் குடிச்சீங்களா? நாங்கல்லாம் தினம் வரோம். எங்களுக்கெல்லாம் காஃபி வேணுமானு கூடக்கேட்கலை. நீங்க எப்போவோ வரதாலே காஃபி எல்லாம் கொடுக்கிறார் பாருங்க! நாராயணா! நாராயணா! நாராயணா!
நீக்குஹா ஹா ஹா ஹா...காஃபி ஆயித்து கீதாக்கா!!
நீக்குஆமாம் நான் ஸ்பெஷல் ஆக்கும்!!!!!!!
கீதா
அதானே! நானும் தினம் தினம் வந்து தன்னந்தனியாப் பேசிட்டு இருப்பேன். கூடப் பேசப் பேய்கள் கூட இப்போல்லாம் வரதில்லை. உங்களுக்கு ஶ்ரீராம் உடனடியாக வரதோடு இல்லாமல் காஃபி உபசாரம் வேறே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))
நீக்குகீதாக்கா.. கீதா ரெங்கன் உங்களையும், வல்லிம்மாவையும் தேடியதால்தான் உட்காரச் சொல்லி காஃபி கொடுத்தேனாக்கும்..!
நீக்குஹூம், கூடப் பேசக்கூட யாரும் இருக்க மாட்டாங்க! நான் மட்டும் தனியாப் பயத்தோடு இருப்பேன். எனக்கு ஒண்ணுமே இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்கு:>))
நீக்கு: ஏங்க.. நேத்து மீந்த இட்லியை வச்சு இதைப் பண்ணியிருக்கேன், என்ன பேரு வைக்கலாம்?
பதிலளிநீக்கு: விட்டேனா பார்னு வையேன்?
பழைய ஆனந்தவிகடன் ஜோக்.
ஹா.. ஹா...ஹா...! ஜோக்னு சொன்னதுமே சிரிச்சுட்டன்!
நீக்குhttp://maragadham.blogspot.com/2010/07/blog-post_06.html
நீக்குஸ்ரீராம்: புவனேஸ்வரி ராமனாதன் டச் வச்சிருக்கிங்களா?
அட, சட்டென நினைவுக்கு வந்து லிங்க் வேறு எடுத்து விட்டீகள். நான் அவரைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்
நீக்குமீள் இட்லி என்று பெயர் சூட்டலாமே...?
நீக்குவிட்டேனா பார்.. விடவே மாட்டோமே..ஹாஹா!
நீக்குகைமா இட்லி ரெசிப்பி நன்று.
பதிலளிநீக்குஅடுத்தமுறை, பூண்டு இல்லாமல் செய்து பார்க்கிறேன். எண்ணெயில் இட்லியைப் பொரிக்கணுமா? யோசிக்கிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட இது மாதிரி செய்துதான் மகன்களுக்கு இட்லி கொடுத்தேன்!
நீக்கு//இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட இது மாதிரி செய்துதான் மகன்களுக்கு இட்லி கொடுத்தேன்!// அன்று என்னிடம் பேசிய பொழுது ஸ்ட்ஃப்ட் மங்களூர் போண்டா செய்து மகங்களுக்கு கொடுத்ததாகச் சொன்னீர்கள். லக்கி பாய்ஸ்! அது சரி எல்லாம் மகங்களுக்கு மட்டும்தானா? பாஸுக்கு?
நீக்குஎண்ணை இல்லாமலும் செய்யலாம் நெல்லை...அதுவும் நல்லாருக்கும். இல்லைனா ஜஸ்ட் எண்ணை கொஞ்சமாக தோசைக்கல்லில் போட்டு டோஸ்ட் மாதிரி செய்தும் செய்யலாம்...
நீக்குபொடி இட்லி, வெஜிடபிள் இட்லி, வெஜிட்டபிள் ஸ்டஃப்ட் இட்லி இந்த ஸ்டஃப்ட் இட்லியில் நாகர்கோவிலில் என் தோழியின் வீட்டில் ஸ்வீட் ஸ்டஃப்ட் பெரும்பாலும் பச்சைப்பயறு ஸ்டஃப் அல்லது முக்கனி வெல்லம் போட்டு செய்தது ஜாம் போல ஸ்டஃப் செய்து கொண்டு வந்ததுண்டு பள்ளியில் படித்த் போது. நானும் வீட்டில் செய்ததுண்டு. எல்லாம் மகனை சிறு வயதில் சரிக்கட்ட .
அப்புறம் அவனது உணவு விஷயத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை...என்ன செய்தாலும் சாப்பிடுவான் வெரைட்டி விரும்புவான். அப்படித்தான் நான் நிறைய கற்றுக் கொண்டதும் நானும் சில பல யோசித்து வித்தியாசமாக முயன்றதும்..ஹிஹிஹி
கீதா
@கீதா ரங்கன் - இட்லி மெத் மெத்துனு அருமையாச் செஞ்சா எப்படி மிச்சம் மீதி இருக்கும்? ஸ்வீட் ஸ்டஃப்ட் பண்ணியாவது சாப்பிடும்படி அப்படி மிஞ்சுதுன்னா, இட்லி ஒருவேளை கட்டிடம் கட்டறதுக்காக தயார் செய்திருப்பீர்களோ? ஹாஹா.
நீக்குமூன்று நாட்கள் முன்னால் இட்லி ரொம்ப ரொம்ப சாஃப்டா வந்திருந்தது. என் மனைவியின் கசின் கேட்டுண்டான்னு, நான் (பிராணாயாமம்லாம் ஆரம்பிச்சிருக்கறதுனால) இட்லி மிளகாய்ப்பொடியை முற்றிலும் விட்டுட்டேன்.சட்னி, கொஜ்ஜுலாம் சாப்பிட்டாலும் மிளகாய்பொடிபோல வராதே.. என்ன பண்ணறது?
புல்லுக்குப் பொசியாமலிருக்குமா பானு அக்கா?
நீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதா, முரளிமா இன்னும் வரப்போகிற எல்லோருக்கும்
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம்.
அனைவரையும் இறைவன் பொன் போன்று காக்க வேண்டும்.
வாங்க வல்லிம்மா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஇரண்டு வாரங்களுக்குப் பிறகு மகள் வெளி உலகைக்
பதிலளிநீக்குகாண வண்டியில் ஒரு லாங்க் ட்ரைவ் அழைத்துப்
போனாள். நல்ல அஸ்தமன சூரியன் காட்சி கொடுக்க
அமைதியான சத்தம் இல்லாத உலகைக்
கண்டு வந்தோம். இங்கே வர நாழியாகி விட்டது.
பார்க்கவே நன்றாக இருக்கிறது வறுத்த இட்லி.
கைமா என்றால் அசைவம் என்று
நினைத்துக் கொண்டிருந்தேன்:)
இதற்காகவே தனியாக இட்லி செய்து
வறுக்க வேண்டும். எதுவும் மிஞ்சிப்
போக இங்கே சான்ஸே இல்லை!!!
மிக மிக நன்றி திருமதி. ஷ்யாமளா வெங்கட் ராமன்.
நன்றி மா ஸ்ரீராம்.
நன்றி
நீக்குLeft out Appadurai's name. Good Evening ma.
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொற்று இல்லாத ஆக்சிஜன் நிரம்பி வழியும் நல்லுலகை அனைவரும் கண்டு ஆனந்திக்கவும் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குஇட்லி உப்புமா தான் என்னவெல்லாம் பெயரில் அவதாரம் எடுக்கிறது. இட்லியைப் பொரித்தால் எண்ணெய் குடிச்சுடும் என்பதால் நான் கொஞ்சமாய் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்வேன். அம்புடுதேன் வித்தியாசம். பூண்டெல்லாம் போட்டதில்லை. இதை ஓட்டலில் அதுவும் சரவண பவனில் போய்ச் சாப்பிடணுமா? வீட்டில் பண்ணினால் இன்னும் அருமையாக இருக்குமே!
பதிலளிநீக்குநல்லாத்தான் இருக்கும். அரைக்கணும், இட்லி வார்த்துட்டு பாத்திரம் துணி அலம்பணும். கைமா இட்லி ஓகே, அப்படியே இரண்டு இட்லிக்கு மட்டும் கொத்சு பண்ணிடு என்று சொல்வதையும் கேட்கணும், மிஞ்சினால், மிஞ்சின கைமா இட்லில என்ன திப்பிசம் பண்ணி தள்ளிவிடலாம்னு யோசிக்கடும். இதெல்லாம் தேவையா?
நீக்குஇன்னொரு முறையாக இந்தக் காய்களை எல்லாம் உப்பு, காரம், மசாலாத்தூள்(தேவை எனில்) சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு இட்லி மாவை ஊற்றும்போது முதலில் அரைக்கரண்டி மாவு, பின்னர் இந்தக் காய்களில் செய்த கறி, மேலே அரைக்கரண்டி மாவு விட்டு வேக வைத்து எடுத்து நான்கு துண்டுகளாக ஒரு இட்லியை நறுக்கிக் கொண்டு நெய்/எண்ணெயில் வறுத்து எடுத்தால் இட்லி சான்ட்விச்! குழந்தைகளைக் கவர இதெல்லாம் சிறந்த வழி!
பதிலளிநீக்குகீதா நீங்கள் சொல்வது போல் ஒரு முறை செய்து, அது போணியாகவில்லை. மசாலா தோசை ஓ.கே. மசாலா இட்லி..? நோ.
நீக்குயெஸ்ஸு கீதாக்கா...என் மகனுக்கு இப்படி எல்லாம் வித்தைகள் சில செய்து ஹிஹிஹி...ரொம்ப சின்னவனாக இருந்தப்ப...ஆனால் பள்ளி செல்லத் தொடங்கிய போது என்ன கொடுத்தாலும் சாப்பிடுவான். வெரைட்டி பிடிக்கும் அல்லாமல் சூசி கிடையாது. என்ன செய்தாலும் சாப்பிடுவான்..பாகற்காய் உட்பட.
நீக்குகீதா
ஏதோ பக்கோடா போல் ஆகி விட்டதே...
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குஎண்ணெயில் வறுக்காமல் கொஞம் எண்ணெயிலோ அல்லது நெய்யிலோ பொன் முறுவலாக வறுத்து செய்யலாம். சுவையாக இருக்கும். எங்கள் உணவகத்தில் கைமா இட்லி செய்வதற்கு கொஞ்சம் எண்ணெயும் நெய்யுமாக ஊற்றி இட்லி, மற்ற பொருள்கள் எல்லாவற்றையும் போட்டு அதன் மேல் கொஞ்சமாக குருமா தெளித்து கொத்திக்கொடுப்பர்கள். நானும் வீட்டில் செய்யும்போது எண்ணெயில் பொரிப்பதில்லை. தக்காளி கூடுதலாக சேர்ப்பேன். சுவை கூடுதலாக இருக்கும்.
பதிலளிநீக்குஅவரவர் டெஸ்டுக்கு தகுந்த மாதிரி செய்ய வேண்டியது தான்
நீக்குஅடுத்து இட்லி பிரியாணி என்ற ரெசிபி எதிர்பார்க்கிறேன்.hint : வெஜ் பிரியாணியில் நெய்யில் பொறித்த இட்லி துண்டங்களை போட்டால் இட்லி பிரியாணி?
பதிலளிநீக்குJayakumar
😂
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஎங்கெங்கும் நலம் வாழ்க..
சாத்வீக இட்லிக்கு இப்படி ராட்ஷச பெயர் வைக்கலாமா?..
பதிலளிநீக்குகைமா என்றால் என்ன என்று தெரியுமா?..
இட்லி சாப்பிடும் போதெல்லாம் இனிமேல் இது நினைவில் வந்து நிற்குமே...
மிச்சம் மீதியை மீண்டும் மீண்டும் சமைத்து தின்று தீர்க்கும் கொள்கையும் கோட்பாடும் வலுப்பெறுகின்றன...
பதிலளிநீக்குவாழ்க வையகம்...
பயற்றம் பருப்பு இட்லி முதல் பருத்திக் கொட்டை இட்லி வரைக்கும் செய்து விட்டார்கள்...
பதிலளிநீக்குஇனிமேல் இது போலவும் வரலாம்...
காணொளிக் களத்தினில் இட்லி மாவு இல்லாமல் இட்லி செய்வது செய்வது எப்படி என்று கும்மியடிக்கின்றார்கள்...
வித்தியாசமான இட்லி உப்புமா...!
பதிலளிநீக்குஅதென்னவோ எங்கள் வீட்டில் இட்டிலியை விட தோசைதான் எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கு மிளகாய்ப்பொடி+நல்லெண்ணெய்யில் ஊறிய இட்லி அவ்வளவு இஷ்டம். இட்லிக்கு இப்படி மாடர்ன் ட்ரெஸ் மாட்டி விடுவது.. நோ! அதுவும் ஹெல்தி உணவான இட்லியை எண்ணெயில் பொரிப்பதா?
பதிலளிநீக்குActuallஆ, மெத் என்று ஊத்தாப்பம் போல வார்த்த தோசையில் இட்லி மி.பொடி தடவி, பிரயாணத்துக்கு எடுத்துக்கொண்டு செல்ல எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் தண்ணீர் கையில் ரெடியா இருக்கணும். நிறைய மிளகாய்பொடி தடவிய இட்லி எனக்கு யார் கொடுத்தாலும் பிடிக்கும்... (ஆனா நிறையபேர், மி.பொடி தடவின மாதிரியும் இருக்கணும் தடவாத மாதிரியும் இருக்கணும் என்பதுபோலத் தடவுவாங்க. அதுல எனக்கு இஷ்டமில்லை0
நீக்குபழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப இட்லி கைமா இட்லி ஆக மாறுகிறது
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்களில் வந்த பதிவு நன்றாக உள்ளது. இந்த இட்லி உப்புமாவில் விதவிதமாக செய்யலாம். வெறும் மோர் மிளகாய், கடுகு, பெருங்காயம் தாளித்துக் கூட இட்லி உதிர்த்து வதக்கி உப்புமா சாப்பிட்டால் அதுவும் இனிமை.இட்லியை ருசித்து விரும்புகிறவர்களுக்கு இந்த மாதிரி எல்லாவித பக்குவமும் இனிமைதான்.
இன்றைக்கு அருமையான முறையில் இந்த இட்லி உப்புமா செய்முறையையும், சிறப்பான படங்களையும் பகிர்ந்த சகோதரி சியாமளா வெங்கடராமன் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகளும், நன்றிகளும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நம் நாக்கு ஒரே மாதிரி சாப்பிட மறுக்கிறது எனவே ஒரு நாள் மாத்தி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்பது என் கருத்து
பதிலளிநீக்குநாங்கள் இட்லி உப்புமா செய்வோம். இது புதுமையான ரெசிபி!
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குகைமா இட்லி செய்முறை குறிப்பும், படங்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஹோட்டல் சரவண பவன் செய்முறைய கற்றுக் கொண்டு செய்தது மகிழ்ச்சி.
எனக்கும் என் மகன் சிலம்பு ஓட்டலில் கற்றுக் கொண்டு செய்தது நினைவுக்கு வந்தது.
மகன் காலையில் செய்த இடலி மீதம் இருந்தால் மாலை சிற்றுண்டிக்கு இப்படி குடைமிளகாய் , வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், வரமிளகாய் எல்லாம் போட்டு செய்வான் . இப்படி சதுரமாக வெட்டிக் கொள்வான். மாயவர்த்தில் சிலம்பு ஓட்டலில் "இட்லிபீஸ் மசாலா "என்று செய்து மண்பானையில் கொடுப்பார்கள் . அப்பாவும் மகனும் விரும்பி சாப்பிட்டு வருவார்கள்.நான் கேலி செய்வேன் பழைய இட்லியை இப்படி புதுமையாக செய்து மண்பானையில் செய்து தருகிறார்கள் அதை ஆஹா! ஓஹோ என்று சாப்பிட்டு வருகிறீர்கள் என்று.