ஏழைகள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோருக்கு உதவுவதையே தன் வாழ்க்கை முறையாக கொண்டிருப்பது பற்றி கூறும் சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த சிவகாமி:
சமீபத்தில் அரசு மருத்துவமனையிலிருந்து, காலை 11:00 மணிக்கு செவிலியர் ஒருவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்தார்.அங்கு சென்று பார்த்போது, மனைவியை இழந்திருந்த ஒரு முதியவர், சாலையில் விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து, மூன்று மாத சிகிச்சைக்கு பின் குணமாகி இருந்ததை அறிந்தேன்.அந்த முதியவரை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்த செவிலியர்கள் அவரிடம் பேசிய போது, போதிய தகவல்களை பெற முடியாததால், என்னை அணுகி இருந்தனர். அந்த முதியவரிடம் பேசிய போது, அவருக்கு திருவண்ணா மலை சொந்த ஊர் என்பது தெரிந்தது. அவர் சொன்ன தகவல்களை வைத்து, நிறைய போன் செய்து, கடைசியில் உறவினர்களை கண்டுபிடித்து விட்டேன். வந்து அவரை அழைத்துச் செல்லுமாறு கூறிய போது, 'அவர் எங்கள் சொந்தமே இல்லை; பத்திரமாக முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுங்கள்' என்று கூறி, போனை துண்டித்து விட்டனர்.போலீஸ் உதவியுடன், அவரை காப்பகத்தில் சேர்ப்பதற்கான பணிகளை செய்து முடித்து வீடு திரும்பிய போது, இரவு 11:00 மணி இப்படி தான் பல நேரங்கள் ஆகும்.அண்ணாநகரில் சாலையில் சுற்றித் திரிந்த நடுத்தர வயது பெண்ணை பிடித்து, போலீசில் உட்கார வைத்திருந்தனர்.
அந்த பெண்ணிடம் பக்குவமாக பேசியதில், அவர் மிகவும் அதிகமாக படித்தவர் என்பதும், நாட்டிலேயே ஒரு சிலர் மட்டுமே படித்துள்ள அந்த படிப்பில் தேர்ச்சி பெற்றவர் என்பதும், திடீரென இப்படி மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையில் சுற்றித் திரிந்ததும் தெரிய வந்தது.வட மாநிலத்தை சேர்ந்த அவரை மீட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தேன்; அவர்களுக்கு மகிழ்ச்சி.இன்னொரு பெண்ணை மீட்டு, அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென என்னை கடித்து விட்டார். அவரிடம் அன்பாக பேசி, காப்பகம் ஒன்றில் சேர்த்து வீடு திரும்பினேன்.
இன்னொரு பெண், சென்னையின் ஆச்சாரமான ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்; மெத்த படித்தவர். ஒரே மகன். கணவர் இறந்ததும், மகன் தாயை சேர்த்துக் கொள்ள விரும்பாமல் அப்படியே விட்டு விட்டார். பசியால் சாலைகளில் அலைந்தவரை மீட்டு, காப்பகத்தில் சேர்த்து விட்டேன்.நான், தேனி மாவட்டத்தை சேர்ந்தவள். எனக்கு கணவர், மகன் உள்ளனர். பெரிய அளவில் வருமானம் கிடையாது. வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன். எனினும், துன்பத்தில் உழல்பவர்களுக்கு உதவி செய்வதையே, தொண்டாக கருதி வாழ்கிறேன்!
==============================================================================================================
பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு, அரசு சார்பில் குறைந்த வாடகை குடியிருப்பு மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பேரனுக்கு, அரசு சார்பில் குறைந்த வாடகை குடியிருப்பு மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
எம்.கே.டி., என்று அன்போடு அழைக்கப்பட்ட, எம்.கே.தியாகராஜ பாகவதர், தமிழ் திரைப்பட உலகின், முதல் நட்சத்திர அந்தஸ்து பெறற, உயர் நட்சத்திர கதாநாயகன்.
மிகச் சிறந்த கர்நாடக சங்கீத பாடகர். அவர் நடித்த பல திரைப்படங்கள், வெற்றிப் படங்களாக தமிழகத்தில் உலா வந்தன. குறிப்பாக, 1944ல் வெளியான, ஹரிதாஸ் என்ற திரைப்படத்தில், கதாநாயகனாக நடித்த பின், தமிழ் திரையுலகின் முதல், 'சூப்பர் ஸ்டாராக' கருதப்பட்டார்.
அவரது மகள் வழிப்பேரன் சாய்ராம் மற்றும் அவரது குடும்பத்தினர், தற்போது மிகவும் வறிய நிலையில், குடியிருக்க வீடின்றி, மிகவும் சிரம மான சூழ்நிலையில் வசித்து வருகின்றனர்.
தங்களுக்கு உதவி செய்யும்படி, முதல்வர் அலுவலகத்தில், சாய்ராம் மனு கொடுத்தார்.
இதை அறிந்த முதல்வர், அவரது குடும்பத்திற்கு, குறைந்த வாடகையில், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில், பொது ஒதுக்கீட்டின் கீழ், வீடு ஒதுக்கி தர உத்தரவிட்டுள்ளார். மேலும், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, ஐந்து லட்சம் ரூபாய் வழங்க ஆணையிட்டு
உள்ளார்.
========================================================================================================================
வழக்கமாக யார் ஆட்சிக்கு வந்தாலும் இது போல பக்தர்கள் கோரிக்கை வைப்பது வழக்கம்தான் ஆனால் அதை யாரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை ஆனால் அமைச்சர் சேகர்பாபு இந்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகாரிகள் துணையோடு இந்தக் கோவிலுக்கு வந்து சுற்றிப்பார்த்தும் அங்குள்ள பட்டாச்சார்யர்களிடம் கேட்டும் குறைகளை அறிந்து கொண்டார்.
இங்குள்ள ஆறு ஊழியர்களும் முதலில் நிரந்தரமாக்கப்படுவர்,கோவிலின் முகப்பை அழகை மறைக்கும் கடைகள் அகற்றப்படும்,இந்த வருடமே கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிேஷகம் நடத்தப்படும் என்று அறிவித்ததோடு ஆக்ரமிப்பாளர்களிடம் இடத்தை காலி செய்யும்படி உத்திரவிட்டும் சென்றார்.
ஆதிமூலப்பெருமாள் கோவில் பக்தர்களுக்கு மிகவும் சந்தோஷம் அவர்கள் சொன்ன ஒரே வார்த்தை ‛ பெருமாள் கண்ணைத் திறந்துவிட்டார்' என்பதுதான்.... இங்குள்ள ஆறு ஊழியர்களும் முதலில் நிரந்தரமாக்கப்படுவர்,கோவிலின் முகப்பை அழகை மறைக்கும் கடைகள் அகற்றப்படும், இந்த வருடமே கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிேஷகம் நடத்தப்படும் என்று அறிவித்ததோடு ஆக்ரமிப்பாளர்களிடம் இடத்தை காலி செய்யும்படி உத்திரவிட்டும் சென்றார்.
==============================================================================================================
இனிய காலை வணக்கம். அனைவரும் என்றும் நலமுடன் இருக்க இறைவன் அருளவேண்டும்.
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா... வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குவடபழனி ஆதிமூலப் பெருமாள் கோவிலுக்கு நடந்த நன்மை நிலைத்திருக்க வேண்டும் . வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅதே...
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇன்றைய செய்திகளில் முதல் செய்தி மட்டும் படித்திருக்கவில்லை. என்ன ஒரு நல்லுள்ளம் அந்தப் பெண்மணிக்கு... மெத்தப்படித்த தாயை, தந்தை மறைவுக்குப்பின் அம்கோ என கைவிட்ட மகன்... உருப்பட்டுடும்.
வாங்க நெல்லை.. வணக்கம். அதே...
நீக்குவடபழனி பெருமாள் கோவில், முருகன் கோவிலைவிட காலத்தால் முற்பட்டது.
பதிலளிநீக்குகோவில் இடங்களில் பிறமத்த்தவர் கடைகள் போட்டு ஆக்கிரமிப்புச் செய்துள்ளதையும் அரசு அகற்றவேண்டும்.
அதே... அதே...
நீக்குதியாகராஜ பாகவதர் குடும்பத்துக்கு நல்ல உதவி செய்திருக்கிறார்கள். காலம் தாழ்த்திக் கிடைத்தாலும் அவரது இசைக்குத் தந்த பெருமை் நற் செய்திக்கு நன்றி.
பதிலளிநீக்குஅதே...
நீக்குஅண்ணா நகர் சிவகாமியின் பொது நல் சேவை மிகவும் அதிசயிக்க வைக்கிறது. அவர் உதவி செய்தவர்கள் அனைவரும் கைவிடப்படவர்கள். எனபது மிக வருத்தப்பட வைக்கிறது. ஒரே ஒருவரை உறவினர்கள் அழைத்துக் கொண்டனர் என்பது மிக மகிழ்சசி. நல்ல செய்திகளில் பெரியவர்களை க் கைவிடும நிலை அதிர்ச்சி. இன்னும் என்னவெல்லாம் நடக்கிறதோ!
பதிலளிநீக்குஅதுபோன்ற மகன்களை படைத்த இறைவன் கூடவே சிவகாமிக்களையும் படித்து விடுகிறான்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் பானு அக்கா.. வாங்க...
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவி ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குகாலம்பரத்திலே இருந்து மயில் கூவிக் கொண்டே இருக்கு! அண்ணாநகர் சிவகாமி பற்றி சமீபத்தில் தான் தற்செயலாக அறிய நேர்ந்தது. ஶ்ரீராமிடம் சொல்ல நினைச்சு விட்டுப் போச்சு. அவரே இங்கே போட்டுவிட்டார். வாழ்த்துகள். ஆனால் பெரியோர்களின் நிலைமை வர வரக் கவலைக்கிடமாக ஆகி வருகிறது. சொத்து இருந்தால் பிடுங்கிக் கொண்டு நடுத்தெருவில் விடுகின்றனர். சொத்து இல்லை எனில் எங்காவது அழைத்துச் சென்று விட்டு விட்டுப் போகிறார்கள். என்ன மனிதர்களோ!
பதிலளிநீக்குமயில் கூவிக்கொண்டே இருக்கிறது என்பதில் விசேஷ அர்த்தம் ஏதாவது உண்டாக்கா? காக்கா கத்தினால் விருந்தினர் வருவார் என்பது போல.. மழையோ?
நீக்குஅட? மாமாவிடம் பேசிக்கொண்டே இருந்தேனா? மயில் அகவல் பற்றி. அதையே இங்கேயும் கவனக்குறைவாய்ச் சொல்லி இருக்கேன். எந்த அர்த்தமும் இல்லை. சில நாட்கள் இப்படித் தான் நாள் பூராவும் அகவிக்கொண்டே இருக்கும். இப்போவும் அகவுகிறது. குயில் ஒரு பக்கம்/மயில் ஒரு பக்கம் என்று ஒரே பக்ஷிகளின் கூக்குரல்! காலை வேளையில் மனதுக்கு இதமாக!
நீக்கு..எந்த அர்த்தமும் இல்லை. சில நாட்கள் இப்படித் தான் நாள் பூராவும் அகவிக்கொண்டே இருக்கும். இப்போவும் அகவுகிறது. குயில் ஒரு பக்கம்/மயில் ஒரு பக்கம் என்று ஒரே பக்ஷிகளின் கூக்குரல்! காலை வேளையில் மனதுக்கு இதமாக!//
நீக்கு’காலைவேளையில் மனதுக்கு இதமாக - என்பதே அர்த்தம்!
(பக்ஷிகளின் சத்தம், குரல் என்றாலே போதுமானது)
இப்போது தான் அமைதி நிலவுகிறது. இதுவும் கஷ்டமாத் தான் இருக்கு! :(
நீக்குஎம்கேடி பேரன் பற்றிய செய்தியை தினசரிகள் தொலைக்காட்சி மூலம் அறிந்தேன். இது குறித்துப் பலரும் பல்வேறு விதமான விமரிசனங்களையும் செய்கின்றனர். என் மனதில் இதே போ தி.ஜ.ரங்கநாதனின் பேத்திக்கும் அரசு உதவிசெய்யலாமே எனத் தோன்றியது. ஆனால் அவர் முன்னேறிய சமூகமோ? எனில் கிடைக்காது. :(
பதிலளிநீக்குஎனக்கும் அப்படி தோன்றியது.
நீக்குவடபழனி ஆதிமூலம் பெருமாள் கோயில் பற்றிக் கேட்டதில்லை. நல்ல தகவலுக்கு நன்றி. அது சரி, கௌதமன் சாரை எங்கே 2,3 நாட்களாய்க் காணோம்?
பதிலளிநீக்குபுதன் கேள்வி பதில்களில் கூட வந்திருந்தாரே... பார்க்கவில்லை?
நீக்குஅதுக்கப்புறமா வியாழன், வெள்ளியில் காணோமே, இன்னிக்கும் இல்லை, அதான் கேட்டேன்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்...
வணக்கம் துரை செல்வராஜூ சார்.. வாங்க...
நீக்குவாழ்க வையகம்..
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்...
அதே...
நீக்குசென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த சகோதரி சிவகாமி அவர்களுக்கு சல்பூட்.
பதிலளிநீக்குஎம்.கே.டி. பெயரை வைத்து இயக்கம் நடத்தும் வாட்ஸ்ஆப் குழுவில் இவர்களுக்கு உதவலாமே ஒரு நபர் இரண்டு ரூபாய் கொடுத்தாலும் பல லட்சங்கள் வருமே என்று கேட்டு இருந்தேன். யாரும் எனக்கு பதில் சொல்லவில்லை
நல்ல யோசனைதான் சொல்லி இருந்திருக்கிறீர்கள்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
சென்னை அண்ணாநகரில் வாழும் திருமதி சிவகாமி அவர்களின் நற்செயல்கள் படிக்க ஆறுதலாக உள்ளது. அவரின் மனிதநேய செயல்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எனவே அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை சொல்வோம். செய்தியில் அவர் குறிப்பிட்டிருந்த மனிதர்களின் நிலைதான் மனதை வருத்துகிறது. உலகில் எத்தனையோ மனிதர்கள்... அவரவருக்கு இப்படி எத்தனையோ இன்னல்கள்.. மனித வாழ்வில் இதுதான் புரியாத புதிராக உள்ளது.
எம்.கே.டி பாகவதரின் குடும்பத்திற்கு உதவி செய்த செய்தி அறிந்து கொண்டேன். அரசுக்கு நன்றி.
ஆதிமூலபெருமாள் கோவில் செம்மையாக மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து நல்ல வழி வகுத்து தந்த செய்தி மனதிற்கு மகிழ்வளிக்கிறது. அனைவருக்கும் பாராட்டுக்கள்.
விடிந்ததும் சனிக்கிழமைக்கு பொருத்தமான நல்ல தலைப்புடன் கூடிய பதிவை படிக்க வைத்த உங்களுக்கும் மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குபாராட்டபட வேண்டிய நல்ல செய்திகள்...
பதிலளிநீக்குஆம். நன்றி DD
நீக்குஅனைவருக்கும் முகம் மலர காலை வணக்கங்கள்! தொற்று முழுதும் நீங்கி மக்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!
பதிலளிநீக்குஅண்ணாநகர் சிவகாமி அவர்களின் சேவை தொடர வாழ்த்துக்களும், நன்றியும். புண்ணியம் செய்து நம் மனங்களில் உயர்கிறார் இந்த பாசிடிவ் பெண்மணி.
பதிலளிநீக்குஎம் .கே.டி குடும்பத்திற்கு நல்லது செய்திருக்கிறார் முதல்வர். இவ்வாறு அனைவருக்கும் செய்தால் மகிழ்ச்சி. ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் என்றால் வருத்தம் தான் மிஞ்சும். சேலத்தில், அவர் ஜெயித்த தொகுதிக்கு மட்டும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 கிலோ அரிசி. மற்ற தொகுதிகளுக்கு ஒன்றுமில்லை. எப்பொழுதும் கொடுக்கும் பொருட்களும் இழுத்தடிக்கப்படுகிறது. அவர் எல்லோருக்கும் தானே முதல்வர்.என் இந்த பாரபட்சம் தெரியவில்லை?
பெருமாள் அனைவருக்கும் கண் திறந்தால் மகிழ்ச்சி!
நேர்மறை பதிவுகளுக்கு நன்றி!
பதிலளிநீக்குஎம்கேடி சந்ததிக்கு, தமிழ்நாடு அரசு காலத்தாற் செய்த கனிவான உதவி - பாராட்டத்தக்கது.
பதிலளிநீக்குஇதேபோல், முதுபெரும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், சுதந்திரப்போராட்ட வீரர்கள் என்போரின் சந்ததிகளில் இன்று வறுமையில் தத்தளித்துச் சிதைபவர்களின் கணக்கெடுத்துப் பண உதவி செய்தால் நலமாயிருக்கும். நாடு மறக்காது.
இப்போது எழுதிக்கொண்டிருக்கும் சில இலக்கிய எழுத்தாளர்களும் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் - முறையான உத்தியோகம் இன்றி, எழுத்திலேயே ஆழ்ந்திருப்பதால், என சமீபத்தில் அறிந்தேன். இவர்கள் அரசின் பார்வையில் வருவார்களா.. விமோசனம் உண்டா?
நல்ல மனங்கள் என்றும் வாழ்க..
பதிலளிநீக்குநன்மைகள் எங்கும் நிறையட்டும்...
சென்னை திருமதி சிவகாமி அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ்வதற்கு வேண்டிக் கொள்வோம்...
பதிலளிநீக்குபோற்றப்பட வேண்டியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
அண்ணாநகரைச் சேர்ந்த சிவகாமி வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஅவர் செய்வது நல்ல சேவை .
நல்ல செய்திகளுக்கு நன்றி.
எம் கே டி பேரனுக்கு உதவி செய்த டி எம் கே.
பதிலளிநீக்குதகவல்கள் நன்று.
பதிலளிநீக்குசில வரிகள் இரண்டிரண்டு முறை வந்திருக்கிறது.