வியாழன், 8 ஜூலை, 2021

ரேணுகாவா? ரேனுகாவா?

 மாமா ஒரு பாட்டுப் பாடி க்ரூப்பில் போட்டிருந்ததற்கு விவகாரமாக ஒரு கமெண்ட் போட்டிருந்தேன். 

மிக நன்றாகக் பாடுவார் அவர்.  சுருதி எல்லாம் வைத்துக் கொண்டு பாடும் லெவல்!  அவர் உடனே ஃபோன் போட்டு விட்டார்.  "என்னடா" என்று மிரட்டி விட்டு  பிறகு பேசிக் கொண்டிருந்தார்.  அவர் பலவகைப் புத்தகங்கள் படிப்பார், வைத்திருக்கிறார்.  சரித்திரக் கதைகளில் அபார ஆர்வம்.  நிறைய புத்தகங்கள் சேமிப்பில் வைத்திருக்கிறார்.

ஒரு நோட்டில் குறித்துக் கொண்டு இதுவரை வாங்காத புத்தகங்கள் எவை என்று லிஸ்ட் போட்டு வாங்குவார்!

நாங்கள் பேசிய நேரம் அவர் சமைத்துக் கொண்டிருந்தார்.  'என்ன சாம்பார்?' என்றபோது காலிஃப்ளவர் சாம்பார் என்றார்.    நன்றாகச் சமைப்பார்.  நான் காலிஃபிளவரை வைத்து குழம்பு செய்ததில்லை.  அதைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.  'பெரிய வித்தை எல்லாம் இல்லைடா...   வழக்கமான சாம்பார்தான்...   காய் போடும் இடத்தில் காலிஃப்ளவர்...  வழக்கம்போல வெந்நீரில் போட்டு எடுத்ததும் சின்ன துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவேண்டும்' என்றார். 

ஒருதரம் காலிஃப்ளவர் சாம்பார் வைக்கும் ஆவல் எனக்கு வந்தது.  முன்பொருமுறை துரை செல்வராஜூ சாரும் இதைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்.

"நீ ஒரு தரம் பண்ணிக் கொடுத்தியே..   அந்த கறிதான் பண்ணிக்கிட்டிருக்கேன்"  என்றார்.  அதாவது குடைமிளகாயும் கத்தரிக்காயும் வெங்காயமும் (இதழ் இதழாய் போட்டு) சேர்த்து செய்த கறி!  ஆறு மாதங்களுக்குமுன் அவர் ஒரு முறை வீட்டுக்கு வந்தபோது என் கைவண்ணத்தில் அதைச் செய்திருந்தேன்.  அவருக்கு அது புதுசு.  

நான் உற்சாகமாகி என் வேறு சில பரிசோதனைகளையும் அவருக்குச் சொன்னேன்.  

ஒவொண்ணா சொல்லுடா...   அப்புறம் செய்து பார்க்கிறேன் என்றார்.  அவர் ரச ஸ்பெஷலிஸ்ட்.  ரசனையிலும் ஸ்பெஷலிஸ்ட்!

குக்கர் விசில் வர, என்ன என்று கேட்டேன்.  மூன்று விசிலும்,  பின் 'சிம்'மில் வைத்து ஒரு விசிலும் வைத்து சாதம்தான் என்றார்...  தஞ்சாவூரிலிருந்து ஒரு ஸ்பெஷல் அரிசி வரவழைக்கிறேன் என்றார்.  ஏதோ கரஞ்சியமோ ஏதோ சொன்னார்.  அப்போது பேசிக்கொண்டிருந்தபோது அந்தக் கால சமையல் பற்றி பேச்சு வந்தது.

இந்தக் காலத்தில் வெங்கலப்பானையில் சாதம் இன்னும் யார் வைக்கிறார்கள்?  கண்டிப்பாக கீதா அக்கா வீட்டில் வெங்கலப்பானையில்தான் இருக்கும்.  எங்கள் வீட்டில் எல்லாம் அது வழக்கொழிந்துபோய் பற்பல வருடங்கள் ஆகிவிட்டன.  

விறகடுப்பில் வெங்கலப்பானையை ஏற்றி, முக்கால் தண்ணீர் வைத்து (என் அம்மா வெங்கலப்பானை கழுத்தில் உள்ளங்கையை வைத்து உள்ளே உள்ளங்கையைக் கவிழ்த்தால் நுனி விரல் தொடும் உயரத்தில் தண்ணீர் அளவு இருக்க வேண்டும் என்பார்!)  அது கொதித்ததும் களைந்து வைத்திருக்கும் அரிசியை அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஸல் ஸல் என்று போடவேண்டும்.  சிப்பில் தட்டு வைத்து மூடியபின்,  குறிப்பிட்ட நேரம் கடந்து தண்ணீர் எல்லாம் காணாமல்போய் மேலே அரிசி/சாதம் தெரிய ஆரம்பிக்கும்.  அப்போது அதை சாதகரண்டியில் எடுத்து பதம் பார்க்கவேண்டும்.  அடிபிடிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  இரண்டு விறகை வெளியே எடுத்து அடுப்பைத் தணிக்கவேண்டும்!  நன்றாக வெந்து விட்டது என்று தெரிந்ததும் (ஜாக்கிரதையாக) இறக்கி கீழே சற்றே உயரமான ஒரு இடத்தில் அதை வைத்து, சிப்பில் தட்டை மூடி அது நழுவாமல் பற்றிக்கொண்டு கீழே ஒரு பாத்திரம் வைத்து கஞ்சி வடிக்கும் கலை இப்போது நிறைய பெண்களுக்கே கைவராதது!

அந்தக் கஞ்சிக்கு எங்கள் வீட்டில் இரண்டு உபயோகம்.  ஒன்று துணியில் தெளித்து  அயர்ன் செய்ய.  அயர்ன் பாக்ஸ் எது என்கிறீர்கள்?  கரி அடுப்பிலிருந்து நெருப்பு இருக்கும் கரியை எடுத்து ஒரு டபராவில் இட்டு, அதை இடுக்கியால் பிடித்து அயர்ன் செய்வேன்!!

இன்னொரு உபயோகம் அருமையான உபயோகம்.  ஆரோக்கியமான உபயோகம்.  வடித்த கஞ்சியில் 'சப்'பென்று மோர் கலந்து, உப்பு போட்டு, பெருங்காயம் போட்டு ஆளுக்கு ஒரு டம்ளர் குடிப்போம்!  சமயங்களில் அரை டம்ளர், கால் டம்ளர்தான் வரும்.  ஏக்கத்தோடு அடுத்த பங்கு அடுத்த ஆளுக்கு கொடுப்பதைப் பார்ப்போம்!  அந்த ருசிக்கு இப்போது நாக்கு ஏங்கினாலும், வீட்டில் இப்போது குக்கர் சாதம்தான்.  ஆனால் ஒன்று..  எப்போதுமே எதுவுமே அளவாக இருந்தால்தான் ருசிக்கும்.  ஆர்வம் இருக்கும்.

இன்னொரு ஸ்பெஷல் ஈயச்சொம்பு ரசம்.  அதை கரி அடுப்பில் வைத்துதான் செய்வோம்.  இல்லாவிட்டால் கொஞ்சம் அஜாக்கிரதையாய் இருந்தால் அது காணாமல் போய்விடுமே!  அந்த ருசியும் தனிதான்.

எங்கள் வீட்டு ஈய சொம்பில் சிறு துளை இருந்தது.  அதைப் புளி வைத்து அடைத்து ரசம் செய்வோம்!  அம்மாவின் டெக்னிக்.  அதைக் கரியடுப்பில்தான் வைத்து ரசம் செய்வோம்.  ஒன்றும் ஆகாது!  அதேபோல பால் காய்ச்சவும் கரியடுப்புதான்.

அப்புறம் மாக்கல் பாத்திரத்தில் வெந்தயக் குழம்பு.  மாக்கல் பாத்திரத்தில் மசியல்.   ஆஹா..  என்ன ருசி..  என்ன ருசி..    அந்தக் காலமெல்லாம் போயே போச்...   கீதா அக்கா சொல்வார்...   "நாங்கள் எல்லாம் இன்னமும் அப்படிதான்..."

எங்களுக்கு அது அபூர்வமாகி விட்டது!   நானும் மாமாவும் வாரத்தில் ஓரிரு நாட்கள், அல்லது மாதத்தில் ஓரிரு நாட்களாவது வெங்கலப்பானையில் வடிக்கும் சாதம் செய்து சாப்பிட வேண்டும், அந்தக் கஞ்சியை குடிக்க வேண்டும்  என்று பேசிக் கொண்டோம்!  மாதத்தில் ஒருமுறை பிரியாணி செய்வது போல, வாரத்தில் ஓரிரு நாள் உருளைக்கிழங்கு கறி, கீரை என்று செய்வது போல....   எப்படி ஆகிவிட்டது பாருங்கள் நிலைமை!  என்ன செய்ய...

நாங்கள் அவற்றை இழந்து, மறந்து கனகாலமாச்சு!

=======================================================================================================  

பொக்கிஷம்..

இந்த வர்ணனை, எழுத்து யாருடையது என்று சொல்வது கடினம்தான்.  


விடை....  இத்தனூண்டு எழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு எழுத்தாளர் யார் என்று கண்டுபிடிக்கச் சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர் என்று தெரியும்.  சிரமமான காரியம்.   மிகச்சில சமயங்களில் ரிஷபன் ஜி, கணேஷ் பாலா போன்றோர் கண்டு பிடித்து விடுவார்கள்!


அடடே...   இது எவ்வளவு ஓல்ட் டெக்னிக் பாருங்க...


"அட..   நான் சொல்லலை, டாக்டர் எல்லாத்தையும் சரி பண்ணிடுவார்னு?"

இப்பவும் இந்த பௌடர் வருதா?   ரேணுகாவா? ரேனுகாவா?  தேனுகான்னு ஒரு ராகம் இருக்குன்னு நினைக்கறேன்.


இவர் யாரென்று தெரிகிறதா?  குமுதம் கிசுகிசு!

=====================================================================================================

சென்ற வாரம் மருது சகோதரர்கள் பற்றி போட்டிருந்த செய்தியை முற்றிலும் வாசகர்கள் பகிஷ்காரம் பண்ணிவிட்ட காரணத்தினால் அதுமாதிரி பகுதி இன்று கட்!

========================================================================================================

மதன் இப்போது தினமணியில் இருக்கிறார்.



================================================================================================

இப்போதைய சூழ்நிலையில் ரொம்பக் கஷ்டமான விஷயமுங்க...


================================================================================================

அனிதா குளிக்கும் இடத்தை சென்ற வாரம் பார்த்தோம்.  அதற்கு அடுத்ததாக இந்த வாரம் ஒரு விளம்பரம்!  அனுப்பியிருப்பவர் ஜீவி ஸார்.


==========================================================================================================

உன் கண் உன்னை ஏமாற்றினால்...


189 கருத்துகள்:

  1. //அவர் ரச ஸ்பெஷலிஸ்ட். ரசனையிலும் ஸ்பெஷலிஸ்ட்//

    ஹா.. ஹா.. ரசித்தேன்.

    ரேணுகாதானே... ?

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் அனைவருக்கும்.

    வியாழனைத் திங்களாக்கினால், அதில் வரும் மற்ற பகுதிகள் குறைந்த கவனத்தைப் பின்னூட்டங்களில் பெறும்.

    மாமா பெயரைக் குறிப்பிடலையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லை வாங்க... எல்லாம் கலந்துதான் வரும்?! திருவாரூர் ஆண்டவர்!

      நீக்கு
    2. கேஜிஎஸ் தான் அந்த மாமா. அவர் தான் கலகல பேச்சுக்குச் சொந்தக்காரர். குழந்தையாய் இருக்கும்போது "வேற்று முகம்" என்பதே இருந்திருக்காது! :)))))

      நீக்கு
    3. Y, S இருவரும் நல்லா பேசுவாங்க. G ம் அப்படித்தானான்னு தெரியலை. V ஐப் பார்த்திருக்கேன் பேசின நினைவு இல்லை

      நீக்கு
    4. KGS இல்லை கீதா அக்கா. நெல்லை... எந்த V யைப் பார்த்திருக்கிறீர்கள்?

      நீக்கு
    5. அப்போக் கேஜிஜியாத் தான் இருக்கும். அவர் தான் கர்நாடக சங்கீதப் பிரியர்/சமைப்பதிலும் அதிகம் ஆர்வம் உண்டு. விதம் விதமாய்ப் பரிக்ஷை பண்ணிப் பார்ப்பார். அமானுஷ்யமாகக் காஃபி எல்லாம் போட்டிருக்கார், முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே! நெல்லை, கேஜிஜியும் நன்றாகப் பேசுவார். கேஜிஜி அவர் மனைவி, கேஜிஎஸ், ஶ்ரீராம் ஆகியோர் எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போனதும் சட்டென உலகே அமைதியானப்போல் எங்களுக்கு ஒரு உணர்வு. நல்ல கலகலப்பு அனைவருமே!

      நீக்கு
    6. சங்கீத சீசனுக்கு விடாமல் சென்னை வருவார் என்று குறிப்பிட்டிருந்தால் உடனே கண்டு பிடித்திருப்பேனோ?

      நீக்கு
    7. இல்லை..   இவர் எங்கள் ஆசிரியர்களில் ஒருவர் இல்லை!  ஒண்ணு விட்ட மாமா!!!

      நீக்கு
    8. அந்த மாமாவை நான் பார்த்திருகிறேன் என்று நினைக்கிறேன். அவர் பாடியும் கேட்டிருக்கிறேன். நான் உங்கள் வீட்டிற்கு வந்திருந்த இரண்டு முறைகளும் அவரும் வந்திருந்தார்.

      நீக்கு
    9. அவர் பெயர் தியாகராஜன் என்பது வரை கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் நான் அவரைப் பார்த்தது இல்லை.கேஜிஎஸ்ஸைத் தான் பார்த்தேன் உங்க வீட்டுக்கு வந்தப்போ!

      நீக்கு
    10. நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.  ஆனால் நாங்கள் ஸ்ரீரங்கம் வந்தபோது எங்களுடன் அவரும் வந்திருந்தார் - உங்கள் வீட்டுக்கெல்லாம் வரும்போது கோவிலுக்குச் சென்றிருந்தார்.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடர்ந்து கொண்டிருக்கும் தளர்வுகளின் மூலம் அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியம் சிறக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  4. அந்த யானை/பசு ஏற்கெனவே படிச்சாச்ச்ச்ச்! ஜீவி சார் அனுப்பிய ஜோக் பிரமாதம்/கலக்கல். ஆணியவாதிகளுக்குப் பிடிக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானை, பசு ஜோக் பழசுதான். படிஐ காத ஓரிருவர் இருப்பாங்களோன்னு...!

      நீக்கு
  5. //அப்புறம் மாக்கல் பாத்திரத்தில் வெந்தயக் குழம்பு. மாக்கல் பாத்திரத்தில் மசியல். ஆஹா.. என்ன ருசி.. என்ன ருசி.. அந்தக் காலமெல்லாம் போயே போச்... கீதா அக்கா சொல்வார்... "நாங்கள் எல்லாம் இன்னமும் அப்படிதான்// அதே! அதே! இப்போச் சாப்பாடு கொடுக்கும் மாமிக்கு சாம்பாரைத் தவிர்த்து வேறே எதுவும் பண்ணத் தெரியாது போல. முருங்கைக்காய் சாம்பார் வாரம் ஐந்து நாட்கள். மற்ற நாட்களில் முள்ளங்கி சாம்பார்/குடமிளகாய் சாம்பார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவா... இவங்களுக்கு தினம் பிடித்தமாதிரி சமையல் பண்ணிப் போட முதியோர் காம்ப்ளக்ஸ் ஈரேழு லோகத்திலும் தேடினாலும் கிடைக்காதே.. பிற்காலத்தில் என்ன செய்வாங்க? ஆண்கள்தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வதில் சூப்பர் என்று சொலவதன் தாத்பர்யம் புரியுது

      நீக்கு
    2. ஒரே மாதிரி சாப்பிட்டால் எதுவுமே போர் அடித்து விடும் கீதா அக்கா.். நெல்லை... இரண்டு பேர் மட்டும் இருக்கும் வீட்டில் என்ன செலவு இருந்து விடப் போகிறது!

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை, மாமா நான் வெள்ளிக்கிழமை மட்டும் சாம்பார் வைத்தாலே மூஞ்சியைத் தூக்கிப்பார். அவருக்குச் சாப்பிடுவதில் மாறுதல் வேண்டும். பொரிச்ச குழம்பு ரொம்பப் பிடிக்கும். அடுத்து வற்றல் குழம்பு/அல்லது தான்கள் மட்டும் போட்டுப் பண்ணும் வெறும் குழம்பு. சாம்பார் எல்லாம் நான் மாலை என்ன டிஃபன் என்பதைப் பொறுத்துக் கொஞ்சமாய்ப் பண்ணுவேன். ராத்திரிக்கு ஒரு கரண்டி தான் மிஞ்சும் என்னும்படி. எப்போவானும் ராத்திரிக்கும் சேர்த்துப் பண்ணிட்டு மிஞ்சும் போல் இருந்தால் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துடுவேன், மத்தியானமாகவே! இரவுக்கு வேறே ஏதாவது பண்ணிக்கொள்வோம். மாமா வேறே வழி இல்லை என்பதால் தான் பேசாமல் இருக்கார். நாளைக்கு நான் தான் சமையல், அமாவாசை என்பதால். தொடர்ந்து செய்யறேன்னு சொல்லிக் கொண்டு இருக்கேன். அவருக்குத் தான் பயம். மறுபடி கால் வீக்கம்/வலி அதிகமாகிடுமோனு. பார்க்கலாம். பிள்ளையார்ட்டே சொல்லி வைச்சிருக்கேன். கைவிட மாட்டார்.

      நீக்கு
    4. கீதா ரெங்கன் மெஸேஜ் அனுப்பியுள்ளார்.  கணினி இல்லாக் காட்டில் மாட்டி இருப்பதால் கமெண்ட் போடா முடியவில்லை என்பதைச் சொன்னதோடு "பெரிய கீதா வீட்டில் மட்டும் இல்லை, சின்ன கீதா வீட்டிலும் வெங்கலப்பானை, மாக்கல் சமையல்தான்'  என்று சொன்னார்.

      கூடுதல் தகவல்..  அவர் பிரியத்துக்குரிய கண்ணழகி காலமானது.

      நீக்கு
    5. மாக்கல் பாத்திரம்..?? அதன் பெயர் கல்சட்டிதனே? எங்கல் வீட்டிலும் அதில்தான் குழம்பு,கூட்டு வைப்பது. இன்னும் கொஞ்சம் சிறியதாக ஸ்ரீரெங்கம் செல்லும்பொழுது வாங்கி வர வேண்டும். ஈயச்சொம்பு பயன்படுத்துவது இல்லை. லெட் உடலுக்கு சேர்வது நல்லதில்லை என்கிரார்களே?

      நீக்கு
    6. அடடா? கண்ணழகிக்கு நற்கதி கிடைக்கட்டும். மனசுக்கு வேதனையான செய்தி ஶ்ரீராம். தி.கீதா இப்போச் சென்னையிலேயா இருக்காங்க? அல்லது "பெண்"களூரிலேயே கணினி இல்லாக் காடா?

      நீக்கு
    7. பானுமதி, எல்லோரும் செய்யும் தப்பைத் தான் நீங்களும் செய்யறீங்க! LED = காரீயம், இதைச் சமையலுக்குப் பயன்படுத்த மாட்டாங்க. ஆனால் ஈயச் செம்பு TIN=வெள்ளீயம்,இதைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம். காலம் காலமாக நம் முன்னோர்கள் காரீயத்திலா சமைத்துக் கொண்டிருந்திருப்பார்கள்? அப்படி இருந்திருந்தால் எவ்வளவு விஷம் உடலில் சேர்ந்திருக்கும்!

      நீக்கு
    8. யார் என்ன சொன்னாலும் நான் ஈயச் செம்பில் தான் ரசம் அன்றும்/இன்றும்/என்றும் வைப்பேன்/வைக்கிறேன்/வைத்துக் கொண்டிருப்பேன்.

      நீக்கு
    9. ஆகமொத்தம் நான் ஈயச்சொம்பு ரசம் சாப்பிட்டு நாட்களாகிவிட்டது!

      நீக்கு
  6. மருது சகோதரர்கள் பற்றிப் போன வாரம் எழுதி இருந்தது ஏற்கெனவே படிச்சிருக்கேனு பதில் சொன்ன நினைவு. முகநூலிலும் யாரோ போட்ட நினைவு. திரைப்படம் வெற்றி பெறும் டெக்னிக் பற்றிய ஜோக் பழசு தான் என்றாலும் ரசனை. சக்கரங்கள் சுற்றவே இல்லையே! அந்த வர்ணனையில் வரும் கதாநாயகி யார்? இந்த எழுத்தைப் படிச்ச நினைவு இல்லை. பா.வெ. வந்து சொல்வாங்க. காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பா.வெ வை எங்கள் பிளாக் பால்யூ என்றே முடிவு கட்டிட்டீங்களா?

      நீக்கு
    2. ஆம், மருது சகோதரர்கள் பற்றி செய்தித்தாளில் வந்திருந்ததுதான். பா வெ என்றாலே பால்யூ வெ தானோ!

      நீக்கு
    3. அந்த எழுத்துக்குச் சொந்தக்காரர் ரா.கி.ர. என நினைக்கிறேன். சரியா? கையில்லாத பொம்மை?

      நீக்கு
    4. இல்லை.   கையில்லாத பொம்மையில் வசந்தி உண்டா என்ன?

      நீக்கு
  7. //தஞ்சாவூரிலிருந்து ஒரு ஸ்பெஷல் அரிசி வரவழைக்கிறேன் என்றார். ஏதோ கரஞ்சியமோ ஏதோ சொன்னார். // களஞ்சேரியாக இருக்கும். எங்களுக்கும் அங்கிருந்து தான் அரிசி வருகிறது. மாதம் பத்துக்கிலோ வரும். செலவே ஆவதில்லை. ஆனால் தீட்டப்படாத அரிசி. கொழுக்கட்டை, சேவை போன்றவற்றிற்கும் பக்ஷணங்கள் பண்னவும் அருமையா இருக்கு/சாப்பிடவும் தான். ஒரு வருஷத்துக்கு மேலாக அங்கிருந்தே வருது. அதனால் தானோ என்னமோ இப்போ நான் வெயிட் நிறையக் குறைஞ்சிருக்கேன். ஏழெட்டுக் கிலோ குறைந்திருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செலவே ஆவதில்லை. 8 கிலோ எடை குறைந்திருக்கு- இவங்க ஒருவேளை அரிசி காணாமல் போயிடக் கூடாதுன்னு தினமும் எண்ணி வைக்கிறாரோ? அந்த உழைப்பால்தான் வெயிட் குறைநுதோ? ஹிஹிஹி

      நீக்கு
    2. நீங்க சொன்னா சரியா இருக்கும் கீதா அக்கா. ஆனா அது சாப்பிட்டால் வெயிட் குறையுமா? அட..

      நீக்கு
    3. தீட்டிய அரிசியில் சதை போடும் என்பார்களே ஶ்ரீராம். படிச்சதில்லையா? கைக்குத்தல் அரிசி தானே உடம்புக்கு நல்லது என்பார்கள்! கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும்.

      நீக்கு
    4. கேள்விப்பட்டதில்லைதான் கீதா அக்கா...

      நீக்கு
    5. @கீதா அக்கா: உங்களுக்கு சப்ளை பண்ணுகிறவர்கள் மற்றவர்களுக்கும் செய்வார்களா? ஆம் என்றால் ஃபோன் நம்பர் தருவீர்களா?

      நீக்கு
    6. பானுமதி, எல்லோருக்கும் கொடுப்பாங்க நிபந்தனையின் பேரில். அதை இங்கேப் பொதுவெளியில் சொல்லலாமா? நாங்க அவங்க வேத பாடசாலைக்கு அவ்வப்போது நன்கொடை அளிப்போம். அப்போது எந்த விசேஷத்துக்கு நன்கொடை அளிக்கிறோமோ அந்தச் சமயம் மட்டும் அரிசி வந்து கொண்டிருந்தது. உதாரணமாக அக்ஷய திரிதியை, ஆவணி அவிட்டம். தீபாவளி/சங்கராந்தி என்று அவங்க செய்யும் யாகங்கள்/ஹோமங்கள் ஆகியவற்றிற்கு நாம் அளிக்கும் நன்கொடையைப் பொறுத்து அரிசி வரும். இப்போது மாதா மாதம் வருவதன் காரணம் நாங்க வேத பாடசாலையின் பேரில் ஒரு லக்ஷம் ரூபாய்கள் டெபாசிட் செய்திருக்கோம். ஆகவே அதன் வட்டிக்குப் பதிலாக அரிசி அனுப்புகிறார்கள். இது ஐந்து வருஷத்துக்கு என நினைக்கிறேன். அதன் பின்னர் நமக்குத் தேவையானால் நீட்டிக்கலாம். அல்லது பணத்தைத் திரும்ப வாங்கிக்கலாம். இதைத் தவிரவும் அவ்வப்போது சின்னச் சின்ன விசேஷங்களுக்கு நன்கொடை அளிப்பது உண்டு/அதன் முக்கியத்துவம் கருதி!

      நீக்கு
    7. கூடுதல் தகவல், இது அவங்க சொந்த நிலத்தில் பயிராக்குவது. செயற்கை உரம் இல்லாமல் முற்றிலும் அவங்க கோசாலை, மற்ற இயற்கை உரங்களையே போட்டுப் பயிர் செய்கின்றனர். அதோடு அரிசியைத் தீட்டுவதும் இல்லை. நாம் நிறம் வேண்டுமெனில் நிறையக் களைந்து ஊற வைத்துப் பின்னரும் களைந்து கொள்ளலாம். ஆனால் நான் 2,3 தரம் களைந்துவிட்டுப் பின்னர் ஊற வைச்சுடுவேன். அதை இறுத்துவிட்டு வேறு ஜலம் விட்டுச் சாதத்தை வடித்துக் கொள்வேன்.

      நீக்கு
    8. களஞ்சேரியில் சீதாராமன் என்பவர் நடத்தும் வேதபாடசாலைதானே? அதற்கு நானும் நன்கொடை அளிதிருக்கிறேன்.

      நீக்கு
    9. பானுமதி, அப்போ உங்களுக்கும் வரணும்/அல்லது வந்திருக்கணும். ஆனால் நீங்க எதற்கு/எவ்வளவு நன்கொடை கொடுக்கிறீங்க என்பதைப் பொறுத்துனு நினைக்கிறேன். இவரோட தம்பி எங்க தாயாதியின் மாப்பிள்ளை/ கும்பகோணம் சோலையப்பன் தெருவில் வேதபாடசாலை வைத்து நடத்துகிறார். இந்த சீதாராமன் தில்லியில் இருந்ததால் நம்ம வெங்கட்டுக்கு நல்ல பரிச்சயம். இவரின் வேதபாடசாலையில் அதிகமாய் பிஹாரிக் குழந்தைகள் படிப்பதாய்க் கேள்வி. தமிழ்/தெலுங்கு/கன்னடமும் இருக்கலாம். நேரில் போகணும்னு நினைச்சுட்டுப் போகவே முடியலை.

      நீக்கு
  8. மதன் கார்ட்டூன்கள் எப்போதும் போல் அருமை, ரசனை, சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
  9. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
    நோய் ,தொற்று இல்லாத வாழ்வை இறைவன்
    நமக்கு வழங்க பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீராமின் கலக்கல் பதிவுக்கு வாழ்த்துகள்.
    எங்கள் வீட்டில் ஐந்து ஆழாக்கு சாதம் வடிக்கும் பானையில் தான்
    தினம் சமையல். அதே விறகடுப்பு.
    அதே கஞ்சி வடித்தல்.

    சுவையான கஞ்சி மோர். அதை அம்மா என்ன செய்தார்
    என்று மறந்து விட்டது.
    நானும் கால்படி பானையில் கஞ்சி வடித்திருக்கிறேன்.
    கரியடுப்புக்கு பல உபயோகம்,
    அப்பளம் அதில் காய்ச்சினால் சூப்பர்.

    பத்தில்லாத அடுப்பாக அது பயன்படும்.
    வெங்கல உருளியில் குழம்பு. இலுப்பச்சட்டியில்
    கறி, கற்சட்டியில் கீரை.
    பிறகு குக்கர் வந்து விட்டது. ஆனாலும் கீரைக்குக் கற்சட்டி தான்.
    நல்ல நினைவுகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா. கரியடுப்பில்தான் அப்பளம் சுட வசதி. கத்தரிக்காயும் சுடலாம்.

      நீக்கு
    2. ஆமாம், இந்த வடித்த கஞ்சி பலவற்றிற்குப் பயன்படும். காலை வேளைப் பசியை ஆற்ற மோர் விட்டுக் குடிக்கலாம். வெண்ணெய் போட்டுக் குடித்தால் அடி வயிற்று வலி சரியாகும். கர்ப்பிணிகளுக்கு இந்த வடித்த கஞ்சியில் ஊற வைத்த வெந்தயத்தோடு வெண்ணையும் போட்டுக் கொடுத்தால் அவங்களுக்கு அடிக்கடி வயிற்றில் வலி வராது. நான் நிறையச் சாப்பிட்டிருக்கேன்.

      நீக்கு
    3. வடித்த கஞ்சியில் நான் ஒன்றிரண்டு வகையில்தான் உபயோகம் செய்திருக்கிறேன் என்று தெரிகிறது!

      நீக்கு
    4. வடித்த கஞ்சியில் பால்,சர்க்கரை சேர்த்துதான் எங்கள் வீட்டில் சாப்பிடுவோம்.

      நீக்கு
    5. பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் ஜுரம் போல உணர்வேன்.  எனவே எப்போதும் மோர் உப்புதான்!  முன்பெல்லாம் ரசம் சாதமே உடம்பு சரியில்லாமல் இருந்தால்தான் சாப்பிடுவோமா, ரசம் சாப்பிட்டால் உடம்பு சரியில்லையோ என்கிற சந்தேகம் வந்துவிடும்!

      நீக்கு
    6. நான் பள்ளி நாட்களில் மூன்று வேளையும் ரசம் சாதமே சாப்பிட்டு, எடுத்துட்டும் போய்த் திரும்பி வீட்டுக்கு வந்தும் சாப்பிட்டிருக்கேன்.

      நீக்கு
  12. பதிவில் என்னையும் குறித்ததற்கு மகிழ்ச்சி.. நேற்று முன் தினம் கூட காலி பிளவர், கேரட், சிறு வெங்காய - சாம்பார் தான்...

    இப்போதெல்லாம் சாம்பாரில் முருங்கைக் காய் சேர்ப்பதில்லை.. காரணம் இங்கு வருகின்றவை மருந்து வாடையுடன் வருகின்றன.. தவிரவும் நூல் போல இருந்து துவளும் பிஞ்சாகி சற்று காயானதும் பறித்து ஏற்றுமதி செய்து விடுகின்றார்கள்..

    பச்சை முருங்கைக் காயின் பக்குவம் தெரிவதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே... தோற்றம் காலிஃப்ளவரா? ஜமாய்ங்க.. நீங்கள் சொல்வதுபோல முருங்கை இருந்தால் சமைக்கவும் பிடிக்காது, சாப்பிடவும் சுவாரஸ்யம் இருக்காது!

      நீக்கு
    2. காலிஃப்ளவரில் சாம்பாரெல்லாம் வைச்சதில்லை. ஆனால் சிங்கப்பூரில் கோமள விலாஸில் (?) அப்படித் தான் நினைக்கிறேன். காலிஃப்ளவர், குடமிளகாய், தக்காளி சாம்பார் ரொம்பவே பிரபலம் எனச் சொல்லுவார்கள். கல்கத்தா கோமளவிலாஸிலும் பண்ணுகிறார்கள்.

      நீக்கு
    3. காலிஃப்ளவர் சாம்பார் ஒருமுறை முயற்சிக்கவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது!

      நீக்கு
  13. மாமா ஒரு பாட்டுப் பாடி க்ரூப்பில் போட்டிருந்ததற்கு விவகாரமாக ஒரு கமெண்ட் போட்டிருந்தேன். /////////////////////////////////////என்ன விவகாரம்?
    மாமா பாட்டு கூடப் போடலாமே.
    நல்ல சுவாரஸ்யமான உறவு. கலகலப்பு நிறைந்த மனிதர்கள் குடும்பத்துக்கு
    நிறைவு.

    மதன் ஜோக்ஸ் சுவாரஸ்யம்.

    வசந்தி முகம் அலம்பிக் கொண்டதைப் படித்த நினைவு..
    ஏனெனீல் அந்தக் காலத்தில் அப்படித்தான் இருந்தது.
    ஆனால் குழாயடியில் பக்கெட் வைத்துக் குளிப்போம்.
    இவ்வளவு அவஸ்தைப் படவேண்டாம்:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிம்மா.. என்ன பாட்டுன்னு தேடிப் பார்க்கிறேன். வசந்தி வர்ரும் கதை "கையில்லாத.."

      நீக்கு
    2. ஹிஹிஹி, மேலே சொல்லிட்டு இங்கே வந்தால் க்ளூ கொடுத்திருக்கீங்களே! முன்னேயே சொல்லி இருக்கக் கூடாதோ? :)))))

      நீக்கு
    3. ஆனாலும் தப்புதான்.  விடை இன்றிரவு ஏழு மணிக்கு மேல் பதிவிலேயே வெளியாகும்!!

      நீக்கு
    4. ஏழு மணிக்கெல்லாம் நான் எங்கே பார்க்கப் போறேன். மெதுவா நாளைக்கு வந்து தெரிஞ்சுக்கறேன். அவசரமே இல்லை.

      நீக்கு
  14. அரிசி கழுவி உலை வைப்பதும் சோறாக்கி வடிப்பதும் மிகப் பெரிய கலை.. அதெல்லாம் குழாய்க் காணொளியான் சொல்லிக் கொடுத்து வராது...

    பதிலளிநீக்கு
  15. வடித்த கஞ்சியின் மகாத்மியம் பெரிது.. அதைப் பற்றித் தனியாகப் பதிவே போடலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு யாரோ சொல்லி இருப்பது போல கஞ்சியை வடித்து விட்டால் சாதத்தில் சத்தே இருக்காது என்பார்கள்.  ஆனாலும் குழைந்த சாதமாக இல்லாமல் இருக்க கஞ்சியை வடித்துதான் விடுவோம்!

      நீக்கு
    2. கஞ்சி வடித்த சாதத்தில் தான் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். அது தான் ஆரோக்கியத்துக்கு நல்லது. முக்கியமாய்ச் சர்க்கரை நோயாளிகளுக்கு வடித்த சாதமே சிறப்பு.

      நீக்கு
  16. இவர் யார் குமுதம் கிசிகிசு வாணிஸ்ரீயோ..:)

    டாக்டரும் கோலி பேஷண்ட்டும் நல்ல சிரிப்பு நன்றி மா.ரேணுகா சோப்புக்கு முதுகு காண்பித்ததில் ஸ்பெல்லிங்க்
    தப்பாகி விட்டது போல.

    சக்கரங்கள் சுற்றவே இல்லையே.:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது டால்கம் பவுடர் இல்லையோ?

      நான் நடிகையின் முதுகைப் பார்க்கலை (அதுக்கும் பவுடருக்கும் என்ன சம்பந்தம்?)

      நீக்கு
    2. நாம் கண்கொண்டு பார்க்கும் சக்கரம் தவிர மற்றவை சுற்றுவது போல பிரமை இருக்கும் அம்மா.   அது வாணிஸ்ரீயா, ராஜ்யஸ்ரீயா? 

      நீக்கு
    3. நானும் நடிகையின் முதுகைப் பார்க்கலை நெல்லை.  நாம ரெண்டு பெரும் ஒண்ணு!

      நீக்கு
    4. Adhu sari:)))))))))) Yes it could be RajaSri aaka irukkalaam.!!!!!!!
      you did nt see the back/ how strange!!!!!

      நீக்கு
    5. ராஜஸ்ரீ யாக இருக்க வாய்ப்பில்லை. ராஜஸ்ரீயை அறிமுகப் படுத்தியது ஸ்ரீதர், அவர் நடிக்கவில்லை.

      நீக்கு
    6. என் கண்ணுக்கு முதுகு மட்டுந்தான் தெரியுது. பவுடர் காணோமே? பக்கத்து பிளாக்குல இருக்குதோ பவுடர்?

      நீக்கு
  17. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. மதனின் இன்றைய நகைச்சுவையும் ஜோர்.ஃபோட்டோ எக்ஸ்ப்ரஸ் கடை விளம்பரம்
    ரசனையாகவே இல்லை. இப்படியா!!!

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  20. சாத்த்துக் கஞ்சில ஜீனி பால் விட்டுச் சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும். உப்பு போட்ட கஞ்சி எனக்குப் பிடிக்காது. நானொரு இனிப்புப் பிரியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதம் வடித்த கஞ்சியில் பால், சர்க்கரை போட்டால் பொருத்தமாக இருக்குமா தெரியவில்லையே நெல்லை..

      நீக்கு
  21. அயர்ன் பாக்ஸ் - நெகிழ்ச்சி.. நான் மடித்து படுக்குகளின் அடியில் வைப்பேன். பின்பு அயர்ன் பாக்ஸ் வந்தபோதும் உட்கார்ந்து அயர்ன் பண்ணும் பொறுமை இருந்ததில்லை. எப்போதும் வெளியில் அயர்ன் பண்ணக் கொடுப்பேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் படுக்கை, தலையணை  அடியில் வைப்பதுண்டு.  அப்போது அயர்ன் பண்ணும் பொறுமை இருந்தது.  அப்பாவின் பேண்ட்ஸ் ஷர்ட் எல்லாம் துவைத்து ஹேங்கரில் போட்டு காயவைத்து, மடித்து அயர்ன் பண்ணிக் கொடுப்பேன்.

      நீக்கு
  22. வெண்கலப்பானை என்னுடைய சிறு பிராயத்து நினைவுகளை தூண்டியது. லீகோ அடுப்பில் லீகோ கரியிட்டு வெண்கலப்பானையில் சீரக சம்பா புழுங்கரிசி சோறு. நாமக்கல் கல் சட்டியில் வைத்த கதம்ப சாம்பார், வார்ப்பு இரும்பு வாணலியில்  செய்த கோலிக்குண்டு உருளைக்கிழங்கு (baby potato) வறுவல்; ஆஹா அது ஒரு கனாக்காலம். நீங்கள் செய்தது போல் தான் கஞ்சியை வீணாக்க மாட்டோம். மோருடன் கலந்து கஞ்சி மோர் ஆக ஊற்றி சாப்பிடுவோம். 

    அதே போன்று ரேணுகா பவுடர் என்றவுடன் நினைவுக்கு வருவது ரெமி பவுடர். ரேடியோவில் வரும் "ரெமி பவுடர் ரெமி ஸ்னோ இன்றே வாங்குங்க, ரெமி பவுடர் ரெமி ஸ்னோ என்றும் வாங்குங்க." என்ற விளம்பரம் பிரபலம். 10 நிமிட குட்டி நாடகங்கள் ரெமி நாடக விருந்தில் ஒளி பரப்பாகும்.ஹிமாலய பொக்கே, வினிபா ரோஸ் பவுடர், ஆப்கன் ஸ்னோ, லாக்டோ காலமின் போன்றவை வழக்கொழிந்து போய் விட்டன. 

    குளிக்கும் வர்ணனை பாலகுமாரனை நினைவூட்டியது.

    கடைசி ஜோக் (பசு, யானை) முன்னமே படித்த ஞாபகம். இதற்கும் ஸ்டான் சாமிக்கும் சம்பந்தம் உண்டா? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்...    நீங்கள் சொல்லி இருக்கும் மெனுவே நாவில் நீரூற வைக்கிறது!  ரெமியும் ரேணுகாவும் ஒரே நிறுவனமா, தெரியவில்லை.  எக்ஸோடிகா டால்கம் பௌடர்தான் கமகமா கமகமா கமகமா கமகமா என்று வரும்!

      குளிக்கும் வர்ணனை பாலகுமாரன் அல்ல.  அதற்கும் முற்பட்டவர்!

      நீக்கு
    2. நான் குமுட்டி அடுப்பு, விறகு அடுப்பு, பம்ப் ஸ்டவ், உம்ராவ் ஸ்டவ், நூதன் ஸ்டவ், ஜனதா ஸ்டவ், பின்னர் எரிவாயு அடுப்புனு எல்லாத்திலும் சமைச்சிருக்கேனே. பிடிச்சது குமுட்டி தான்.

      நீக்கு
    3. நாங்களும்.  மேலும் ராஜபாளையம் ஸ்டவ் என்ற ஒன்றிலும்...

      நீக்கு
    4. முன்னர் பதிவொன்றில் சொல்லி இருக்கிறேன்.  உயரமான இடத்தில அஞ்சு லிட்டர் மண்ணெண்ணெயை வைத்து கீழே ஸ்டவ்...

      நீக்கு
    5. ஓ, அந்த நீளமான நீலக்கலர் ஸ்டவ்வா? பார்த்திருக்கேனோ?

      நீக்கு
    6. நானும் நானும். நான் சமைக்க கற்றுக் கொண்டதே விறகடுப்பில்தான். மைக்ரோவேவ் அவன், இண்டக்ஷன் ஸ்டவ் விட்டு விட்டீர்களே??

      நீக்கு
  23. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  24. அருமையான கதம்பக்கலவை!
    குளிக்கும் வர்ணனை ' பட்டுக்கோடை பிரபாகர்' எழுத்து மாதிரி இருக்கிறது!
    ரேணுகா டால்கம் பவுடர், ரெமி பவுடர், ஆப்கன் ஸ்னோ என்று இவற்றையெல்லாம் என் பழைய கால பைண்டிங் புத்தகங்களில் பார்ப்பதுண்டு. அநேகமாக அவையெல்லாம் கல்கி புத்தகத்தொகுப்புகள்!
    மதன் ஓவியங்கள் இன்னும் அதே அழகுடன் மிளிர்கின்றன!
    இப்போதும் நாங்கள் பெரிய கனமான அலுமினிய பாத்திரங்களில் தான் சாதம் வடிக்கிறோம். குக்கர் உபயோகிப்பதில்லை. குக்கர் சாதம் சர்க்கரை நோய்க்கு நல்லதல்ல, வடித்து சாப்பிடுவதே நல்லது என்ற விழிப்புணர்வு வந்த பின் வடித்த சாதம் தான் எப்போதும். துணியாலோ அல்லது க்ளிப் போட்டோ வடிப்போம். கிராமங்களில் பெரிய பானைகளில் சோறு பொங்கி வெந்ததும் சிப்பல் தட்டு வைத்து மூடி வடிப்பது இன்றைக்கும் சாதாரணமாக நடக்கிறது. நீங்கள் சொன்ன மாதிரி இந்தக்கால பெண்களுக்கு இதெல்லாம் இதெல்லாம் மிகவும் கடினம்.
    வடி கஞ்சியை அப்படியே வெளியே வைத்து ஒரு நாள் புளிக்க வைத்து மறு நாள் பார்த்தால் கஞ்சி பாளம் பாளமாக வெட்டி எடுப்பது போல வந்திருக்கும். அதில் சீயக்காய் கலந்து தலைக்குத் தேய்த்துக்கொள்வோம். அது ஒரு கனாக்காலம் தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ அக்கா..  அது ப கோ பி இல்லை!  ஆமாம்..  வடித்த கஞ்சியை வைத்தால் மறுநாள் பாளம் பாலமாக இருக்கும்.  தலைக்கு குளிப்பது மறந்து விட்டது!

      நீக்கு
    2. இதுக்காகச் சொல்லி வைச்சுக் கஞ்சி வாங்கிப் போவது உண்டு. தலையில் தேய்த்துக் குளித்தால் மிருதுனா மிருது, அவ்வளவு மிருது! கூடவே உசிலம்பொடியும் சேர்ந்தால்! கேட்கவே வேண்டாம். அந்த மணத்துக்காகவே தினம் தினம் குளிக்கச் சொல்லும்.

      நீக்கு
    3. ஆமாம், மதுரைப்பக்கங்களிலே தான் அதிகம் கிடைக்கும். பச்சையாக இருக்கும். நீரில் கலக்கினால் நுரை வரும். தலைக்குத் தேய்த்துக் குளித்தால் குளிர்ச்சி என்பார்கள். சீயக்காயோடு கலந்தோ/தனியாகவோ (ஷாம்பூ மாதிரி) தேய்த்துக் குளிக்கலாம். ஒரே ஒரு முறை மதுரையிலிருந்து தெரிஞ்சவங்க வாங்கிக் கொடுத்தாங்க. அதுக்கப்புறமா இதன் பெயரைச் சொன்னாலே யாருக்கும் புரியலை. அதே போல் மிதுக்க வத்தலும். நல்லவேளையா இங்கே தெப்பக்குளம் பக்கம் இருக்கும் காதியில் மிதுக்க வத்தல் கிடைக்குது.

      நீக்கு
    4. கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது.  மிதுக்கவத்தல் தெரியும்.  மதுரைச் சுண்டைக்காய் நிறைய பேர்களுக்குத் தெரிவதில்லை.

      நீக்கு
    5. உசிலம்பொடி ஸ்ரீரங்கத்தில் கிடைத்துக் கொண்டிருந்ததே. நாங்கள் வாங்கியிருக்கிறோம்.

      நீக்கு
    6. அப்படியா? நாங்க இங்கே விசாரிக்கலை. அலுத்துப் போய் நானே வேண்டாம்னு விட்டுட்டேன். :(

      நீக்கு
  25. இந்த வாரம் கவர்ச்சி கூடுதல்.. குளியல் கட்சி, ரேணுகா விளம்பரம். அனுஷ்கா தான் காணவில்லை.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேச்சே...   கவர்ச்சி எல்லாம் இல்லை JC ஸார்..   யார் எழுத்து என்று கண்டு பிடிக்கச் சொன்னேன்.  விளம்பரத்தில் உள்ள ஸ்பெல்லிங் மிஸ்டேக்கைக் காட்டினேன்.  அவ்வளவுதான்!

      நீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.முதல் பகுதியில் அரிசி வடித்த கஞ்சி, சமையல் செய்யும் பாத்திரங்களின் விளக்கங்கள் என அருமை. வடித்த கஞ்சியின் சுவை இன்னமும் நினைவில் உள்ளது. "கஞ்சி பித்தம்,சோறு காமாலை" என்ற அறிவுரைகளை சொன்ன காலம் போய், இப்போது "சாதம் இனிப்பு நோய்" என்ற காலம் வந்து விட்டது. தினமும் ஒருவேளை சாப்பிடவே யோசிக்கும் காலமாகி விட்டது.

    /அந்த ருசிக்கு இப்போது நாக்கு ஏங்கினாலும், வீட்டில் இப்போது குக்கர் சாதம்தான். ஆனால் ஒன்று.. எப்போதுமே எதுவுமே அளவாக இருந்தால்தான் ருசிக்கும். ஆர்வம் இருக்கும்./

    உண்மை...ருசியை விட பசியின் அளவை தாண்டாமல் சாப்பிடுவது சிறப்பென்ற பக்குவத்தை கற்று பெற்று வருகிறோம். ஒவ்வொன்றையும் குறித்து நீங்கள் விளக்கியது ஒரு பக்கம் இப்படியெல்லாம் செய்து ருசியாக சாப்பிட்டதை இழந்து விட்டோமோ எனவும் எண்ண வைக்கிறது.

    இப்பவும் என்னிடம் ரசம் வைக்க ஈயப்பாத்திரம் உள்ளது. முதலில் எல்லாம் எரிவாயு அடுப்பில் கடாயில் ரசம் வைத்து சூடாக ரசசொம்பில் விடுவேன். அதிலேயே வைத்து கொதிக்க வைப்பது போல், அது அவ்வளவாக வாசம் இருக்காது. அதனால் அதன் பின எரியடுப்பை சிம்மில் வைத்து புளி கரைத்து ஊற்றிய பின் ஈயச்சொம்பை அடுப்பில் ஏற்றி வைத்து ரசம் செய்து விடுவேன். ஈயப் பாத்திரம் பழுதாகாமல் நன்றாக இருக்கும்/இருக்கிறது.ஆனால், பழைய செய்முறைகளில் ஒரு திருப்தி இருந்தது உண்மை.

    கோலி ஜோக்ஸ், மதன் ஜோக்ஸ் அனைத்தும் நன்றாக உள்ளன.திரைப்படம் வெற்றியடைய தயாரிப்பாளரின் ஐடியா நன்றாக உள்ளது.

    விளம்பரம் "ரேணுகா" வாகத்தான் இருக்கும். இதுமட்டுமல்ல அந்த கவர்ஸ்ரீ கூட படித்த நினைவு வருகிறது. மேலும் அந்த வர்ணனை கதை சுவாரஷயம். படிக்கும் போது சட்டென எல்லாம் நினைவுக்குள் வருகிறது. உடனே பதிலளிக்கத்தான் இயலவில்லை. கண்களுக்கு எதிரே நிறைய சக்கரங்கள் இருப்பதால்,கண்கள் அசையும் போது சக்கரங்கள் சுற்றுவது போல் ஒரு தடுமாற்றாக தோன்றுவது இயல்பு. ஒரு சக்கரத்தை பார்ப்பது போல் ஒவ்வொன்றாக (கதை வர்ணனை, டைரக்டர் புதிர்) யோசிக்க வேண்டும்.
    இன்று கவிதை மிஸ்ஸிங்கா?

    இன்றைக்கும் வழக்கம் போல் வியாழன் பதிவை சுவைபட தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை மிஸ் ஆகி விட்டது கமலா அக்கா!  கஞ்சி பித்தம் சாதம் காமாலை சொலவடைக்கு என்ன அர்த்தம்?  என்னிடம் ஈயப்பாத்திரம் கிடையாது.  வெங்கலப்பானை கூட இல்லை என்றுதான் நினைக்கிறேன்.  இதை பாஸைக் கேட்காமலேயே சொல்கிறேன்!

      நீக்கு
  27. வெறகடுப்பு, வெங்கலப்பானை, குமுட்டி அடுப்பு, வடிச்ச கஞ்சிக் கந்தாயம், ஈயச்சொம்பு ரசம், மாக்கல்சட்டியில் ஊறிய பழைய சாதம், சின்னவெங்காயம்- பட்டமிளகாய்த் தொகையல், பால்பறங்கிக்காய் வெல்லக்கூட்டு, பச்சத்தக்காளிக் கூட்டு, வாழப்பூ பருப்புசிலி, வேப்பம்பூ ரசம், நாக்கை நடிக்கவைக்கும் மாங்காய்ப்பச்சடி - இதெல்லாம் இப்ப எதுக்கு நினைவுல வரணும்? திரும்பவா போறது அந்த வாழ்க்கை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சைத் தக்காளிக்கூட்டெல்லாம் மதுரையோடு போச்சு! அதே போல் பறங்கிக்கொட்டைப் பால் கூட்டும்! பலாக்காய்ப் பொடிக்கறி, சி.வெ.+பட்டை.மி. போட்டு எப்போதேனும் மதுரை நினைவுகள் வந்து துக்கம் தொண்டையை அடைத்தால் எனக்கு நானே பண்ணிப்பேன். மற்றபடி வாழைப்பூப் பருப்புசிலி, வடை அடைக்குப் போடுதல், வாழைப்பூப் பொரிச்ச குழம்பு, கூட்டு எல்லாமும் உண்டு. வேப்பம்பூ ரசம் நான் சமைக்கையில் வாரம் ஓர் நாள் புதன் அல்லது சனி! மாங்காய்ப் பச்சடி எனக்கு மட்டும் தான் பண்ணிக்கணும். :( ஈயச் செம்பு ரசமெல்லாம் தினமும் உண்டு. வெண்கல உருளியில் தான் இப்போதும் அரிசி உப்புமா, புளிப்பொங்கல், வெண் பொங்கல், கொஞ்சமாய்ச் சர்க்கரைப் பொங்கல் அக்கார அடிசில் எல்லாமும் பண்ணறேன். பொங்கலுக்கு வெண்கலப்பானை சாதம்/அவிசு/சர்க்கரைப் பொங்கல் தான். அதுக்குனு எடுக்கிறாப்போல் 3 வெண்கலப்பானை வைச்சிருக்கேன்.

      நீக்கு
    2. நானும் அரிசி உப்புமா, சர்க்கரைப் பொங்கல் போன்றவை வெங்கலப் பானையில்தான்.

      நீக்கு
    3. சர்க்கரைப்பொங்கல் எங்கள் வீட்டில் வெங்கலப்பானையில்தான்!

      நீக்கு
  28. அந்தக் காலமெல்லாம் போயே போச்...! நல்ல துணுக்குகள்...

    முடிவு படம் முன்பு ஒரு பதிவில் பகிர்ந்து இருந்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிவு படம் என்றால் அந்த சுழலும் சக்கரங்களா?  இருக்கலாம் DD..   எங்கும் காணக் கிடைப்பதுதான் அது...

      நீக்கு
  29. கதம்பம், பல்சுவை தொகுப்பு அருமை.


    //அவர் ரச ஸ்பெஷலிஸ்ட். ரசனையிலும் ஸ்பெஷலிஸ்ட்!//

    சமையலை ரசித்து செய்தால் எல்லாம் அருமையாக அமையும்.

    உங்கள் அம்மா வெங்கல பானையில் சமைப்பதையும் உங்களுக்கு சொல்லி கொடுத்து சமைத்த அனுபவம் இரண்டையும் மிக அழகாய் சொல்லி விட்டீர்கள்.

    //வெங்கலப்பானையில் சாதம் இன்னும் யார் வைக்கிறார்கள்? //

    பொங்கல் அன்று மட்டும் வெங்கலப்பானையில் பொங்கல் வைக்கிறேன். வெங்கல உருளியில், அரிசி பாயாசம், திருவதிரை களி செய்வேன்.

    கஞ்சி அக்கம் பக்கம் வீட்டில் வாங்கி தலைக்கு சீகைக்காய் பொடிபோட்டு குளிக்க வாங்குவேன். வாயில் புடவைக்குக்கு, வேஷ்டிக்கு கஞ்சி போட்டு இருக்கிறேன்.

    குழந்தை உண்டாகி இருக்கும் போது கஞ்சி வடித்து அம்மா அதில் வெண்ணைய் போட்டு கொடுப்பார்கள் காலை 11 மணிக்கு. மற்ற சமயம் கஞ்சி வடிப்பது இல்லை. கஞ்சி வடித்தால் சத்து போய் விடும் என்பார்கள் அம்மா.

    எனக்குசாதம் வடிக்க தெரியாது. எங்கள் வீட்டில் சாதம் வடித்தது இல்லை. வெங்கலபானையில் பொங்கிதான் இறக்கி வைப்பார்கள். கரி அடுப்பு, உமி அடுப்பு, விறகு அடுப்பு எல்லாம் திருவெண்காட்டில் கற்றுக் கொண்டேன் .(மண்ணெண்ணெய் கிடைக்காத போது கற்றுக் கொண்டது)அப்போதும் சாதம் வடித்தது இல்லை. "வேட்டுசாதம்" என்று சொல்லும் குக்கர் மாதிரி வார்ப்பு இருப்பு சட்டியில் தண்ணீர் வைத்து அதில் பாத்திரத்தில் அரிசி களைந்து வைத்து சாதம் செய்வேன். பருப்பு அதன் மேல் வைப்பேன் குக்கரில் வைப்பது போல் அது வேகாது. மீண்டும் தனியாக வேக வைப்பேன். அப்புறம் கும்பகோணம் போய் "ஹாட் பிளேட்" எனும் கரண்ட் அடுப்பு வாங்கி வந்தார்கள் அதில் குக்கர் , பால் குக்கர் வைத்துக் கொள்வேன், மற்றவை விறகு அடுப்பில் செய்வேன். அப்புறம் ஒரு கடையில் டீசல் விற்றார்கள் அதை வாங்கி ஜனதா ஸ்ட்வில் ஊற்றி ஒரு பிடி கல் உப்பு போட்டு அது பயன் படுத்தினேன். (கடைக்காரர் சொன்னார் அடுப்பு அப்போதுதான் கெட்டு போகாது என்று).

    அம்மாவீட்டில், மாமியார் வீட்டில் கல்சட்டி உண்டு. கீரை கடைவார்கள், வத்தல் குழம்பு கீரை இரண்டையும் சுண்ட வைத்து சுண்ட குழம்பு கல்சட்டியில் செய்தால் மிக ருசியாக இருக்கும். ஈயசட்டியும் இருவரும் பயன்படுத்தி இருக்கிறார்கள். நான் பயன்படுத்தியது இல்லை. மாயவரத்தில் ஈயச்சட்டிக்கு என்றே தனிக் கடை உண்டு. கண்ணாடி பெட்டியில் வெளியில் தெரிவது போல் அழகாய் வைத்து இருப்பார்கள் .

    மற்றவைக்கு நாளை வருகிறேன்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடித்த கஞ்சியில் வெண்ணெய்?  அடடே...   நான் அதை மிஸ் பண்ணி விட்டேனே...  
      வத்தல் குழம்பு தனியாய், கீரை தனியாய் இருக்கும்.  தட்டில் போட்டு சாப்பிடும்போது மிக்ஸ் செய்து சுவைப்பதுண்டு.  ஆனாலும் கற்சட்டி சமையலை மிஸ் செய்கிறோம்!

      நீக்கு
    2. அட? ஆமாம், திருவாதிரைக்களி வெண்கல உருளியில் தான் பண்ணுகிறேன். கொழுக்கட்டை/சேவைக்கு மாவு கிளறினாலும் வெண்கல உருளி தான்.

      நீக்கு
  30. சாதம்வடித்து கஜ்சி குடிப்பது எல்லாம் என் சிறுவயது நிகழ்ச்சிகள் இல்லாமை தந்த சோக நிகழ்வுகள் ஆனல் அவை சோசமானது அல்ல என்று இப்போது தெரிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோகமென்று ஏன் நினைத்தீர்கள் ஜி எம் பி ஸார்?  சுவை!

      நீக்கு
  31. மண்சட்டியில் கீரை மசியல் செய்தால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  32. அனைவருக்கும் முகம் மலர காலை வணக்கங்கள்! தொற்று முழுதும் நீங்கி மக்கள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  33. பதிவின் பகுதிகள் அனைத்தும் நன்று. மதன் கார்ட்டூன் ரசித்தேன்.

    களஞ்சேரி எனும் ஊரிலிருந்து வந்த அரிசி அல்லது அரிசியின் பெயர் கரஞ்சேரி இதில் எது சரி :) தஞ்சையை அடுத்து ஒரு சிறு கிராமம் களஞ்சேரி. ஒரு முறை சென்றிருக்கிறேன்.

    கல்சட்டி சமையல் - அது ஒரு கனாக் காலம். சமீபத்தில் திருவரங்கத்தில் ஒரு கல்சட்டியின் விலை விசாரித்தபோது மயக்கம் வராத குறை! சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று வந்து விட்டாராம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட். என்ன விலை சொன்னர்கள்?

      நீக்கு
    2. களஞ்சேரி தான் சரினு நினைக்கிறேன். ஏனெனில் அரிசியின் பெயர் கரஞ்சேரினு அவங்க சொல்லலை. எங்களுக்கு மாதா மாதம் அரிசி வரும்.

      நீக்கு
    3. கல்சட்டியின் அளவைப் பொறுத்து விலை - குறைந்த பட்சம் நானூறு என நினைவு.

      நீக்கு
    4. களஞ்சேரியிலிருந்து அரிசி - உங்களிடம் பேசும்போது சொல்லி இருக்கிறீர்கள் கீதாம்மா.

      நீக்கு
    5. ஆமாம்.  விலை அதிகம்தான்.   தப்பித்தவறி கீழே போட்டால் போச்...!   முன்பு மாதிரி தரையில் கிறுக்க சிமென்ட் தரையும் எந்த வீட்டிலும் இருக்காது!

      நீக்கு
  34. எங்கள் வீட்டில் நாங்கள் சாதம் வடித்து தான் செய்வோம் . சாதம் வடிகட்டிய கஞ்சி பாதி டம்ளர் எடுத்து சிறிது பனங்கற்கண்டும், நெய்யும் சேர்த்து தினமும் பாட்டி அருந்துவார். மீதம் இருப்பதை புடவைக்கு கஞ்சி போடா உபயோகிப்போம். குக்கர் சாப்பாடு எழுமிச்சை சாதம், புளிசாதம் செய்ய மட்டும் தனியாக வைத்துக்கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட...    அடுத்த ருசி!  நெய்யும் பனங்கற்கண்டும் சேர்த்து கஞ்சியா?

      நீக்கு
  35. @ ஜெயகுமார் சந்திரசேகர்

    // இந்த வாரம் கவர்ச்சி கூடுதல்.. குளியல் கட்சி, ரேணுகா விளம்பரம். அனுஷ்கா தான் காணவில்லை...//

    Jayakumar

    ஆலையில்லா ஊருக்கு
    இலுப்பைப் பூ சர்க்கரை!..

    பதிலளிநீக்கு
  36. ஸ்ரீரங்கத்தில் வாங்கிய இரும்பு சட்டியும், தோசைக்கல்லும் என்றும் துணை. வெண்கலப்பானையில் தான் குடிநீர் பிடித்து வைப்போம்.கோடைக்காலம் முழுதும் மண்பானையில் குடிநீர். வீட்டில் விஷேசம் என்றால் மட்டும் வெண்கலப்பானையில் சாதம் வாடிப்போமே. முன் போல பணியார சட்டி தேடிவருகிறேன். இன்னும் கிடைக்கவில்லை.ஆகிவந்த பாத்திரங்களில் செய்வது தனி சுவையே! மதன் கார்ட்டூன் எப்பொழுதும் போல அருமை. நல்லதொரு கதம்பப் பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வானம்பாடி.  தோசைக்கல் போன்றவை அவ்வப்போது சரியில்லாமல் போய் வேறு வாங்க வேண்டி வந்து விடும்!  தோசைக்கல் பழக கழுநீர் ஊற்றிக் கழுவுவார்கள் என்று நினைவு.

      நீக்கு
    2. நான் கல்யாணம் ஆனதில் இருந்து ஒரே தோசைக்கல் முப்பது வருடங்களுக்கும் மேலாக வைத்துக் கொண்டிருந்தேன். தண்டவாளக் கல். அதில் தோசை வார்த்தால் மெல்லிசாக நன்றாய் வரும். உள்ளும், புறமும் வெள்ளையாகத் தேய்த்தும் வைச்சிருந்தேன். 2007 ஆம் ஆண்டு அம்பேரிக்கா போனப்போ அந்த தோசைக்கல் அந்த வருஷ அதீத மழையில் துருப்பிடித்துப் போய்த் தேய்த்ததில் நடுவில் தேய்ந்து விட்டது. தோசை எல்லாம் நடுவில் கருப்பாக வர ஆரம்பிக்க உடனேயே நம்மவர் அதைத் தூக்கிக் கொடுனு வேலை செய்யும் பெண்ணிடம் கொடுக்கச் சொல்லிட்டார். அப்புறமாய்ச் சென்னைக் கந்தகோட்டம் தேவராஜமுதலித் தெருவில் ஒரு தோசைக்கல் பெரிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈதாக வாங்கினேன். தூக்கக் கூட முடியலை இப்போதும். அதில் தான் தோசை வார்க்கிறேன். இன்னொன்று இங்கே வந்து தண்டவாளக் கல் வாங்கினாலும் எனக்கு என்னமோ அதைக் கண்டாலே பிடிக்கலை. போ, ஓரமானு தூக்கிப் போட்டுட்டேன். அதைத் தவிர்த்துச் சப்பாத்தி பண்ண தனி தோசைக்கல் பிடி வைத்து. அதில் தோசை வார்ப்பதில்லை. தோசை வார்ப்பதில் சப்பாத்தி பண்ணியதில்லை. வீட்டுக்கு வரவங்க யாரானும் சில/பல சமயங்கள் மாத்திடுவாங்க சொல்லச் சொல்லக் கேட்காமல். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))

      நீக்கு
    3. நான் ஸ்டிக் தோசைக்கல் முதல் முதல் அம்பேரிக்கா போனப்போப் பெண்ணோ/பிள்ளையோ வாங்கிக் கொடுத்தாங்க. அது இன்னமும் இருக்கு. கோதுமை வெல்ல தோசைக்கு அதை வைச்சுப்பேன். நன்றாக எடுக்க வரும்.

      நீக்கு
    4. நான்ஸ்டிக் தோசைக்கல்லில் வார்த்தால் பிடிப்பதில்லை.

      நீக்கு
  37. ஆணியவாதிகள் என்ற சொல்லை யாரோ பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்கள் என்பதால் அது பற்றிச் சொல்லத் தோன்றியது.

    ஆண்கள் பெண்ணியவாதிகளாவும் பெண்கள் ஆணியவாதிகளாவும் இருப்பது தான் சிறப்பு.

    பெண்ணியவாதிகளான ஆண்களை பெண்கள் கண்டு கொள்வதும், ஆணியவாதிகளான பெண்களை ஆண்கள் கண்டு கொள்வதும் அவரவருக்கான கூடுதல் சிறப்பு.

    பெண்களுக்கான சார்பு நிலையை ஆண்கள் எடுப்பதும், ஆண்களுக்கான சார்பு நிலையை பெண்கள் எடுப்பதும்
    இரு பாலினத்தினருக்குமான பொதுவான சிறப்புகளாகும். இப்படியான ஆண்கள் - பெண்களுக்கு திருமணம் அமைவது இறைவனின் கருணையாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சரி ஜீ.வி.சார்;.

      நீக்கு
    2. ஊர் என்னவோ, பேர் என்னவோ என்று கூட கேட்பீர்கள் போலிருக்கே.

      பின்னூட்டத்தை தாண்டி அந்த யாரோவில் கவனம் பதிந்திருக்கிறது,
      பாருங்கள்..

      பா.வெ.க்கோ ஜே.கே.யையே நினைவு கொள்ள வைத்திருக்கிறது.



      நீக்கு
  38. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  39. இன்றைய பதிவில் கவிதாவைக் -
    அடடா என்ன உளறல்!..
    கவிதையைக் காணவில்லை என்று சொல்லியிருக்கின்றார்கள்..

    இன்றைய பதிவில் வடித்த கஞ்சிப் புராணம் ஓடிக் கொண்டிருப்பதால் அதையொட்டி ஒரு பாடல்..

    ஸ்ரீ கவிமணி தேசிக விநாயகம் அவர்கள் இயற்றிய பாடல்..

    அன்னப்பால் என்பது சோறு வடித்த கஞ்சி..

    பாடலின் முதற்கண்ணி மட்டும் இங்கே...
    எட்டாம் வகுப்பில் படித்தது/ பிடித்தது..

    அன்னப்பால் காணாத ஏழைகட்கு - நல்ல
    ஆவின்பால் எங்கே கிடைக்கும் அம்மா!
    என்னப்பா! யாம்படும் பாட்டையெல்லாம் - சென்று
    யாரிடம் சொல்லி அழுவோம், அம்மா!..

    முழுப் பாடலும் இணையத்தில் உள்ளது.. கண்டு கொள்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெட் பார்த்து விட்டேன்!

      நண்புகூர் தரும்அன்னப் பால்சிறிதல்
      லாமல்மற்றோர் நற்பால் இல்லை
      பண்புகூர் தருதனயர்க் கெஞ்ஞான்றும்
      பசிதீர்ந்த பாடும் இ்ல்லை
      கண்புகா இவ்வறுமை கண்டுமறை
      யவனும்முளங் கவற்சி இல்லை
      எண்புகாப் புகழவன்றன் செயல்கண்டு
      மனைவிவிருப் பிகத்தல் இல்லை.

      நீக்கு
    2. ஆவின் பால் -- பசுவின் பால்.

      கவிமணி காலத்தில் பாக்கெட் பாலெல்லாம் இருந்ததா என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் போகக் கூடாது. :))

      நீக்கு
  40. அந்த கதையை எழுதியிருப்பது ஜெயகாந்தனா?
    யார் அந்த கவர்ச்சிஸ்ரீ? தெரியவில்லையே?
    //என்னைத் தனியாக விட்டு விட்டு போயிட மாட்டியே?// - மதன் முத்திரை.
    கோலி விளையாடும் டாக்டர்.. ஹாஹா..!

    பதிலளிநீக்கு
  41. நாம் பார்க்காத பொழுது சுழலும் சக்கரங்கள், நாம் பர்த்ததும் டக்கென்று நிறுத்துவது பார்க்க ஸ்வரஸ்யமாக இருக்கிறது. இருந்தாலும் கைபேசியில் ஜோராக சுழலும் சக்கரங்கள் லேப் டாப்பில் ஏனோ சுணங்குகின்றன.

    பதிலளிநீக்கு
  42. //ரேணுகாவா? ரேனுகாவா?///

    ம்ஹூம்ம்ம்ம் ரெம்ம்ம்ப முக்கியம் ஆக்கும்..க்கும்..க்கும்..:))) பெயரில கூடப் பெண் பெயரைத்தான் ஆராட்சி பண்ணீனம் கர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதில்.. என்னவோ ஏதோ என்று படிக்க வருவார்கள் என்கிற எண்ணம்தான்!

      நீக்கு
  43. மாமாவுடன் பேசப்போய்ப் பழைய நினைவுகள் எல்லாம் வந்திட்டுதோ... இன்னும் பத்து வருடத்தால இன்றைய நினைவுகளும் இனிமையாக இருக்கும்.. இப்போ புரியாது:)).. அது மனிசருடைய டிசைனே அப்படித்தான் போலும்..

    ஆனால் இன்றைய சந்ததியினரோடு பேசிப்பாருங்கோ, இவர்கள் பழசை நினைச்சு எதையும் மிஸ் பண்ணுவதாகத் தெரியவில்லை, இன்றுதான் நல்ல ஹப்பி என்பதுபோலவே நடக்கிறார்கள், இதுவும் நல்ல பழக்கம்தான் என நினைப்பதுண்டு நான்... கடந்த காலத்தை நினைத்து என்ன ஆகப்போகிறது::)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். கிடைக்காதது எதுவோ அதை நினைத்து ஏங்குவதுதானே மனித இயல்பு!

      நீக்கு
  44. பொக்கிசத் துணுக்குகளை ரசித்தேன்... நீதி..பசு சூப்பர் கதை:))..

    கண்ணைச் சுழட்டினால் மட்டுமே சுத்துது.. நாங்க சுழட்டாட்டில் அதுவும் சுழலாமல் நிக்குது:))

    பதிலளிநீக்கு
  45. இந்தக் கதையை எழுதியிருப்பது ஜீ.வி.சாரோ?

    பதிலளிநீக்கு
  46. இல்லை, பா.வெ.

    ஜெயகாந்தனும் இல்லை என்பதற்கு அடையாளம்:

    1. அந்த மாதிரி பிராக்கெட்டுக்குள் அடைத்து எழுதும் வழக்கம் ஜேக்கேக்கு கிடையாது.

    2. வசந்தி அவர் வைக்கும் பெயர் அல்ல.

    பதிலளிநீக்கு
  47. சுழலும் சக்கரங்கள் புதுமை. மதன் கார்ட்டூன் எப்போதும் போல் இனிமை. மற்றபடி, “மாமா” பதிவும் உரைநாடல்களும் வேற லெவல்.

    பதிலளிநீக்கு
  48. ஓஹோ ஆதவனா!!!
    நன்றி ஸ்ரீராம். ரவிக் நினைவுக்கு வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா. உடனே பார்த்து விட்டீர்கள் போல..

      நீக்கு
  49. பொக்கிஷ பகிர்வு அருமை.
    மருத்துவர், கோலி விளையாடுவது அருமை, ரசித்தேன்.
    பழைய புத்தகங்களில் விளம்பரங்கள் நன்றாக இருக்கும்.

    சக்கரங்களை மொத்தமாக பார்த்தால் சுத்துகிறது. தனியாக பார்த்தால் சுத்த மாட்டேன் என்கிறது.

    பதிலளிநீக்கு
  50. சுவையான செய்திகள்.

    வடித்த கஞ்சி இப்பவும் இடையிடையே உண்டு.


    பதிலளிநீக்கு
  51. கையில்லாத ரவிக்கையெல்லாம் அந்தக் காலத்தில் ஃபேமஸ்.

    அது சரி, ஆதவனின் இயற்பெயர்?

    பதிலளிநீக்கு
  52. இதற்பெயர் சுந்தரம்.

    அவர் 'என் பெயர் ராமகிருஷ்ணன்' என்ற தனது நாவலுக்காக இன்னொரு பெயரும் தரித்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர் 'என் பெயர் ராமகிருஷ்ணன்' என்ற தனது நாவலுக்காக//

      அது என் பெயர் ராமசேஷன் இல்லையோ?

      நீக்கு
  53. அம்மியில் அரைத்த மசாலாவுடன் விறகடுப்பு சமையல் தனி ருசிதான். நான் பத்தாவது படிக்கும் போது வீட்டுக்கு கேஸ் வந்ததாக நினைவு.

    சமகால நிகழ்வுகளைக் கொண்ட மதன் ஜோக்ஸ்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கிறேன்.

    தேர்ந்தெடுத்துப் பகிர்ந்திருக்கும் அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!