முதலில் மூன்றாம் சுழிக்குப் பதில் ; அதனுடன் நெல்லைக்கு மட்டுமே தெரிந்த ஒரு நக்ஷத்திரம்
முன் பக்கப்பையில் இருப்பது பொடுதலைக் கீரை சமைக்கலாம் என்கிறார்கள் ..சமைத்ததில்லை . ஆனால் தைலம் காய்ச்சியிருக்கிறோம்
பாலக் கீரை வாரம் ஒருமுறை அறுவடை
பொன்னாங்கண்ணி நான்கைந்து தொட்டிகளில் இடம் பெற்றிருக்கும். சமையலிலும் - -
கீரை சென்டர்
வெள்ளைப்பூவுடன் இருப்பது thistle . ஒரு ஆறு மாதத்தில் பார்க்குமிடமெல்லாம் thistle இருத்தி..
மணித்தக்காளி .. நிறையத்தொட்டிகளில்
புளிச்சக்கீரை கோங்குரா
மீண்டும் பாலக்
மின்ட்
நாரத்தை .. இந்த வருடம் வெறும் இலைதான் வேப்பிலைக்கட்டி ஆயிற்று
ஒரு bonsai experiment .
இவ்வளவையும் நீங்க பார்த்துட்டீங்க, இவற்றைப் பார்க்க வந்த ஒருவரையும் கீழே உள்ள காணொளியில் பாருங்கள். இரண்டு நிமிடப் படம்தான்!
= = = =
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க
இறைவன் அருள வேண்டும்.
வேண்டுவோம்.
நீக்குசிட்டுக் குருவி காணொளி அருமை.
பதிலளிநீக்குஎன்ன சுறுசுறுப்பாக பறந்து அமர்ந்து மீண்டும் பறந்து...
நன்றி.
நீக்குவித விதமானக் கீரை வகைகள்
பதிலளிநீக்குபார்க்கவே நன்றாக இருக்கின்றன.
கீரை வளர்த்து அதை சமைத்தும் சாப்பிடப்
பொறுமையும் ஆர்வமும் வேண்டும்.
பிரண்டை செழிப்பாக இருக்கிறது.
வெந்தயக் கீரையைத் தேடினேன்.
முதலில் சொன்ன கீரை வகை தெரியவில்லை.
பார்த்ததும் இல்லை.
மற்றவை கொஞ்சம் பழக்கம்.
பாலக் பசுமை மிக அருமை.
நன்றி.
நீக்குவல்லாரை, பொன்னாங்கண்ணி, நாரத்தை புதினா
பதிலளிநீக்குஎல்லாமே இருக்கும் அசத்தலான கீரைப் பண்ணை.
பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குநல்லருள் சூழ்க நாடெங்கும்...
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்...
அன்பின் வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம்.
நீக்குகீரை வகைகள் அனைத்தையும் பார்க்கபார்க்க ஆசையாக இருக்கிறது! பிரண்டையும் பாலக்கும் அத்தனை பசுமை! காலை வேளையில் இங்கு வந்து கொஞ்ச நேரம் நின்றால் போதும், மனசும் பசுமையாக மாறி விடும்!
பதிலளிநீக்குஆம் உண்மைதான்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சியான கீரை வகைகள் பார்ப்பதற்கு அருமையாக இருக்கின்றன. பிரண்டை கொடியும், பசலையும் கறிவேப்பிலையும் அவ்வளவு அழகு.
காணொளி நன்றாக உள்ளது. சிட்டுக்குருவியாரும் எதைப்பறிப்பது என்ற சிந்தனையில் பறந்து பறந்து தேடுவது அருமையாய் உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குஅருமை ஜி
பதிலளிநீக்குபாலக் என்பதே கீரைதானே ?
அப்படியா!
நீக்குதோட்டம் அருமை...
பதிலளிநீக்குபாட்டுடன் காணொளி ஆகா...!
நன்றி.
நீக்குஅருமையான காணொளி. ஆனால் அது சிட்டுக்குருவி இல்லைனு நினைக்கிறேன். முக்கியமாய் வாலில் வேறுபாடு. பறக்கும் வேகம். தேன் சிட்டில் ஒரு வகைச் சின்னக் குருவி சைசில் இருக்கும். கிட்டப் பார்த்தால் சிட்டுக்குருவி இல்லைனு தெரியும். அந்த வகையோனு நினைக்கிறேன். பறந்து பறந்து பூக்களில் தேனைத் தேடுகிறதோ என்றும் தோன்றியது. கழுத்தில் கொஞ்சம் வண்ணம் வேறுபாடு இருக்கும்.
பதிலளிநீக்குஅது சிட்டுக்குருவிதான்.
நீக்குபசுமையான கீரைப்பண்ணை அருமை. எங்களுக்கு என்னமோ கீரையே வந்ததில்லை. போட்டால் 2 நாட்களிலேயே பக்கத்து வீட்டுக் கோழி வந்து சீய்த்துவிட்டுப் போய்விடும். :( ஆனால் பிரண்டை, சித்தரத்தை எல்லாம் போட்டிருக்கோம். சித்தரத்தை இலையோடு தூதுவளை, துளசி போட்டுக் கஷாயம், ரசம் வைப்பேன். வல்லாரை, பொன்னாங்கண்ணி எல்லாம் போட்டதில்லை. கொத்துமல்லி, வெந்தயம் போட்டாலே மறுநாள் ஒன்றுமே இருக்காது! கோழி வந்து கொத்திவிடும். ஆனால் பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வல்லாரை எல்லாம் வாசலில் வரும். வாங்கிப் பண்ணுவேன். வல்லாரை துவையலுக்கு நன்றாக இருக்கும். பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி இருவகைக்கீரைகளும் சமைச்சிருக்கேன். இங்கே அரைக்கீரை, முளைக்கீரை, மணத்தக்காளிக்கீரை தவிர்த்து வேறே கிடைப்பதில்லை. எப்போவானும் புளிச்ச கீரை வாங்குவோம். பருப்புக்கீரை பிடிப்பதில்லை. முருங்கைக்கீரை தினமும் உண்டு.(விரத நாட்கள் தவிர்த்து)
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி.
நீக்குகூடுதல் தகவல், பொடுதலையும் துவையல் அரைக்கலாம். மலச்சிக்கல், இடுப்புப் பிடிப்பு போன்றவைக்கும் நல்லது என்பார்கள். ஆனால் பத்தியம் இருக்கணும்னு நினைக்கிறேன்.
நீக்குமதுரையிலே "மண"த்தக்காளியை மிளகு தக்காளி என்பார்கள். இங்கே மணித்தக்காளி எனச் சொல்லப்பட்டிருக்கு. என் புக்ககத்தில் மரத்தங்கிளி அல்லது மரத்தக்கிளி என்பார்கள். மணத்தக்காளிக்கீரையைப் பொடியாக நறுக்கி வேகவிட்டுப் பாசிப்பருப்புப் போட்டுத் தேங்காய், மி.வத்தல், சீரகம் வைத்து அரைத்து மசித்தால் அபார ருசி!
பதிலளிநீக்குஞாயிற்றுக் கிழமையில் திங்கள் வந்து கலந்துவிட்டதே!
நீக்குஇப்போத் தான் நினைச்சேன். நம்மவர் அஞ்சறைப் பெட்டியை அழுத்தம் திருத்தமாக
நீக்கு"அஞ்சலை"ப்பெட்டி என்பார். இப்போவும் என்னிடம் "அஞ்சலை"ப் பெட்டியில் மிளகு இருக்கானு கேட்டார். அப்போ இந்த மணித்தக்காளி/மிளகு தக்காளி/மணத்தக்காளியை நினைச்சேன். :))))
உளுத்தம்பருப்பு, மிளகு, மி.வத்தல், தேங்காய் வறுத்து அரைத்துப் பொரிச்ச குழம்பாகவும் பண்ணலாம். நன்றாக இருக்கும். நாளை "திங்க"றதுக்கு இன்னிக்கே பிள்ளையார் சுழி போட்டுட்டேன். :)
பதிலளிநீக்கு:)))
நீக்குஅருமையான பராமரிப்பில் கீரை சென்டர்! தத்தித் தாவும் குருவி அழகு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகீரை தோட்டம் அழகு. சின்னச்சிட்டும் கவர்கிறது.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டிலும் கீரை தோட்டம் உள்ளது.
படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்க.
நீக்குஉங்கள் வீட்டுத் தோட்டம் படங்கள் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதோட்டத்திற்கு வந்த விருந்தாளி தேன் சிட்டு.
மிகவும் சுறு சுறுப்பாக இருக்கும் படம் எடுப்பது கடினம், வீடியோதான் சரி.
பாட்டு பொருத்தம். எடுத்த விதம் அருமை.
ஹிஹிஹி, நானும் அதே சொன்னேன். தேன் சிட்டுத் தான் இத்தனை வேகமாய்ப் பறக்கும். அடி பாகம் மஞ்சளாகவும் மேலே சிட்டுக்குருவி போலவும் இருக்கும் தேன்சிட்டுக்கள் அம்பத்தூர் வீட்டில் குடித்தனமே நடத்தீன. இத்தனூண்டுக்கு இருந்துண்டு அது குரலெடுத்துக் கத்தினால்! இஃகி,இஃகி,இஃகி!
நீக்குதேன்சிட்டில் நிறைய வகை இருக்கிறது. மாயவரத்தில் எங்கள் தோட்டத்திற்கு வரும்
பதிலளிநீக்குதிருவெண்காட்டில் எங்கள் வீட்டுக் கொடியில் கூடு கட்டியது, அதன் குஞ்சு கீழே விழுந்தது அதை எடுத்து டிரான்சிஸ்டர் பெட்டியில் வளர்த்தது எல்லாம் நான் பதிவு செய்து இருக்கிறேன். அடிபாகம் மஞ்சள், மேல் பகுதி ஆலிவ் பச்சை கலரில் குட்டியாக இருக்கும் தன் அலகு கூர்மையாக நீண்டு இருக்கும். மலர்களில் தேன் எடுக்க வசதியாக
தகவல்களுக்கு நன்றி.
நீக்குஅழகான படங்களுடன் அருமையான பதிவு.. ஆனாலும் கீரைப் பதிவு என்றதும் கருத்துக்கள் முட்டி மோதிக் கொண்டு குவிய வில்லை...
பதிலளிநீக்குதோட்டத்தைப் போல காற்றோட்டமாக இருக்கின்றது..
நாளைக்கு சமையலறை நன்றாகவே
களை கட்டும்...
என்று நம்புவோம்!
நீக்குபடங்கள், காணொளி என அனைத்தும் சிறப்பு. வீட்டிலே தோட்டம் அமைத்து சிறப்பாக பராமரிப்பது கண்டு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் காணொலி
பதிலளிநீக்குஅருமை
அருமை