பானுமதி வெங்கடேஸ்வரன் :
ஆலத்தூர் சகோதரர்கள், B.V. ராமன், B.V.லக்ஷ்மணன், திருச்சூர் சகோதரர்கள், ராதா ஜெயலட்சுமி, பாம்பே சிஸ்டர்ஸ் சி.சரோஜா, சி.லலிதா, ப்ரியா சகோதரிகள், ரஞ்சனி காயத்ரி இரட்டையர்களைப் பற்றி இரண்டிரண்டு வரிகள் பாடவும் சாரி எழுதவும்.
# ஆலத்தூர் சகோதரர்களே அல்ல. ஒருவர் தெலுங்கு மற்றவர் தமிழ். பிராசீன சுத்த சங்கீதம். ஒருவர் போன பின் மற்றவர் சோபிக்கவில்லை.
BV ராமன் லட்சுமணன் அசல் இரட்டையர். மன்னுபுகழ் கோசலை பாசுரம் மாஸ்டர் பீஸ்.
திருச்சூர் ப்ரோஸ் அப்பா மிருதங்க வித்வான். புத்திசாலித்தனமான பாட்டு. நன்கு எடுபடும்.
ராதா ஜயலட்சுமி. ஒருவர் அலட்டாமல் பாடுவதில் வல்லவர். கச்சேரி எப்பவும் பாஸ்..
பாம்பே சிஸ்டர்ஸ்
சங்கீதக் கலை மற்றும் இளம் கலைஞர்கள் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் முனைபவர்கள்.
ப்ரியா ஸிஸ்டர்ஸ்
பாங்காகப் பங்கீடு செய்து கொண்டு அருமையாகப் பாடுவார்கள். அன்னமாச்சார்யா சங்கீர்த்தனம் பாடுவதில் கில்லாடிகள்.
ரஞ்சனி காயத்ரி
ஜோடியாக பாடுபவர்களில் இன்று டாப். வயலினில் தொடங்கி வாய்ப்பாட்டில் பலமாக நிற்பவர்கள். ஒருவரை மற்றவர் காம்ப்ளிமெண்ட் செய்து கொண்டு சிறப்பாக இசை அளிப்பதில் நிபுணிகள்.
( யூ டியூபில் nadabhrnga தேடி பழம் பெரும் வித்வான்களின் அரிய பதிவுகளைக் கேளுங்கள்.)
$ அக்கரை சகோதரிகளை என் விட்டுவிட்டீர்கள்?
பாலகுமாரன், காரைக்குடி மணி, சஞ்சய் சுப்பிரமணியம், பிரகாஷ் ராஜ் உருவ ஒற்றுமையை வியந்திருக்கிறீர்களா?
# தாடி மட்டுமே ஒற்றுமை முதல் இருவர்.
இரண்டாவது ஜோடி எந்த ஒற்றுமை இருக்கிறது என்று தெரியவில்லை.
&
காரைக்குடி மணி அவர்கள் முகத்தில் எப்பொழுதுமே ஒரு புன்னகை இருக்கும். பா கு முகம் அப்படி இல்லை. மற்றபடி குங்குமப்பொட்டு + தாடி மட்டுமே ஒற்றுமை.
ச சு இப்போ எல்லாம் தாடி மீசையுடன் காணப்படுகிறார். பிரகாஷ் ராஜ் பரந்த சதுர முகம். ச சு முக அமைப்பு அப்படி இல்லை.நெல்லைத்தமிழன்:
1. ஒரு இனம் தெரியாத எதிர்பார்ப்பு இல்லை என்றால், யாரேனும் திருமணம் செய்துகொள்ளத் துணிவார்களா?
$ துணியமாட்டார்கள்.
# திருமணம் குறித்த ஆவல் உயிரணுக்களில் பதிக்கப் பட்டுள்ளதாகும்.
2. வாழ்க்கையில் பிரம்மச்சாரியாகவே (பேச்சலராகவே.. இரண்டுக்கும் அர்த்தம் வேறுபடுதோ?) இருந்துவிட்டால், பெண்ணோ ஆணோ, அதில் ஏதேனும் கஷ்டம் இருக்கிறதா?
$ கடைசி காலத்தில் முதியோர் இல்லத்தில் தங்கும் அளவுக்காவது சம்பாதித்திருக்க வேண்டும்.
# திருமணத்தைத் தவிர்த்து ஒற்றையாக இருத்தல் விதிவிலக்கலாக மட்டுமே இருக்கும். எனவே அவ்வாறு இருப்போர் சங்கடப்பட வாய்ப்பில்லை.
& ஆண்களில் திருமணம் ஆகாதவர்கள் : பேச்சுலர்
திருமணம் ஆனவர்கள் பேச்சு(இ)லர்.
3. எப்போது நம் துணை நமக்கு மிகவும் அவசியம் என்ற எண்ணம் வரும்? (இருபாலாருக்கும்)
$ உங்கள் பலவீனத்தைப் பொருத்தது.
# பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும்போது துணையின் மதிப்பு தெரிய வரும்.
4. ஒரு வார்த்தை, சொல்லப்படும் விதத்தில் பல அர்த்தங்களைக் கொடுக்கும். எழுத்தில் அதை எப்படி இனம் காண்பது? படிப்பவர் அப்போது கொண்டிருக்கும் மூடிலா?
$ எழுத்தில் வாசனையைக் கொண்டுவரும் பொழுது...
# முன்னுரை முகவுரையான விளக்கமும் சித்தரிப்பும் ஓரளவு உதவும்.
5. மனைவிக்கு நீங்கள் கொடுத்த முதல் பரிசு என்ன?
$ இப்படி ஒரு தமிழர் வந்து கேட்பார் என்றால் .. இருந்தாலும் முதல் பரிசு ஆறுதல் பரிசுதான்.. ஊரிலிருந்தும், பெற்றோர்களிடமிருந்தும் தள்ளிவந்திருக்கிறோம் ..பயப்படாதே என்ற ஆறுதல்தான்.
# நினைவில்லை. புத்தாடையாக இருக்கலாம்.
& 5 கிராம் தங்கக் காசு.
6. அதிவேக ரயில் என்றெல்லாம் நாம் வேகமாகச் செல்வதை ஒரு சாதனையாக எடுத்துக்கொள்கிறோமே.. அதனால் விளைந்த பயன் என்ன? ஒரு பாசஞ்சர் இரயில் பிரயாணத்துக்கு உறை போடக் காணுமா?
# அதிவேகப் பயணம் சௌகரியம்தான். அசதி கம்மி. நேரம் மிச்சம். எல்லா பாசஞ்சர் பயணமும் சுவாரசியமானவை அல்ல.
7. வாழ்க்கையை ரொம்ப ஸ்பீடாக அணுகுவதில் என்ன ஆனந்தம் இருக்கு? மெதுவாக அனுபவிப்பதை இழக்கிறோம் இல்லையா?
# வேகமும் விறுவிறுப்பும் அவ்வப்போது ரசிக்கத் தக்கவைதான்.
8. எந்தப் பிராணியின் குட்டியின் கண்களைப் பார்த்திருக்கிறீர்கள்? எல்லாக் குழந்தைகளின் கண்களும் (விலங்கு, ஊர்வன, பறப்பன எல்லாம்தான்) நிர்மலமாக இருப்பதன் காரணம் என்ன?
# எண்ணங்கள் மாசு படுத்தாதவரை நிர்மலமாகத்தானே இருக்க வேண்டும் ?
& எனக்குப் பிடித்த கண்கள் : மான் குட்டி
= = = = =
கேள்விகள் கேட்டவர்களுக்கு நன்றி. மேலும் நிறையக் கேளுங்கள்.
= = = = =
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் என்றும் ஆரோக்கியத்தோடு
இருக்க இறைவன் அருள வேண்டும்.
காலை வணக்கம் அவ்வாறே வேண்டுவோம்.
நீக்குஎல்லாக் கேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குகேள்வி கேட்கத்தான் தெரியும் பழைய வசனம்.
கேள்வி கேட்கவும் ஞானம் வேண்டும்.
முதல் பதிலில் மாம்பலம் சகோதரிகள்
விட்டுப் போயிருக்கிறது. பி வி ராமன் லக்ஷ்மணன்
சகோதரர்களின் விசிறி நான். அதே மன்னு புகழ்.
வானொலியின் பங்கு எத்தனை முக்கியம்.கேட்கக் கொடுத்து வைத்தவர்கள் நாம்.
வானொலியின் பங்கு எத்தனை முக்கியம். ஆம்.
நீக்குவாழ்வில் துணையை நிறைய நேரங்களில்
பதிலளிநீக்குநம்பி இருக்கிறோம்.
பலவீனம் இல்லை. அன்பும் நேசமும் தான். நம்மை நன்றாக
அறிந்தவர்கள் கணவரோ மனைவியோ
மட்டுமே..
பாச்சிலர் ,மனைவி இழந்தவர் எல்லாமே ஏதோ ஒரு சமயம்
துணைகளை எதிர்பார்ப்பார்கள்.
காலை வணக்கம் வல்லிம்மா.
நீக்குஒருவரை முழுமையாக அறிவது சாத்தியமா? அது ஆயுட் காலத்திலும் முடியாது என்பதே என் எண்ணம்.
உண்மை தான் முரளிமா. அவர் என்னைப் புரிந்து வைத்திருந்தார். நான் அவரைப்
நீக்குபுரிந்து கொண்டது போதாது. அவர் என்னை முழுமையாகப்
புரிந்து கொண்டிருந்தார்.
மானின் கண்களும், கன்றுக்குட்டியின் கண்களும்
பதிலளிநீக்குஇனிமை.
ஆம், உண்மை.
நீக்குசில காளை,மற்றும் பசு மாடுகளுக்கும் கண்கள் அழகாக இருக்கும்.
நீக்குஸ்பீட் வண்டிகள் வேலைக்குச் செல்பவர்களுக்கு, தொழிலதிபர்களுக்கு
பதிலளிநீக்குசரி. வாழ்க்கையின் நிதானத்தை விரும்புகிறவர்களுக்கு
எக்ஸ்ப்ரஸ்(பழைய காலம்) போதும். பாசஞ்சர் போர்:)
நீங்கள் சொல்வது சரிதான்.
நீக்குஅவசியமான கேள்விகள், பதில்களும் அருமை ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..
அன்பின் வணக்கம். வாழ்க வளமுடன்.
நீக்குஇன்றைய பதிவின் கேள்விகளும் பதில்களும் அருமை..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குகேள்வி பதில்கள் அருமை...
பதிலளிநீக்குஅன்புள்ள மான்விழியே...
நன்றி.
நீக்குகேள்வி பதில்கள் நன்று.
பதிலளிநீக்குதிருமணம் குறித்த கேள்விகளுக்கான பதில்கள் - :)
மற்றவையும் ஸ்வாரஸ்யம்.
மிக்க நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாங்க.
நீக்குகேள்விகளும், பதில்களும் அருமை.
பதிலளிநீக்குடிசம்பர் சீஸன் வந்து விட்டது போல் இருந்தது. இசை கச்சேரி பிரியர்கள் கேள்விகளுக்கு அருமையாக பதில் சொல்லி இருக்கிறார்கள்.
//எப்போது நம் துணை நமக்கு மிகவும் அவசியம் என்ற எண்ணம் வரும்? (இருபாலாருக்கும்)//
வாழ்க்கை துணை நலம் என்பது போல் கை பிடித்த நாள் முதல் வாழ்வின் இறுதி கட்டம் வரை வாழ்க்கை துணை நலம் வேண்டும். அதுவும் வயது ஆகும் போதுதான் ஒருவருக்கு ஒருவர் மிகவும் அவசியம்.
ஆம் உண்மைதான்.
நீக்குகன்றுகுட்டியின் கண் அழகு. மான் கண்கள் கொஞ்சம் மருட்சியாக இருக்கும்.
பதிலளிநீக்குமணிப்புறாவின் கண் அழகு. புறாவின் கண்ணும் அழகு.
அப்படியா! தகவல்களுக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குபானுமதியின் முதல் கேள்வியும் அதற்கான பதிலும் சிறப்பு. எனக்கும் பி.வி.ராமன், பி.வி. லக்ஷ்மணன் பாடல்கள் பிடிக்கும். அதிலும் நீங்கல்லாம் ரசிக்கும் அதே மன்னு புகழ். ப்ரியா சகோதரிகளில் சின்னவர் எங்க பெண்ணோடு க்வீன் மேரீஸில் படித்தவர். வேறே க்ரூப். அப்போதே பிரபலம் என்பாள் எங்க பெண்.
பதிலளிநீக்குஒவ்வொரு வாரமும் சிறந்த கேள்வி கேட்பவர்களுக்கு பரிசு என்று துக்ளக், கல்கி,மங்கையர் மலர் போன்ற பத்திரிகைகளில் தருவார்கள். அது போல் எ.பி.யிலும் தரலாம். தர்ம் உயர வாய்ப்பு உண்டு.
நீக்குஏற்கனவே மின்னூல் சிறப்பிதழுக்குக் கொடுத்த பரிசே இன்னும் வந்து சேரலை. இதுல வாரம் ஒரு பரிசா? ஹா ஹா ஹா
நீக்குஅதானே!
நீக்குபேச்சிலர்/பாச்சிலர் வேறே பிரமசாரிகள் வேறேயா? எங்க குடும்பத்திலே அப்பா வழியிலே ஒவ்வொரு தலைமுறைக்கும் யாரேனும் ஒருத்தர் திருமணம் ஆகாமல் பிரமசாரியாக இருந்து வருகின்றனர். என் அப்பாவோடு கூடப் பிறந்த பெரியப்பா ஒருத்தர் கடைசிவரை திருமணமே செய்துக்கலை. ஸ்டேட் வங்கியில் உயர் பதவியில் இருந்து பணி ஓய்வு பெற்றார். நாங்கல்லாம் இன்னிக்குச் சாப்பிடும் ஒவ்வொரு கவளமும் அவர் போட்ட பிச்சை என்றே சொல்லலாம். அதற்கடுத்த எங்க தலைமுறையிலே பெரிய பெரியப்பாவின் மகன் ஒருத்தர்/இவரும் வங்கிப் பணி தான்! கடைசி வரை திருமணமே செய்துக்காமல் சகோதரிக்காகவே வாழ்ந்தார்.
பதிலளிநீக்குஓ அப்படியா!
நீக்குஅதனாலேயே தம்பியோட பெரிய பிள்ளைக்கு இப்போத் திருமணம் ஆகாதது எல்லோருக்கும் அதிகக் கவலையைத் தருகிறது! எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்றிருக்கோம். :(
பதிலளிநீக்குவிரைவில் நல்லது நடக்க பிரார்த்திப்போம்.
நீக்குநானும் மாம்பலம் சகோதரிகளையும், அக்கரை சகோதரிகளையும் சொல்லலையேனு நினைச்சேன். இங்கே குறிப்பிட்டு விட்டீர்கள்.
பதிலளிநீக்குபாலகுமாரன் எங்கே! காரைக்குடி மணி எங்கே! பாலகுமாரனுக்குக் கடுகடுத்த பார்வை. மணிக்கோ நேர்மாறான பார்வை. அதே போல் பிரகாஷ் ராஜும்/சஞ்சயும் சுத்தமாய் மாறுபட்ட முகங்களைக் கொண்டவர்களே!
ஆம் அதே!
நீக்குஎல்லா ஆ"சிரி"யர்களும் ஆண்களாக இருப்பதால் நெல்லை மனைவிக்குக் கொடுத்த பரிசு என்னனு கேட்டிருக்கார். :)))) எனக்கெல்லாம் நம்மவர் ஒண்ணுமே கொடுக்கலை. சொல்லப் போனால் கல்யாணம் ஆகி ஒரே வாரத்தில் என்னைக் கிராமத்திலேயே விட்டுவிட்டு இனிமேல் எப்போ வருவேன் என்பதே தெரியாது. என்று சொன்னார். தலை தீபாவளிக்காவது வருவீங்களானு கேட்டதுக்கு என் பெரிய நாத்தனார் அதுக்கெல்லாம் செலவு செய்து கொண்டு வரமுடியுமா? அவன் பாட்டுக்கு அங்கே கொண்டாடிப்பான். நீ இங்கே இருந்துக்கோ என்றார். ஆனால் அவர் புனே திரும்பிச் சென்ற உடனேயே சென்னைக்கு மாற்றல் ஆகி இருந்தது. பத்தே நாட்களில் திரும்ப வந்து என்னையும் அழைத்துக் கொண்டு சென்னை/வில்லிவாக்கத்தில் முதலிலும்/பின்னர் அம்பத்தூரிலும் குடித்தனம் வைச்சாச்சு. எல்லாமே கிடுகிடு தான். நினைச்சே பார்க்க முடியாத வேகம். தலை தீபாவளிக்கும் மதுரைக்குப் போனோம். அந்தக் கதையை ஏற்கெனவே எழுதி இருக்கேன். ஆகவே நம்மவர் எனக்குக் கொடுத்த பெரிய பரிசு என்றால் இது தான். கல்யாணம் ஆகி ஒரு மாசத்திலேயே தனிக்குடித்தனமும் வைச்சது தான். எல்லாமே அசுர வேகம். திருமணம் நிச்சயமாகிப் பதினைந்தே நாட்களில் கல்யாணம். அதன் பின்னர் அந்த மாசத்துக்குள்ளேயே குடித்தனமும்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி
நீக்குநலமா? தற்சமயம் உங்கள் கால்வலி எப்படி உள்ளது? வீக்கம் வலி குறைந்து வருகிறதா?
உங்கள் கணவர் உங்களிருவருக்கும் திருமணம் ஆனவுடனே உங்களுக்கு பரிசாக தந்த நல்ல சுவாரஸ்யமான மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்துள்ளீர்கள். இதை விட வேறு என்ன பரிசை அப்போதுள்ள கால பெண்கள் எதிர்பார்ப்பார்கள்... நினைவுகள் அருமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//இதை விட வேறு என்ன பரிசை அப்போதுள்ள கால பெண்கள் எதிர்பார்ப்பார்கள்...// - அந்தக் காலத்திலேயே, தனிக்குடித்தனம் என்பது பெண்ணுக்குத் தரும் மிகப் பெரிய பரிசா? அப்போ இந்தக் காலத்துல என்ன எதிர்பார்ப்பாங்களோ? ஹாஹா
நீக்குநன்றி கமலா. ஒரு பெண்ணால் தான் இன்னொரு பெண்ணின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். ஆகவே நீங்கள் சொல்லி இருப்பது எனக்கு மன நிறைவைத் தந்தது. கால் வலி தேவலை என்றாலும் பாதங்களில் வீக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது. யூரியா, கிரியாட்டினைன் எல்லாமும் பார்த்தாச்சு. எல்லாமும் நார்மல். ஆனால் நரம்புகள் புடைத்துக் கொண்டு வீக்கத்தில் தெரிவதால் இது நரம்புப் பிரச்னை/தானாகவே சரியாகணும் என நினைக்கிறோம். அந்த இடத்தைத் தொட்டால் நரம்பு துடிப்பதும் தெரிகிறது.
நீக்கு//அந்தக் காலத்திலேயே, தனிக்குடித்தனம் என்பது பெண்ணுக்குத் தரும் மிகப் பெரிய பரிசா? // உங்களுடைய ஆணாதிக்க மனப்பான்மையோடு இதைப் பார்க்கக் கூடாது நெல்லை. ஒரு பதினெட்டு/பத்தொன்பது வயதுப் பெண்! புக்ககமோ முழுக்க முழுக்க கிராமம். கழிவறை வசதி இல்லை. கொல்லைப் பக்கம் போகலாம் எனில் எருக்குழியில் ஆட்கள் வேலை செய்வார்கள். மாட்டுத் தொழுவத்திற்கும் போக முடியாது. அங்கேயும் மாமனார் வருவதும் போவதுமாக இருப்பார். எதிரே இருக்கும் தோட்ட வீட்டுக்குப் போகலாம் எனில் தெருவுக்கு வந்து எதிர்ப்பக்கம் போகணும். அக்கம்பக்கம் வீடுகளில் எல்லாம் பார்ப்பார்கள். அக்ரஹாரத்தில் அப்போதெல்லாம் புதிதாய் மணமான பெண் வெளியே எட்டிக் கூடப் பார்க்க முடியாது. கூட யாரானும் வந்தால் அவங்க புதுப்பெண்ணை மறைத்தாற்போல் வருவார்கள். அப்போப் போகலாம். ஆனால் அந்தச் சமயம் நமக்கு இயற்கையின் அழைப்பு இருக்கணும். உதவி செய்யணும். சட்டுனு எல்லாம் உட்கார்ந்து விட முடியாது. மாமியார் பார்த்து உட்கார்ந்துக்கோனு சொல்லும் வரை நிற்கணும். இத்தனை கட்டுப்பாடுகளுடன் கணவன் வீட்டிலேயே இருந்தாலும் எப்போவானும் பார்க்கலாம் என்றிருந்ததும் இல்லை என்றாகி ஊருக்குப் போன பின்னர் தன்னந்தனியே பெற்றோர்/உற்றார்/உறவினர்/சகோதரர்கள் ஆகியோரை விட்டு விட்டுத் தனியே இருக்கும் பெண்ணைப் பற்றிக் கொஞ்சம் யோசியுங்கள். அதுவும் அவர் எப்போ வருவார்னு யாருக்கும் தெரியாது. வீட்டிலோ தீபாவளிக்குக் கூடப் பிறந்த வீட்டிற்கெல்லாம் போக முடியாது என்னும் கட்டுப்பாடுகள். மனதில் கலக்கமுடன் வாழ்ந்து கொண்டிருந்த பெண்ணுக்கு விடுதலை கொடுத்தது போல் அந்தக் கடிதம். சென்னைக்கு மாற்றல் ஆகிவிட்டது. உடனே வந்து குடித்தனம் வைக்கப் போறேன். என்பது தான். இதில் என்ன தப்புக் கண்டீர்கள்? அவர் வேலை/அலுவலகம் சென்னையில்/ஆவடியில் இருந்ததால் அங்கே குடித்தனம். அவர் சென்னையிலும்/நான் கிராமத்திலும் இருந்திருக்க வேண்டும் என்கிறீர்களா? அப்போதிருந்த நிலைமையில் பெரியவங்க சென்னைக் குடித்தனத்துக்கு ஒத்துக்கொண்டதே பெரிய விஷயமாக இருந்தது. கூடவே அவங்க யாரானும் இருந்து கொண்டே இருப்பாங்க. முதலில் மாமியாரும்/கடைசி மைத்துனரும்/ பின்னர் மாமனாரும்/கடைசி நாத்தனாரும் என மாறி மாறி வந்து இருந்தார்கள். நீங்கள் கற்பனை செய்து கொள்கிறாப்போல் எல்லாம் இல்லை. நகரமாக இருந்ததால் குறைந்த பட்சம் கழிவறைக்காவது நினைச்சப்போப் போக முடியும் என்பதே அப்போது எனக்குப் பெரிய ஆறுதல். ஒவ்வொரு முறை கிராமத்திற்குப் போகும்போதெல்லாம் நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும். அதுவும் தனியாகப் போனால் கேட்கவே வேண்டாம். எனக்குப் பல வருஷங்கள் இதனால் கும்பகோணம் போவதென்றாலே அலர்ஜியாக இருக்கும். :((((( எல்லோரும் கிராமத்தை விட்டு வந்தும் கூடக் கும்பகோணம் இரண்டாம் பட்சம் தான்.
நீக்குபின்னாட்களில் பெரிய மைத்துனர்/கடைசி நாத்தனாரோடு எங்களோடவே நாங்க ராஜஸ்தான் மாற்றல் ஆகிப் போகும் வரை இருந்தாங்க.
நீக்குYour point is valid GS madam. (இந்த backgroundஐ நான் யோசிக்கலை) நானும் ஆற்றங்கரையை நோக்கி நடையைக் கட்டினவன். இப்போது நினைத்தால் ஆச்சர்யமும் சிரிப்புமாக இருக்கு.
நீக்குஇத்தனை சிரமமா !!
நீக்குஅப்பாதுரை, கீழத்தஞ்சாவூரிலும், திருக்கருகாவூரிலும் இருந்திருப்பீங்களே! ஆனாலும் பெண்களின் சிரமங்கள் தெரிய வாய்ப்பில்லை. அங்கெல்லாம் இதைப் பற்றிப் பேசினால் கூடப் பெரிய குற்றம். என்ன தைரியம்! என்பார்கள். நான் சென்னை போனதும் என் அம்மாவிடம் இதைச் சொல்லி வருத்தப்பட்டதை மாமியார் கேட்டுவிட்டுக் கடுமையாகக் கடிந்து கொண்டார். ஆகவே சொல்லிக்கவும் முடியாத நிலைமை! :)))))
நீக்குகீதா மேடம் நிலைமை மிகவும் யோசிக்க வைத்தது.
நீக்குஇது ஒரு துளிதான்! :)))))
நீக்குஓ !
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. அனைத்தையும் ரசித்தேன். கேள்வி கேட்டவர்களுக்கும் பதில்கள் சொன்ன அனைவருக்கும் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குஆலத்தூர் சகோதரர்கள் என்று அறியப்பட்டாலும் அவர்கள் சகோதரர்கள் கிடையாது என்பதும், அவர்களில் ஒருவர் தமிழர்,மற்றவர் தெலுங்கர் என்பதும் தெரியும். திருச்சிக்காரர்கள். அவர்களில் ஒருவரின்(தெலுங்கு) நெருங்கிய உறவினர் பெண் மஸ்கட்டில் இருந்தார். ராமாபுரத்தில் கூட ஒருவர் உண்டு.
பதிலளிநீக்குநான் ஆலத்தூர் ப்ரதர்ஸ் கச்சேரி கேட்டதில்லை. அவர்கள் பாடும் பொழுது தலையை அதிகம் ஆட்டுவார்களாம், அதனால் எங்களுக்குத் தெரிந்த ஒருவர் ரேடியோவில் அவர்கள் கச்சேரி ஒலிபரப்பானால் கச்சேரி முடிந்ததும் "அடுத்த நிகழ்ச்சி கச்சேரியில் இருவரும் மண்டையை ஆட்டியதில் மோதிக்கொண்ட மண்டைகள் உடைந்ததால் இருவரும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்" என்று அறிவிப்பு வரும்" என்பாராம்.
ஹா ஹா ஹா ஹா:)))
நீக்குபாலகுமாரனிடம்,"நீங்கள் காரைக்குடி மணிதானே?" என்றும், கா.மணியிடம்,"பாலகுமாரனா?" என்றும் சிலர் கேட்டிருப்பதாக முன்னவர் கூறியிருக்கிறார்.
பதிலளிநீக்குஸ்டோரி டெல் ஆப் ஒன்றின் விளம்பரத்தில் ஷேவ் செய்யப்படாத முகத்தோடு இருக்கும் ப்ரகாஷ் ராஜையும், யூ ட்யூபில் அதே போல் ஷேவ் செய்யாத முகத்தோடு சஞ்ஜெய்யும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிறார்கள். நீங்கள் வேண்டுமென்றே முக ஒற்றுமை தெரியாத படங்களாக போட்டு உங்கள் கட்சியை பலப்படுத்தியிருகிறீர்கள்.
பாலகுமாரனை எங்கள் நெருங்கிய வட்டாரரத்தில் பாலா என்றே அழைத்து
நீக்குபழகியிருக்கிறோம்.
இந்த வட்டாரத்தில் அவரை, பாகு என்று விளித்து அவலை நினைத்து உரலை இடிக்கிற கதையாய் நகையாடல் நடக்கிறது.
முக சாயல் கு,ம, சு,ரா இரட்டையர்களிடம் ஒத்திருப்பது ஆச்சரியம். இத்தனை நாள் கவனித்ததே இல்லை.
நீக்குகு ம ? சு ரா ? யாருங்க இவங்க எல்லாம்?
நீக்குஹாஹாஹா, நானும் அதான் யோசிச்சேன். :)
நீக்குரசித்தேன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு