இன்றைய வெள்ளி ஒளிபரப்பில் முதலில் வருவது நேயர் விருப்பம். ஞானத்துக்கு வரும்போது அதையும் போட்டுவிடுவோம்ல...!!
1991 ல் வெளியானது 'சிகரம்' திரைப்படம். இந்தப் படத்தில் வரும் 'இதோ இதோ என் பல்லவி' பாடலை இங்கு பகிரச்சொல்லி விருப்பம் தெரிவித்திருக்கிறார் பானு அக்கா. காட்சியோடு பாடலைப் பார்க்கும் தெரிவினை தடை செய்து வைத்திருக்கிறார்கள் புண்ணியவான்கள்! காட்சியோடுதான் பாடலைக் கேட்கவேண்டும் என்று நினைத்தால் இங்கு செல்லவும்!
எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும் என்றாலும் இதைவிட முதலிடத்தில் 'அகரம் இப்போ சிகரம் ஆச்சு' பாடலும், அடுத்ததாக 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே' (குறிபபாக இந்தப் பாடலின் சரணங்கள்) பாடலும் பிடிக்கும். அவை அப்புறம்.
பாடல்களை எழுதி இருப்பவர் வைரமுத்து.
எஸ் பி பி நடித்து, இசையமைத்து, பாடி வந்த திரைப்படம். படத்தை எழுதி இயக்கிய அனந்துவுக்கு இது முதல் படம். பாலச்சந்தர் யூனிட் அனந்துவுக்கு இந்த வாய்ப்பை பாலச்சந்தரே வழங்கி இருக்கிறார். அவர் தன் மனைவி, மகள் பெயரில் தயாரித்திருக்கும் படம் இது.
இந்தப் பாடலை எஸ் பி பி யுடன் இணைந்து பாடி இருப்பவர் கே எஸ் சித்ரா.
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ
இதோ இதோ என் பல்லவி
என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ
என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ
என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ
பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ
இதோ இதோ ...
அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன்
விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா
இப்போது இந்த வார 'என் விருப்ப'த்துக்கு வருகிறேன்!
1980 ல் வெளியான படமாம். சரத்பாபு, ரஜினி சர்மா நடித்த படம். எஸ் ஜெகதீசன் இயக்கிய படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுத, எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருக்கிறார்.
எஸ் பி பி மகன் சரண் பாடும் சில பாடல்கள் கூட எஸ் பி பி யோ என்று குழம்ப வைத்ததுண்டு. அந்த அளவு குரலில் ஒற்றுமை உண்டு. உடகாரணம் நாணயம், நந்தினி திரைப்படப் பாடல்கள்.
கிஷோர்குமார் மகன் அமித்குமார் பாடிய பாடல்களில் நல்லவேளையாய் அந்த ஒற்றுமை இருந்ததில்லை. இந்த ஒப்பீட்டில் எஸ் பி பி சரணை விட அமித்குமாரிடம் சில நல்ல பாடல்களை நான் சொல்வேன். 'லவ் ஸ்டோரி' பாடல்கள் - இந்தப் படத்துக்கு அப்புறம் அவர் குமார் கவ்ரவுக்கு அவர் ஆஸ்தான குரலானார் - ராஜேஷ் கன்னாவுக்கு கிஷோர் குரல் பொருந்தியது போல... தேரி கசம் பாடல், ஆஹிர் க்யோன் பாடல், குர்பானி பாடல் என்று சொல்லலாம். லவ் ஸ்டோரி பாடல்கள் தேன்! குமாரும் அப்பாவைப்போல பர்மனுக்கு நன்றி சொல்லவேண்டும்.
இடையில் ஏன் அமித்குமார் வந்தார்? ஏனென்றால் அவர் பாடி முதன்முதலில் பிரபலமான பாடல் 'பாலிகா பது' படப்பாடலான 'படே அச்சே லக்தே ஹை..' பாடல். அப்போதைய பினாகா கீதமாலாக்களில் தூள்பறந்த பாடல்களில் ஒன்று.
சரி.. இன்னமும் புரியவில்லையே என்கிறீர்களா? பெரிதாய் ஒன்றுமில்லை. அந்த 'பாலிகா பது' படத்தில்தான் ரஜனிஷர்மா முதன்முதலில் அறிமுகமானார்.
எதையாவது ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு சில சுவாரஸ்யமான தகவல்களைக் கொடுக்க முனைந்தேன். அவ்வளவுதான்! நான் இங்கு சொல்லி இருக்கும் ஹிந்திப் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? 'பாலிகா பது' படத்தில் கிஷோர்குமார் கூட ஒரு பாடல் பாடி இருக்கிறார். எனினும் மகன் பாடிய பாடல்தான் ஃபேமஸ்!
சரி, மெல்ல தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பிடித்து தமிழ்நாட்டுக்கு வருவோம்.
'மேகத்துக்கும் தாகமுண்டு..' என்ன ஒரு கவித்துவமான தலைப்பு.. யாருக்குத் தோன்றியதோ தெரியவில்லை. முன்னர் எப்போதோ எழுதிய ரசித்த தலைப்புகளில் இதையும் சொல்லி இருந்தேன். சுஜாதா எழுதிய 'மேகத்தைத் துரத்தினவன்' நினைவுக்கு வருகிறது.
இந்தப் படத்தில் எஸ் பி பி சுசீலா குரலில் ஒரு இனிய பாடல். அதுவும் அழகிய ஆரம்பம் கொண்டது. அருமையான வரிகளைக் கொண்டது.
படத்தில் சரத்பாபுவையும் ரஜினி ஷர்மாவையும் ரசிக்க முடியவில்லை. சரத்பாபு நடிப்பில் சில நல்ல பாடல்கள் உண்டு. பாடல்களை ரசிக்கும் அளவு காட்சிகளை ரசிக்க முடியாது. கண்ணில் தெரியும் கதைகள், கனவுகள் கற்பனைகள்...
இந்தப் பாடலில் முதல் சரணத்தில்தான் எஸ் பி பி நுழைவார். அந்த சரணம் முடிந்துதான் பல்லவியை அவர் குரலில் கேட்கலாம்.
மரகத மேகம் சிந்தும் மழைவரும் நேரம் இது
திருமகள் வேதம் இங்கு திருமால் படித்தாரே
ஆசை நெஞ்சம் கூடும்போது ஆவல் இல்லாதது
ஆ.... காதல் பொல்லாதது...
இளமை ரதங்கள் ஓட இரண்டும் மெதுவாய்ப் பாட...
இரவும் பகலும் உறவும் கனவும்
சுகமல்லவோ
ஒருநாள் பொழுதும் உன்னை பிரிந்தால் மறந்தேன் என்னை
இருவர் மனதில் இனிமை கலந்தால் இதமல்லவோ
வளையும் இடையின் ஓரம் கனியும் கனியின் சாரம்
இனிக்கும் சுவைக்கும் எடுத்தால் மணக்கும்
நீ காணலாம்
நனையும் மலர்கள் பாடும் நளினம் கவிதைக் கோலம்
அழகில் வளர்ந்து நதியில் விழுந்து நாம் ஆடலாம்
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமையான நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் என்றும் ஆரோக்கியமாக
இருக்க வேண்டும் . இறைவன் துணை.
வாங்க வல்லிம்மா... வணக்கம்.
நீக்குசிகரம் படப் பாடல் நல்ல சாய்ஸ் தான். அருமையான நடிப்பு.
பதிலளிநீக்குபாடலும் இனிமை. வரிகளும் இனிமை.
தேர்ந்தெடுத்த பானுவுக்கு வாழ்த்துகள்.
சிகரம் நல்ல படம். ஆனால் கேரக்டருக்கு எஸ் பி பி கொஞ்சம் பொருத்தமில்லாதவராகத் தோன்றும் எனக்கு - தோற்றத்தில். நடிப்பில் குறை சொல்ல முடியாது!
நீக்குமேகத்துக்கும் தாகமுண்டு படம் நான் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குகொஞ்சம் இசை கேடான சப்ஜெக்ட் என்று நினைவு தவறாயிருக்கலாம்.
கோடம்பாக்கம் ராம் தியேட்டரில் இரவுக்காட்சி சினேகிதி குடும்பத்தோடு
வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனாள்.
படம் போரடித்தாலும் பாடல்கள் நன்றாக
இருந்தன.
வழக்கம்போல நான் படம் பார்க்கவில்லை.. ஆனால் பாடல்களை மிஸ் செய்ய மாட்டேன்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் பானு அக்கா... வாங்க...
நீக்குமரகத மேகம் சுசீலாம்மாவின் குரலில்
பதிலளிநீக்குஎஸ்பி பி சாரின் குரலில் ரசிக்கலாம்.
பார்க்கத்தான் கொஞ்சம் சிரமம்:)))
பரவாயில்லை. ரஜினி ஷர்மா குழந்தை முகத்தோடு
வந்தாலும் நம் ஊரில் நிற்க முடியவில்லை.
இந்தப் படத்தின் பாடலை நீங்களும் கேட்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு அதிசயமாக
இருந்ததுமா ஸ்ரீராம்.
நன்றி,.
//இந்தப் படத்தின் பாடலை நீங்களும் கேட்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு அதிசயமாக
நீக்குஇருந்ததுமா ஸ்ரீராம்.//
என்னம்மா இப்படிச் சொல்லி விட்டர்கள்! எம் கே டி பாடல்கள், பி யு சி பாடல்கள் உட்பட கேட்பதுண்டு. இது எஸ் பி பி வேறு....பாடல் நன்றாயிருந்தால் மனதில் நின்று விடும்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல்களும், விபரங்களும் அருமை. ஹிந்தி பட பாடகர்கள் பற்றிய விரிவான விபரங்கள் தெரிந்து கொண்டேன் இந்தப்படம் (சிகரம்) பார்த்ததில்லை. ஆனால் நீங்கள் முதலில் குறிப்பிட்ட "அகரம் இப்போ" "வண்ணம் கொண்ட வெண்ணிலவே" பாடலை அடிக்கடி கேட்டிருக்கிறேன். சகோதரி பானுமதி அவர்களின் விருப்ப பாடலையும் கேட்கிறேன். அவருக்கும் நன்றி.
இரண்டாவது படம் கேள்விப்பட்ட நினைவே வரவில்லை. அதில் வரும் படப் பாடலையும் கேட்கிறேன். இரண்டுமே எனக்கு தெரியாத பாடல்கள் தாம்.
ஆமாம்,.. உண்மைதான்.. எஸ்.பி.பி யின் மகன் சரண் அவர்களுக்கு அப்பாவின் உருவ ஒற்றுமையுடன் அவரின் குரலும் அப்படியே உள்ளது. இன்றைய அனைத்து பகிர்வினுக்கும் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இரண்டு பாடல்களுமே நீங்கள் கேட்டதில்லை என்பது ஆச்சர்யம் கமலா அக்கா. எனக்கு இரண்டுமே பிடித்த பாடல்கள்தான்.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்...
வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்
வணக்கம் துரை செல்வராஜூ சார்... வாங்க...
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்கு' மரகதம்' பாடல் எப்போதோ கேட்ட பாடல். மறந்தும் போய் விட்டது. மறுபடியும் இன்று கேட்கிறேன்.
'இதோ இதோ' பாடல் எஸ்.பி.பியும் சித்ராவும் இணைந்து மேடைகளில் இன்னும் இனிமையாக பாடி அசத்தியிருப்பார்கள்! அவ்வளவு இனிமையான பாடல் இது!
வாங்க மனோ அக்கா... வணக்கம். எப்பவுமே மறந்து போன பாடல்களை நினைவு படுத்தி'' விடுவோம்ல...!
நீக்குஇரண்டாவது பாடல் இன்று தான் கேட்கிறேன்...
பதிலளிநீக்குஅட.. ஆச்சர்யம்.
நீக்குதகவல்கள் நன்று. முதல் பாடல் பிடித்த பாடல். இரண்டாம் பாடல் கேட்டதாக நினைவில்லை.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஇரண்டு பாடல்களையும் கேட்ட நினைவு இல்லை. பிறகு நேரம் கிடைக்கும்போது கேட்டுப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஎப்போதும்போல் முனைந்து தகவல்களோடு கொடுப்பதைப் பாராட்டுகிறேன்
நன்றி நெல்லை.
நீக்குகீசா மேடம்... 9ம் நூற்றாண்டுக்கு முன்பு, மரகதம் என்ற வார்த்தை எங்கேயும் இலக்கியங்களில் இருந்ததா? இல்லை மரதகம் என்றுதான் உபயோகப்படுத்தினார்களா?
பதிலளிநீக்குஎனக்கும் இந்த சந்தேகம் உண்டு. ஏன் இந்த மரதகம்
நீக்குவந்தது என்று. அதன் வேர் கண்டு பிடிக்க முடியவில்லை.
வேளுக்குடி அவர்களின் உபன்யாசங்களில்
கேட்டிருக்கிறேன்.
தேசிகர் ஸ்லோக உரைகளிலும்
பார்த்திருக்கிறேன். விவரம் கிடைக்கவில்லை.
இந்த வாரமும் ஜெ... நடித்த பாடல்கள் எதையாவது வெளியிட்டு தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் என்பதைப் போல மூன்றாவது வெற்றி விழா வாரம் கொண்டாடுவீர்ககள் என்று நம்பியிருந்தேன்.
பதிலளிநீக்குநம்பிக்கை பொய்யாகி விட்டது...
:-))
நீக்கு//மரகத மேகம் சிந்தும் மழைவரும் நேரம் இது//
பதிலளிநீக்குஇப்பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது ஜி
நன்றி ஜி.
நீக்குநம்ம கில்லர்ஜி சிபாரிசு செய்து "சிகரம்" படத்தை யூ ட்யூபில் போன வருஷம் தான் பார்த்தேன். படம் நன்றாகவே இருந்தது. எஸ்பிபி நடிப்பும் அருமை. ரேகாவின் முடிவு எதிர்பார்த்த ஒன்று. பாடல்களும் பிடித்தன. இரண்டாவது படம் பேரோ அதில் நடிச்சவர்கள் பற்றியோ தெரியாது. ஹிஹிஹி, சரத்பாபுவைத் தெரியும், ரஜினி ஷர்மாவையும் தெரியும். ஆனால் இந்தப் படத்தில் அவங்க நடிச்சது தெரியாது. படமே தெரியாது. பாடல்களும் புதுசு. அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடல் பிடித்தது.
பதிலளிநீக்குஎன்னுடைய விருப்ப பாடலை ஒலி பரப்பியதற்கு மிக்க நன்றி. இந்த பாடல் எஸ்.பி.பிக்கு பிடித்த ஒரு ஹிந்தி இசையமைப்பாளரின் பாடலைத் தழுவி அவர் போட்ட மியூசிக் என்று அவரே சூப்பர் சிங்கரில் கூறியதோடு, மூலத்தை பாடியும் காண்பித்தார். எப்படி இருந்தால் என்ன? என்ன மாதிரி ஒரு ராட்சஸன்! சித்ரா மட்டும் லேசு பட்டவரா? இரண்டு பேரும் சேர்ந்து நம்மை எங்கேயோ கொண்டு சென்று விடுகிறார்கள்!!
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் இப்போது தான் கேட்கிறேன். முதலில் அதை பாடியிருப்பது சுசீலா என்றே நம்ப முடியவில்லை இரண்டாவது சரணத்தில் தான் அவர் தன்னுடைய ஸ்டாண்டை எடுக்கிறார் அதற்குள் பாடல் முடிந்து விட்டது.
பதிலளிநீக்குஇனிய பாடல்கள். 'இதோ இதோ என் பல்லவி ' முன்பு கேட்டதில்லை இப்பொழுதுதான் கேட்டேன் .
பதிலளிநீக்குஇரண்டு மூன்று நாட்கள் வர முடியவில்லை வெளியூர் பயணம். என்னை காணவில்லை என்று அன்பு நட்புகளின் நலம் விசாரிப்புக்கு நன்றி.
பதிலளிநீக்குவந்து விட்டேன்.
பகிர்ந்த பாடல்கள் நல்ல பாடல்கள்.
கேட்டு மகிழ்ந்தேன். சோகம் இழையோடும் பாடல் (இதோ இதோ பல்லவி.)
எஸ் பி பி சரண் பாடலும் நன்றாக இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.
அருமையானப் பாடல்கள்
பதிலளிநீக்கு