வெள்ளி, 30 ஜூலை, 2021

வெள்ளி வீடியோ : உனக்காக பனிக் காற்றை தினம் தூது போக வேண்டினேன்

 Swashbuckler film என்றால் என்ன தெரியுமா?  

எம் எஸ் விஸ்வநாதன் ஒரு பேட்டியில் தானும் இளையராஜாவும் இசையமைத்த மெல்லத்திறந்தது கதவு படத்தில் வரும் "வா வெண்ணிலா பாடல் பற்றிச் சொல்லி இருந்தார்.  அதே விஷயத்தை இளையராஜாவும் கங்கை அமரனுடனான ஒரு பழைய உரையாடலில் சொல்லி இருந்தார்.


அதாவது, ஒரே ஸ்டுடியோவில் வெவ்வேறு தளங்களில் வேலை செய்து கொண்டிருந்தனராம் இளையராஜாவும், எம் எஸ் வியும்.   நடுவில் மின்சாரம் தடைப் படவே, வெளியில் வந்தபோது சந்தித்துக் கொண்டார்களாம்.  அப்போது பேச்சுவாக்கில் இளையராஜா எம் எஸ் வியிடம் "அண்ணே...  பழைய பாடல் ஒன்று எனக்கு ரொம்பப் பிடிக்கும் " என்று சொன்னாராம்.  கண்டசாலா பாடிய "வான் மீதிலே..  இன்பத்தேன் வந்து பாயுதே" பாடலைக் குறிப்பிட்டுதான் சொன்னாராம்.  அதற்கு இசையமைத்தவர் சி ஆர் சுப்புராமன் என்று இளையராஜா எண்ணியிருக்க,  அந்தப் பாடலுக்கு இசை அமைத்தது தான்தான் என்று எம் எஸ் வி சொன்னாராம்.

சண்டிராணி.   பானுமதி ராமகிருஷ்ணா தயாரித்து இயக்கி இரண்டு வேடங்களில் நடித்த திரைப்படம்.  இன்னொரு சாதனை அது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்து வெளியிட்டது.  நல்ல வசூலைக் கொடுத்த இந்தப் படத்தில் இரட்டை வேடத்துக்குரிய அத்தனை அம்சங்களும் இடம்பெற்றிருந்தன அந்தப் படத்தில்.  ஒருவர் சாது, ஒருவர் வீரம் விளைந்தவர்.  வெவ்வேறு இடங்களில் இருக்கும் இருவரும் ஒரு கட்டத்தில் இடம் மாறுவார்கள்.  ஒருவரையே காதலிப்பார்கள்  இத்யாதி...  இத்யாதி...  ஜோடி என் டி ராமராவ்..  அவர் பெயர் இதில் கிஷோர்!  வில்லனாக நடித்தவர் எஸ் வி ரெங்காராவ்.  இந்தப் படத்தில்தான் இந்தக் குறிப்பிட்ட பாடல்.

இந்தப் பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடியிருப்பவரும் பானுமதிதான்.

வான்மீதிலே இன்பத்தேன் மாரி பெய்யுதே 
வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே 
  வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே
  வான்மீதிலே இன்பத்தேன் மாரி பெய்யுதே

சுகாதீபம் மேவும் அநுராக கீதம் 
சுதியோடு பாடும் மதுவண்டு கேளாய்  
சுகானந்தம் ஜீவிய கானம் இதே 

வசந்ததிலாடும் மலர்தென்றல் நீயே 
மையல் கொண்டு நாடும் தமிழ்த்தென்றல் நானே 
நிஜம்தானே என் ஆருயிர் நீ வாழும் நாள் 

மனம் ஒன்று சேர்ந்தே உறவாடும்போது 
மது உண்ணும் வண்டு தனக்கீடு ஏது 
அமைகின்ற போகமும் ஆகாது 


மெல்லத் திறந்தது  கதவு படத்துக்காக இருவரும் இசையமைக்க அமர்ந்தபோது இந்தப் பாடலை இளையராஜா குறிப்பிட்டு, அதே டியூனில் வேண்டாம், அந்த பாணியில் ஒரு பாட்டு போடுங்கண்ணே" என்று கோரிக்கை வைத்ததும் எம் எஸ் வி அமைத்த பாடல் "வா வெண்ணிலா".

அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் முதலில் அது இளையராஜா என்றுதான் எண்ணியிருந்தேன்.  நான் நினைத்தது படத்தில் ஆறு பாடல்கள் என்றால் மூன்று இளையராஜா, மூன்று எம் எஸ் வி என்று நினைத்து எது எது யார் யாராயிருக்கும் என்று ஆராய்ந்ததுண்டு.  அபப்டி இல்லை என்று தெரிந்தது.  பாடல்களின் டியூன் எல்லாம் எம் எஸ் வி யாம்.  ஆனால் நான் நினைத்ததும் சரி என்பது போல எம் எஸ் வி சொல்லி இருக்கிறார்.  டியூன் எடுத்துக் கொடுத்தேன் தவிர, அதற்கு நகை, பூட்டி, பொட்டு வைத்து அலங்காரம் செய்ததெல்லாம் இளையராஜாதான் என்று சொல்லி இருக்கிறார்.  அவர் வா வெண்ணிலா பாட்டைப் பற்றிச் சொல்லும்போது இதைச் சொல்லி இருக்கிறார்.

The film's score and soundtrack were composed by M. S. Viswanathan and Ilaiyaraaja together as per the credits, however the song tunes were composed by M.S.Vishwanathan and orchestra arrangements were by Ilaiyayraja.[1][2] Entire background score and orchestration for all the songs was done by Ilaiyaraaja.

1986 ல் எம் எஸ் விஸ்வநாதன் படங்கள் இல்லாமல் சிரமபப்டுவதைப் பார்த்த ஏ வி எம் நிறுவனம் அவருக்கு உதவும் முகமாக இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளது.  ஆனாலும், வியாபாரமும் முக்கியமாச்சே..   புதுமை என்று இளையராஜா, எம் எஸ் வி இருவரையும் இசையமைப்பாளர்களாகக் களமிறக்கி விட்டார்கள்.  எல்லாப் பாடல்களும் எம் எஸ் வி டியூன் என்றாலும், குழலூதும் கண்ணனுக்கு மட்டும் இளையராஜாவும்.  விக்கி செப்புகிறது.  [சமீபத்தில் விக்கியை நம்பாதீர்கள் என்று அவர் நிறுவனரே சொல்லி இருந்தது இப்போதெல்லாம் நினைவுக்கு வருகிறது!]  மௌனராகம் பாடல் டியூன்களோடு இந்த டியூனையும் இளையராஜா ஹிந்தி 'சீனி கம்' மில் உபயோகப் படுத்தியிருப்பார்.

மதுரைக்காரர்ள் எப்போதுமே சினிமா பாடல்கள், சினிமா விஷயத்தில் பெரும் ரசிகர்கள்.  நான் சினிப்ரியாவில்தான் இந்தப் படத்தைப் பார்த்தேன்.  அப்போதே நண்பர்கள் பேசிக்கொண்டார்கள்.  "நான் பார்க்கும்போது ராதா போர்ஷன்தான் முதலில் வந்தது.  இப்போது மாற்றி, அமலா போர்ஷனை முதலில் வைத்துள்ளார்கள்" என்று!

இயக்குனர் இருவர் போர்ஷன்களையும் இரண்டு சரிபாதியாய் எடுத்திருந்ததும் வசதியாய்ப் போனது.  இந்தவ விஷயம் மெல்லப் பரவ, பின்னர் பல ஊர்களிலும் இதே போல மாற்றி திரையிட்டார்களாம்.  போலவே, முதலில் அவ்வளவு ரெஸ்பான்ஸ் இல்லாமல் இருந்த படம், பின்னர் வெற்றி பெற்றது.

எஸ் பி பி குரலில் இனிமையான பாடல் என்பதைச் சொல்லவே வேண்டாம்!  இசை வகுப்பில் அன்று மோகன் பாடும் நாள்.  அமலாவைக் காணோமே என்று நேரத்தைக் கத்திக்கொண்டே இருக்கும் மோகன், அமலா வருவதைப் பார்த்ததும் சட்டென தொடங்கும் வரி "வா..  வெண்ணிலா..  உன்னைத்தானே வானம் தேடுதே...   "

வாலியின் பாடல் வரி.    பாடலின் சரணங்கள் வரும்போது இரண்டு பாடல்களிலும் ஒன்றின் சாயல் இன்னொன்றில் தெரியும்!

இந்தப் பாடலில் எஸ்  பி பி சும்மா விளையாடி இருப்பார்.  'என்னது போதும்' என்னும் போதும், 'முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்' என்னும் போதும் 

அவளுக்காக பனிக்காற்றைத் தூது போக வேண்டுகோள் வைக்கும் இனிய பாடல்! 


வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே


முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் ஹா ஹா
திருமுகம் காணும் ஹெ ஹெ
வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ
எனக்கது போதும் ஹெ

எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ
எனைச்சேர எதிர்பார்த்தேன்
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்

இடையினிலாடும் ஹா ஹா
உடையென நானும் ஹெ ஹெ
இணை பிரியாமல் ஹோ ஹோ
துணை வர வேண்டும்.. ஹெ..

உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக வேண்டினேன்



முதல் வரிக்கான  விடை!

Swashbuckler films are a subgenre of the action film genre, often characterised by swordfighting and adventurous heroic characters, known as swashbucklers. Real historical events often feature prominently in the plot, morality is often clear-cut, heroic characters are clearly heroic and even villains tend to have a code of honour (although this is not always the case). There is often a damsel in distress and a romantic element.

72 கருத்துகள்:

  1. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  3. இந்தப் பாடலை விட -
    கல்யாண வீட்டில் நூர்ஜஹான் பாடி ஆடும் அந்தப் பாடலே மிகவும் பிடிக்கும்..

    // மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
    நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்..//

    நேற்று கூட நூர் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா?  நமக்கு எப்பவும் எஸ் பி பி தாங்க....!!!

      நீக்கு
    2. ஸ்ரீராம், 'துரை நூர் நூர் என்கிறார். நீங்கள் பாலு பாலு என்கிறீர்கள்.

      நீக்கு
    3. காட்சியில் நூரை ரசிக்கலாம்.  பாடலில் எஸ் பி பி தான்!

      நீக்கு
  4. விக்கிப் பீடியாக்கள் வருவதற்கு முன்பே நான் எனது நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்...

    வா வெண்ணிலா.. - மெல்லிசை மன்னரின் கை வண்ணம் என்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லையே.. ஆனால் பாருங்கள் சுற்று அலங்காரம் முழுவதும் இளையராஜா.

      நீக்கு
    2. சுவர் - அது இருக்கத் தானே சித்திரம்!..

      தீபம், தியாகம் - வேறு சில் படங்களில்லும் மெல்லிசை மன்னரின் பாணியை ஒட்டியே இசையமைத்திருப்பார் இளைய ராஜா...

      நீக்கு
    3. ஆமாம். நிறைய பாடல்கள் மெல்லிசை மன்னர், ஜி கே வெங்கடேஷ் பாணி தெரியும்.

      நீக்கு
  5. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.என்றும் வளமுடன் இருக்க இறைவன் அருள வேணடும்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பாடல்.வெளிவந்த பொது கேட்காத நாளில்லை. அதுவும் அமலாவுக்காகவே இளம் பெண்கள் அலை மோதிக் கொண்டு பார்த்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளம் பெண்கள் மட்டுமா?  நானும்தான்!!!  வீட்டுக்கு தொலைகாட்சி வந்த புதிது.தொலைக்காட்சியில் அமலா பாடல் காட்சி ஒன்றில் தோன்றியதும் "ஆ...   அமலா..." என்று கத்தி விட்டேன்.    அப்பா "விழுந்து நமஸ்காரம் பண்ணு" என்றார் எரிச்சலுடன்.  அப்படியே செய்தேன்!!!  அம்மா, தங்கை பாட்டி எல்லோரும் சிரித்து விட்டார்கள்!

      நீக்கு
    2. @ வல்லியம்மா...

      //.. அதுவும் அமலாவுக்காகவே இளம் பெண்கள் அலை மோதிக் கொண்டு பார்த்தார்கள்..//

      @ ஸ்ரீராம்..

      // ..இளம் பெண்கள் மட்டுமா? நானும் தான்.. //

      என்னமோ அந்தப் பையன் முந்திக்கிட்டான்.. ஆனால் அவனுக்கும் கிடைக்காமப் போனது ரொம்பவும் கொடுமை!..

      நீக்கு
    3. ஹா... ஹா.. ஹா... ரகுவரன் கூட...

      நீக்கு
    4. நல்ல அழகி. ஏதோ ஒரு சார்ம் அவரிடம்.
      எங்கேயோ போய்ச் சேர வேண்டி இருக்கிறது.!!!
      ராஜா அமலா கூட பேசப்பட்டார்கள்:)

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. இரண்டு பாடல்களும் பிடித்த பாடல்கள்.
    கேட்டு மகிழ்ந்தேன்.
    நன்றி.
    ஆரம்ப நாட்களில் நிறைய பாடல்கள் எம்.எஸ் இசை அமைத்து இருக்கிறார். அவை அவர் பேரில் வரவில்லை என்று முன்பு ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது இளையராஜாவுக்கும் பொருந்தும். உதாரணம் வரப்பிரசாதம் படப் பாடல்கள் (கங்கை நதியோரம் ராமன் நடந்தான்)

      நீக்கு
  9. @துரை,
    நல்ல சிரிப்பு. அக்னி நட்சத்திரம் படம் பார்த்து அந்த
    அமலா ஸ்டைல் பாவாடை மாடல் ஆனது!!!
    @ ஸ்ரீராம்,
    சாஷ்டாங்க நமஸ்காரமா? அட பகவானே!!!!!
    ஹாஹ் ஹா,.

    பதிலளிநீக்கு
  10. இன்றைய இரு பாடல்களும் நன்று. அதையொட்டிய செய்திகளையும் ரசித்தேன்.

    சத்யராஜ் படம் ஒன்றில்தான் அமலா கொஞ்சம் அதீத கவர்ச்சியில் இறங்கியிருப்பார்.

    கேஜிஜி... பொருத்தமாக அமலா படம் ஒன்றைப் போட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் ஜீவா படத்தைச் சொல்கிறீர்கள் நெல்லை.  அதுசரி..  பாடல் காட்சியில் அமலா வரும்போது தனியாய்ப் படம் எதற்கு?!

      நீக்கு
  11. இன்றுதான் விஸ்வநாதன்,ராமமூர்த்தி பற்றிய பதிவொன்றைப் பார்த்துக்
    கொண்டிருந்தேன்.
    நீங்களும் இங்கே சொல்லி இருக்கிறீர்கள்.
    அவர் இசையில் எத்தனையோ புதுமைகளைக் கொண்டு வந்திருக்கிறார்.

    சுலபத்தில் இளைய ராஜா பக்கம் செல்வது
    அத்தனை எளிதாக இல்லை எங்களுக்கு!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் மாமாவையும் ரசிப்பேன்.  மெல்லிசை மன்னரையும் ரசிப்பேன்.  இளையராஜாவையும் ரசிப்பேன்.

      :))

      நீக்கு
    2. நான் உங்களை விட ஒரு படி மேல் ரஹ்மான், அனிருத், ஷான் ரால்டன், ரமேஷ் விநாயகம் என்று எல்லோரையும் ரசிப்பேன். சந்தோஷ் நாராயணன் மட்டும் கொஞ்சம்...

      நீக்கு
  12. எனக்குப் பிடிபடாத்து, எப்படி ஜாம்பவான்கள் பணத்திற்குக் கஷ்டப்பட முடியும் என்று.

    டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் (?) அவர்களும் தொழில் நடக்கவில்லையே..பிழைக்கணுமே என்று சொல்லிக்கொண்டிருந்தார்... Peak periodல் பணம் வாங்கிக்கொள்ளத் தெரியவில்லையா இல்லை பணம் சேர்க்கத் தெரியவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் புத்திர பாக்யம் என்று ஒன்று இருக்கிறதே
      முரளிமா.

      நீக்கு
    2. வரும்படிக்கு ஏற்ற (ஆடம்பரச்) செலவு....

      நீக்கு
  13. எம் எஸ் வியின் நல்ல குணத்தில் ஒன்று.... அஜீத் படத்தில் ஆறு மாதம் இயக்குநரும் விவேக்கும் போராடி எம் எஸ் வியை நடிக்கச் சொன்னபோது, தனக்கு ஊதியமான பத்து லட்சத்தில் ஐந்து லட்சத்தை ராம்மூர்த்திக்குக் கொடுக்கச் சொன்னது... அந்த நல்ல மனசு யாருக்கும் வராது

    பதிலளிநீக்கு
  14. ஸூப்பர் பாடல்கள் லிபரங்கள் நன்று

    பதிலளிநீக்கு
  15. நாகார்ஜுனா, அமலாவைத் திருமணம் செய்யும்போது போட்ட ஒரே கண்டிஷன், உடலை எப்போதுமே ஒல்லியாக வைத்திருக்க வேண்டும் என்று.

    அமலா இன்றுவரை அதனைக் கடைபிடித்து வருகிறாராம்.

    சமீப காணொளியில் குட்டி பத்மினி சொன்ன தகவல்...ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அநியாயமா இருக்கே...   சுயநலமா இருக்கே...

      நீக்கு
    2. அதனால்தான் மீண்டுமொரு கல்யாணம் செய்துக்கிட்டானோ...

      நீக்கு
    3. நாகார்ஜுனா, அமலாவைத் ////திருமணம் செய்யும்போது போட்ட ஒரே கண்டிஷன், உடலை எப்போதுமே ஒல்லியாக வைத்திருக்க வேண்டும் என்று.// நானும் KP tv பார்ப்பதுண்டு. அவர் எல்லாவற்றையும் நேரே பார்த்தது போல சொல்வது சிரிப்பாக இருக்கும்.

      நீக்கு
    4. அமலா நடனம் பயிற்சியை விடாமல் செய்வதால் உடல் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். ஹேமமாலினி கூட இப்போதும் ஒரே சீராக உடலை வைத்துள்ளார். அதே போல் ஷோபனாவும்.

      நீக்கு
    5. பேத்தி வந்துவிட்டாளா பானுமதி? எப்படி இருக்கிறாள்? நன்கு விளையாடுகிறாளா? பேத்தியுடன் இனிமையான மகிழ்வான பொழுதுகள் கழியப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
    6. //அதனால்தான் மீண்டுமொரு கல்யாணம் செய்துக்கிட்டானோ...//இது என்ன புதுக்கதை? முதல் மனைவி இருக்கும் பொழுது அமலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

      நீக்கு
    7. விஜயா/வாஹினி குடும்பத்துப் பெண் முதல் மனைவி. விவாகரத்து செய்துவிட்டே அமலாவைக் கல்யாணம் செய்து கொண்டார்.

      நீக்கு
    8. @கில்லர்ஜி: இதென்ன புதுக்கதை? நாகார்ஜுனா முதல் மனைவி இருக்கும் பொழுது இரண்டாவதாக அமலாவை மணந்து கொண்டார். அதற்குப் பிறகு வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டதாக தெரியவில்லையே..?

      நீக்கு
  16. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  17. இன்றைக்கு மிக இனிமையான பாடலை தெரிவி செய்திருக்கிறீர்கள்!
    இந்தப்படத்தில் எல்லா பாடலக்ளுமே இனிமை தான்!
    ' ஊரு சனம்' எனக்கு மிகவும் பிடித்த பாடல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படத்தில் 'ஊரு சனம்' பாடல் மட்டும் கங்கை அமரன் எழுதியதாம்.   முதலில் அந்தப் பாடல் கேட்கும்போது "புருசனும் தூங்கிடுச்சு" என்று பாடுவது போல காதில் விழுந்ததால் 'என்ன பாட்டு இது' என்று தோன்றியது.  அப்புறம்தான் வரி புரிந்தது!

      நீக்கு
  18. இனிமையான பாடல்கள்... விக்கி பற்றிய செய்தி உண்மை...

    பதிலளிநீக்கு
  19. அருமையான பாடல்கள்
    எம்.எஸ்.வி காணொலி கண்டு ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  20. @ நெல்லை..

    // தனக்கு ஊதியமான பத்து லட்சத்தில் ஐந்து லட்சத்தை ராம்மூர்த்திக்குக் கொடுக்கச் சொன்னது... அந்த நல்ல மனசு யாருக்கும் வராது.. //

    மெல்லிசை மன்னர் என்றும்
    மென்மையானவரே.. மேன்மையானவரே..

    இசை இரட்டையர்கள் பிரிவுக்குக் கூட
    ராமமூர்த்தி அவர்கள் தான் முக்கிய காரணம் என்று பேசிக் கொண்டார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரைப் பற்றிய நிறைய காணொளிகள் பார்த்தேன். வேலையில் அவர் டெரராம். மிகுந்த திறமைசாலி, மிகுந்த நல்ல மனது. இசை தவிர அவருக்கு ஒன்றுமே தெரியாது என்று கண்ணதாசன் எழுதியிருந்தார் (சொல்லியிருந்தார்).

      மெல்லிசை மன்னர், தன் இன்னொரு சகாவுக்கு பாதி பணம் கொடுக்கச் சொன்னதை இயக்குநர் சரண் சொல்லியிருந்தார்.

      ஆனால் பணம் என்று வரும்போது சேர்க்கத் தெரியாமல்/கேட்கத் தெரியாமல் இருந்துவிட்டாரோ என்று தோன்றும். வாலி, பணத்தை கறாராகக் கேட்டு வாங்கிவிடுவாராம்.

      நீக்கு
  21. @ ஸ்ரீராம்...

    // நீங்கள் ஜீவா படத்தைச் சொல்கிறீர்கள் நெல்லை. அதுசரி.. பாடல் காட்சியில் அமலா வரும்போது தனியாய்ப் படம் எதற்கு?!.. //

    மாங்காய்ப் பால் உண்டு மலை மேல் இருப்பவர்க்கு மாங்காய் தொக்கு எதற்கடி குதம்பாய்!..

    அதுதானே!.. மாங்காய்த் தொக்கு எதற்கு?..

    சும்மா மனசைத் தேத்திக்கத் தான்!..

    ( சித்தர் ஸ்வாமி மன்னிப்பாராக!..)

    பதிலளிநீக்கு
  22. மெ.தி.க பாடல்கள் அனைத்துமே பிடித்தவை. முதல் பாட்டு கேட்ட நினைவில்லை.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    இன்றைய இரு பாடல்களும், அதைப்பற்றி தகவல்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

    இரு பாடல்களும் கேட்டுள்ளேன். முதல் பாடலில் சகலகலாவல்லி பானுமதியின் குரல் வளம் நன்றாக இருக்கும். இரண்டாவது அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். நடிகர் மோகனின் ஹிட் பாடல்களில் இது ஒன்று.எஸ்.பி.பி குரல் இதில் இழைந்தோடும் அழகே தனி. இப்போதும் பாடல்களை கேட்டு ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.    வணக்கம்.  காலையிலேயே வந்துவிடும் உங்களைக் காணோமேன்னு பார்த்தேன்.  கீதா அக்காவையும் இன்னும் காணோம்!

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. இன்னிக்கு என்னமோ வேலையே ஆகலை. சாப்பிடும்போது ஒன்றரை மணி. அதற்குப் பின்னர் பூத்தொடுத்துவிட்டுப் படுத்துக் கொண்டு விட்டேன். நாலு மணிக்கு மேல் எழுந்து தான் மற்ற வேலைகள். அவற்றை முடித்துக் கொண்டு இப்போது வந்தேன். இப்போப் போயிடுவேன். வெள்ளிக்கிழமை விளக்கு ஏற்றணுமே! :))))

      நீக்கு
  24. மெல்லத் திறந்தது கதவு படத்தை வீட்டில் வி.சி.ஆர்.டெக் வரவழைத்து பார்த்தோம்.(அப்போதெல்லாம் டெக் வாடகைக்கு கிடைக்கும்). படம் ரொம்ப லெங்தியாக ரெண்டு தனித்தனி கதைகளாக இருப்பது போல் தோன்றியது. குமுதத்தில் கூட படத்தில் ரெண்டு இசையமைப்பாளர்கள், இரண்டு கதாநாயகிகள் எல்லாம் தனித்தனியாக நிற்கின்றன என்று எழுதியிருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  25. "வா வெண்ணிலா.." பாடல் பழைய பாடலை உல்டா பண்ணியது என்பதை ஒரு மேடைக் கச்சேரியில் கங்கை அமரன் தெரிவிக்க, எஸ்.பி.பி பழைய பாடலைப் போல பாடிக் காட்டினார். இதுவும் கேட்டில் பார்த்ததுதான்.

    பதிலளிநீக்கு
  26. சண்டிராணி கதை வடுவூரோடது என நினைவு. அம்மா இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருப்பார். பானுமதி பல்வேறு திறமைகள் நிறைந்தவர். திறமைசாலி. மெல்லத்திறந்தது கதவு படம் பார்க்காட்டியும் பாடல்கள் கேட்டிருக்கேன். எம்/எஸ்.வி.யும் இளையராஜாவும் சேர்ந்து இசையமைத்த செய்தி எனக்குப் புதிது.

    பதிலளிநீக்கு
  27. @ கீதாக்கா...

    //..விஜயா/வாஹினி குடும்பத்துப் பெண் முதல் மனைவி. விவாகரத்து செய்துவிட்டே அமலாவைக் கல்யாணம் செய்து கொண்டார்..//

    இந்தச் செய்தியை ஏன் இன்னும் யாரும் சொல்ல வில்லை என்று காலையில் இருந்தே நினைத்துக் கொண்டிருந்தேன்..

    பதிலளிநீக்கு
  28. @ வல்லியம்மா...

    // ஸ்ரீராம், துரை நூர் நூர் என்கிறார். நீங்கள் பாலு பாலு என்கிறீர்கள்..//

    அது வேறொன்றும் இல்லையம்மா..

    மெல்லத் திறந்தது கதவு - கதையில் அமலாவின் பெயர் நூர்ஜஹான்..

    அதனாலேயே நூர்.. நூர்.. என்று எழுதினேன்..

    பதிலளிநீக்கு
  29. 4000 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
    ஆசிரியர்கள்
    திரு கௌதமன்
    திரு ஸ்ரீராம்.
    திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன்
    திரு கே ஜி
    திரு காசு சோபனா
    மற்றும் பின்னுடமே பதிவை சிறப்பாக்குகிறது
    பின்னுட்டம் இடும்
    திரு ராமன்
    திருமதி வல்லிசிம்ஹன்
    திருமதி கமலா ஹரிஹரன்.
    திரு நெல்லைத் தமிழன்
    திரு துரை செல்வராஜூ
    திரு ஜம்புலிங்கம்
    திருமதி கோமதி அரசு
    திருமதி மனோ சாமிநாதன்
    திருமதி காமாட்சி
    திரு Avargal Unmaigal துரை
    திரு திண்டுக்கல் தனபாலன்
    திரு ஜெயக்குமார்
    திரு வல்லிசிம்ஹன்
    திரு துரை செல்வராஜூ
    திரு கரந்தை ஜெயக்குமார்
    திரு வானம்பாடி
    திரு வெங்கட் நாகராஜ்
    திரு ஏகாந்தன்
    திரு சே.குமார்
    திரு கில்லஜி
    திரு G.M பாலசுப்பிரமணியம்
    திருமதி ஏஞ்ஜல்
    திருமதி அதிரா
    திருமதி மாதேவி
    திரு டி.என்.முரளிதரன்
    அணைவருக்கும்
    வாழ்த்துகள்
    வாழ்த்துகள்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!