என்னடா இது எங்கள் பிளாக்குக்கு வந்த சோதனை... நெல்லைக்காரங்கள்லாம் வட இந்திய இனிப்பின் செய்முறையை எழுத ஆரம்பித்தால் நாடு தாங்குமா என்று யோசிப்பவர்களுக்கு.... நிறைய செய்து படங்கள் எடுத்திருந்தாலும் அனுப்புவதில் ஒரு சுணக்கம். சரி... திங்கள் கிழமை பதிவுக்கு மீண்டும் எழுத ஆரம்பித்துவிடலாம், ஆரம்பமே ஒரு இனிப்பாக இருக்கட்டும் என்று நினைத்து, இன்று மே 1ம் தேதி அன்று இந்த லட்டு செய்தேன்.
பொதுவா, நம்ம ஊர் லட்டுதான் எனக்குப் பிடித்தமானது. மோதிசூர் லட்டை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. ஆனால் கடுகு அளவில் முத்துக்களை வைத்துச் செய்ததுபோல இருக்கும் மோதிசூர் லட்டு என் கண்ணைக் கவரும். இன்று நான் சொல்லப்போகும் செய்முறை, பூந்தி பொரிக்காமல் எப்படி லட்டு செய்யலாம் என்பதைத்தான். (கீதா ரங்கன் -க்கா இந்தப் பதிவைப் படித்த உடன் நிச்சயம் திருச்சானூர் கோவிலில் பிரசாதமாகக் கிடைக்கும் லட்டுவைப் பற்றிக் குறிப்பிடுவார்).
தேவையானவை
கடலைப் பருப்பு (சனா தால்) 1 கப்
ஜீனி - 1 கப்
முந்திரிப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
உலர் திராட்சை - 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
அடர் நிறமி - வேண்டுமானால் கொஞ்சம்.
பொரிப்பதற்கு - எண்ணெய்
செய்முறை
கடலைப்பருப்பை நன்றாக அலம்பிச் சுத்தமாக்கவும். பிறகு நல்ல தண்ணீரில் 2 மணி நேரம் ஊறப்போடவும்.
தண்ணீரை முழுவதும் வடிகட்டிவிட்டு, மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். தேவையானால் பகுதி பகுதியாகப் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
ஒரு அகலக் கடாயில் (உயரம் குறைவாக இருக்கட்டும். ஜிலேபி செய்யும் கடாய் என்றால் இன்னும் நல்லது) எண்ணெயை நன்கு சூடாக்கி, இந்த அரைத்த விழுதை கிள்ளிப்போட்டு, பொரிக்கவும். பெரிய சைஸ் பகோடா மாதிரி இருக்கும்.
1 1/2 நிமிடங்களுக்கு மேல் பொரிக்க வேண்டாம். நிறம் மாறிவிடக் கூடாது. திருப்பிப்போட்டு எல்லா பக்கமும் கொஞ்சம் பொரிந்திருப்பதுபோலப் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதனைத் தட்டிப் பரப்பி ஆற வையுங்கள்.
ஆறிய உடனே இதனை மிக்சியில் போட்டு ஒரு சுத்து சுத்திக்கொள்ளுங்கள். பொடிப்பொடியாக உதிர்ந்துவிடும்.
இப்போ இன்னொரு கடாயில் 1 கப் ஜீனி சேர்த்து, அதனுடன் 1/3 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பிப் பதம் வருமாறு கொதிக்கவைக்கவும். ஒரு கம்பிப்பதம் வருவதற்குச் சற்று முன்பு, ஏலக்காய் பொடியும், நிறமியும் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு கம்பிப்பதம் வந்த உடன், அடுப்பை அணைத்துவிட்டு, பொடித்த கடலைப்பருப்பு பகோடாவைச் சேர்த்து நன்கு கலக்குங்கள்.
இதனை ஒரு தட்டில் வைத்து ஆறவிடுங்கள். உடனேயே முந்திரி மற்றும் உலர் திராட்சையை நெய்யில் வறுத்து வைத்துக்கொள்ளவும்.
முந்திரி, உலர் திராட்சையைச் சேர்த்து, சிறிது ஆறினவுடன் லட்டுவாகப் பிடியுங்கள்.
நெய்யைத் தொட்டுக்கொண்டு லட்டு பிடித்தால், நெய் லட்டு வாசனை வரும். பொரிப்பதற்கும் நெய்யை உபயோகிக்கலாம். நான் சூரியகாந்தி எண்ணெய் உபயோகித்தேன்.
கண்டருளப்பண்ணி, படங்கள்லாம் எடுத்த பிறகு, மனைவிக்குக் கொடுத்தேன், அவளை பசங்களுக்கும் கொடுக்கச் சொன்னேன். பக்கத்து பில்டிங்கில் இருக்கும் மாமியாருக்கும், இன்னொரு flatல் இருக்கும் சகலைக்கும் கொடுத்தனுப்பினேன்.
பசங்க, நல்லா இருக்குன்னு சொன்னாங்க (அப்படீன்னா, ஒரு லட்டு சாப்பிட்டாங்கன்னு அர்த்தம். அவங்க அதுக்கு மேல இந்த இனிப்புலாம் எடுத்துக்க மாட்டாங்க).
ரொம்ப சுலபமான டிஷ் இது. நீங்களும் செய்துபாருங்கள்.
குறிப்பு: நான், ஆர்வக்கோளாறில், கிராம்பையும் சேர்த்தேன். பூந்தி லட்டுவுக்கு ருசி கொடுப்பதுபோல இதற்கு கிராம்பு ருசி கொடுக்கவில்லை. முந்திரி திராட்சையைச் சேர்த்து லட்டு பிடிப்பதற்குப் பதில், திராட்சையோடு லட்டுகளைப் பிடித்துவிட்டு, அதன் மேல் முந்திரி ஒட்டுவது இன்னும் சுலபமாக இருக்கும்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் இறைவன் அருளால் உடல் உள்ள ஆரோக்கியம்
பெற்று நலமாக இருக்க வேண்டும்.
காலை வணக்கம் வல்லிம்மா.. வாங்க..
நீக்குஅன்பின் கீதாமா வந்து காலை வணக்கம்
பதிலளிநீக்குசொல்லியே பழகிவிட்டது.
இன்று வைத்தியர் அவருக்கு நல் வார்த்தைகளும் நல்ல மருந்துகளும் கொடுக்க வேண்டும்.
பரிபூரண குணம் அடைய அவனே சரண்.
பிரார்த்தனையில் நானும் இணைகிறேன்.
நீக்குநானும் ப்ரார்த்தித்துக் கொள்கிறேன். கீசா மேடம், குறைந்தபட்சம் மாடிக்குப் போய், இதோ பாருங்கள் காவிரியில் வெள்ளம், அதோ பாருங்கள் மலைக்கோட்டை என்று படங்கள் போடுவார்... விரைவில் வீறுகொண்டு எழட்டும்.
நீக்குஅனைவருக்கும் நன்றி.
நீக்குமோதிச்சூர் லட்டு செய்முறையை நல்ல தமிழில் கொடுத்திருக்கும் நெல்லைத்தமிழனுக்கு மிக நன்றி.
பதிலளிநீக்குஎளிமையாக இந்த லட்டு பிடிக்கலாம். ஆனால் கவனம் தேவை.
கம்பிப் பாகு முற்றாமல்,
கடலைப் பருப்பு நிறம் மாறாமல்
கருத்துடன் செய்ய வேண்டும்.
நளச்சக்கரவ்ர்த்தி பட்டம் தா கொடுக்க வேண்டும்
இவருக்கு.
இத்தனை அருமையாகச் சொல்லி இருக்கிறாரே.
படங்கள் பார்க்கவே மிகத் தெளிவாகவும்
அழகாகவும் இருக்கின்றன.
நான் இது வரை இது செய்ததில்லை.
அன்பு வாழ்த்துகள் மா.
நன்றி வல்லிம்மா... இந்த லட்டில், சிறு பரல்கள் போலப் பொரித்து பிறகு பிடிக்கும் லட்டு போன்ற மென்மைத்தன்மை குறைவு
நீக்குஇலக்கிய வர்ணனை!!!
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியமும் மன மகிழ்ச்சியும் பெருகட்டும்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா.. வணக்கம்.
நீக்குஇந்த மாதிரியும் லட்டு செய்யலாம் என்பதை நான் கேள்விப் பட்டதே இல்லை. முதல்முறையாகக் கேள்விப் படுகிறேன். நெல்லைத் தமிழர் பொறுமையாகவும் நன்றாகவும் செய்திருக்கார். திருச்சானூர் லட்டு இம்முறையில் செய்ததா? அதுவும் தெரியாது.
பதிலளிநீக்குநன்றி கீசா மேடம்... இதை இன்னும் பொடித்திருந்தால் திருச்சானூர் லட்டு போல இருந்திருக்கும். திருச்சானூர் லட்டில் பச்சைக் கற்பூர வாசனை தூக்கலாக இருக்கும்.
நீக்குஎப்போது திருப்பதிக்குப் போகும் வாய்ப்பு வருமோ
வட மாநிலங்களின் மோதிசூர் லட்டு வேறு விதமாய் இருக்கும். இது மாதிரி இருந்ததில்லை. அதோடு அங்கெல்லாம் பச்சைக் கற்பூரம் சேர்த்தும் பார்த்தது இல்லை.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..
வாங்க துரை செல்வராஜூ சார்.. வணக்கம்.
நீக்குநம்ம ஆண்டாளோட தோப்பனார் கிச்சாவுக்காக செஞ்சு வச்சுண்டு கூப்டுறாரே - அதானே இது!..
பதிலளிநீக்கு:>))
நீக்குஎந்தப் பாசுரத்தில் என்று குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். லட்டுவின் தமிழ்ப்பெயர் லட்டுவம் என்பதைம் அது ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பே இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது என்பதுவும் பலருக்குத் தெரிந்திருக்கும் துரை செல்வராஜு சார்.
நீக்குஆமாம், எனக்கும் காலம்பர நினைவுக்கு வந்தது. எந்தப் பாசுரம் என நினைவு வராததாலும், பாசுரம் முழுதும் நினைவில் இல்லை என்பதாலும் போயிட்டேன். அந்தக் காலத்திலேயே லட்டுவம் என்று இருந்திருக்கிறது. சம்ஸ்கிருத ஸ்லோகங்களில் கூட நிவேதனங்களின் பெயரில் லட்டுகம் என்றும் வருமே! அது இதுவாய்த் தான் இருக்கணும்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குமோத்திசூர் லட்டு. நார்த் இண்டியன் இனிப்பு என்கிறீர்கள், திருச்சானூர் லட்டு என்கிறீர்கள், திருச்சானூர் எப்போது வட இந்தியாவோடு இணைந்தது?
பதிலளிநீக்குவட நாட்டு திருமால் கோவில்கள் என்பதில் திருப்பதியும் ஒன்று. இது திருப்பதியில் ஆரம்பித்து..... நைமிசாழண்யம், திருப்பிரிதி, முக்திநாத் என்று விரியும்.
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குமோத்திச்சூர் சாப்பிட்ட நினைவை பதிவு கொண்டுவந்தது.
லட்டு பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது. திருச்சானூர் லட்டு திருப்தி லட்டு போல இல்லையே என்று நினைத்துக் கொள்வேன். இதுதான் சூத்திரமா?
பதிலளிநீக்குஅதற்கு இன்னமும் பொடிக்கவேண்டும். முந்திரி இன்னபிற கிடையாது. நெய், பச்சைக்கற்பூரம் தூக்கல்.
நீக்குநீங்கள்தான் தொடர்ந்து ச.கு.வழங்கி வருகிறீர்களே..? புதிதாக எழுத ஆரம்பிப்பது போல ஒரு முன்னுரை?
பதிலளிநீக்குபல மாதங்கள் இடைவெளிக்குப் பின், எடுத்திருந்த படங்களை வைத்து இந்த வருடம் மே மாத்த்திலிருந்துதான் அனுப்பினேன்.
நீக்குஏட்டுச்சுரைக்காய் கூட்டுகு உதவாது.
பதிலளிநீக்குஇப்படி படங்களை போட்டு ஜொள்ளுவிட வைப்பது முறையல்ல!
வாங்க கில்லர்ஜி... இதைவிட சமீபத்தில் சக்கவரட்டி (பலாப்பழ அல்வா) பண்ணினேன். ருசி சொல்லி மாளாது. ரொம்ப அருமையா இருந்தது. எபிக்கு அனுப்பலை
நீக்குவணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்களில் தங்கள் செய்முறையான மோத்தி சூர் லட்டு அழகாக இருக்கிறது. படங்களும். செய்முறைகளும் அவ்வளவு தெளிவாக எடுத்து, எழுதியிருக்கிறீர்கள். இந்த முறையில் நான் இது வரையில் செய்ததில்லை. ஆனால் இந்த முறை கேள்விபட்டுள்ளேன். இனி செய்யும் போது இந்த முறையில் செய்து பார்க்கிறேன்.
பொறுமையாக செய்ததினால் லட்டுனுடைய கலரும் இயற்கையாக நன்றாக வந்துள்ளது. இதற்கு அடர்நிறமி கலர் ரொம்பவும் சேர்க்கத் தேவையில்லை எனத்தான் எனக்கும் தோன்றும். பார்க்கும் போதே சாப்பிடும் எண்ணம் வருகிற மாதிரி எதையும் தெளிவாக, பக்குவமாக செய்வது உங்கள் சிறப்பு. சிறந்த செய்முறைக்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இது ஒரு சுலப முறைதான். ஆனால் பாகு பத்த்தில் ஜாக்கிரதையா இருக்கணும். கொஞ்சம் முறுகினாலும் சரியா வராது கமலா ஹரிஹரன் மேடம்
நீக்குநெல்லை ஜி அநியாயம் பண்ணுறேள் ரிசிப்பியை இங்கே ஷேர் செய்கிறீர்கள் ஆனால் லட்டுவை மட்டும் நீங்கள் சாப்பீட்டுவிடுகிறீர்கள்.. இப்படி செய்வது நல்லதல்ல
பதிலளிநீக்குவாங்க செங்கோட்டையின் வாரிசே... உங்களை இனிமே உங்காத்து மாமி திரைப்படம் பார்க்க அனுமதிக்கக்கூடாது. படத்தைப் பார்த்து விஜயையோ இல்லை அஜீத்தையோ இதே மாதிரி கேள்வி கேட்டால் என்னாகும்? இல்லை இதே மாதிரி மத்தவங்களும் கேட்க ஆரம்பித்தால், ஒரு நடிகையும் நடிக்க வரமாட்டாங்களே
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குமோத்திசூர் லட்டு செய்முறை விளக்கமும், படங்களும் மிக அருமை.பாராட்டுகள் நெல்லை.
பதிலளிநீக்குஇறைவன் படங்கள் அழகு. லட்டு பிரசாதம் பெருமாளுக்கு மிகவும் பிடித்து இருக்கும்.
தினம் திருப்பதியில் ஒரே மாதிரி லட்டு சாப்பிடுவதிலிருந்து அவருக்கு மாறுதல்.
.
//நான், ஆர்வக்கோளாறில், கிராம்பையும் சேர்த்தேன். பூந்தி லட்டுவுக்கு ருசி கொடுப்பதுபோல இதற்கு கிராம்பு ருசி கொடுக்கவில்லை.//
இந்த லட்டுவில் கிராம்பு சேர்ப்பது இல்லைதான்.
நன்றி கோமதி அரசு மேடம்... திருப்பதி லட்டு எத்தனை முறை சாப்பிட்டாலும் எனக்கு அலுப்பதில்லை (நான் செல்லும்போதெல்லாம் பத்து லட்டு கூடுதலாக வாங்கிவருவேன்). திருச்சானூர் லட்டுதான் கற்பூர வாசனையால், இரண்டு மூன்றுக்கு மேல் சாப்பிடுவதில்லை.
நீக்குஅருமையாக செய்துள்ளீர்கள்...
பதிலளிநீக்குநன்றி திண்டுக்கல் தனபாலன்
நீக்குமோத்திசூர் லட்டு இங்கே மிகப் பிரபலம். பெரும்பாலான கோவில்களில் இது பிரசாதம் இங்கே!
பதிலளிநீக்குவாங்க வெங்கட். இதைவிட அதிகமாகப் பொடித்து அதனை பெரிய லட்டுபோல பிரசாதமாக துவாரகாநாத் ஜி கோவிலில் 150 ரூபாய்க்கு வாங்கினேன்.
நீக்குஇருந்தாலும் ட்ரெடிஷனல் லட்டு அல்லது சிறுமுத்துகள் போலப் பொரித்து அதனை வைத்துச் செய்யும் மோத்திச்சூர் லட்டு இன்னும் நன்றாக இருக்கும்.
அசத்தியிருக்கிறீர்கள் நெல்லைத்தமிழன்! பார்த்தாலே உடனேயே எடுத்து சாப்பிட வேண்டும்போல இருக்கிறது மோத்திசூர் லட்டு!
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோ சாமிநாதன் அவர்கள்
நீக்குகன்னல் லட்டுவத்தோடு சீடை
பதிலளிநீக்குகாரெள்ளின் உண்டை கலத்திலிட்டு
என்அகமென்று நான்வைத்துப் போந்தேன்
இவன்புக்கு அவற்றைப் பெறுத்திப்போந்தான்
பின்னும் அகம்புக்கு உறியை நோக்கிப்
பிறங்கொளி வெண்ணெயும் சோதிக்கின்றான்
உன்மகன் தன்னை யசோதை நங்காய்.
கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே..
திருப்பாசுரம் - 210 ஒன்பதாம் திருமொழி
- ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்தது..
இந்த மூன்று இனிப்புகளும் (லட்டுவம்-லட்டுகம் என்றும் உண்டு, கருப்பு எள்ளுருண்டை-கார் காலத்தில் விளையும் எள், சீடை-இது இனிப்புச் சீடைதானோ) 5ம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது.
நீக்குஎள் கோடை காலப் பயிராகும்.. ஆனி/ ஆடியில் அறுவடை முடிந்து விடும்... கார் எள் - கறுப்பு எள் என்பதற்காக..
நீக்குகன்னலிடை லட்டுவம் - கரும்புச் சர்க்கரை கொண்டு செய்யப்பட்டதாக ஆழ்வார் குறிக்கின்றார்...
இன்று வெள்ளை நிற இரசாயனத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்...
ஆஹா! இதோ இங்கே இருக்கே! "கண்ணன் வருவான்" தொடர் எழுதிக் கொண்டிருந்த சமயங்களில் பெரியாழ்வார் தான் நிறையக் கை கொடுத்து உதவி இருக்கார். ஆனாலும் பாசுரம் நினைவில் வரலை. பகிர்வுக்கு நன்றி துரை.
நீக்கு//எள் கோடை காலப் பயிராகும்.. // வடக்கே எல்லாம் பொங்கல் சமயம் தான் எள், வேர்க்கடலை போன்றவையும் அறுவடை ஆகும். சங்கராந்தி அன்று ஒருவருக்கொருவர் எள் மிட்டாய்கள், கடலை மிட்டாய்கள் எனக் கொடுத்து உபசரிப்பார்கள். நம்ம வீட்டிற்குப் பாக்கெட் பாக்கெட்டாக எள் மிட்டாய்களும், கடலை மிட்டாய்களும் வந்திருக்கின்றன.
நீக்குதுரை சார்..கன்னல் என்பது மூன்று இனிப்புகளுக்கும் உண்டானது. லட்டு மட்டுமல்ல மற்ற இனிப்புகளும் வெல்லத்தை வைத்துத்தான் செய்யப்பட்டன. அது சரி..ஜீனி இங்க வந்து நூற்றாண்டுகூட இருக்காதே
நீக்கு//வெள்ளை நிற ரசாயனம்// - வெல்லத்துக்கும் அதே கதிதான். நான் இங்கு இரசாயனம் கலக்காத இயற்கை வெல்லம் வாங்கினேன். கன்னங்கரேலென்று. எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் கடைக்காரர், வெள்ளையா இல்லைனா யாரும் வாங்குவதில்லை என்று ரசாயனம் கலந்த மண்டைவெல்லம்தான் போகுது என்றார்
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி கரந்தை சார்
நீக்குதிருப்பாசுரத்தைத் தொடர்ந்து நெல்லை அவர்களும் கீதாக்கா அவர்களும் சொல்லியிருப்பவை அருமை..
பதிலளிநீக்குமேத்தி சூர் லட்டு அருமை .
பதிலளிநீக்குநன்றி மாதேவி
நீக்கு