சனி, 24 ஜூலை, 2021

அதிவேக ரயில்

 

உலகின் அதிவேக ரயில் சீனாவில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் பறக்கும்

பெய்ஜிங்: மின்காந்த விசையை பயன்படுத்தி மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய உலகின் அதிவேக ரயிலை சீனா இன்று (ஜூலை 20) அறிமுகப்படுத்தியது.


latest tamil news


மேக்லெவ் ரயில் எனப்படும் அந்த வகை ரயில்களில் இரண்டு ஜோடி காந்தங்கள் பயன்படுத்தப்படும். ஒன்று ரயில் பெட்டியை தண்டவாளத்திற்கு மேல் உயர்த்தும், மற்றொரு காந்தம் அப்படி உயர்ந்து நிற்கும் ரயிலை மின்காந்த விசையால் முன்னோக்கி இயக்கும். சுமார் 20 ஆண்டுகளாகவே சீனா இந்த தொழில்நுட்பத்தை குறைந்த தூரங்களுக்கு பயன்படுத்தி வருகிறது. ஷாங்காய் விமான நிலையத்திலிருந்து நகரம் வரையிலான 29 கிலோ மீட்டர் தூரத்தை மேக்லெவ் ரயில் இணைக்கிறது. அது தான் உலகிலேயே அதிவேக வணிக ரயிலாகும். சுமார் 400 கி.மீ., என்ற அதிகப்பட்ச வேகத்தில் செல்லும்.


இந்நிலையில் மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய மற்றொரு ரயிலை தயாரித்து தனது சாதனையை தானே முறியடித்துள்ளது. குயிங்டாவ் எனும் நகரில் சீனாவால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட அந்த ரயில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. சீன அரசின் தகவல் அலுவலகம் இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


latest tamil news


இந்த ரயிலை மாகாணங்களுக்கிடையே பயன்படுத்த ஆய்வு நடந்து வருகிறது. மாகாணங்களை இணைக்கும் வகையில் பயன்பாட்டுக்கு வந்தால் பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய் இடையேயான 1,300 கிலோ மீட்டரை இரண்டரை மணி நேரத்தில் கடக்கும். தற்போது விமான பயண நேரம் இவ்விரு நகரங்களுக்கிடையே 3 மணி நேரமாக உள்ளது. பயன்பாட்டில் உள்ள அதிவேக ரயிலில் 5.5 மணி நேரம் ஆகிறது.

= = = = = =

தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம்; பாராட்டிய முதல்வர் ஸ்டாலின். 

சென்னை: 3ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரையிலான 741 தமிழ் எழுத்துகளால் திருவள்ளூவர் ஓவியத்தை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் கணேஷ் என்ற ஓவியர், கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துக்களை கொண்டு திருவள்ளூவர் ஓவியத்தை வரைந்துள்ளார். இதனை தமிழக முதல்வர் ஸ்டாலினின் டுவிட்டர் பதிவின் கீழாக கணேஷ் பதிவிட்டிருந்தார்.

இந்த ஓவியத்தை பார்த்து நெகிழ்ந்த ஸ்டாலின், 'அன்பின் வழியது உயிர்நிலை' என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்' எனப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

= = = = = =


= = = = =

ஊதுபத்தி தயாரிக்கிறது திருப்பதி கோயில் நிர்வாகம்.

திருமலை திருப்பதி கோவில் நிர்வாகத்தால் தயாரிக்கப்படும் ஊதுபத்தி வருகின்ற சுதந்திர தினம் முதல் விற்பனைக்கு வருகிறது.

நறுமண ஊதுபத்தி தயாரிப்பதற்கு தேவையான மலர்கள் மலை மலையாக திருமலைக்கு வருகிறது, இதனை அதன் பயன்பாட்டுக்கு பிறகு :ஊதுபத்தி தயாரிக்க பயன்படுத்தலாம் என்ற கருத்தின் அடிப்படையில் தற்போது கோவில் நிர்வாகம் ஊதுபத்தி தயாரிக்க முடிவு செய்துள்ளது.பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிரபல ஊதுபத்தி நிறுவனம் கோவிலின் இந்த முயற்சிக்கு லாப நோக்கமில்லாமல் உதவ முன்வந்துள்ளது.முதல் கட்டமாக ஊதுபத்தி லாடு கவுண்டர்களில் விற்பனை செய்யப்படும் பின்னர் மற்ற இடங்களுக்கு விற்பனை விரிவு செய்யப்படும்.

= = = =


= = = =

மிரர் இமேஜ் எழுதி சாதித்த தனியார் மேலாளர்: நான்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு. 

தேனி மாவட்டம், சின்னமனுார் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 52. ஓவியர்; 32 ஆண்டுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு வந்த இவர், மத்தம் அக்ரஹாரம் சாலையில் உள்ள தனியார் அப்பார்ட்மெண்டில் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, சுபாஷினி, 42, என்ற மனைவி, சுபனேஷ், 25, என்ற மகன், மீனாட்சி ஸ்வேதா, 22, என்ற மகள் உள்ளனர்.



latest tamil news

 

கடந்த சில மாதங்களுக்கு முன், யூ டியூப்பில் வாலிபர் ஒருவர் பின்வரிசையில் ஒரு நிமிடத்தில், 20 வார்த்தைகளை எழுதியதை பார்த்தார். அதேபோல் தானும் எழுத முடிவு செய்து, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பான விங்க்ஸ் ஆப் பையர் என்ற புத்தகத்தை, கண்ணாடியில் பார்த்து படிக்கும் வகையில், பின்வரிசையில் மிரர் இமேஜாக எழுத துவங்கினார்.


latest tamil news


45 நாட்களில் 200 பக்கங்கள்


தினமும் வேலை முடிந்து வந்து, இரவு நேரத்தில் ஒரு நாளைக்கு, 3 முதல், 4 பக்கங்கள் வீதம், 200 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தை, 45 நாட்களில் மிரர் இமேஜாக எழுதி முடித்தார். இதை பாராட்டும் வகையில், இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு, கலாம் வேல்டு ரெக்கார்டு, பிரேவோ வேல்டு ரெக்கார்டு, இன்டர்நேஷனல் அச்சுவ்மெண்ட் இந்தியா அவார்டு ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். இவரை, ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

= = = = =

 வம்பு : (மிர்ரர் இமேஜ் சாதனையால் என்ன பயன் ? விருதுகள் மட்டும்தான் - வேறு ஏதாவது இருக்கு என்றால் எங்களுக்கு சொல்லுங்கள் !!

= = = = =

34 கருத்துகள்:

  1. Mirror Image - இந்தத் திறமை எனக்கு உண்டு. தமிழில் வேகமாக பல பக்கங்களுக்கு எழுதுவேன் (கையெழுத்து மோசமாக இராது). ஆங்கிலத்திலும் எழுதினாலும் கொஞ்சம் சுமாராக இருக்கும்.

    இந்த மாதிரி, நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு மனைவிக்கு தமிழில் பல பக்கங்கள் கொண்ட கடிதம் எழுதியிருக்கிறேன்.

    இந்தத் திறமை, பேச்சுமொழியை எழுத்துகளைத் திருப்பிப் போட்டு பேசுவது, இடையில் வேறு எழுத்துகளைக் கொண்டு, பேசும்போது மற்றவர் சட்னு புரிந்துகொள்ளமுடியாமல் பேசுவது போன்று உபயோகமில்லாத திறமைதான்.

    ரெகார்ட், சர்டிபிகேட் - இவைகளின் தரம் தெரிந்ததுதான். ஒரு நிமிடத்துக்கு 25 மாங்காய்களைத் துண்டம் போட்டான், மூச்சுக் காற்றால் ஊதியே பலூனை பதினைந்து அடி உயரத்துக்குப் பறக்கவிட்டான் என்றுநகைப்பிற்கிடமான சாதனைகளைக் கௌரவிப்பவர்கள் அவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா சரியாகச் சொன்னீர்கள்.

      நீக்கு
    2. //இந்த மாதிரி, நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு மனைவிக்கு தமிழில் பல பக்கங்கள் கொண்ட கடிதம் எழுதியிருக்கிறேன்.// என்னாது..? நிச்சயதார்த்தம் ஆன பிறகு உங்களின் அப்போதைய எதிர் கால மனைவிக்கு மிரர் ரைடிங்கில் பல பக்கங்களுக்கு கடிதங்கள் எழுதினீர்களா? அதையும் மீறி அவர் உங்களை மணந்து கொண்டிருக்கிறார்...!!! க்ரேட்! உங்களுக்கு 80களின் இறுதியில் திருமணம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். இந்த காலமாக இருந்தால் "அவன் கேட்டான் மாதிரி புரியாமல் என்னவோ லெட்டர் I can't live with him" என்று மறுதளித்திருப்பார்.

      நீக்கு
    3. *கேட்டான் மாதிரி என்று திருத்திக் கொள்ளவும்.

      நீக்கு
    4. கொஞ்சம் விட்டால் 60களில் என்று சொல்லிடுவீங்க போலிருக்கே... இந்தக் காலத்தில், 'உனக்கு சமைக்கத் தெரியுமா' என்று வெறும்ன பேச்சுவாக்கில் கேட்டதற்கே நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டது, போன் பண்ணி என்ன பண்ணற என்று கேட்டதே தன்னைச் சந்தேகப்படுபவனாக அவனைக் காட்டுது என்று திருமணத்துக்கு முன்னால் முறித்துக்கொண்டதையும் சில வருடங்களுக்கு முன்பே மங்கையர் மலரில்(?) வந்ததை மறந்துட்டீங்களே...

      நீக்கு
    5. வம்பின் பலன் அதிவேக ரயிலாகிறது.:)

      நீக்கு
    6. //"அவன் கோட்டான் மாதிரி புரியாமல் என்னவோ லெட்டர் I can't live with him"// -சரி... இதுக்கு வம்பு இழுக்க வேண்டாம். 1. நீங்க யாருக்கேனும் ஒரு பரிசை, ஒரு பாக்ஸில் வைத்து, அதனை இன்னொரு பாக்ஸில் வைத்து.. அதுபோல சில பல பாக்ஸுகள் வைத்துக் கொடுத்திருக்கிறீர்களா? 2. எப்போதேனும், புதையல் தேடும் விளையாட்டை (ஒவ்வொரு இடத்துக்குச் செல்லும்போதும் அது அடுத்த இடத்துக்கான க்ளூ கொடுக்கும். கடைசியில் புதையலை அடையலாம்) விளையாடியிருக்கீங்களா? 3. ஒரு தொடர்கதையை தொடர்ந்து விடாம படித்திருக்கிறீர்களா? - இதை எல்லாம் செய்ய உங்களுக்குப் பொறுமை இல்லைனா, நீங்களும் என்னை மாதிரிதான் பா.வெ. மேடம். அப்படிப் பொறுமை இல்லாதவங்களுக்கு இந்த மாதிரி லெட்டர் அனுப்பினால் உபயோகமில்லை. ஹாஹாஹா.

      நீக்கு
    7. கேணயன் மாதிரி என்று அடித்தால் அது கேட்டான் என்று வருகிறது. இந்த ஆட்டோ ஸ்பெல் செக்கை என்ன செய்தால் தேவலை? அல்லது அதற்கு நெல்லை தமிழன் மீது என்ன கரிசனம்!!
      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று விஷயங்களும் செய்திருக்கும் பொறுமைசலி நான்.

      ஏன் குமுதத்தில் இப்படி கேணத்தனமாக கடைசி பக்கத்தில் போட்ட கதைகளைக் கூட எதிரே கண்ணாடி வைத்துக் கொண்டு அதில் காட்டி நடித்திருக்கும் மஹா பொறுமைசாலியாக்கம்.

      நீக்கு
    8. :-)

      திறமையில் பலனுள்ளது இல்லாதது என்று பார்ப்பதில் என்ன பலன்?

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    தொற்று இல்லாக் காலம் தொடர இறைவன் அருள
    வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. முன்பெல்லாம் ஜப்பான் இந்த ரயில் விஷயங்களில் முந்தி இருந்தது .
    இப்போது சைனாவின் முறை போல.

    வேகமாகச் சென்று வேகமாகத் திரும்பி விடலாம்.

    பதிலளிநீக்கு
  4. கால் நடைகளைக் காப்பாற்றிய அரசுக்கு நல் வாழ்த்துகள். வாயில்லா ஜீவங்கள் வாழ்த்தி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. இனிப்புகளை வழங்கி ஒற்றுமையைக் கொண்டாடும் வீரர்கள் என்றும் இதே போல இருக்க இறை அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  6. திருமலா திருப்பதி ஊதுபத்தி நன்றாகத் தான் இருக்கும். இதிலும் அரசியல் புகாமல் அந்த வேங்கடேசனே காக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. அதிவேக ரயில் ஏற்கனவே ஜப்பானில் இருக்கிறதோ?

    தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் ஓவியம், எல்லையில் இந்திய,பாக் வீரர்கள் இனிப்பு பரிமாறிக் கொள்வது போன்றவை அறிந்ததுதான்.

    மழையில் கால்நடைகளை காப்பாற்றிய புண்ணியவான்கள் வாழ்க!

    மின் ரைடிங்கில் அவர் எழுதி விட்டார்..சரி, யார் படிப்பது?

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. அதிவேக ரயில் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டேன். ஜப்பானில் இருப்பதாக கேள்வி பட்டுள்ளேன். . இப்போது சீனாவிலும், உலகிலேயே அதி வேகமாக செல்லக்கூடிய ரயிலை கண்டு பிடித்தமைக்கு வாழ்த்துகள்.

    கனமழையின் பாதிப்பினால் கால்நடைகளை தாழ்வான பகுதியிலிருந்து மீட்டு கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள். பாவம்..! அந்த வாயில்லா ஜீவன்களின் சிரமங்களை புரிந்து கொண்ட நல்ல இதயங்களை வாழ்த்துவோம்.

    தமிழ் எழுத்துகளினால் திருவள்ளுவரை ஓவியமாக வரைந்தவருக்கும், மனித நேயத்துடன் எல்லையில் பக்ரீத் கொண்டாட்டத்திற்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்த இராணுவ வீரர்களுக்கும் வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    திருப்பதி ஊதுபத்தி நல்ல வாசமாக விரைவில் பயன்பாட்டுக்கு வர இருப்பதற்கு சந்தோஷம். பின்னோக்கிச் எழுதி சாதனை படைத்த ஓவியர் திரு.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள். அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. சிறு வயதில் நான் டைரி எழுதும்போது பஇரர் அறியக்கூடாது என்பதற்காக இவ்வகையைத்தான் பயன் படுத்தி வந்தேன்.

    பதிலளிநீக்கு
  13. முப்பால் எனும் நான்கு எழுத்துகளை சேர்த்து எழுதியிருக்கலாம்... மூல எண் 7 வந்திருக்கும்...

    Mirror Image - பொறுமைக்கு இதுவும் ஒரு திறமையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பொறுமைக்கு இதுவும் // - படிப்பவங்களுக்கா எழுதறவங்களுக்கா? எழுதுவது சுலபம். அதுக்கு டிராயிங், விஷுவல் திறமை இருந்தால் போதும்

      நீக்கு
  14. மிரர் இமேஜில் எழுதியது தவிர்த்த மற்ற வை படித்தேன். அதிவேக ரயில் பற்றிய தொலைக்காட்சிச் செய்தியும் கால்நடைகள் காப்பாற்றப்பட்ட செய்தியும் படித்தேன். இந்திய-பாக் வீரர்கள் எல்லாத்திருவிழாக்கள்/பண்டிகைகளுக்கு ஒருவருக்கொருவர் இனிப்புக் கொடுத்துக் கொண்டாடிக் கொள்வார்கள். இது புதிது அல்ல.

    பதிலளிநீக்கு
  15. கால்நடைகளை மீட்டு வந்ததற்கு பாராட்டுகள்.தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  16. எல்லாம் நல்ல செய்திகள்.
    அவசர உலகத்திற்கு ஏற்ற அதிவேக ரயில்! தேவைகள் அதிகமாகி கொண்டே போகிறது.
    வள்ளுவர் ஓவியம் அருமை.
    கன மழையால் தவித்த கால் நடைகள் காப்பாற்றப்பட்டது மகிழ்ச்சி.
    மிரர் இமேஜில் 45 நாளில் 200 பக்கம் சாதனைதான் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. அறியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி. வம்பு... நெத்தியடி :)! தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் மூளைக்கும் கைகளுக்கும் நல்ல பயிற்சியாக இருக்கலாம். மற்றபடி...?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!