1977 ல் வெளியான கிருஷ்ணகானம் பற்றி முன்னரே சொல்லி, அதிலிருந்து டி எம் எஸ் பாடல் ஒன்றையும் பகிர்ந்திருந்தேன்.
இன்று அதே ஆல்பத்திலிருந்து இன்னொரு பாடல். இதுவும் கண்ணதாசன் கைவண்ணத்தில் உருவானதுதான். பாடியிருப்பவர் இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களே. பாடலின் ஆரம்ப இசையில் இருந்து, ஓங்கிய எம் எஸ் வி குரல் வரை கேட்கவே சிலிர்க்கும்.பாடலின் இடையே வந்து கொண்டிருக்கும் "ஓம்... ஓம்... ஹரி ஓம்..." காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
முதலில் எல்லாம் கிருஷ்ணகானம் என்றால் ஒன்று டி எம் எஸ் பாடல், இல்லை என்றால் எஸ் பி பி பாடல் என்றுதான் ஒலிபரப்புவார்கள். பின்னர் மற்ற பாடல்களையும் ஒலிபரப்பத் தொடங்கினார்கள். எல்லாப் பாடல்களுமே அருமையான பாடல்கள். பி சுசீலா, எஸ் ஜானகி, வீரமணி பாடிய அனைத்துப் பாடல்களுமே அருமையான பாடல்கள்.
ஓம் ஓம் ஓம் ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்
ஓம் ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்
முரளிமோகனம் சுவாமி அசுர மர்த்தனம்
கீத போதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம்...
நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்
பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் ஓம் ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
சந்திய பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம்
சர்வ ரட்சகம் சுவாமி தர்ம தத்துவம்
ராக பந்தனம் சுவாமி ராச லீலகம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் ஓம் ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம் பதித பாவனம் சுவாமி பக்த சாதகம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம்...
=======================================================================
பாலசுப்ரமணியம் என்பவர் 1970 ல் சிவாஜிக்காகவே எழுதிய இதன் கதையை சிவாஜி நிராகரித்து விட்டார். பின்னர் இந்தக் கதை கன்னடத்தில் எடுக்கபப்ட்டு மாபெரும் வெற்றிப் படம் ஆனபிறகு சிவாஜி சம்மதிக்க, 1975 ல் தமிழில் எடுத்தார்கள்.
சிவாஜியின் 175 வது படமாக அது அமைந்தது. இதன் ஒரு சிறு வசனத்துண்டை இன்றும் வாட்சாப் காணொளிகளில் அவ்வப்போது நண்பர் தின மற்றும் விசேஷங்களுக்கு ஃபார்வேர்ட் செய்வார்கள். நண்பர்கள் நன்றாய் இருக்க வேண்டும் என்று சிவாஜியின் பிரார்த்தனை அது.
அவன்தான் மனிதன்.
சிவாஜி, முத்துராமன், மேஜர், ஜெயலலிதா நடித்த திரைப்படம். ஏ ஸி திருலோகசந்தர் இயக்கத்தில், பாடல்களை கண்ணதாசன் எழுத, எம் எஸ் விஸ்வநாதன் இசை. பாடல்கள் அத்தனையும் இனிமையான பாடல்கள். மிக அருமையான பாடல்கள். வாழ்க கண்ணதாசன், வாழ்க எம் எஸ் வி...
இந்தப் படத்திலிருந்து 'அன்பு நடமாடும் கலைக்கூடமே' பாடலையும், 'எங்கிருந்தோ ஒரு குரல் வந்ததது' பாடலையும் முன்னரே பகிர்ந்திருக்கிறேன்.
கண்ணதாசன் வரிகள் யாவும் வாழ்க்கை அனுபவங்கள். ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களோடு அவர் வரிகளை பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். அதிலும் கண்ணன் பாடல்கள் எழுதுவது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல... எத்தனை பாடல்கள் எழுதி இருக்கிறார்...
இந்தப் பாடலை பாடி இருப்பவர் டி எம் எஸ்.
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம்
விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு..
பதிலளிநீக்குவாழ்க குறள் நெறி..
வாழ்க..
நீக்குஅன்பின் வணக்கம்
பதிலளிநீக்குஅனைவருக்கும்...
இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க வாழ்கவே..
நீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
பதிலளிநீக்குஅர்த்தமுள்ள இந்து மதம் தொடரில் கவியரசரே இந்தப் பாடலைப் பற்றி எழுதியிருக்கின்றார்.. முழுக்க முழுக்க சமஸ்க்ருத வார்த்தைகளுடன் கவியரசர் எழுதிய ஒரே பாட்டு இது..
சொல்லொணாத அமைதியை மனதிற்குக் கொடுக்கும் பாடல் இது..
மிகவும் பிடித்த பாடல்..
ஆமாம். எம் எஸ் வி சிறப்பாக அமைத்திருக்கிறார் இந்தப் பாடலை(யும்).
நீக்குஸ்ரீ க்ருஷ்ண கானத்தில்,
பதிலளிநீக்கு"கோகுலத்துப் பசுக்கள் எல்லாம்" எனும் பாடலில் வரும் வரிகள் இவை..
படிப்பில்லாத ஆட்கள் கூட பாதத்திலே போய் விழுந்தால் வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!..
இந்தத் தொகுப்பின் எல்லாப் பாடல்களுமே சிராப்பக இருக்கும். அதற்கு கவியரசர் முக்கிய காரணம். வீரமணி பாடல் உட்பட எல்லாமே இனிமை.
நீக்கு//எல்லாப் பாடல்களுமே சிராப்பக இருக்கும்//
நீக்குசிறப்பாக..!
1975 .. கவியரசர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராகத் திகழ்ந்திருந்த காலம் அது.. எல்லா தரப்பு மக்களும் அவரைக் கொண்டாடியிருந்தார்கள்..
பதிலளிநீக்குஅதற்கு முன்னர் தத்துவப் பாடல்களும் இறையருட் பாடல்களும் ஏராளம் அவரது கை வண்ணத்தில்.. இருந்தாலும் அந்த கால கட்டத்தில் இப்படியான பாடல்களைக் கேட்டு கண் கலங்கி நின்றார்கள்..
தங்களைத் தாங்களே எடை போட்டுப் பார்த்துக் கொண்டார்கள்..
ஆம். பாடல்களின் பொற்காலம்.
நீக்குதிருமாலின் திருமார்பில்
பதிலளிநீக்குஸ்ரீதேவி முகமே..
தீபங்கள் ஆராதனை
ஊரெங்கும் பூவாசனை!..
திரிசூலம் படப்பாடல் இது..
இந்த நான்கு வரிகளுக்குள் இருக்கும் அர்த்தங்கள்!... அடடா!..
கவியரசர் அவரே!..
எனக்கும் பிடித்த பாடல். அதில் ஒரு குறிப்பிட்ட இசை தொடங்கும்போது சிவாஜி நடக்க ஆரம்பிப்பதை ரசிப்பேன்!
நீக்குதிருமாலின் திருமார்பில்
பதிலளிநீக்குஸ்ரீதேவி முகமே..
தீபங்கள் ஆராதனை
ஊரெங்கும் பூவாசனை!..
இந்த நான்கு வரிகள் வேறொன்றை நினைவு படுத்துகின்றதா இல்லையா!..
இதன் மூலம் கவியரசர் - சொல்லாமல் சொல்லுவது யாரை!..
நீங்களே சொல்லி விடுங்கள்!
நீக்குயாராவது சொல்கின்றார்களா .. பார்ப்போம்!..
நீக்குகௌதம் ஜி .. அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்..
யோசிக்கணும் !!
நீக்குஅந்த கால கட்டத்திலும் கவியரசர் மீதும் அர்த்தமுள்ள இந்து மதம் தொடரை வெளியிட்டுக் கொண்டிருந்த தினமணிக் கதிரின் மீதும் புழுதி வாரித் தூற்றிக் கொண்டிருந்தனர் ஒரு தரப்பினர்.. பயங்கர மிரட்டல்கள் கூட விடுக்கப்பட்டன..
பதிலளிநீக்குஇன்று சமூக தளங்களில் பேசப்படும் சில விஷயங்களுக்கு முன்னோடி அவை!..
இந்தத் தூற்றல்கள் எப்போதுதான் இல்லை?! இப்போதிருந்தால் இன்னமும் கடுமையான வார்த்தைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அவர்!
நீக்குஅன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள். எல்லோரும் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குவணக்கம் வல்லிம்மா.. வாங்க. பிரார்த்திப்போம்.
நீக்குஹரிவராசனம் பாடல் வந்ததிலிருந்து ஒலித்த இசை,
பதிலளிநீக்குஇந்தப் பாடல்.
விஸ்வனாதன் ஸார் குரலில்
அமிர்தமாக இருக்கும்.
மீண்டும் பார்க்கலாம் பா.
நீக்குஆமாம் அம்மா.. அந்த சாயல் இருக்கும். சற்றே ஏறுமுகத்தில்! பார்க்கலாம் அம்மா.
நீக்குஆமாம், ஹரிவராசனம் பாடல் தான் நினைவில் வந்தது.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்!
நீக்குவாங்க கோமதி .அக்கா. வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் பூரண குணம் அடையப் பிரார்த்திப்போம். தொற்று மேன்மேலும் பரவாமல் அடியோடு இல்லாமல் போகவும் பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குவாங்க கீதா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குஉண்மையாகவே முதல் பாடல் கேட்டதே இல்லை! :( இரண்டாவது பாடல் அடிக்கடி கேட்டது. இரண்டுமே இனிமையான மனதைத் தொடும் பாடல்கள். கேட்டு ரசித்தேன். நன்றி.
பதிலளிநீக்குநிஜமாகவே ஆச்சர்யமாக இருக்கிறது.
நீக்குஇரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
நன்றி கோமதி அக்கா.
நீக்கு@ கீதாக்கா..
பதிலளிநீக்கு//உண்மையாகவே முதல் பாடல் கேட்டதே இல்லை!.. //
உண்மையிலேயே ஆச்சர்யம்..
நல்லவேளை சிவாஜி தப்பித்தார்..
அதேதான்..!
நீக்குஅதேதான்.. அதேதான்!!!
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா அக்கா.. வாங்க. பிரார்த்திப்போம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல்கள் இரண்டும் அருமை. இரண்டுமே அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். கிருஷ்ணன் பற்றிய பாடல்கள் என்றால் நம்முள் இயற்கையாகவே ஒரு ஈர்ப்பு வந்து விடும். பாடல்களை இயற்றிய கவியரசரையும், கானத்தால் நம்மை கட்டிப் போடுகிற மாதிரி இசையமைக்கும் எம். எஸ். வி அவர்களையும் என்றுமே மறக்க இயலாது. இன்றும் இந்தப் பாடல்களை கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கண்ண தாசன் அல்லவா... அவர் எழுத கேட்கவேண்டுமா?!
நீக்குஇரண்டுமே அருமையான பாடல்கள்...
பதிலளிநீக்குஆமாம் ஜி.
நீக்கு@ கௌதம் ஜி..
பதிலளிநீக்கு// யோசிக்கணும்!..//
புதன் கிழமைக்கு மடை மாற்றி விடுங்களேன்!..
பண்ணலாமே...
நீக்குமுதல் பாடலைக் கேட்டிருக்கிறேனா.. நினைவிலில்லை. இரண்டாவது ..ஆம்.
பதிலளிநீக்குகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தின் ஒரு சில அத்தியாயங்களை அல்லது அதன் சாரத்தையாவது, அல்லது அவரது எழுத்தில் தத்துவம் தெறிக்கும் பகுதிகளில் சிலவற்றை பள்ளிப் பாடங்களில் இணைக்கலாம். மென்மனங்களில் பதியும். மங்கலம் உண்டாகும்.
ஆனால்.. மங்கலத்தை விரும்புவோர் யார்..
மங்களம் தான் அல்லாருக்கும் வேணும்!.. அந்த காஸ்மெட்டி ஷாமியார் கூட சொன்னாரே...
நீக்குயார் அந்த மங்களம்?
நீக்குஅர்த்தமுள்ள இந்துமதம் மறுபடி எடுத்துக் படிக்கவேண்டும்.
காஸ்மெடிக் சாமியாரா!.. அது யாருங்க.. பதிவுக்குச் சம்பந்தம் இல்லாம?..
பதிலளிநீக்குஅவ்ரு தான்... அவ்ரே தான்!..
அவர்தானே? சரி.. சரி..
நீக்குஆஹா முதல் பாடல் மிக மிக மிகவும் பிடித்த பாடல். ஊரில் இருந்த வரைக்கும் கோயிலில் போட்டுக் கேட்டிருக்கிறேன் நிறைய. பலகாலம் கழித்து மீண்டும் எம் எஸ் வி அவர்களின் கணீர் குரலில் இந்தப் பாடலைக் கேட்கிறேன். நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஎன் சின்ன அறிவுக்கு எட்டியவரை அழகான தேனுகா அதே தேனுகா ஆட்டுவித்தால் யாரொருவர்...இரண்டுமே நிறைய கேட்டு ரசித்திருக்கிறேன், ஸ்ரீராம்
ஏன் ஆட்டுவிக்கிறாயோ....தெலியலேரு ராமா..... .
கீதா
ரேணுகா ராகமா? சே.. தேனுகா ராகமா? சொல்லி விட்டு தெலியலேது என்றால் எப்படி! ஆனால் அந்த ராகத்தில் சட்டென சொல்வதற்கு வேறு பாடல்களும் நினைவுக்கு வரவில்லை எனக்கும்!
நீக்குஸ்ரீராம் அந்த தெலியலேது என்று சொன்னது இரு பொருளில் - //ஏன் ஆட்டுவிக்கிறாயோ....தெலியலேரு ராமா...//.. .நீ ஆட்டுவிப்பது ஏன் என்று ஒன்றும் தெரியலையே....என்ற அர்த்தம் மற்றொன்று இரு பாடல்களும் தேனுகா!!! அழகான பெயர் இல்லையா?
நீக்குதேனுகா - இளைய ராஜா - இந்திரன் சந்திரன் ப்டம் - காதல் ராகம்
என் சோகக் கதைய கேளு தாய்க்குலமே
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் - இதில் ராகம் பளிச் ஆனால் சிச்சுவேஷன் ஹிஹிஹிஹி.
கீதா
இரண்டுமே பொருத்தமான பாடல்கள் கிருஷ்ணன், ராகம் எல்லாம்.
பதிலளிநீக்குசமீபத்திய இளையராஜாவின் மாயோனே மணிவண்ணா வும் தேனுகா...என்றுதான் தோன்றுகிறது.(ஆங்காங்கெ கொஞ்சம் சிந்துபைரவி மிக்ஸ் ஆகிறதோ என்று தோன்றும்....)
கீதா
அந்த சமீபத்திய பாடல் கேட்கவில்லை என்று நினைக்கிறேன்.
நீக்குஇரு பாடல்களுமே ரசித்துக் கேட்ட பாடல்கள், ஸ்ரீராம்ஜி. இப்போது பல வருடங்களுக்குப் பிறகு குறிப்பாக முதல் பாடல்,
பதிலளிநீக்குமிக்க நன்றி
துளசிதரன்
நன்றி துளஸிஜி.
நீக்குபகிர்ந்து கொண்ட இரண்டு பாடல்களும் சிறப்பு. முதல் பாடல் மிகவும் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஇரண்டும் அருமையான பாடல்கள்...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குமுதல் பாடல் சிலதடவைதான் கேட்டிருக்கிறேன். இரண்டாவது பல தடவை.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குஇந்த வரிகளை, ஆடாதாரே தேடாதாரேன்னு ... புரியலை..மாத்துண்ணே என்று எம்எஸ்வி சொல்ல, உனக்குப் புரியாதுடான்னு கண்ணதாசன் சொன்னார்னு படித்த பாடல்?
பதிலளிநீக்குபிடித்த பாடல்!
நீக்குஅருமையான பாடல்கள்
பதிலளிநீக்குஆம். நன்றி நெல்லை. நீங்கள் இப்போது இருக்கும் இடத்துக்குப் பொருத்தமாக பாடல்கள்!
நீக்கு