தமிழ்நம்பியின் பாடல். இசையமைத்து, தானே பாடி இருக்கிறார் டி எம் எஸ். யதேச்சையாக எடுத்தாலும் இதை மே 8 அன்னையர் தினம் அன்று அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் "பலர் வெறுத்தார் என்னை என்று பழிப்பதுண்டோ அன்னை" வரியும், அழுது விட்டேன் சும்மா நீ அன்பு செய்வாய் அம்மா" வரியும்.குறையொன்றும் இல்லை பாடலில் முடிவில் "ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா என்று வலியுறுத்தி சொல்லுவது போல ஒரு வரி வரும். அந்த வரியைக் கேட்கும்போது கேட்கும் நம் மனம் கலங்கி விடும். அதே அளவு இந்த வரிகளும் மனதில் நீந்துகின்றன.
காஞ்சி காமாட்சி உனைக்காணும் திருக்காட்சி
நெஞ்சின் இருள் ஓட்டும் அருள் நிலவுமுகம் காட்டும் - எழில்
கஞ்சி காமாட்சி
ஆசையினால் ஆடித்துன்பம் அடைந்ததெல்லாம் கோடி .
பாசத்தினால் கூவி உன்னை பாடுகின்றேன் தேவி - திருக்
கஞ்சி காமாட்சி
பலர் வெறுத்தார் என்னை என்று பழிப்பதுண்டோ அன்னை
கலைமகளே தாயே என் கருணைக்கடல் நீயே - தெய்வக்
கஞ்சி காமாட்சி
எழுதி விட்டார் யாரோ கண்ணில் இருப்பதெல்லாம் நீரோ
அழுதுவிட்டேன் சும்மா நீ அன்பு செய்வாய் அம்மா - அம்மா
காஞ்சி காமாட்சி உனைக்காணும் திருக்காட்சி
நெஞ்சின் இருள் ஓட்டும் அருள் நிலவுமுகம் காட்டும் - எழில்
கஞ்சி காமாட்சி
====================================================================
1964 ல் வெளியான திரைப்படம் ஆண்டவன் கட்டளை. பி எஸ் வி பிக்சர்ஸ் தயாரிப்பில் கே சங்கர் இயக்கத்தில் கண்ணதாசன் பாடல்களுக்கு மெல்லிசை இரட்டையர்கள் இசையமைத்த படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா முக்கிய பாத்திரங்களில்.
முதல் பாடல் சந்திரபாபு பாடல். சந்திரபாபு கண்ணதாசனிடம் தனக்காக பாடலை அழகாக எழுதித் தரும்படி கேட்பாராம். இந்தப் பாடலுக்கு என்ன குறைச்சல்! "மேடை ஏறி பேசும்போது ஆறுபோல பேச்சு... கீழ இறங்கிப் போகும்போது சொன்னதெல்லாம் போச்சு...!
அந்தக் கால அறிவுஜீவி நடிகர் சந்திரபாபு. கதாநாயகனாகவும், குணச்சித்திர பாத்திரங்களிலும் நிறைய நடித்திருக்கிறார். அவர் நடனமும் .ரசிக்கத்தக்க தனிரகம்.
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு
மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு
கீழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு
கீழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு
காசை எடுத்து நீட்டி கழுத பாடும் பாட்டு
ஆசை வார்த்த காட்டு உனக்குங்கூட ஓட்டு ஹஹஹா
உள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு
உள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு
ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு
ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு
நல்ல கணக்க மாத்து கள்ளக் கணக்க ஏத்து
நல்ல நேரம் பாத்து நண்பரை ஏமாத்து
(நண்பரையே மாத்து)
இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையுமே ஹிட். ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்த கீழ்க்காணும் பாடல் ஸ்டார் பகிர்வு. சந்திரபாபு பாடலை மட்டும் பகிர வந்தேன். இதையும் பகிர்வதை தடுக்க, தவிர்க்க முடியவில்லை. அமைதியான இந்த காதல் பாடலை ரசிக்காதவர்கள் யார். அந்த ஆரம்ப இசையே நெஞ்சை வருடி, மனதைத் தாலாட்டும். நெஞ்சும் மனமும் வேறு வேறா?!
டி ஈ.எம்.எஸ் சுசீலா குரல்களில் மகா இனிமையான பாடல். கண்ணதாசன் வரிகள் அற்புதம். ஆணுக்கு இரண்டு சரணம், பெண்ணுக்கு இரண்டு சரணம். ப்ரொபஸரின் மன தடுமாற்றத்தை மிக அழகாக நிலைநிறுத்தி இருக்கிறார் கண்ணதாசன்.
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவிலாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்'
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்
தென்னை இளம் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனை சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
தென்னைதனை சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் எனும் தென்றலில் தொட்டில் கட்டும் மென்மை இது
நாணம் எனும் தென்றலில் தொட்டில் கட்டும் மென்மை இது
அந்தியில் மயங்கிவிழும் காலையில் தெளிந்துவிடும்
அன்புமொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும்
அன்புமொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் என்றும் ஆரோக்கியமாக
அமைதியுடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.
வாங்க வல்லிம்மா... வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குஎழுதி விட்டார் யாரோ கண்ணில் இருப்பதெல்லாம் நீரோ
பதிலளிநீக்குஅழுதுவிட்டேன் சும்மா நீ அன்பு செய்வாய் அம்மா - அம்மா
காஞ்சி காமாட்சி உனைக்காணும் திருக்காட்சி
நெஞ்சின் இருள் ஓட்டும் அருள் நிலவுமுகம் காட்டும் - எழில்
கஞ்சி காமாட்சி ''
அம்மா தான் அன்பு செய்ய வேண்டும்.
காமாக்ஷி அன்னையே சரணம்.
ஆமாம் அம்மா.. மனதில் நிற்கும் வரிகள். நெகிழ வைக்கும் வரிகள், பாடல்.
நீக்குஎனக்குப் பிடிக்காத பாடல்கள் எதையும் நீங்கள் வெளியிடுவதில்லை என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் ஆயிரத்து எழுநூற்று முப்பத்து எட்டாவது முறையாகக் கேட்டாலும் திகட்டாத பாடலான 'அமைதியான நதியினிலே'வை வெளியிட்டதற்கு மிக்க நன்றி!
பதிலளிநீக்குஇசை கேட்டால் புவியே அசைந்தாடும்... நாமெல்லாம் ஆடமாட்டோமா என்ன!
நீக்குஅன்பின் வணக்கம்
பதிலளிநீக்குஅனைவருக்கும்...
இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க.. வாழ்க...
நீக்குஅனைத்தும் அற்புதமான பாடல்கள் ஜி
பதிலளிநீக்குஉண்மை. நன்றி ஜி.
நீக்குமுத்துக்கள் மூன்று என்பார்கள்.. அவை இன்றைக்கு நமது தளத்தில்!..
பதிலளிநீக்குரசனைக்கு நன்றி.
நீக்கு''காசை எடுத்து நீட்டி கழுத பாடும் பாட்டு
பதிலளிநீக்குஆசை வார்த்த காட்டு உனக்குங்கூட ஓட்டு ஹஹஹா'' எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத
சந்திரபாபுவின் குரல். கண்ணதாசனின்
கவிதை வரிகள்.
இந்தப் பாடலைக் கேட்கும் போதே
சிரிப்பு வரும் பாடலின் இசை.
சிறந்த அறிவு ஜீவி நீங்கள் சொல்வது போல.
அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே
எனக்குப் பிடிக்கும்.
ஆம். சோக பாடல்களும் பாடி இருக்கிறார்.
நீக்குசீர்காழி அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை சண்முகம் போல டி எம் எஸ் அவர்களுக்கு தமிழ்நம்பி..
பதிலளிநீக்கு70களில் இந்தப் பாடல்கள் மிகவும் பிரசித்தம்.. துள்ளித் திரிந்த அந்த காலத்திலேயே கண்ணில் நீரை வரழைத்த பாடல்..
ஆமாம். ரேடியோவில் போடும்போது நம் விருப்பப் பாடலாய் அமைந்து விடும்.
நீக்குசிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது ..
பதிலளிநீக்குஇன்னும் நூறாண்டுகள் ஆனாலும் அரசியல் வியாதிகளுக்கும் மர மண்டை மக்களுக்கும் பொருந்தி வரக்கூடிய பாடல்!..
கவியரசர் கவியரசர் தான்!..
அவர்கள் மாறமாட்டார்கள். எனவே பாடலும் எவர்க்ரீன்!
நீக்குஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
பதிலளிநீக்குகாற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை '' மிக மிகப் பிடித்த பாடல். திண்டுக்கல் செண்டிரல் தியேட்டரில்
பார்த்த படம்.
கண்ணதாசன் - எம் எஸ் வி
நீக்குஅனைவருக்கும் பல நாட்கள் கழித்துக் காலை/மதியம்/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொற்றில்லாத பாரதம் உருவாகப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குஒரு வாரத்தில் சென்னை கிளம்பி வரவேண்டும். ஒரு வருடக் கல்லூரிப்
பதிலளிநீக்குபடிப்புக்காக:)
இந்தப் படத்தில் வரும் அழகே வா,
வானொலியில் ஒலித்துக் கொண்டிருக்கும்.
சிவாஜியின் வித்தியாசமான நடிப்பு.
ஆறு மனமே ஆறு பாடல்.
தேவிகாவுக்குப் பித்தம் கலங்குவது..பிறகு இதே பாட்டைக் கேட்டு
பிறகு தெளிவது எல்லாமே அப்போது வேறு பட்டு இருந்தது.
அப்போது மிகப்பெரும் வெற்றிபெற்ற திரைப்படம். பாடல்களே பாதி காரணம்.
நீக்குநாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது..
பதிலளிநீக்குநாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது..
டகர டப்பாக்களுக்கு கை வராத கவி நயம்..
இந்த வரிகளின் போது தேவிகா அவர்களின் முகம் 100℅ நாணத்தில் மின்னும்..
இன்றைய ஜில்பான்ஸுகள் யாருக்கும் இப்படி நடிக்க வராது..
உண்மை. பாடலை வரிவரியாய் ரசிக்கலாம்.
நீக்குபக்திப்பாடல்களிலே டி.எம்.எஸ் உருகி இருப்பதோடு நம்மையும் உருக வைத்து விடுவார்.
பதிலளிநீக்குசந்திரபாபுவின் திறமை யாருக்கு வரும்? "சபாஷ் மீனா!" ஒண்ணு போதுமே!
1. ஆமாம். 2. ஆமாம்.
நீக்கு"ஆண்டவன் கட்டளை" படம் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் ஓடியது. பாஸ் கிடைச்சாலும் ஏனோ போகவில்லை. அண்ணா/தம்பி மட்டும் போனாங்கனு நினைக்கிறேன். ஆனால் பாடல்கள் அனைத்துமே அருமை! நிறையக் கேட்டு ரசித்தவை!
பதிலளிநீக்குநல்ல படம்தான். நன்றி கீதா அக்கா.
நீக்குசிவாஜியின் படங்களில் புஷ்பலதா ஏவி எம் ராஜன் ஜோடியும்
பதிலளிநீக்குஇருக்கும். அவர்கள் பாடுவது கண்ணிரண்டும் மின்ன மின்ன
கூட கேட்க இனிமை.
நல்ல பாடல்களுக்கும் அவை தந்த நினைவுகளுக்கும் மிக நன்றி ஸ்ரீராம்.
ஆம். அது பி பி ஸ்ரீனிவாஸ் டூயட் பாடல். இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே இனிமை.
நீக்குஎன் விருப்பமாக 'உறவு என்றொரு சொல்லிருந்தால்
பதிலளிநீக்குபிரிவு என்றொரு பொருளிருக்கும்"
பாடல் கேட்கலாமா?
இந்தப் பாடல்களைக் கேட்டதும் அந்தப் பாடல்
நினைவுக்கு வந்தது. அதுவும் தேவிகா பாடல் என்று நினைக்கிறேன்.
இதயத்தில் நீ படம்?
இதுவா பாருங்கள்...
நீக்குhttps://tinyurl.com/4k5xupyf
ஹிஹிஹி...
அது ரொம்ப சோகம் என்று கருதினால்,
பதிலளிநீக்குமகிழ்ச்சியான இன்னோரு பாடலைச் சேர்த்து விடுங்கள் மா:)))))
செய்துவிடலாம் அம்மா. கொஞ்சம் டயம் கொடுங்கள்!
நீக்குமிக நன்றி மா.
நீக்கு@ ஸ்ரீராம்..
பதிலளிநீக்கு//உண்மை. பாடலை வரிவரியாய் ரசிக்கலாம்..//
அந்தப் படத்திலேயே இன்னொரு பாடல் - அழகே வா.. அருகே வா!.. - என்று!..
ஆமாம். மேலே வல்லிம்மாவும் சொல்லி இருக்கிறார்.
நீக்குஇப்படியான பாடல்களை எல்லாம் ஜனரஞ்சகமாக்கியது அன்றைய இலங்கை வானொலி தான் என்பது அசைக்க முடியாத உண்மை..
பதிலளிநீக்குஎத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்... அத்தகைய பாடல்கள் இவை...
பதிலளிநீக்குமுற்றிலும் உண்மை. நன்றி DD.
நீக்கு//இப்படியான பாடல்களை எல்லாம் ஜனரஞ்சகமாக்கியது அன்றைய இலங்கை வானொலி தான் என்பது அசைக்க முடியாத உண்மை..//
பதிலளிநீக்குதுரை செல்வராஜூ ஸார்...
ஆம். இலங்கை வானொலி, 70களின் இணையற்ற பொழுதுபோக்கு பேரரசன்.
அந்த வசந்தகாலத்தின் ஒரு சிறு பகுதியை மீட்டு மனதில் மீண்டும் ஓடவிட்ட இளங்காலைப்பொழுதிற்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல நல்ல பாடல்களையும், அருமையான திரை நட்சத்திரங்களின் கலை வெளிப்பாடுகளையும் தமிழர்கள் அனுபவித்து மகிழவேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை.
உண்மை. இனிய பாடல்களால் நிறைந்த நாட்கள்.
நீக்குஉண்மை. இனிய பாடல்களால் நிறைந்த நாட்கள்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா. வணக்கம்.
நீக்குமூன்று பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்கள். அருமையான பாடல்கள். கேட்டு மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குநன்றி.
நன்றி.
நீக்குசந்திரபாபு அற்புதமான ஒரு நடிகர் - எத்தனை திறமைகள் அவரிடம். ஆனாலும் அவர் மேலும் ஷோபிக்காதது வேதனை. எம்.ஜி.ஆர். - சிவாஜி என இரு பெரும் நடிகர்கள் இருந்த இடத்தில் இவர் போன்றவர்கள் காணாமல் போனது வேதனை தான். பாடல்கள் கேட்டு ரசித்த பாடல்கள்.
பதிலளிநீக்குஅடுத்தவர் வளர்ச்சியைப் பொறுக்காத திரை உலகம். இன்பமும் துன்பமும் கலந்த வாழ்வு சந்திரபாபு அவர்களுக்கு. நன்றி வெங்கட்.
நீக்கு'அமைதியான நதியினிலே' 'சிரிப்பு வருது....' படங்கள் பார்த்ததில்லை . சிறுவயதில் அந்த நாட்களில் ரேடியோவில் கேட்ட பாடல்கள்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குமுதல் பாடலை கேட்டதில்லை. மற்ற இரண்டு பாடல்களும் அருமையானவை. குறிப்பாக அமைதியான நதியினிலே ஓடம் பாடலின் இசையும் பாடப்பட்ட விதமும் எத்தனை முறை வேண்டுமானாலும் சலிக்காமல் கேட்கவைக்கும். மனதை வருடும் பாடல் அது.
பதிலளிநீக்குநன்றி இணையதிண்ணை.
நீக்குமுதல் பாடல் கேட்டதில்லை. மற்ற இரு பாடல்களும் பல முறை கேட்டு ரசித்த பாடல்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
நன்றி துளஸிஜி. முதல் பாடல் மனதை நெகிழச்செய்யும் பக்திப்பாடல்.
நீக்குமுதல் பாடல் கேட்டதில்லையே ஸ்ரீராம். அல்லது ஒரு வேளை கேட்டு மனதில் பதிய வைக்காமல் போய்விட்டேனோ? 70களின் எனும் போது ஊரில்தானே இருந்தேன். கோயிலில் போட்டிருப்பார்களே. வரிகள்தான் நினைவில்லாமல் போய்விட்டதோ என்று பாடலைக் கேட்டால் இப்போதுதான் கேட்பது போல இருக்கிறது.
பதிலளிநீக்குஅதுவும் டிம் எஸ் எஸே இசையமைத்த பாடலா...ஆஹா ஜோன்புரியோ அதாவது வரிகளைப் பாடும் போது.என்று என் தம்மாத்துண்டு மூளையில் படுகிறது....பின்னணி இசை வைத்துச் சொல்லத் தெரியவில்லை....
அருமையான வரிகள். டி எம் எஸ் குரல் உருக்கம் சொல்ல வேண்டுமா!!!!
கீதா
ஜோன்புரி என்றா சொல்கிறீர்கள்? எப்படியோ இனிமையான பாடல் இல்லையா?
நீக்குஜோன்புரி இல்லையோ? வேறு என்ன ராகம் யாராவது சொன்னார்களா ஸ்ரீராம்?
நீக்குகீதா
அவர் முதல் வரி எடுத்துப் பாடும் போது பாடல் வரிகள் மட்டும் பாடும் போது நான் பாடிப் பார்த்ததும் பாருக்குள்ளே நல்ல நாடு பாடல் பாட வந்தது கூடவே எப்போ வருவாரோ என்று போனதால் அப்படி நினைத்தேன் ஆலாப் பண்ணியும் பார்த்தேன்,....வேறு வல்லுனர்கள் எபி வாட்சப் குழுவில் சொல்லியிருந்தால் சொல்லுங்கள் ஸ்ரீராம்...தெரிந்துகொள்ளலாமே...
நீக்குகீதா
இல்லை கீதா.. எனக்குத் தெரியாது.
நீக்குஓ ஒகே ஆனால் இனிமையான பாடல் ...மீண்டும் கேட்டேன் ஸ்ரீராம்.
நீக்குகீதா
மறக்க முடியுமா? என்ன அருமையான பாட்டு.
பதிலளிநீக்குநல்ல திறமையானவர். ஆனால் அவர் வாழ்க்கை இறுதியில் ரொம்பவும் சோகமாயிற்று. எப்படியோ போயிற்று. அவராகத் தேடிக் கொண்டதும் சில.
கீதா
ஆம். திறமையானவர்.
நீக்குஅமைதியான நதியினிலே பாட்டு ஆஹா செம பாட்டு ரொம்பப் பிடித்த பாட்டு. இந்தப் படம் கல்லூரியில் படித்த போது போட்ட நினைவு. நிழலான நினைவு. ஆனால் படம் நினைவில்லை யுட்யூபில் பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குராகம் சொல்ல நினைத்திருந்தேன் நீங்களே சொல்லிட்டீங்க...ஹரிகாம்போதியில் நிறைய சினிமாப்பாடல்கள் இருக்கின்றன. பெரும்பாலும் கீ போர்டில் போடுவதால், சங்கராபரணம், ஹரிகாம்போஜி, மோஹனம் எல்லாம் வந்துவிடும்.
கீதா
என்ன ஒரு பாடல் இல்லை? பொற்காலம்.
நீக்குமுதல் பாடல் கேட்டதில்லை.
பதிலளிநீக்கு'சிரிப்பு வருது, சிரிப்பு வருது..' எல்லா காலங்களுக்கும் பொருந்தும் பாடல்.
இப்போது கேட்டீர்களா? நன்றாயிருந்ததா? நன்றி பானு அக்கா.
நீக்கு'அமைதியான நதியினிலே ஓடம்..' பாடலை எத்தனை முறை கேட்டாலும் ரசிக்க முடியும். டி.எம்.எஸ். அவர்களின் குரலில் இருக்கும் கம்பீரம், சுசிலாவின் தென்றல் போல நம்மை வருடிச் செல்லும் குரல்...ஆஹா!
பதிலளிநீக்கு"நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது, நாணலெனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது.." என்னும் வரிகளில் மென்மை இது என்னும் இடத்தை ஒரு அழகான பிருகாவோடு பாடியிருப்பார். சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் பொழுது பல்லில் படும் முந்திரி மாதிரி சுவை.
நன்றி பானு அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவெள்ளி பாடல்கள் விளக்கங்கள் அனைத்தும் அருமை. முதல் பாடல் இது வரை கேட்டதில்லை. கேட்டு ரசித்தேன். உண்மை. டி எம் எஸ் ஸின் குரலில் பாடலை கேட்கும் போது ஒரு பக்திப் பரவசம் ஏற்பட்டது.
ஆண்டவன் கட்டளை படப்பாடல்களும் நன்றாக இருக்கிறது. அடிக்கடி ரேடியோவில் கேட்டதுதான். இன்று இரண்டையுமே கேட்டு ரசித்தேன். நேற்று என்னால் வலைத்தளம் வரவியவில்லை. அதனால் தாமதம். இந்த கருத்தைக்கூட நீங்கள் கவனிப்பீர்களோ என்னவோ அவ்வளவு தாமதம். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.