திங்கள், 16 மே, 2022

"திங்க"க்கிழமை : உருளை,காலிஃபிளவர்,பட்டாணி காரகறி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

 உருளை,காலிஃபிளவர்,பட்டாணி கார கறி 



தேவையான பொருள்கள்:

தலைப்பே சொல்கிறதே ...


உருளைக்கிழங்கு - 4
காலிஃபிளவர்  -  சிறியதாக இருந்தால் ஒன்று, பெரியதாக இருந்தால் பாதி 
பட்டாணி -  ஒரு கையளவு 
காரப்பொடி  -  2 டீ ஸ்பூன் 
மஞ்சள் பொடி  -  1 டீ ஸ்பூன்
உப்பு   -  1 1/2 டீ ஸ்பூன் 

செய்முறை::

காலி பிளவரை தனித்தனி பூவாக பிய்த்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொஞ்சம் பச்சைத் தண்ணீர் ஊற்றி, அதில் கொஞ்சம் உப்பை சேர்த்து, அந்த உப்பு நீரில் காலி பிளவர் முழுகும்படி  சற்று நேரம் வைத்திருக்கவும். 

உருளைக் கிழங்கை தோல் சீவி, சற்று பருமனாக நறுக்கிக் கொள்ளவும். 


வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணை ஊற்றி, கடுகு, சீரகம், உ.பருப்பு, க.பருப்பு இவைகளைப் போட்டு, அவை சிவந்ததும், உருளைக் கிழங்கு, காலி பிளவர், பட்டாணி இவைகளை சேர்த்து, காரப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு, இவைகளோடு பிடிக்கும்  என்றால் இஞ்சி,பூண்டு விழுதும் இரண்டு டீ ஸ்பூன் சேர்க்கலாம் .  மேலே ஒரு கை தண்ணீரை தெளித்து, அடுப்பை சிம்மில் வைத்து தட்டைப் போட்டு மூடி விடுங்கள். ஐந்து நிமிடங்களில் சுவையான கறி  ரெடியாகி விடும். நடுவில் இரண்டு முறை மூடியைத் திறந்து கிளறி விட மறக்க வேண்டாம். 

இது ஜீன்ஸ், சல்வார் இரண்டிற்கும் சூட் ஆகும் மிக்ஸ் அண்ட் மேட்ச் குர்தியைப் போல சப்பாத்தியோடும்  சூப்பராக ஜெல் ஆகும். மிளகூட்டல், சாம்பார் சாதத்திற்கும் நன்றாக இருக்கும். 

22 கருத்துகள்:

  1. அனைவரும் ஆரோக்கியத்துடன் நலமாக வாழ்ப் பிரார்த்தனைகள். இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. அன்பின் பானு ரெசிப்பியா. ??
    சுவையாக இருக்கும்.
    உ கி, பட்டாணி,காலிஃப்ளவர் சூப்பர் காம்பினேஷன்.
    அருமையான படங்கள்.

    நான் செய்யும் போது முதலில் உ.பருப்பு,க.பருப்பு போட்டுத்
    தாளிப்பதில்லை,.
    ஜலம் தெளித்ததும் ஊறிப் போய்விடும்.

    அதற்குப் பதில் , கொஞ்ச எண்ணெயில் காய்கறிகளை
    வதக்கிக் கொண்டு உப்பு, மஞ்சப்பொடி,காரப் பொடி
    சேர்த்து மூடி வைத்துவிடுவேன்.
    கடைசியில் பருப்புகளை வறுத்துப்
    பொடி செய்து போடுவேன் .பெருங்காயமும் சேர்ப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஜீன்ஸ், சல்வார் இரண்டிற்கும் சூட் ஆகும் மிக்ஸ் அண்ட் மேட்ச் குர்தியைப் போல சப்பாத்தியோடும் சூப்பராக ஜெல் ஆகும். மிளகூட்டல், சாம்பார் சாதத்திற்கும் நன்றாக இருக்கும். ''

      முதல் வரியைப் பார்த்து திகைத்து விட்டேன். பிறகு ஒரே சிரிப்பு தான். எழுத்தாளர்
      டச் என்பது இது தான்!!!
      அன்பு வாழ்த்துகள்.

      நீக்கு
  3. ஆவலைத் தூண்டும் ரெஸிப்பி.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான சமையல் குறிப்பு. காலி ஃப்ளவர் சீசனில் மட்டும் வாங்குவது நல்லது. இப்போது எல்லா நாட்களிலும் கிடைக்கிறது என்றாலும் குளிர் காலத்தில் நன்றாக இருக்கும்.அப்போது வாங்கி சமைப்பது நல்லது.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  6. நல்ல ரெசிப்பி. செய்துபார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு சமையல் குறிப்பு.. அப்படியே பச்சைப் பட்டாணிக்கு ஒருநாள் விடுமுறை கொடுத்து விட்டு பனீர் துண்டுகளைப் போட்டும் திருவிழா நடத்தலாம்.. தின்று தீர்க்கலாம்..

    பதிலளிநீக்கு
  8. அனைத்திற்கும் பொருந்தும் என்பது அருமை...!

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா16 மே, 2022 அன்று 9:44 AM

    பேசாமல் பானுமதிம்மாவை கனடாவில் இருந்து கடத்தி கொண்டு வந்து அமெரிக்காவில் வச்சுகிட்டால் வாய்க்கு ருசியா சாப்பாடு கிடைக்கும் போல இருக்கே

    அவர்கள்...உண்மைகள்(மதுரைத்தமிழன்)

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  11. உருளை,காலிஃபிளவர்,பட்டாணி கார கறி அருமை.
    செய்முறை குறிப்பும், படங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. பானுக்கா இது நல்ல ரெசிப்பி. சூப்பர் கலவை. ஆமாம் எல்லாவற்றிற்கும் பொருந்தும். வெறும் சாதத்தோடு கலந்து (காய் சாதம் போல) சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. தண்ணீர் தெளிக்காமல் மூடி போட்டு வதக்கினால் காய் சாதமாகக் கலந்தும் விடலாம் இல்லையாக்கா..? நன்றாக இருக்கும். வெந்தும் கடிக்கும்படியாகவும்.

    இதில் நிறைய ஒன்று மாற்றி ஒன்று மாற்றி செய்யலாம்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. படங்களும் உங்கள் குறிப்புகள் சூப்பர் பானுக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். இந்தக் கறி தான் அடிக்கடி பண்ணுவோமே. ஆனால் க.ப.., உ.ப. எல்லாம் போட்டதில்லை. காலிஃப்ளவரை அநேகமாச் சாப்பாட்டுக்கு வைச்சதில்லை. ஒன்லி பார் ஃபார் சப்பாத்தி, பராந்தா!

    பதிலளிநீக்கு
  16. எடுத்த எடுப்பிலேயே கருத்துப் போகாமல் தகராறு! :( பின்னர் போய் விட்டது. முந்தாநாள் தான் உ.கி.காரக்கறி பண்ணினேன். சி.உ.கி.

    பதிலளிநீக்கு
  17. சாதாரணமாக ஒரு கை ஜலம் தெளித்து மூடிபோட்டு வதக்கினால் சரியாக எல்லாம் சேர்ந்து வெந்தும் வதங்கும் பொதுவாக இந்த முறை மிகவும் நல்லது மிக்க நன்றி அன்புடன்

    பதிலளிநீக்கு
  18. நம்மூர்களில் தான் காலிஃப்ளவர் எப்போதாவது கிடைக்கும் .. அங்கே வருடம் முழுதும் என்பதால் காலிஃளவர், உருளைக் கிழங்கு, பனீர் என்று அவ்வப்போது போட்டுத் தாக்கி விடுவது.. இதில் சாம்பார் மசாலா சேர்த்து என்பது ஒரு வகை..

    இன்னொரு வகை கரம் மசாலாவும் க்ரீமும்.. ஆகா!..

    பதிலளிநீக்கு
  19. எதற்கும் பொருந்தும் காரக் கறி.
    மசாலாதூள் சிறிது சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!