வாழைப்பழ ரொட்டியா? பெயரைக் கேட்டாலே வாடுதே ப்ரதர்? எப்படிச் சாப்பிடத் தோணும்னு நினைக்கிறிங்களா சிஸ்டர்? நானும் தான். தலைப்பை மாத்திருவோம்.
பனானா ப்ரெட்
இப்பதான் நல்லா மாஸா தமிழ்பெயர் மாதிரி இனிக்குது. சும்மாவா பாடினான் தமிழுக்கும் அமுதென்று பேர்னு? இப்படியே வச்சுக்குவோம். முன்பெல்லாம் என் பிள்ளைகளுக்காக அடிக்கடி செய்த, இப்போதெல்லாம் அதிசயமாகச் செய்கிற, திடமான காலையுணவு. மதிய காபி/டீயுடன் சேரும் நொறுக்குத் தீனி. சமீபத்தில் சமைக்க நேர்ந்தது. விடுவேனா? பிடிங்க சமையல் குறிப்பு.
முதலில் தேவையானவற்றைச் சேகரிப்போம்: 1. வாழைப்பழம்பனானா பிரெட்னு பேர் வச்சிட்டு தக்காளிப்பழமா சேர்ப்பாங்க? மூன்று வாழைப்பழங்களை (அரையடி நீள ஒண்ணரை இஞ்ச் அகல பெரிய பழங்கள்) மிதமாகப் பழுத்தவையாக எடுத்துக் கொண்டேன். ஒரு அகண்ட கண்ணாடிப் பாத்திரத்தில் பழங்களைத் தோல் நீக்கித் துண்டுகளாக்கிக் குழையடித்துக் கொள்ளவும். மிகக் கனிந்த பழங்களாகவும் சேர்க்கலாம் (பொதுவாக அப்படித்தான் சேர்ப்பார்கள். இனிக்கும்). உங்கள் விருப்பம்.
அளவு: 3 பழங்கள்.
2. ப்லூபெரிசத்தியமாகத் தமிழ்ப்பேர் தெரியாதுங்க. (இன்னாடா இவன்? தக்காளியா சேர்ப்பாங்கனு செம கெத்தா கேட்டு இப்ப இன்னாவோ பெரி சேருன்றானே?) மெர்சலாவாதிங்க தல. கலருக்காகவும் இனிப்புக்காகவும் சேர்த்தேன். கனிந்த அன்னாசிப்பழம் சேர்க்கலாம். அல்லது காய்ந்த திராட்சையும் சேர்க்கலாம். உபரிப் பழமே சேர்க்காதுமிருக்கலாம். வாழைப்பழமே போதும். அளவு: 2 டேபில் ஸ்பூன்.3. ஏலக்காய், பாதாம்பருப்புவால்நட் (டேமில்ல என்ன அங்கில்?), பிஸ்தா அல்லது முந்திரிப்பருப்பு சேர்க்கலாம். சேசான சூட்டில் சிவக்க வறுத்து, பாதி பொடித்தும் மீதியை இன்னும் பொடியாக அரைத்தும் பிரித்து வைத்துக்கொள்ளவும். செய்முறையில் மேலும் சொல்கிறேன். நட் அலர்ஜி உள்ளர்வர்கள் தவிர்க்கவும். ஏலக்காய் பிடிக்காதவர்கள் (அடக்கமலஹாசா!) வெனிலா எசென்ஸ் இரு சொட்டு சேர்க்கலாம். மகள்: daddy, my friends are avoiding me daddy.. மகன்: may be they are allergic to nuts? அளவு: 2 டேபில் ஸ்பூன்.
4. வெண்ணை இன்னொரு அகண்ட கண்ணாடிப் பாத்திரத்தில் வெண்ணையை மிதமாக இளக வைக்கவும். வெண்ணை சேர்த்தால் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும். வெண்ணை ஏற்புடையதில்லையென்றால் ஆலிவ் அல்லது உங்கள் விருப்ப சமையல் எண்ணை சேர்க்கலாம் (எமது வாக்கு வெண்ணைக்கே. வெண்ணை தான் வாராரு..). சிறுவயதில் என்னை "ஏலே வெண்ணே" என்று தாத்தா அழைக்கும் பொழுதெல்லாம் அன்பு மிகுதியால் அப்படி அழைக்கிறார் என்று நினைத்தேன். பின்னாளில் புரிந்தது. ஹ்ஹ்ம். தாத்தா, டேய்! அளவு: 5-6 டேபில் ஸ்பூன்.
5. வெல்லம் அல்லது சர்க்கரை. நான் ஆர்கேனிக் வெல்லப்பொடி சேர்த்தேன். இயற்கையொட்டி சாப்பிடுதல் நலம். செயற்கை அதிகம் சேர்ப்பதில்லை. ஆர்கேனிக் வெல்லத்தின் நிறம் மணம் சுவை அருகில் சர்க்கரை நிற்க முடியாது. சர்க்கரை பாதி வெல்லம் பாதி சேர்ந்ததென்னவோ இனிப்பு ஜாதி என்று பிபிஸ்ரீ குரலில் பாடியபடி விரும்பினால் வெல்லம் சர்க்கரை இரண்டும் சேர்க்கலாம். முன்பெல்லாம் பிள்ளகளுக்காகத் தேன் சேர்த்ததுண்டு. அளவு: 6-8 டேபில் ஸ்பூன்.
6. பால் மாட்டுப்பால் ஒவ்வாதுனா பாதாம்பால், ஓட்ஸ்பால் ஸோய்பால் சேர்க்கலாம். ஸோய்பாலா.. உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தோணலே? சுவையான பசும்பாலுக்கு ஈடு இணை உண்டா? என்னவோ போங்க. சில பேரு பாலுக்கு பதிலா தண்ணி சேக்குறாங்க. படத்தைப் பாத்துட்டு வேறே தண்ணினு நினைச்சுராதிங்க. ஹிஹி.. ஷாட் கிளாஸ்ல ஊத்துனதும் கள்ளா பாலா தெரியலே. அளவு: 1 லார்ஜ். அதாவது கால் கப்.
7. கோதுமை மாவு மாவு முக்கியங்க. நான் கோதுமை மாவு (பலதானிய மாவு) சேர்த்தேன். மைதா, சோளம், ஆல் பர்பஸ் என்றும் கிடைக்கிறது மாவு வகை. ராகி, கம்பு என்று ரொம்ப ஓவராகப் போகிறவர்கள் போகட்டும். மாவுதான் ரொட்டிக்கு வேர் என்பதால் நல்ல மாவு முக்கியம். முழுதானிய மாவு எதுவாகிலும் நன்று. கோதுமை நன்றிலும் நன்று. அளவு: அரை கப்.
8. ஓட்ஸ் நான் பாரம்பரிய (கைகுத்தல் போலவே மெஷின் குத்தல்) ஓட்ஸ் சேர்த்திருக்கிறேன். அவசர ஓட்ஸ் வகையும் சேர்க்கலாம். அதிக வித்தியாசம் இல்லை என்பது ஆச்சரியம் தான். லேசான சூட்டில் சிவக்க வறுத்து, பாதி ஓட்ஸை அப்படியே வைத்து, மீதியை பொடியாக அரைத்துக் கொள்ளவும். செய்முறையில் மீண்டும் சந்திப்போம். அளவு: 3 டேபில் ஸ்பூன்.
9. முட்டை வெள்ளை மட்டும் தனியாக அல்லது மஞ்சளுடன் கலந்து சேர்க்கலாம். நான் வெள்ளைக்கரு மட்டும் சேர்த்தேன். முட்டை வேண்டாமெனில் தவிர்க்கலாம். முட்டைக்குப் பதிலாக நன்கு புளித்த தயிர் சேர்க்கலாம். அளவு: 1 முட்டை அல்லது 1 டேபில் ஸ்பூன் தயிர்.
10. பிற பேகிங் பவுடர் அல்லது யீஸ்ட் சேர்க்கலாம். ப்ரெட் நன்கு உப்பி வரும். நான் பேகிங் பவுடர் அல்லது யீஸ்ட் சேர்ப்பதில்லை. இயற்கையொட்டிய உணவு. நான் சமைப்பதில் முடிந்தவரை எதுவும் செயற்கை இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். முட்டையும் (அல்லது புளித்த தயிரும்) உப்பும் பேகிங் சோடாவின் வேலையைச் செய்யும். அளவு: 1 டேபில் ஸ்பூன் உப்பு அல்லது 1 டீஸ்பூன் பேகிங் பவுடர்/யீஸ்ட்.
1. வெண்ணைப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.2. வெல்லப்பொடி அல்லது சர்க்கரை (தேன் வேண்டுமானால்) சேர்க்கவும். 3. பொடித்து வைத்த (அரைத்த பொடி அல்ல) பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு வகையை சேர்க்கவும். 4. முழு ஓட்ஸை சேர்க்கவும் (அரைத்த பொடி அல்ல) 5. பாலைச் சேர்க்கவும் 6. முட்டை சேர்க்கவும். அல்லது தயிர் சேர்க்கவும். 7. கொஞ்சம் ஏலக்காய் பொடி அல்லது ஒரு சொட்டு வெனிலா எசென்ஸ் சேர்க்கவும் 8. கோதுமை மாவை சேர்க்கவும் (அல்லது உங்கள் விருப்ப மாவு)9. பேகிங் பவுடர் அல்லது யீஸ்ட் வேண்டுமானால் சேர்க்கவும்.10. இப்பொழுது பழப்பாத்திரத்திலிருந்து பழக் குழைவை சேர்க்கவும். 11. எல்லாவற்றையும் பொறுமையாக நன்றாகக் கலக்கவும். கட்டி தட்டாமல் மிருதுவாக இருக்கவேண்டும் கலவை. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். கலவை நீர்க்கவும் இருக்கக் கூடாது, களியாகவும் இருக்கக்கூடாது. 12. அரைத்த பருப்பு, ஓட்ஸ் சொன்னேன் நினைவிருக்கிறதா? எடுங்கள். 13. கலவை மேல் மூடும் விதமாக கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி மூடவும். 14.ப்ரெட் கலவை தயார்.
1. ஒவனை 360 டிகிரிக்கு பதப்படுத்திக் கொள்ளவும். 2. 360 டிகிரியில் 1 மணி நேரம் ப்ரெட் கலவையை வேக வைக்கவும். அவ்வப்போது கவனிக்கவும். கருகி விடக்கூடாது. வீடு முழுதும் மணக்கும். அதான் அடையாளம், ப்ரெட் நன்றாக வெந்து உப்பி வருகிறது என்பதற்கு. 3. ஒரு மணியானதும் அல்லது அதற்கு முன்போ ஒவனிலிருந்து எடுத்து வெளியே வைக்கவும். படத்தில் உள்ளது போல் மேற்புறம் சிவந்து வறுபட்டும் பக்கவாட்டில் பொன்னிறத்துடனும் இருக்கவேண்டும்.4. ஒரு கத்தியினால் மேற்புறத்தில் குத்தி எடுத்தால் கத்தியில் மாவுக்கலவை ஒட்டாமல் திரும்பவேண்டும். ப்ரெட் தயார்.
1. இரண்டு மணி நேரமாவது ஆற வைக்கவும். ப்ரிட்ஜில் வைக்க வேண்டாம். 2. ஆறியதும் ப்ரெட் சுலபமாக எடுத்து இன்னொரு தட்டில் வைக்கமுடியும். கவனமாக ப்ரெட்டை கண்ணாடிப் பாத்திரத்திலிருந்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.3. உடனடியாகச் சாப்பிட்டே ஆகவேண்டுமென்றால் ஒரு ஸ்லைஸ் எடுத்துக் கொள்ளவும். ஒரு சீவல் வெண்ணை இருந்தால் ப்ரெட் ஸ்லைஸ் மேல் தடவி அனுபவித்து சாப்பிடவும்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஆரோக்கியம் நிறை வாழ்வு தொடரட்டும்.
இறைவன் அருள்.
வாங்க வல்லிம்மா. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குஇத்தனை அருமையான செய்முறை விளக்கங்களுடன்
பதிலளிநீக்குபனானா ப்ரெட் சொல்லி இருப்பது மிக சிறப்பு.
அப்பாதுரை அழகான தமிழில் விவரித்திருக்கும் விதம்
எளிமையாக இருக்கிறது.
படங்கள் முதலிலிருந்து முடிவுவரை
அற்புதமாக எடுத்துப் பதிந்திருக்கிறார்.
ஆமாம். ராத்தூக்கம் துறந்து சிரத்தையுடன் தயாரிக்கப்பட்ட பதிவு. நன்றி அப்பாஜி.
நீக்குஓ அப்படியா. பாராட்டுகள் மா.
நீக்குவாழைப்பழக் குழைவு போலவே பதிவும் ஒண்ணுக்கொண்ணு இடிச்சுக்கிட்டு வந்திருக்கே?
நீக்கு-அப்பாதுரை
அழகான செய்முறை விளக்கம்.
பதிலளிநீக்கு''பழப்பாத்திரத்திலிருந்து பழக் குழைவை சேர்க்கவும்.''
பதிலளிநீக்குவாவ். தமிழ் மொழியில் வல்லமை பெற்றிருக்கிறார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
''பனானா ப்ரெட்
இப்பதான் நல்லா மாஸா தமிழ்பெயர் மாதிரி இனிக்குது. சும்மாவா பாடினான் தமிழுக்கும் அமுதென்று பேர்னு? இப்படியே வச்சுக்குவோம். ''
ஹாஹா.
அவன்'' இல் வைத்து செய்த ரொட்டி மிகப்
பதிலளிநீக்குபிரமாத வடிவில் வந்திருக்கிறது.
உள்ளே சேர்க்கப்பட்ட nuts பாதாம், பிஸ்தா,பழங்கள்
ஏலக்காய் என்று ஒரு நல்ல கச்சேரியே
நடத்தி இருக்கிறார்.
மனம் நிறை வாழ்த்துகள். துரை.
நான் பாதாம் மட்டும் தான் சேர்த்தேன்.
நீக்கு-அப்பாதுரை
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
பதிலளிநீக்குவாழைப்பழ ரொட்டியின் தயாரிப்பு விளக்கம் அருமை! செய்து பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம்
பதிலளிநீக்குஅனைவருக்கும்...
இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
ஆத்தாடி என்னா செய்முறை...!
பதிலளிநீக்குஇந்திய ஓவன்களில் 200 டிகிரிக்கு மேல் வைக்க முடியாதாமே? அப்படியா? எனில் ஒரு மணிக்கு பதிலாக ஒன்றரை மணி நேரம் வேகட்டும்.
பதிலளிநீக்குஒவன் இல்லைனா என்ன செய்யனு ஒருத்தர் வாட்சப்ல கேட்டிருக்கார். எங்க ஊர் காஸ் அடுப்புல செய்யுறாப்ல சொன்னா என்னவாம்னு கேட்டிருக்காரு. நியாயமான கேள்வி.
ஒவன் இல்லைனா ரெசிபியை மட்டும் படிச்சுட்டு எதுக்கு கஷ்டம்னு பக்கத்து தெரு கபே டே கடைல பனானா ப்ரெட் உடன் காபி (400 ரூபாய் தாளிப்பான்) வாங்கி சாப்பிடலாம்.
ப்ரெஷர் குக்கரில் வேக வைத்து கேக் போல் வரும் - பரவாயில்லையென்றால் முயற்சிக்கவும். (என்னை அழைக்க வேண்டாமே)
இங்க ஓவன்களில் 250 செ.கி இருக்கே. சிலதுல 200 செ கி. நீங்க சொல்லிருக்கறது 360 செ கியா, ஃபா ஹீ யா?
நீக்குஇதைக் கேக்க நினைச்சேன், செ கி யா ஃபா ஹீ யானு.
360 ஃபா ஹீ நா 180 செகி வைச்சா சரியா வரும்.
இல்லைனா இருக்கவே இருக்கு குக்கர்! செய்யலாம். குக்கர் கேக்.
கீதா
ஆமாம், நான் முன்னெல்லாம் சீனாச்சட்டியில் மணல்/உப்புப் போட்டுத் தான் ப்ரெட், பிஸ்கட்,கேக் எல்லாம் பண்ணினேன். பின்னர் தான் தொண்ணூறுகளில் பஜாஜ் அவன் வாங்கினேன். அதையும் பொண்ணு கல்யாணம் ஆகிப் போனதும் தானம் செய்தாச்சு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குஎப்படிச் செய்வது? தெரிந்து கொள்ள ஆவல். யுட்யூபில் தேடினால் ஒன்றும் தென்படவில்லை.
நீக்கு- அப்பாதுரை
செகி அல்ல
நீக்குபாஹி(மாம்)
நல்ல வேளை சொன்னிங்ளே!
நீக்கு360 டிகிரி பாரன்ஹைட்
150 டிகிரி செல்ஸியஸ்
200 டிகிரில நான் சொன்னாப்புல ரெண்டு மணி நேரம் வேக வச்சிட்டு வீடு பத்திக்கிச்சினு என்னை துரத்திட்டு வரதுக்கு முன்னால வாட்சப்ல பதில மாத்திடறேன்.. முருகா.. என்னைக் காப்பாத்துரா.
செகி அல்ல
நீக்குபாஹி(மாம்)//
ஹாஹாஹாஹாஹா..
அப்பாஜி எப்பவுமே பேக்கிங்க் பத்தி சொல்றப்ப மேலை நாடா இந்தியாவான்னு பாத்து இந்த பாஹீ செ எல்லாம் சொல்லணுமாக்கும்!! ஹிஹிஹி
முருகா.. என்னைக் காப்பாத்துரா.//
முருகருக்கு காம்ப்ளிமென்டா நோ கீதா காப்பாத்திட்டா!!! ஹிஹிஹிஹி
ஜி, குக்கர் ல அது உசர குக்கரை விட Pan இருந்தா நல்லது. கேஸ்கெட் போடக் கூடாது வெயிட் போடக் கூடாது. குக்கர் அடில மணல் அல்லது உப்பு (ஒரு கிலோ பாக்கெட்) அது ஒரு முறை பேக்கிங்க்ல கருப்பானாலும் அதையே சுழற்சியில் பயன்படுத்தலாம். போட்டு இதே போல ப்ரீ ஹீட் 10 நிமிஷம் பண்ணிட்டு, சிம் பண்ணிட்டு நம்ம கேக் பாத்திரம் அலுமினம் / நான் ஸ்டிக் டின் ஒகே தான். பேக்கிங்க் டின்....அதை வைச்சு 40 நிமிஷம் ஆகிடும் அல்லது கேக் பொருத்து 1 மணி நேரத்துக்குள்ளார ஆகிடும். குக்கர் வெய்ட் எதுவும் போடக் கூடாது.
மத்ததெல்லாம் இதேதான் மணம் வரும். ஆனால் சிம்மில்தான் வைக்கணும். கண்ணாடி மூடி போட்டு ஒரு பான் இருக்குமே அதுலயும் செய்யலாம். 40 நிமிஷத்துக்கு அப்பால குச்சி விட்டுப் பார்க்கலாம் பேக் ஆகியிருக்கான்னு. அதுக்கு முன்ன திறந்த நடுல எரிமலை போல ஆகிடும்! ஹிஹி அதான் குழி பள்ளம்...
கீதா
அப்பாதுரை, நம்ம வெங்கட்டோட மனைவி ஆதி வெங்கட் கேக், ப்ரெட் எல்லாம் இப்படித்தான் செய்து யூ ட்யூபிலும் போடுகிறார். புத்தகம் கூட வந்திருக்குனு நினைவு. எதுக்கும் வெங்கட்டையோ/ஆதியையோ கேட்டுப் பார்க்கவும்.
நீக்குகீதா காப்பாத்திட்டா!!!
நீக்குஆமாம் நன்றி. முருகா கீதா.. எல்லாம் ஒண்ணு தான். நன்றி.
ஆதி வெங்கட் மற்றும் கார்த்திக் ரெசிபி விடியோக்கள் பக்கம் அடிக்கடி போவதுண்டு. பார்க்கிறேன். நன்றி.
ஆமாம் கீதாக்கா நானும் நம்ம ஆதி, குக்கர் கேக் யுட்யூப்ல போட்டுருக்காங்கன்னு இங்க சொன்ன கருத்து போகவே இல்லை. நல்லதாப் போச்சு, நீங்க சொல்லிட்டீங்க....
நீக்கு//முருகா கீதா.. எல்லாம் ஒண்ணு தான். //
ஹாஹாஹாஹா
கீதா
//குக்கர் அடில மணல் அல்லது உப்பு (ஒரு கிலோ பாக்கெட்)
நீக்குகுக்கருக்கு உள்ளே தானே?
போட்டீங்களே ஒரு போடு! குக்கரின் உள்ளே தான்! :))))
நீக்கு// எங்க ஊர் காஸ் அடுப்புல செய்யுறாப்ல சொன்னா என்னவாம்னு..//
பதிலளிநீக்குஇப்படிக் கேட்கத் தான் நெனைச்சேன் நானும்..
அவுக முந்திக்கிட்டாக..
இன்னிக்கு வித்தியாசமா இருக்கு சாப்பாட்டுத் திங்கள்!..
செய்யலாம்,செய்யலாம் எரிவாயு அடுப்பிலேயே இரும்புச் சட்டி, அல்லது சீனாச்சட்டியில் மணல்/அல்லது கல் உப்புப் போட்டுப் பண்ணலாம். ஒரு முறை செய்துட்டு இங்கே போடணும்.
நீக்குசூப்பர் எல்லாச் சுவையும் சேர்ந்து - நகைச்சுவையுடன் நாவிற்குச் சுவை!!
பதிலளிநீக்குபேக்கிங்க் பௌடர் போட்டேன்னா கேக்குனு சொல்லிக்குவோம்.....ஈஸ்ட் போட்டா ப்ரெட்ன்னு சொல்லிக்குவோம்!!ஹாஹாஹாஹா....ஸோ ரெண்டு முறைலயும் செய்றதுண்டு.
கீதா
ஸ்ரீராம் மன்னிப்பு! என்னால கடைசில அனுப்ப முடியலை. ஒன்றும் ரெடியாக இல்லை, செய்யவும் முடியலை. எப்படியோ அப்பாதுரைஜி ஆபத்பாந்தவனாகிட அவருக்கு நந்னி!!!!
பதிலளிநீக்குகடைசி நிமிட உழைப்பு! பாராட்டுகள் ரெண்டு பேருக்கும்
கீதா
@ஶ்ரீராம், இன்னிக்குப் பார்க்கிறேன் ஏதானும் தேறுதானு.
நீக்குok
நீக்குஸ்ரீராம் இனி நான் ஏதாச்சும் செய்தால், குறிப்பாக இன்று அப்பாதுரைஜி பயன்படுத்தியிருக்கும் வெல்லப் பொடி அதான் இங்கு பாரீஸ் - சுத்தமான வெல்லப் பொடி நல்லா கிடைக்குதே அதுல ஒரு சிம்பிள் ரெசிப்பி காரமலைஸ் பண்ணி செய்வது....சும்மா ஒரு டிப்ஸ் னு எடுத்து வைச்சிருந்தேன்.....அது போன விஷயம்...அதே அதேதான்....மீண்டும் புலம்பமாட்டேன்.
பதிலளிநீக்குஅதக் கூட நேத்து டக்குனு செஞ்சு அனுப்பலாமேன்னு நினைச்சேன்....பாட்டில் பார்த்தா இளித்தது.....அது கிடைக்கும் க்டை கொஞ்சம் நடக்கணும்...ஆனால் வேலைப்பளு போக முடியலை.
கீதா
என்னிடம் ப்ரவுன் ஷுகர் இருக்கு. பார்ப்போம்.
நீக்குஆ...! பிரவுன் ஷுகரா..... வெளில சொலலதீங்க!
நீக்குநான் சொன்ன காரமலைஸ் பண்ணி செய்வது இந்த ரெசிப்பி கேக் இல்லை கீதாக்கா ..எளிதான ஒன்று. பாவம் ஸ்ரீராமுக்கு ஒரு ஆபத்பாந்தவ ரெசிப்பியா அது இருக்கட்டும்னு செஞ்சு அனுப்பிடறேன்....
நீக்கு//ஆ...! பிரவுன் ஷுகரா..... வெளில சொலலதீங்க!//
ஹாஹாஹா
கீதா
நான் காரமலைஸ் செய்வது பற்றி எல்லாம் சொல்லலை தி/கீ. மேலே அப்பாதுரைக்குச் சொல்ல வேண்டிய பதில் இங்கே வந்திருக்கு.
நீக்கு@ஶ்ரீராம், ப்ரவுன் ஷுகர்னா உடனே அந்த நினைப்புத் தானா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ))))
நீக்குநான் காரமலைஸ் செய்வது பற்றி எல்லாம் சொல்லலை தி/கீ. மேலே அப்பாதுரைக்குச் சொல்ல வேண்டிய பதில் இங்கே வந்திருக்கு.//
நீக்குஹாஹா...ஓகே!!! ஓகே!!!
கீதா
வெல்லப்பொடி தான் பெரும்பாலும், அது போல பலதானிய மாவு, கைக்குத்தல் ஓட்ஸ் இதுதான் வீட்டில் பயன்பாடு. கேக்கிற்கும், ப்ரெட்டிற்கும்.
பதிலளிநீக்குநானும் வெண்ணைக்கு ஆதரவு. எந்த கேக் செய்தாலும் அல்லது இப்படியான ப்ரெட் செய்தாலும் எண்ணை சேர்ப்பதல்லை.
அது போல ஆஆஆ வின் பால் தான். அலல்து தண்ணி சேர்ப்பது என்றால் மில்க் பௌடர். எந்த கேக்குக்கும் ப்ரெட்டுக்கும் மில்க் பௌடர் சேர்த்துவிடுவதும் ஒரு வழக்கமா போச்சு!!! ஹிஹிஹி
முட்டை சேர்ப்பதில்லை எனவே தயிர்தான். ப்ளூ பெர்ரியும் இங்க கிடைச்சாலும் சேர்த்ததில்லை. இது மட்டும்தான் வித்தியாசம் . மத்ததெல்லாம் அதே அதே. நான் கொஞ்சம் பரிசோதனை செஞ்சு பார்க்கும் ரகம். இதுல அப்படியும் இப்படியும் வேறும் சேர்த்து முயற்சிகள் செய்ததுண்டு.
ஸ்ரீராம் வீட்டுக்கு நானும் பானுக்காவும் போனப்ப பைன் ஆப்பிள் தலைகீழ் கேக்கு!!!
சூப்பரா வந்திருக்கு. பார்த்ததும் செய்து ரொம்ப நாளாச்சேன்னு தோன்றுகிறது. ஓவன் புட்டுகிச்சு. ஸோ செஞ்சா காஸ் அடுப்பில்தான் செய்ய வேண்டும்.
கீதா
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஶ்ரீராம், எங்களுக்குக் கேக்கெல்லாம் கொடுக்கவே இல்லை! :) போகட்டும் விடுங்க. முன்னெல்லாம் முட்டை சேர்த்துப் பண்ணி இருக்கேன். பெண் எடுத்துப்பா அந்தப் பொறுப்பை எல்லாம். இப்போல்லாம் தயிர் தான் சேர்க்கணும். நம்ம வீட்டிலே வாழைப்பழமும் தயிரும் சிரிப்பாய்ச் சிரிக்குது. வெண்ணெயோ வீட்டில் நானே எடுக்கும் சுத்தமான வெண்ணெய்.
நீக்குகேக் நான் கொடுக்கவில்லை. கீதா கொண்டு வந்தாங்க!
நீக்குநல்ல சமாளிப்ஸ் போங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்தச் செய்முறை என்னமோ உடனே செய்து பார்னு தூண்டிக்கிட்டே இருக்கு. :)))) வீட்டிலே வேறே வாழைப்பழம் என்னை எடுத்துப் பயன்படுத்துனு சொல்லிட்டே இருக்கு.
நீக்குவீட்டிலேயே எடுத்த வெண்ணையின் சுவையே தனி.
நீக்குSriramin irandaavadhu maganin pirandha naal enbadhaal geetha cake seidhu kondu vandhaar. cakai Gokul cut panna, naangal vettinom.
நீக்குவரேன், அப்புறமா, ஆட்கள் வந்துடுவாங்க.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவாழைப்பழ ரொட்டி படங்களுடன் செய்முறை சொன்னவிதம் அருமை.
பதிலளிநீக்குகாலையில் போட்ட இந்தக் கருத்து போகவே இல்லை....இப்போதாவது போகிறதா என்று பார்க்கிறேன்.
பதிலளிநீக்குவாழைப்பழ கேக் செய்முறை பானுக்காவும் கொஞ்ச நாள் முன்னால் இங்கு பகிர்ந்த நினைவு. அவங்க அக்கா பேத்தி செய்ய இவங்க புகைப்படம் எடுத்து செய்முறையும் சொன்ன நினைவு.
அது ஒரு வகை செய்முறை.
கீதா
ஹப்பா வந்துவிட்டது.
நீக்குகீதா
//வாழைப்பழ கேக் செய்முறை பானுக்காவும் கொஞ்ச நாள் முன்னால் இங்கு பகிர்ந்த நினைவு.// Banu akkava? yaar avanga?
நீக்குவாழைப் பழ ரொட்டி அருமை.
பதிலளிநீக்குகுழையடித்து நல்ல தமிழ்.
அறிந்திருப்பீர்கள் இங்கும் அடிதடி நடந்து முடிந்துள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என பார்ப்போம்.
vazhaipazha rotti seimurai vilakamum, padangalum siirappu.
பதிலளிநீக்குபனானா ப்ரெட் குறிப்புகள் சிறப்பு. இழையோடும் நகைச்சுவையுடன் குறிப்பு - சிறப்பு.
பதிலளிநீக்கு