ம.பி.,யில் நீதிபதியான காய்கறி விற்பவர் மகள்.
எனினும் மனம் தளராத அங்கிதா, நான்காவது முறையாக தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்று நீதிபதியாகியுள்ளார். இது பற்றி அங்கிதா கூறுகையில், ''நீதிபதியாகும் என் கனவு பலித்துவிட்டது. நீதிமன்றத்தை நாடி வரும் சாதாரண மக்களுக்கு தீர்ப்பை உறுதி செய்வதே என் பணி,'' என்றார்.
5 மலைச் சிகரங்களில் ஏறி மஹாராஷ்டிரா பெண் சாதனை:
அசத்தும் மெல்லிய ஒலிபெருக்கி:
'ஹீட் ஸ்ட்ரோக்' தவிர்ப்பது எப்படி?
நான் படிச்ச கதை
ஜெயக்குமார் சந்திரசேகரன்
.==============================
கதை : “அவனுக்கு மிகவும் பிடித்தமான நட்சத்திரம்” (1960)
இயற்பெயர்: தியாகராஜன். சென்னையிலும் செகந்திராபாதிலும் இருந்தவர். சாஹித்திய
அகாடமி விருது பெற்றவர். (அதான் எங்களுக்கு தெரியுமே!) மேலும் விவரங்கள் கீதா சாம்பசிவம் மாமி சொல்வார்கள்.
விவரங்கள் அறிய
விவரங்களுக்கு இங்கும் செல்லலாம்
இவர்
சின்ன சின்ன வாக்கியங்களில் கதை சொல்பவர். இடையே ஒரு நகைச்சுவை இழையும் மெலிதாக ஓடும்.
சின்ன வாக்கியங்கள் முத்துக்கள் என்றால் கதை நகைச்சுவை நூலில் கோர்க்கப்பட்ட முத்துமாலை
எனலாம்.
சரி.
திமிக்கிட, திமிக்கிட திமிக்கிட திமிக்கிட
ஆதௌ
கீர்த்தனாரம்பத்திலே ஒரு விண்ணப்பம்.
இந்தப்
பதிவு யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதியது அல்ல. ஒரு அரட்டை, கலாய்ப்பு
என்று கருதி அடியேனை மன்னிக்க வேணும்.
இந்த நீல நிறத்தில் உள்ள வாக்கியங்களை சாதாரண ரீதியிலும் அடைப்புக்
குறிக்குள் உள்ளவற்றை சற்றே
முணுமுணுப்புடனும் வாசிக்கக் கோருகிறேன். (modulation)
அரட்டையை ஆரம்பிக்கலாமா?
பட்டணம் பட்டணம் என்ற ஊர். அங்கெ ஸ்ரீராம் என்று ஒரு இளைஞன். 21 வயது.
பி. ஏ. பரீட்சை எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருக்கிறான். அவன் ஒரு ஆங்கில தினசரிக்கு
சந்தாதாரர். பத்திரிக்கை தினமும் 6 மணிக்கு அவன் வீட்டில் விநியோகிக்கப்படும். (வேலைக்கு தயாரெடுப்பு. GK மற்றும் ஆங்கிலப் புலமை
விருத்தியாக; அப்படியா! )
ராமசாமி ஐயர் அவனது அடுத்த வீட்டுக்காரர். மனைவி, மற்றும் 5 குழைந்தைகள்.
4 பெண், ஒரே ஆண்குழந்தை. ஆண்குழந்தைக்கு 4 வயது. கடைக்குட்டி பெண் குழந்தைக்கு 9 மாதம்.
இருவருக்கும் பரிச்சயம் இல்லை. (பட்டணத்தில்
இப்படித்தான். அடுத்த வீடானாலும் ஆறடி தள்ளியே
இருப்பார்கள்).
அன்று பேப்பர் போடுபவருக்கு வேறு வேலை இருந்ததால் மகனை பேப்பர் போடச் சொல்லியிருந்தார். (பேப்பர் தப்பான
வீட்டில் போடப்படுவதிற்கு ஒரு சாக்கு?) அவன் ராமசாமி
ஐயர் வீட்டில் பேப்பர் போட்டுவிட்டுச் சென்று விட்டான்.
ஐயர் வெளியில் வந்தார். பேப்பரை எடுத்தார். யாரையும் காணவில்லை. பிரித்தார்.
படித்தார். அப்போது ஒருவன் புளி விற்றுக் கொண்டு
போனான். புதுப்புளி. வாங்கத் தீர்மானித்தார். 1 மணங்கு புளி. ஒரு தடவைக்கு 2 வீசை வீதம் நிறுத்து கையில் உள்ள
பேப்பரில் சுருட்டி உள்ளே கொண்டு போய் கொட்டி வந்தார். இப்படி 3 தடவை 6 வீசை கொண்டு
போயாயிற்று. (1 வீசை
= 1.440 kg, கொஞ்சம் கணக்கு போடுங்கள்).
அப்போது ஸ்ரீராம் பேப்பரைத் தேடி வெளியில் வந்தான். தன் வீட்டில் பேப்பர்
இல்லாததையும் ஐயர் கையில் பேப்பர் இருந்ததையும் பார்த்தான். (1
+ 1 = 2; ஐயர் கையில் உள்ள பேப்பர் தன்னுடையது
என்று தீர்மானித்தான்.) ஐயரை விசாரிக்க ஐயர் அவசரமாக பேப்பரை
கொஞ்சம் உதறி மடித்து நீட்டினார்.
அன்றைய பேப்பரில் முன் பக்கத்தில் ஒரு சினிமா படம் விளம்பரம் இருந்தது.
அந்த விளம்பரத்தில் தென்னாட்டிலேயே மிகச் சிறந்த அழகி என்று புகழ் பெற்ற நடிகையின்
முகம் பெரிய அளவில் அச்சிடப்பட்டிருந்தது. ஆறு வீசைப் புளி அந்த முகத்தில் பல இடங்களில்
கறை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீராமுக்கு அந்த நடிகை மீது அளவிடமுடியாத ஆசை. ஸ்ரீராமிற்குக்
கோபம் வந்தது.
(அழகான
அனுஷ்கா படம் அம்மை வார்த்தது போல் புளி கறையுடன் இருந்தால் ஸ்ரீராமிற்கு ஏன் கோபம்
வராது? 1960இல் அனுஷ்கா ஏது என்கிறீர்களா? சரி அஞ்சலி தேவி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
)
முட்டாள் என்று சொன்னான். விடுவாரா ராமசாமி ஐயர். முட்டாள் மடையன் அயோக்கியன் போக்கிரி என்று சொல்ல வாக்குவாதம்
முற்றியது. ஐயர் ஆபீசுக்கு ஒரு மணி நேரம் லேட்.
இங்குதான் சினிமாத்தனம் முழுதும் வெளிப்படுகிறது.
Point 1. ஸ்ரீராம் என்ற 21 வயது இளைஞனுடைய weakness சினிமா, சினிமா
நடிகைகள். அங்கே அடித்தால் கட்டாயம் கோபம் வரும். கோபம் பகையை உண்டாக்கும்.
Point 2. செத்துப்போவதை தீபம் அணைவதாகக் காட்டுவதை போன்று அம்மை போடப்போவதை
முன்கூட்டியே சினிமாத்தனமாகக் காட்ட; அழகிய நடிகையின் முகத்தில் புளிக் கறை.
இடைவேளை
சரி. எல்லோரும் கைக்குட்டையை கையில் ரெடியா வச்சுக்கோங்கோ.
இது நடந்து கொஞ்ச நாள் ஆச்சு. ஒரு நாள் ஐயர் வீட்டுக்கு வேப்பிலை கொண்டுபோவதை
ஸ்ரீராம் பார்த்தான். ஐயர் மகனுக்கு அம்மை போட்டிருக்கு என்று அம்மா சொன்னாள். (அம்மை போட்டால் வேப்பிலை இல்லாமல் கருவேப்பிலையையா கொண்டு போவார்கள்).
ஸ்ரீராமுக்கு என்ன தோணியதோ தெரியலை. சுகாதார இலாகாவுக்கு மொட்டை கடுதாசி
ஒன்னு போட்டான்.
அவன் கொஞ்சம் வெளியில் சுற்றி விட்டு வந்தான். அம்மா பக்கத்து வீட்டுக்
குழந்தையை சுகாதார இலாகாவின் ஆட்கள் வந்து
மோட்டாரில் தொற்று நோய் ஆசுபத்திரிக்குக் கொண்டு போய் விட்டார்கள் என்றாள். குழந்தையோட
அம்மா கெஞ்சியபோதும் விடாமல் சட்டம் அதுதான் என்று சொல்லி விட்டார்கள். (சட்டத்துக்குச் சட்டம் தான் தெரியும். கட்டம் போட்டு
விளையாடும், கருணையாவது இரக்கமாவது)
பொன்னான மேனியிலே - ஒரு
பொல்லாத நோய் வந்ததென்ன
தங்கத் திருமேனியிலே - ஒரு
தகாத நோய் வந்ததென்ன…
ஐயர் மனைவி பைத்தியம் பிடித்தவள்
போல் ஆனாள். ஐயர் சாயந்திரம் வந்த உடன் மனைவியையும் கூட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போவதைக் கண்டான்.
ஸ்ரீராம் இப்படியெல்லாம் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. மிக்க வேதனைப்பட்டான்.
(ஆத்திரம், அவசரம் எப்போதும்
தவறு செய்ய வைக்கும்.)
அவனுக்குத் தூங்க முடியவில்லை. நடு ராத்திரி ஆனபோது ராமசாமி ஐயர் மனைவியைத் தாங்கிக்கொண்டு மெல்ல தெருவில் வருவதைக் கண்டான். வீட்டை விட்டு வெளியில் அதிகம் செல்லாத
அவர் மனைவி நடு இரவில் அழுது புலம்பி நடக்க
முடியாமல் நடந்து வருவதைக் கண்டான்.
இரண்டு நாள் ஆயிற்று. குழந்தை இறந்து விட்டது. இறந்த குழந்தையை வீட்டிற்குக்
கொண்டு வராமல் நேரே சுடுகாட்டிற்குக் கொண்டு போய் விட்டார்கள்.
ஸ்ரீராமிற்கு மனது குறுகுறுத்தது (குற்றம் உள்ள மனசு வேறு என்ன செய்யும்.) ஒரு
மாதம் கழிந்தது.
ஒரு நாள் ராமசாமி ஐயர் வீட்டிற்குச் சென்றான். மெல்ல மெல்ல நுழைந்தான்.
ஐயர் சாய்வு நாற்காலியில் இருந்தார். “ராஜு ( குழந்தை) பற்றி உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்”.
ஐயர் “என்ன” என்று கேட்டார். “சுகாதார இலாக்காவிற்குத் தெரியப்படுத்தியது நான்தான்”.
ராமசாமி ஐயர் கொஞ்ச நேரம் அவனையே வெறித்துப் பார்த்தார். பின்னர் “காமு” என்று மனைவியை அழைத்தார். “அவளிடம் சொல்லு”.
ஸ்ரீராம் ஐயர் மனைவியிடம் “ராஜு பற்றிய தகவல் சுகாதார இலாகாவுக்குச் சொல்லியது
நான்தான்” என்றான். (அப்பாடா
மனசு கொஞ்சம் லேசாகியது)
எதிர்வினை என்ன என்பதை ஊகித்து மூலக்கதையின் கடைசிப் பத்தியில் சரி
பார்த்துக் கொள்ளுங்கள். சின்ன கதைதான்.
கதையின் சுட்டி
ஹர ஹர மகாதேவா
- காலை 6 மணிக்குத் தெருவில் விற்பனைக்கு வரும் பொருட்கள் பால், தயிர், பேப்பர், காய்கறி, இட்லி மாவு, போன்றவை தான். புளி விற்பனை கண்டதில்லை. புளி 10 மணிக்கு மேல் அல்லது மாலையில் தான் தெருவில் விற்பனைக்கு வரும் (அன்றைய காலகட்டத்தில்).
- பேப்பர் இல்லாமல் இருந்தால் ஐயர் எப்படிப் புளியை வாங்குவாரோ அப்படி வாங்கியிருக்கலாம் அல்லவா?
- அன்றைய நாட்களில் ஆங்கில தினசரிகளில் முன்பக்கம் விளம்பரங்கள் போடுவது இல்லை. அதுவும் சினிமா விளம்பரம் கட்டாயம் கிடையாது. சினிமா விளம்பரங்கள் தினத்தந்தி போன்ற தமிழ் பத்திரிகைகளில் தான்.
- நான் 1960 இல் கண்ட அனுபவத்தைச் சொல்கிறேன். அன்றைய காலகட்டத்தில் அம்மை தடுப்பு ஊசி போட்டிருந்தால்தான் முதல் வகுப்பில் பிள்ளைகளைச் சேர்க்க முடியும். அடுத்த வீட்டில் 5 வயது பெண் பிள்ளைக்கு முனிசிபல் ஆஃபிஸில் சென்று அம்மை தடுப்பு ஊசி போட்டு வந்தார்கள். வீரியம் கூடியதால் பிள்ளைக்கு வாரிக்கொட்டி விட்டது. தொற்று நோய் ஆசுபத்திரி இருந்தாலும் முனிசிபாலிடி காரர்கள் பிள்ளையைக் கொண்டு போகாமல் வீட்டில் உள்ள எல்லோரையும் 21 நாள் குவாரண்டைனில் வைத்தார்கள். பிள்ளைக்கும், அம்மா மற்றும் குடும்பத்தாரின் கவனிப்பில் அம்மை இறங்கியது. சொல்ல வருவது என்னவென்றால் சாதாரணமாகச் சிறிய பிள்ளைகளை குடும்பத்தை விட்டுப் பிரித்து சிகிச்சை செய்வது இல்லை.
சரி
இன்றைய அரட்டையை ஆரம்பியுங்கள்.
ஸ்ரீராம் செய்தது உணர்ச்சி வசத்தால் எடுத்த தவறான முடிவா ? ஐயரைப் பழி வாங்கும் நோக்கத்திலா? அல்லது மேலும் நோய் பரவாமல் இருக்க சமூகத்தின் பேரில் உள்ள அக்கறையாலா?
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன். எது சரி?
இன்றைய கதையில் ஒரு சிறு திருத்தம்.
பதிலளிநீக்கு//அடுத்த வீட்டில் வயது பெண் பிள்ளைக்கு//
அடுத்த வீட்டில் 5 வயது பெண் பிள்ளைக்கு என்று இருக்கவேண்டும்.
Done.
நீக்குஇன்றைய பதிவின் பகுதிகள் நன்று. கதை குறித்த அறிமுகம் சிறப்பு. கதையை படிக்க வேண்டும்.
பதிலளிநீக்குபடித்து, கருத்து எழுதுங்க
நீக்குஅனைத்தும் நன்று.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு//நம: பார்வதீ பதயே என்பது என்ன? – Sage of Kanchi// பார்வதியின் பதிக்கு நமஸ்காரங்கள்.
நீக்குஅது ஒரு சுட்டி. சென்று காஞ்சி பெரியவர் சொன்னதை படியுங்கள்.
நீக்குபடிச்சிருக்கேன். விரிவான விளக்கமாக இருக்கும். இங்கே என்னோட எண்ணத்தைப் பதிவு செய்தேன்.
நீக்குஅன்பின் வணக்கம்
பதிலளிநீக்குஅனைவருக்கும்...
இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க, வாழ்க!
நீக்கு// நன்னாரி சர்பத் (போன்ற) ஆரோக்கியமான இயற்கை பானங்களை..//
பதிலளிநீக்குநன்னாரி சர்பத் இயற்கை பானமா?..
இயற்கைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் பானம் ?
நீக்குகாய்கறி விற்பவரது மகள் நீதிபதியான செய்தியும் உலகின் மூன்றாவது பெரிய மலையான கஞ்சன் ஜங்காவை இளம் பெண் ஒருவர் வெற்றி கொண்ட செய்தியும்.. தினமலரில் படித்தபோதே பிரமிப்பை விளைத்தவை..
பதிலளிநீக்குஆம்!
நீக்குவெய்யிற்கேற்ற நிழல் உண்டு
பதிலளிநீக்குவீசும் தென்றல் காற்றுண்டு..
ஆஹா!..
எங்கே!
நீக்குஅதைத் தான் ஒழித்துக் கட்டியாயிற்றே!..
நீக்குஅதானே!!
நீக்குஎதை ஒழித்துக் கட்டியாயிற்று?
நீக்குகஞ்சன் ஜங்காவை அஞ்சா நெஞ்சன் என்று யாரோ சொல்லியிருந்தார்களே..
பதிலளிநீக்குஅது அழகிரி அல்லவோ!
நீக்குஏன், அவர் அவ்வளவு கஞ்சனா?
நீக்குகாய்கறிக்காரரின் மகள் நீதிபதி, நீதி நிலைக்கட்டும்.
பதிலளிநீக்குஅப்பா கையில் எடை பார்க்கும் தராசு; மகள் பார்வையில் நீதி தேவதையின் தராசு. துலாம் ராசி வெல்லட்டும்.
நீக்குதீர்ப்பு சொல்லும் முன் சரியாய் எடை பார்ப்பார் என்று நம்புவோம்.
நீக்குநல்ல செய்திகள் + பயனுள்ள தகவல்கள்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகாய்கறி வாங்கும் பொழுது கொசுறு போல கறிவேப்பலை தரும் பழக்கம் இன்றும் இருக்கிறது.
பதிலளிநீக்குஅது போலத் தான் சனிக்கிழமை பதிவுக்கு
இந்த நான் படிச்ச கதைப்
பகுதியும் ஆகி விட்டது.
ஆம். சனிக்கிழமை அன்று பாசிட்டிவ் செய்திகள் என்று நாம் அனைவரும் அறிந்ததே.. புதிய பகுதிகள் வரும்போது எங்கு நுழைப்பது என்று பார்க்கும்போது இங்கு இடம் இருந்தது. வாசகர்கள் ரசித்தால் பாசிட்டிவ் செய்திகளை மீறி இது வெற்றி பெறும். அவரவர் மனப்போக்கு.
நீக்குஐந்து பின்னூட்டங்களுக்கு மேல் இந்தப் பகுதிக்கு வந்தால் அதிசயம். அதுவும் அ.மித்திரன் கதை பற்றி அருமை என்கிற வகையில் இருக்கும். அசோக மித்திரன் பற்றி எபியில் இவ்வளவு காலத்திற்குப் பிறகு பாராட்டி ஆகப் போவது ஒன்றும் இல்லை. அதற்கு பதில் இந்தப் பகுதியை நம் வாசிப்புக்கு சமர்ப்பிக்கும் ஜெயக்குமார் ஸார் தன் பணியை எப்படித் திறம்படச் செய்திருக்கிறார் என்று சொன்னால் அதுவாவது ஏதாவது ஒருவிதத்தில் பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.
பதிலளிநீக்குபொதுவாகவே ஒருவர் விரும்பும் சப்ஜெக்டை இன்னொருவர் விரும்புவது இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் பிடிபப்தில்லை. ஜெயக்குமார் ஸார் தன் பணியை சிறப்பாக செய்கிறார் என்பது என் அபிப்ராயம். வித்தியாசம் காட்டுகிறார். புதிதாக யோசிக்கிறார்.
நீக்குஜெயக்குமார் ஸார் தன் பணியை சிறப்பாக செய்கிறார் என்பது என் அபிப்ராயம். வித்தியாசம் காட்டுகிறார். புதிதாக யோசிக்கிறார்.//
நீக்குஆமாம் ஸ்ரீராம் உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன், நான் இதை ஜெ கெ அண்ணாவிடமே சொல்லியும் இருக்கிறேன்.
அதாவது கதையில் அவருக்கு எழும் கேள்விகளையும் முன் வைப்பது நல்ல விஷயம். அதற்கு எனக்கு இன்று நான் வாசித்ததில் புரிந்துகொண்டதை கருத்தாகக் கொடுக்கவும் முடிந்தது. எனவே அண்ணாவின் இப்படியான முயற்சிகள் இன்னும் கருத்துகளை வரவழைக்கும் என்றே தோன்றுகிறது.
இன்று பொதுவாக நான் படித்த கதைப்பகுதிக்குக் கருத்து சொல்பவர்கள் வரவில்லை என்பதால் அப்படித் தோன்றுகிறது, வல்லிம்மா, நெல்லை, கீதாக்கா (அதன் பின் காணவில்லை) பானுக்கா,
கீதா
ஐந்து பின்னூட்டங்களுக்கு மேல் இந்தப் பகுதிக்கு வந்தால் அதிசயம். அதுவும் அ.மித்திரன் கதை பற்றி அருமை என்கிற வகையில் இருக்கும். அசோக மித்திரன் பற்றி எபியில் இவ்வளவு காலத்திற்குப் பிறகு பாராட்டி ஆகப் போவது ஒன்றும் இல்லை. அதற்கு பதில் இந்தப் பகுதியை நம் வாசிப்புக்கு சமர்ப்பிக்கும் ஜெயக்குமார் ஸார் தன் பணியை எப்படித் திறம்படச் செய்திருக்கிறார் என்று சொன்னால் அதுவாவது ஏதாவது ஒருவிதத்தில் பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.
பதிலளிநீக்குஇதன் மூலம் பகிரும் எண்ணத்திலாலாவது புதிதாக எதையாவது படிக்கும் வாய்ப்பு. அதை எழுதும் நேரத்தில் எழுத்துப் பயிற்சி.
நீக்குஜெயக்குமார் ஸார். ஆகப் பெரிய தமிழ் எழுத்தாளர்களை அனுபவித்து வாசிக்கத் தெரிந்திருப்பதே ஒரு கலை. அரட்டையா? அசோக மித்திரன் கதை பற்றியா? அவர் எழுதியது நிஜமா இல்லையா என்றா? ஏன் இந்த தேவையில்லாத வேலை?
பதிலளிநீக்குஇன்றைக்கு ஜீவி அண்ணா வந்திருக்கின்றார்கள்!.. மகிழ்ச்சி..
நீக்குசில சமயங்களில் கேள்வியைப் போடுவதால் பதில் சொல்லும் நோக்கில் இரண்டு பேர் அதிகமாக கமெண்ட்டக்கூடும். நல்ல யுக்தி.
நீக்குஅதே அதே ஸ்ரீராம் இதைத்தான் மேலே சொல்லிவிட்டு வந்தால் கீழே நீங்க.
நீக்குகீதா
// நன்னாரி சர்பத் இயற்கை பானமா?..//
பதிலளிநீக்கு//இயற்கைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் பானம் ?..//
காலம் கிடக்கும் கிடப்பில் இதற்கெல்லாம் தரக் கட்டுப்பாடு ஏதும் இல்லை..
தண்ணீர் , ஐஸ் கட்டிகள் எந்த அளவுக்கு சுத்தமானவை?..
தெரியாது..
நியாயமான சந்தேகம்.
நீக்குதண்ணீரா? சுத்தமா? எந்த யுகத்தில்?
நீக்குதுரை அண்ணா தரக்கட்டுப்பாடு என்பது பல உணவுப் பொருட்களுக்கு இல்லையே இங்கு, நீங்கள் துபாயில் பணிபுரிந்திருக்கிறீர்கள் எனவே உங்களுக்கு இதைப் பற்றி பேச நிறைய கருத்துகள் இருக்கும்.
நீக்குகீதா
ஜெயக்குமார் செய்தது சரியே.
பதிலளிநீக்குஏன் அரட்டை அடித்தால் என்ன? பின் எப்படித்தான் பின்னூட்டங்களை 100, 130 என்று அதிகரிப்பது?
எபியின் பாணியே அது தானே! இதில் நல்ல எழுத்தாளர்களின் எழுத்து பலிகடா ஆனால் நமக்கென்ன? கதை நாயகி தாவணி போட்டிருந்தாள் என்று கதை எழுதியிருந்தால் இது எந்தக் காலத்துக் கதை என்று கேட்க பழகிய தளம் தானே இது?
-- என்றெல்லாம் கூட பின்னூட்டங்கள் தொடராலாமே!
/ஏன் அரட்டை அடித்தால் என்ன? பின் எப்படித்தான் பின்னூட்டங்களை 100, 130 என்று அதிகரிப்பது?//
நீக்கு/பின்னூட்டங்களை அதிகரிக்க யோசிப்பதில்லை என்பதை நீங்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். அதனால் ஒன்றும் - ஒன்றுமே - ஆகப்போவதுமில்லை. பதிவுகளில் பின்னூட்டம் விடுபவர்களுக்கு ஒரு பதில் சொல்வது அவர்களை மதிப்பதாகும். நடுவில் அதிலேயே கருத்துக் பரிமாற்றங்கள் இருக்கலாம்.
//இதில் நல்ல எழுத்தாளர்களின் எழுத்து பலிகடா ஆனால் நமக்கென்ன?//
இதில் பலிகடா ஆவதற்கு என்ன இருக்கிறது என்றும் புரியவில்லை. நான் படித்ததை இங்கு பகிர்கிறேன். ஒருவருக்கு அது தெரியாமல் இருந்தால் தெரிந்து கொள்வார். சுவாரஸ்யம் இருந்தால் தொடர்வார். இலலவிட்டால் 'ரசித்தேன்' என்று மரியாதை காட்டி விலகுவார்.
//நாயகி தாவணி போட்டிருந்தாள் என்று கதை எழுதியிருந்தால் இது எந்தக் காலத்துக் கதை என்று கேட்க பழகிய தளம் தானே இது?//
வருந்துகிறேன். கடினமான கணித வகுப்பில் இருப்பது போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பிடிக்கிறதோ, இல்லையோ, படித்து மதிப்பெண் பெறவேண்டும்!!
காலையில் புளி விற்பனைக்கு வருமா என்ற கேள்வியெல்லாம் மனசில் வரக்கூடாது.
நீக்குதொட்டதற்கெல்லாம் இப்படி மனசில் கேள்வி எழுந்தால் அங்கு கதை வாசிப்பா நடக்கும்? இப்படி கோணல் மாணலாக கேள்விகள் எழும் மனம் கொண்டவர்கள் அல்ல அக்கால வாசகர்கள். கதையைக் கதையாகப் படித்தவர்கள் அவர்கள். அதனால் தான் அக்கால கதைகளும் அவர்கள் மனசில் சோபித்தன வாசிப்பு வாசகர்களுக்கு சொந்தம் என்பதால் தான் உங்கள் நினைப்புகளுக்கெல்லாம் நல்ல எழுத்தாளர்களை பலிகடா ஆக்காதீர்கள் என்கிறேன். உங்களுக்கு மனம் லேசாக கேளிக்கை வேண்டுமானால் ஏடாகூடாமாக வாசிப்பவர்களிடம்
வைத்துக் கொள்ளுங்கள் என்று
கேட்டுக் கொள்கிறேன்.
ஜீவி ஐயா
பதிலளிநீக்குவெங்கட் அவர்கள், பின் நீங்கள் இருவரே இதுவரை பின்னூட்டம் தந்துள்ளீர்கள். அரட்டை என்றவுடன் எல்லோரும் கப்சிப். இந்த கப்சிப் க நா சு பற்றிய பதிவிலேயே வெளிப்பட்டது. விரும்புகிறார்களோ இல்லையோ எல்லோரும் வாசித்திருக்கிறார்கள்.
என்னால் முடியும் வரை தொடர்வேன். ஒவ்வொரு அறிமுகமும் ஒவ்வொரு நடையில், வித்தியாசமான பாணியில் எழுதியுள்ளேன். இவற்றிற்கும் ஒரு முடிவு வரும். உண்மையான கருத்துக்களுக்கு நன்றி.
Jayakumar
//என்னால் முடியும் வரை தொடர்வேன்.//
நீக்குநன்றி ஸார்.
//அறிமுகமும் ஒவ்வொரு நடையில், வித்தியாசமான பாணியில் எழுதியுள்ளே//
உண்மை. நானும் அதைச் சொல்லி இருக்கிறேன். ஆர்வமான ரசனைக்குரியது அது.
ஜெ கே அண்ணா நீங்கள் தொடருங்கள் முடிந்தவரை. நீங்கள் வித்தியாசமாகத் தருவது நன்றே. நீங்கள் கேள்விகளும் கேட்பது பதில் சொல்லவும் கருத்துகள் இடவும் ஏதுவாகும். இதோ இன்று கூட....
நீக்குஇன்று ஏனோ நான் குறிப்பிட்டிருப்பவர்களில் பானுக்கா வல்லிம்மா இனி வரலாம்...அவர்களுக்கு இப்போதுதான் காலை.
நெல்லை பயணத்தில், கீதாக்கா பிஸி போல..
கீதா
அல்லது கறிவேப்பிலையா, இல்லை கருவேப்பிலையா என்று கேள்வி கேட்டு கிளை பிரியலாம். இந்தக் கேள்வியை புதன் கிழமைக்கு வைச்சிக்கங்க... ஹஹ்ஹஹா.. என்று குஷிப்படுத்தலாம்.
பதிலளிநீக்குஇல்லை கருகப்பிலையா என்று கூட கேட்கலாம். இதில் என்ன இருக்கிறது. என் அகடுமையான பணிச்சுமைக்கு அண்டவே சிறிது நேரம் மனம் விட்டு நண்பர்களுடன் உரையாட இங்கு வருகிறேன், பகிர்கிறேன். என் மனம் சிறிது லேசாகிறது.
நீக்குஒருவர் மனம் லேசாக இன்னொருவர் மனம் கனமாக வேண்டுமா?
நீக்குஅசோக மித்திரன் போன்ற பெருமை வாய்ந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை எடுத்துச் சொல்லும் பொழுது இந்தத் தலைமுறைக்கு அதில் அதீத கவனம் வேண்டும். அதற்காகத் தான் இவ்வளவு சொல்ல நேர்ந்தது.
ஒருவர் மனம் லேசாக இன்னொருவர் மனம் கனமாக வேண்டுமா?
நீக்குஅசோக மித்திரன் போன்ற பெருமை வாய்ந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை எடுத்துச் சொல்லும் பொழுது இந்தத் தலைமுறைக்கு அதில் அதீத கவனம் வேண்டும். அதற்காகத் தான் இவ்வளவு சொல்ல நேர்ந்தது.
அந்தக் காலத்தில் சினிமா வால் போஸ்டர்களில் வேண்டாத நடிகர் முகத்தில் சாணி உருண்டையை அடிப்பது வழக்கம். தரம் தாழ்ந்து விடாமல் சாணி தான் அ.மி.யின் கதையில் புளியாக உரு மாறியிருக்கிறது.
நீக்குஅ.மி.யின் எழுத்துக்களைப் புரிந்து கொள்வதற்கு அசாத்திய திறமை வேண்டியிருக்கும்.
பல விஷயங்கள் வாசகர்களின் யூகத்திற்கே என்னும் பொழுது வாசகரின் மதி நுட்பத்திற்கேற்பவே அவர் கதைகள் என்றாகிறது.
அந்தக் காலத்தில் சினிமா வால் போஸ்டர்களில் வேண்டாத நடிகர் முகத்தில் சாணி உருண்டையை அடிப்பது வழக்கம். தரம் தாழ்ந்து விடாமல் சாணி தான் அ.மி.யின் கதையில் புளியாக உரு மாறியிருக்கிறது.
நீக்குஅ.மி.யின் எழுத்துக்களைப் புரிந்து கொள்வதற்கு அசாத்திய திறமை வேண்டியிருக்கும்.
பல விஷயங்கள் வாசகர்களின் யூகத்திற்கே என்னும் பொழுது வாசகரின் மதி நுட்பத்திற்கேற்பவே அவர் கதைகள் என்றாகிறது.
சாதனை பெண்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்குவாழ்த்துவோம்.
நீக்குவாழ்க வாழ்க
நீக்குசம்மர் டிப்ஸ், மற்றும் ஒலி பெருக்கி செய்தி, ஹீட் ஸ்ட்ரோக்' தவிர்ப்பது பற்றிய செய்தி தினமலர் செய்தி எல்லாம் பயனுள்ள செய்திகள்.
பதிலளிநீக்குநன்றி.
நன்றி.
நீக்குஇந்த கதையை படித்தவுடன் என் தங்கை (10 மாத குழந்தை ) இறந்து போனதை நினைத்து கொண்டேன். பெரியம்மை எனக்கும், இன்னொரு தங்கைக்கும், 10 மாத தங்கைக்கு மணல்வாரி அம்மன்.
பதிலளிநீக்கு62 ல் என்று நினைக்கிறேன்.
நீங்கள் கொடுத்த சுட்டியில் போய் படித்தேன் கதையை மனம் கனத்து விட்டது. வீட்டில் பத்திரமாக பார்த்து கொண்ட என் தங்கையே போய் விட்டாள். அத்துவானத்தில் தூக்கி போய் அங்கு படும் துன்பங்களை படித்தவுடன் மனம் கனத்து விட்டது. இப்படி எல்லாம் நடக்குமா என்று மனம் பதறுகிறது.
சென்னையில் தண்டையார்பேட்டையில் அதற்கெனவே தொற்றுநோய் மருத்துவமனை இருக்கிறது. அங்கு கொண்டு சென்று விடுவார்கள். இந்த வழக்கங்கள் இன்றும் தொடர்கிறதா என்று தெரியவில்லை. இப்போதுதான் அதற்கும் மேலே கொரோனா என்கிற அரக்கன் வந்து விட்டானே.. மன்னிக்கவும், நீங்களும் எழுத்தாளர் பற்றி அவர் எழுத்து பற்றி சொல்லாமல் இதைச் சொல்கிறேனே என்று மனம் நோகமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
நீக்கு10 மாத தங்கை இறப்பு இந்த வயதிலும் நினைவில் நிற்கிறதே. ஒரு சமாதானம் பெரியம்மை இந்தியாவில் இல்லை
நீக்குஇப்போது இல்லை பெரியம்மை. அன்பு தங்கையை மறக்க முடியாது.
நீக்குஸ்ரீராம் , ஜெயக்குமார் சார் பகிர்ந்த கதை என் தங்கையை நினைவூட்டியது. அவர் கதைகளை நன்றாக தேர்ந்து எடுத்து பகிர்ந்து கொள்கிறார்.
நீக்குகதையில் வந்த செய்திக்கு நான் இப்பிடும் உண்டா என்பதற்கு பதில் தந்து இருக்கிறீர்கள்.
பொதுவாய் நம் பக்கம் அம்மை போட்டால் வீட்டை சுத்த பத்தமாக வைத்து கொண்டு வேறு யாரையும் வீட்டுக்குள் விடாமல் பார்த்து கொள்வார்கள். ஆஸ்பத்திரியில் மருந்து வாங்கி தரமாட்டார்கள். கோயிலில் போய் தீர்த்தம் வாங்கி வந்து கொடுப்பார்கள். எனக்கும் ஒரு தங்கைக்கு பெரியம்மை இறங்க நாள் ஆகும், சின்ன தங்கை 10 மாதம் அவளுக்கு மணல்வாரி சீக்கீரம் இறங்கி விடும். ஊர் மக்கள் எல்லோருக்கு ஒன்றாய் தலைக்கு தண்ணீர் விட வேண்டும் என்றாதால். அவள் குளிர்ந்து விட்டாள். என் நினைவு சோகம் தான் என்றாலும் பகிர்ந்து கொண்டேன்.
புரிகிறது அக்கா.
நீக்கு// ஸ்ரீராம் செய்தது உணர்ச்சி வசத்தால் எடுத்த தவறான முடிவா ? ஐயரைப் பழி வாங்கும் நோக்கத்திலா? அல்லது மேலும் நோய் பரவாமல் இருக்க சமூகத்தின் பேரில் உள்ள அக்கறையாலா?// " விதி "
பதிலளிநீக்குபுதன்கிழமை தான் பதில் தருவீர்கள் என்றால் சனிக்கிழமையும் கூட உண்டா?
நீக்குJayakumar
எந்த நோக்கில் செய்தாலும் அந்நோய் அந்தக் காலத்தில் மேலும் சுற்றியுள்ள அனைவருக்கும் பரவாமல் இருக்க ஸ்ரீராம் செய்ததுதான் சரி - நோக்கம் எதுவாக இருந்தாலும்!
நீக்குஸ்ரீராம் நானும் இதைச் சொல்லியிருக்கிறேன் கீழே ஆனாலு கதையில் ஆசிரியர் சொல்ல வந்தது அந்தப் பையனுக்கு அவனது ஒரு மொமன்டரி உணர்சிவசப்படல் அதுவும் குழந்தையின் மரணம் அப்படி அவனை ஒரு குற்ற உணர்வுக்கு உள்ளாக்குவது அதைப் பற்றி என்றே தோன்றுகிறது. யதார்த்தமாக நடக்கும் ஒரு சம்பவம். ஒரு வேளை என் புரிதல் தவறோ?
நீக்குகீதா
காய்கறி விற்பவரின் பெண் நீதிபதியான செய்தியை நான் வாசித்த போது அட இது எபி செய்தி - அங்கும் கொடுத்து சில்லு சில்லாய் பதிவிலும் நான் சொல்லலாம் என்று நேற்று நினைத்தேன் இங்கு இன்று செய்தியாக! அவரது நீதியில் நீதித் தராசு சரியாக இயங்க வேண்டும். வாழ்த்துவோம்
பதிலளிநீக்குகீதா
வோம்...!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅணைவருக்கும் அன்பான மாலை வணக்கங்கள். இன்று காலையில் எப்போதும் போல் பதிவுலகத்திற்கு வரவியவில்லை. மன்னிக்கவும். இந்த வார செய்திகள் அனைத்தும் நன்றாக உள்ளன. துணிச்சலுடன் செயலாற்றிய இரு பெண்களையும் பாராட்டுவோம். மற்ற செய்திகளும் பயனுள்ளவை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குஅசோகமித்திரன் அவர்களின் கதை வாசித்திருக்கிறேன். கடைசியில் மனதை நெகிழச் செய்த கதை அதுவும் கடைசியில் காமுவின் மௌனம் அந்த மௌனத்தில் பல விஷயங்கள் வந்துவிடுகிறது!
பதிலளிநீக்குஅசோகமித்திரன் வெகு யதார்த்தமாகச் சின்ன நிகழ்வுகளையும் ஒவ்வொன்றையும் சொல்லிச் செல்வார். மேம்போக்காக வாசிக்க முடியாது. ஆழ்ந்து வாசித்தால் மட்டுமே கதையையும் அதன் சுவையையும் ரசிக்கவும் ஒன்றவும் முடியும்.
கீதா
ஐயரைப் பழி வாங்கும் நோக்கத்திலா? அல்லது மேலும் நோய் பரவாமல் இருக்க சமூகத்தின் பேரில் உள்ள அக்கறையாலா?//
பதிலளிநீக்குகண்டிப்பாக இவை இரண்டும் இல்லை. அப்படி இருந்திருந்தால் கடைசியில் அவன் அப்படி வருத்தப்பட்டிருக்க மாட்டான் அது தெளிவாகத் தெரிகிறதே. மன்னிப்பு கேட்டிருக்க மாட்டான். ஒரு மொமென்டரி உணர்ச்சிவசப்படுதலில் அவன் அப்படிச் செய்துவிடுகிறான். இதுதான் என் வாசிப்பில் நான் புரிந்து கொண்டது.
சமூக அக்கறை இருந்திருந்தால் அது வேறு விதமாக வெளிப்பட்டிருக்கும்.
இது உணர்ச்சிவசப்பட்டு அந்த வயதிற்கு உரிய உணர்ச்சிவசப்படலில் விளைந்தது அவ்வளவே. பக்குவப்படாத மனம்.
அதைத்தான் ஆசிரியர் அழகாகச் சொல்லியிருக்கிறார் என்பது என் புரிதல். அதற்குத்தான் அந்த வயதின் நடிகை மோகம் உணர்ச்சிவசப்படல் எல்லாமே.
இப்போதும் கூட இப்படியான உணர்ச்சிவசப்படல் வயது கடந்தும் வெளிப்படுவதைப் பார்க்கிறோமே.
அதே போன்று பேப்பரில் நடிகையின் முகத்தில் புளிக்கரை என்பதிலும் சினிமாத்தனம் இருப்பதாகத் தெரியவில்லை. இது பலரும் செய்வதைப் பார்க்கலாம். டக்கென்று கையில் உள்ளதில் ஏன் சிலர் கையில் இல்லை என்றாலும் புடவைத் தலைப்பில் கூட வாங்குவதுண்டே. அப்படி அவர் வாங்குவது யதார்த்தம்.
அன்று பேப்பர் போடுபவர்கள், இதழ்களை பேப்பர்களை மாற்றிப் போடுவதும் நடக்குமே.
கதையில் சினிமாத்தனம் என்று எதுவும் சொல்வதற்கில்லை . அழகான ஒரு சிறு நிகழ்வை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். நிதானமாக...
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்று "நான்படித்த கதை" பகுதியும் நன்றாக உள்ளது. சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் தந்த சுட்டியில் சென்று கதை படித்து வந்தேன். கதையின் முடிவு மனதுக்கு கஸ்டமாக இருந்தது. என்ன செய்வது? இதைத்தான் விதி என்றும் சொல்லலாம்.
முன்பு எங்கள் அம்மாவுக்கும், அவரது தயாதி உறவிலிருக்கும் ஒரு உறவு பெண்ணுக்கும் (அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை சிறிய வயதில் இருந்தது) ஒரே சமயத்தில் அம்மை நோய் உண்டாயிற்றாம். அப்போது எங்கள் அம்மாவுக்கு நானும் என் அண்ணாவும் பிறக்கவில்லை. அப்படி அவர்கள் இருவருமே மிக சிரமப்படும் வேளையில் ஒருநாள் எங்கள் அம்மா மதியத்தில் களைப்பாக உறங்கும் நேரம் அவர் கனவில் அழகிய இரு பெண்கள் வந்து, "நாம் அழைத்துப் போக வந்தது இவளில்லை.... அந்த அடுத்த வீட்டிலிருக்கும் பெண்ணைத்தான் அழைத்துப் போக வேண்டும்" என்று பேசியபடி நகர்ந்தார்களாம். அன்று இரவே அந்தப் பெண்மணி அவர்கள் உறவுகளை அழ வைத்து விட்டு இவ்வுலகத்தை விட்டு சென்று விட்டார். அதன் பின் வந்த நாட்களில் எங்கள் அம்மா படிப்படியாக உடல்நலமடைந்து விட்டார்களாம். இந்த உண்மை சம்பவத்தை அதற்குப்பிறகு பிறந்த நாங்கள் (என் அண்ணாவும், நானும்) பலமுறை அம்மா வாயிலாக சொல்லிக் கேட்டு அழுதிருக்கிறோம். நாங்கள் கேட்க வேண்டுமென்ற விதி இருந்திருக்கிறது. விதியை மாற்ற யாரால் இயலும்? கதைப்படித்தவுடன் இந்த பழைய நினைவுகள் எனக்குள் வந்தன.
கதைக்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் விமர்சன விளக்கமும் உண்மையானவையாக தோன்றியது. ஆனால், கதை எனும் போது கதாசிரியர் அவர் மனதுள் எழும் முடிவைதானே எழுத விளைவார். வித்தியாசமாக கதைகளை தன் கண்ணோட்டத்தில் அலசும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
பொதுவாக ஒரு கருத்தென்பது என்பது எப்போதும் ஒவ்வொருவர் மனதுள்ளும் வேறுபாடாகத்தான் வரும். நம் வீட்டிலும் , ஏன் உறவுகளுக்குள்ளும் கருத்துக்கள் ஒருமித்து வர வேண்டுமென்றால் ஒருவரின் கருத்துக்கு மற்றவர் சிறிதளவாவது (அதனை விட்டுத்தரும் மனப்பான்மை எனவும் கொள்ளலாம்) மெளனமாகி விட்டால் கருத்து வேறுபாடுகள் தோன்றாது. என்பது என் கருத்து. பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாராட்டுதல் களுக்கு நன்றி. இதை விட "புலிக் கலைஞன்" என்ற அசோக மித்ரன் கதை சிறப்பாக இருக்கும். அதையும் படித்துப் பாருங்கள்.
நீக்குJayakumar
அடுத்து அந்தப் பையன் ஸ்ரீராம் செய்ததில் தவறும் இல்லை. ஆசிரியர் கடைசியில் அவன் மன்னிப்புக் கேட்பதாக முடித்திருந்தாலும்.
பதிலளிநீக்குஇந்த அம்மை நோய் இப்படி இருந்தது என்பது இப்போதைய கொரோனாவை நினைவுபடுத்துகிறது.
இப்போது இப்படி யாரும் போட்டுக் கொடுப்பதில்லையே என்றும் தோன்றுகிறது!! ஹாஹா. ஏனென்றால் பலரும் வெளியில் சொல்லாமல் க்வாரண்டைன் செய்து கொள்ளாமல் வெளியில் உலாவி வருவதைப் பார்க்கும் போது, அந்த ஸ்ரீராம் செய்தது சரியே என்றே தோன்றுகிறது
கீதா
ஜெ கே அண்ணா ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதையையும் வித்தியாசமாக அறிமுகப்படுத்த முயற்சிப்பது நன்று.
பதிலளிநீக்குகீதா
கோடைக்காலத்துக்கான டிப்ஸ் சூப்பர். மற்றும் திராட்சையின் பயன்கள் தந்திருப்பது நல்ல விஷயம் பலருக்கும் அறிய உதவும்.
பதிலளிநீக்குகீதா
@ கீதா...
பதிலளிநீக்கு// நீங்கள் துபாயில் பணிபுரிந்திருக்கிறீர்கள் எனவே உங்களுக்கு இதைப் பற்றி பேச நிறைய கருத்துகள் இருக்கும்..//
நான் பணி புரிந்தது குவைத்தில்..
சில நாட்களாக ஷவர்மா எனும் வளைகுடா நாட்டின் உணவினால் நேர்ந்திருக்கும் பிரச்னை மிகவும் கொடுமை.. கேரளத்தில் சிறு பெண் பலி.. எங்கள் தஞ்சையில் கல்லூரி மாணவர் மூவர் மருத்துவ மனையில்..
சோதனையில் கெட்டுப் போன இறைச்சி வகைகள் காணப்படுகின்றன..
நிறைய எழுதலாம்..
துரை அண்ணா ஆமாம் குவைத்.....டக்கென்று துபாய் என்று வந்துவிட்டது. நன்றாகத் தெரிந்த ஒன்று கூட சில சமயம் மூளை அந்த சமயத்தில் ஃப்யூஸ் ஆகிவிடுகிறது!!!!!!!
நீக்குகீதா
சாதனை பெண்களுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குகோடை ரிப்ஸ் பயனுள்ளது.
சவர்மா ஆசையால் கெட்டுப்போன உணவை உண்டு ஆபத்தை தேடியது .:( .
விரிவாக ஆராய்ந்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி இன்னும் எழுதும்படி ஊக்கமும் தந்த வாசர்களுக்கு நன்றி. குறிப்பாக கீதா மற்றும் கௌதமன் சார், ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்! தொடர்ந்து எழுதுங்கள்.
நீக்கு