சனி, 21 மே, 2022

Positive பிரசன்னாவும் அஜ்மலும் மற்றும் நான் படிச்ச கதை (JC)

 மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை - அது ஒரு மிகப்பெரிய மருத்துவக் கடல்.

வெளி நோயாளிகள், உள் நோயாளிகள் என எப்போதும் ஜனத் திரளாய் இருக்கும் இந்த மருத்துவமனையில் யார் எங்கே அட்மிட் ஆகி இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதே பெரிய காரியம். அதுவும் கிராமத்து மக்கள் மருந்து, ரத்தம் தேவை என அலைவதை பார்க்கவே பரிதாபமாக இருக்கும். இவர்களுக்கு எல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய் நிற்கிறார்கள் பிரசன்னாவும் அஜ்மல் ஹுசைனும்.

பிரசன்னா டெலி மார்க்கெட்டிங் கில் டெலிவரி பிரதிநிதி, அஜ்மல் ஹுசைன் வெப் டிசைனர். காலை ஒன்பது மணிக்கெல்லாம் இந்த இரு இளைஞர்களையும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பார்க்கலாம். உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் உள் நோயாளிகளுக்குத் தேவையான சிறு சிறு உதவிகளை செய்து கொடுப்பது. இயலாதவர்களின் அறுவைச் சிகிச்சைகளுக்கு தேவையான ரத்தத்தை டோனர்களிடமிருந்து பெற்றுக் கொடுப்பது இவைதான் இவர்களின் முக்கியப் பணி. மதியம் 2 மணி வரை மருத்துவமனையில் சேவையாற்றிவிட்டு அதன் பிறகுதான் தங்களது பிழைப்பைப் பார்க்கப் போகிறார்கள். போன பிறகும் யாருக்காவது அவசர உதவி தேவையெனில் இவர்களில் யாராவது ஒருவர் பறந்தோடி வந்துவிடுவார்கள். தங்களது சேவை குறித்து நமக்கு விளக்கினார் அஜ்மல் ஹுசைன்.

“எனக்கு முந்தி பிரசன்னா மட்டும்தான் ஜி.ஹெச்-சுக்குள்ள போயி அங்கிருக்கிற நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை செஞ்சு குடுத்துட்டு இருந்தார். ஒருநாள், அவருக்கு துணையாக நான் போனேன். அங்க இருந்த நிலைமைகளை பார்த்துவிட்டு அன்றிலிருந்து நானும் இந்த சேவையில இறங்கிட்டேன். தினமும் காலையில் போனதும் அனைத்து வார்டுகளிலும் இருக்கும் நோயாளி களை போய் பார்ப்போம். குறிப்பாக, உதவிக்கு ஆள் இல்லாமல் தனியாக வந்து அட்மிட் ஆகி இருக்கும் அப்பாவி ஜீவன்களுக்குத்தான் நாங்கள் முன்னுரிமை கொடுப்போம்.
போதிய அளவு ரத்தம் கிடைக்காததால் மதுரை ஜி.ஹெச்-சில் பல பேருக்கு அதிகபட்சம் மூணு மாசம் வரைக்கும் கூட ஆபரேஷன்கள் தள்ளிப் போயிருக்கு. இதைப் புரிந்து கொண்டு, சில புரோக்கர்கள் ஒரு யூனிட் ரத்தம் 1500 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வார்கள். அதைக் கொடுத்து ரத்தம் வாங்கமுடியாத மக்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்காக நாங்களே டோனர்களை தேடிப் பிடித்துக் கொண்டுவந்து ரத்தம் கொடுக்க வைக்கிறோம்.
நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை செய்துவிட்டு எங்களது மொபைல் எண்ணையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுவோம். ஏதாவது அவசர உதவி தேவையெனில் அவர்கள் எங்களை போனில் அழைப்பார்கள். யாராவது ஒருவர் ஓடிப்போய் அவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுப்போம்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு என்ன மாதிரி எல்லாம் பிரச்சினைகள் வருகின்றன, அவர்களுக்கு உதவி செய்ய எங்களைப் போன்ற ஆட்கள் இருந்தால் அது எந்த அளவுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்பது குறித்து இப்போது நாங்கள் ஒரு சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறோம். அது முடிந்ததும் இன்னும் சில நல்ல நண்பர்களை துணைக்கு சேர்த்துக் கொண்டு முழுவீச்சில் மதுரை ஜி.ஹெச்-சுக்குள் இயலாத நோயாளிகளுக்குத் தேவையான உணவு மற்றும் அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கப் போகிறோம்.
அதற்கு முன்பாக கல்லூரி மாணவர்களை வாரம் ஒருமுறை இங்கே கூட்டி வந்து, இங்குள்ள நோயாளிகள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு நம்மால் எப்படி உதவி செய்யமுடியும் என்பதை அவர்கள் உணரும்படி செய்யப் போகிறோம். சில சமயம் காலையில் வீட்டிலிருந்து ஜி.ஹெச்-சுக்குக் கிளம்புவதற்கு லேட்டாகிவிட்டால், ‘ஏம்பா இன்னும் நீ கிளம்பலையா?’ என்பார் அப்பா. இரவு வீடு திரும்பும்போது, ‘தம்பி.. இன்னைக்கி எத்தன பேருக்கு ரத்த தானம் வாங்கிக் குடுத்தே?’ என்பார் அம்மா. ‘உன்னிடம் உதவி கேட்பவர்களிடம் நீ ஒரு கூல்டிரிங்க்ஸ் கூட வாங்கிக் குடிக்கக் கூடாதுப்பா’ என்று இருவருமே சொல்வார்கள். எல்லா பெற்றோரும் இப்படி இருந்துவிட்டால் சேவை செய்யும் இளைஞர்களுக்கு பஞ்சமே இருக்காது’’ அழகாய் சொன்னார் அஜ்மல். (நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.)
===================================================================================================

புதுக்கோட்டை, :ஆலங்குடி அருகே மேற்பனைக்காடு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர், தன் பிறந்த நாளில் பள்ளியை சீரமைத்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, மேற்பனைக்காடு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணி புரிபவர் சதீஷ்குமார், 40.

நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளியில் உள்ள வகுப்பறைக்கு, புதிதாக 
வண்ணம் தீட்டி, இருக்கை வசதி, ஸ்மார்ட் 'டிவி' போன்றவற்றை, 1 லட்சம் ரூபாய் செலவில் செய்துள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்த பள்ளிக்கு பணி மாறுதலில் வந்த அவர், ஏற்கனவே 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சுற்றுச்சுவரை சீரமைத்தார்.
நண்பர்கள் உதவியுடன், 75 ஆயிரம் ரூபாய் செலவில், பள்ளி கழிப்பறையையும் புனரமைத்துள்ளார். திருச்சி, கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறு அரசு பள்ளிகளுக்கு, 6 லட்சம் ரூபாயை, வெளிநாடு வாழ் நண்பர்களிடம் நன்கொடையாக பெற்றுக் கொடுத்துள்ளார்.
===========================================================================================

வெலிங்டன்: செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு திரும்பிய ராக்கெட்டை, நடுவானில், ஹெலிகாப்டர்கள் மூலம், 'கேட்ச்' செய்து, நியூசிலாந்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
விண்ணுக்கு செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்லும் ராக்கெட்களை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட்களை, அமெரிக்க பணக்கார தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் மட்டுமே தயாரித்துள்ளது.  இந்நிலையில், நியூசிலாந்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'ராக்கெட் லேப்' புதிய முயற்சியாக, பூமிக்கு திரும்பும் ராக்கெட்டை, நடுவானில் கேட்ச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டது. இந்நிறுவனத்தின், 59 அடி உயரமுள்ள ராக்கெட், 34 செயற்கைக்கோள்களுடன் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. அவற்றை நிலைநிறுத்திய ராக்கெட், பாராசூட் வாயிலாக பூமிக்கு இறங்கிய போது நடுவானில், பூமியில் இருந்து, 6,500 அடி உயரத்தில், அதை ஹெலிகாப்டர் வாயிலாக கேட்ச் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக, ஹெலிகாப்டர்களில் நீண்ட கொக்கி மாட்டப்பட்டது. திட்டமிட்டபடி அந்த ராக்கெட்டை, ஹெலிகாப்டர் கேட்ச் செய்தது. ஆனால், அதிக பாரத்தை தாங்க முடியாமல், ராக்கெட்டை கீழே விட, அது கடலில் விழுந்தது.''ராக்கெட்டை கேட்ச் செய்யும் முயற்சியில் இது புதிய சாதனை,'' என, ராக்கெட் லேப் நிறுவனத்தின் தலைவர் பீட்டர் பெக் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
============================================================================================================================

மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மெட்டா ஆப்டிகல் சாதனங்கள் துறையில் ஆய்வு செய்து வரும் டாக்டர் லூகாஸ் வெஸ்மேன் என்பவர் மலேரியா போன்ற தொற்று நோய்கள் மற்றும் தொற்று அல்லாத நோய்களை நானோ தொழில்நுட்பம் உதவியுடன் ஸ்மார்ட்போன் கேமராவை கொண்டு கண்டறியும் முறையை பரிசோதித்து பார்த்துள்ளார்.


இது பற்றி அவர் மேலும் கூறியதாவது: மலேரியா போன்ற தொற்று நோய்கள் பல இடங்களில் மரணத்திற்கு காரணமாக உள்ளன. மலேரியாவுக்கான சிகிச்சைகள் பல நடைமுறையில் இருந்தாலும் தொலைதூர மக்களிடம் நோயறியும் கருவிகள் இல்லாததே, ஆரம்ப நிலையில் கண்டறியாமல் போக காரணமாக உள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வது விஞ்ஞானிகளுக்கு ஒரு சவாலாக எழுந்துள்ளது.

நானும் என்னுடன் ஆய்வு பணியாற்றுபவர்களும் உயிரியல் செல்களை ஆய்வு செய்வதற்கான புதிய முறையை உருவாக்கியுள்ளோம். அது ஸ்மார்ட்போன் கேமரா லென்சில் பொருத்தும் அளவிற்கு சிறியது. இதுவரை ஆய்வகத்தில் மட்டுமே சோதனை செய்துள்ளோம். எதிர்காலத்தில் இந்த நானோ தொழில்நுட்பம் ஒரு ஸ்மார்ட்போனை பயன்படுத்தி யதார்த்த உலகில் நோயைக் கண்டறிய உதவும் என்று நம்புகிறோம். அதன் மூலம் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும்.
நுண்ணோக்கிகள் மூலம் உயிரியல் செல்களை ஆய்வு செய்வதே நோயறிதலின் அடிப்படை. அந்த செல்களில் காணப்படும் குறிப்பிட்ட மாற்றங்கள் நோயினை குறிக்கும். உதாரணத்திற்கு நோயாளியின் ரத்த சிவப்பணுக்களில் குறிப்பிட்ட மாற்றங்களைக் நுண்ணோக்கிப் படங்கள் காட்டினால் அதனை வைத்து மலேரியாவை உறுதிப்படுத்துவர். பேஸ் இமேஜிங் செயல்முறையைப் பயன்படுத்தி இதுப்போன்ற செல்களை ஆராய்வர். ஆனால் இதற்கான உபகரணங்கள் பெரிது மற்றும் செலவுமிக்கது. தொலைதூர பகுதிகளில் பயன்படுத்த வாய்ப்பு இல்லை. இங்கு தான் நானோ தொழில்நுட்பம் கைக் கொடுக்கிறது.  
வழக்கமான நுண்ணோக்கி லென்ஸ் நானோ தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மாற்றப்படுகிறது. மிக மெல்லிய தகட்டில் நானோ அமைப்பை பதிந்துள்ளோம். "ஆப்டிகல் ஸ்பின்-ஆர்பிட் கப்ளிங்" என்ற விளைவைப் பயன்படுத்தி வழக்கமான நுண்ணோக்கிகள் செய்யும் இமேஜிங் செயல்முறை செய்யப்படுகிறது. இதன் செயல் மிகவும் எளிதானது. சாதனத்தின் மேல் செல்கள் வைக்கப்படும். செல் வழியாக ஒளி வீசும். முன்பு கண்ணுக்கு தெரியாமல் இருந்த செல் அமைப்பு மறுபுறம் தெரியும். எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பத்தை கேமரா லென்ஸில் ஒருங்கிணைப்பது தான் நோக்கம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
===============================================================================================================================

 

நான் படிச்ச கதை

ஜெயக்குமார் சந்திரசேகரன்

*****************

பைத்தியக்காரப் பிள்ளை

எம் வி வெங்கட்ராம்

 

வணக்கம். இன்று என்ன கதை? ஆசிரியர் யார் ? 

வணக்கம். இன்று நாம் காணப்போவதுபைத்தியக்காரப் பிள்ளைஎன்ற கதை. எம் வி வெங்கட்ராம் என்ற மணிக்கொடி எழுத்தாளர் எழுதியது. 

ஆசிரியர் பற்றிக் கூற முடியுமா?  


வெங்கட்ராம் 1920இல் கும்பகோணத்தில் பிறந்தவர். சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர். 16 வயது முதல் கதைகள் எழுதத்தொடங்கியவர். மௌனியின் உற்ற நண்பர். “பசியைப் பாடிய கலைஞன்என்று சக எழுத்தாளர்களால் அறியப்படுபவர். “காதுகள்என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி பரிசு பெற்றவர். 

எழுத்தால் மட்டும் பிழைக்கலாம் என்று ஏமாந்த எழுத்தாளர்கள்  பாரதியார், புதுமைப் பித்தன் வரிசையில் இவரும் அடக்கம்.

அசோகமித்திரன் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

சென்னையில் எழுத்தாளனாகப் புகுந்து முதன்முதலில் பசியின் சுகத்தை உணர்ந்தேன்'' என்று சுய வாக்குமூலமே தந்துள்ளார்வெங்கட்ராம். 

நான் அறிந்ததை, கேட்டதை, பார்த்ததை, பேசியதை, அனுபவித்ததை, தொட்டதை, விட்டதை, சிந்தித்ததையே எழுதினேன். எழுதி எழுதித் தீர்த்தேன். பாதி எனக்காகவும் பாதி பசிக்காகவும்அவருடைய வாக்கு மூலம். 

வளமாக கலைஞன் வாழ்ந்தால், அவனுடைய படைப்பாற்றல் வற்றிப்போகும் என்கிற உண்மையைத் தமிழகம் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளதுஎன்பது அவரது ஆதங்கம். 

தமிழ்நாட்டில் முழு நேர எழுத்தாளனாக வாழ்வது என்பது ஒரு மானங்கெட்ட பிழைப்பு.” என்றும்  வெங்கட்ராம் கூறுகிறார். 

மேலும் விவரங்கள்  எம். வி. வெங்கட்ராம் - தமிழ் விக்கிப்பீடியா சுட்டியில் காணலாம். 

பைத்தியக்காரப் பிள்ளை என்ற இந்தக் கதையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? 

சுலபமாக இணையத்தில் கிடைத்தது. இக்கதையில் வரும் அம்மா பாத்திரம் விசித்திரமானது. மற்றும் சௌராஷ்டிரா சமூகத்தின் அன்றைய வாழ்க்கை முறையை அறியலாம். எஸ்ரா தேர்ந்தெடுத்த 100 சிறந்த  சிறுகதைகளில் இதுவும் ஒன்று. 

பசியைப் பாடிய கலைஞன் எம்.வி.வெங்கட்ராம் - கதை சொல்லிகளின் கதை பாகம் 31  (சுட்டி)

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், விகடனில் இக்கதையை சிறப்பாக விமரிசனம் செய்துள்ளார். சுட்டி மேலே. 

கதைச்சுருக்கம் கூற முடியுமா? 

பல சிறுகதைகளையும் போல ஒரு நாள் சம்பவத்தின் திரை நோட்டம் தான் இக்கதையும். 

ஒரு சௌராஷ்டிரா நெசவாளர் குடும்பம். தறி ஓடினால்தான் வாழ்க்கை ஓடும். அப்பா நெசவாளர். அம்மா மற்றும் 10 பிள்ளைகள். 5 ஆண், 5 பெண். கடைசிப் பெண் பிறந்த தினம் குடித்து குடித்தே இறந்தார் அப்பா.  

 

ராஜம் வீட்டின் மூத்த பிள்ளை 25 வயது. தற்போது கடைசி பெண் குள்ளிக்கு 9 வயது. இந்த 9 வருடங்களாக ராஜம் தான் குடும்பத்தைப் பேணுகிறான். 3 தங்கைகளுக்கு மணம் முடித்தாயிற்று. 4 தம்பிகளும் வெவ்வேறாக இருக்கின்றனர். மனோன்மணி என்ற 13 வயது தங்கை, குள்ளி என்ற 9 வயது தங்கை, அம்மா ஆகிய 4 பேர் வீட்டில் இருக்கின்றனர். (வாடகை வீடு தான். வீடு என்பதை விட போர்ஷன்.) 

அன்று ராஜம் விடியுமுன் எழுந்து தறியில் இருக்கும் மீதி வேலையை முடிக்கலாம் என்று தீர்மானிக்கிறான். அதற்குமுன் ஒரு காபி குடித்தால் தேவலை என்று ஹோட்டலுக்கு புறப்படுகிறான்.  அம்மாவுடன் ஒரு பெரிய வாக்கு தர்க்கம் ஏற்படுகிறது. கடைசியில் அம்மா கேட்டதை வாங்கிக் கொடுத்தாலும் அம்மா சண்டையை வளர்க்கிறாள். அந்த சண்டை அவனுக்கு வரப்போகும் பெண்ணைப் பற்றி மாறுகிறது. 

அவனுக்கு எதிர்வீட்டு பங்கஜத்தைப் பேசி முடித்தாயிற்று. அவர்களாகவேதான் பெண் தருகிறோம் என்று வந்தார்கள். முதலாளிதான் ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்து சரி சொல்ல வைத்தார். 

 அவன் தன்னுடைய கல்யாணத்திற்குச் செய்யும், ஆயத்தங்களை அம்மா கண்டுவிட்டாள். முதலாளியிடம் அடக்க விலைக்கு வாங்கிய ஒரு பட்டுப் புடவை, தங்கத் தாலி, தங்க செயின், 100 ரூபாய் ஆகியவற்றை பெட்டியில் வைத்துப் பூட்டியிருந்ததை அவள் பார்த்து விட்டாள். அவளுக்கு அது பொறுக்கவில்லை. அதைச் சாக்கு வைத்து அவனை சொல்லால் அடிக்கிறாள். 

வசவும் ஏச்சும் எப்படியோ போகட்டும் என்று தங்கையை எழுப்பி தறியில் தங்கை கரை கோத்துக் கொடுத்துத் துணை செய்ய அவன் நெய்யத் தொடங்கினான்.  அப்படி இருக்கும் போது அதையும் பொறுக்காமல் அவனை வேலை செய்யவிடக்கூடாது என்ற முடிவில் குள்ளியைக் கூப்பிட்டு வேறு ஒருவரிடம் வேலை செய்யச் செல்ல கட்டளை இடுக்கிறாள். வேலை தடைபடுகிறது. ராஜத்திற்குக் கோபம் வருகிறது. சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் இறங்குகிறான். அப்போதுதான் அவனுக்கு அந்த எண்ணம் ஏற்படுகிறது. 

நான் ஜீவித்திருப்பதால்தானே இவ்வளவு சண்டை. செத்தால் யாருடன் சண்டை போட முடியும். கடைசியில்நீ அழுது அழுது சாகணும்என்று கத்தியவாறே ரயிலின் முன் விழுந்து தற்கொலை  செய்து கொள்கிறான். 

கதையை இத்துடன் முடிக்கவில்லை. இக்கதையின் ட்விஸ்ட் என்பது பங்கஜம் சொல்லும் சொற்கள் தான்பைத்தியக்காரப் பிள்ளை!”. “கல்யாணம் ஆனதற்கு அப்புறம் இந்த வேலையைச் செய்யாமல் இருந்தானே 

கதைசுருக்கமே பெரிதாகத்தான் இருக்கிறது. கதை எப்படியோ? 

கொஞ்சம் வருணனைகளும் சௌராஷ்டிரா மொழி பேச்சுகளும் இணைந்து இருப்பதால் பெரியதாகத்தான் தோன்றுகிறது. ஆனாலும் கதையின் ஓட்டம் விறுவிறுப்பு இவற்றிற்குக் குறைவு இல்லை. 

ஆசிரியர் ஏதேனும் குறிப்பால் உணர்த்துகிறாரா? 

ஆம். கதை துவங்கும்போது அடுத்த வீட்டு சேவல்அய்யய்யோஎன்று கூவுகிறது. 

அம்மா சண்டையின் மும்முரத்தில் கூறுகிறாள். “நான் உயிரோட

இருக்கிற வரை அவ இந்த வீட்டுக்கு மருமகளா வரமுடியாது”.

 

அம்மா கத்துகிறாள். “அவ (பங்கஜம்) இந்த வீட்டில் கால் வச்சா கொலை

விழும். ஆமா கொலை விழும்

 

ராஜம் ஹோட்டலுக்கு போகும்போது தெரு நாய் ஒன்று அவனுக்குப்

பின்னே ஓடியது.

 

அவனுடைய வாயிலிருந்து வெளிவந்த சொற்கள் செத்து அழுகி வெளி

வருவதாகவும், நாறுவதாகவும் அவனுக்குத் தோன்றியது.”

 

இவ்வாறு முன் கூட்டியே ஆசிரியர் பல சகுனங்களை முன் வைக்கிறார்.


இருந்தாலும் இது ஒரு சாதாரணக் கதையாகத்தான் தோன்றுகிறது.


அம்மா பாத்திரம் விசித்திரமானது என்கிறீர்களே,  விளக்க முடியுமா?


இந்தக் கதையில் வரும் மாந்தர்களில் அம்மா பாத்திரம் 


இந்தக் கதையில் வரும் மாந்தர்களில் அம்மா பாத்திரம் மட்டும் வித்தியாசமானது. சாதாரணமாக அம்மா என்றால் அன்பு, பாசம் என்றுதான் நினைப்போம். ஆனால் இந்த அம்மா அம்மா இல்லை. ராட்சசி

கணவனை இழந்த விதவைத் தாயார்கள் பொறுப்பு சுமையால் வாடுவார்கள். ஆனால் இந்த அம்மா அப்படி இல்லை. வாயைத் திறந்தாலே கட்டளை அல்லது வசவு தான்.

சான்றாக ஆசிரியர் எழுதியுள்ளதையே சுட்டிக் காட்டுகிறேன். 

அம்மா, தான் பெற்றுப் போட்ட புண்ணியத்துக்குப் பதிலாக ஒவ்வொரு குழந்தையும் பாடுபட்டுத் தனக்குச் சோறு போட வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.  ஆண் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, பெண் குழந்தைகளுக்கும் அந்தக் கதிதான்.

அம்மா பொறுப்பு என்றால், அவள் பிரமாதமாய் என்ன சாதித்துவிட்டாள்? குழந்தைகளை வாட்டிவதக்கி வேலை வாங்கி வயிற்றை நிரப்பிக்கொள்கிறாள். வயிற்றில் கொட்டிக்கொள்வதைத் தவிர அவளுக்கு வேறொன்றும் தெரியாது.

அம்மாவுக்குச் சோழிப்பல். உதடுகளைக் காவல் காப்பது போல் வெளியே நிற்கும். அப்பா அப்படி குடி போதையில் அவளை அடிக்கும்போது, கையோ, காலோ, வாயோ, வயிறோ, பல்லில் சிக்கிய இடத்தைக் கடித்துக் குதறி விடுவாள்.

கணவனை இழந்த விதவைத் தாயார்கள் பொறுப்பு சுமையால் வாடுவார்கள். ஆனால் இந்த அம்மா அப்படி இல்லைகட்டளை அல்லது ர்அம்மா, தான் பெற்றுப் போட்ட புண்ணியத்துக்குப் பதிலாக ஒவ்வொரு குழந்தையும் பாடுபட்டுத் தனக்குச் சோறு போட வேண்டும் என்று எதிர்பார்த்தாள். ஆண் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, பெண் புள்  க்குச் சோழிப்பல். உதடுகளைக் காவல் காப்பது போல் வெளியே நிற்கும். அப்பா அப்படி குடி போதையில் அவளை அடிக்கும்போது, கையோ, காலோ, வாயோ, வயிறோ, பல்லில் சிக்கிய இடத்தைக் கடித்துக் குதறி விடுவாள். 

ராஜம், அம்மா முகத்தை வெறித்துப் பார்த்தான். அவளிடமிருந்து தப்புவதற்காக அப்பா தறி மேடையைச் சுற்றி ஓடியது ஞாபகம் வந்தது. 

ராஜம், அம்மா முகத்தை வெறித்துப் பார்த்தான். அவளிடமிருந்து தப்புவதற்காக அப்பா தறி மேடையைச் சுற்றி ஓடியது ஞாபகம் வந்தது.

ராஜம்என்ன செஞ்சிடுவே? கடிச்சிடுவியோ?” என்று கேட்டான் ஆத்திரமாக.

அடே பேதியிலே போறவனே, என்னை நாய் என்றா சொல்றே?” என்று எகிறிக் குதித்தாள் அம்மா. 

இவ்வாறு ஆசிரியர் கதையினூடே அம்மா குணங்களை விவரிக்கிறார்.

கடிக்கும் அம்மா!  நினைக்கவே ஆச்சர்யமாக இல்லை? வாயால் மட்டும் தானா, சொல்லாலும் தான். 

இதில் ராஜம் குணம் மட்டும் ஏன் இப்படி அடங்கிய பிள்ளையாக ஆசிரியர் சித்தரித்திருக்கிறார், மற்ற நான்கு பிள்ளைகள் ஏன் தனியாக இருக்கின்றனர் என்பது போன்ற கேள்விகளுக்கு ஆசிரியர் விவரமான பதில் சொல்லவில்லை. 

மொத்தத்தில்பைத்தியக்காரப் பிள்ளைஒரு எழுத்துப்  பைத்தியக்கார மனிதரால் எழுதப் பட்டது. கொஞ்சம் மனதை உருக்கும் கதை. 

அழியாசுடர்களில் படிக்க (சுட்டி)

வலைத்தமிழில் படிக்க  (சுட்டி)

ஒரு மாறுபட்ட விமரிசனம் 

பைத்தியக்காரப் பிள்ளை | சாபக்காடு 

இவர் கூறுவது 

பைத்தியக்காரப் பிள்ளைகதையை எம்.வி.வெங்கட்ராமின் மிகச் சிறந்த கதையாக மதிப்பிட்டிருக்கிறார்கள். இந்தக் கதையைப் பற்றி எழுதியவர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் அம்மா பாத்திரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்; அம்மா பாத்திரத்தைக் குறிப்பிடாமல்பைத்தியக்காரப் பிள்ளையைப் பேசிவிட முடியாதுதான். ஆனால், அவர்களில் சிலர் அந்த அம்மாவை மகனைப் பழிவாங்குபவளாக, சுயநலக்காரியாக, கொடூரமானவளாகச் சித்தரிக்கிறார்கள். ராஜத்தின் மரணத்துக்கு அவளைப் பொறுப்பாக்குகிறார்கள்; அவளைக் குற்றவாளி ஆக்குகிறார்கள். அப்படிச் சொல்லிவிட முடியுமா என்பதுதான் எனது சந்தேகம்.” என்கிறார்.

நாம் ராஜத்தின் அம்மா மீது குற்றம் சுமத்த முடியாது. ஏனென்றால், அவள் இதைப் பிரக்ஞைபூர்வமாகச் செய்யவில்லை. மனிதனுக்காகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் அமைப்புகள் ஒவ்வொன்றுமே தனிநபரின் சுதந்திரத்தில் தலையிடக்கூடியவையாக இருக்கின்றன; குடும்பம் உட்பட. அவை ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் ஏற்ப வேறுபடக்கூடியவையும்கூட. மேலும், அந்த அமைப்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்குத் தனிநபரைப் பலியிடவும் அவை தயங்குவது கிடையாது. 

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அது எல்லா நேரங்களிலும் பிரக்ஞைபூர்வமாக நடைபெறுவதில்லை என்பதுதான். இந்தக் கதையில் ராஜத்தின் அம்மா தன்னுடைய குடும்பத்துக்காக மூத்த பிள்ளையை இரையாக்குகிறாள். ராஜம் அவனுடைய ஐந்தாவது வயதில் தறியில் உட்கார நேர்கிறது. குடும்பத்துக்காகப் பலியாவது அங்கிருந்தே தொடங்கிவிடுகிறது. குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு இன்னும் அதிக அளவில் தன்னுடைய சதையைப் பிய்த்துக்கொடுக்க வேண்டியிருக்கிறது. நாம் இந்த விஷயத்தில் ராஜத்தின் அம்மாவைக் குற்றவாளி ஆக்கினோம் என்றால் நம் ஊரில் பல ஆயிரம் அம்மாக்களைக் குற்றவாளி ஆக்க வேண்டியிருக்கும்.” 

இவருடைய இந்த வாதம் கோர்ட்டில் “temporary insanity” என்று கொலையாளியை விடுதலை செய்வார்களே, அது போன்று எனக்குத் தோன்றுகிறது. 

அரட்டையை ஆரம்பியுங்கள்.

25 கருத்துகள்:

  1. அஜ்மல் ஸுசைன், பிரசன்னா இருவரும் நீடூழி வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் நீண்ட நாட்கள் கழிச்சுக் காலை/மதியம்/மாலை வணக்கம், நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல காரியங்களைச் செய்து வரும் நல்ல மனிதர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து அனைவருக்கும் உதவிக் கொண்டு நீடூழி வாழ வாழ்த்துகள். ராக்கெட் தொழில் நுட்பச் செய்திக்கும் மலேரியா பற்றிய செய்திக்கும் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. "பைத்தியக்காரப் பிள்ளை" தலைப்பைப் பார்த்ததுமே கதை எது என ஊகித்துவிட்டேன். இதையும் எம்..வி.வெங்கட்ராமின் "வேள்வித் தீ:" நாவலையும் எத்தனை முறை படித்திருப்பேன் என்று சொல்ல முடியாது. மனதை உலுக்கிப் பல நாட்கள் வேதனையில் ஆழ்த்தியவை. எழுத்தாளருக்கு இளகிய மனதே இல்லையா என எண்ண வைத்தவை. ஜேகே சாரின் தேர்வுகள் அனைத்துமே வித்தியாசமாகவும் அதே சமயம் மனதைத் தொடுவதாகவும் உள்ளன. ஆழ்ந்த படிப்பறிவு இருந்தால் ஒழிய இப்படித் தேர்வெல்லாம் செய்ய முடியாது. _/\_

    பதிலளிநீக்கு
  5. நல்ல பல செயல்களை செய்யும் உள்ளங்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  7. வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய் நிற்கிறார்கள் பிரசன்னாவும் அஜ்மல் ஹுசைனும்.//
    அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். அஜ்மல்லின் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.

    ஆசிரியர் சதீஸ் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. சந்திரசேகரன் சார் பகிர்ந்த கதை படித்து இருக்கிறேன்.
    நன்றாக விமர்சனம் செய்து இருக்கிறார் சார்.
    கதை வாழ்க்கையின் இன்னல்களை அனுபவித்தவரின் சோக முடிவு.
    வேள்விதீயும் படித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

  9. அஜ்மல் ஸுசைன், பிரசன்னா இருவரின் சேவைகளும் போற்றுதற்குரியது தொடரட்டும் நற்பணி.
    'பைத்திறக்கிறார் பிள்ளை' மனதை குடைந்த கதை. அந்த அம்மா மேல் கோபம்தான் வருகிறது இவ்வளவு குடும்பத்திற்கு உழைத்த மகனை இப்படியான முடிவுக்கு ஆளாக்கி விட்டாரே என்று.

    பதிலளிநீக்கு
  10. 'பைத்தியக்கார பிள்ளை' என்று வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. எம்.வி. வெங்கட்ராமின் கதை இன்று இங்கு வந்ததில் மகிழ்ச்சி. அபூர்வமான படைப்பாளி. அவருடைய ஒரு சில சிறுகதைகளையே வாசித்திருக்கிறேன். இந்தக் கதையைப் படித்ததில்லை.

    பதிலளிநீக்கு
  12. முதல் பாசிட்டிவ் செய்தி சகோ ரமணியின் தளத்தில் வாசித்த நினைவு. மற்றவை புதியவை. நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பைத்தியக்காரப் பிள்ளை மனதை என்னவோ செய்யும் கதை. இப்படியும் அம்மாக்கள்.
    இப்படியான அம்மாக்கள் யதார்த்தத்திலும் உண்டு. பார்க்கும் போது தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு என்பது உண்மையோ என்று தோன்றும். என்னவோ இப்படியான அம்மாக்களை மனம் ஏற்க மறுக்கும்.

    ஜெகே அண்ணாவுக்கு நன்றி, வாழ்த்துகளும். தெரிந்தெடுத்து இங்கு அறிமுகப் படுத்துவதற்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  13. 4/23
    நாளாவட்டத்தில் வாசித்து குறைந்த பட்சம் 'இப்படி ஒருவர் மெனக்கிட்டு எழுதியிருக்கிறாரே' என்று இது பற்றி பிரஸ்த்தாபிப்போர் எண்ணிக்கை கூடட்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!