பானுமதி வெங்கடேஸ்வரன் :
சிலர் வீட்டில் காலையில் ஸ்லோகங்களை ஒலிக்க விடுகின்றனர். அதை கவனிப்பது கூட கிடையாது. இதனால் ஏதாவது பலன் உண்டா?
# ஆஸ்திகர்கள் உண்டு என்று சொல்லுவார்கள். அந்த சவுண்டுக்கு மகிமை உண்டு என்று ஒரு நம்பிக்கை. கேட்போர் வெறுக்காதவரை அது பாட்டுக்கு .... வீட்டில் யாருக்கேனும் எரிச்சல் ஊட்டினால் மட்டும் ஹெட் ஃபோன் உபயோகிக்க வேண்டும்.
$ விஷ்ணு சஹஸ்ரநாமம் முதலான ஸ்தோத்திரங்கள் எதுவும் மாயங்கள் செய்வதை விட அடுப்பில் வைத்து செய்யும் காப்பி, வாசலில் பால், தினசரி இவை வந்ததா என்று சரி பார்த்தல், குழந்தையை எழுப்பி ப்ருஷில் பேஸ்ட் வைத்துக் கொடுத்தல் இவற்றை ஒரு pacing mechanism போல் கையாளலாம்.
வீட்டில் சுலோகம் சப்தம் வந்தால் எழுந்து விட்டார்கள் என்றும், குரல் கொடுத்தால் அது கேட்காது என்பதும் குறியீடாக இருக்கலாம்.
& ஒலிகள் சில அதிர்வுகளை ஏற்படுத்தும் - அந்த அதிர்வுகள் உடலுக்கும் மனதுக்கும் இதம் அளிக்கும் என்று நினைக்கிறேன். இளம் காலையில் நல்ல சப்தங்கள், நல்ல அதிர்வுகள் கிடைத்தால் நல்லதுதானே!
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வீடுகளில் பேஸ்மெண்ட் கண்டிப்பாக உண்டு. நம் நாட்டில் ஏன் அப்படி கட்டுவதில்லை? சரித்திர கதைகளில் நிலவறை என்று படித்திருக்கிறோம்.
# தேவை இருப்பின் வந்திருக்கும். நம் ஊரில் தெரு மழை வெள்ளம் எளிதில் உட்புகுவதால் சரியாகக்கட்ட ரொம்ப செலவாகும். 1990 களில் வடக்கே பேஸ்மென்ட் கட்டுவது ( நாங்கள் இருந்த நொய்டா பகுதியில்) பரவலாக இருந்தது. அப்பார்ட்மெண்ட் பழக்கம் வந்ததும் பேஸ்மென்ட் மேலேறி விட்டது.
$ Jubilee road, அரங்கநாதன் சுரங்கப்பாதை, பவழந்தங்கல் இவை எல்லாம் பார்த்துமோ இப்படி கேட்கத் தோன்றுகிறது?
& அகில இந்திய எலிகள் மாநாட்டில், 'பேஸ்மெண்ட் எல்லாம் எங்களுக்கே சொந்தம், அதை மனிதர்கள் உரிமை கொண்டாட அனுமதிக்கமாட்டோம்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதை, அகில உலக ஒன்றிய மியாவ் மியாவ் சங்கமும் ஆதரித்திருப்பதாக செய்தி கனவுலகக் கடிதம் ( Dream Post) பத்திரிகையில் படித்தேன்.
= = = =
எங்கள் கேள்விகள் :
1) குக்கரில் சாதம் சமைக்கும் போது முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து குறிப்பிட்ட நேரத்துக்கு பின் தீயை அணைப்பவர்கள் / சிம்மில் வைக்காமல் 4,5,6 என்று விசில் எண்ணிக்கையில் மட்டும் சமைப்பதை முடித்துக் கொள்பவர்கள் - இவர்களில் நீங்கள் எந்த வகை? ஏன் ?
2) சகுனம், கரி நாக்கு இவற்றில் உங்கள் அனுபவம் என்ன ?
3) மொபைல் பேங்கிங் மோசடிகளில் சிக்காமல் இருக்கத் தேவையான எல்லா விபரங்களையும் அறிந்து வைத்திருக்கிறீர்களா ?
4) சமீபத்தில் நீங்கள் விரும்பிக் கேட்ட நல்ல பாடல் எது? யார் பாடியது?
5) இரண்டு மகன் + இரண்டு அப்பா மூன்று தோசைகளை சமமாக பங்கிட்டுக்கொண்டால், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தோசை கிடைக்கும்?
= = = =
படம் பார்த்துக் கருத்து எழுதுங்க :
1)
2)
3)
= = = =
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குசகல ஆரோக்கியமும், ஆனந்தமும் நிறை வாழ்க்கை
தொடர வேண்டும்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம். பிரார்த்திப்போம்.
நீக்குசத்தமாக எது இருந்தாலும் ரசிப்பதில்லை. எனக்கு வேண்டும் என்பது மற்றவர்களுக்குக் காலை வேளையில்
பதிலளிநீக்குஅலுப்பாக இருக்கலாம். விஷ்ணு சஹஸ்ர நாமம்
மாலையில் ஒலிக்க விடுவது (அதாவது டெசிபல் குறைவாக)
வீட்டுக்கு நல்லது என்று மாமியார் ,தந்தை சொல்லிக் கேள்வி.
பெற்றோர் இருந்த அபார்ட்மெண்ட் வீடுகளில் ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு கடவுள் ஸ்லோகம் கேட்டு காது வலித்ததுண்டு:)
ஆம். அப்போதைய காலை வேளைகள் கட்டாயம் இபப்டிதான் சென்றன. இப்போதும் சிலநேரம்..
நீக்கு1960 காலங்களில், நாங்கள் குடியிருந்த வீட்டில் 3 குடித்தனங்கள் - அதில் ஒருவர் வீட்டில் ரேடியோ இருந்தது. சனிக்கிழமைதோறும் காலை வேளையில் ஸ்ரீவெங்கடேஸ்வர சுப்ரபாதம் ஒலிக்கும். எல்லோருமே கேட்டுக்கொண்டதால், அந்த வீட்டுக்காரர் ரேடியோவை எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாக வைப்பார். நாங்கள் எல்லோரும் கேட்டு ஆனந்திப்போம்.
நீக்கு1960 Okay.
நீக்குஅந்தக் காலத்தில் குருவி சத்தம் தவிர, எங்கிருந்தோ கேட்கும், முருகா நீ வரவேண்டும் டி.எம்.எஸ் பாடல் கேட்க சுகமா இருந்தது. இப்போது சவுண்ட் பொல்யூஷன் ரொம்பவே அதிகம். கொஞ்சம் சப்தம் கூட எரிச்சலை உண்டாக்குது. இதுல, அபார்ட்மெண்ட் பிச்சைக்காரனுவ, வீட்டில் பஜன் வைக்கிறேன்னு சில நேரங்கள்ல இரவு 11 மணிக்கு சப்தம் போடறது (நவராத்திரியின்போது என்று நினைவு) எரிச்சலா இருக்கும். Every enjoyment has to be private and not public.
நீக்குகுக்கர் விசில் 3 தடவை கேட்டு அணைப்பதுண்டு. இங்கே க்விக் (மின்)
பதிலளிநீக்குகுக்கர் இருப்பதால் 7 நிமிடங்களில் சத்தமில்லாமல் சாதம் தயார்,
எலெக்ட்ரி குக்கர் தானாக அணைந்துவிடும். எங்கள் வீட்டில் சாதம் எத்தனை விசில் வைப்பது என்பதில் பாஸுக்கும் மாமியாருக்கும் கருத்துவேறுபாடு ஏற்படும்! ஆக, வெங்கலப்பானை சாதம் எங்கள் வீட்டில் கிடையாது.
நீக்குநான் முதல் விசில் வந்ததும் sim செய்து, பிறகு 4 விசில் வரும்வரை காத்திருந்து ஸ்டவ்வை அணைத்துவிடுவேன்.
நீக்குAbsolutely correct.
நீக்குஇன்னும் க்விக்விக், க்க்விக் என்று பலவித உபகரணங்கள், வெஜ் பிரியாணி போன்றவை செய்வதற்கு வந்துவிட்டால்.... ஒருவேளை மனைவியே தேவையில்லையோ?
நீக்குமனைவிக்கும் குக்கருக்கும் என்ன சம்பந்தம் முரளிமா.
நீக்குஅவள் சமைப்பதைவிட அன்பு காட்டுவதில்
வல்லவளாக இருந்தால் போதுமே. @நெல்லைத்தமிழன்.
சப்தமாக ஒலிக்கும் ஸ்லோகங்கள்..... அதனதிர்வுகள் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அதிக சப்தம் சரியல்ல. உங்கள் கேள்விகளும் நன்று. என்ன பதில் வரப்போகிறது என்று பார்க்க காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவீட்டில் கேட்கும் ஸ்லோகங்களாவது ஓகே.. வெளியே தெருவில் நான்கு பக்கமும் அலறும் ஒலிப்பான்களை என்ன செய்வது?!
நீக்கு:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))0
நீக்குஸ்ரீராம்... ஒலிப்பான்கள் எதை அலறினாலும் (மாரியம்மா எங்கள் மாரியம்மா பாடல் உட்பட) எனக்கு ரொம்பவே அலர்ஜி. எனக்கு தீபாவளிக்கு வெடி வெடிக்கும் சத்தம் உட்பட. பல சமயம் நினைத்துக்கொள்வேன்..ஏன் அணுகுண்டு லட்சுமி வெடி போன்றவற்றை அவரவர் வீட்டுக் கிச்சனில் (சிலிண்டரின் அருகில்) வெடிக்காமல் தெருவில் வெடிக்கிறார்கள் என்று
நீக்கு:)))))))))))))))))))))))))))))))))
நீக்கு2 ஆவது கரி நாக்கு பற்றித் தெரியவில்லை.
பதிலளிநீக்குமாமியார் ஒரு தனி நபரைப் பற்றிச் சொன்னால் அது உண்மையாக இருக்கும்.
நெகடிவ் எண்ணங்கள் வைத்திருப்பவரைக்
காண்பித்து சொல்வார்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு3 , மொபைல் பாங்கிங்க்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.
பதிலளிநீக்குவயதாகி விட்டது:)
கருத்துரைக்கு நன்றி.
நீக்கு4, சமீபத்தில் என்றில்லாமல் எப்பொழுதுமே விரும்புவது
பதிலளிநீக்குபழைய தமிழ் ,இந்தி, கர்நாடக இசை.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇரண்டு மகன் + இரண்டு அப்பா மூன்று தோசைகளை சமமாக பங்கிட்டுக்கொண்டால், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தோசை கிடைக்கும்?
பதிலளிநீக்கு= = = =
மூன்று பேர் ..ஆளுக்கொரு தோசை:))))
தாத்தா, மகன் ,பேரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குவல்லிம்மா...காலையில் உங்களின் இந்தப் பதிலைப் படித்தேன். நீங்க ரியலி ஸ்மார்ட். பாராட்டுகள்.
நீக்குThank you Murali ma.
நீக்கு1) குக்கரில் சாதம் சமைக்கும் போது முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து குறிப்பிட்ட நேரத்துக்கு பின் தீயை அணைப்பவர்கள் / சிம்மில் வைக்காமல் 4,5,6 என்று விசில் எண்ணிக்கையில் மட்டும் சமைப்பதை முடித்துக் கொள்பவர்கள் - இவர்களில் நீங்கள் எந்த வகை? ஏன் ?
பதிலளிநீக்குநாங்கள் உபயோகிப்பது chakson தெர்மல் ரைஸ் குக்கர். புழுங்கல் அரிசி சோறு தான் சாப்பிடுகிறோம். குக்கரில் சோறு வைப்பதில்லை. அரிசி பானையில் ஒரு கொதி வந்தவுடன் எடுத்து அந்த குக்கர் பாத்திரத்தில் வைத்து இருக்க மூடி ஓரமாக வைத்து விடுவோம். ஒரு அரை அல்லது முக்கால் மணி கழிந்து பார்த்தால் சோறு போல போல வென வெந்திருக்கும். மீண்டும் அடுப்பில் 5 நிமிடம் வைத்து குழைய வெந்தவுடன் எடுத்து கஞ்சி வடித்துவிடுவோம்.
2) சகுனம், கரி நாக்கு இவற்றில் உங்கள் அனுபவம் என்ன ?
இரண்டையும் கண்டுகொள்வதில்லை.
3) மொபைல் பேங்கிங் மோசடிகளில் சிக்காமல் இருக்கத் தேவையான எல்லா விபரங்களையும் அறிந்து வைத்திருக்கிறீர்களா ?
மொபைல் பாங்கிங் செய்வதில்லை. குறிப்பாக upi. ஆனால் ATM கார்டு, மற்றும் கம்ப்யூட்டர் நெட் பாங்கிங் வழியே பரிவர்த்தனைகள். கம்ப்யூட்டர் வழி ஆகையால் username, password OTP amount Limit என்று நான்கு கட்ட பாதுகாப்பு உள்ளது என்பது எனது நம்பிக்கை.
4) சமீபத்தில் நீங்கள் விரும்பிக் கேட்ட நல்ல பாடல் எது? யார் பாடியது?
பதில் இல்லை.
5) இரண்டு மகன் + இரண்டு அப்பா மூன்று தோசைகளை சமமாக பங்கிட்டுக்கொண்டால், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தோசை கிடைக்கும்?
ஆளுக்கு ஒன்று. = = = =
Jayakumar
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபடங்கள் இன்னும் தெளிவாக இருந்தால் நன்றாக இருக்கும். பூனையின் காரம்போர்ட்
பதிலளிநீக்குஅருமை.
அடுத்த தடவையிலிருந்து தெளிவான படங்கள் வெளியிடுகிறேன்.
நீக்குகருத்துரைக்கு நன்றி.
நீக்குபடக்கருத்து.
பதிலளிநீக்குஅதிராவைக் காணவில்லை.
:)))) கருத்துரைக்கு நன்றி.
நீக்குகாலையில் ஸ்லோகங்கள் கேட்பது சுகந்தமான அனுபவம்.
பதிலளிநீக்குபக்கத்து வீட்டுக்கு இடையூறு இல்லாமல் இருந்தால் சரி...
ஆம், சரிதான்.
நீக்குஅன்பின் வணக்கம்
பதிலளிநீக்குஅனைவருக்கும்...
இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க, வாழ்க!
நீக்குஸ்லோகமோ எதுவோ.. அவரவர் விருப்பம் அவரவருக்கு. ஆனால் காதுக்குள்தான் கேட்கவேண்டும். பிறர் கேட்கும்படி சப்தமா எதையுமே வைக்கக்கூடாது.
பதிலளிநீக்குவீட்டுக்கே இந்த ரூல் எனும்போது, ப்ப்ளிக்கில் ஒலிப்பான்களை உபயோகப்படுத்தி எதை ஒலிபரப்புவதும் நாரசம்தான்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குநிலவறை கட்டிய வீடுகளை இங்கு பார்த்திருக்கிறேன் (அரை கிரவுண்ட் மனையில்). பசங்க அமைதியா விளையாடவோ இல்லை நண்பர்கள் சீட்டாட்டத்திற்கோ இல்லை சைக்கிள் கோன்ற அடசல்களை வைப்பதற்கோ உபயோகம்தான்.
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிடும் நிலவறை, புயல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கவும், பேய்ப்படங்கள் எடுக்க வசதியுமானது
:))))
நீக்குசிறப்பான கேள்விகளும் பதில்களும்.
பதிலளிநீக்குசர்க்கரைப் பந்தலில் தேன்மழை என்பார்களே!..
கருத்துரைக்கு நன்றி.
நீக்குசர்க்கரைப் பந்தல் கீழ நிற்கவே பயப்படணும்..எவ்வளவு எறும்பு நம்மேல விழும் என்று நினைத்து. அதில் தேன் மழையும் பெய்தால்... யோசித்துப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறதே.. சூடா ஜிலேபி சாப்பிடும்போதே ஜீரா விரலில் வழிந்தால் கொச கொசன்னு இருக்கு.... சரி சரி... உதாரணத்தை ஆராயலாமா?
நீக்குஅனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குவணக்கம். வாழ்க வளமுடன்.
நீக்குகேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகாலை நேரம் தொலைக்காட்சியில் பக்தி பாடல்கள் ஒலிக்க வைப்பேன். ஆனால் யாருக்கும் தொந்திரவு இல்லாமல் மெலிதாக வைப்பேன். வானொலி கேட்ட போதும் அப்படித்தான். டிரான்சிஸ்டரை சமையல் அறையில் வைத்து மெலிதாக கேட்கும் பழக்கம் உண்டு.
கீழ் வீட்டில் ஒருவர் காலையில் ஸ்லோகம் சொல்லி பூஜை செய்வார் நல்ல சத்தமாக சொல்வார். சிறு நாட்களாக கேட்கவில்லை. வீட்டை காலி செய்து விட்டு போய் விட்டார் போலும்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஒருவர் ஸ்லோகம் சத்தமாகச் சொல்லுகிறார் என்றால் அதற்கு, (1) சத்தமா சொல்லலைனா அவருக்கு அடுத்த வரி மறந்துவிடும் (2) வீட்டில் அந்தச் சத்தத்தைக் கேட்டாவது தூங்கும் பசங்க எழுந்து குளிக்கட்டும் என்ற எண்ணம் (3) அப்படியாவது மனைவியின் தொல்லை மற்றும் கேள்விகளிடமிருந்து தப்பிக்கலாம் என்பதில் ஏதாவது ஒரு காரணம்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கேஜிஜி சார் என்ன நினைக்கிறார்?
நீக்கு3.
நீக்குமணிகணக்காய் இறைவனை சத்தமாய் (பக்தியாக) பாடுவதுற்கு இப்படி எல்லாம் காரணம் இருக்கா!
நீக்கு:))
நீக்கு//நான் முதல் விசில் வந்ததும் sim செய்து, பிறகு 4 விசில் வரும்வரை காத்திருந்து ஸ்டவ்வை அணைத்துவிடுவேன்.//
பதிலளிநீக்குநானும் அப்படித்தான்.
நன்றி.
நீக்குஎனக்கு கரி நாக்கு நான் சொன்னால் பலிக்கும் என்று சிலர் சொன்னது பலித்து பார்த்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குஓ அப்படியா! அவர்களிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது!
நீக்குவீட்டில் ஒவ்வொருவர் விருப்பம் ஒவ்வொரு மாதிரி என்பதால் அவரவர் தங்களுக்கு வேண்டியதை ஹெட்செட் போட்டுக் கொண்டு கேட்டுக் கொள்வது நல்லது. அப்படியே வைத்தாலும் மிக மெலியதாக வைத்தால் நல்லது. சத்தமாக அடுத்த வீட்டிற்குக் கேட்கும் அளவு வைப்பது நல்லதல்லவே.
பதிலளிநீக்குசென்னையில் தெருவில் கத்த விடுவாங்களே ஹையோ ...
ஆங்காங்கே இருக்கும் ப்ளாட்ஃபார்ம் கோயில்களில் கூட அலறவிட்டிருப்பார்கள். வண்டி ஓட்டும் போது பின்னால் வரும் வண்டியின் சத்தம் கூடக் கேட்காது என்னதான் முன்னால் இருக்கும் கண்ணாடி பார்த்து ஓட்டினாலும்...
கீதா
ஆம். சரிதான். சத்தம் சில சமயங்களில் இம்சை. மின்வண்டித் தொடர்களில் பயணிக்கும்போது சத்தங்கள் பெரும் இம்சை.
நீக்குபுழுங்கலரிசி சாதம்/புழுங்கலரிசி குருணைசாதம் அதுவும் பெரும்பாலும் கேரளத்து அரிசி என்பதால் நேரடியாக வைத்துக் கஞ்சி வடிப்பது அல்லது நன்றாகத் தள தள என்று கொதிக்கவிட்டுக் குக்கரில் வைத்து நிறைய சத்தங்கள் வந்ததும் வெளியில் எடுத்து வடித்துவிடுவது...
பதிலளிநீக்குயாரேனும் வீட்டிற்கு வரும் போது வெள்லை அரிசி பச்சரிசி என்றால் குக்கரில் ஒரு விசில் விட்டு சிம் செய்துவிட்டு 10 நிமிடம் அல்லது 3, 4 விசில். வைத்து எடுப்பது.
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குகுக்கரில் சாதம் வைப்பதிலும் சந்தேகமா? எத்தனை விசில் என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறாரே....
நீக்கு:))
நீக்குகேள்வியின் முக்கிய அம்சம், முதல் விசில் வந்ததும், sim செய்கிறீர்களா என்பதுதான்!
நீக்குஇல்லை. சிம் செய்வதில்லை. காரணம் அதீத சோம்பேறித்தனம். குக்கரில் சாதம் வைத்துவிட்டு, குளிக்கும்போதோ அல்லது வேறு வேலை செய்யும்போதோ மனது மட்டும் விசிலை எண்ணி, அஞ்சு வந்துடுச்சு, குக்கரை ஆஃப் பண்ணு என்று சொல்லும்.
நீக்குஅப்படியா ! ஆச்சரியம்தான் !!
நீக்குடவுட்டு - குளிக்கும்போது எப்படி வந்து குக்கரை ஆஃப் செய்வீர்கள்!
நீக்கு2) சகுனம், கரி நாக்கு இவற்றில் உங்கள் அனுபவம் என்ன ?//
பதிலளிநீக்குமுக்கியத்துவம் கொடுப்பதில்லை. வீட்டில் இப்படியான பேச்சும் இருப்பதில்லை.
கீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குசமீபத்தில் விரும்பிக் கேட்ட பாடல் என்றால் எபி வெள்ளிக்கிழமைப் பாடல்கள்தான்...
பதிலளிநீக்குஅதற்கு அப்பாற்பட்டு என்றால் அழகான தேனுகா (இடையில் சிந்துபைரவி எட்டிப் பார்க்கும்) ராகப் பாடல் மாயோனே மணி வண்ணா ரஞ்சனி காயத்ரி பாடியிருப்பது - படம் மாயோன், இசை இளையராஜா. படம் வந்ததோ? தெரியவில்லை
கீதா
அட! ரஞ்சனி காயத்ரி சினிமாவில் பின்னணி பாடியுள்ளனரா ! ஆச்சரியமான தகவல்!
நீக்குகீதா ரங்கன்... இன்று புதன் கிழமை. நாளை மறுநாள்தான் வெள்ளிக் கிழமை.
நீக்கு:)))
நீக்குஅட! ரஞ்சனி காயத்ரி சினிமாவில் பின்னணி பாடியுள்ளனரா ! ஆச்சரியமான தகவல்!//
நீக்குஆமா கௌ அண்ணா. முதன் முதலாக....
பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.
https://www.youtube.com/watch?v=jO8jUL8cKXs
கதை ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் பாடலில் வருகிறது வேறொரு வீட்யோவில் அரங்கனும் வருகிறாஅர். ஆனால் சமீபத்திய சிலை கடத்தல் புரதான சின்னங்கள் வெளிநாட்டவரின் சதியால் களவாடப்படுவது, அப்படியான சிலைகள் புராதன சின்னங்கள் குறித்த ரகசியங்கள் அதெல்லாம் பேஸ் செய்த படக்கதை investigation, thriller நு சொல்றான. படம் வந்ததா என்று தெரியவில்லை.
கீதா
கீதா ரங்கன்... இன்று புதன் கிழமை. நாளை மறுநாள்தான் வெள்ளிக் கிழமை.//
நீக்குஹாஹாஹாஹா ...நெல்லை நினைச்சேன் இந்த நெல்லை என்னாச்சு என்னை வம்புக்கிழுக்காம அவ்வளவு பிசியோன்னு......
ஏன் போன வெள்ளிக்கிழமைதானே சொல்லணும்....கேள்வி - சமீபத்தில் கேட்ட -கடந்தகாலம்!!!!!! நாளை மறுநாள் இனிதானே வரப் போகிறது!!
கீதா
Cooker-ல் தானியங்களுக்கும் தினசரி சமையலுக்கும் எவ்வளவு whiste கொடுக்கணும்
பதிலளிநீக்கு- கொண்டை கடலை
- மொச்சை கொட்டை
- சிறு தானியங்கள்
- பயறு வகைகள்
- பருப்பு வகைகள்
- சாதம்
இதை தெரிவித்தால் தனியாக சமைக்க நேரிடும் ஆண்களுக்கு மிக மிக உபயோகமாக இருக்கும்
கேட்டவர் யார் என்று தெரியவில்லை. ஆனாலும் பதில் அடுத்த வாரம் அளிக்கிறோம்!
நீக்கும்ஹூம்…பெயரைச் சொன்னால் மானம் போய் விடும்!
நீக்குஇதென்ன புதுக்கதை! நாங்க எல்லோரும் எங்கள் பெயரை சொல்லிவருகிறோம். எங்கள் மானம் எங்கும் போகவில்லையே!!
நீக்கு@ நெல்லை..
பதிலளிநீக்கு// சர்க்கரைப் பந்தல் கீழ நிற்கவே பயப்படணும்.. எவ்வளவு எறும்பு நம்மேல விழும் என்று நினைத்து..//
சும்மா ஒரு இதுக்கு சொன்னது...
சர்க்கரையால பந்தல் போட முடியுமா!..? பந்தல் போட்டுட்டு அதுமேல வேணா சர்க்கரையத் தூவி விடலாம்..
ஜவ்வாது மேடையிட்டு
நீக்குசர்க்கரையில் பந்தலிட்டு - - - ஓஹோ ஓஹோ ஓஹோ !
ஒலிப்பான்களின் சத்தம் ஆண்டவனே எழுந்து ஓடிவிடுவான் .
பதிலளிநீக்குவீடுகளில் இதமாக ஒலிக்கவிட்டு கேட்பதால் ,அவற்றின் அதிர்வுகளால் நன்மையுண்டு என்கிறார்கள்.
கொண்டைக்கடலை - 3விசில்
மொச்சை - 3 விசில்
சாதம்-3விசில்
நாட்டு சிவப்பு அரிசி - 5விசில்
பயறு,பருப்பு வகைகள் 2-விசில்
நான் வைக்கிறேன்.
பெரும்பாலும் சாதம் ரைஸ் குக்கரில் போட்டுவிடுவேன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குThanks மாதேவி!
நீக்குமனம் விரும்பும் எந்த இசையும் சுகம்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குநல்ல மனோநிலையை உருவாக்கும் எந்த சப்தத்துக்கும் மனது சம்மதிக்கும்.
பதிலளிநீக்குநான் பொதுவாகப் பல வருடங்களுக்கும் மேலாகக் குக்கர் பயன்படுத்துவது இல்லை. எப்போவானும் உ.கி. சுண்டல் செய்ய மட்டும் சின்னதாக எவர்சில்வர் குக்கர் இருக்கு. அதைப் பயன்படுத்திப்பேன். முருங்கைக்கீரை சூப்பும் அந்தக் குக்கரிலேயே வைப்பேன். சாதம் வைப்பது நேரடியாக வடித்துத் தான் செய்து வந்தேன். இப்போது சில மாதங்களாக அதில் சூடு தாங்காமல் போனதால் ரைஸ் குக்கர்/ப்ரீத்தி! சரியாக இரண்டே பேருக்கு மட்டும் சாதம் வைக்கிறாப் போல் சின்னது. பெரிசு பானசோனிக் இருக்கு. நிறையப் பேர் இருந்தால் அது பயன்படுத்திப்பேன்.
பதிலளிநீக்குமொபைல் பாங்கிங் செய்வதே இல்லை. அதெல்லாம் வச்சுக்கறதே இல்லை. சகுனம்னு பார்த்தால் நம்ம ரங்க்ஸ் தான் அதெல்லாம் அதிகம் பார்ப்பார். என்னைப் பொறுத்தவரை ராகுகாலத்தில் எது செய்தாலும் சரியா வந்திருக்கு.
பதிலளிநீக்குபல பாடல்கள் உள்ளன. எதைனு சொல்றது? தாத்தா, அப்பா, பேரன் மூவரும் ஆளுக்கு ஒன்றாகச் சாப்பிடலாம்.
பதிலளிநீக்குகொண்டைக்கடலை/மொச்சை வகைகளுக்கு நான்கு அல்லது ஐந்து விசில் கொடுக்கலாம். சில பட்டாணிவகைகள் சீக்கிரம் வெந்துடும். சிலது கல்லைப் போல் இருக்கும் வேக வைத்தால் தான் கண்டு பிடிக்கலாம். பயறு எல்லாம் நேரடியாக வேக வைத்தாலே நன்கு வெந்துவிடும். பருப்பு வகைகள் முன்னெல்லாம் கற்சட்டியில் போட்டுக் கொண்டிருந்தேன். குக்கரிலும் சில சமயம் வைப்பேன்/ஆட்கள் இருப்பதற்கு ஏற்றாற்போல் பருப்பு மட்டும் எனில் நான்கு விசில். சாதமெல்லாம் முன்னாடி அடுப்பை சிம்மில் வைத்துத் தான் செய்து கொண்டிருந்தேன். அதில் சில/பல சமயங்கள் சாதம் குக்கருக்குள் வழிந்து விடும். ஆகவே குக்கரையே வேண்டாம்னு வைச்சுட்டேன். அதோடு குக்கர் சாதம் வேண்டாம் எனவும் சில மருத்துவர்கள் சொன்னார்கள். இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பது "பெயரில்லா" என்னும் பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் மதுரைத் தமிழரோ?
பதிலளிநீக்கு