கொண்டைக்கடலை சாதம். இதுவும் எல்லா மசாலா சாதங்களைப் போலத் தான். ஆகவே சுலபமாகவே செய்துடலாம். நான்கு பேருக்கு எனில் சின்னக் கிண்ணத்தில் ஒரு கிண்ணம் கொண்டைக்கடலை, (நான் அநேகமாய்க் கறுப்புக் கொண்டைக்கடலை தான் பயன்படுத்துவேன். நீங்க உங்கள் விருப்பம் போல் போட்டுக்கலாம்.) ஊற வைச்சுக்குங்க. முதல் நாள் இரவே ஊறப் போட்டுடுங்க. நிறையத் தான் இருக்கும். பரவாயில்லை.
நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்:முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது, நாளைக்குச் செய்ய இன்னிக்கு மத்தியானம் ஊறப் போட்டீங்கன்னா ராத்திரி படுக்கறதுக்குள்ளே மூன்று முறையாவது கழுவிட்டு ஊற வைக்கிற நீரை மாத்துங்க. இது கொண்டைக்கடலை, பட்டாணிபோன்றவற்றின் வழவழப்பைப் போக்குவதோடு ஒரு மாதிரியான வாசனை வராமலும் இருக்கும். இதை எந்தப் பருப்பு வகைகள் ஊற வைச்சாலும் நினைவில் வைச்சுக்குங்க.
கொண்டைக்கடலை ஊறியது ஒரு கிண்ணம் இப்போ ரெண்டு கிண்ணமாயிருக்கும். முளைக்கட்டி இருந்தால் இன்னும் நல்லது.
தக்காளி பெரிது ஒன்று
பச்சை மிளகாய் இரண்டு
இஞ்சி ஒரு அங்குலத் துண்டு அல்லது துருவலாக ஒரு டீஸ்பூன்
வெங்காயம் பெரிது ஒன்று
மிளகாய்த் தூள் இரண்டு டீஸ்பூன்
தனியாப்பொடி இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
கசூரி மேதி கால் டீஸ்பூன்
கரம் மசாலா அரை டீ ஸ்பூன்
தயிர் கெட்டியாக ஒரு சின்னக் கிண்ணம்
உப்பு தேவைக்கு
சமைத்த சாதம் உதிர் உதிராக மூன்று கிண்ணம் அல்லது 200 கிராம் பாஸ்மதி அரிசி. அரிசியைச் சேர்ப்பது எனில் பாஸ்மதி அரிசியைக் களைந்து விட்டு ஒரு கிண்ணம் நீரில் ஊற வைக்கலாம். அல்லது குக்கரில்/ரைஸ் குக்கரில்/ வைத்தால் வெந்நீரைக் கொதிக்க வைத்துச் சேர்க்கலாம்.
தாளிக்க
எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
தேஜ் பத்தா எனப்படும் மசாலா இலை
லவங்கப்பட்டை ஒரு துண்டு
பெரிய ஏலக்காய் ஒன்று
கிராம்பு ஒன்று
சோம்பு ஒரு டீஸ்பூன்
சர்க்கரை ஒரு டீஸ்பூன்
பச்சைக் கொத்துமல்லி, புதினா ஆய்ந்து கழுவிக் கொண்டு பொடிப் பொடியாக நறுக்கித் தனியாக வைக்கவும்.
கொண்டைக்கடலையை உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொண்டு வடிகட்டி வைக்கவும். சமைத்த சாதம் எனில் உதிர் உதிராக எடுத்துக் கொள்ளவும். அரிசியைச் சேர்ப்பது எனில் கொண்டைக்கடலையை வேக வைக்க வேண்டாம். தாளிப்பில் போட்டு வதக்கிக் கொண்டு அரிசியையும் சேர்த்துத் தேவையான நீர் விட்டு (அரிசிக்கு மட்டும்)க் குக்கரை மூடி வெயிட்டைப் போட்டுவிட்டு ஒரே விசிலில் அணைக்கலாம். தாளிப்பது போன்ற மற்ற விபரங்கள் கீழே.
இப்போது அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பானைப் போட்டுக் கொண்டு எண்ணெய்/நெய்/வெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் முதலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைய ஆரம்பித்ததும் சோம்பு, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, தேஜ் பத்தா என ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். எல்லாம் வெடித்து வந்ததும் வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சித் துருவலைச் சேர்த்துக் கொஞ்ச நேரம் வதக்கவும். மஞ்சள்பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடியைச் சேர்த்து இன்னும் கொஞ்ச நேரம் வதக்கவும். பின்னர் வேக வைத்த/வேக வைக்காத கொண்டைக்கடலையைச் சேர்த்து வதக்கவும். கொண்டைக்கடலை நன்கு கலந்ததும் தயிரைச் சேர்க்கவும். உப்பு இப்போது சேர்க்க வேண்டாம்.
தயிரும் கொண்டைக்கடலையும் நன்கு கலந்ததும் பாஸ்மதி அரிசியைச் சேர்த்து விட்டு அரிசிக்கு உள்ள உப்பு மட்டும் சேர்க்கவும். கொண்டைக்கடலையை ஏற்கெனவே உப்புச் சேர்த்து வேக வைத்ததை மறக்க வேண்டாம். வேக வைக்காமலும் சேர்க்கலாம். பின்னர் அரிசிக்கு உள்ள நீரை மட்டும் அளந்துவிட்டு விட்டு ரைஸ் குக்கரிலோ குக்கரிலோ வைக்கவும். வெளியே எடுத்து கரம் மசாலா, ஒரு ஸ்பூன் வெண்ணெய் கசூரி மேதி சேர்த்து விட்டுக் கொண்டு, கொத்துமல்லி, புதினா நறுக்கியவற்றைத் தூவி அலங்கரிக்கவும். எந்தவிதமான பச்சடியோடும் சாப்பிட ரெடி.
சாதமாகச் சேர்க்கிறீர்கள் எனில் கொண்டைக்கடலையும் தயிரும் கலந்ததும் தயிர் நன்கு வற்றிக் கொண்டைக்கடலை மட்டும் ஈரமில்லாமல் வந்ததும் சாதத்தைச் சேர்க்கவும். தேவையான உப்பை மிதமாகப் போடவும். ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெயோடு கரம் மசாலா, கசூரி மேதி சேர்த்துக் கிளறி விட்டு அடுப்பை அணைத்துவிட்டுப் பின்னர் பச்சைக் கொத்துமல்லி, புதினா இலைகளால் அலங்கரிக்கவும். நான் சாதமாகத் தான் சேர்த்தேன். 200 கிராம் அரிசி தான் முழு நாளுக்கும். ஆகவே அத்தனையையும் கொ.க.சாதம் பண்ணினால் செலவாகாது. நிறையப் பேர் இருந்தால் குக்கரிலோ, ரைஸ் குக்கரிலோ அரிசியைப் போட்டுச் செய்வது சரியாய் வரும்.
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பதிலளிநீக்குபிறன்பழிப்பது இல்லாயின் நன்று..
குறள் நெறி வாழ்க..
வாழ்க.
நீக்குஇனிய சொற்களே உறவாக
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க நிறைவாக..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க. வாழ்க.
நீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார். வணக்கம். பிரார்த்திப்போம்.
கொண்டைக் கடலையின் பெருமையைப் போல பிரம்மாண்டமான பதிவு.. சிறப்பு..
பதிலளிநீக்குஅதே.. அதே..
நீக்குஉண்மை.
நீக்குசும்மாவா சொன்னார்கள் - நாவிற்கு அடிமையாக வேண்டாம் என்று!.. ஆனாலும் கேட்பாரில்லை..
பதிலளிநீக்குஅடக்கு.. மனதை அடக்கு என்று கவிஞர் கூட மனதைத்தான் அடக்கச் சொன்னார். நாவை அல்ல!!! ஸோ, கவலைப்படேல்!!
நீக்குநீங்க வேறே! வயிறு படுத்தின பாட்டில் நாக்கெல்லாம் உலர்ந்து காய்ந்து போய்ப் பாடாய்ப் படுத்தி விட்டது. கல்யாணச் சாப்பாட்டில் எதையுமே சாப்பிட முடியலை. தயிர் சாதம்/ரசம் சாதம் தவிர்த்து! :(
நீக்கு@ ஸ்ரீராம்...
பதிலளிநீக்கு//மனதைத்தான் அடக்கச் சொன்னார்கள்..//
மனதின் பிரதிநிதி அல்லவோ - நாக்கு.. இரு வழிகளில்!..
அப்படிப் பார்த்தாலும் இது சரியே!.. மனம் அடங்கி விட்டால் நாக்கு ரொம்பவும் துள்ளாது!..
மனம் கொஞ்சமானும் அடங்கினதால் தான் அத்தனை வகையான சாப்பாட்டுக்கும் "நோ" சொல்ல முடிஞ்சது! :)))))
நீக்குஅன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஆரோக்யம் நிறை வாழ்வு தொடர இறைவன் அருள வேண்டும்.
கொண்டைக்கடலை சாதம் முதன்முறையா கேள்விப்படறேன்.
பதிலளிநீக்குசெய்முறையைப் படித்தேன். வேரியேஷன்ஸைத் தனியாக எழுதியிருக்கலாம்.
அருமையான செய்முறை. எனக்குப் பிடிக்கும் என்றே தோன்றுகிறது
வடக்கே இருந்ததால் இதெல்லாம் தெரிஞ்சுக்க முடிஞ்சது! :)))) ஆகவே பெரும்பாலும் என்னோட செய்முறை வட இந்தியச் செய்முறையை ஒத்தே இருக்கும். இங்கே தமிழகத்தில் கொஞ்சம் மாறுபடும்.
நீக்குசெய்து பாருங்க நெல்லை.
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்/ இங்கே கொடுத்த பதிலும் காணோமே! :( செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க நெ.த.
நீக்குநீங்க கறுப்புக் கொண்டைக் கடலையை தயிர் சேர்த்து துவைத்ததால் வெள்ளையாயிருக்கா இல்லை காபூலி சென்னா சேர்த்தீர்களா?
பதிலளிநீக்குஇது காபூலி சனாவில் செய்தது தான். பையருக்காக. மாமாவுக்குக் கறுப்புக் கொ.க.தான் பிடிக்கும்.
நீக்குஅந்தப் படங்களைத் தேட முடியலை. இது தான் கிடைச்சது.
நீக்குகொண்டைக் கடலை சாதம் அன்பின் கீதாவின் செய்முறை அருமையுடன்
பதிலளிநீக்குபதிவாகி இருக்கிறது.
எவ்வளவு நேரம் பிடிக்குமோ.
மீண்டும் வருகிறேன். எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்.
தயார் செய்வதற்கு எவ்வளவு நேரம் பிடிக்குமோ என்று சொல்றீங்களா இல்லை வார இறுதி என்பதால் உங்களுக்குக் கருத்திட எவ்வளவு நேரம் ஆகுமோ என்று சொல்றீங்களா வல்லிம்மா?
நீக்குமெதுவா வாங்க வல்லி. நேரமெல்லாம் ஆகாது! விரிவாக எழுதி இருப்பதைப் பார்த்தால் அப்படித் தோன்றும்.
நீக்குகொண்டைக்கடலை சாதம் அருமையாக இருக்கிறது. பூண்டு தவிர எல்லா மஸாலாவும் அணி வகுக்கிறது. இந்தமாதிரி எல்லா முழு பருப்பின் வகைக்களைக்கொண்டும் இம்மாதிரி தயாரிக்க யாவருக்கும் யோசனைகளும் வரும்.அவரவர்கள் செய்யும் விதம் சற்று மாறுபட்டாலும் நல்ல யோசனைக்கு வித்திட்டு விட்டீர்கள். மாட்டுப் பெண்களுக்குச் செய்தி ஒலிபரப்பினால் போயிற்று. ரஸித்துப் புசியுங்கள் என்று சொல்கிறேன். உங்கள் பிறந்த நாளுக்கு மஸாலா சாதம் செய்முறை கொடுத்து விட்டீர்கள். மிகவும் நன்றி. அன்புடன்
நீக்குநன்றி அம்மா. பொதுவாக நான் வட இந்திய உணவு வகைகளில் பூண்டே சேர்ப்பதில்லை. பிடிக்கவில்லை என்பதோடு ஒத்துக்கொள்ளவும் இல்லை. நீங்கள் படித்துப் பார்த்து நன்றாக இருப்பதாகச் சொன்னதோடு அல்லாமல் மாட்டுப் பெண்களுக்கும் தெரிவிப்பது என்னை மிகவும் கௌரவப் படுத்தி விட்டது. நமஸ்காரங்கள் அம்மா. உங்கள் ஆசிகள் என்றென்றும் தேவை.
நீக்குஏன் வாணலியில் ஜீனியைச் சேர்க்கச் சொல்லுகிறீர்கள்?
பதிலளிநீக்குநெல்லை பொதுவாகப் புலாவ், ஃப்ரைட் ரைஸ் போன்ற வகையறாக்களுக்கு அப்படிச் செய்யும் போது ஒரு ப்ரௌன் கலர் கிடைக்கும். சுவையும் கரமலைஸ் அந்த சுவை நன்றாக இருக்கும்.,..குறிப்பாக ஹோட்டலில் கிடைப்பது போல சாதம் நல்ல உதிரி உதிரியாக இருக்கும் போது அதோடு இந்தச் சுவை நன்றாக இருக்கும்.
நீக்குகீதா
மசாலா வாசனையைத் தூக்கலாய்க் காட்டுவதோடு அதன் காரத்தையும் குறைக்கும் சர்க்கரை சேர்ப்பதில். அதோடு வெங்காயம் வதக்குகையில் சர்க்கரை சேர்த்தால் வெங்காயமும் சீக்கிரம் வதங்கும்.
நீக்குதனியாக சின்ன வெங்காயத,தை உதிர் உதிராக வறுத்து, அதனைக் கடைசியில் சாத்த்தின்பேல் தூவிக் கலந்தால் இன்னும் சுவையாக இருக்குமோ?
பதிலளிநீக்குஅவரவர் விருப்பம்.
நீக்குபார்க்கும்போதே ஆசை வருகிறது.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி.
நீக்குகொண்டக்கடலை சாதம் பற்றிய குறிப்பு அருமை! விரிவாக, தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்!
பதிலளிநீக்குகொண்டைக்கடலையை முளைக்கட்டியும் செய்யலாம். இதே போல் பச்சைப்பயறையும் பண்ணலாம்.
நீக்குபச்சைப் பயறிலும் செய்து பார்க்க வேண்டும்
நீக்குநல்ல முளை வந்த பச்சைப்பயறில் ரொம்பவே சுவையாக இருக்கும் கோமதி. செய்து பாருங்கள்.
நீக்குபுதிதாக இருக்கிறது... விளக்கம் அருமை...
பதிலளிநீக்குநன்றி திரு தனபாலன்
நீக்குநன்றி திரு தனபாலன்.நேற்றுக் கொடுத்திருந்த பதிலைக் காணோம்/ :(
நீக்குகீதாக்க சூப்பர். நல்லா வந்திருக்கு சொன்ன விதமும் சூப்பர்.
பதிலளிநீக்குஇதே செய்முறைதான்.
ஆனால் கருப்புக் கொண்டைக்க்டலையை என்னதான் ஊற வைத்தாலும் சாதத்தோடு சேர்த்து வைத்தால் சாதம் சீக்கிரம் வெந்துவிடும், அதுவும்பாஸ்மதி நான் பயன்படுத்தினால், கடலை அவ்வளவாக வெந்திருக்காது என்பதால் கடலையைத் தனியாக வெந்து வைத்துவிடுவேன். அதன் பின் அதே முறை. நம்வீட்டில் பூண்டு பிடிக்கும் என்பதால் பூண்டும் சேர்த்துக் கொள்வேன்.
ராஜ்மாவிலும் செய்வதுண்டு. வெ கொ விலும் செய்ததுண்டும். வெங்காயம் சாப்பிடாத பெரியவர்கள் இருந்த போது அவர்களுக்குத் தனியாகச் செய்வதுண்டு.
கீதா
ராஜ்மாவுக்கு ஒரு காலத்தில் அடிச்சுண்டு சாப்பிடுவோம். இங்கே ஶ்ரீரங்கத்தில் வாங்கும் ராஜ்மா அத்தனை குழைவதே இல்லை. ஆதலால் வாங்குவதே இல்லை..
நீக்குஅக்கா ஆமாம். இங்கு வாங்கும் ராஜ்மா வும் குழைவதே இல்லை அதில் நல்ல சிவப்புக் கலரில் இருக்குமெ அது ப்ரௌன் சிவப்பு கலந்து அது வேகவே வேகாது எவ்வளவு ஊறவைத்தாலும் ரொம்ப நிறைய பாடு படணும் குக்கரில் வைத்து வேக விட. ஆனால் கொஞ்சம் இளம் ப்ரௌன் வண்ணத்தில் கிடைக்கும் ராஜ்மா நன்றாக வேகிறது.
நீக்குகீதா
நானும் எல்லா வகையான காய் சாதங்களுக்கும் சர்க்கரை காரமலைஸ் செய்து வெங்காயம் வதக்குவேன்
பதிலளிநீக்குஅதே போன்று கடைசியில் வெங்காயத்தைக் நீள நீளமாக நறுக்கியதை வெண்ணையில் வதக்கி கிரிஸ்பாகும் வரை வதக்கி மேலே தூவுவதும் உண்டு. அது அன்றைய என் நேரம் மனம் பொருத்து!!
கீதா
எல்லாம் நல்லாத்தான் சொல்றீங்க. அதே மாதிரி பண்ணுவீங்களான்னு, சாப்பிட்டுப் பார்த்துதான் சொல்ல முடியும். எங்க வந்திடப் போறாங்களோன்னு பயந்துக்கிட்டு, மழை வெள்ளம், வீட்டின் பக்கத்து சப்வே தண்ணீரில் மூழ்கியது, ரோடில் ஐந்தடித் தண்ணீர் என்றெல்லாம் படங்கள் காண்பித்து பயமுறுத்தறீங்க
நீக்குஹாஹாஹாஹாஹா!
நீக்குஹாஹாஹாஹா ஹலோ நெல்லை நான் போட்டிருக்கும் படங்கள் எல்லாம் உங்க ஏரியா பக்கம் தான் நம்ம ஏரியா இன்னும் தண்ணில மூழ்கற அளவு ஆகலையாக்கும். நிறைய திறந்த வெளிகள் இருக்கிறதே....அதெல்லாம் சிட்டிக்குள்ளாற அப்புறம் கொஞ்சம் தள்ளி!!..
நீக்குஎங்க வீட்டுக்கு நீங்க வரதுல எந்தப் பிரச்சனையும் இல்லையாக்கும்...சும்மா கதை.... நீங்க தான் நாங்க எல்லாம் செஞ்சா சாப்பிடமாட்டீங்களே அப்புறம் நீங்க வராம இப்படி சொல்லலாமோ!!!!!!!!!
கீதா
பதிவாசிரியர் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டுகள்!
பதிலளிநீக்குஅதோடு, பதிவாசிரியரை எப்போதும் கலாய்க்கும் நெல்லைத் தமிழனின் மனைவிக்கும் இன்று பிறந்தநாள் வாழ்த்து சொன்னா குறைந்தா போய்விடுவீர்கள்? ஹாஹாஹா
நீக்குநன்றி கௌதமன் சார். போற இடத்திலே எல்லாம் எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி ஜமாய்ச்சிருக்கீங்க. நெல்லைத் தமிழரின் ஹஸ்பண்டின் பிறந்த நாளுக்கும் எங்கள் வாழ்த்துகள்/ஆசிகள்.
நீக்குஓஹோ இன்று கீதாக்காவின் பிறந்த நாளா!!! அப்ப அக்காவுக்கு இன்று ஒரு வயசாகிடுத்தா!
நீக்குஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்க! கீதாக்கா. பிறந்த நாள் வாழ்த்துகள்!
கீதா
நன்றி தி/கீதா!
நீக்குநன்றி தி/கீதா!
நீக்கு//அப்ப அக்காவுக்கு இன்று ஒரு வயசாகிடுத்தா!// இப்போத் தான் இதையே கவனிச்சேன். அநியாயமா இல்லையோ? இப்போத் தான் பிறந்த குழந்தைக்கு அதுக்குள்ளே ஒரு வயசா? நான் என்ன எக்சார்சிஸ்ட் பேபியா? அதுவும் எஸ்.வி.சேகரின் எக்சார்ஸிஸ்ட்! :)))))
நீக்குஅனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குகொண்டைகடலை சாதம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇப்போது குழம்பு காய் வைக்காமல் இப்படி சாதங்கள் செய்வதுதான் எனக்கு பிடிக்கிறது. இந்த கொண்டைக்கடலை சாதம் செய்து பார்க்கிறேன்.
நன்றி.
உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீதா சாமபசிவம், வாழ்க வளமுடன்.
நன்றி கோமதி. எனக்கும் குழம்பு, ரசம் இப்போல்லாம் பிடிப்பதில்லை. மருத்துவரும் சாப்பிடாதே என்கிறார். வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குநெல்லைத் தமிழரின் மனைவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்.
நீக்குநெல்லை உங்க ஹஸ்பண்டுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்! God Bless!
பதிலளிநீக்குகீதா
நன்றி அனைவருக்கும். நம்ம கீதா சாம்பசிவம் மேடம் அவர்களுக்கு வாழ்த்துகளும், நல்ல ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக இருக்க எங்களது ப்ரார்த்தனைகள். அவரது ஆசிகள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
நீக்குகீசா மேடம், நிறைய விஷயங்கள் தெரிந்தவர். ஆன்மீகம் மற்றும் பல ஏரியாக்களில் அவரது பரந்த அறிவு எல்லோருக்கும் தெரிந்ததுதான். சில நேரங்களில், சட்னு கலாய்த்துவிடுகிறோமே என்று நானே நொந்துகொள்வேன். இருந்தாலும் அவர் மீதான மரியாதையும் அன்பும் எனக்கு மிக அதிகம். இந்தச் சமயத்தில் அவருக்கு என் மரியாதையையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஹையோ நெல்லை! ரொம்பவே பாராட்டி இருக்கீங்க! இங்கே உள்ள வெயிலுக்கு இந்த ஐஸ் இதமாகவே இருக்கு! :)))))) நீங்க வழக்கம் போல் என்னைக் கலாய்க்கலாம். ஒண்ணும் பிரச்னை இல்லை.
நீக்குசனிக்கிழமை பதிவு நல்ல செய்திகளுடன் ஜெயகுமார் சந்திரசேகரன் சாரின் கதை பற்றிய விமரிசனமும் வாசித்தேன். கதை இப்படியும் அம்மாவா என்று எண்ண வைத்தது.
பதிலளிநீக்குஞாயிறு - படங்கள் எல்லாமே அருமை.
சகோதரி கீதாசாம்பசிவம் அவர்களுக்கும், நெல்லைத் தமிழனின் மனைவி அவர்களுக்கும் இறைவன் நல்ல ஆரோக்கியத்தை நல்கி நீடுழி வாழ அவர்களோடு துணையிருக்க வேண்டும். என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
துளசிதரன்
இது என்ன துளசிதரன் சார்... தினப் பத்திரிகைக்கு, வார இதழ் போல வார முழுமைக்குமான கருத்தை ஒரு பின்னூட்டத்தில் தெரிவிக்கிறார். ஒருவேளை கீதா ரங்கன்(க்கா) தினமும் எழுத மறந்துவிட்டு மொத்தமாக இங்க எழுதியிருக்கிறாரோ?
நீக்குநன்றி துளசிதரன்
நீக்குஹாஹாஹா நெல்லை, துளசி கொடுத்ததும் லேட்டு....நான் இங்கு கொடுத்ததும் லேட்டு அந்தப் பதிவுல கருத்து போகவே இல்லை.
நீக்குஇப்ப பாருங்க என் பதிவுக்கே கொஞ்சம் பதில்தான் கொடுக்க முடிந்தது. மத்தவங்களுக்கு கருத்து போகவே இல்லை பிழை பிழை கேப்சா ந்னு என்என்னவோ சொல்கிறது ப்ளாகர். அப்படித்தான் எபியிலும் முந்தைய பதிவுகளுக்கு வந்தது ஸோ இங்கு போனதும் இங்கு கொடுத்துவிட்டேன்.
இவ்வளநேரம் இங்கும் போகவில்லை. இப்ப எங்கள் தளத்தில் போனது தெரிந்ததும் இங்கும் முயற்சி...
கீதா
கீதா சாம்பசிவம், நெல்லை தமிழன் அவர்களின் மனைவி இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .
பதிலளிநீக்குகொண்டைக்கடலை சாதம் சூப்பர்.
நன்றி மாதேவி.
நீக்குHappy blessed birthday to Geethaa akka and Mrs.Nellai
பதிலளிநீக்குAngel
ஆஹா! இன்னிக்கு என்ன எதிர்பாரா ஆச்சரியங்கள்? நன்றி ஏஞ்சல்!
நீக்குபிளாக்ல எழுதறதை விட்டு ஒரு வருடமாயிடுச்சுன்னு, தமிழ்ல எழுத்த் தெரியாதபோதே புரிஞ்சிடுச்சு. ஏஞ்சலினுக்கு அ ஆ ஆரம்பித்து தமிழ் கற்றுக்கொடுக்க நான் ரெடி. ஆனால் ஏஞ்சலின் இதைப் படித்துப் புரிந்துகொள்வாரா?
நீக்குகாணாமற் போன ஆதிரை (ஹா ஹா ஹா) கனடாவிலிருந்து திரும்பிவிட்டாரா?
வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி
பதிலளிநீக்குஇன்று பிறந்த நாள் காணும் தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல குறைவற்ற உடல்/மன ஆரோக்கியத்தை தங்களுக்கு இறைவன் தர இந்நாளில் எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
தங்களது இன்றைய திங்கள் பதிவில் கொண்டைக்கடலை ரெசிபியும் அருமையாக உள்ளது. சமயம் கிடைக்கும் போது தங்கள் பாணியில் இவ்விதமே அவசியம் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. கொண்டைக்கடலை சாதமும் செய்து பாருங்கள்.
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.
பதிலளிநீக்குஇன்று பிறந்த நாள் காணும் தங்கள் மனைவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் இருவரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு காலம் சிறப்புற வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உங்களை மாதிரி பெரியவர்களும், கீசா மேடம் பாதிரியான குழந்தைகளும் ஆசி கூறுவது மகிழ்ச்சியளிக்கிறது.
நீக்குஅரபு நாடுகளில் ஹூஸாரி என்றொரு உணவு வகை உண்டு.. எகிப்திய அரிசியை முக்கால் பாகமாக அவித்துக் கொண்டு அதனுடன் கால் பங்கு + கால் பங்கு அளவில் Vermicelli யும் Pasta வையும் வேக வைத்து சேர்த்துக் கண்டு இவற்றுடன் வேக வைக்கப்பட்ட வெள்ளைக் கொண்டைக் கடலை, கொள் இவற்றை வெண்ணெய்யுடன் seasoning செய்து ஐந்து நிமிடம் தம் வைத்து எடுப்பார்கள்..
பதிலளிநீக்குஅதையே சற்று மாற்றி என்னளவில் செய்வதுண்டு...
அதெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன...
ஆமாம், துரை. எங்க மருமகள் சொல்லி இருக்காள். கூடவே வெற்றிலை போன்ற ஏதோ ஓர் இலையையும் உள்ளே ஜீரணத்திற்கான ஏதோ ஒரு பொருளை (பெயரெல்லாம் மறந்து போச்சு) கொடுப்பார்கள் என்று சொல்வாள்.
நீக்குநான் கிழம்புஞ்சாதம், சாத்துஞ்சாதம்... மிஞ்சிப்போனா பிட்சா கபூஸ் சாப்பிட்டு 25 வருடங்கள் ஓட்டிவிட்டேன்.
நீக்குஅன்பின் கீதாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநெல்லையின் மனைவிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
இருவரும் மிக மிக செழிப்பாக ஆனந்தமாக வாழவேண்டும்.
நன்றி ரேவதி.
நீக்குநன்றி. 'செழிப்பாக' என்றால் வெயிட் போட்டு என்ற அர்த்தம் இல்லையே
நீக்குசெய்முறை மிகத் தெளிவாகக் கொடுத்திருக்கிறீர்கள் அன்பின் கீதாமா.
பதிலளிநீக்குஅம்மா நம் பக்கத்தில் இருந்து சொல்வது போல
உங்கள் எழுத்தில் அந்த ஆதரவு தெரிகிறது.
எங்கள் வீட்டில் இவருக்கு சன்னா மிகவும் பிடிக்கும்.
இங்கே குழந்தைகளுக்குச் செய்து கொடுக்கிறேன்.
வயிற்றுக்கு இதமாக இருக்கும்.
தாமதமாகப் பின்னூட்டம் இடுகிறேன். மன்னிக்கணும்.
புது செய்முறையை வெளியிட்ட உங்களுக்கும் எங்கள் ப்ளாகுக்கும்
மிக நன்றியும் வாழ்த்துகளும்.
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் காலங்கார்த்தாலே வரச்சேயே எரர் காட்டுதே! ரேவதிக்குக் கொடுத்த பதில் காணோமே! :(
பதிலளிநீக்குநன்றி ரேவதி. செய்து பாருங்கள். கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை, காராமணி, பயறு போன்ற எந்தப் பருப்பிலும் செய்து பார்க்கலாம்.
பதிலளிநீக்குசுவையான குறிப்புகள். வட இந்தியாவில் இப்படியான உணவுகள் - dhதால் chசாவல், chசோலே chசாவல் போன்றவை அடிக்கடி செய்வதுண்டு.
பதிலளிநீக்கு