புதன், 5 ஜூலை, 2023

புலியை அடக்கும் மந்திரம்

 

நெல்லைத் தமிழன்: 

உங்களைக் கூப்பிட்டு வீட்டுக்கு நீங்க வந்தா, வெளில காபி பால் போன்றவை சாப்பிடறதில்லைம்பீங்க. சரி குளிர்பானம் ஏதாவது வேணுமான்னு கேட்டால் அதெல்லாம் உடம்புக்கு ஒத்துக்காதும்பீங்க. சரி. சாப்பாடோ இல்லை டிபனோ சாப்பிடுங்க என்றால், வர்றதுக்கு முன்னாலதான் சாப்பிட்டுட்டேன், வயிற்றில் கொஞ்சம்கூட இடமில்லைம்பீங்க. வர்றவங்களுக்கு ஸ்வீட்டாவது பண்ணி, இங்க சாப்பிடாட்டியும் வீட்டுக்காவது கொண்டுபோகச் சொல்லலாம்னா, நமக்கு மாதிரி அவங்களுக்கு டயபடீஸ் வந்துடக் கூடாதுன்னு நினைக்கிறேன், ஆனா கண்டிப்பா நீங்க வீட்டுக்கு வரணும்னு சொல்லறவங்க, நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறாங்க?

# நீங்கள் கூப்பிட்டு நான் வருவதாகத் தொடங்கி கடைசியில் நான் கூப்பிட்டு நீங்கள் வருவதில் முடித்திருக்கிறீர்கள்.

நாம் சென்றால் : காஃபி வேண்டாம் டீ கொடுங்கள் என்பது போல் சொல்லி , வருவதை ஏற்க வேண்டும். நம் வீட்டுக்கு வருபவர்களை " காபி வேண்டாம் என்றால் டீ, ஜுஸ்,  மோர் இப்படி ஏதாவது ஒன்றை (- வெந்நீர் உட்பட ) வற்புறுத்தித் தர வேண்டும்.

கண்டிப்பா நீங்க வீட்டுக்கு வரணும்னு சொல்லறவங்க, நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறாங்க?

நம்முடைய நட்பு. 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

நீங்கள் நழுவ விட்ட வாய்ப்புகள் ஏதாவது உண்டா?

# இல்லை என்று நினைக்கிறேன்.

& நிறைய இருக்கு. ஆனால் - No regrets. 

நம் நாட்டில் நன்றாக படிக்க, வேலை கிடைக்க, திருமணமாக, நோய் குணமாக, கடன் தீர இப்படி பல லௌகீக தேவைகளை பூர்த்தி செய்ய பல ஸ்லோகங்கள், பதிகங்கள் இருக்கின்றன. அவை மகான்களால் அருளப்பட்டவை. அவற்றை நாம் ஓதினாலும் பலன் உண்டு என்று பலரும், அவை யாரோ ஒருவர் தனக்காக வேண்டியது, அது எப்படி நமக்கு பலன் தரும் என்று சிலரும் கருதுகின்றனர். நீங்கள் எந்த கட்சி?

# நான் பலன் தராது என்கிற கட்சி .

& நான் பலன் தரும் என்னும் கட்சி. 

நீங்கள் விசிட் செய்த ஊர்களில் மீண்டும் விசிட் செய்ய வேண்டும் என்று தோன்றும் இடம் எது? ஏன்?

# திருவரங்கம். பாசுரங்கள் காரணமான ஈர்ப்பு.

& இன்றைய சூழ்நிலையில், அப்படி எதுவும் இல்லை. 

வெளியூர்களுக்குச் செல்லும் பொழுது  எந்தெந்த இடங்களை பார்க்க விரும்புவீர்கள்? ஷாப்பிங் செய்ய நேரம் ஒதுக்குவீர்களா?

# விசேஷம் என்று அறியப்படும் எல்லா இடங்களுக்கும் சென்று பார்க்க விரும்புவேன்.  ஷாப்பிங் ஆர்வம் கிடையாது.

& யாருடன் செல்கிறேன் என்பதைப் பொருத்தது. என்னை ஒருவர் அழைத்துச் செல்கிறார் என்றால், அவர் சொல்லும் / செல்லும் இடங்கள்தான் என்னுடைய தேர்வு. எனக்கு என்று தனியான preference ஒன்றும் கிடையாது. 

= = = = = 

KGG பக்கம் :

என்னால் மறக்கமுடியாத இன்னொரு நண்பன், ஸ்ரீநிவாசன். என்னுடைய ஆறாம் வகுப்புத் தோழன்.  

எலிமெண்டரி ஸ்கூல் வாழ்க்கை முடிந்து, எல்லோரும் முதன்முதலாக உயர்நிலைப் பள்ளியில் காலடி எடுத்து வைத்த பெருமையான நாட்கள். 

சில பழைய நண்பர்கள், புது நண்பர்கள். ஒவ்வொருவரையும் மீண்டும் / அல்லது புதிதாக சந்திப்பதில் சந்தோஷம். 

ஐந்தாம் வகுப்பு வரை இருந்த கோ எஜுகேஷன் ஆறாம் வகுப்பு முதல் அந்த தேசிய உயர்நிலைப் பள்ளி(நாகை)யில் அப்போது கிடையாது. என்னை மாதிரிப் பையன்களுக்கு இது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. ஏன்? இனிமேல் ஆசிரியர்களிடம் பிரம்படி பெற்றால், அல்லது 'பெஞ்சு மேல ஏறி நில்லு ' என்பது போன்ற தண்டனைகள் பெற்றால், வகுப்பில் உள்ள பெண்களின் முன்னால் அவமானப் பட்டு கூனிக் குறுகி நிற்கவேண்டாம். 

புதிய நண்பன் ஸ்ரீநிவாசன் முதல் நாளே என்னை ஆச்சரியப்படுத்தினான். பேசிக்கொண்டிருந்தபோது அவன் சொன்னான், " எனக்கு புலியைப் பார்த்து பயம் கிடையாது" 

நான் : " எப்படி? "

ஸ்ரீ : " புலியை அடக்கும் மந்திரம் எனக்குத் தெரியும். அந்த மந்திரத்தைச் சொன்னால், புலி என்னை ஒன்றும் செய்யாமல் ஓடிவிடும். " 

நான் : " அது என்ன மந்திரம்? "

ஸ்ரீ : " அதை நான் புலியின் முன்னால் மட்டும்தான் சொல்லுவேன். " 

நான் : " டேய் - எனக்கும் சொல்லிக்கொடுடா !  எனக்கு புலியைப் பார்த்தால் ரொம்ப பயம். "

ஸ்ரீ : " சரி. நாளைக் காலையில் ஸ்கூலுக்கு கொஞ்சம் முன்னாடியே வா. அதோ அந்த வேப்ப மரத்துக்கு கீழே நில்லு. (அந்தப் பள்ளியில், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகள் 'குமரன் ஷெட்' என்னும் இடத்தில், மரங்களுக்கு நடுவே ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு கீற்றுக் கொட்டகை!) நான் உனக்கு அந்த மந்திரத்தையும் சொல்லி, அதை எப்படி சொல்லவேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கிறேன். " 

அன்று இரவு தூங்கும்போது கனவில் வந்த புலிகளை எல்லாம் அலட்சியமாகப் பார்த்து, 'இனிமேல் என்னை நீங்க யாரும் பயமுறுத்த முடியாது' என்று சொன்னேன். 

மறுநாள் காலை வகுப்பு ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரம் முன்பே வேப்ப மரத்தடியில் போய் நின்றுகொண்டேன். 

பத்து நிமிடங்கள் கழித்து வந்தான் ஸ்ரீநிவாசன். தன்னுடைய நிஜார்ப்பையிலிருந்து ஒரு சிறிய பாட்டிலை எடுத்தான். அதைத் திறந்து, ஒரு விரலால் அதில் இருந்ததை எடுத்து என் நெற்றியில் சிறு கீற்றாக இட்டுவிட்டான். 

நான் : " இது என்னடா? " 

ஸ்ரீ : " இது ஐயப்பன் நெய். புலியைத் துரத்தும் மந்திரம் சொல்வதற்கு முன்பு இதை நெற்றியில் இட்டுக்கொள்ளவேண்டும். அதற்குப் பின் மந்திரம் சொல்லவேண்டும். " 

நான் : " என்ன மந்திரம்? "

ஸ்ரீ : " சாமியே சரணம் ஐயப்பா; வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா. இதுதான் மந்திரம்." 

எனக்கு அதுவரை ஐயப்பன் பற்றி, சபரிமலை பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. அப்பா எனக்கு சொல்லியிருந்த கடவுள்கள்: பிள்ளையார், முருகன், பரமசிவன். விஷ்ணு, கிருஷ்ணன். 

பிறகு அவன் எனக்கு அந்த சிறிய பாட்டிலைக் கொடுத்து, "இதை எப்போதும் உன்னோடு வைத்திரு. மந்திரம் சொல்லுமுன்பு இதை எடுத்து நெற்றிக்கு வைத்துக் கொண்டு, பிறகு மந்திரத்தை சொல்லு" என்றான். 

நிஜமாகவே அந்தக் காலத்தில் இதை நான் முழுவதும் நம்பினேன். அன்றிலிருந்து இன்றுவரை, ஒரு தடவையாவது காலையில் பூஜை செய்யும்போது, " சாமியே சரணம் ஐயப்பா, வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா, பதினெட்டாம்படி பாலகனே சரணம் ஐயப்பா" என்று ஐயப்பனை வேண்டிக்கொள்வது வழக்கமாகி விட்டது. புலிக்கு பயந்து அல்ல. ஏதோ ஒரு ஆத்மதிருப்திக்காக. 

ஸ்ரீநிவாசன் 'கதை'கள் இன்னும் நிறைய இருக்கின்றது. அடுத்த வாரம் பார்ப்போம். 

= = = = = = =

அப்பாதுரை பக்கம்: 

களைகண்.. (சென்றவாரத் தொடர்ச்சி) 

இருக்கையில் அமரும் வரை மாறாத புன்னகையுடன் என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் பாலு. பொறுக்க முடியாமல், "எப்படி இவ்ளோ புன்சிரிப்போட இருக்கே?" என்றேன்.

 "நான் எங்கே பார்க்கிறேன்? எல்லாம் கண்ணன் பார்வை" என்றான். புன்னகையுடன்.

சட்டென்று ஒரு எண்ணம் வந்து மறைந்தது. பாலு என்னை அறிந்தவன் போல "பயப்படாதே. நான் வேணும்னா சென்னை வரும்வரை மௌனமா இருக்கேன்" என்றான். 

திடுக்கிட்டேன்.  என் எண்ணம் இவனுக்கு எப்படித் தெரிந்தது? "என்ன பிரசங்கம் பண்ணுறே?" என்றேன், வசதியாக உட்கார்ந்தபடி.

"கண்ணன் உணர்வூட்டும் உரை" என்றான்.  "நம்மள்ள நிறைய பேர் தம்மைப் பற்றிய முழு அறிவைப் பெற முடியாமலே பிறவிக்கு மேலே பிறவி எடுக்கிறோம். பிறவிகளைக் குறைக்க கண்ணன் உணர்வு உதவும். கண்ணன் உணர்வு வளருவதால தன்னைப் பற்றிய அறிவு சட்டுனு தீ போல பத்திக்கும். பிறவியொழியும் வகை பற்றி ஆன்மிகப் பிரசங்கங்கள்" என்றான்.

"ஆன்மிகத்துல கடவுள் கலக்குறது சரியா?" என்றேன்.  "ஆன்மிகம்னு சொல்ற நிறைய பேர் ஆஸ்திகமும் ஆன்மிகமும் ஒண்ணுன்ற பாணில பேசுறாங்க.  கண்ணன் இல்லாம ஆன்மிகம் சாத்தியமில்லையா?"

"தெரியாது" என்றான். "ஆனா ஆன்மிக அறிவு அவளோ லேசு இல்லேனு சொல்றேன். ஆஸ்திகம் எளிது.  பற்றறுக்க பற்றுனு எங்க தாத்தா சொல்வாரு நினைவிருக்கா? ஏதாவது ஒரு பற்று, ஒரு கருவி வேணும். ஆஸ்திகம் கடவுள் பாதைல கொண்டு போனாலும் ஆன்மிக உணர்வு வரப்போ தானாகவே கருவி விலகி கருத்தா வெளிவரும். கண்ணன் ஒரு கருவி.  விராட்புருஷ ஞானம்னு ஒரு பிரிவு இருக்கு. கற்பனைக்கு எட்டாத ஒன்றைக் கற்பனை செய்து உணர, கற்பனைக்கு எட்டக்கூடிய ஒன்றினைக் கருவியாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தைச் சொல்லும்.  ஒரு கற்பனைப் பரிமாணத்தில் ஏறி இன்னொரு கற்பனை பரிமாணத்தில் பயணிப்பதால் கிடைக்கும் பரிணாமம்" என்றான்.

"ஓஹோ" என்றேன். வேறே என்ன சொல்ல? அவன் சொன்னது என் மண்டையில் ஏறவே சென்னை வரும் நேரத்துக்கு மேலாகும் போலிருந்தது. "அப்போ கண்ணனைப் பற்றினா மட்டுந்தான் ஆத்ம  ஞானம் கிடைக்கும்னு சொல்றியா? மற்ற கடவுள்கள் மதங்கள் எல்லாம் தன்னறிவுக்கு வழி சொல்வதில்லையா? ஆத்ம ஞானத்துக்கு கடவுள் தேவையில்லைனு நினைக்கிறேன்.  அஹம் பிரம்மான்றதப் பத்தி என்ன நினைக்கிறே?"

"அப்படி சொல்றப்ப மனதுல சக்தி வெளிப்படலினா அஹம் பிரம்மா வாயோட சரி.  அந்த சக்தி வெளிப்பட்டா தானும் தன்னைச் சுத்தி இருக்கும் ஜீவன்களும் ஞானம் பெறும் - அதுக்கு ஒரு லெவர் வேணும்.  அதான் கண்ணன்.  கண்ணன் உணர்வு ஆஸ்திகம்னு எடுக்க வேண்டியதில்லே. ஒரு லெவலுக்கு மேலே லெவர் வேண்டியதில்லே" என்றான்.  "ஊரில்லே நிலமில்லே உறவு யாருமில்லே பிரபந்த பாட்டுக்கு தாத்தாவோட விளக்கம் நினைவிருக்கா?" என்று என்னைப் பார்த்தான்.  பாலுவின் தாத்தா மார்கழி மாதம் பிரபந்த வகுப்பு எடுப்பார்.  லேசாக நினைவிருந்தது. 

"களைகண் அப்டினு சொல்றார் ஆழ்வார்" என்று நிறுத்தினான்.  களைகண் எனக்குப் பிடித்த நூறு தமிழ்ச் சொற்களில் ஒன்று. என் ஆசானும் நண்பருமான அரசன் மாய்ந்து மாய்ந்து போவார் களைகண் என்ற சொல்லின் அற்புதம் பற்றி (அரசன் பற்றி அறிய நசிகேத வெண்பா படியுங்க). சட்டென்று நிமிர்ந்து பார்த்தேன்.

"களைகண்னா உறவு, ஆதரவுனு சொல்லலாம். உறவு மற்றொருவரில்லேனு சொல்லிட்டு மறுபடி ஏன் ஆருளர் களைகண்னு புலம்பறாரு பொடியார்?"

பரிதாபமாகப் பார்த்தேன்.  பாலு விடுவதாயில்லை.

"உத்பாதிகம், ந்ருபாதிகம்னு இரண்டு வகை உறவுகள் உண்டு.  இங்கயும் உள்ளா வெளியா ரைட்டா கொய்ட்டா விளையாட்டு தான்.  ஆன்மிகம்னு சொல்றியே... ஆத்ம ஞானம் வரதுக்கு ஆன்மாவின் போக்கு பற்றி நல்லா புரிஞ்சுக்க வேண்டாமா? நம்ம கூட இருக்குற உறவுகள் ரத்தபாச உறவுகள். கடன்கள். உத்பாதிக பந்துக்கள்னு பேரு. ஆஸ்திகப் பாதைல நம்மை அழைச்சுக்கிட்டு போற நிறைய குருமார்களும் இந்த வகையே. நானும் உனக்கு இந்த வகை தான்.  இந்த உறவுகள் அறுந்து போகக் கூடியவை. இந்த உறவுகளின் பிடிப்பு  ஒரு குவளை நீரில் தலை முழுகினவுடன் மறைந்து விடும்.  அப்புறம் அடுத்த பிறவி, அடுத்த உத்பாதிக பந்துனு போயிட்டே இருக்கும்".

"விடமாட்டான்" என்று புரிந்து விட்டது. சரணாகதியானேன்.

"அப்படி இந்த சாதாரண உறவு முறை ரத்த பந்தங்கள் வெட்டுபட்டு  ஆன்ம தரிசனம் கிடைக்கணும்னா ந்ருபாதிக பந்து வேணும்.  அதான் களைகண். அதனால தான் ஊரில்லை உறவில்லை கண்ணா உன்னை விட்டா ஆருளர் களைகண்னு உருகினாரு ஆழ்வார்.  அப்படி ஒரு ஆன்ம பந்து இருந்தா ஆன்மிகமும் வேணாம் ஆஸ்திகமும் வேணாம் நண்பா" என்று என் தலையில் செல்லமாகத் தட்டினான். "அந்த நிலையில் நீ மாங்காய்ப்பால் உண்டால் என்ன தேங்காய்ப்பால் உண்டால் என்ன?" என்று பிரகாசமாகச் சிரித்தான்.

நான் மருண்டு போயிருந்தேன்.  பாலு மெள்ளப் பாடத் தொடங்கினான். அக்கம்பக்க பிரயாணிகள் பற்றிக் கவலைப்படாமல்.

மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை

யாயையா ருயிரின் மேவும் மருளெனில் இருளாய் நிற்கும்

மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை

யாயையா ருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும்.

என்னைப் பற்றித்தான் பாடுகிறான் என்பது மயக்கமாகப் புரிந்தது.  

"நீ சொல்றது சரிதான். இருந்தாலும் ஆஸ்திகம் அறுக்கலேனா மெய் ஆன்மிகம் தெரியவே வாய்ப்பில்லேனு நம்புறேன்" என்றேன்.

விமானம் தரை தொடும்வரை இந்த ரீதியில் நிறைய பேசினோம்.   விமானம் தரை தொட்டு வெளியேறுகையில் "திருவான்மியூர் ஹரே க்ருஷ்ணா மந்திர்ல இந்த மாசம் முழுக்க பிரசங்கம் செய்யறேன். ரெண்டு நாளாவது வாடா" என்றான்.

அடுத்து எப்ப சந்திப்போம்னு தெரியாது. அது வரை இந்த மயக்கம் போதும்னு தோணிட்டதால நான் திருவான்மியூர் பக்கமே போகவில்லை.

வால்: 

மாயையினால் விளையும் பாவ புண்ணியமெனும் இரு வினைகளும் தொடர்ந்து சூழ்வதால் புற ஆணவம் மேலிட்டு அறிவு வெளிப்படாமல் ஆன்மா அறியாமையில் மங்கிக் கிடக்கும்.  மாயையினால் விளையும் பாவ புண்ணிய வினைகள் தொடர வாய்ப்பிலாது போகையில் அறிவு வெளிப்பட்டு ஆன்மா பிரகாசிக்கும். (ஆன்மா பிரகாசித்தால் பிறவி கிடையாது. ஆன்மா பிரகாசித்து சூபர் நோவா, அப்புறம் காக்கா உஷ்!)

இதான் பாலு பாடிய பாட்டின் பொருள்.  அவனுடைய தாத்தா இதை எத்தனை தடவை பாடியிருப்பாரோ தெரியாது.. அப்படியே பதிந்து போன பாட்டு ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் கழித்து அகத்துள் லேசாகப் பிரகாசித்தது :-)

= = = = = = =


110 கருத்துகள்:

  1. அப்பாதுரை தாடி வளர்த்து குங்குமம் வைத்திருக்கிறாரா என்று பார்க்க வேண்டும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள், புலையர் வடிவில் வந்தால், நமக்கு கடவுள் நினைப்பும் பக்தியும் வருமா?

      நீக்கு
    2. கடவுள் எந்த வடிவில் வந்தாலும் கடவுள் நினைப்பு வராது.
      கடவுள் என்று தெரிந்த பிறகே நினைப்பு வரும். (பிரயோசனம் ?)

      நீக்கு
    3. கடவுளுக்கு நாம் காணும் உருவங்கள் யாவுமே மனிதன் உருவாக்கியவை மட்டுமே. கண்டவர் விண்டிலர்.

      நீக்கு
  2. கே ப வரை படித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது வருகிறேன்

    பதிலளிநீக்கு
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பானுக்கா.  ஏகாந்தன் ஸார். புதுக்கோட்டை வைத்தியநாதன் ஸார்...(வந்து படிப்பீர்களா வைத்தியநாதன் ஸார்?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று பிறந்த நாள் காணும் சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும். ஆயுள் ஆரோக்கியமாக வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி.

      நீக்கு
    2. நன்றி ஸ்ரீராம்! __/\__
      நன்றி கமலா __/\__

      நீக்கு
  4. முதல் கேள்வி கீர வுக்காக, அவர் நாங்கள் வீட்டிற்கு வந்தால் சந்தோஷம் என எழுதியதற்கான என் கலாய்ப்பு

    பதிலளிநீக்கு
  5. எங்கள் பிளாக் பதினைந்து வருடங்களாகத் தொடர்வது மிகப் பெரிய சாதனை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. புலியை அடக்கும் மந்திரம் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை அவன் முழுவதும் நம்பி, எனக்கு உபதேசம் செய்துவைத்தான். ஆனால் நான் சர்க்கஸ் & ஜூ தவிர வேறு எங்கும் புலியை நேரில் கண்டதில்லை.

      நீக்கு
  7. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. நெல்லைக்காரர்கள் வரவேற்பு இப்படித்தான் இருக்கும் போல....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப் புரிந்துகொள்ள இவ்வளவு வருஷமாச்சான்னு கேட்கமாட்டேன். நாளைக்கு நம்ம வீட்டுக்கு வந்துட்டு, ஒரு காபித்தண்ணீ கூட நெதெ தரலைனு சொல்லிடக்கூடாதிவ்லையா? சொன்னீங்கன்னா, மத்தவங்க, அவருதான் நெல்லைப்பகுதியைச் சேர்ந்தவர்னு எத்தனை தடவை சொல்லியிருக்கார் என்று உங்களைத்தான் சொல்லுவாங்க ஹாஹாஹா

      நீக்கு
  9. புலியை அடக்கும் மந்திரம்- ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  10. பொடிவச்சுப் பேசல பொடியார். எளிதாத்தான் சொல்லிருக்காரு. ஆனா களைகண் இன்றுதான் தெளிவானது. (இந்தப் பாசுரத்தை டெல்லியில் கோவில்ல பாடிருக்கேன். களைகண் வார்த்தைபற்றிய குழப்பநிலையோடே.)

    ஆனா இன்னொன்னு:

    It is not that you select..
    You have to be selected.

    இது ஜே கிருஷ்ணமூர்த்தி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவளம்பாடிமேய கண்ணனே களைகண் நீயே, ஆருளர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே, களைவாய் துன்பம் களையாதொழியாய் களைகண் மற்றிலேன், பற்றுக்கோடு

      நீக்கு
    2. bulayi என்று நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

      நீக்கு
    3. Bulayee or Bulawat எனச் சொல்வர் சிலர் - வயதான மனிதர் - குறிப்பாகத் தங்கள் அந்திமக்காலத்தில். அது வேறு. இது வேறு...

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளவு நேரம் கழித்தா துணையாயிருப்பார்?

      நீக்கு
    2. :))) எப்போதும், நாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் துணை இருப்பார்.

      நீக்கு
    3. ஹா ஹா. அவருக்கு நேரமென்பதும், காலமென்பதும் கிடையாதே... நமக்குத்தான் அதற்கென்று ஒரு "நேரம்" உள்ளது. அந்த "நேரத்தையும்" அவர் மட்டுந்தான் அறிவார்.

      நீக்கு
    4. /:))) எப்போதும், நாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் துணை இருப்பார். /

      உண்மை. இந்த உள் கடந்து நமக்குள் வரும் இந்த நம்பிக்கைதான் கடவுள். நன்றி சகோதரரே.

      நீக்கு
  12. நழுவவிட்ட வாய்ப்புகள் - இது இல்லாமல் வாழ்க்கை இல்லை. அந்த வாய்ப்பைப், பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தால் வாழ்க்கைப் பாதை எப்படிப் போயிருக்கும்? யாரே அறிவர்?

    பதிலளிநீக்கு
  13. விசிட் செய்த இடம் - எந்த இடத்தையும் முழுமையா திருப்தி ஏற்படும் அளவு பார்க்க முடியாது.அதனால் எல்லா இடங்களுமே

    பதிலளிநீக்கு
  14. அப்பாதுரை சார் இப்படி கடினமான பிரசங்கத்தை எப்படி நினைவில் வைத்திருந்து எழுதுகிறார் என்பது புதிராக இருக்கிறது. இரண்டு தடவை மூன்று தடவை படித்தும் சரியானபடி புரிந்துகொள்ள இயலவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது. கண்ணன் யேசுவைப் போல் ஒரு mediator என்பது மட்டும் புரிந்தது. இத்தகைய ஒப்பீட்டினால் தான் ISKCON மேல்நாட்டவரை எளிதில் கவர்ந்தது.

    பொதுவாக ஜேகே வின் தத்துவ விளக்கங்கள் குழப்பும். அதைக் காட்டிலும் இந்த தத்துவ விளக்கம் குழப்பமாக இருக்கிறது. ஆஸ்திகத்திற்கு ஆன்மிகம் அடிப்படை. ஆன்மீகம் இல்லாமல் ஆஸ்திகம் அமையாது. அது எந்த மதம் ஆனாலும் சரி என்பது மட்டும் புரிகிறது.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    புலியை பற்றிய கிலியை அடக்கும் மந்திரம் சிறு வயதிலேயே நீங்கள் கற்றது பெருமைக்குரியது. தலைப்பில் ஈர்க்கப்பட்டு உங்கள் பகுதியை முதலில் ரசித்துப் படித்தேன்.

    /நிஜமாகவே அந்தக் காலத்தில் இதை நான் முழுவதும் நம்பினேன். அன்றிலிருந்து இன்றுவரை, ஒரு தடவையாவது காலையில் பூஜை செய்யும்போது, " சாமியே சரணம் ஐயப்பா, வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா, பதினெட்டாம்படி பாலகனே சரணம் ஐயப்பா" என்று ஐயப்பனை வேண்டிக்கொள்வது வழக்கமாகி விட்டது. புலிக்கு பயந்து அல்ல. ஏதோ ஒரு ஆத்மதிருப்திக்காக. /

    இன்று வரை ஆத்ம திருப்திக்காக அதை தொடர்வது நல்ல பழக்கம். (அதுதானே வேண்டும்.) இறைவனின் நாமத்தை அந்த சிறு வயதிலேயே சொல்லித் தந்த அந்த நண்பர் நன்றாக இருப்பார். வாழ்க வளமுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. அ. பக்கம்:

    பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
    செம்பொருள் காண்பது அறிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாடிக் கிழவன் தொடாத சங்கதி
      தேடிக் காண்ப தரிது

      நீக்கு
    2. இந்தக் குறளை இப்போதுதான் பார்க்கிறேன்.
      இதற்கு மணக்குடவரின் உரை நன்று. தமிழும் சுகம் :

      பிறப்பாகிய அறியாமையினின்று நீங்க, பிறவாமை ஆகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம்.
      பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும், செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும், பிறப்பில்லையாகவும், தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.





      நீக்கு
  17. முதல் கேள்வியே இந்த நெல்லை அண்ணன் என்னைக் கலாய்ச்சு கேட்டதை அன்னிக்கே பார்த்துவிட்டேன்...புதனுக்கு அவரை இழுக்க என் பதிலை பதுக்கி விட்டேன்!!!! வரேன் ஒவ்வொண்ணா....ஒண்ணா ரெண்டா இழுக்க....

    கீதா

    பதிலளிநீக்கு
  18. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் என்னைக்கு காபி சாப்பிடுவதில்லைன்னு சொல்லிருக்கிறேன். நான் காபி பிரியைன்னு ஊருக்கெல்லாம் தெரியுமே.

    உங்க வீட்டுல யாரும்காபி குடிக்கமாட்டீங்க....அதைச் சொல்ல வேண்டியதுதானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. //சரி குளிர்பானம் ஏதாவது வேணுமான்னு கேட்டால் அதெல்லாம் உடம்புக்கு ஒத்துக்காதும்பீங்க.//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....சாய்ஸ் கொடுக்கலை நீங்க....ஹாஹாஹாஹா

    நெல்லை அண்ணே முதல்ல நான் fussy கிடையாது...எனக்குப் பிடிக்காது என்று எதுவுமே கிடையாது. சர்க்கரை மட்டுமே தவிர்ப்பது.

    உங்க வீட்டுல பொங்கல் சாப்பிட்டேனா இல்லையா?!!!!!!!!!!!!!!!!

    ஸ்‌ரீராம் கிட்ட கேளுங்க, அவங்க பாஸ் காஃபியா டீயான்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன்னு!!!! ஸ்ரீராமே சொல்லிடுவார் சர்க்கரை இல்லாத காஃபின்னு!!!!! !!!!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹாஹா.....

    பானுக்காகிட்ட கேளுங்க.....

    நீங்க எங்க வீட்டுக்கெல்லாம் (பானுக்கா, கௌ அண்ணா வீட்டுக்கும் சேத்துதான்) வரதில்லை சொல்றதோடு சரின்னு சொல்லி அங்க அன்னிக்கு நான் சொன்னதுக்கு....கௌ அண்ணா என்ன நீங்க சும்மா இருக்கீங்க...பஞ்ச்யாத்துக்கு வாங்க..!!!!!!!!!!!!!!!!!!!!

    உங்க வீட்டுக்கு நெல்லை வந்தாரா....கேளுங்க...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. " வருவேன், எப்போ வருவேன்,எப்படி வருவேன் என்று தெரியாது; ஆனால் வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்" என்று பல வருடங்களாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

      நீக்கு
  20. சாப்பாடோ இல்லை டிபனோ சாப்பிடுங்க என்றால், வர்றதுக்கு முன்னாலதான் சாப்பிட்டுட்டேன், வயிற்றில் கொஞ்சம்கூட இடமில்லைம்பீங்க. //

    ஹாஅஹாஹாஹாஹாஅ.........ஹையோ நெல்லை....எங்க வீடுகளுக்கு எல்லாம் நீங்க வரதில்லைனு சொன்னா இதென்ன நீங்க இங்கிட்டுத் திருப்பிவிட்டிருக்கீங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    உங்களுக்குத் தயக்கம் அம்மாடியோவ் இவங்க வீட்டுக்கு எல்லாம் போனா பெயர் தெரியாத ஏதாவது ஒண்ணை கொடுத்து நம்மளை சோதனை எலியாக்கிடுவாங்களோன்னு...அந்த உண்மைய சொல்ல வேண்டியதுதானே!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. நமக்கு மாதிரி அவங்களுக்கு டயபடீஸ் வந்துடக் கூடாதுன்னு நினைக்கிறேன், ஆனா கண்டிப்பா நீங்க வீட்டுக்கு வரணும்னு சொல்லறவங்க//

    ...அடக் கடவுளே! இப்படி கீதாவை சொல்லலாமோ?!!!! இங்க எல்லாரும் பஞ்சாயத்துக்கு வாங்க...நெல்லைக்கு சிரோட்டி என் வகைல கணக்குல இருக்குன்னு சொல்லிட்டே இருக்கேன்...ஊருக்கே தண்டோரா போட்டிருக்கிறேன்....நான் சாப்பிடாட்டாலும் செஞ்சு கொடுப்பவளாக்கும். உங்களுக்குப் பயம்னு சொல்லுங்க...நான் செய்யறத சாப்பிட!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறாங்க?//

    ஹாஹாஹாஹா ஒண்ணும் எதிர்பார்க்கலை சாமியோவ். ...நீங்க எங்க வீட்டுக்கு வந்து ஒண்ணும் சாப்பிட வேண்டாம். போதுமா...!!!!!!!

    கௌ அண்ணா உங்க வீட்டுக்கு நாங்க வரலாம்னு ப்ளான் போட்டோம் முன்ன நினைவிருக்கா...ஆனா இந்த நெல்லை சரியா பதில் சொல்லவே இல்லை...இங்க வீட்டுக்குப் பக்கத்துல மங்களூர் கடை இருக்குன்னு சொன்னதும் அவர் அங்க அந்தக் கடை வரை வருவாராம் நான் வழி சொல்லணுமாம் கடைக்கு....அப்படியே கடைல அவருக்குப் பிடிச்சது இருந்தா வாங்கிட்டுப் போய்டுவாராம்...இதெப்படி இருக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. நீங்க வரணும் எங்க வீட்டுக்கெல்லாம் வரணும்னு சொல்றது ஜஸ்ட் ஒரு நல்ல உறவு, அன்பிற்காக நட்பிற்காகத்தான்....திங்கறது அடுத்ததுதான்....

    கீதா

    பதிலளிநீக்கு
  23. இதற்கான இரு ஆசிரியர்களின் பதிலையும் ரசித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  24. கேள்வி பதில்கள் ரசித்தேன். ஸ்ரீனிவாசன் கதைகள் - அடுத்து வருபவை குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். அப்பாதுரை பக்கம் - ஆஹா... கடைசி வரிகள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  25. பானுமதி வெங்கடேஸ்வரன் :

    நீங்கள் நழுவ விட்ட வாய்ப்புகள் ஏதாவது உண்டா?//

    நிறைய. ஒரு சிலது மனதுக்குக் கொஞ்சம் வருத்தம் கொடுத்தவை. ஆனால் இப்படித்தான் வாழ்க்கை என்று தேற்றிக் கொள்வதுதான்.

    //நீங்கள் விசிட் செய்த ஊர்களில் மீண்டும் விசிட் செய்ய வேண்டும் என்று தோன்றும் இடம் எது? ஏன்?//

    நிறைய இருக்கின்றன. என்றாலும் குறிப்பாக மீண்டும் இமயமலைப்பக்கம் செல்ல வேண்டும் என்று உண்டு.

    //வெளியூர்களுக்குச் செல்லும் பொழுது எந்தெந்த இடங்களை பார்க்க விரும்புவீர்கள்? ஷாப்பிங் செய்ய நேரம் ஒதுக்குவீர்களா?//

    எந்த ஊருக்குச் செல்ல நேர்ந்தாலும் அந்த ஊரில் அலல்து அந்த ஊருக்கு அருகில் இயற்கை சார்ந்த இடங்கள் என்ன உள்ளன என்பது முதலில் அப்புறம் பார்க்க என்ன இடங்கள் உள்ளன? கோயில்கள் கூட்டமில்லாமல் இருக்குமா செல்ல, முடியுமா என்று நான் செல்லும் தேவைக்கு ஏற்ப மனதில் ஒரு சின்ன திட்டம் போட்டுக் கொள்வதுண்டு.

    இப்போது இங்கும் கூட நிறைய இடங்கள், யாரும் அதிகம் போகாத இடங்கள் பார்த்து வைத்திருக்கிறேன். வாய்ப்புதான் அமைய வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  26. ஒரு கருத்து ஒளிந்துகொண்டுவிட்டது....காதைப் பிடித்துக் கொண்டு வந்து பெஞ்சு மேல ஏத்துங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
  27. ஸ்ரீநிவாசன் - ஹாஅஹாஹாஹா சுவாரசியம்....ஸ்ரீநிவாசனுக்கு நல்லா தெரியும் யாரும் புலியை கொண்டு வந்து நிறுத்தி ஸ்ரீநிவாசனை டெஸ்ட் செய்யப்போவதில்லைன்னு!!!!

    பரவாயில்லை ஒரு பிரார்த்தனை கிடைத்ததே!! இன்னும் அவர் என்னவெல்லாம் சொன்னார் என்று அறிய ஆவல்

    கீதா

    பதிலளிநீக்கு
  28. "ஆன்மிகத்துல கடவுள் கலக்குறது சரியா?" என்றேன். "ஆன்மிகம்னு சொல்ற நிறைய பேர் ஆஸ்திகமும் ஆன்மிகமும் ஒண்ணுன்ற பாணில பேசுறாங்க. //

    இந்தக் கேள்வியும் அவர் பதில் //"ஆனா ஆன்மிக அறிவு அவளோ லேசு இல்லேனு சொல்றேன். ஆஸ்திகம் எளிது.//

    ரசித்தேன். ஏன்னா நீங்க கேட்ட கேள்வி எனக்கும் உண்டு. அதே போல அவர் சொன்ன பதிலும் அது அவ்வளவு லேசு இல்லன்றதும் புரிந்த ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  29. அப்பதுரை ஜி - கடைசி வரி பஞ்ச்!!!!

    பாலு சொல்லியிருப்பது - ஆஸ்திகம் ஒரு கருவி, ஆன்மிகத்தை அடைய என்று நினைக்கிறேன். முதல்லயாச்சும் கொஞ்சம் புரிந்தது ஆனால் அதன் பின் சுத்தம்.

    ஆனால் ஆஸ்திகத்தில் ஊறிவிட்டால் ஆன்மிக நிலையை அடைய முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது, ஆஸ்திகம் எதிர்பார்ப்புகள் உடையது என்பது என் புரிதல்

    கீதா

    பதிலளிநீக்கு
  30. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  31. பானுமதி வெங்கடேஸ்வரனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  32. கேள்விகளும் , பதில்களும் நன்றாக இருக்கிறது.

    KGG சாரின் நண்பர் ஸ்ரீநிவாசன் அவர்கள் நல்ல மந்திரம் சொல்லி கொடுத்து இருக்கிறார்.
    சிறு வயதில் பயமில்லாமல் இருப்பதற்கு உதவி இருக்கும் இந்த மந்திரம்.

    அப்பாதுரை சாரின் நண்பர் சொன்ன பிறவியொழியும் வகை பற்றி ஆன்மிகப் பிரசங்கங்கள் நன்றாக இருக்கிறது. அவர் ஆற்றிய சொற்பொழிவை இரண்டு நாள் கேட்டு மேலும் சில செய்திகளை பகிர்ந்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  33. ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..
    வாழ்க வளமுடன்!..

    பதிலளிநீக்கு

  34. @ நெல்லை

    /// கடவுள், புலையர் வடிவில் வந்தால், நமக்கு கடவுள் நினைப்பும் பக்தியும் வருமா?..///

    நமக்கு கடவுள் நினைப்பும் பக்தியும் வருவதற்கும் அவனருள் வேண்டும்..

    பதிலளிநீக்கு
  35. காலம்பர வந்து படிச்சுட்டுப்போயிட்டேன். புலியை அடக்கும் மந்திரம் இதானா? நிஜமாகவே புலி அடங்கிவிடும் அல்லவோ? அப்பாதுரையின் நண்பர் பேசியவை மிக அருமை. நன்றாக விளக்கி இருக்கிறார். களைகண்ணுக்கு நல்லதொரு விளக்கம். உண்மையில் கண்ணன் கழல் பற்றினால் துன்பங்கள் பறந்தோடும் என்பார்களே! உள்ளூர அதை அனுபவித்திருக்கிறார் போல. அப்பாதுரைக்கும் சிறிதளவாவது லபித்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  36. ஆன்மிகம், ஆஸ்திகம் மிக எளிதாக வேறுபடுத்திக் காட்டி விட்டார்.

    நெல்லைக்காரர்களின் உபசார பாணியை நெல்லையே விவரித்துச் சொல்லி விட்டார். என் அப்பாவாக இருந்தால் அவங்க சொல்லுவதற்கெல்லாம் எதிர்ச் சொல் சொல்லி ஏதேனும் வாங்கிச் சாப்பிட்டு விட்டும் வந்துடுவார்.

    பதிலளிநீக்கு
  37. ஆஸ்திகம் என்னும் படியில் ஏறாமல் அடுத்தடுத்த படிகளில் ஏறி ஆன்மிகத்தின் உச்சிக்குப் போவது கடினம். ஆனால் என் போன்றவர்கள் எல்லாம் எத்தனை வருடங்கள் ஆனால் ஆஸ்திகத்திலேயே ஆழ்ந்து அமிழ்ந்து விடுகிறோம். கண்களைத் திறந்து பார்த்து அடுத்த படிக்குச் செல்லுவதில்லை.

    பதிலளிநீக்கு
  38. முன்னெல்லாம் யாரானும் வந்தால் அவங்க வர நேரத்தை ஒட்டி ஏதானும் டிஃபன் ப்ண்ணி வைப்பேன். இப்போதெல்லாம் கடையில் வாங்கி வைச்சுடறோம். :(காஃபி மட்டும் வீட்டில் போடுவேன்.

    பதிலளிநீக்கு
  39. வெளியூரெல்லாம் போனால் பொதுவாக எதுவும் வாங்குவதில்லை. சில ஊர்களில் பிரபலமாக இருக்கும் புடைவைகளைத் தேடிப் போய் வாங்குவது உண்டு. கோலாப்பூர் போனப்போ மஹாராஷ்ட்ரா பிரபலமான பருத்திக் கைத்தறிச் சேலைகள் வாங்கினேன். அது மாதிரி இடத்துக்கு ஏற்றாற்போல் வாங்குவோம். கோலாப்பூரில் பருப்புத் தேங்காய் மாதிரி அளவில் பாகு வெல்லம் கிடைக்கும். எங்களுக்கு அவ்வளவு செலவு இல்லை என்பதால் வாங்கவில்லை. ஒரு துளி போட்டால் போதும்/ தித்திப்பாக இருக்கும். மிளகாயும் அதே போல் அங்கே மிகவும் பிரபலம். மிளகாய்ப் பொடி, மசாலாப் பொடி வாங்குவார்கள். நான் தேவைப்படும்போது வீட்டிலேயே பண்ணிப்பதால் அதுவும் வாங்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி, தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  40. ஆளையே கவிழ்க்கும் அளவுக்குச் சிலர் தப்புச் செய்தாலும் அவங்களை ஏன் யாருமே கண்டுகொள்ளுவதில்லை? சின்னத் தப்புச் செய்தவர் அதிலும் பல சமயங்கள் அறியாமல் செய்தவர்களைத் தண்டிப்பது ஏன்?

    இப்போதெல்லாம் தினம் யாராவது கணவன், மனைவியையோ மனைவி கணவனையோ கொன்று விட்டதாகவே செய்தி வருகிறது. அதிலும் பல சமயங்கள் ஜோடியாகக் கணவன், மனைவியைக் கொல்கின்றனர். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?

    மது போதையில் காவல்துறையினரை மிரட்டிய இளைஞர்கள் தான் இந்நாட்டின் எதிர்காலம் என நினைக்கையில் மனதே கொதித்துப் போகிறதே! இந்நிலைக்கு யார் காரணம்? அதுவும் இப்போதுள்ள அரசின் ஆட்சியில் தான் இவை அதிகம் நடைபெறுகின்றன. ஏன்? தமிழகம் மாறவே மாறாதா?
    ர்

    பதிலளிநீக்கு
  41. புலியை அடக்கும் மந்திரம்.. சூப்பர்! சின்ன வய்திலேயே உங்களுக்கு ஒரு மந்திரம் உபதேசம் ஆகியிருக்கிறது. நீங்களும் ஜெபித்து வருகிறீர்கள். பலன் கிட்டாமலா போய் விடும்? ஏதாவது zooவுக்கு போய் புலிக்கு முன்னால் நின்று, "நீ பெரிய புலியா?" என்று கேட்டுப் பாருங்கள்;)

    பதிலளிநீக்கு
  42. அப்பாதுரை அவர் ந்ண்பர் பாலு சொன்ன விஷயங்களை ரெகார்ட் பண்ணிக்கொண்டாரா அல்லது நினைவில் வைத்துக் கொண்டதை எழுதியிருக்கிறாரா? அப்படியென்றால் அசாத்ய மெமரி! எனக்கு ஒரு சந்தேகம், ஆன்மீகம் என்றாலே புரியாத கனமான வார்த்தைகளை போட்டுதான் எழுத வேண்டுமா? சொல்லியிருக்கும் விஷயம் என்னவோ எளிதானதுதான், ஆனால் வார்த்தைகளும் அவற்றை வாக்கியங்களாக அமைத்திருக்கும் விதமும் கடினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை ஆன்மீகப் பதிவுகள் இங்கே எழுத உள்ளார். அப்போது விளக்கங்கள் சொல்வார் என்று எதிர்பார்ப்போம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!