கலைவாணன் அல்லது பாரதிசாமி எழுதிய பாடலாய் இருக்க வேண்டும். குன்னக்குடி வைத்தியநாதன் இசையாய் இருக்க வேண்டும்! எல்லாம் யூகம்தான்!
சூலமங்கலம் சகோதரிகள் குரலில் ஒரு முருகன் பாடல்..
முருகா உந்தன் சிரிப்பு
முத்தமிழின் உயிர்ச் சிரிப்பு
குமரா உந்தன் சிரிப்பு
குழந்தையின் முதல் சிரிப்பு - முருகா
கண்களிலே பொங்கிவரும் அருள் சிரிப்பு
உந்தன் கைகளிலே தாங்கி வரும் வேல் சிரிப்பு
கண்களிலே பொங்கிவரும் அருள் சிரிப்பு
உந்தன் கைகளிலே தாங்கி வரும் வேல் சிரிப்பு
உன்னழகை ஏந்தி வரும் கால் சிரிப்பு - அந்த
பழனியிலே தோன்றி விடும் வேல் சிரிப்பு - முருகா
தத்துவங்கள் பேசிவரும் தவச்சிரிப்பு -என்றும்
தென்கடலில் அலைபாடும் பூச் சிரிப்பு
தத்துவங்கள் பேசிவரும் தவச்சிரிப்பு -என்றும்
தென்கடலில் அலைபாடும் பூச் சிரிப்பு
வெற்றியெனும் கொடிபறக்கும் புகழ்ச்சிரிப்பு
கருணை ------ மணம்பரப்பும் உன் புன்சிரிப்பு - முருகா
==========================================================================================
1953 ல் வெளிவந்த படம் மனம்போல் மாங்கல்யம். ஜெமினி கணேசன் (R கணேஷ்) சாவித்ரி, பாலசரஸ்வதி, சாரங்கபாணி நடித்து மிகப்பெரிய ஹிட்டான காமெடி படம். ஆனால் சோகம் என்ன என்றால் இப்போது அந்தப் படம் அழிந்து போய்விட்டதாம். காப்பாற்றி வைக்கத் தவறிய படங்களில் ஒன்று.
ராமராவ் இசையில் கனகசுரபி பாடல்கள் எழுதி இருக்கிறார். பாடல்களும் ஹிட். இத்தனை வருடங்கள் கழிந்தும் அந்தப் படப் பாடல்கள் அந்தக் கால ரசிகர்கள் மனதில் நின்று கொண்டிருக்கிறது, குறிப்பாக இந்தப் பாடல். அப்போது இலங்கை வானொலி உள்ளிட்ட வானொலிகளில் இந்தப் பாடல் கேட்ட நினைவில் திடீரென ஒருநாள் இது நினைவுக்கு வர, இந்த வாரத்துக்கு ஷேர் செய்ய அந்தப் பாடலையே தெரிவு செய்து விட்டேன்.
இந்தப் பாடலை ஏ எம் ராஜாவும் பி லீலாவும் பாடி இருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தில் விஜய் வர்மா, எம் எல் வசந்த குமாரி, (ராதா) ஜெயலட்சுமி ஆகியோரும் பாடி இருக்கிறார்கள்.
பாடல் இடம்பெற்ற யு டியூப் பக்கத்தில் கிடைத்த சில சுவாரஸ்யமான கமெண்ட்ஸ் கீழே...
பிருந்தாவன சாரங்கா, காபி, தேஷ், சாரங்கா ஆகிய 4 ராக சங்கமத்தில்.
இப்பாடலின் இசைக்கோர்வை பிரம்மாதம்தான்
இந்தப் பாடல் சாரங்கா இராகத்தில் அமைக்கப்பட்ட பாடல் .இதனிடையே வரும் சில வரிகள் கோபாலகிருஷ்ண பாரதியார் அவர்களின் கவிதை வரிகள் . அந்தப் பாடலும் சாரங்கா இராகத்தில் அமைக்கப்பட்ட பாடல் தான்.
சிவனைக் குறித்து கவிஞர் எழுதிய நிந்தா ஸ்துதி என்ற வகையான பாடல்.
பேயாண்டி தனைக் கண்டு நீயேண்டி மையல் கொண்டாய் பெண்களுக்கு அழகா மோடி
Picture: Manampole Mangalyam (1953), Lyrics Writer: Kavignar Surabi, Music Composer: Chaluri Rajeshwara Rao, Singers: Aemala Manmatharaju Rajah, Porayadhu Leela Amma, Actors: Gemini Ramasamy Iyer Ganesan, Nadigaiyar Thilagam Savithiri Ganesan.
மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய்
மணியான மதராசு மாப்பிள்ளை டோய்
மைலேடி டோய் மைலேடி டோய்
மனம்போல வந்து வாய்ச்ச பெண் ஜோடி டோய்..
காப்பியில் பலதேய்க்கிறார் மாப்பிள்ளை டோய்
கோப்பையிலே தீனி திங்கிறார் மாப்பிள்ளை டோய்
காப்பியில் பலதேய்க்கிறார் மாப்பிள்ளை டோய்
கோப்பையிலே தீனி திங்கிறார் மாப்பிள்ளை டோய்- மாப்பிளை
சோப்பாலே மூஞ்சி தோய்க்கிறா சுந்தரி டோய்
சுண்ணாம்பை குழைச்சு பூசுறா சுந்தரி டோய்
சோப்பாலே மூஞ்சி தோய்க்கிறா சுந்தரி டோய்
சுண்ணாம்பை குழைச்சு பூசுறா சுந்தரி டோய் (மைலேடி டோய்)
சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
சொன்னாலும் புரியாது சுயமாவும் தெரியாது
மன்னாதிமன்னனென்று
மனசுக்குள்ளே நினைச்சுடுவார் (மாப்பிள்ளை டோய்)
பேயாண்டிதனைக்கண்டு நீயேண்டி மையல் கொண்டாய்
பெண்களுக்கழகாகுமோ
ஸா ரி ஸ
ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபடப மப
ஸா ரிஸ
ஸரிஸநி ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபதப
ஸரிமரி ஸநிதஸஸ ரிஸநித பமமப
தபம ரிக மகரிஸ
ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபடப மப
ஸா ரிஸ
ஸரிஸநி ஸரிஸநி தபமப
ஸரிஸரி மபதப
ஸரிமரி ஸநிதஸஸ ரிஸநித பமமப
தபம ரிக மகரிஸ
நாயாய் அலைந்து தேடி தாய்மாமன் பிடித்து வந்தார்
நாயாய் அலைந்து தேடி தாய்மாமன் பிடித்து வந்தார்
ஓயாத குறும்பைக் கண்டு தீராத காதல் கொண்டேன்
முதல் பாடல் கேட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் "மாப்பிள்ளை டோய்" இலங்கை வானொலியில் பலநூறு முறைகள் கேட்டு இருக்கிறேன் ஜி
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜி.
நீக்குகாக்க காக்க
நீக்குகனக வேல் காக்க..
பார்க்க பார்க்க
பாவம் பொடிபட..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாங்க துரை செல்வராஜூ அண்ணா... வணக்கம்.
நீக்குமுருகப்பெருமான் தவழ்ந்ததும் சிரித்து விளையாடிதும் தொட்டிலில் கிடந்து உறங்கியதும் சூலமங்கலம் சகோதரிகளின் பாடல்கள் களில் தான் என்பதில் ஐயம் இல்லை..
பதிலளிநீக்குஅற்புதமான பாடல்..
முருகன் அருள் முன்னின்று காக்க...
முருகன் காக்கட்டும்.
நீக்குஇந்தப் பாடலுக்கு அவர்களே இசை கூட்டினரோ..
பதிலளிநீக்குஇருக்கலாம்.
நீக்கு/// அந்த
பதிலளிநீக்குபழனியிலே தோன்றி விழும் உன் வேல் சிரிப்பு .. ///
அந்த
பழனியிலே தோன்றி விடும் வேல் சிரிப்பு..
மாற்றி விட்டேன்.
நீக்குசூலமங்கலம் சகோதரிகளிடம்
பதிலளிநீக்குகுன்னக்குடி வைத்தியநாதன்
சிலகாலம் பக்க வாத்தியமாக இருந்து -
அதன் பிறகு தான் தனி ஆவர்த்தனம் - என்று எப்போதோ படித்திருக்கிறேன்..
ஓஹோ...
நீக்குமாப்பிள்ளை டோய்!..
பதிலளிநீக்குஇப்படியான பாடல்களைப் பாதுகாத்து வைத்திருந்தது..
அப்போதைய இலங்கை வானொலியின் நற்பணி..
நம்ம ஊர் என்றால் பாடலுக்கும் சேர்த்து மங்கலம் பாடியிருப்பார்கள்..
ஹா.. ஹா.. ஹா...
நீக்குபேயாண்டிதனைக் கண்டு நீயேண்டி மையல் கொண்டாய்?..
பதிலளிநீக்குபெண்களுக்கு அழகாகுமோ!..
என்ன ஒரு ரசனை!..
சொல்லுங்க...
நீக்கு..பேயாண்டிதனைக்கண்டு நீயேண்டி மையல் கொண்டாய்
பதிலளிநீக்கு//
இப்படி ஒரு வரி இந்தப் பாட்டிலிருப்பதை இன்றே கண்டேன்!
அப்படியா?
நீக்குநாயாய் அலைந்து தேடி தாய் மாமன் பிடித்து வந்தார்
பதிலளிநீக்குஓயாத குறும்பைக் கண்டு தீராத காதல் கொண்டேன்!..
சொன்னாலும் புரியாது.. சுயமாவும் தெரியாது.. -
இப்படியெல்லாம் எகத்தாளம் செய்து பாடியாடி மகிழ்ந்து அதற்கு மேல் கூடியாடும் இன்பம்...
அடடா!...
இன்றைய டகர டப்பாக்களுக்கு இப்படியான நயங்கள் உதிக்காது..
Out of Fashion.
நீக்குடகர டப்பா வரிகளும் ஆஸ்தானமும் இல்லாத அழகான வாரம்!..
பதிலளிநீக்கு:))
நீக்குஆஸ்தானம் அற்புதமானவர்..
பதிலளிநீக்குஅவரது குரல்வழி பாடல்கள் பலவற்றுக்கும் நான் அடிமை..
நிலாவே வா...
நிலவு தூங்கும் நேரம்..
நிலவே முகங்காட்டு..
மன்றம் வந்த தென்றலுக்கு..
நீயொரு ராகமாலிகை..
இப்போதைக்கு இவை போதும்..
// அவரது குரல்வழி பாடல்கள் பலவற்றுக்கும் நான் அடிமை.. //
நீக்குநான் ரசிகன்.
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஇரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்கள்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்.
வல்லி அக்காவிற்கு மிகவும் பிடித்த பாடல் அவர்கள் முன்பு இந்த பாட்டை பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த பாடலை பற்றி நாங்கள் இருவரும் பேசி சிரித்து இருக்கிறோம். அக்கா வலைத்தளம் வந்தால் இந்த பாட்டை பற்றி சொல்வார்கள்.
வல்லிம்மா வலைப்பக்கம் வருவதில்லை.
நீக்குவடுவும் வதுவுமாக வாழ்க்கையைத் தொடங்கி
பதிலளிநீக்குஒன்றும் தெரியாமல் உலகியலைத் தொடங்கிய நாட்கள்..
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா.. இறைவா!..
இறைவா!..
நீக்குஇப்படியே எல்லா வெள்ளிக் கிழமைகளும் அமையாதா - என்றிருக்கின்றது..
பதிலளிநீக்கு:))
நீக்குமுருகா உந்தன் சிரிப்பு.....பாடல் நிறைய கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
அப்படியா?
நீக்குஇரண்டாவது பாடலும் கேட்டிருக்கிறேன். ஒரு சில கல்யாணங்களில் நலுங்கிற்கு இந்தப் பாடல் வரிகளை எழுதி வைத்துக் கொண்டு நாங்கள் பாடியது நினைவுக்கு வந்தது!!!!!!!!!!!!! கலாய்த்தலுக்கு! அதுக்குப் பதிலடி ஆணிடம் இருந்து வராது...அதையும் நாங்களே எடுத்துக் கொடுத்து கலாய்த்து!!! கொஞ்சம் வார்த்தைகளும் மாற்றிப் போட்டு சுண்ணாம்பு குழைத்து என்பதற்கு.....அப்போதெல்லாம் ஸ்வரம் கற்றுக் கொண்டு (மாமியிடம்) பாடியிருக்கிறேன். இப்போது சுத்தம்!!!!!!!!!!!!! மாமியிடம் பேசும் போதெல்லாம் ஒரு 5 நிமிடம் அவரின் அர்ச்சனை கேட்டுக் கொண்டுதான் பேசுவதே!!!! ஹாஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
மெட்டுப்போடு மெட்டுப்போடு.. ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு...!!
நீக்கு/// நாயாய் அலைந்து தேடி தாய் மாமன் பிடித்து வந்தார் ///
பதிலளிநீக்குஅந்த நாட்களிலேயே நல்ல மாப்பிள்ளைக்காக நாயாய் பேயாய் அலைந்து திரிந்து இருக்கின்ற்னர் பாருங்கள்..
அதுவும்.. தாய்மாமன்!..
தாய் மாமனுக்கு ஈடு இணை இல்லை என்பது உண்மை..
இப்படியான உறவுகள் அற்றுப் போகும்படி குடும்ப நலம் என்ற பேரில் 70களில் அறுத்து விட்டது வீணர்களின் அரசியல்!..
அவுனுவ வெளிலேயும் உள்ளேயும் - கோடிகளில் கும்மாளம் போட்டுக் கிட்டுத் தான் இருக்கானுவோ..
:((
நீக்குஅழகான முருகன் பாடல்...
பதிலளிநீக்குஆமாம்.
நீக்குஇரண்டாவது பாடல்: காணொளி உரிமை பெற்றவரிடம் பல அரிய பாடல்கள் உண்டு... பல பாடல்களை கேட்பொலியாக மாற்றி உள்ளேன்...
பதிலளிநீக்குஓ.. அப்படியா?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இறைவன் கைவிடமாட்டார்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல் பகிர்வில் முதல் தனிப்பாடல் அவ்வளவாக கேட்டதாக நினைவில் இல்லை. எத்தனையோ பாடல்கள் இந்த சகோதரிகள் பாடியது மூலமாக கேட்டுள்ளேன். இதைக் கேட்டதில்லை எனச் சொல்லவே வருத்தமாக இருக்கிறது. இப்போது கேட்டு ரசித்தேன். நன்றாக உள்ளது.
இரண்டாவது திரைப்பட பாடல் நீங்கள் சொல்வது போல் சிலோன் வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போதும் பல வருடங்களுக்குப் பின் கேட்டேன். அப்போதெல்லாம் இது மிகவும் பிடித்த பாடல். அந்தப்படம் அழிந்தே போய் விட்டது என்பதும் வருத்தத்தை அளிக்கிறது. . இன்று அந்த படத்தைப் பற்றியும், பாடல்கள் பற்றியும் பல விபரம் தந்தமைக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
என்னைப்போலவே எல்லோரும் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய அனைத்துப் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்! இரண்டாவது பாடலை ரசித்ததற்கு நன்றி.
நீக்குதேஷ் ராகமும், இடையில் வரும் //பேயாண்டிதனைக்கண்டு நீயேண்டி மையல் கொண்டாய்// சாரங்கா...வேறு ராகங்கள் தெரியவில்லை என் சிற்றறிவுக்கு!!
பதிலளிநீக்குகீதா
’தேஷ்’ தெரிகிறது. ’சாரங்க’னையும் தெரிகிறது. வேறென்ன தெரியவில்லை என்ற கவலை உங்களுக்கு !
நீக்குகீதா.. உங்களுக்கு சிற்றறிவு என்றால் எனக்கு அறிவே கிடையாது!!
நீக்குஏகாந்தன் ஸார்.. தேஷ், சாரங்கன்.. என்ன விசேஷம்?!
நீக்குமுருகன் பாடல் கேட்டிருக்கிறேன் இனிமை.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் வானொலியில் கேட்கும்போது சிரிப்பதுண்டு. செம காமெடிதான்.
நன்றி மாதேவி.
நீக்குமுதல் பாடல் கேட்டதில்லை. அல்லது நினைவில் இல்லை. இரண்டாவது சின்ன வயசில் அடிக்கடி கேட்டது. தி/கீதா சொன்னாப்போல் அப்போல்லாம் கல்யாணங்களில் நையாண்டிப் பாட்டாகப் பாடிப் பார்த்திருக்கேன். படம் இப்போது இல்லை/அழிந்து விட்டது என்பது வருந்தத் தக்க செய்தி.
பதிலளிநீக்குவாங்க கீதா அக்கா... கல்யாணங்களில் நான் கேட்ட நினைவு இல்லை. ஆனால் நான் சின்னப்பையன் எனக்கு அவ்வளவாக தெரியாது என்பதையும் சொல்ல வேண்டும்.
நீக்குMamakkal KalyaNangal during 60s
நீக்குஅது சரி, ஜெமினி, சாவித்திரி என்றீர்கள்? ஆனால் பத்மினி எங்கே இருந்து வந்தார்? அல்லது எனக்குத் தான் அப்படித் தெரியுதா? ம்ம்ம்ம்ம்ம்ம்?
பதிலளிநீக்குஅக்கா.. வழக்கமான குழப்பம்தான். அவர்கள் இஷ்டத்துக்கு படம் சேர்க்கிறார்கள். இன்னொரு காணொலியில் சகோதரி படக்காட்சியை இணைத்து இந்தப் பாடலை ஓட விட்டிருக்கிறார்கள்.
நீக்குஇன்னிக்குப் பிள்ளையார் கொழுக்கட்டை போட்டு நிவேதனம் பண்ணிச் சாப்பிடும்போது கிட்டத்தட்டப் பனிரண்டு மணி. ஏன் இத்தனை நாழி ஆச்சுனு எனக்கே புரியலை. :( சுறுசுறுப்பு மிஸ்ஸிங்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஇன்னிக்கி என்ன கொழுக்கட்டை? ஆடிப்பூரத்துக்கா, ஆடிவெள்ளிக்கா? நாளைதான் ஆடிப்பூரம் என்றும் சொல்கிறார்கள்.
நீக்குfor Aadi Velli
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஒவ்வொரு கருத்துக்கான பதில்கள் எவ்வளவு சுருக்கம். :)) இதனால்தான் உங்களால் 100க்கு 100 சட்டென வாங்க முடிகிறது. உங்கள் திறமை கண்டு பிரமிக்கிறேன் வாழ்த்துகள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரொம்ப சுருக்கிட்டேனோ... நிஜமாகவே பாராட்டுதானா? சந்தேகமா இருக்கே...!
நீக்குஹா ஹா ஹா. உண்மையிலேயே மனம் நிறைந்த பாராட்டுக்கள் தான். என்னால் இப்படி நிஜமாகவே முடியவே முடியாது. அதனால் ஒரு பதிவுக்காக யோசிப்பதை விட ஒரு பதிவை எழுதவே யோசிக்கிறேன். நன்றி.
நீக்குஇன்றைக்கு ஒன்றும் தெரியாமலேயே யூடியூப்பில் பலர் வந்து பினாத்திக் கொண்டு இருக்கின்றார்கள்..
பதிலளிநீக்குஇதிலே பத்துமினியாவது சாவித்திரியாவது?..