வெள்ளி, 7 ஜூலை, 2023

வெள்ளி வீடியோ : இணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம் உன்னை எடுத்து

 பாடல் உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகமாக இருக்கலாம்.  கரகரப்ரியா ராகத்தில் அமைந்துள்ள இந்தப் பாடல் எனக்கு அந்த ராகத்துக்கு கொஞ்ச நாள் முத்திரைப் பாடலாக இருந்தது.  மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

பழனிமலை முருகா பழம் நீ திருக்குமரா
பழம் ஒன்று எந்தனுக்கு தா- ஞான
பழம் ஒன்று எந்தனுக்கு தா - முருகா
- பழனிமலை

இளமை நில்லாது யாக்கை நிலையாது
வளமையோ செல்வமோ நலம் ஒன்றும் தாராது
நிலைமை இதுவாக தலைமைப் பொருளாக
நிம்மதியை எந்தனுக்குத்தா முருகா
நிம்மதியை எந்தனுக்குத்தா
- பழனிமலை

உளநாள் ஒவ்வொன்றும் உன் திருப்புகழ் பாடி
உண்மைப் பொருளாக உந்தனையே நாடி
சில நாள் வாழ்ந்தாலும் செம்மையையே தேடி
செந்தமிழே அன்பே நீயும் நானும் கூடி
மகிழ்ந்திட வரம் ஒன்று தா -மனம்
மகிழ்ந்திட வரம் ஒன்று தா
- பழனிமலை

========================================================================================================

S P பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களில் எனக்குப் பிடித்த இன்னொரு பாடல் இந்த வாரம்.  உங்களுக்கும் பிடிக்கிறதா பாருங்கள்!

1970 ல் ஹிந்தியில் வெளியான ஜானி மேரா நாம் என்கிற படத்தை பாலாஜியின்   சுஜாதா பிலிம்ஸ் வாங்கி தமிழில் ராஜா என்று எடுத்தார்கள்.  தேவ் ஆனந்த் ஹேமா மாலினி ஹிந்தியில் நடித்திருந்த வேடத்தை தமிழில் சிவாஜி - ஜெயலலிதா செய்திருந்தார்கள்.  இசை எம் எஸ் விஸ்வநாதன்.  கண்ணதாசன் பாடல்கள்.  A C திருலோக்சந்தர்தான் முதலில் படத்தை இயக்குவதற்கு இருந்து ஏதோ காரணத்தால் அவர் விலகிவிட சிவாஜி சிபாரிசில் இயக்குனர் ஸ்ரீதரின் சகோதரர் சி வி ராஜேந்திரன் இயக்கினார்.

பாடல் முழுக்க SPB குரல் மேஜிக்தான்.  சிறுசிறு கமகங்களுடன்.  மறுபடி மறுபடி 'என்னை விட்டு வேறே யாரு உன்னைத்தொடுவார்' என்று பாடும்போது குரலில் வரும் குறும்பு..

காட்சி இல்லாமல் ஒருமுறையும் பாடலை ரசிக்கக் கேட்டுக்கொள்கிறேன்!

இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்

பாலுக்குள்ளே வெண்ணெய் உண்டு
நான் அறிவேன்
பாவைக்குள்ளே எண்ணம் உண்டு
நீ அறிவாய்
பாலுக்குள்ளே வெண்ணெய் உண்டு
நான் அறிவேன்
பாவைக்குள்ளே எண்ணம் உண்டு
நீ அறிவாய்

நாலுக்குள்ளே ரெண்டும் உண்டு
மூன்றும் உண்டு
உன் நாடகத்தில் காதல் உண்டு
நானும் உண்டு
திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டால்
திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டால்
கண் உள்ளே போன எண்ணம் எங்கும் பறந்து போகாது

என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்

தாளை போட்டு மூடிக் கொண்டால்
தாகம் தீராது
முந்தானை போட்டு மூடிக் கொண்டால்
மோகம் தீராது
வானை விட்டு வேறே எங்கும் மேகம் போகாது
உன் வண்ணம் தொட்டு கன்னம் கொஞ்ச
நேரம் ஆகாது

என் அல்லி ராணி என் அருகில் வா நீ
என் அல்லி ராணி என் அருகில் வா நீ
நான் முள்ளில்லாத ரோஜா பூவை
கிள்ளி பார்க்கின்றேன்

என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்

மெத்தை போடும் தேவன் என்று
என்னை சொல்லம்மா
உன் அத்தை பெற்ற பிள்ளை என்று
எண்ணிக் கொள்ளம்மா

வித்தை ஒன்றை கற்றுக் கொள்ள
வாத்தியாரம்மா
நீ கற்றுக் கொள்ள என்னை விட்டால்
வேறு யாரம்மா
வித்தை ஒன்றை கற்றுக் கொள்ள
வாத்தியாரம்மா
நீ கற்றுக் கொள்ள என்னை விட்டால்
வேறு யாரம்மா

இணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு
இணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு
நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம்
உன்னை எடுத்து

என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்

இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்

72 கருத்துகள்:

  1. காலை வணக்கம் எல்லோருக்கும்..

    ஆஹா முதல் பாடல் வரிகளைப் பார்த்ததுமே பாடத் தொடங்கிவிட்டேன்!!! ரொம்பப் பிடித்த பாடல்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.. வாங்க... ஆம் கீதா.. ரொம்ப அருமையான பாடல்.

      நீக்கு
    2. முதலிலேயே தெரிந்திருந்தால் உங்கள் குரலிலும் இங்கு வெளியிட்டிருப்பார்

      நீக்கு
    3. முதலிலேயே தெரிந்திருந்தால் உங்கள் குரலிலும் இங்கு வெளியிட்டிருப்பார்//

      யாரு? நெல்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!நான் ஸ்‌ரீராம் குரலில் பாடி வெளியிட்டிருப்பேன்னு சொல்றீங்களா!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    4. ஓ நான் பாடியதை இங்கு வெளியிட்டிருப்பார்னு....ஹையோ மண்டைல பல்பு எரியவே லேட்டாகுது....ஹாஹாஹாஹாஹா கரஹரப்பிரியாதானே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாக டக்கென்று ராகம் பெயர் அடித்துவிட்டேன் அதான்....கரஹரப்பிரியா...கனமான ராகம்!!!

      கீதா

      நீக்கு
    2. எனக்குப் பிடித்த ராகமும் கூட...  உன்னால் முடியும் தம்பி படத்தில்  ஜெமினியும், கமலும் சூடான விவாதத்தில் சண்டை போடும்போது அவர் அண்ணன் நாதஸ்வரத்தில் சட்டென இந்த ராகத்தைதான் வாசிப்பார்.  யேசுதாஸின் அழகான ஆலாபனையுடன் அந்தக் காட்சி நிறைவுறும்.

      நீக்கு
    3. ஆமாம் ஆமாம்....எனக்கு அந்தப் படத்தில் பல காட்சிகள் ரொம்பப் பிடிக்கும். அதுவும் இப்படியான காட்சிகள்

      கீதா

      நீக்கு
  3. கரகரப்ரியா ராகத்தில் அமைந்துள்ள இந்தப் பாடல் //

    ஆ!! நீங்களே சொல்லிட்டீங்க நான் இப்பதான் இதை வாசித்தேன்!!!!!!!!!!!!

    //எனக்கு அந்த ராகத்துக்கு கொஞ்ச நாள் முத்திரைப் பாடலாக இருந்தது. மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.//

    ஆமாம் இது சரியான முத்திரைப் பாடல்...அந்த ராகத்துக்கு தெள்ளத் தெளிவாக...

    மற்றொரு பாடல் உண்டே நம்ம கே B S பாடியிருக்கும் பாடல் காவடி ஆடி வந்தால் கந்தா....அதுவும் கரஹரப்பிரியாதான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. ஆமாம்.  அதுவும் நல்ல பாடல், பிடித்த பாடல்.  ஏற்கெனவே இங்கு பகிர்ந்த நினைவு.  இதுவரை பகிரா விட்டால் பகிர்ந்து விடுவோம்!

      நீக்கு
  4. எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடித்த ராகம் ஸ்ரீராம்....இது பல மேடைகளில் மெயின் ராகமாகப் பாடப் படுவதுண்டு. கனராகம் என்பதால் இதில் புகுந்து விளையாடும் அளவு Scope உண்டு....

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீராம் நான் இப்ப போட்ட ஒரு கருத்து காணவில்லை அங்க இருந்தா பிடிச்சு இழுத்து கொண்டு வாங்க...ஏன் இப்படி ஒளியுதோ

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இரண்டாவது பாடலும், நிறைய கேட்டிருக்கிறேன்....பாடலை எஸ் பி பி பாடிய விதத்துக்காகவே ரொம்பப் பிடிக்கும்...வருகிறேன் பின்னர்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. சீர்காழி பாடல் கேட்டு ரசித்தது.

    ராஜா பாடலும் கேட்டு ரசித்த பாடலே...

    எம்ஜாரை வெறுப்பேற்றுவதற்காக கண்ணதாசன் எழுதிய வரிகளாக எனக்கு தெரிகின்றது.

    பதிலளிநீக்கு
  8. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க..  வாங்க துரை செல்வராஜூ அண்ணா...  முருகன் காக்கட்டும் நம்மை.

      நீக்கு
  9. சீர்காழி அவர்கள் பாடிய பாடலை சௌந்தரராஜன் அவர்களது படத்துடன் பதிவு செய்திருக்கின்றார்கள்..

    குழாயடியின் கூத்துகளில் இதுவும் ஒன்று..

    தாங்கள் இதைக் கவனிக்க வில்லையா ஸ்ரீராம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனிக்காமல் இருக்க முடியுமா/  ஒன்றும் செய்ய முடியாது.  ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.  பகுதி பாடல்களில் பலவற்றை இங்கு ஷேர் செய்ய முடியாது.  முயற்சித்தால் வீடியோ அனவைலபில் என்று வரும்.  பாடல் இங்கேயே ஒலிக்கும் வண்ணம் பகிர கிடைபப்தை விடாமல் பற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது.

      நீக்கு
    2. நீங்க வேற துரை செல்வராஜு சார்.. பிளாக் இருக்கு என்பதற்காக தெரியாத புரியாத சப்ஜெக்டைப் பற்றிப் பிதற்றும் பேத்தல் பதிவுகளைவிட இந்தச் சிறிய தவறு பிரமாதமில்லை. பாடல் வரிகளைப் பார்த்தால் சீர்காழி மனதல் இருந்து பாடுகிறார். தெரியாதவன் இந்தப் பாடலுக்கு தியாகராஜபாகவதர் படம் போட்டிருந்தாலும் நமக்கென்ன

      நீக்கு
  10. இவர்களுக்கு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களையும் தெரியாது.. சௌந்தரராஜன் அவர்களையும் தெரியாது..

    தற்செயலாக நடந்த பிழையா?..
    தெரியவில்லை..

    பதிவேற்றம் செய்பவர்களது அறியாமை..
    அவ்வளவு தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் ஒரு ஆல்பம் போல போடுவார்கள்.  அதில் சீர்காழி, டி எம் எஸ் அனைவரது பாடல்களும் இடம்பெறும்.  அந்த வகையில் படம் இணைக்கப்பட்டிருக்கலாம்.

      நீக்கு
  11. திருமிகு கீத ரங்கனும் தேவகோட்டையாரும் வந்திருக்கின்றார்கள்..

    அவர்கள் கூட இந்தப் பிழையைக் கவனிக்க வில்லை என்பது வியப்பு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா..  ஹா...  விடுங்கள்..  பிழை கண்டுபிடிப்பதில் பாடலை விட்டு விடுகிறீர்கள்!

      நீக்கு
    2. துரை அண்ணா, பொதுவாக நான் அதைக் கவனிப்பதில்லை. பாடல்தான்....அதன் பின் தான் படத்தைப் பார்த்தேன்.

      ஸ்ரீராம் சொல்லியிருபப்து போல் ஆல்பம் போல தொகுத்துப் போடும் போது, அதுவும் வெவ்வேறு பாடல்கள் எனும் போது அவற்றைத் தொகுத்து யுட்யூபில் போடும் போது அப்லோட் செய்தவுடன் யுட்யூப் ஒரு படத்தைத் தெரிந்தெடுத்து போட்டுவிடும் கூடவே இருபடங்களை நாம் தெரிந்தெடுப்பது போல் காட்டும். அல்லது அவை நமக்கு ஒத்துவரவில்லை என்றால் நம்மிடம் இருக்கும் படங்களை பதிவேற்றலாம்.

      இப்படி வெவ்வேறு பாடல்களைப் பதிவேற்றும் போது, ஒவ்வொரு பாடலுக்கும் அதைப் பாடியவரை போட அதில் படம் இல்லை என்றால் நாம் நம்மிடம் இருக்கும் படத்தை இணைக்கலாம் அல்லது நெட்டிலெ டுத்து பதிக்கலாம். இல்லை என்றால் அதிலுள்ள எல்லா பாடகர் பாடகிகளின் படங்களையும் தொகுத்து கொலாஜ் செய்து முகப்பில் போடலாம். அது மட்டும் வருவது போன்று.

      ஒரு வேளை இந்தப் பாடல் அப்படியான தொகுப்பிலிருந்து எடுத்து யுட்யூபில் பகிர்ந்திருக்கலாம். இதை நீக்கிப் போடும் தொழில்நுட்பம் அவரிடம் இல்லாமல் இருந்திருக்கலாம் அலல்து தெரியாமல் இருக்கலாம். அப்படி செய்ய முடியாத பட்சத்தில் அங்குள்ள தலைப்பிலோ அல்லது description பெட்டியிலோ கொடுக்கலாம்.

      முதலில் குறைகள் கண்ணில் படும் போது நிறைகள் முக்கியத்துவம் பெறாமல் போய்விடுகின்றனவே.

      கீதா

      நீக்கு
  12. ஞானப் பழம் ஒன்று எந்தனுக்குத் தா - முருகா!..

    மிகவும் பிடித்த பாடல்..

    பதிலளிநீக்கு
  13. வெள்ளிக்
    கிழமைகளில் தெய்வீக நாதத்தை வழங்கும் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  14. நல்லவேளை..

    சைனீஸ் சாமி ஒன்றின் படத்தைப் போட்டு

    பழனி மலை முருகா - என்று பதிவேற்றம் செய்யாமல் இருந்தார்களே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. ..சைனீஸ் சாமி ஒன்றின் படத்தைப் போட்டு

      பழனி மலை முருகா - என்று ..//

      ஆக்ச்சுவலி, முருகன் நெசம்மா அவதரிச்சது சீனாவில்தானாம். இந்த போகரு இருக்காரே.. போகரு, அவருதான் முருகன அலாக்காத் தூக்கிகிட்டு வந்து இங்கின, பழனி மலைல எறக்கிவிட்டுட்டுப் போயிட்டாராம் .. இப்படியான உண்மையை ஒடச்சு வெவரமாச் சொல்ற ஒரு பொயித்தவம் சீக்கிரமா வெளிவரப்போகுதுன்னு அக்கம்பக்கத்துல பேசிக்கிறாக...

      நீக்கு
    3. போகர் இங்கிருந்து போன பல்லவ மன்னர்தானே?

      நீக்கு
  15. பலனி மளை ல (பழனி மலையில்) பாதி எங்களுக்கு உரிமை இருக்கு ன்னு ஒரு பேச்சு கிளம்பியிருக்கு.. தெரியுமா உங்களுக்கு?..

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு பிரச்னை.. மலையாள சேனலின் செய்தியில் வந்திருக்கின்றது.. தமிழக ஊடகங்கள் அதை இருட்டடிப்பு செய்து விட்டனர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பலனி மளை ல (பழனி மலையில்) பாதி எங்களுக்கு உரிமை இருக்கு ன்னு ஒரு பேச்சு கிளம்பியிருக்கு.. //

      மேல்பாதியா, கீழ் பாதியா?

      நீக்கு
  16. ஒரு விருந்தில் முதலில் சூப்பர் இனிப்பு சாப்பிட்டுட்டோம்னா, பிறகு என்ன போட்டாலும் எடுக்காது.

    பழனிமலை முருகா - சீர்காழி குரலில், அப்படிப்பட்ட சிறப்பு உடையது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிப்பு சாப்பிட்டுவிட்டு அப்படியே எழுந்து வந்து விட மாட்டோமே.... அதில் ஆரம்பித்து மற்றவைகளையும் சுவைப்போமே!

      நீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  18. முதல் பாடல்!
    எத்தனை வருடங்களாயிற்று இந்த இனிமையான பாடலைக் கேட்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் காலை நேரங்களில் ரேடியோவில் ஒரு வரிசையில் இவையெல்லாம் திரும்பத் திரும்ப போட்டுக் கொண்டிருந்த பாடல்கள்

      நீக்கு
  19. சீர்காழி அவர்களின் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல் கேட்டு மகிழ்ந்தேன். இரண்டாவது பாடல் கேட்டு வெகு காலம் ஆகி விட்டது.
    இன்று கேட்டேன்.
    இந்த பாடல் வரிகள் தான் நேற்று பதிவின் தலைப்பு வைக்க காரணமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக கனெக்ட் செய்தீர்கள்.  ஆனால் நேற்றைய தலைப்பினால்தான் இன்றைய பாடல்!  இன்றைய பாடல் வரி நினைவில் நேற்றைய தலைப்பு!

      நீக்கு
  20. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இறைவன் துணை நிற்பான்.

      நீக்கு
  21. சில இடங்களில் குரலை அடக்கி - சில இடங்களில் தொண்டையை விரித்து....அதிலும் கமகங்களுடன், கிமிக்க்ஸ்...சில இடங்களில் சிவாஜிக்காக அழுத்துகிறார் கவனிச்சீங்களா ஸ்ரீராம்....வானை விட்டு....என்று தொடங்கும் இடங்கள்......நேரம் ஆகாது, போகாது என்று சொல்லும் இடங்களில் சிவாஜி அழுத்திப் பேசுவது போல அந்த உணர்வைக் கொண்டு வந்திருக்கிறார் அது போல அல்லி ராணி, அருகில் வா நீ, என்று கமகத்தில், சொல்லம்மா ...யாரம்மா சிவாஜிக்கு என்று தெரிகிறது.

    எம் ஜி ஆருக்குப் பாடும் போது ரொம்பவே வித்தியாசமாகவே இருக்கும்.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்.  குரல் ஜாலம்.  ஆனால் எனக்கு என்னவோ சிவாஜி, எம் ஜி ஆர் என்றெல்லாம் இவர் பாகுபாடு காட்டுவதாக தோன்றாது.  இவர் குரலுக்கு அவர்கள் வேண்டுமானால் முகபாவம், நடிப்பை மாற்றலாம்!!

      நீக்கு
  22. முதல் பாடல் பலமுறை கேட்பது உண்டு...

    பதிலளிநீக்கு
  23. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பாடல்கள் கேட்ட பாடல்கள் போல இல்லை. கேட்டுப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. // நாலுக்குள்ளே ரெண்டும் உண்டு
    மூன்றும் உண்டு // அடடே என்னே கணக்கு...!

    நாலுக்கு வெளியே ஏழு உண்டு என்பதை நானறிவேன்...!

    (ஏழுக்கு அடுத்து மூன்றும் நான்கும் தான், திருக்குறளில் முக்கியத்துவம் வாய்ந்த எண்கள்)

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல்களில் முதல் பாடல் எனக்கு மிகப் பிடித்தமான பாடல். அடிக்கடி தனிமையில் இருக்கும் போது பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று..! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    இரண்டாவது கேட்ட பாடலாகத்தான் தோன்றுகிறது.முழுதுமாக கேட்டு விட்டு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாடலை பிடிக்காதோர் யார்?  அருமையான பாடல்.  சில நாட்களுக்கு முன் துரை செல்வராஜூ அண்ணனின் பதிவில் இந்த  வரிகளை கமெண்ட்டாக போட்டேன்.  அப்போதே இந்த வார பாடலையும் செட் செய்து விட்டேன்!

      நீக்கு
  26. @ ஏகாந்தன்..

    /// இப்படியான உண்மையை ஒடச்சு வெவரமாச் சொல்ற ஒரு பொயித்தவம் சீக்கிரமா வெளிவரப்போகுது.. ///

    வரட்டும்.. வரட்டும்..

    பூனக்குட்டி எல்லாம் வெளியே வந்தாத் தான் நல்லது..

    கபால மலையில கால் மாத்தி ஆடினவருதான் இவருன்னு ஒரு இலக்கியப் பேருரை கேட்டு இருக்கணுமே..

    கோயில்கள் எல்லாம் சுற்றுலாத் தளங்கள் என்று சொல்லி விட்டதால் அவனவனும ஜோடி ஜோடியா வந்து பிரகாரத்துல உட்காந்து பிரியாணி துன்னுக்கிட்டு இருக்கானுங்க!..

    பதிலளிநீக்கு
  27. இந்துக்களை ஒரேயடியா காலிசெய்யமுடியாது போலிருக்கே... இவனுங்க புனிதமா நெனக்கிற கோயில்களையாவது அசிங்கப்படுத்தி வம்பிழுத்துப் பார்ப்போம் என்று தமிழ்நாட்டுக்கான ஏதேனும் அஜெண்டா உள்ளதோ என்னவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ ஏகாந்தன்..

      // ஏதேனும் அஜெண்டா உள்ளதோ என்னவோ...//

      ஏதாவது வெச்சிருப்பானுவோ!..

      இல்லேன்னா..
      அது என்னுது.. இது என்னுது.. ந்னு பேசறதுக்கு வருமா?..

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    இன்றைய இரண்டாவது திரைப்பட பாடலும் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். இதிலும் எஸ். பி. பியின் குரல் வளம் படு அமர்க்களம். (எதில்தான் இல்லை இதில் இல்லாமல் இருப்பதற்கு... ) அவரது குரலுக்கு தகுந்தபடி சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பும் இந்தப் படத்தின் பாடல்களில் நன்றாக இருக்கும்.

    காலையில் பாடல் வரிகளை பார்த்தவுடன் பாடல் சட்டென நினைவுக்கு வரவில்லை. இப்போது கேட்டவுடன் அட..!! இது எத்தனை தடவை கேட்டு ரசித்த பாடல் என நினைவுக்கு வந்தது. ஆனால், இந்தப் பாடலை அப்போதுள்ள வயதில் ஒரு ஈடுபாட்டுடன் கேட்க அம்மா வீட்டில் தடா.....! படம் கூட திருமணமான பின் தொலை. காட்சியில் பார்த்து ரசித்துள்ளேன் என நினைக்கிறேன். இதில் பாட்டெல்லாம் நன்றாக இருக்கும்.

    தலைப்பு சுவாரஸ்யமாக இருக்கிறது. நேற்று மூன்றில் ஒன்று.. . இன்று இரண்டில் ஒன்றா..? நாளை...? :)) பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எஸ். பி. பியின் குரல் வளம் படு அமர்க்களம். (எதில்தான் இல்லை இதில் இல்லாமல் இருப்பதற்கு... ) //

      அதைச் சொல்லுங்கள்!

      // அவரது குரலுக்கு தகுந்தபடி சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பும் //

      அதேதான்.  அதேதான்..  அதைதான் நானும் கீதாவுக்கு பதிலாய்ச் சொல்லி இருக்கிறேன்.

      //நேற்று மூன்றில் ஒன்று.. . இன்று இரண்டில் ஒன்றா..? //

      சரியாய் நீங்களும் கனெடிக் செய்தீர்கள்!

      நன்றி கமலா அக்கா.


      நீக்கு
  29. @ ஸ்ரீராம்..

    /// மேல்பாதியா, கீழ் பாதியா?.. ///

    சரி பாதி..

    முருகனோட கோவணத்துலயும் பங்கு வேணும்..

    உனக்கு வேணா பலனிமளை கோயில் இருக்கலாம்...

    எனக்கு இது சுற்றுலா இடம்.. எப்படி வேணாலும் யாரோட வேணாலும் வருவேன்!..

    அப்பிடின்னு கருத்து போய்க்கிட்டு இருக்கு!..

    பதிலளிநீக்கு
  30. முதல் பாடலில் டிஎம் எஸ்ஸின் படத்தைப் போட்டுருக்காங்களே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சீர்காழியின் வெண்கலக்குரல் பிடிக்காதவங்களும் உண்டா? அடுத்த படம் பார்த்ததில்லையே, இத்தனைக்கும் சிவி.ராஜேந்திரன் தயாரிப்பு! எப்படிப் பாஸ் கிடைக்காமப் போச்சு?சிவாஜிக்கு எஸ்பிபியா? எப்படி இருந்ததோ, நல்லவேலை படம் பார்க்கலை, பாட்டும் கேட்கலை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!