வெள்ளி, 12 ஏப்ரல், 2024

வெள்ளி வீடியோ : பொன்னில் ஊசி கண்ணில் காயம் செய்தது.... யாரை நோவது...

 1969 டிஸம்பரில் வெளியிடப்பட்ட 'பாடுவது நானல்ல' பாடல் இன்று தனிப்பாடலாக மிளிர்கிறது.

யார் எழுதியது, யார் இசை, தெரியாது.  TMS  பாடியது.  இசையன்பன் என்று ஒரு பெயர் கண்ணில் படுகிறது.   ,இசையமைத்தவர் பெயரா...  தெ...ரி...யா....து...!

பாடுவது நானல்ல தென்பழநி முருகன் 
பாட்டும் எனதல்ல திருப்புகழின் சாரம்..
பாடுவது நானல்ல தென்பழநி முருகன் 
பாட்டும் எனதல்ல திருப்புகழின் சாரம்..
ஆடுவது நானல்ல நீலமயில்தோகை 
ஆடுவது நானல்ல நீலமயில்தோகை 
ஆட்டம் எனதல்ல குமரமலைத் தென்றல்  - [பாடுவது நானல்ல]

மாறுவது நானல்ல ஓடுகின்ற காலம் 
மாற்றம்  எனதல்ல காலம் தந்த கோலம் 
மாறுவது நானல்ல ஓடுகின்ற காலம் 
மாற்றம்  எனதல்ல காலம் தந்த கோலம் 
தேறுவது நானல்ல நான் கொண்ட பிறவி 
தேறுவது நானல்ல நான் கொண்ட பிறவி 
தேற்றம் எனதல்ல தேவர் தந்த உறவு    -  [பாடுவது நானல்ல]

குன்றுவது நானல்ல சூரப்படை காவல் 
குன்றும் எனதல்ல மன்னவனின் கோவில் 
குன்றுவது நானல்ல சூரப்படை காவல் 
குன்றும் எனதல்ல மன்னவனின் கோவில் 
ஒன்றுவது நானல்ல உயிர் என்னும் வீணை 
ஒன்றுவது நானல்ல உயிர் என்னும் வீணை 
ஒன்றும் எனதல்ல முருகன் மேல் ஆணை   [பாடுவது நானல்ல]

===============================================================================================

1985 ல் R C சக்தி இயக்கத்தில் விஜயகாந்த், நளினி, ராஜேஷ், சத்யராஜ் நடித்து வெளியான படம் சந்தோஷ கனவுகள். 

இன்று பகிரும் இந்தப் பாடலை முன்னர் பலநாட்கள் தேடினேன்.  படம் பெயர் தெரியாமல், பாடல் மட்டும் நினைவில் இருக்க தேடித்தேடி அலுத்த ஒரு நாளில் யு டியூபில் கண்ணில் பட்டது.  மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.  அங்கே மேலே என் கமெண்ட் இருக்கும் பாருங்கள்!

சற்றே சோகப்பாடல் ஆயினும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று.

புலமைப்பித்தன் அல்லது கங்கை அமரன் எழுதிய பாடல்.  ஷ்யாம் இசையில் S P பாலசுப்ரமணியம் - P சுசீலா பாடிய பாடல்.

SPB படும்போது வரிகள் புரிகின்றன.  சுசீலாம்மா பாடும்போது ஓரிரு வார்த்தைகள் சந்தேகமாய் இருக்கின்றன.

மேகங்களே பாருங்களே 
அந்தியிலே சூரியனாம் 
அஸ்தமனம் வைகறையாம் 
எங்கள் வாழ்விலே 
எங்கள் வாழ்விலே 

மேகங்களே பாருங்களே 
அந்தியிலே சூரியனாம் 
அஸ்தமனம் வைகறையாம் 
எங்கள் வாழ்விலே 
எங்கள் வாழ்விலே 

நெஞ்சம் ஒன்றே உள்ளது நினைவுகள் அங்கே ஆயிரம் 
கண்கள் ரெண்டே உள்ளது கனவுகள் அங்கே ஆயிரம் 
நெஞ்சில் உள்ள ஆசைகள் பொன்னில் செய்த ஊசிகள் 
பொன்னில் ஊசி கண்ணில் காயம் செய்தது 
                            யாரை நோவது...   யாரை நோவது... -                               மேகங்களே 


ஊமைக்கென்ன ராகமா அதற்கொரு பக்கமேளமா 
கானல் நீரில் ஓடமா கரையைச் சென்று சேருமா 
கண்கள் ரெண்டும் போனது கதை என்ன வாழுது 
காலம் என்னும் தேவன் தந்த தண்டனை 
                 இனி ஏன் சிந்தனை?  இனி ஏன் சிந்தனை?             -              மேகங்களே  



15 கருத்துகள்:

  1. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு கேட்ட பாடல்,...

    ஆடுவது நானல்ல நீலமயில்தோகை...

    முருகா..
    முருகா..

    பதிலளிநீக்கு
  4. இரண்டாவது பாடல்?...

    அப்புறம் வருகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோகப்பாடல் என்று மயங்க வேண்டாம். பார்க்க வேண்டியது பாடலின் இனிமை...

      நீக்கு
    2. சோகப்பாடல் என்று மயங்க வில்லை...

      தொ.. கா.. வில் அருள் நேரம் என்று ஏதோ ஓடிக் கொண்டிருக்கின்றது..

      நீக்கு
  5. இரண்டும் அருமையான பாடல்கள்.

    இன்றும் கேட்டு ரசித்தேன் ஜி

    பி. சுசிலா அவர்களின் உச்சரிப்பு ஓர் இடத்தில் பிறழ்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  சட்டென வார்த்தையை கண்டு பிடிக்க முடியாமல்!   நன்றி ஜி.

      நீக்கு
  6. /// பாடலின் இனிமை... ///

    சரி தான்..

    ஆனாலும் இந்தப் பாடலை அதிகம் கேட்டதில்லை..

    வாழ்க..
    வளர்க..

    பதிலளிநீக்கு
  7. இரண்டு பாடல்களும் கேட்டது இல்லை.
    பாடல்கள் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!