திங்கள், 1 ஏப்ரல், 2024

"திங்க"க்கிழமை  :  மாங்கா பருப்பு - கீதா ரெங்கன் ரெஸிப்பி  

 

மாங்கா பருப்பு


வணக்கம்! நமஸ்காரா! ரொம்ப நாளாச்சில்ல வந்து? 

கடவுளே! இன்று கீதாவின் செய்முறையா? தலைப்பு ஓகேதான் ஆனா வித்தியாசம்னுட்டு ஏதாச்சும் புச்சா எத்னாச்சும் கொண்டாந்துறப் போறாளேன்னு ஹாஹாஹாஹா. கொஞ்சம் இங்கிட்டுப் பாருங்க. உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச நீங்களும் வீட்டில் செய்யும் ஒரு செய்முறைதான் இது.

செய்முறை ரொம்ப எளிமையானது. டக்குனு செய்துடலாம். Bachelor செய்முறைன்னும் கூடச் சொல்லலாம்.

அப்படியே செய்முறைக்குப் போய் விடுகிறேன். (கடவுளே எனக்கு 48 மணி நேரம் பகல் நேரமா கொடுக்கறியா!!  நேரம் கிடைப்பதும்  ரொம்பக் கஷ்டமா இருக்கு, கிடைத்தாலும் நான் Slow ஆகிவிட்டதால் ஒன்று எழுதுவதற்குள் முடிப்பதற்குள் ஹப்பாடா என்று ரிலாக்ஸ் செய்யணும் போல இருக்கு. அதான் இங்கும் கதைக்கவில்லை!!)

நல்ல புளிப்பு மாங்கானா சின்னதா இருந்தா ரெண்டு எடுத்துக்கோங்க. புளிப்பு கம்மினா 3. இங்க படத்துல மூணு இருக்கும் ஆனா புளிப்பு கூடுதலாவே இருந்ததால் ரெண்டு எடுத்துக்கொண்டேன். பெரிய மாங்கானா புளிப்புக்கு ஏற்ப முழுசாவோ அல்லது முக்கால் பாகமோ எடுத்துக்கோங்க உங்க வீட்டுக்குத் தேவையான புளிப்புக்கு ஏற்ப.

துவரம் பருப்பு – ¼ கோப்பை (பாசிப்பருப்பிலும் செய்யலாம் நன்றாக இருக்கும்)

பச்சை மிளகாய் – 3

மிளகாய் வற்றல் – 4

வெந்தயம் – 1 மேசைக்கரண்டி

பெருங்காயம் பொடி – ஒரு தேக்கரண்டி 

மஞ்சள் பொடி – ½ தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – கொஞ்சம்

கடுகு – 1 தேக்கரண்டி

நல்லெண்ணை – 2 1/2 தேக்கரண்டி

பருப்பை ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், ½ தேக்கரண்டி நல்லெண்ணை விட்டு நன்றாக குழையும் அளவு  வேக வைச்சுக்கோங்க.

மாங்காயில் தோலை நீக்கிவிட்டு படத்தில் உள்ளது போல் பெரிய துண்டங்களாச் சீவிக் கொள்ளுங்கள் இல்லைனா துண்டங்களாகக் கூடப் போட்டுக் கொள்ளலாம். இதெல்லாம் உங்கள் விருப்பம்.

வாணலியில் 1 தேக்கரண்டி நல்லெண்ணை விட்டு வெந்தயம், வர மிளகாய், போட்டு சிறிது சிவந்து வரும் போது பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிரட்டிவிட்டு கடைசியாகப் பெருங்காயப் பொடியை போட்டு – பொடி என்பதால் டக்கென்று பொரிந்துவிடும். (கட்டிப் பெருங்காயம் என்றால் இரண்டு புளியங்கொட்டை அளவு சேர்த்து லைட்டா பொரிச்சுக்கோங்க) அதனால அதை சும்மா மேலே போட்டுப் பிரட்டி விட்டு, மாங்காய் துண்டங்களுடன் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர்  விட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். தேவையான உப்பை போட்டுக்கோங்க. மஞ்சள் பொடியும் போட்டுக்கோங்க.

5 நிமிடத்தில் துண்டங்கள் வெந்துவிடும். வெந்ததும், வேக வைத்த பருப்பை நன்றாக மசித்து வெந்த மாங்காய்த் துண்டங்களுடன் சேர்த்து, ரொம்ப கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 




1 தேக்கரண்டி நல்லெண்ணையில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

குறிப்புகள் -

மாங்காய் துண்டங்களாக இல்லாமல் மசிந்து இருக்க வேண்டும் என்றால் கூடக் கொஞ்சம் ஒரு 5 நிமிடம் கொதிக்க விடலாம். கரண்டியால் மசித்துக் கொள்ளலாம். நான் இந்த முறை அப்படித்தான் செய்தேன்.

Bachelorகளுக்கு – அதென்ன அவங்களுக்கு மட்டும், நமக்குமே செய்யலாம்தான் - எளிதாகச் செய்யணும்னா, துவரம் பருப்பை ½ மணி நேரம் ஊற வைத்துவிடுங்க. cooker pan ல் நல்லெண்ணை 2 ஸ்பூன் விட்டு கடுகு, வெந்தயம், மிவ, ப மி, கறிவேப்பிலை எல்லாம் தாளித்து, ஊற வைத்த பருப்பு, மாங்காய் துண்டங்கள் சேர்த்து உப்பு, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடியும் சேர்த்து, இரண்டு விசில் விட்டால் மாங்காய் பருப்பு ரெடி.  

சுவை ரொம்ப நன்றாக இருக்கும். இங்கு ஒரு சின்ன காணொளி கொடுத்திருக்கிறேன். என் தங்கை பெண்ணிற்காக எடுத்தேன். எங்கள் யுட்யூபில் shorts ல் போட்டுவிடலாமே என்றும். ஆனால் அங்கு இன்னும் வெளியிடவில்லை. இங்கு வெளியான பிறகு அங்கு வெளியிடலாம் என்று.


 


21 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. எவ்வளவு மாங்காய்கள் எடுத்துக்கொள்ளணும் என்பதிலேயே இவ்வளவு குழப்பமா?

    செய்முறை நன்று. சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா நெல்லை உங்களுக்கு என்னை வம்புக்கிழுக்கலைனா அந்த நாளே ஓடாது!!! ஒவ்வொரு வீட்டிலும் புளிப்பு ஒவ்வொரு மாதிரிபிடிக்கும். எனவே புளிப்புக்கு ஏற்ப காரம் பருப்பு சேர்த்துக்கணும்...அதுக்குத்தான் அத்தனை விவரங்கள் கத்துக்குட்டிகள் நிறைய இருப்பாங்க இதை வாசிக்கறவங்க. ...

      கால் கப் பருப்புக்கு, வாயில் போட்டதுமே கண்ணை மூடும் அளவு புளிப்பு இல்லாத மாங்கானா உரைப்பு இன்னும் வேணும்னா கூடக் கொஞ்சம் போட்டுக்கலாம். இந்த அளவிற்கு...இதெல்லாம் நாம மாங்காய் பொருத்து கூட்டிக் குறைத்துப் போட்டுக் கொள்வது புளிப்பை அளவில் எப்படி இங்க சொல்றது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹாஹா

      சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம், சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம், நெல்லை. Yummy!!

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  3. எனக்கு புளிப்பு மாங்காய் என்றால் மாங்காய் வெல்ல பச்சடி தான். மிகவும் பிடிக்கும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெல்லப்பச்சடி....ஆஹா ....இதுவும் நல்லா இருக்கும், கெ கே அண்ணா....

      கீதா

      நீக்கு
    2. கெ கே அண்ணா - ஜெ கே அண்ணா....அவசர அவசரமாகத் தட்டுவதில் வரும் பிரச்சனை...

      கீதா

      நீக்கு
    3. மாங்காய் துவர்ப்பு, புளிப்பு வெல்லம் இனிப்பு, மிளகாய் உறைப்பு, உப்பு உவர்ப்பு என்று கசப்பு தவிர ஐஞ்சுவைகள் உள்ளது மாங்காய் வெல்ல பச்சடி.
      Jayakumar

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      அறுசுவையும் நிரம்பியது இந்த மாங்காய் பச்சடி அறுசுவைகளும் சேர வேண்டுமென்று, ஆறாவது சுவையான அந்த கசப்பிற்காகவே லருட பிறப்பன்று வேப்பம்பூ கொஞ்சமும் அதில் சேர்ப்போம். மாங்காய்யும் வேப்பம்பூவும் ஒன்றாக சேர்ந்து மணம் வீசும் இந்த மாதங்களில். இயற்கையின் மாறுபடாத ஒற்றுமை இது. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு குறிப்பு..

    சாம்பாரில் மாங்காய் போடுவது தஞ்சாவூர்காரர்களுக்கு இயல்பான ஒன்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் எங்கள் ஊர் பக்கங்களிலும் போடுவதுண்டு. ஆனால் புளியைக் குறைத்துவிடுவார்கள் அல்லது புளி இல்லாமல் மாங்காய் மட்டும் போட்டு இப்படி அல்லது சாம்பார் பொடி போட்டுச் செய்வதுண்டு.

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  6. உப்பு நாளில் ஒன்றாக குறைத்தாயிற்று.. புளிப்பு காரம் முழுவதுமாக ஒதுக்கியாகி விட்டது..

    நல்லெண்ணெய் பயன்படுத்துவதே இல்லை.. இன்னும் ஏதேதோ...

    இராசயன கலப்புள்ள எதையும் உண்பதில்லை..

    இப்படியொரு சாபம் எனக்கு..

    மெல்ல மெல்ல உடல் தேறி வருகின்றது...

    வாழ்க சித்தர் மருத்துவம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடல் தேறிவருவது மகிழ்ச்சி. உப்பு புளிப்பு உரைப்பு குறைப்பது என்றுமே நல்லதுதான்.

      நீக்கு
    2. அன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
  7. கீதா! ரொம்ப நாட்களுக்குப்பிறகு வந்து ஒரு நல்ல குறிப்பைக் கொடுத்திருக்கிறீர்கள்! பாசிப்பருப்பில் செய்தால் அதிக சுவையா? அல்லது பருப்பில் சுவை அதிகமா? மாங்காயின் புளிப்பை வற்றல் மிளகாயும் பச்சை மிளகாயும் பருப்பும் சமன் செய்து விடுமா?
    எங்கள் வீட்டில் புளிப்பு மாங்காய் என்றால் காத தூரம் ஓடுவார்கள். அதனால் இந்த குறிப்பு தெரிந்திருந்தாலும் செய்ததில்லை! நீங்கள் அழகாய் விவரித்திருக்கிறதைப்படித்ததும் செய்யலாமா என்று ஒரு யோசனை! அதனால் தான் இத்தனை கேள்விகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ அக்கா, பாசிப்பருப்பில் செய்வது அதிகச் சுவையா என்று கேட்டால் இரு பருப்பிலுமே நல்ல சுவை. ஆனால் வித்தியாசமான சுவையாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கும் இல்லையா? சிலருக்கு சாம்பார் பருப்பு ஒத்துக் கொள்வதில்லை என்று பாசிப்பருப்பில் செய்வதுண்டு ....பெரும்பாலும் சாம்பார் பருப்பில்தான் செய்வதுண்டு, மனோ அக்கா.

      ஆமாம் அக்கா மாங்காயின் புளிப்பை உரைப்பும், பருப்பும் சமன் படுத்திவிடும் புளிப்பைப் பொருத்து நீங்கள் இதைக் கூட்டிக் குறைத்துச் செய்யலாம். அதாவது வெஞ்சன சாமான்களைக் கூட்டிக் குறைத்தோ அல்லது மாங்காயின் அளவைக் குறைத்துக் கொண்டோ செய்யலாம்.
      நான் பயன்படுத்திய மாங்காய் அளவிற்கு இந்த அளவு பருப்பு காரம் சரியாக இருந்தது. உரைப்பு தெரிந்தது. நம் வீட்டில் மாங்காய்ப் புளிப்பு பிடிக்கும் என்றாலும் பல் கூசும் அளவு அல்லது கண்ணை மூடிக் கொள்ளும் அளவு இருந்தால் பலருக்குல் ஒவ்வாதுதானே.... ஆனால் இப்படிச் செய்த போது அதிகப் புளிப்பு தெரியவில்லை, மனோ அக்கா. அதனால்தான் மாங்காயின் அளவைக் குறைத்துக் கொண்டேன். மூன்று எடுத்துக் கொண்டேன் முதலில் கொஞ்சம் புளிப்பு கூடுதல் என்று தெரிந்ததும் இரு மாங்காய்களைப் பயன்படுத்திக் கொண்டேன்.

      செய்து பாருங்க மனோ அக்கா. உங்களுக்குத் தெரியாதது இல்லை.

      நீங்களே மிக நன்றாகச் செய்பவர் என்றாலும் கூட அதைக் காட்டிக் கொள்ளாமல் பலரது குறிப்புகளையும் மனமாரப் பாராட்டி நீங்கள் சொல்வதே, என்ன அருமையான குணம் என்று எனக்குத் தோன்றும், மனோ அக்கா.

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
    2. அது என்ன சாம்பார் பருப்பு? துவரம் பருப்பு
      என்று சொல்லக் கூடாதா?
      துவரம் பருப்பு வாங்கணும்னா கடைலே அதை எப்படிக் கேட்பீங்க?

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    இன்று தங்கள் செய்முறையாக மாங்காய் பருப்பு நன்றாக உள்ளது. படங்கள் ஒவ்வொன்றும் அழகுடன் அருமை.

    மாங்காய்யின் புளிப்புக்கு அளவான காரம், அதுவும் பருப்பின் சுவையுடன் நன்றாக இருக்கும். ஒருநாள் இப்படி செய்து பார்க்கிறேன். இப்போதுதான் மாங்காய் காலம்.

    எனக்கும் மாங்காய் வெல்ல பச்சடி மிக விருப்பம். நான் மட்டுந்தான் அதிகமாக அதை விரும்பி உண்பேன். அதைதான் வருடந்தோறும் முதல் நாளன்று கண்டிப்பாக பண்ணுவோம். மாங்காய் ஊறுகாய்கள் உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்லை. எப்போதேனும் சாப்பிடலாம். .இன்று நீங்கள் செய்த ரெசிபி வித்தியாசமாக இருக்கிறது. ஒரு முறை இம்மாதிரி செய்து பார்க்கிறேன். குழந்தைகளுக்கும் இது பிடிக்கும் என நினைக்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. சுலபமான குறிப்புத்தான்.

    படங்கள் நன்றாக உள்ளன.

    நான் பாசிப்பருப்பில் செய்வேன். துவரையில் செய்து பார்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. சாயந்திரத்துக்கு சப்பாத்தி மற்றும் மாங்கா பருப்பு தொட்டுக்க. நன்றாக இருந்தது கீதா ரங்கன்.

    இதுதான் சீசனில் ஒன்று கிடைக்கும்போது அது சம்பந்தப்பட்ட செய்முறையை நீங்க எழுதுவது. பொதுவா சீசன் முடிந்து கிடைக்காதபோதுதான், ஆறு மாதங்களுக்கு முந்தி செய்தது என்று எழுதுவீங்க.ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  11. சுவையான குறிப்பு. செய்து பார்க்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!